Loading

அத்தியாயம்18

 

“ஃபஸ்ட் கிளம்புங்க பிள்ளைகளா, எவ்வளவு சேட்டை?” என அவரே விரட்ட ஆரம்பித்திருந்தார்.

“சரி சரி கிளம்பலாம், இன்னும் அந்தக் கூட்டத்துக்குள்ள போயிட்டு வெளில வர்றதுக்குள்ள ஒரு வழி ஆயிருவோம். இன்னும் இதுகள வேற மேச்சு கூட்டிட்டு போய்ட்டு வரணும்” அகத்தியன் சொல்ல.

 

“நீங்க எதுக்கு ஆளுக்கு மொதலா ரெடியாகுறீங்கன்னு எங்களுக்கு தெரியும். அடக்கியே வாசிங்க, இல்ல சபைல அத்தன உண்மையயும் சொல்ல வேண்டியிருக்கும் சீனியர்” நிலா சொல்ல.

 

“எங்க? அப்டி எதுக்குன்னு சொல்லு பாப்போம். என் ப்ரண்ட பேசுறதெல்லாம் வேணாம், தைரியம் இருந்தா ரீசன சொல்லு பாப்போம்” மூர்த்தி சொல்ல.

 

“நீ எதுக்கு முந்திக்கிட்டு வக்காலத்து வாங்குறன்னு தெரியுது. ஆண்ட்டி ஸ்கூல் டீச்சர் தெரியும்ல பெரம்ப கைல எடுத்தாங்க வகதொக இல்லாம வாங்க வேண்டியிருக்கும்” என அடக்கினான் அகத்தியன்.

 

“அவங்க அப்டித்தான் லூசு கணக்கா உளறிட்டே இருப்பாங்க நீங்க காதுலப் போட்டுகாதிங்க. அப்புறம் மதியம் என்ன சமையல் ஆண்ட்டி” நாது கேட்க.

“ஆமா நாங்க லூசு தான்டா, நீ ஓ விசயத்துல கரெக்டா இருக்க பாத்தியா. எங்களுக்குத்தான் அப்டி இருக்க தெரியல, இப்டி சோத்துக்கு அலையுற வெட்கமா இல்ல” மூர்த்தி கேட்க.

 

“நம்ம ஆண்ட்டி அதெல்லாம் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க, இல்ல ஆண்ட்டி” என்றான்.

“அதனால என்னப்பா, எப்பவும் நாங்க ரெண்டு பேரு தான், வீடே அமைதியா தான் இருக்கும். ரொம்ப நாள் கழிச்சு வீடு கலகலப்பா இருக்கு. ஷாப்பிங் முடிச்சுட்டு வாங்க இங்கேயே சாப்பாட முடிச்சுட்டு ஈவினிங் போனா போதும்” என்றார் ஜெயந்தி சிரித்துக்கொண்டே.

 

“அதெல்லாம் வேணாம்மா இத்தனப் பேருக்கு தனியா செய்றது கஷ்டம். இன்னொரு நாள் பிளான் பண்ணி எல்லாருமா சேந்து வீட்ல சமைச்சு சாப்ட்டுக்கலாம். இன்னைக்கு வேணும்னா வரும்போது பார்சல் வாங்கிட்டு வந்துடுறோம்” என்றான் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ப்ரகலத்தன்.

 

“சரிப்பா இன்னொரு நாள் எல்லோரும் வாங்க” என்றார் அவரும்.

நாது மெதுவாக “மாப்பிள எப்படி இன்னொரு நாள் வர்றதுக்கும் பிளான் போட்டான் பாத்தியா. இதெல்லாம் நமக்கு வரமாட்டேங்குது, கத்துக்கணும்டா” என கவுண்டர் கொடுக்க, எல்லோரும் சிரிக்க சுதாரித்த ப்ரகலத்தன், “சரி சரி கிளம்பலாம், லேட் ஆகுது. சீக்கிரம் ரிட்டன் ஆகணும்” என்க.

எல்லாரும் “பை ஆண்ட்டி, போயிட்டு வரோம் ம்மா” சொல்லி கிளம்பினர்.

கடைசியாக வெளியேற போன ப்ரகலத்தன், “இப்ப கஷ்டமா இல்லல ஆண்ட்டி” என்க.

