
பிறை -50
திவாகர் மீனாட்சி இருவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். மகன் உடனடியாக மும்பை கிளம்புவது தெரிந்து, இருவருக்கும் ஏதோ புரிந்தது. ஆனால் இருவரும் கேட்டுக் கொள்ளவில்லை. மகன் எப்படியும் மகளை அழைத்துக் கொண்டு வந்து விடுவான் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்..
இருவரும் கிளம்பி விட்டார்கள். அவர்கள் சென்று ஒரு நாள் முழுதாக ஆகி விட்டது. இதுவரை எந்த தகவலும் இல்லை. திவாகரும் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை.
மீனாட்சி சாமியே கதியென்று பூஜை அறையில் அமர்ந்திருந்தார். அப்போது வீட்டின் மணியோசை சத்தத்தில் திவாகர் வந்து கதவை திறக்க.. வாசலில் சிவானந்தம், சிவகாமி இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
” வாங்க சம்மந்தி.. என்ன சொல்லாம கொள்ளாம திடீர்னு இவ்வளவு தூரம்.. நாங்க வந்தே ஒரு நாள் தானே ஆகுது.. பிரச்சனை இல்லையே ” பதறினார் திவாகர்.
” அதெல்லாம் ஒன்னும் இல்ல சம்மந்தி.. மனசு கேட்கலை அதான் நாங்களும் இங்கேயே வந்துட்டோம்.. மாப்பிள்ளை என்ன சொன்னாரு.. தகவல் எதுவும் வந்துச்சா ” சிவானந்தம் கேட்க …
” அதெல்லாம் எதுவும் சொல்லல.. என் மகன் கண்டிப்பா காப்பாத்தி கூட்டிட்டு வந்துருவான். அந்த நம்பிக்கையில தான் நாங்களே இருக்கோம்.. ” என பெரும் மூச்சை விட்டார்.
சத்தம் கேட்டு மீனாட்சி எழுந்து வந்து இருவரையும் வரவேற்றார். ” கவலைப்படாதீங்க அண்ணி.. கடவுள் இருக்காரு.. கண்டிப்பா நல்லது நடக்கும் ” சிவகாமி ஆறுதல் கூறினார்.
” உட்காருங்க நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்.. ” என மீனாட்சி நகர..
” நீங்க ஏன் வேலை செஞ்சிட்டு இருக்கீங்க.. பாப்பா எங்க ” என சிவகாமி கேட்டதும்.. மீனாட்சி புரியாமல் புருவத்தை சுருக்கினார்.
” எந்த பாப்பா ”
” பிறையை தான் கேட்டேன் அண்ணி.. அவ எங்க தூங்கிட்டு இருக்காளா ” என்றதும் மீனாட்சிக்கு உயிரே இல்லை.
” என்ன சொல்லுறீங்க அண்ணி.. நாங்க அங்க இருந்து வரும் போது பிறையை உங்க கிட்ட தானே விட்டுட்டு வந்தோம் ”
” பிறை இங்க இல்லையா.. ” என்றதுமே சிவகாமிக்கு மயக்கம் வந்து விட்டது.
” ஐயோ கடவுளே இப்படியா சோதனையா நடக்கனும் … தண்ணி எடுத்துட்டு வாங்க ” என கணவனிடம் கூறியதும்.. அவரும் விரைந்து தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை தெளித்ததும் லேசாக மயக்கத்தில் இருந்து எழுந்தவர்.. ” ஐயோ என்ன அண்ணி சொல்லுறீங்க.. பிறை இங்க இல்லையா ” என அழுதார் சிவகாமி.
” முதல்ல பொறுமையா என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க ” திவாகர் கேட்டதும் .. சிவானந்தம் கூறினார்.
