Loading

இங்க ஒரு விஷயத்தைப் பகிர விரும்புகிறேன். கமெண்ட்ஸ் வாசிக்கும் போது எனக்கு தெரிந்த ஒரே விஷயம் ஷக்தியோட நேச்சர் சிலருக்கு பிடிக்கலை. உங்களுக்கு அவளோட எண்ணங்கள், பேச்சு பிடிகாம போகலாம். ஆனா, ஷக்தி இஸ் தட்.

கதையா இருந்தாலும் அது நிஜத்தில் இருக்கற ஒரு நபரோட எண்ணங்கள். ரொம்ப அழகான எண்ணங்கள். முரண்கள் இருந்தாலும் அவங்களோட அந்த எண்ணங்களும் அன்பும் காதலும் தான் அவங்களோட பேரழகு. அதை தான் கதையிலும் நான் வடித்திருக்கேன்.

ஒரு ஒருத்தருக்கு வெவ்வேறு எண்ணங்கள், கண்ணோட்டம் இருக்கும். அதை யாரும் தப்பு சொல்ல முடியாது, கூடாது. அதேதான் ஷக்தியோட பேச்சில் நான் சொல்ல வருவது.

Shakthi is sensitive as well as sensible.

உங்களுக்கு ஷக்திய பிடிக்கலை, ஜீரோவா நினைச்சா.. ப்ளீஸ், இந்த கதையை கடந்துடுங்க 💔

I may sound rude here, but I couldn’t resist myself adding this note.

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

‘AIR 178 Shivanesh Veerapathiran N’

(AIR – All India Rank)

ரிசல்ட் வெளியான உடன் அவனின் பெயரைப் பார்த்து அத்தனை சந்தோஷ குதூகலம் ஷக்தி சிவாவின் வீட்டில். 

அவன் வென்றுவிட்டான். அவன் கனவை ஜெயித்துவிட்டான். 

இதழ்கள் சிரித்தாலும் கண்ணோறம் கசிந்த நீர்த்துளிகள் சொன்னது அவனின் மனதை. அத்தனை ஆனந்த பெருக்கு.

“வெல்கம் டூ இண்டியன் சர்வீஸ் மை பாய்” என்று ப்ரமோத் வாழ்த்த, அதுவரை அடக்கிய அழுகையைக் கொட்டிவிட்டான்.

“ப்ரமோத்’ண்ணா” என்று அழுதவனின் மனநிலையை கணித்தவனால், “டேய் சிவா, கன்ட்ரோல். போலீஸ்காரன் அழறான் பாரு” என்று ஏகத்திற்கு அவனை சமாதானம் செய்தான்.

அவனையே பார்த்திருந்தாள் ஷக்தி. மனது நிறைந்துவிட்டது அவளுக்கு. இருந்தும் அவனை பார்த்தும் உள்ளுக்குள் மருகியும் அத்தனை கண்ணீர்.

இனி இரண்டு வருடம் அவள் கணவனை பிரிய வேண்டும். அது கொடுத்த வலி, அவன் வெற்றி தந்த மகிழ்வில் பின்னுக்கு சென்றிருந்தாலும் வலித்தது.

“மாமா” என்று அழுதுகொண்டிருந்த சிவாவின் மீது ஏறி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்ட சின்னக் கரங்களைப் பார்த்தவன் அதன் பின்னரே தன்னை சமன் செய்தான்.

“சிம்பா, சிவா மாமாவ ஸ்மைல் பண்ண சொல்லுங்க” என்று ப்ரமோத் வீடியோ காலில் சொல்ல,

சிவாவின் இதழ்களை தன் குட்டி விரல்களால் இருபக்கமும் விரித்து காட்டியவன், 

“மாமா, தீவ்வா மாமா த்மைல்” என்க, அவனை அணைத்துக்கொண்டான் சிவா.

