
அத்தியாயம் 21
“நா என்ன அரச மரத்துப் பிள்ளையாரா? நீ பாட்டுக்கு சுத்தி சுத்தி வந்துட்டுருக்க” என்றான் அவனும் அவள் முகத்தை பார்க்க குனிந்து.
மேலும் குனிந்துகொண்டவள், பதிலேதும் சொல்லாமல் இருக்க, “என்னாச்சு எழில், எதுக்கு சுத்தி வந்த சொல்லு? நேரா இங்க வர வேண்டியதுதான, அதென்ன இவேன் என்ன செய்றான்னு பாப்போம்னு கிராஸ் செக்கிங்?” என்றான் சிரித்துக் கொண்டு.
அதற்கும் பதில் இல்லை, ஆனால் இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்து விழுந்தது. அதை பார்த்ததுமே அவனுக்கு கஷ்டமாகி விட்டிருக்க, “என்னம்மா எதுக்கு இப்போ அழுற?” என அவள் முகத்தை நிமிர்த்த, ‘ம்கூம்’ நிமிர மாட்டேன் என அமர்ந்திருந்தாள் அவள்.
“இங்க பாரு எழில்” எனக் கட்டாயப்படுத்தியே அவன் முகத்தை பார்க்க நிமிர்த்தினான்.
கண்ணீரை அடக்க முயற்சி எடுத்திருந்ததால் கண் நன்றாக சிவந்து விட்டிருந்தது. அவள் பேக்கை வாங்கி அதிலிருந்தே தண்ணீர் பாட்டிலை எடுத்து, “இத குடி பஸ்ட்” என நீட்டினான்.
மறுத்து தலையசைக்க, “குடி எழில், யார்கனவே நம்ம நேம் டேமேஜ் ஆகி தான் இருக்கு, இதுல இப்டி வேற வந்து உட்காந்து அழுதுட்டுருந்தனா, ஒரு வழி ஆக்கிடுவாங்க. சொன்னா கேளு” என்றான் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக.
வாங்கி அருந்திவிட்டு பேக்கில் பாட்டிலை வைத்து கொண்டு, எழுந்து விட்டாள், இப்ப எதுக்கு எந்திரிக்கிறான்னு அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு, அவள் பிளாக்கை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டாள்.
“ஹேய் எழில் என்னாச்சு? நில்லு” என அவன் பின்னயே சென்று அழைக்க, அவள் நிற்கவே இல்லை, சென்றுவிட்டாள். ‘எதுக்கு திடீர்னு அழுதா? ஏன் பேசாமலே போறா?’ என புரியாமல் புலம்பி விட்டு தானும் கிளாஸ் நோக்கி சென்றான்.
அவன் நேற்று கோபமாக சென்றாலும், ‘வீட்டுக்கு சென்ற சற்று நேரத்தில் தன் கோபம் கொஞ்சம் அதிகப்படி தான் எனப் புரிந்தது அவனுக்கு. காலைல போய் நார்மலா பேசி சமாதானப்படுத்திக்கலாம்’ என முடிவெடுத்தே கல்லூரி வந்தான்.
ஆனால் அவள் அவனை பார்க்க வைக்க எடுத்த முயற்சி பிடிக்கவே, விளையாடிப் பார்க்க கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்தான். இப்பொழுது ‘இவ ஏன் கோவிச்சுட்டு போறான்னு தெரியலயே?’ என்ற குழப்பத்திலேயே அன்றைய நாளை கடத்தினான்.
இங்கு கிளாசுக்கு வந்தவளும் ஏக கடுப்பில் தான் பொழுதை கடத்தினாள். லட்சு கூட வந்ததும், “என்ன ஆறு மொகம் அதிக பாலிஷா தெரியுது, என்ன விஷயம்? நேத்து மாதிரி இன்னிக்கி சீனியர் எதயாது குடுத்து அனுப்னாரா?” என சிரித்தவாறு உட்கார வர, கடுப்பிலிருந்த ஆறு பௌச் திறந்து பென்சில் எடுத்து அவள் உட்கார போகையில் இடுப்பில் குத்தி விட வலி உயிர் போனது லட்சுவிற்கு.