” நீங்க வீட்ல இருந்து போனதுக்கு அப்புறம்.. மாப்பிள்ளைக்கு கால் பண்ணி பேசிருக்கா.. அவரு முதல்ல போனை எடுக்கல போல.. அதுக்கு அப்பறம் தான் எடுத்து பேசிருப்பாரு போல.. பிள்ளையை கிளம்பி வரச் சொன்னதா சொன்னா.. நாங்களும் தனியா அனுப்ப பயந்துகிட்டு.. கூட வரேன்னு சொன்னேன்.. இல்ல அவரே கார் அனுப்பி கூட்டிட்டு போறதா சொன்னா..அதையும் நம்பி நாங்களும் வந்த கார்ல ஏத்தி விட்டோம்.. சரி பிள்ளையும் அங்க போயிடுச்சு.. எல்லாரும் மனசுல நிம்மதி இல்லாம இங்க கிளம்பி வந்துட்டீங்க.. அதான் எங்களுக்கும் அங்க இருக்க முடியாம ஊருக்கு வந்தோம்… ” என நடந்ததை கூறினார் சிவானந்தம்.
” இங்க பிறை வரவே இல்லையே ”
” நிஜமாவே வரலையா சம்மந்தி ” கேட்கும் போதே அவருக்கு தொண்டை அடைத்தது.
” இதுல என்ன விளையாட்டு.. பிறை இங்க வரவே இல்ல.. நம்ம உடனே இதை ஆதிக்கு சொல்லனும் ” என போனை எடுத்து ஆதிக்கு அழைத்தார் திவாகர்.
ரிங் சென்று கொண்டே இருந்ததே தவிர.. அவன் போனை எடுக்கவில்லை.
” அவன் வேற போனை எடுக்கல.. சரணுக்கு அடிக்கலாம் ” என அவனுக்கும் அடித்துப் பார்த்தார். அவன் போன் சுவிட்ச் ஆப் என வந்தது.
” ஐயோ இவனும் எடுக்கல.. இப்போ என்ன பண்ணுறது.. கார் நம்பர் எதுவும் தெரியுமா.. ”
” அதெல்லாம் இல்லையே சம்மந்தி.. ”
” பிரச்சனை போயிட்டு இருக்கும் போது நீங்க ஏன் தனியா அனுப்பி வச்சீங்க.. இப்போ எங்கன்னு போய் தேடுறது. கார் நம்பரும் இல்ல.. அவ சென்னைக்கு தான் வந்தான்னு எப்படி கண்டு பிடிக்கிறது ”
” புத்தி இல்லாம பண்ணிட்டேன்.. ”
” வீட்டுக்கு வந்துட்டாளான்னு போன் பண்ணியாச்சு கேட்டீங்களா ”
” கேட்டேன் சம்மந்தி.. வந்துட்டேனு சொன்னா ” என்றதும் திவாகர் குழம்பிப் போனார்.
” வீட்டுக்கு வராம ஏன் இப்படி பொய் சொல்லனும்.. என்ன நடந்திருக்கும்… ” என யோசித்து விட்டு.. அவளது நம்பரை தெரிந்தவருக்கு கொடுத்து கடைசியாக அவளது சிக்னல் எங்கே காட்டுகிறது என்பதை ஆராய்ந்து தகவல் அளிக்கும் படி கூறினார்.
வீடே பதட்டத்தோடு இருந்தது. வீட்டில் இருந்த இரு பெண்களையும் காணாமல் பெரியவர்கள் எல்லாம் பயத்தோடு இருந்தார்கள்.
மும்பை சென்ற இருவரும் அந்த இடத்தை தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். பார்கவி போனில் கண்டு பிடித்த லோகேஷனுக்கு சென்றால் அங்கு வெறும் காடாக தான் இருந்தது. அப்படி ஒரு லேப் இருப்பதற்கான அறிகுறிகள் கூட இல்லாமல் இருந்தது.
மண்டை குழம்பி இருவரும் சிட்டிக்குள் வந்து பழைய லேப் எதுவும் உள்ளதா என விசாரணையை தொடங்கினார்கள்.
