
நிலனை பார்த்து வியப்புடன்,
“வீர்… இப்போ தான் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஒரு வயசே ஆயிடுச்சு…”
என்று சிரித்தபடி கணவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
அந்தக் காட்சியை சற்றுத் தூரத்தில் இருந்து கண் இமைக்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலி, மெதுவாக அங்கே வந்தாள்.
“வா அஞ்சு… ஹாஸ்பிடல் போகலையா?”
“போகணும் டி… அதுக்கு முன்னாடி நிலன் குட்டியைப் பார்க்க வந்தேன்,”
என்றவள், கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு தாயின் முடியோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து,
“நிலன் குட்டி… ஹேப்பி பர்த்டே! பிக் மம்மி என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க,”
என்று சொல்லியபடி ஒரு சின்ன முயல் குட்டி பொம்மையை அவன் பக்கம் நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்ட நிலன், இப்போதுதான் முளைத்திருந்த அரிசிப் பற்களை வெளிக்காட்டி, மலர்ந்த முகத்தோடு சிரித்தான்.
“அச்சோ… என் பட்டு தங்கம்… எப்படி சிரிக்கிறான் பாரு,”
என்று தங்கையிடம் உருகிக் கூறியவள், அவனைத் தூக்கிக் கொண்டு அன்போடு கொஞ்சினாள்.
பின்பு குழந்தையை மெதுவாக தங்கையிடம் ஒப்படைத்தவள்,
கையை கட்டிக் கொண்டு, முகம் கடுமையாக மாற,
“என்ன முடிவு பண்ணியிருக்க?”
என்று தீவிரமான குரலில் கேட்டாள்.
சில நிமிடங்கள் மௌனமாக நின்றவள்,
“போகலாம்… முடிவு பண்ணியிருக்கேன் அஞ்சு.
மேனேஜர் அங்கிள் இந்த தடவை கட்டாயமா நான் அங்க இருக்கணும்னு சொல்லிட்டார்.
நான் போகலன்னா கம்பெனி பார்ட்னர்ஸ் பிரச்சனை பண்ணுவாங்க…”
என்று சொல்லி நிறுத்தினாள்.
ஆழமாக மூச்செடுத்த அஞ்சலி,
“வெல்… ஓகே. நீ போறேன்னு முடிவு பண்ணிட்ட.பட் அங்கே போனா நிறைய விஷயங்களை ஃபேஸ் பண்ண வேண்டி வரும்.
எந்த விஷயத்தையும் ஓவர் திங்க் பண்ணாம கடந்து போக பாரு.
எதுக்காகவும் உன்னை நீயே வருத்திக்காத,”
என்று மெல்லிய கவலையுடன் கூறினாள்.
அவளின் வார்த்தைகளைக் கேட்டவள் தலையாட்டி,
“கண்டிப்பா… நீ சொல்றதெல்லாம் பண்றேன்.எந்த விஷயத்தையும் ஓவர் திங்க் பண்ண மாட்டேன்.
அண்ட்… என் கூட வீர் வருவார்ல.
அப்புறம் எனக்கு என்ன ப்ராப்ளம் வந்துடப் போகுது?”
என்று சிறு நம்பிக்கையோடு கூறினாள்.
அருகில் நின்றிருந்த கணவனை நோக்கி,
“எனக்கு துணையா இருப்பீங்களா வீர்?” என்று கேட்டதும்,
அவன் அவளை காதலோடு பார்த்து,
“கண்டிப்பா… வாழ்க்கை முழுக்க உனக்கு துணையா இருப்பேன்,”
என்று உறுதியாக கூறினான்.
இந்த காட்சியை பார்த்த நொடியில் அஞ்சலியின் உள்ளுக்குள் கோபமும் ஆதங்கமும் பெருக்கெடுத்து ஓடியது.
கண்களில் கண்ணீர் ததும்ப, அது இமை தட்டும் தருணத்தில் நின்றது.
உடனே திரும்பி நின்றவள், யாரும் கவனிக்காதபடி கண்களை துடைத்துக் கொண்டாள்.
முகத்தில் இயல்பை கொண்டு வர பெரும் முயற்சி செய்தாள்.
“அப்படினா ஓகே… நான் டிக்கெட் போட்டுறேன்,”
என்று கூறிய அஞ்சலி, மேலும் ஒரு நொடி கூட அங்கு நிற்காமல் விரைந்து வெளியேறினாள்.
