Loading

அத்தியாயம் 14 

 

“ஆமா ஆண்ட்டி வந்தேன். ஆனா அப்டி ஒரு விஷயத்த எதிர்பாக்கல. என்ன பண்ணன்னு தெரில, திடீர்னு வந்து நின்னு ஆல்ரெடி சோகத்துல இருக்கிற உங்கள மேலும் குழப்ப வேணாம்னு திரும்பிப் போயிட்டேன்”.

 

அந்நேரம் காலிங் பெல் சவுண்ட் கேக்க, “ஆறெழில் வந்துட்டான்னு நெனைக்கிறேன் ஆண்ட்டி. நா பேசினது எதுவும் அவகிட்ட காட்டிக்க வேணாம். நா இன்னும் பேசணும்னு நெனச்சேன், நீங்க நாளைக்கு காலேஜுக்கு வாங்க ஆண்ட்டி. ஆனா நா பாத்துப்பேன் எல்லாத்தையும்ன்னு நீங்க நம்பணும்”.

 

“ஒரு நிமிஷம் லைன்லேயே இரு” என்று விட்டு கதவை திறந்து விட்டவர், மகளிடம், “போய் ரெப்ரெஷ் ஆகு. நா ஒரு பேரண்ட் கிட்ட பேசணும், பேசிட்டு வரேன்” என்று விட, ஹச்.ஓ.டி சொல்லிவிட்ட விஷயம் யோசனையில் இருந்தவளும் தலையசைத்து சென்றுவிட்டாள்.

 

பின் ஜெயந்தி மாடியேறியவர், “௭ழில் அப்பா எதுக்காக உன்ன வர சொன்னாரு?” என்றார் திடீரென.

 

“அது எனக்கு தெரியல ஆண்ட்டி. அதுக்கு முன்ன நா அவங்ககிட்ட கடைசியா பேசினது காலேஜ் சேந்தப்பதான். என் நம்பர் கூட அவங்க சேவ் பண்ணி வச்சுருப்பாங்கன்னு நினைக்கவே இல்ல” என்க.

 

திரும்பவும் கீழே இறங்கியவர் மகளை ஒருமுறை எட்டிப் பாத்துவிட்டு, தன் கபோர்டில் வைத்திருந்த கணவரின் செல்லை எடுத்துக்கொண்டு மேலேறினார். அதில் கடைசியாக பேசப்பட்டுருந்த எண்ணை சரிபார்க்க அது அவனதுவாகத்தான் இருந்தது. ப்ரகலத்தன் என்றே பதிந்திருந்தார்.

 

ஜெயந்திக்கு மறுபடியும் அழுகை வர, “ப்ளீஸ் ஆண்ட்டி” என்றான் சமாதானமாக.

 

“அவர் உன்கிட்ட என்னப்பா சொல்ல நினைச்சுருப்பாரு. ஆனா மறுநாள் நீயும் இந்த வீட்டில இருக்கணும்னு நினைச்சுருக்காருன்னா, உன்ன அவர் ஏத்துக்கிட்டாருன்னு தானே அர்த்தம்” என்க. அவன் அமைதியாக இருக்க.

 

ஏதோ யோசித்தவராய் “காலேஜுக்கு என்னய எதுக்கு வர சொல்றாங்க, அங்க என்ன பிரச்சன?” என்றார் தெளிவாக.

 

இவன் நடந்தவற்றை விளக்க “சோ போன பத்து நாள்ல நல்ல நேம் வாங்கிட்டா?”.

 

“ஆண்ட்டி நா தெளிவா சொன்னனே, அவள எனக்குப் பிடிக்கும், இன்னும் அவக்கிட்ட கூட அத நா ஒத்துக்கல. இப்போ உங்ககிட்ட இத சொல்ல வேண்டிய சுட்ஸுவேசன் ஆகிடுச்சு. அவளுக்கு ஒரு மெச்சூரிட்டி வரவரைக்கும் அவகிட்டயும் கன்பஸ் பண்ண மாட்டேன். பட் என்னால உங்களுக்கு ஒரு அஸுரன்ஸ் தரமுடியும். அது நா அவள நல்லா பாத்துப்பேன், என்ன நீங்க நம்பலாம்”.