“ஏய் நீயேன்டி அழற. அதான் நீ சொன்னதுக்கு இந்த அய்யனார் செஞ்சு காட்டீடான்ல” என்று மேகா ஷக்தியை அதட்ட,

“நீ அழுது என் பையன பயமுறுத்தாத அய்யனாரே” என்று அதட்டியபடி இருவரையும் சரி செய்தால் மேகா.

இனி அவன் செப்டம்பர் முதல் வாரம் முசோரியில் இருக்கும் LBSNAA (Lal Bahadur Shastri National Academy of Administration) செல்ல வேண்டும். 

முதன்மை கட்ட பயிற்சிகள் அங்கு துவங்கிய பின்னர் மூன்று மாதம் சென்றதும் IPS TRAINING பயில ஹைதராபாத் சென்றுவிடுவான், சிவனேஷ்.

அதுவரை அவனுக்கு எதுவும் தெரியவில்லை. வெற்றியை கொண்டாடிக்கொண்டிருந்தான். ஜாய்னிங் லெட்டர் வந்த பின்னரே ஷக்தியை பற்றிய நினைவு சூழ்ந்தது அவனை.

“ஆரும்மா.. தைரியமா இருக்கனும். ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணுவேன். எதுக்கும் தயங்காம ஸ்ராங்கா இருக்கனும்” என்று இரண்டு மாதங்களாக அவளுக்கு உள்ளும் புறமும் தைரியத்தை விதைத்துக்கொண்டே இருந்தான் ஷக்தியின் கணவன்.

இரவு பிரிவை நினைத்தான அவர்களின் நெருக்கங்கள் கூடியபடியே இருக்க அதில் காதலும் பிரிவு துயருமே அதிகமாக இருந்தது.

அவளின் ‘சோனு’ தவிர்த்து ‘என்னங்க’வில் கண்டுகொள்வான் அவளின் உள்ளத்து தவிப்பை.

மனதால் உயிராய் உணர்வால் கலந்தவர்களின் முகங்கள் அவர்களின் நிறைவை கூறினாலும் உள்ளத்து தவிப்பு இருந்துகொண்டே தான் இருந்தது.

ஆயிற்று, சிவா முசோரி சென்று இரண்டு மாதங்கள். இன்னும் ஒரு மாதத்தில் ஒரு வார விடுப்பில் ஊருக்கு வரவிருக்கிறான். 

தினமும் அதிகாலை மற்றும் இரவில் மனைவியிடம் பேசிவிடுவான். இருந்தும் மூன்று நாட்களாக ஷக்தியுடன் சண்டை.

“நீ எப்படி ஷிவ் அப்படி சொல்லலாம். நீ இல்லாம நான் எப்படிடா இருக்க முடியும்? அசால்ட்டா சொல்லுற? அவ்வளவு ஏத்தம்? ம்ம்.. கேட்டுக்கோ நானா உன்ன பார்க்க கூப்பிட மாட்டேன், உன்ன பார்க்கவும் வரமாட்டேன்” என்றாள் சூடாக. 

அது அவனை மனதளவில் வாட்டியிருந்தது. நிச்சயம் அவன் ‘Cadre’ தேர்ந்தெடுக்கும் போது வட மாநிலங்களில் தான் அனேகமாக இருக்க வேண்டி வரும். அந்த சமயங்களில் இவள் தவிப்பாலே என்று சொன்னது இப்போது அவனுக்கே வினையாகிப்போனது!

ஒருபுறம் லாவண்யா, சிவாவிற்கு போஸ்டிங் வந்தவுடன் அவளின் வேலையை ராஜினாமா செய்ய சொல்லியிருக்க, அவளும் அந்த எண்ணத்தில் தான் இருந்தால்.

ஆனால், இவன் என்ன வென்றால் அவளை வேலைக்குப் போக வேண்டும் என்று மறைமுகமாகச் சொல்லுவது போல் இருக்க, மனதிற்குள் மருகியவளின் பேச்சு கோபமாய் வெளிவந்துவிட்டது.

சண்டையிட்ட மூன்றாவது நாள் ஆராவமுதன், ப்ரமோத்துடன் LBSNAA சென்றிருந்தாள் ஷக்தி.