“ஏன்… உன் அக்கா ஃபேஸ் ஒரு மாதிரி இருக்கே?” வீர் கேட்க,
“எனக்கு தெரியலையே…”
என்று எப்போதும் போல இதழ்களை பிதுக்கினாள்.
அந்த இதழ்களில் மெதுவாக முத்தமிட்டவன், பழைய நினைவுகளில் மூழ்கியவன் ஆழ்ந்த குரலில் பேச தொடங்கினான்.
“காலேஜ் நாட்கள்ல இதே மாதிரி என் பர்த்டே நாள்லதானே…
அன்றைக்கு நீ என் வாழ்க்கையில
எவ்வளவு ஸ்பெஷல் ஆகி போன…
நீ கொடுத்த அந்த சின்ன சின்ன கிஃப்ட்ஸ்…
கவர் கூட கிழிக்க மனசு வராம
அதை அப்படியே பார்த்து பார்த்து ரசிச்சிருக்கேன்.ஒவ்வொண்ணும் அவ்வளவு பிடிச்சிருந்துச்சு,மனசுக்கு நெருக்கமா இருந்துச்சு…அந்த கிஃப்ட்ஸ் எல்லாம் இன்னைக்கும் என் கிட்ட இருக்கு.
ஆனா… நீ தான் உன் முகத்தை கூட காட்டாம என்கிட்ட ரொம்ப விளையாடினேடி நீ.
காலேஜ் காரிடார்ல,
கேண்டீன்ல, கிரௌண்ட்ல,
இப்படி எங்க பார்த்தாலும்
உன் இருப்பை மட்டும் உணர வச்சிட்டு நீ மட்டும் கண்ணுக்கு படாம ஓடிடுவே.
உன் முகத்தை காண்பிக்காமலேயே
உன் அன்பையும் காதலையும்
எனக்கு காண்பிச்ச அதுல
விழுந்தவ தான் நான்…
அந்த காதலிலிருந்து
இன்னும் எழல…”
என்று சொல்லிக் கொண்டே,
மயங்கி அவள் மடியின் மீது விழுவது போல் நடித்தான்.
மலர்ந்த பூவைப் போல
அவள் முகம் மெதுவாக விகசித்து கலகலவென சிரித்தவள்… நினைவும்
அந்தக் காலேஜ் நாட்களுக்கு சென்றது…
அவளுக்கு மறக்க முடியா இனிமையான நினைவுகள்,
எல்லாவற்றையும் நினைத்து பார்த்துக் கொண்டே
மடியில் படுத்துக் கிடந்தவனின்
தலைக்கு விரல்களை நுழைத்தவள்,
மிக மெதுவாக, அன்பை மட்டும் சொல்லும் விதத்தில்
அவனின் தலையை கோதினாள்…
இதனை ஒளிந்திருந்து பார்த்த அஞ்சலி, ஒரு நொடியும் அங்கு நிற்க முடியாமல் வேகமாக தன் அறைக்குள் புகுந்தாள்.
வேகமாக ஒரு நம்பருக்கு டயல் செய்தாள்.
மறுபக்கத்தில் அழைப்பு எடுக்கப்பட்டதும்,
“ஜான்… எனக்கு அவளை பார்க்க பார்க்க கோபமும் ஆதங்கமுமா இருக்கு. அவ அங்க போனா
நம்ம நினைச்ச மாதிரி எல்லாம் நடந்திடும்’ல? எல்லாம் சரியாகிடும்’ல?”
என்று தவிப்புடன் கேட்டாள்.
“யெஸ் பேபி… உன் சிஸ்டர் அங்க போனா மட்டும் போதும்.
மாற்றம் கண்டிப்பா வரும்.
உன் ஆதங்கத்துக்கும்ஒரு முடிவு வரும். நீ அவங்களை தனியா அனுப்பி வை,கூட நீ போக வேணாம்…” என்று எதிர்பக்கத்திலிருந்து அவன் சொன்னதும், அஞ்சலியின் மனம் சற்றே நிம்மதி அடைந்தது.
இவள் நினைத்தது மட்டும் நடந்தால் போதும். அவள் மனம் முழு நிம்மதியை அடையும்.
