Loading

தமிழ் காலை சமையலில் இறங்கி இருந்தாள்.

ருத்ரன் அவனது அறையில் இருக்க, தனாவின் அறைக்குச் செல்ல, தனா எழுந்து உட்கார்ந்து நேற்றைய நினைவில் யோசித்துக் கொண்டிருக்க,

அவளைப் பார்த்துத் தன் தலையில் தட்டிக் கொண்ட காயு, “காலேஜ் கிளம்புங்க மேடம், காலேஜ் போற ஐடியா இருக்கா? இல்லையா?” என்று சிரித்தாள்.

தனா நேரத்தைப் பார்த்தவள், தன் தலையில் தட்டிக் கொண்டு வேறு எதுவும் சொல்லாமல் காலேஜ் கிளம்ப,

தமிழ் செய்து கொடுத்து உணவைச் சாப்பிட்டுவிட்டு காலேஜ் கிளம்பி விட்டார்கள்.

அப்படியே மூன்று நாள்கள் சென்றது.

திருமணத்திற்கு ஐந்து நாள்கள் முன்பு இரு வீட்டிலும் பந்தக்கால் நட்டு முதல் நலங்கு ஃபங்ஷனும் ஆரம்பமாகியது. வேகமாக ஒவ்வொரு வேலையாக நடைபெற பந்தக்கால் நட்டு முதல் நலங்கு இரு வீட்டிலும் தாய்மாமன் வைக்க,

திருமணதிற்குத் தேவையான ஒவ்வொரு வேலையையும், இழுத்துப் போட்டுக் கொண்டு தமிழ் காயத்ரி இருவரும் செய்ய,

காயு இந்தப் பக்கமும் தனது அண்ணனின் சார்பாக ஒரு சில வேலைகளைச் செய்தாள் .

அகிலா அமுதனை வைத்துக்கொண்டு என்னால் அதிக வேலைகள் செய்ய முடியாது என்று விட்டு மேற்பார்வை மட்டும் பார்க்க,

கடகடவென்று திருமண நாளும் வந்து சேர்ந்தது.

சரவணன் வீட்டிற்கு வெளியே பரந்து விரிந்து கிடந்த இடத்தில், பந்தல் போட்டுப் பெரிதாக விமரிசையாகவே திருமண வேலைகள் நடைபெற ஆரம்பித்தது.

அன்று அகிலா வாங்கிய அனைத்தும் தனாவிற்கு தான். அவை அனைத்தும் தங்களது வீட்டிலேயே வைத்து விட்டாள்.

ஐயர் மந்திரம் சொல்ல மஞ்சள் தாலியைச் சரவணன் கையில் கொடுக்க,

சரவணன் முதல் இரண்டு முடிச்சு இட்டவன் மூன்றாவது முடிச்சு இடத் திரும்பிப் பார்க்க, அகிலா சிரித்த முகமாக “நீயே மூன்று முடிச்சுப் போடு அண்ணா… நான் போடுற மாதிரி இருந்தா, உன்னோட மத்த ரெண்டு தங்கச்சிகளும் சண்டைக்கு வருவார்கள். அப்புறம் நாங்க மூணு பேரும் தான் முடிச்சுப் போடுற மாதிரி இருக்கும்” என்று சிரித்தாள்.

சரவணன் தனது மூன்று தங்கைகளையும் முறைத்து விட்டு அவனே மூன்று முடிச்சு இட்டு கீர்த்தனாவைத் தனது மனைவியாகத் தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டான்.

திருமணம் முடிந்த அடுத்த நொடி அகி சிரித்த முகமாக சரவணன் அருகில் வந்து அவனது கையில் ஒரு பொருளை வைக்க,

“இன்னும் எந்தச் சடங்குமே நடக்கல மா, அதுக்குள்ள கிப்ட் தரீங்களா?” என்று ஐயர் கேட்க,

“கிப்ட் தான், ஆனா ரெண்டு நிமிஷம் பொறுங்க” என்று அகி சொல்ல,

சுற்றி இருந்த பெரியவர்கள், ஏன் ருத்ரன் கூட “இது என்ன விளையாட்டு அகி, இந்த நேரத்தில்” என்றான்.