“உன்ட்டலா மனுஷி பேசுவாளா, பிசாசு, எரும” என ஒரு கையால் தேய்த்துக் கொண்டு, மறு கையால் 2 அடி ஆறுவை அடித்தாள்.
அவள் அதற்கும் அசராமல் முறைக்க, “கிறுக்கு புடிச்சிருச்சா உனக்கு” என திட்டி விட்டு, “நிலா இங்குட்டு வாடி இவகிட்டலாம் இனி நா பேச்சுவார்த்தையே வச்சுக்க விரும்பல” என அந்த சைடு சென்று உட்கார்ந்து கொண்டாள்.
லஞ்ச்சிலும் ஆறு சாப்பிட மாட்டேன் என டெஸ்கில் படுத்துக்கொள்ள, நிலா இருமுறை, “வந்து சாப்பிடு ஆறு, என்னன்னு கேட்டாலும் சொல்லமாட்டுக்க, எந்திரி” என அழைத்துப் பார்த்தாள்.
லட்சு உடனே, “பட்னியா கிடக்கட்டும் விட்று. ஒரு நேரம் சாப்பிடலன்னா ஒன்னு செத்துர மாட்டா. ஏதாது கிறுக்குத்தனம் பண்ணிருப்பா ஆண்ட்டி நொறுக்கி விட்ருப்பாங்க, அதான் இப்டி இருக்காளா இருக்கும். கடக்கட்டும் அப்படியாது திமிரு குறையட்டும், அவ பேக்ல இருந்து டிபன் பாக்ஸ எடு, அன்னத்த வேஸ்ட்டாகுறது எனக்கு பிடிக்காது. அத எடு” என்றாள். ஏற்கனவே அவள் கொண்டு வந்த சசாப்பாட்டையும் சாப்பிட்டுக் கொண்டு.
இதற்கு மட்டும் நிமிர்ந்த ஆறு பேக்கோடு தூக்கி அவள் மீது வீச, “சரியான பைத்தியம்” என திட்டிவிட்டு அவள் லஞ்ச் பேக்கையும் எடுத்து சாப்பிடத் தொடங்கி விட்டாள்.
“மான ரோசமே இல்லல” அமலா கேட்க,
“உனக்கு நிறையா இருந்தா சோத்துல கை வைக்காத”,
“உன்கூட சேந்தப்பறம் அதெல்லாம்மா இருக்கும், கொண்டா தனியாவே அமுக்காதே” என ஒருத்தியை டீலில் விட்டுவிட்டு மூவரும் சாப்பிட்டனர்.
மதியத்திற்கு மேல் கிளாஸிலும் கவனியாது ஏதோ யோசனையில் இருந்து, கிளாஸ் முடிந்ததும் நேராக சென்று விட்டாள் பஸ் ஸ்டாப்பிற்கு, கூடவே வந்த லட்சு தான், ஒரு நிமிடம் தாமதித்து.
“என்ன பிரச்சனன்னு தெரியல, காலைல இருந்தே கடுகடுன்னு தான் இருந்தா, இப்பயும் இங்க வராம கிளம்பிட்டா, நானு கூடப் போறேன், பை” என வைரமும், தாணுவும் நிற்கச் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள். அவர்களும் ப்ரகலத்தன் வரவும் அப்படியே ஒப்பித்துவிட்டனர்.
அடுத்த மூன்று நாட்கள் அவன் கண்களில் படாமல் காலையில் காலேஜ் டைமிற்கு வருவது, ஈவினிங் அவன் வருவதற்குள் ஓடிவிடுவது என இருந்தாள். அவன் நினைத்தால் டிபார்ட்மெண்டில் சென்று பார்த்து வந்து விடுவான் தான். ஆனால் சீன் கிரியேட் பண்ண விரும்பாத காரணம் ஒன்று, கேட் எக்ஸாம் பிரிப்பரேஷனில் கொஞ்சம் பிஸியாக வேற இருந்தான். இன்ஸ்டியூட்டில் அதற்கு எக்ஸாம் நடந்து கொண்டிருந்தது, இதுவும் ஒரு காரணம் அவன் அவளை விட்டுப் பிடிக்க.