சிவாவை பார்க்காது இருக்க முடியாது, விசிட்டிங் ஹவர்ஸில் ப்ரமோத்தை வைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

சிறு புன்னகையுடன் மனைவியைப் பார்த்தவன், “பார்க்க மாட்டேன்னு யாரோ சொன்னாங்க ப்ரமோத்’ண்ணா”

“நா ஒன்னைய ஒன்னும் பார்க்க வரல, அண்ணா கூட அக்காம்பனி பண்ணேன்” என்றாள் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

அகாடமியின் உள்ளே அவர்களுக்கு அனுமதி இல்லை. வெளியே சுற்றியவர்கள் இறுதியாய் கிளம்பும் சமயத்தில், “ஒரு வாரம் லீவ் வருமே, வீட்டுக்கு வராத ஷிவ். ஊருக்கு டைரக்டா போ. அங்க பாட்டி உன்னை போஸ்ட் வாங்கின பிறகு பார்க்க ஆசை படுவாங்க தான” என்று அவள் சொல்லி சென்றது, உள்ளூர அவனை இதமாய் வைத்தது.

ஆழ்வார்திருநகரி வந்திருந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.

காலையிலேயே மகன் வருவான் என்று உண்ணாமலை அவனுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து வைத்திருந்தார்.

புகழேந்திரன் வீட்டில் தான் இருந்தான். தம்பி வீட்டிற்கு வந்தது அவனுக்கு பிடித்திருந்தது தான் இருந்தும் மனதில் தன் வீட்டில் கீழிறங்கியதாய் தோன்றியது.

தொடர்ந்து இருமுறை அடித்து ஓய்ந்திருந்தது சிவாவின் தொலைபேசி. 

“சின்னக்குட்டி மாமா போன் எடுத்து வரீங்களா” என்று ஆதினியிடம் சிவா கேட்க,

இரட்டை குதிரைவால் ஜுன்டி போட்டவள் தலையாட்டி போகும் முன், “இரு நானே எடுத்து வரேன். எதாவது முக்கியமா இருக்க போகுது” என்று பாரதி தொலைபேசியை எடுக்க செல்ல, திரும்பவும் அடித்தது.

‘குலாப்’ என்ற பெயருடன் ஷக்தி அவனை அணைத்திருந்த புகைப்படம் ஸ்கிரினில் வர, பாரதியின் மனது எரிந்தது.

“இப்போ இந்த அகராதி பிடிச்சவளுக்கு என்ன வந்துச்சாம். ஒரு வாய் அவன நிம்மதியா சாப்பிட வுடராளா பாரு” என்று வாய்க்குள் திட்டியவள் ஷக்தியின் அழைப்பை துண்டித்திருந்தாள்.

“யாருக்கா?”

“போன் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகிடுச்சுடா, பார்க்கல” என்றவள் எதுவும் நடவாதது போல் வந்து அமர்ந்து கொள்ள, “சார்ஜ் போட்டியா?”

“போட்டேன், போட்டேன்” 

அவளின் செய்கையின் மாறுபாடு அவனுக்கு உறுத்தியது. 

நேரங்கடக்க வீட்டினருடன் ஒன்றிவிட்டான் ஷக்தியின் நினைவுகளுடன். 

அந்தி மாலையில் மனதில் இருந்த நிறைவுடன் மாடியில் நின்றிருந்தான் சிவனேஷ். மனதில் செல்லன்னா மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது. 

அவன் ஆசைப்பட்ட கனவு நினைவாகி, அதில் ஒரு கட்டத்தை நிறைவு செய்து இதோ இன்னும் ஐந்து நாட்களில் ஹைதராபாத் பயணிக்கவுள்ளான் அவனின் இரண்டாம் கட்ட IPS பயிற்சிக்காக.

வானத்தில் இருந்த சிவந்த நிற வர்ணஜாலம் அவன் கண்ணையும் கருத்தையும் பறிக்க, ஏனோ அழையா விருந்தாளியாய் அவர்கள் கூடலில் சிவக்கும் ஷக்தியின் பின்பம் மனதில் வந்து தொலைத்து.