காயு கூட ஆர்வமாக “என்ன?” என்று கேட்டுக் கொண்டு அருகில் வந்து நிற்க,

“அண்ணன் முதல்ல பாக்கட்டும்” என்றவுடன் தனது கையைத் திறந்த சரவணன் கண்ணில் ஆனந்தக் கண்ணீர்.

கண்கள் பளிச்சிடத் தனது தங்கையைப் பார்த்து ‘ஆமாவா’ என்பது போல் கேட்க,

சிரித்த முகமாக அகி ‘ஆமாம்’ என்பது போல் கண் மூடித் திறக்க, மணமேடையில் இருந்து வேகமாக எழுந்து தனது தங்கையை இறுக்கி அணைத்தான் .

ருத்ரன் ஒன்றும் புரியாமல் “என்னடா?” என்று கேட்டுக் கொண்டே தனது நண்பனின் அருகில் வர,

அவன் கையில் இருப்பதை ருத்ரனிடம் காட்ட, அதில் பிரக்னன்சி கிட் இருக்க அதில் இரண்டு கோடு இருந்தது.

வேகமாக அவளைக் கட்டி அணைத்து அவளது நெற்றியில் இதழ் பதித்த ருத்ரன், சிரித்துக் கொண்டே “எங்களை ஹனிமூன் அனுப்பிவிட்டு நீங்க இங்க ப்ராசஸ்ல இறங்கி இருக்கீங்க?” என்று சிரித்தான்.

“போ மாமா” என்று சினுங்கினாள் அகிலா.

தமிழ் அமைதியாகவே நிற்க, “என்னடி?” என்று ருத்ரன் அவளைப் பார்க்க,

“அவ அன்னைக்கு வீடியோ கால்ல வந்ததே இந்த ரீசனுக்கு தான் மாமா… நம்ம பக்கத்துல இல்லாததால சொல்லல. அண்ணனுக்கு அவ தர பெரிய கிப்ட் இதுதான்” என்று சிரித்து விட்டு அடுத்த அடுத்த வேலையில் நகர்ந்து விட,

காயத்ரி, “கேடி அக்கா, அன்னைக்கே நெனச்சேன் உன்ன” என்று விட்டு அவளை ஒரு பக்கமாகக் கட்டி அணைத்தாள்.

“உனக்கும் ஏற்கனவே தெரியுமா காயூ” என்று ருத்ரன் கேட்க,

“இல்ல மாமா, அது…” என்று இழுத்தாள். “அப்போ உனக்கும் தெரியும்” என்று கேட்க,

சரவணன் ருத்ரன் இருவரையும் பார்த்த காயூ, “எனக்குத் தெரியும். கன்ஃபார்ம் அப்படின்னு எல்லாம் சொல்ல முடியாது, டவுட்டு. அதனாலதான் அகி அக்காவுக்கு பதில் ஒரு சில வேலையை நான் அங்கயும் செஞ்சேன்” என்று சிரித்தாள்.

திருமணம் நல்லபடியாக முடிய ஒவ்வொரு சடங்கும் நல்லபடியாக முடிந்த பிறகு மகி, அகிலாவை அழைத்துக் கொண்டு மணமகன் அறைக்கு இழுத்துச் செல்ல,

ரூமுக்குள் சென்றவுடன் அகிலாவை வேகமாகப் பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு, அவளது முதுகில் இருக்கும் முடிகளை ஒதுக்கிவிட்டு அவளது முதுகில் தனது முகத்தை வைத்துத் தேய்க்க,

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு மகி” என்று நெளிந்தாள்.

“ஆனாலும் சரோ மச்சான், ருத்ரன் சகலையோட உணர்வைப் பார்க்க அவ்வளவு க்யூட்டா இருக்குடி” என்றான்.

“நீங்க எதுக்கு இவ்ளோ எக்சைட்மென்ட் ஆகுறிங்க? உங்ககிட்ட நான் ஏற்கனவே விஷயத்தைச் சொல்லிட்டேன் தானே” என்று முறைத்தாள்.

“இன்னைக்கு தான் சொல்ற மாதிரி பண்றீங்க?” என்றாள்.