 

“ரொம்ப தேங்க்ஸ்பா. இப்ப மனசுக்கு கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கு. என் பொண்ணு ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியில போறா. உங்க ரெண்டு பேர மட்டும் தனியா இந்த வாசப்படிய தாண்ட விட்டிருந்தா, எனக்கு நிம்மதியான தூக்கமே போயிருக்கும். அண்டர்ஸ்டாண்ட் பண்ணி இப்டி ஒரு ஏற்பாடு பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்பா” என்றார் மனதிலிருந்து.

 

“நீங்க ஹேப்பினா எனக்கு அதுவே போதும் ஆண்ட்டி. ஆப்ட்டர்-நூன் பாக்கலாம்” என்றான்.

 

“சரி பாத்து போயிட்டு வாங்க” என வாசல் வரை வந்து வழியனுப்பினார் நிம்மதியாக.

எல்லோரும் லோக்கல் ட்ரெயினில் அரட்டையோடு டி.நகர் வந்திறங்கினர். அதுவரை லட்சுவுடன் வந்தவள், கடை தெருவில் ப்ரகலத்தனுடன் வந்து இணைந்து கொண்டாள். “அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தீங்களா?”.

“ஆமா, பிரண்ட்ஸ் எல்லோரும் போறோம், அதுல நீயும் வரன்னு சொல்லிருக்கேன்”.

 

“திட்டலயா?”

 

“அவங்க அக்ஸப்ட் பண்ண கொஞ்சம் டைம் எடுக்கும். நமக்கு நிறைய டைம் இருக்கு, சோ சரியாகிடும்” என்றான் ஃப்ளோவில்.

 

“என்ன சரியாகணும்? பிரண்ட்ஷிப்ப அக்ஸப்ட் பண்ணுறதுக்கா?” என்றாள் ஒரு கண்ணை அடித்து. ஒளறியதை எண்ணி தலைகோதி சமாளித்துக்கொண்டு, “ஆமா” என திரும்பி தன்னையே பாத்துக் கொண்டிருந்தவள் தலையை பிடித்து ஆட்டினான்.

 

“வெக்கப்பட்டா செமையா இருக்கீங்க ப்ரெசிடெண்ட், அதுவும் இந்த பூனக்கண்ணு, அப்டியே ஆள முழுங்கிடும் போல, அப்டி இருக்கு” என அவள் அனுபவித்து சொல்ல.

 

மேலும் சிரித்தவன், “கூட்டத்துக்குள்ள பேசாமவா” என அவள் கை பிடித்து அழைத்துச் சென்றான். அவன் கையை அவளும் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

 

பெண்கள் மூன்று கடை ஏறியிறங்கினர், திருப்தியில்லாமல் நான்காவது கடையில் அவர்களுக்கு கொஞ்சம் பிடிப்பது போல் இருக்க, இங்கும் எடுக்காமல் கிளம்பி விடுவார்களோ என பயந்த ஆண்கள், “இது நல்லா இருக்கு, அந்த ரெட் செமையா இருக்கு, அந்த மெரூன் கலர் உனக்கு நல்லா இருக்கும், அந்தா அது லட்சுக்கு தாறுமாறா இருக்கும்” என சேல்ஸ்மேன்க்கு வேலை வைக்காமல் கூவ ஆரம்பித்திருந்தனர்.

 

அதை நம்பிய பெண்களும், இது, அது என எடுத்துப்போட சொல்லி கண்ணாடியில் வைத்துப் பார்த்தனர்.

 

அதில் பிங்க் கலர் சாஃப்ட் காட்டன் ஆறெழிலுக்கு அழகாக இருந்தது, ப்ரகலத்தன், “இது நல்லாருக்கும்மா, இத எடு” என்க.

 

“சரி பிரசிடெண்ட்” என்றவள் ரேட்டைத் திருப்பிப் பார்க்க, 3500 என்றிருந்தது. கொண்டு வந்ததோ 2000 பின்பு எப்படி இதை எடுத்து கொள்வது, ரேட்டை கவனிக்காமல் தன்மீது வைத்து பார்த்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டவள், இப்ப என்ன சொல்ல என முழிக்க.

 

“என்னாச்சுமா, பேக் பண்ணட்டும் குடு” என்றான்.