“எல்லாம் நன்றாக நடக்கணும்…”
என்று மெதுவாக முணுமுணுத்தபடி,
கண்களை மூடி இறைவனிடம் கோரிக்கை வைத்துக் கொண்டாள்…
வாசலில் “நிலா – ருத்ரன் First Birthday” என எழுதிய பெயர் பலகை அலங்காரமாக தொங்கிக் கொண்டிருந்தது.
வருகை தந்த விருந்தினர்கள்,
கைகளில் பரிசுப் பொதிகளுடன்
பார்ட்டி நடைபெறும் இடத்திற்குள்
உற்சாகமாகச் சென்றனர்.
தோட்டத்தின் நடுவே ஒரு அழகிய மேடை அமைக்கப்பட்டு,
அதைச் சுற்றி சின்னச் சின்ன குமிழ் விளக்குகளாலும் மலர்களாலும்
மனம் கொள்ளை கொள்ளும் வகையில்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வந்திருந்த விருந்தினர்களை
வீட்டு மக்கள் முகம் மலர வரவேற்று,
உபசரித்து கொண்டிருந்தனர்.
“அம்பி… மணி ஆகிடுச்சு.
கெஸ்ட் எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க.போய் ருத்ரன், மோனிகாவை பேத்தியை கூட்டிட்டு வர சொல்லு,” என்று அபிராமி கூற,
“இதோ போறேன் அத்தை,”
என்று அவர் நகர முயல,
“அத்தை இருங்க…
நான் போறேன்,” என்று கமல் சொல்லியபடி வீட்டினுள் சென்றான்.
ருத்ரனின் அறையை
அவன் நெருங்கும் போதே,
“ருத்ரா… நான் சொல்றதை கேளு,”
என்று மோனிகா குரல் கேட்டது.
“முடியாது மோனி. இப்போ நீ
நான் சொல்றதை தான் கேக்கணும்.
கேக்கலனா, கேக்கிற மாதிரி
நான் பண்ணுவேன்… அப்போவும் ‘முடியாது’ன்னு சொன்னா,
நிறைய பின் விளைவுகளை
சந்திக்க வேண்டி வரும்,”
என்று சுட்டு விரலை நீட்டியபடி
ருத்ரன் மிரட்ட,
அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
வெளியிலிருந்து இதையெல்லாம் கேட்ட கமல்,சூழ்நிலையை சீராக்கும் பொருட்டு,
“ருத்ரா…
ருத்ரா…”என்று கத்திக் கொண்டே
உள்ளே ஓடி வந்தான்.
அந்த நொடியிலேயே
ருத்ரனும் மோனிகாவும்
தங்கள் முகபாவனைகளை மாற்றிக் கொண்டு, எதுவும் நடக்காதது போல்
இயல்பாக நிற்க முயன்றனர்…
“என்னடா?”
என்று ருத்ரன் கேட்க,
“பாட்டி உன்னையும் மோனியையும்
பொம்முவை தூக்கிட்டு வர சொன்னாங்க.பார்ட்டிக்கு நேரம் ஆயிடுச்சு,”
என்று கமல் கூறவே,
“மோனி… நீ முன்னால போ.
நானும் கமலும் பாப்பாவோட
பின்னாடி வர்றோம்,”
என்று அவன் சொல்ல,
அவள் எதுவும் மறுத்து பேசாமல்,
முன்னால் நடந்து சென்றாள்.
அறையின் ஓரத்தில் இருந்த
சின்ன கட்டிலில்,பிஸ்தா நிற கவுன் அணிந்து, விரலை சப்பியபடி
அழகாய் படுத்திருந்த குழந்தையை
ருத்ரன் மெதுவாக தூக்கினான்.
“கமல்…என் பொம்மு குட்டியை பாரு.
எவ்வளவு அழகா இருக்கிறா,”
என்று புன்னகையுடன் சொல்லியபடி
அவளை தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.
குழந்தையும் தகப்பன் மார்பில்
ஒய்யாரமாக சாய்ந்து,
அவன் கழுத்தில் தொங்கிய
சங்கிலியை சின்ன விரல்களில் சிக்க வைத்து விளையாடத் தொடங்கியது…
ருத்ரனை நெருங்கிய கமல்,
“என் மருமக எப்போதும்
அழகுரதம் தான்…”
என்று சொல்லி புன்னகைத்தான்.