ஒரு வெட்கப் புன்னகை அவன் முகத்தை அடைத்திருந்தது.

தலை கோதி தன் உணர்வினை அணைத்தவனால் இப்போது ஷக்தியை அணைக்க முடியாத ஏக்கம். விரக தாபமும்!

மனதில் ஏதோ ஒன்று சந்தோஷத்தில் நமநமத்தது. நிறைவா மகிழ்வா என்ற தெரியாத ஏதோ ஒன்று. அத்துடன் அவனின் குலாப்பை இப்போதே பார்க்க வேண்டும் என்ற எண்ணம். 

அதேநேரம் அங்கு நல்ல மழை குன்னூரில் அடித்து வாங்கிக்கொண்டிருந்தது. 

மதியத்தில் இருந்து அழைத்தவளால் அவன் தொலைபேசியை அணைத்தது மனதைக் குத்தியது. ஏதேதோ எண்ணத்தின் வியாபனையில் இருந்தவளின் தொலைபேசி அதிர எடுத்தவளின் முகம் கணிந்தது.

“அத்தன தடவ கால் பண்ணியும் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கீங்க போல ஆபிசர்?” குத்தலாக ஆரம்பித்தால்.

“நீயா கால் பண்ண? போன் வந்து எடுக்கறதுக்குள்ள ஆஃப் ஆகி இப்போ தான்‌ எடுக்கறேன் ஷக்தி” என்றவன் இலகு குரல் அவளை நிலைப்படுத்தியது.

“சரி, சரி சொல்லுங்க” சலிப்பான குரலில் பதில் வர,

“என்ன சொல்லனும்? அதான் என்ன அங்க வரவேண்டாம்னு சொல்லிட்டியே, பின்ன‌ எதுக்கு கால் பண்ண?” கோப வாடை வீசியது குரலில்.

“ஒன்னு சொல்லனும் என் சோனுகிட்ட”

அவளின் சோனு உணர்த்தியது ஏதோ விஷயமென்று அவனுக்கு.

“..”

“பேச மாட்டிங்களா?”

“சொல்லு”

“கோபமா இன்னும்”

“இல்லாமலா? நம்ம வீட்டுக்கு வரேன்னு தானடி சொன்னேன்? இப்போ எதுக்கு என்னை ஊருக்கு போகச் சொல்லி அத்தன அக்கப்போர்.”

“அங்க எல்லாரும் உன்ன பார்த்த பின்னாடி பழைய மாதிரி நடந்தாங்களா ஷிவ்?”

“இல்ல ஆனா ஆச்சியும் அம்மாவும் ஹாப்பி. அக்கா வந்துருக்கா, நேத்துல இருந்து சொந்தக்காரங்க எல்லாம் வந்து பேசிட்டு போறாங்க. நிறைய மாற்றம்டா ஆரு” என்றான் லேசாகிய மனதுடன்.

“அப்போ என் சோனு ஹாப்பி தான?”

“பக்கா ஹாப்பி, நீ இல்லாம”

அதில் சிரித்தவள், “ம்ம்.. இதுக்குத் தான் போக சொன்னேன். நான் உங்கூடவே தான இருக்கப் போறேன். அவங்க கொஞ்சம் ஊறுகா மாதிரி உன்ன தொட்டுக்கட்டும் இந்த கேப்லன்னு தான் போகச் சொன்னேன்” என்றவள் மென்மையாய் சிரிக்க, 

“வீடியோ கால் வா” என்றவன் குரலில் அத்தனை போதை. குலாப்பின் போதை.

“வெயிட், இங்க கரெண்ட் இல்ல. வெளிய வந்துக்கறேன்”

“மழ சவுண்ட் தான்டீ கேட்குது” என்றவன் அவள் முகம் பார்க்க,

“குலாப், என்னடி உன் பேஸ் என்னவோ மாதிரி இருக்கு” என்றான் கண்களை சுருக்கி யோசனையுடன்.

