Loading

KKEN-33

  வீடு  மாற்றிக் கொண்டு வந்தார்கள். இதோ அவளை கண்டு விட்டான். லிப்டில். இருவர் மட்டுமே.  வித்யா! ஆசையாக அழைத்தான். எந்த பதிலும் இல்லை. அதற்கு மேல் இவன் அழைக்கவில்லை. அமைதியாக சென்று விட்டான். அவன் மீண்டும் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாளோ ?

இவள் ஷாப்பிங் ஏரியாவுக்கு  சென்றாள் .  அங்கேதான் பொட்டிக்  வைத்திருந்தாள்.  அவன் கார் பார்க்கிங் சென்றான். அவள் திரும்பி நின்று  அவன் வருவானா என்று ஆவலுடன் பார்த்திருந்தாள் . அவனை அதற்குப் பிறகு பார்க்கவில்லை. காலையில் கிளம்பிச் சென்றவனுக்கு  நாள் முழுவதுமே வேலை சரியாக இருந்தது. இவனின் ஓனர் மகளுக்கு திருமணம் செய்து வீட்டோடு மாப்பிளையாக வைத்துக் கொண்டார். மாப்பிள்ளைக்கு இன்னும் தொழில் பழகவில்லை. புது மாப்பிள்ளை புது மனைவியுடன் காலம் கடத்திக் கொண்டிருந்தார். பெரியவருக்கு கஷ்டம் வேண்டாம் என்று வெற்றியே பெரும்பான்மையான வேலைகளை பார்த்துக் கொண்டான். நாள் முழுவதும் வேறு வேறு கிளைகளுக்குச் செல்வதும், அங்கே எப்படி போகிறது என்று விசாரிப்பதும் நேரம் ஓடியதே தெரியவில்லை. இரவில் வந்து குளித்தவன் அப்படியே உறங்கிப் போய் இருந்தான். வழக்கம் போலவே அவனுக்கு நடு இரவில் விழிப்பு வந்தது. இது எப்போதும் நடப்பதுதான். அடுத்த சில மணி நேரங்கள் உறங்க மாட்டான். அவன் உறங்க அவள் வேண்டும். வனுக்கு அவள்  ஸ்பரிசம் வேணும். அவளை தொட்டுக் கொண்டு, கட்டிக் கொண்டு படுத்தால்  போதும் அடுத்த நிமிடம் உறங்கி  இருப்பான். அதுதான் நடக்காதே.

சரி! நாமாவது நடப்போம். வீட்டிலேயே நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் பால்கனியில் நின்று வெறித்தவனுக்கு  தன்னவளின் முகம் வந்தது. இது அவள் அல்ல . வேறு யாரோ. மெலிந்து போய்  இருந்தாள் . கண்ணில் கரு வளையம் வந்திருந்தது. முகத்தில் சோகம் என்று சொல்ல முடியாது. ஆனால்  சிரிப்பு இல்லை. உயிர்ப்பு இல்லை.

நெஞ்சு முழுவதும் பெரிய பாரம் . இதற்கு மேல் பொறுக்க முடியாது. நேரே சென்று அவள் வீட்டு  காலிங் பெல் அழுத்தினான். அவள் தந்தைதான் கதவைத் திறந்தார். அவர்கள் வீட்டு  கதவை திறக்காமலேயே வந்திருப்பது யார்  என்று கேமரா மூலம் பார்த்து விட முடியும். வெற்றியை பார்த்தவருக்கு  பயம் இல்லை. ‘இப்ப எதுக்கு வந்திருக்கான்?’ யோசனை வந்தது.

“என்னப்பா இந்த நேரத்துல?”

“சாரி  சார் . நான் வித்யா மேடத்தை பார்க்கணும்”

“என்னாச்சு?”

“நான் அப்புறம் சொல்லறேன். ப்ளீஸ் அவங்களை பாக்கணும்.”

அவள் அறைக்குச் சென்று லேசாக கதவை திறந்து பார்த்தார். தூங்கவில்லை. அமர்ந்திருந்தாள்.