“பொம்மு…அப்பா செயின் வேணுமா உனக்கு?” என்று கொஞ்சியவன்,
சற்றே சிரித்தபடி,
“ஆனா உன் அப்பா
அதை தர மாட்டானே.
உன் அம்மா உன் அப்பாவுக்கு கொடுத்த காதல் பரிசு அது.
அதை சும்மா பார்க்க கூட
அவன் தர மாட்டான்,”
என்று கூறினான்.
அவளுக்கு என்ன புரிந்ததோ பச்சரிசி பற்களை காட்டி சிரித்தாள்..
அவள் சிரிப்பை ரசித்தவன்,
“பரவாயில்ல…மாமா உனக்கு வேற புதுசு வாங்கி தரேன்,” என்று சொல்லியபடி,
ருத்ரனிடமிருந்து குழந்தையை
தன் கைகளில் வாங்கிக் கொண்டு
முன்னால் நடந்தான்.
அந்த வார்த்தைகளை
மனதில் உள் வாங்கியபடி,
ருத்ரன் ஆழமாக மூச்சை இழுத்து,
கழுத்தில் இருந்த செயினை
கைகளால் மெதுவாக வருடிப் பார்த்து,
அமைதியாக பின்னால் தொடர்ந்தான்.
மேடையில், குழந்தைக்கு பிடித்த
பட்டாம்பூச்சி (Butterfly) தீம்-இல்
கேக் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
ருத்ரனும் மோனிகாவும்
ஒன்றிணைந்து நின்றனர்.
ருத்ரன் கைகளில்
குழந்தை இருந்தாள்.
மோனிகா மெழுகுவர்த்திகளை
மெதுவாக ஊதி அணைக்க,
ருத்ரன் குழந்தையின் சின்ன கையைப் பிடித்து
கேக்கை வெட்டினான்.
அம்பிகா,” மோனி, நீயும் பிடிச்சு
கேக் வெட்டுமா,”
என்று சொல்ல,
ஒரு கணம் தயங்கியவள்,
பின் ருத்ரனின் கையின் மேல்
தன் கையை வைத்து,
மூவருமாக கேக்கை வெட்டினர்…
கேக் வெட்டிய பின்,
முதலில் வீட்டு பெரியவர்களுக்கு
வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகு,குழந்தையின் சின்ன கையைப் பிடித்து, மற்றவர்களுக்கும்
கேக்கை ஊட்டினர்.
பின்னர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு
பிறந்த நாள் பரிசை வழங்க,
மோனி புன்னகையுடன்
அவை அனைத்தையும்
வாங்கிக் கொண்டாள்.
அதனைத் தொடர்ந்து,
வந்திருந்த விருந்தினர்களும்
குழந்தையை கொஞ்சி,
பிறந்த நாள் வாழ்த்துகளை
அன்போடு சொல்லியபடி,
தாங்கள் கொண்டு வந்த
பரிசுகளை வழங்கினர்…
வந்திருந்த விருந்தினர்களில் ஒருவர்,
“மோனி…எங்கம்மா உன் பேரன்ட்ஸ்?”
என்று கேட்க,
“அவங்களுக்கு விசா ப்ராப்ளம் ஆன்டி. அதான் வர முடியல,”
என்று சொல்லி,
ஒரு புன்னகையோடு
சமாளித்துக் கொண்டாள்.
“ஆமா…ஆமா இருக்கிறது ஒரே பேத்தி. வெளிநாட்ல இருக்கிறவங்க
முன்னாடியே எல்லா ஏற்பாடும்
பண்ணி வச்சிருந்தா,
இன்னைக்கு வந்திருக்கலாம்.
எங்க…கொஞ்சம் கூட
மகள், பேத்தி மேல
அக்கறை இல்ல,”
என்று கங்கா நொடித்துக் கொண்டார்.
“சும்மா இரு கங்கா.
இப்போ இது தேவையில்லாத பேச்சு,”
என்று கணவர் கருணா
கண்டித்ததும்,
அவர் வாயை மூடிக் கொண்டார்.
இந்த வார்த்தைகள்
மோனியின் காதில் விழ,
உள்ளுக்குள் கடுப்பாக இருந்தது.
இருந்தும் அதை வெளியே காட்டாமல்,
முகத்தில் புன்னகையை மட்டும்
தக்க வைத்துக் கொண்டாள்…
தேவன் வருவான்❤️❤️❤️…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
1
+1
1