“நான் எப்படி அப்படிக்க் சொன்னேன்?” என்று அவளை முன் பக்கம் திருப்பிச் சிரிக்க, அகியின் கண்கள் மகியின் கண்களையே நோக்கிக் கொண்டு இருக்க, வேகமாக அவளை இழுத்து, அவளது உதட்டில் தனது மொத்த சந்தோஷத்தையும் காட்டச் செய்தான்.

அவளை விட்டு விலகி அவளது கண்ணையே உற்றுப் பார்த்துவிட்டு அவளது கண்ணில் முத்தமிட்டுச் சிரித்தான்.

“அகி உன்னோட கண்ணு என்னை என்னவோ பண்ணுதுடி, விட்டா இங்கேயே…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

சிரித்த அகி, “வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்டாள்.

“உண்மையா முடியல, கிட்டத்தட்ட ஒரு மாசமா இழுத்தடிச்சுட்டு இருக்கடி” என்றான்.

“சரி வாங்க போலாம்” என்றாள் சிரித்துக் கொண்டே.

“பாப்பாக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா?” என்றான்.

“ஒரு மாசமா வேணாம்னு சொல்றது நானா, நீங்களா?” என்று சிரித்தாள்.

அப்போது அவர்கள் இருந்து ரூம் கதவு தட்டப்பட்டது.

“கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தா அந்த சில்லு வண்டுக்குப் பொறுக்காது. கரடி” என்று முனங்கிக் கொண்டே கதவைத் திறக்க,

அங்கு அமுதன் நின்று கொண்டிருந்தான்.

காயத்ரி என்று அகி நினைத்து இருந்தாள்.

“தங்கம்…” என்று அமுதனைத் தூக்கிக் கொள்ள,

“மாமா வரச் சொன்னாரு” என்று சொன்னான் மழலைக் குரலில்.

“சரி…” என்று விட்டு இருவரும் வெளியில் வர, அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் மகி.

பிறகு புதுமணத் தம்பதிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல,

அகிலா, தமிழ், காயத்ரி மூவருமே சேர்ந்து ஆரத்தி எடுக்க,

ஆரத்தி எடுத்துவிட்டு மூவரும் கையை நீட்டிக் கொண்டே இருக்க,

மூவரது தலையிலும் கொட்டியவன் என்கிட்டெல்லாம் காசு கிடையாது. உங்க மாமா தான் பணக்காரன், அவன் கிட்டக் கேளுங்க. அவன் தானே பொண்ணு குடுக்குறான்” என்று சிரித்தான்.

மூவருமே இடுப்பில் கையை ஊனி முறைத்துக் கொண்டு இருக்க,

தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்து மூன்று பிரேஸ்லெட் எடுத்தவன், மூவரது கையிலும் மாட்டிவிட மூவருமே சிரித்த முகமாக வாங்கிக் கொண்டார்கள்.

அதன் பிறகு பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்றிவிட்டு, அவளைப் பால் காய்ச்சச் சொல்லிவிட்டு, வீட்டிலும் ஒரு சில சடங்குகள் செய்தார்கள்.

அப்படியே இரவுப் பொழுது வர,

இரவு சடங்கிற்குத் தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இங்குச் சரவணன் அறையில் இருந்த தனாவிற்குத் தான் கைகால்கள் உதற ஆரம்பித்தது.

“இப்போ நைட்டு இந்தச் சடங்கு தேவையா காயு?” என்று கேட்க,

“எந்தச் சடங்கு தனு குட்டி?” என்று சிரித்தாள் காயூ.

“விளையாடாத காயூ” என்று அவளது கையைப் பிடித்துக் கொள்ள,

“இது என்னடி வம்பா இருக்கு, கல்யாணம் கட்டிக்கணும்னு ஆசைப்பட்டவ எல்லாத்துக்கும் தயாராகி தானே இருந்து இருக்கணும்” என்று சிரிக்க,

தனா முறைக்க,

“ஏண்டா தனுமா, உனக்கு எங்க அண்ணனைப் பார்த்தா அவ்வளவு பயமாவா இருக்கு” என்று சிரித்தாள்.

அதன் பிறகு நேரம் ஆவதை உணர்ந்து அவளை ரெடி செய்து அவளை ரூமில் இருக்கச் சொல்லிவிட்டுச் சரவணனை ரூமுக்குள் செல்லச் சொல்ல,

சரவணன் ரூமுக்குள் சென்றவுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்த தனாவிற்கு தான் கை கால்கள் உதறிக் கொண்டு இருந்தது.