“அவங்க தூங்க மாட்டாங்க. அவங்களுக்கு நைட்  டைம்  கிரேவிங் இருக்கு. நீங்க போய் தூங்குங்க. அவங்களுக்கு நான் ஏதாவது செஞ்சு குடுத்துக்கறேன்.

“ஆர் யூ  ஷியோர்?”

“எஸ் சார்!”

அவர் சென்றதும் சமையல் அறையில் தேடி பார்த்தான். நூடுல்ஸ் இருந்தது.

செய்து விட்டு அவளுக்கு பிடித்த படி லேசாக சாஸ் ஊற்றி சுட சுட நீட்டினான். மனைவி உண்பதையே கைக் கட்டி ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அன்பும் ஆசையுமே  இருந்தது. பின்னோடே எழுந்து வந்த காயத்ரியும் இதைப் பார்த்தாள் . அவர்களுக்கு நடுவில் அவள் தலையிட விரும்பவில்லை. பெற்றவள் தனக்கு தெரியாதது இவனுக்குத் தெரிந்திருக்கிறதே? இந்த நேரத்தில் எழுந்து வந்து அவளுக்காக பொறுமையாக வேலை செய்கிறானே?  கணவன் கைக் கட்டி மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் உண்டு முடித்ததும் கப்பை பார்த்தான். காலி ஆகி இருந்தது.

“ஏன் இதை மிச்சம் வச்சுருக்கீங்க?”

“உனக்காகத்தான்.  ஏன் என்னோட எச்சில் நீ எடுத்துக்க மாட்டியா?”

ஓட்டலில் அவள் மிச்சம் வைத்து கொடுத்த நூடுல்ஸ் நினைவுக்கு வந்து தொலைத்தது.

பெரு மூச்சு விட்டு நகர்ந்து கொண்டான். இப்போதும் பேசவில்லை.

அவள் வாய் துடைத்து முகம் தடவி தலை கோதி விட்டு சென்று விட்டான். இனி அவன் மறு  நாளும் வருவான். அதற்கு அடுத்த நாளும் வருவான். அவன் மகளுக்கு செய்துக் கொடுக்க ஏற்றபடி காயத்ரி ஏதாவது தயார் செய்து வைப்பாள். உருளைக்கிழங்கு மசாலா செய்து வைப்பாள். வந்து மசால் தோசை செய்துக்   கொடுப்பான். காய்கறி வதக்கல் வைத்திருப்பாள். பிரட்டில் வைத்துக் கொடுப்பான். இப்போதும் அவள் பேசவில்லை. அவள் முகம் பார்த்து அவனேதான்  புரிந்து கொள்ள வேண்டும்.  பெற்றவர்களுக்கேப் புரியாத பல விஷயங்கள் அவனுக்குப் புரிந்தது.

அவனிடம் நிறைய பேச வேண்டும் மனம் ஏங்கியது. வாய் மூடிக் கொண்டது. தோசை ஊற்றி சாம்பாரை சூடு படுத்திக் கொண்டு வந்தான்.  அவன் அமர ஏற்றபடி சற்று நகர்ந்து அமர்ந்தாள்.

 அவன் புரிந்து கொண்டான். அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

“நான் என்ன பண்ணறேன். என்ன வேலைக்கு போறேன். தெரிஞ்சுக்க வேண்டாமா தியா?”

“தெரிந்துக் கொள்ள வேண்டும்.” அவள் தலை குனிந்து கொண்டதில் புரிந்து கொண்டான். தன்னுடைய சூப்பர் மார்க்கட் பற்றிய விவரங்களை சொன்னான். புது முதலாளி பற்றிச் சொன்னான். தான் அவர்களிடம் வேலைக்குச் சேர்நதது, தொழில் கற்றுக் கொண்டது எல்லாமே சொன்னான்.

“கல்யாணம்?  கேக்க மாட்டியா?

தெரிந்து கொள்ள விரும்பாத விடைக்கு காத்திருந்தாள். ஆகிடுச்சு என்று சொல்லி விட்டால்?