அடுத்த சனி, ஞாயிறு இரு நாளும் லீவாக இருக்க, வீட்டிற்கே போக முடிவெடுத்தவன், சண்டே ஈவினிங் அவள் வீட்டுக்கு செல்ல, “வாப்பா, என்ன சண்ட முத்திருச்சோ?” என்றார் ஜெயந்தி கதவை திறக்கும் போதே.
உள் நடந்துகொண்டு “எதுக்காக இப்டி கோவமா இருக்கான்னு சொன்னாளா ஆண்ட்டி?” என்றான், அவன் அவரைப் பின் தொடர்ந்தவாறு.
“அதுலா சொல்லலப்பா, ஆனா மொத நாள் நீ கோவிச்சுக்கிட்டு போயிட்டன்னு சொல்லி புலம்புனவ, மறுநாள் வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் தூக்கி தூக்கி போடவுமே, கோவம் இங்க ஷிப்ட் ஆயிடுச்சுன்னு புரிஞ்சது. உக்காரு டீ போட்டு எடுத்துட்டு வாரேன்”.
“வேணா ஆண்ட்டி. அவட்ட என்னன்னு கேட்டு கிளீயர் பண்ணிட்டு போலாம்னு தான் வந்தேன். மூணு நாளா எப்டி நேக்கா எஸ்கேப் ஆகுறா தெரியுமா?”.
சிரித்தவர், “இரு, பக்கத்து வீட்டு பொண்ணு ஏஜ் அட்டெண்ட் பண்ணிட்டா, அவளுக்கு நாளைக்கு பங்க்ஷன் வைக்குறாங்க, மெஹந்தி போட்டு விடுங்கக்கான்னு கேட்டுச்சு, அதனால போட்டுவிட போயிருக்கா. இருக்க கோவத்துல முறுக்கு தான் அந்த புள்ள கையில புழிஞ்சுட்டு வருவா எனக்குத் தெரிஞ்சு” என சிரித்துக்கொண்டே கிச்சனிலிருந்து டீ போட்டவாறு சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
இவனும் மேலும் சிரித்து, “நிறைய கோபம் வருமா ஆண்ட்டி சின்ன வயசுல இருந்தே?”.
“ஆமாப்பா, கோவத்த விட பிடிவாதம் ஜாஸ்தி. அதுலயிருந்து இறக்கிக் கொண்டு வாரது தான் கஷ்டம். ஏன்ப்பா பயமாயிருக்கா? அவசரப்பட்டுட்டோமோன்னு தோணுதா?” ௭ன டீயை எடுத்து வந்து கொடுத்துவிட்டு அவன் எதிரில் அமர்ந்தார்.
“ஏன் ஆண்ட்டி. நாம எதுவுமே செய்ய வேண்டாம், அதுங்களே பிச்சு புடிங்கிட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சுதான், உடனே எங்க விஷயத்த அக்சப்ட் பண்ணிட்டீங்களா?” ௭ன்றான் அவனும் சிரித்து.
“கண்டிப்பா இல்ல. இது ரெண்டும் கெட்டான் வயசு, எதுனாலும் வரட்டும் பாத்துக்கலாம்னு மனசு வீராப்பு பேசி ஏத்திவிடும், நெனைச்சது கிடச்சே ஆகணும்னு வீம்பு பிடிக்கும். நாங்களும் இதெல்லாம் தாண்டி தான் வந்திருக்கோம், எல்லா பெத்தவங்களும் காதலுக்கு எதிரி இல்லப்பா, நம்ம பொண்ணுக்கு/ பையனுக்கு லைப் லாங் கூட வர உறவு நல்லதா இருக்கணுமே, எதும் எசக்குபிசக்கா மாட்டிக்கிட்டா நிம்மதியே இல்லாம போயிடுமேன்ற பயம். அதுலா நீங்களும் மேரேஜ் பண்ணி ரெண்டு குழந்தை ஆகும்போது அது உங்க பேச்சக் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கும் பாரு, அப்ப தான் புரியும். அதுவர என்ன சொன்னாலும், செவிடன் காதுல ஊதுன சங்குதான்”.
“ஏன் ஆண்ட்டி, எங்க அம்மா அப்பாவும் லவ் மேரேஜ்தான் நிம்மதியா தான வாழ்ந்துட்டுருக்காங்க”.