அவளைப் பார்த்துச் சிரித்த சரவணன் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவளது படபடப்பை ரசித்து கொண்டே அவளது அருகில் சிறிது இடைவெளி விட்டு உட்கார,

வேகமாக அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் தனா.

“மேடம், இவ்வளவு நேரம் கை கால் நடுங்க உட்கார்ந்து இருந்த மாதிரி இருந்துச்சு” என்று சிரித்தான்.

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு மாமா.”

“ஒரு மாதிரினா…” என்று சிரித்தான்.

“உங்களை…” என்று அவனை முறைத்துவிட்டு அவனது நெஞ்சிலே ஒரு சில அடிகளைக் கொடுக்க,

“மாமா, எனக்கு ஒரு டவுட்டு” என்றாள்.

அவனும் அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு ஆர்வமாக, “என்னடி?” என்று கேட்க,

“இல்ல, இத்தனை நாளா நீங்க வெளியே தானே தூங்க செஞ்சீங்க. இப்போ ரூமுக்குள்ள வந்து படுத்துட்டீங்கன்னு யாராவது ஏதாவது நினைக்க மாட்டாங்களா?” என்றாள்.

சரவணன் அவளைப் பார்த்து முறைத்துவிட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே “அப்போ வெளியே போய் படுத்துக் கொள்ளலாமா? இன்னிக்கி ஃபர்ஸ்ட் நைட்டும் வெளிய போய் வச்சுக்கலாமா?” என்றான் கண்களில் குறும்பு மின்ன.

தனா அவனை முறைக்க, “பின்ன என்னடி?” என்று விட்டு அவளைத் தன் மேல் போட்டுக்கொண்டு, அவளது காதில் சில பல ரகசியங்களைப் பேசிக் கொண்டே தன்னுடைய வேலையில் இறங்கி இருந்தான்.

மறுநாள் காலை 4 மணி போல் எழுந்த தனா, தான் எடுத்துக் கொண்டு வந்து புடவையில் கை வைக்கச் சென்றவள்,

அன்று தனக்காக அகி வாங்கிக் கொடுத்ததை நினைவில் வைத்து கபோர்டைத் திறக்க,

அங்கு அனைத்தும் ரெடியாக இருக்க அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்று குளித்துவிட்டுப் புடவை கட்டிக்கொண்டு வெளியில் வந்தவள்,

பாதி விடிந்தும் விடியாமல் இருக்க, வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைய,

அப்பொழுது தான் எழுந்த இளவரசி, “நான் செஞ்சி இருப்பேன் இல்ல தனா. நீ எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்து இந்த வேலை எல்லாம் செய்ற?” என்றார்.

“அதனால என்ன, ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம் அத்தை இனி” என்று சிரித்தாள்.

அவரும் சிரித்துவிட்டுச் சமையலறைக்குள் செல்ல,

“நீங்க இருங்க, நான் காபி போடறேன்” என்று விட்டுக் காபி போட்டு அவருக்குக் கொடுத்துவிட்டு முனுசாமிக்கு எடுத்துக்கொண்டு வர, அவரும் வெளியில் வந்தார்.

“மாமா, நீங்க இந்த நேரத்துல காட்டுக்குப் போறீங்களா? இருங்க, நான் மாமாவை எழுப்பி விடுறேன்” என்றாள்.

“அவன் நாலஞ்சு நாளைக்கு வரவேண்டாம் தாயி. நான் ஒரு வாரத்துக்கு வேலை செய்ய ஆள் போட்டு இருக்கேன்” என்று சிரித்துவிட்டு அவளது கையில் இருக்கும் காபியை வாங்கிக் கொண்டார்.

“சரி மாமா” என்று விட்டுத் தன்னுடைய ரூமுக்குச் செல்ல,

“சரவணன் தூங்கட்டும் தாயி, இப்போ இன்னும் அசதியா இருப்பான். கல்யாண வேலை அனைத்தையும் இழுத்துப் போட்டுச் செஞ்சான்” என்று விட்டு முனுசாமி அமைதியாகி விட,

“சரி” என்று விட்டுச் சமையல் அறைக்குச் சென்று தனா சமையலில் இறங்க,

இளவரசி முனுசாமியைப் பார்த்தார்.