அவன் வேறு ஒரு திருமணம் செய்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அவனை அவள் வீட்டை விட்டு வெளியில் அனுப்பியதே. ஆனால்  அதுவே அவன் வேறு ஒருத்திக்கு சொந்தம் ஆகி இருப்பான் என்று நினைக்க தைரியம் வரவில்லை .

“இல்ல! இன்னும் பண்ணிக்கல” வயிற்றில் பாலை வார்த்தான் .

“கொஞ்ச வருசத்துக்கு முன்ன ஒருத்தி என்ன  கண்ணுல சுருட்டி, நீல கலர் புடவை முந்தில  சொருகிட்டா . அதுலேர்ந்து வெளில  வர முடியல”

அவன் தன்னைத்தான் சொல்கிறான். இது என்ன காதல் மொழி? அவளையும் அறியாமல் நொடியில் கன்னங்கள் சிவந்து உதட்டில் புன்னகை வந்தது.

எப்போதுமே அவளுக்கு அவன் புகழ வேண்டும். கொஞ்ச வேண்டும், காதல் மொழி பேச வேண்டும். அவளின்  ஏக்கங்கள் தெரியாதவனா அவன்? அப்போதெல்லாம் செய்யாததை இப்போது செய்து எதை மீட்கப்  போகிறான்?

வந்த புன்னகையை நொடியில் அழித்துக் கொண்டவளை பார்த்ததும் அவனுக்கு தான் செய்த தவறுகள் சுருக்கெனெ குத்தியது.

“ப்ளீஸ் டா! என்ன கொஞ்சுடா”

“எனக்கு கொஞ்சலாம் தெரியாது மேடம்”

“அப்ப பர்ஸ்ட் நைட்டுல என்னடா பண்ணுவ? இப்பவே ட்ரை பண்ணுடா”

“பட்டுக்குட்டி , செல்ல  குட்டி”

“சீ! பே!  இதெல்லாம் உங்க வீட்டுல இருக்கற பாப்பாவை கொஞ்ச சொன்னாங்களா இல்ல லவ்வரை  கொஞ்ச சொன்னாங்களா?”

பழைய நினைவுகளில் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அருகில் இருந்த குழந்தை .லேசாக திரும்பி படுத்துக் கொண்டது. மெதுவாக அதற்கு தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் தன்  வீட்டிற்கே வந்து விட்டான். மீண்டும் வித்யாவை மீட்டுக் கொண்டு வர முடியுமா யோசனையுடனே தூங்கி விட்டான்.

கடைத் திறக்க இன்னும் வேலைகள் கொஞ்சம் மிச்சம் இருந்தது. இன்விடேஷன் அடிக்க இவனுக்கு அவளுடன் போக வேண்டும் போல இருந்தது. வித்யாவின் கடைக்கு வந்தான்.

“கடை திறக்கப் பத்திரிக்கை அடிக்கணும். அதுக்கு வார்த்தைகள் எனக்கு பாக்க வராது. அதான் உன்ன அழைச்சுக்கிட்டு போகலான்னு  வந்துருக்கேன்” குரல் அதிகாரமாக வந்தது. இனி அவளிடம் எதற்கும் பர்மிசன் கேட்டு  கொண்டு நிற்க  முடியாது.

ஆனால்  அவளோ, அவன் நீ வா போ என்று அழைப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

“நான் வரலைனா?”

மூஞ்சியை திருப்பிக் கொண்டு போய் விட்டான்.  அடுத்த இரு அடிகளை எடுத்து வைத்தவனை அவள் குரல் தடுத்தது.

“எப்ப போகணும்?”

“நீ எப்ப ப்ரீ?”

மாலையில் கிளம்பினார்கள்.  குழந்தையும் வர வேண்டும். தூக்கிக் கொண்டு வந்தான். இதுவே பழைய வித்யாவாக இருந்திருந்தால் உனக்கு உன் பொண்ணுதான் முக்கியமா? குழாயடி சண்டை போட்டிருப்பாள்.