ஆதிதேவிற்கு தலையே வலித்தது. எப்படியாவது தங்கையை காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பில் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தீவிரமாக விசாரித்தான்.
” அப்படி ஒன்னும் பெரிய லேப் இருக்குற மாதிரி தெரியல சார். நீங்க சொன்ன இடம் எல்லாம் காடு தான் இருக்கு ” என அங்குள்ள காவல் துறையினர் தெரிவித்தனர்.
” இப்போ என்னடா பண்ணுறது ” சரண் யோசனையில் இருந்தவன்.. போனை எடுத்து பார்க்க.. அதுவோ உயிரில்லாமல் அணைந்து கிடந்தது .
” இங்க போன் சார்ஜ் போடனும்” என கேட்டதும்.. அங்குள்ளவர்கள் அவனுக்கு அனுமதி கொடுக்க.. போனை சார்ஜில் போட்டு ஆன் செய்தான்.
வரிசையாக திவாகர் பத்து முறைக்கு மேல் அழைத்திருந்தார்.
” அப்பா இத்தனை முறை ஏன் டா கால் பண்ணிருக்காரு ” சரண் கேட்டதும்.. யோசனையாக புருவத்தை உயர்த்தினான் ஆதிதேவ்.
” என்ன சொல்லுற ”
” உன் போனை செக் பண்ணு ” என்றதும் அவன் போனை எடுத்து பார்த்தான்.. அவனுக்கு ஒருமுறை அழைத்து விட்டு, அதன் பிறகு இருமுறை அழைத்திருந்தார்.
எப்போதுமே ஒருமுறை அழைத்து விட்டு அவனது போனுக்கு காத்துக் கொண்டிருப்பார். ஆனால் இன்று இத்தனை முறை அழைத்திருக்கிறார் என்றால் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்ற எண்ணம் வந்த அடுத்த நொடி அவருக்கு அழைத்திருந்தான்.
போனை எடுத்ததும் திவாகர் விஷயத்தை கூறி இருக்க.. அதிர்ந்து போனான் ஆதிதேவ்.
” மச்சான் என்னாச்சு டா..”
” மூன் மிஸ்ஸிங் டா ”
” வாட் அவ்வளோ பாதுகாப்பா தானே வச்சோம்.. எப்படி டா ”
” ஆதி கில்லாடி டா.. தூக்கிட்டான்.. ” என மனைவியை நினைத்தவனுக்கு மனம் வலித்தது.
” சிசிடிவில பிறை ஏதோ கார்ல ஏறி போறாங்க டா ”
” அவன் பிளான் தான் டா.. அவளை மிரட்டி வர வச்சிருப்பான் ” என சரியாக கணித்தான் ஆதிதேவ்.
” இப்போ என்ன மச்சான் பண்ணுறது.. ” நண்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு யோசனையாக அமர்ந்தவன்.. சட்டென ஏதோ நினைவு வந்தவனாக..
” நான் கொடுக்க மறந்ததா ஒரு கிஃப்ட் உன்கிட்ட கொடுத்து அவகிட்ட கொடுக்க சொன்னேனே.. கொடுத்தியா ”
” ம்ம் அங்க இருந்து கிளம்பும் போது கொடுத்துட்டேன் மச்சான் .. ”
” காட்.. ” என வேகமாக போனை எடுத்து ஏதோ கனெக்ட் செய்தவன்.. வேகமாக தேடுதலை ஆரம்பித்தான்.. அவன் நினைத்ததை போல அதுவும் ஒரு லொகேஷன் காட்டியது. ஆனால் அதுவும் பார்கவி அனுப்பிய இடமும் ஒன்றாக இருக்க.. சோர்ந்து போனவன்.. காரை எடுத்துக் கொண்டு மீண்டும் அந்த இடத்திற்கே சென்றான்.