 

இவள் “ஒரு நிமிஷம் ப்ரெசிடெண்ட்” என்றுவிட்டு சேல்ஸ்மேனிடம், “இது மாதிரியே குறஞ்ச விலைல இருக்கா?” எனக் கேட்க.

 

“இந்த கிலாத்ல வராதுமா, இதே கலர்ல வேணும்னா இருக்கான்னு பாக்றேன்” என்று விட்டு சென்றார்.

 

ப்ரகலத்தன் அதை வாங்கி ரேட்டை பார்த்துவிட்டு தன் பர்ஸில் இருக்கிறதா என பார்த்தான். 2000 இருந்தது. பக்கத்தில் பிஸியாக சாரி பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களிடம் 1500 கேட்க, அவர்களும் கொடுத்தனர். 3500/- கொண்டுவந்தவன், “ரூபா இருக்கு அதையே பேக் பண்ண சொல்லு” ௭ன்க.

 

“வேணா ப்ரெசிடெண்ட், யார்கனவே ௭ன்ன உங்க கூட அலோவ் பண்ண அவ்வளவு யோசிச்சாங்க, இதுல உங்க மணில சேரி வாங்கினேன்னு தெரிஞ்சது அவ்ளோதான். வேணா, அம்மா திட்டுவாங்க, நாம வேற பாக்கலாம்” என ஒதுக்கி வைத்து விட்டாள்.

 

சாரி எடுக்க சென்றவர் பிங்க் கலரிலேயே வேறு ஆறு சேலைகள் எடுத்து வந்து போட்டும், முதல் சேரியிலிருந்த பிடித்தம் அவளுக்கு இதில் வரவில்லை. ஆனாலும் கொண்டு வந்ததில் ஒன்றை எடுத்து, “இதே இருக்கட்டும்” என்றாள்.

 

“ஏன் எழில் இப்டி பண்ற. ஆண்ட்டிட்ட வேணும்னா காசு வாங்கிக் குடுத்துறு, கடனா வச்சுக்கோயேன், பிடிச்சத ௭டு ப்ளீஸ்” என்றபின்.

 

“சரி அப்போ, அம்மாட்ட கேட்டுக்கலாம், போன் போடுங்க” என்றாள்.

 

ப்ரகலத்தன் போன் போட்டு தர, இவள் கேட்க, “சரி, பிடிச்சா எடுத்துக்க, இங்கதான வரீங்க பாத்து கொடுத்துக்குறேன்” என்ற பின், பிடித்ததை சந்தோஷமாக எடுத்தாள்.

 

தன் கையிலிருந்த ரூபாய்க்கு மாடர்ன் ரெடிமேட் பிளவுஸ், வித் இன்னர் ஸ்கர்ட் எடுத்துக்கொண்டாள். மற்றவரும் கூட தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

 

அங்கேயே ஒரு ஹோட்டலில் தேவையானதை ஷேரிங் மணியாக சாப்பாட்டு பார்சலுக்கு கொடுத்தனர். சாப்பாடு ரெடியாகி வரும், வெயிட் பண்ணும் கேப்பில் ஜூஸ் குடிக்கலாம் என எதிரில் இருந்த கடையில் லெமன் சோடா ஆர்டர் செய்து குடித்தனர். ப்ரகலத்தன் அவளுக்கென்று கிட்கேட் சாக்லேட் வாங்கிக் கொடுத்தான். வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டாள், பின் வீட்டிற்கு கிளம்பி சென்று, அவள் வீட்டில் ஈவ்னிங் வர இருந்து, எல்லோருமாக சேர்ந்து சாப்பிட்டு ஆட்டம் போட்டு விட்டு கிளம்பினர்.

 

லட்சுவும் வைரமும் கூட சற்று கூடுதலாக நெருங்கி இருப்பது போல் தோன்றியது ப்ரகலத்தனுக்கு.

 

ஆறெழிலும், ப்ரகலத்தனும் காதலின் அடுத்த படியை யோசிக்காமல் இருந்தனர். அதை அவர்கள் உணரும் நாளும் வந்தது, சிம்போசியம் அன்று, அவன் ௭டுத்து குடுத்த புடவையில் கூடுதல் அழகோடு, அவனுக்காகவே தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக்கொண்டு கல்லூரி கிளம்பி செல்ல, அவள் டிபார்ட்மெண்ட் சீனியர் ஒருவன் பூங்கொத்துடன் வந்து நின்றான் அவள் முன்.