“நல்லா இருக்க தான நீ?” என்றான் மீண்டும்.

“ம்ம்.. ம்ம்.. எப்படி இருக்கேனாம்” என்றாள் ஒற்றைப் புருவம் தூக்கியபடி அவளும்.

“ம்ம்ப்ச்.. அதான் உன்ன கேட்கறேன். யூ லுக் டிப்ரண்ட்” என்றவன்,

“இப்போ ஏன் உன்ன கால் வர சொன்னேன்னா..” என்றபடி அவன் வானத்தைக் காட்ட,

“வாவ், செம்ம கலர்ல ஷிவ். எனக்கு இந்த பிங் ஷேட் பிடிக்குமே. அச்சோ” என்றவள் இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள் என்று வர்ணத்தை குழைத்து பூசிய வானத்தை கொஞ்சினாள் ஷிவாவிடம்.

“பட் எனக்கு இத பார்த்தவுடனே ஒருத்தர் இதே மாதிரி என்னோட இருக்கறது நியாபகம் வந்துச்சா, அதான் அவங்களுக்கே கால் பண்ணிட்டேன்” என்றான் அத்தனை விஷமத்துடன்.

“அய்ய, ப்பஹ்” என்றாள் அவன் பேச்சால் நாணமுற்று முகத்தைத் திருப்ப,

“குலாப், என்ன என்னென்னமோ பண்ணுற? வித்தியாசமா இருக்கடி நீ” என்றவன் பார்வையை தாங்காது தவித்தாள் மாது.

“ஊஃப்ப்.. ஐ வாண்ட் டு கிவ் எ ஹக் டு யூ குலாப். காரணமே இல்லாம எனக்கு ஏதோ ஒரு‌ ஃபுல் ஃபில் (Fulfill) ஆனா மாதிரி இருக்கு” என்றான் கண்களை மூடி ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக்கொண்டு.

அவனையே பார்த்திருந்தவள் சட்டென்று, “உங்க பிரிவு உபச்சார பர்பாமென்ஸ் இப்போ அதோட ரிசால் காட்டீருச்சு ஆபிசர்” என்றாள் கண்களை சிமிட்டிய படி. அதில் மெல்லிய நீர் படலமும் படற,

“குலாப்?” 

“கண்டுபிடி சோனு” என்றவள் குரல் அதி மென்மையாய் இருந்தது.

நிமிடங்கள் மௌனமாய் கடக்க, அவன் குலாபின் போதையில் இருந்து மீண்டு, “ஆரு, என்னடி” என்றவன் குரலில் தான் அத்தனை பரிதவிப்பு. 

அவள் கண்ணீர் அவனை ஏதோ செய்ய, அவள் வார்த்தைகளும் அவளின் மாற்றமும் அவனை கவனித்து யோசிக்க வைத்தது.

அதிவேகமாய் நெஞ்சம் துடிக்க,

“ஆரும்மா, சொல்லுடா” என்றவன் மனது காரணம் அறிந்து பதறியதோ?

“மூச்சு முட்டுற மாதிரி இருக்குடா குலாப். சொல்லேன்” என்றவன் கண்ணோற நீர் கசிவுகள் உணர்த்தியது அவன் என்ன நினைக்கிறேன் என்று.

அதை மெய்யாக்கும் பொருட்டு, “குட்டி குலாப்பா? குட்டி சோனுவா? யார் வேணும் உனக்கு?” 

“டேய் ஷக்தி” என்றவன் கத்தியே விட்டான் அவன் தந்தையான சந்தோஷத்துடன்.  

தொலைபேசியை பிடித்திருந்தவனின் பிடி இலகியது.

“அழக்கூடாது. நீ அழுத நானும் அழுவேன்ல ஷிவ்” என்றவள் குரல் அழுகையில் அழ காத்திருந்தது.

“எப்போ தெரியும்?” என்றவன் கண்ணீரை துடைக்க மறந்து.