இம்முறை மும்பை போலீஸ் அவனுக்கு உதவியாக இருந்தது. ” என்ன டா அதே இடத்துக்கு வந்திருக்கோம் ”
” அந்த கிஃப்ட்ல உள்ள செயின்ல டிராக்கர் வச்சிருந்தேன்.. அதை அவ கண்டிப்பா போட்டுப்பான்னு தெரியும்.. அதுவும் இந்த லொகேஷன் தான் காட்டுது ” என்றதும்.. இருவருமே இந்த இடம் தான் உறுதியாகி போனார்கள்.
ஆனால் எப்படி இந்த காட்டிற்குள் சென்று கண்டு பிடிப்பது என தீவிர சிந்தனையில் இருந்தான் ஆதிதேவ்.
மும்பை போலீஸ் படையுடன் ஆளுக்கு ஒரு திசையாக காட்டிற்குள் செல்வது என முடிவாகி போனது.
அதே போல அனைவரும் பிரிந்து ஒவ்வொரு பாதையில் செல்ல ஆரம்பித்தார்கள்.
எதையும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என மனதை தயார் படுத்திக் கொண்டே சென்றான் ஆதிதேவ். ஆனால் அவளவனை பார்த்ததும் மொத்தமாக அவனது மனம் உடைத்து போகும் என அவன் அறியவில்லை.
**
” எப்படி உடனே தூக்கின.. ”
” சும்மா பேசி தான் பார்த்தேன். லைட்டா மிரட்டவும் அவளே வந்துட்டா.. ” என தோளை குலுக்கினான் அர்ஜுன்.
” ரொம்ப அவசரப் பட்டியோன்னு தோணுது.. ” என வில்சன் அமைதியாக அவனை பார்க்க..
இடவலமாக தலை அசைத்தவன்.. ” இந்த நாளுக்காக எத்தனை வருஷமா காத்துட்டு இருந்தேன்.. ரொம்பவே பொறுமையா இருந்திட்டேன்.. இதுக்குமேல ஒரு நிமிஷம் கூட என்னால லேட் பண்ண முடியாது ”
” அவ்வளவு வெறி இருக்கிறவன்..அவனையும் ஏதாவது பண்ணிட்டு வந்திருக்க வேண்டியது தானே. இப்போ அவன் கண்டுபிடிச்சு வந்தா நம்ம தொழில் என்ன ஆகிறது ”
” வரட்டும்.. அவனை ஏதாவது பண்ணா அந்த அளவுக்கு வலிக்காது.. ஆனால் இதே அவனுக்கு நெருக்கமானவங்களை தூக்குனா அவனுக்கு அந்த வலி கொடுமையா இருக்கும். அந்த வலியை தான் அவனுக்கு கொடுக்கனும்.. கொடுப்பேன் ” உறுதியாக கூறினான் ஆதி அர்ஜுனன்.
அவனது உறுதியில் வில்சனுக்கே சற்று பயம் வரத்தான் செய்தது. ” இப்போ அந்த பொண்ணை என்ன பண்ண போற ”
” நீங்க அவளை ஸ்மெல் பண்ணி பார்த்தீங்களா … அப்படி ஒரு ஸ்மெல் அவ மேல.. அப்படியே போதையை ஏத்தும்.. நம்ம போதை மருந்தே எடுத்துக்க தேவையில்ல.. அப்படி ஒரு மருந்து.. இதை நம்ம எடுத்து மார்கெட்ல விட்டோம்.. நம்ம தான் நம்பர் ஒன் கோடீஸ்வரன்.. ” என பேராசையில் பிதற்றிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
” அப்போ அந்த பொண்ணு பார்கவி.. ?”
ஏனோ அவளை பற்றி கேட்டதும் அமைதியாகி போனான் அர்ஜுன்.
” என்னமோ எனக்கு ஏதோ புரியுது.. அது உனக்கும் புரியாதானு பாரு ” என அவனது தோளை தட்டி விட்டு சென்றார் வில்சன்.
இரும்பிலே ஒரு காதல் முளைத்ததோ !
சனா💖