 

சிம்போஸியத்திற்கு முந்தின தினம் இரவு 9 மணி வரைக்கும் காலேஜில் இருந்து, டிபார்ட்மெண்ட் டெக்கரேஷன், ஆடிட்டோரியத்தின் முன் வாசலில் பூவினால் ரங்கோலி வரைந்து முடித்து, மறுநாள் குடுக்க தேவையான சர்டிபிகேட்ஸ் ரெடியாக ௭ழுதி எடுத்து வைத்து, ௭ன எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, மறுநாள் ௭ப்படியெல்லாம் சேரி கட்டலாம் ௭ன்பதயும் பிளான் செய்து விட்டு கிளம்பினர் ஆறுவும் அவள் வகுப்பு தோழிகளும்.

 

மறுநாள் காலையில், சிம்போஸியம் அன்று முந்தைய தினம் ப்ளான் செய்தது போல், வீட்டில் இருந்து சுடிதாரையே போட்டுக்கொண்டு கிளம்பியவள், காலேஜ் பக்கத்தில் இருக்கும் பார்லரில் சேலையைக் கட்டிக் கொள்ளலாம் என அதை கையில் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டாள். இவள் 8 மணிக்கு ஆஜராக, அதற்கு முன்பே லட்சு, நிலா, அமலா மூவரும் வந்து அங்கு ரெடியாகி கொண்டிருந்தனர்.

 

“சீக்கிரம் வந்தா என்னடி??, சாரி கட்டுனா லேட்டாகும், அத ஒரு டான்ஸ் ஆடி பாத்து அவுராம இருக்குதான்னு செக் பண்ணனும்லா சொல்லிட்டு சாவகாசமா வார லூசு” லட்சு திட்ட.

 

“உனக்கு என்ன உன் அப்பா பைக்ல கூட்டிவந்து இதோ வாசல்ல இறக்கிவிட்டு போயிருப்பாங்க, நா ஷேர் ஆட்டோ பிடிச்சு வரவேணாமா?” என அவள் ரிலாக்ஸாக அமர.

 

“அடிப்பாவி அல்ரெடி லேட்டா வந்துட்டு கால நீட்டி உக்காந்துட்ட, காலேஜ்க்கு லேட்டாகுது கிளம்பிப் தொழ” என அவள் மேலும் எரிந்து விழ.

 

“சரியான மாமியார்டி நீ எனக்கு. அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுக்க விட மாட்டேங்குற” என தானும் திட்டியவாறே எழுந்து சென்றாள்.

 

நால்வரும் மாடல் போல் ரெடியாகி கொண்டு பார்க்க, “அச்சோ செமடி, சாரி கட்டுனா இவ்வளவு அழகா இருப்போம்னு தெரியாம போச்சே” என ஆறு தனக்குத்தானே கண்ணாடி பார்த்து கிள்ளி முத்திக்கொள்ள.

 

“தெனமு இப்டி வந்து பார்லர்ல கட்டிக்கிட்டு வருவியா? இதுக்கே நம்ம சீனியர் தனியா சம்பாதிக்கணுமேடி” நிலா கேட்க.

 

“அவரே நீட்டா கட்டி விடுவாரா இருக்கும்” லட்சு சொல்ல.

 

“உடனே ரெம்ப ஓட்டாதீங்கடி, இப்ப ௭ப்டி நம்ம அழக சேவ் பண்றது. போட்டோ எடுக்கலாம்னா யார்கிட்டயும் மொபைல் இல்ல. இப்பனா பிரெஷா செமையா இருக்கோம், அப்டியே ஸ்டூடியோ போய் எடுத்துருவோமா? இன்னும் தான் டைம் இருக்கே ஸ்கூலுக்கு?” என்றாள் ஆறு (2011ல், செல்ஃபி, வாட்ஸ்அப் பெசிலிட்டி அவ்வளவு பாப்புலர் இல்லை).

 

“ஆமா ஆமா எதுக்கு இவ்வளவு அழக வேஸ்ட் பண்ணனும் ஃப்ரேம் பண்ணிடலாம்” என நால்வருமாக முடிவெடுத்து அந்த பார்லர் அக்காவிடமே விசாரித்து பக்கத்திலிருக்கும் ஸ்டூடியோ கண்டு பிடித்து சென்றனர்..

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
22
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்