இவளோ,’ நீ யாரோ ! இந்த பிள்ளை யாரோ’ என்றிருந்தாள். மகளோ வார்த்தை வராமலேயே ஆயிரம் மொழி பேசினாள் . அது அத்தனையும் அவன் புரிந்துக் கொண்டு பதில் சொன்னது வித்யாவிற்கு அதிசயமாக இருந்தது. அவன் பிள்ளைக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. அவளுக்கு தந்தை இருந்தால் போதும் .

கருப்பு திராட்சை நிறத்தில் மகள் ப்ராக் அணிந்திருந்தாள். சாரி சாரி அவளின் கண்களின் நிறத்துக்கு மேட்சாக உடை அணிந்திருந்தாள். கண்ணை விரித்து விரித்து பேசும் மகள் தந்தையின் மனதை அள்ளிக் கொண்டு விட்டாள். அப்பா அப்பா என்று அவள் அழைத்து அழைத்து பேசும் போதும் அவனுக்கு உலகம் மறந்து விடுகிறது.

   வழக்கமாக அவர்கள் வரும் இடம்தான் இந்த இன்விடேஷன் பிரிண்ட் செய்யும் இடம். வெற்றியின் தோரணை, உடல் மொழி அனைத்துமே மாறி இருந்தது. ஒரக் கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் வித்யா .

வேறு யாரோ வெட்டிங்  இன்விடேஷன் , ரிசெப்ஷன் கார்டு அடிக்க , இரண்டு மூன்று ஜோடிகள் வந்திருந்தார்கள். இவளுக்கு அவர்களை பார்த்து மனதில் ஓரம்  ஒரு ஏக்கம். எத்தனை எத்தனை  ஆசைகள் , ஏக்கங்கள். கண்ணில் எட்டி பார்த்தக் கண்ணீரை லேசாக கர்ச்சீப்பால் ஒற்றி எடுத்தாள்.

“இது ஓகே வா?”வேண்டுமென்றே கார்டு பார்ப்பது போல அவளை ஒட்டி அமர்ந்துக் கொண்டான். இடது கையால் சுற்றி வளைத்து அணைப்பது போல கார்ட் பார்த்தான். இந்த வார்த்தைகள் சரியா இருக்கா? அவளின் கவனத்தை திசை திருப்பினான். அவன் அறியாத மனைவியா அவள்?

அடுத்து ஈவென்ட் மேனேஜ்  மென்ட் கம்பனிக்கு இவளை அழைத்துச் சென்றான்.

“ஹாய் பூரி!”

“வாடா! வா வா! புதுசா கடை திறக்கற போல?சொல்லவே இல்ல?காங்கிராட்ஸ் டா!  “

“தேங்க்ஸ் பூரணி. உனக்குத்தான் பெரிய இடத்துலேர்ந்தே இன்பர்மேஷன் வந்திருக்குமே?

கோர்த்திருந்த கைகள்  சேர்ந்தே தான் இருந்தன.

“யாருடா இந்த டால்?”

கண்ணில் வித்யாவை ஜாடை காட்டினாள். கைகளாலோ உதியை காட்டியது.

‘என்ன சொல்ல வேண்டும்?’ அவன் தயங்கிய நொடியில் அவன் மனைவி சொன்னாள் .

“பிரண்ட் ”

“ஓ ! பிரண்டா. நல்ல வேளை எங்க நீ என்ன ஏமாத்திட்டியோன்னு பயந்துட்டேன்”

“ஓ ! பிரண்டா. நல்ல வேளை எங்க நீ என்ன ஏமாத்திட்டியோன்னு பயந்துட்டேன்.”

இப்போது வித்யாதான் அவர்களை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வேறு ஒருப் பெண்ணை ., பெண்ணுடன் வாழ்வது தனக்கு ஒத்துக் கொள்ள முடியாதா ?

அவளின் அதிர்ச்சி கலந்த முகத்தைப் பார்தவன் உதட்டின் ஓரத்தில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு பூரியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

நீங்க அப்டினா நாங்இப்படி! எப்புடி ? என்ற தோரணையில் பூரணியும் அவனிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தாள் .

காதல் தொடரும் ..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்