“இருக்கலாம் தான், நீ சொல்லுவியே எல்லாமே 50-50 தான்னு, அதுபோல தான். நா ஃபஸ்டே என்ன சொன்னேன், லவ்வுக்கு நா எதிரி இல்லப்பா, அது ஒருவிதமான பயம், முக்கியமா பொம்பள பிள்ளைய பெத்தவங்களுக்குன்னு உள்ள பயம், அவ்வளவுதான். மத்தபடி அரேஞ்ச்டோ லவ்வோ வாழப் போறது நீங்கதான். சோ நீங்கதான் அண்டர்ஸ்டாண்டிங் கம் லவ்வ டெவலப் பண்ணிக்கணும், தக்க வச்சுக்கணும்”.
“அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லவரீங்க?”.
“ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் கம்ப்ளீட்டா அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும், விட்டுக்கொடுக்கணும், சாரி சொல்ல ரெடியாகணும், முக்கியமா ஈகோ வரவே கூடாது”.
“இப்ப நா சாரி சொல்லிட்டா இந்த பிரச்சன சால்வ் ஆகிடுமா ஆண்ட்டி?”.
“பஸ்ட் பேசுங்க, ஓபனா என்ன பிரச்சன, யாரு மேல தப்புன்னு பொறுமையா பேசி புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க, அப்றம் சாரி யார் சொல்லணும்னு தன்னால முடிவு கிடைக்கும்”.
“சப்போஸ் அவ மேலயே தப்பு இருந்து அவ சாரி கேட்க மறுத்துட்டான்னா?”.
“அவ மேல தான் தப்புன்னு நீ முடிவு பண்ணிட்டு பேச ஆரம்பிச்சனா பிராப்ளம் சால்வ் ஆகாது, பெருசா தான் ஆகும். அப்டியே அவ சாரி சொல்லனாலும் ஒன்ஸ் நீ சொல்லு, அவ ரியலைஸ் பண்ணுவா. நீ ரெண்டு தடவ இறங்கி வந்தனா, அவ ஒரு தடவ கண்டிப்பா இறங்கி வருவா”.
“லவ், ஹஸ்பண்ட் & வைஃப் ரெலேஷன்ஷிப்ல தேங்க்ஸ், சாரிலா அல்லோவ்ட் இல்ல தானே?” ௭ன்றான.
“அது நல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்ணி ஒரு 15 வருஷம் சேர்ந்து வாழ்ந்திடுவீங்களே, அதுக்கு அப்றம் அது தேவப்படாது. இவரு இதுக்காக தான் அத சொல்லிருப்பாருன்னு வைஃப்பும், அவ அப்டித்தான் படபடன்னு பேசிட்டு பின்ன யோசிப்பான்னு ஹஸ்பண்டும் புரிஞ்சுக்குற பக்குவம் வந்திருக்கும். இதோ உங்கள மாறி மூஞ்ச தூக்கிட்டு 4 நாள் சுத்தி வர்ற பிரச்சனயா இருக்காது”.
“இவ்வளவு பெர்பெக்ட்டானா மென்டாலிட்டி இருந்தும், நீங்களும் அங்கிளும் ஏன் ஆண்ட்டி சுமூகமான லைஃப் லீட் பண்ணல?”.
“எனக்காக தான் அவர் அவ்வளவு பெரிய ப்ராப்ளம மறச்சுட்டாரு தாங்க மாட்டேன்னு. அப்டி அவர் ரீசன் சொல்லாம இருந்தும் ஒரு நாள் ஒரு பொழுது நா அவர் வயிறு வாடவிட்டதில்ல. எனக்கு இருக்கிற ஒரே வருத்தம் வாழப்போறது கம்மியான நாள்னு தெரிஞ்சும் எங்களோட சந்தோஷமா அந்த நாட்கள கழிக்காம, அவரு போன பின்னும் அவர் இல்லாத மாதிரி ஒரு பீல் இருக்கக்கூடாதுன்னு நினைச்சுட்டாறேன்னு தான்” ௭ன்றார் பெரும் மூச்சுடன்.
ஜெயந்தி மனதில் இன்னும் அவருக்கான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என நன்றாக புரிந்தது ப்ரகலத்தனுக்கு.