“திட்டுவ, நான் சொல்ல மாட்டேன். நீ ஹைதராபாத் போன பின்ன தான் சொல்லனும்னு இருந்தேன். ஆனா முடில, மிஸ் யூ சோனு” என்றவள் தவிப்பும் அழுகையும் அவனுக்குப் புரிந்தது.

“சரி, இப்போ திட்ட மாட்டேன். சொல்லுடா ப்ளீஸ்”

“முசோரி வந்தேன்ல அப்போ. இப்போ.. நைன்டி ஃபைவ் டேஸ்” என்றாள் தலை குனிந்தபடி.

அவளையே பார்த்திருந்தவன், “பாப்பா இருந்தது தெரிஞ்சே வந்தியா நீ?” என்றவன் குரலில் தொனித்தது அத்தனை கோபம்.

அவளுக்காகவா அல்ல குழந்தைக்காகவா என்று அவள் பிரித்து பார்க்கவில்லை. அந்த கோபம் அவர்களுக்கானது, அவனால் அவனை ஒட்டியிருந்த அவனின் இரு உயிர்களுக்கானது என்று அவளுக்கு நன்கு தெரியும்.

“இல்ல.. அங்க வந்த பின்ன தான்..” என்றவள் குரலில் அவ்வளவு தயக்கம். குற்றவுணர்வு.

“அப்புறம் ஏன்டி சொல்லல” என்றான் ஒருவித ஆதங்கக் குரலில்.

“இங்க வரியா ஷிவ்” என்றாள் தயங்கிக் கொண்டு.

“பார்க்கனும் போல இருக்கு’ம்மா” என்றவள் அழுகை அவனை கரைய வைத்து நொறுக்கியது.

உடன் தொடர்பும் அணைக்கப்பட்டிருந்தது. 

என்றோ அவள் சண்டையிட்டிருந்தாள் நானா உன்னை பார்க்க கேட்கமாட்டேன் என்று.. ஆனால் தன்னை மறந்து தன் கேள்வனைப் பார்க்க உந்தியது அவள் தாய்மை. 

அவன் மேலான அவளின் அன்பு!

“அய்யா” என்று படிகளில் ஓடியவனை, “என்ன சிவா” என்ற உண்ணாமலையின் குரல் தடுத்தது.

“ம்மா” என்று அவரை அணைத்துக்கெண்டான்.

“என்ன சாமி, எதுக்குய்யா அழற”

“ம்ம்..” என்றவன் நிமிர்ந்தவண்ணம் அவன் கண்ணீரை துடைத்துக்கொண்டு,

“ஷக்தி.. ஷக்தி ப்ரக்னென்ட்டா இருக்காளாம் ம்மா” என்றான் சிரிப்பும் அழுகையுமாய்.

“ஆத்தே, மாசம் நெறம்ப ஆயிருக்குமேடா” என்க,

“மூன்ற மாசம் இருக்கும்” என்றான் தலை கோதியபடி.

“இது கூடவா கவனியாம இருப்பா. கெளம்பு மொத, அந்த கழுதைய வந்து நாலு சாத்து சாத்தறேன்” என்று பாரதி பேசியதையே அதிசயத்து கேட்டு நின்றிருந்தார், உண்ணாமலை.

குன்னூரில் ஷக்தியின் வீடே சந்தோஷ சாரலில் நனைந்திருந்தது.

வந்ததில் இருந்து அவளின் ஷிவ்வை அவள் விடவில்லை அவனும் அவளை விட்டு நகரவில்லை.

உள்ளமெல்லாம் அத்தனை பூரிப்பு. ஆனந்த களிப்பு.

“ஆக மொத்தம் என் பையனுக்கு மூனு ஆகறதுக்குள்ள என் மருமகள ரெடி பண்ணிட ஆரா, என்ன ஒரு டைமிங் அய்யனாரே” என்று சொன்ன மேகாவை பொய்யாக முறைக்கக் கூட முடியாது வெக்கம் வந்து பிடித்துக்கொண்டது சிவனேஷை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்