முனுசாமி சிரித்து விட்டு அமைதியாகி விட்டார்.

காலை 7 மணி போல் அகிலா எழுந்து வெளியில் வர,

அமுதன் தனாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டு சமையல் மேடையில் உட்கார்ந்து இருந்தான்.

அனைத்தையும் முடித்துவிட்டு அவள் வெளியில் வரும்போது 7 மணியைத் தொட்டு இருக்க,

அப்பொழுதும் சரவணன் எழுந்திரிக்காமல் இருக்க,

அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த காயு,

“என்ன தனு குட்டி, இன்னும் உன் புருஷன் எழுந்திருக்கலையோ?” என்று அவளது காதில் வந்து கத்த,

“கத்தாத டி, எனக்கும் தெரியல, இன்னும் எழுந்திருக்கவில்லை” என்றாள்.

“மாமா எப்பவும் சீக்கிரம் எழுந்துருச்சுக் காட்டுக்குப் போயிடும். ஆனால், இன்னைக்கு இன்னுமே எழுந்திருக்கல” என்றாள் அப்பாவியாக.

“நைட்டு ரொம்ப வேலை செய்து இருந்திருக்கும், அதான்” என்று காயத்ரி உடன் சேர்ந்து அகிலாவும் சிரித்தாள்.

தனது இரண்டு தங்கைகளும் சிரித்துக் கொண்டிருக்க, சரவணன் குளித்துவிட்டு வேறொரு உடை அணிந்து கொண்டு வெளியில் வர,

அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்த காயத்ரியும், அகிலாவும் “துரைக்கு எழுந்து வர நேரத்தைப் பார்த்தியா?” என்று ஹைபை அடித்துக் கொண்டு சிரித்தார்கள்.

தனது இரண்டு தங்கையையும் பார்த்துச் சிரித்தவன் தனாவிடம் டீ கேட்க,

“மாமா, சாப்பிட்டு டீ குடிங்க. இப்போ சாப்பிடுற நேரம் ஆயிடுச்சு” என்றாள்.

அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு ‘சரி’ என்று மண்டை ஆட்ட,

“நாங்க பார்த்துட்டோம்” என்று இருவரும் சிரித்தார்கள்.

“நீங்க ரெண்டு பேரும் பார்க்கலைன்னா தான் அதிசயம்” என்று விட்டு சரோ நகர்ந்து விட,

“இப்பவே பொண்டாட்டி பேச்சுக்கு மறு பேச்சு இல்ல போல” என்று சிரித்தார்கள்.

கலை 9 மணி போல் இருவரையும் மறு வீட்டிற்கு அழைக்க ருத்ரனும், தமிழும் வந்திருக்க,

அவர்களுக்கும் சாப்பாட்டைப் பரிமாறினாள் தனா. அவர்களுடன் காலை 10.30 போல் தங்கள் வீட்டிற்குச் சென்று மூன்று நாள்கள் அங்கு இருந்துவிட்டு வந்தார்கள் சரவணனும் கீர்த்தனாவும்.

காயத்ரி திருமணம் முடிந்து ஒரு நாள் மட்டும் வீட்டில் இருந்தாள்.

அதற்கு அடுத்த நாளிலிருந்து காலேஜ் செல்ல ஆரம்பித்து விட்டாள்.

20 நாள்களுக்குப் பிறகு, தனா இப்பொழுது தான் யாருடன் காலேஜ் செல்வது என்று தெரியாமல் காலேஜ் கிளம்பி விட்டுத் திருதிருவென முழித்துக் கொண்டு நின்றாள்.

“நேரம் ஆகலையா, இன்னும் இப்படியே நின்னுட்டு இருக்க?” என்று அவளது அருகில் வந்து கேட்டான் சரோ. தன்னுடைய யோசனையைச் சொல்ல,

“அவ தான் இப்போதைக்குக் கல்யாணம் வேணாம்னு சொல்லி இருக்கால்ல. மூணு மாசம் போகட்டும்னு சொல்லி இருக்கா, அகிலா மாசமா இருக்கா இல்ல அதனால. நீ காயூ கூடவே மூணு மாசம் காலேஜ் போயிட்டு வா. அதுக்கப்புறம் சூழ்நிலை எப்படி இருக்கோ அதுக்கு ஏத்த மாதிரி பாத்துக்கலாம்” என்றான் .

“சரி” என்று மண்டையாட்டி விட்டுத் தனது தோழியுடன் காலேஜ் சென்று வர ஆரம்பித்தாள்.

சரவணன் கீர்த்தனா வாழ்க்கை ஊடலும் கூடலுமாகச் செல்ல ஆரம்பித்தது.

அகிலாவை இங்கு மகி தாங்கியதை விட அமுதன் தான் நன்றாகத் தாங்கச் செய்தான் .

அகிலாவிற்கு வாமிட்டிங் சென்ஸ் இருக்கத் தனது அப்பாவை,
”காலையில் சீக்கிரம் எழுந்து நீயே போய் சமையல் செய், அம்மாவுக்குப் பாப்பா வரப் போகுது. உடம்பு சரியில்லை” என்று மழலை குரலில் சொல்ல,

சிரித்த மகி சமையல் அறைக்கு வர,

அங்கு மகியின் அம்மா அனைத்து உணவுகளையும் செய்து வைத்திருப்பார்.

அகியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார். கடகடவென்று நாள்கள் உருண்டோட, அகிக்கு மூன்று மாதம் என்று வந்து நின்றது.

முகூர்த்தத் தேதியைப் பார்த்த தனா, தன் வீட்டுப் பெரியவர்களையும், தனது மாமா அத்தை அனைவரையும் அழைத்து இன்னும் இரண்டு தினங்களுக்குப் பிறகு முகூர்த்தத் தேதி இருக்கிறது.

அகி அண்ணிக்கு அன்று மூன்றாவது மாதம் கொடுத்துவிட்டு வரலாம்” என்று சொல்ல,

காயத்ரி சிரித்துக் கொண்டே, “என் தனாவுக்கு ஒரு விஷயம் செய்யணும், இதைச் செய்யலாமா? என்று வீட்டில் கேட்காமல் செய்யக் கூடத் தெரியாது. ஆனால் இன்று இன்னும் இரண்டு தினங்களுக்குப் பிறகு இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று சொல்லக்கூடத் தெரியுமா?” என்று சிரித்தாள்.

வீட்டில் உள்ள அனைவரும் தனா என்ன சொல்லுவாள் என்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

“இதுநாள் வரை நான் உன்னோட பிரண்டு மட்டும்தான், இப்போ இந்த வீட்டோட மருமகடி. எனக்குன்னு சில பல கடமை இருக்கு. என் நாத்தனாருக்குச் சில பல ஆசைகளும் இருக்கு” என்று சிரித்தாள்.

“அப்படி என்ன, உங்க நாத்தனாருக்கு ஆசை?” என்று காயத்ரி சிரித்த முகமாகவே கேட்க,

“எந்தெந்த விஷயத்துல நான் அவங்களுக்கு அண்ணியா இருக்கணுமோ, அந்த விஷயத்தில் அண்ணியாகவும், எந்தெந்த விஷயத்தில் அவங்க தூக்கி வளர்த்த தனாவாக இருக்க வேண்டுமோ, அந்தந்த விஷயத்தில் நாத்தனாராவும் இருந்தால் போதும்” என்று சிரித்தாள்.

அதன் பிறகு குடும்பத்துடன் சென்று மூன்றாவது மாதம் சாதம் கொடுத்துவிட்டு இரண்டு நாள்கள் அகிலாவைத் தங்கள் வீட்டிற்கு அழைக்க,

அகிலா திருதிருவென முழித்தாள்.

அப்போது தனா தான் சிரித்த முகமாக அண்ணா, தம்பி, அம்மா எல்லாரையும் கூப்பிட்டு தான் அண்ணி, உங்களை மட்டும் தனியா கூப்பிட்டுப் போக மாட்டோம். அம்மாவையும் கூப்பிட்டே வரலாம். நம்ம வீட்டுக்குப் போறதுக்கு எதுக்கு யோசிக்கிறீங்க?” என்றாள்.

வீட்டில் உள்ள அனைவரும் தனாவின் இந்தப் புதிய மாற்றத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் தான் இருந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்