 

“எனக்கு யோசிக்கணும்” சிம்பிளாக முடித்து விட்டார்.

 

“ஓகே ஆண்ட்டி. எழில் கிட்ட இது எதுவும்…”

அவன் முடிக்கும் முன், “எனக்கும் அவள் லைஃப்ல அக்கறை இருக்குப்பா”.

 

“சாரி ஆண்ட்டி, குட் நைட்” என வைத்துவிட்டான்.

 

இவ்வளவு நேரமும் அவனை தொந்தரவு பண்ணாமல் இருந்த, நண்பர்கள் மூவரும் இப்பொழுது அவனை நெருங்கி, “அதான் தெளிவா எல்லாத்தையும் பேசிட்டல்லடா ரிலாக்ஸா இரு. நீ உன் அப்பாகிட்ட என்னன்னு சொல்லப் போற?” என்றான் அகத்தியன்.

 

“தெரிலடா, ஆனா சொன்னா புரிஞ்சுப்பாருன்ற நம்பிக்க இருக்கு”.

 

“சீக்கிரம் வீட்டுக்கு போய் நேரில் பேசு” என நால்வரும் கிளம்பினர்.

 

இங்கு ஜெயந்தியும் அவன் போனை வைக்கவும் யோசித்துப்பார்த்தார். சில விஷயங்கள் நாலு வருடத்திற்கு முன் நடந்ததை நினைத்துப் பார்த்தார், ‘எங்க ஸ்கூல் ப்ரசிடெண்ட்டா இருக்க பையன் கண்ணு செம்மையா இருக்குமா, அத பாக்க தான் பிரயேர் அட்டண்ட் பண்ண போறேன்’, 

‘என்னடி யோசன இந்த வயசுல?’, 

‘அது உனக்கு சொன்னா புரியாதுமா நானே கண்டுபிடிச்சுக்கிறேன்’. இப்படிப் பலபலவாறு எழில் சொல்லிவிட்டுப் போனது, அப்பாவும், மகளும் திடீரென ஒரு நாள் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தது என எல்லாம் மாறி மாறி ஞாபகம் வந்து செல்ல. இத்தன வருஷமா வீட்டுக்குள்ள இருந்த பிள்ளைட்ட உள்ள வித்தியாசத்தக் கூட கண்டுபிடிக்க முடியாம சுத்தி வந்துருக்கேன். அந்த மனுஷனும் புள்ள பத்தின விஷயத்தை கூட ஷேர் பண்ண கூடாதுன்னு இருந்திருக்காரு, என அவர் போக்கில் யோசித்துக் கொண்டிருக்க.

 

“எவ்வளவு நேரம்மா?” என்றவாறு வந்தாள் ஆறெழில்.

 

ஜெயந்தி திரும்பி பார்க்க, “நாளைக்கு உன்ன காலேஜுக்கு வர சொல்லிருக்காங்க ம்மா. அது என்னன்னா?” அவள் ஆரம்பிக்க.

 

“அத நாளைக்கு அங்க வந்தே தெரிஞ்சுக்கிறேன். கீழ வா” என கீழ் இறங்கிவிட்டார்.

 

பின்னயே வந்தவள் “என்னன்னு கேட்டுட்டு போம்மா உனக்கு இத ஃபர்ஸ்ட் இருந்து சொன்னா தான் புரியும்”.

 

“எரிச்சல் படுத்தாத எழில், ஏற்கனவே நா டென்ஷன்ல இருக்கேன்” ௭ன்றார் ஏக கடுப்புடன் சோபாவில் அமர்ந்து.

 

ஏதோ ஸ்கூல் டென்ஷன் என நினைத்தவள் “இத நாளைக்கு அங்க வந்து கேட்டீன்னா ரொம்ப டென்ஷன் ஆகுவம்மா. அதனால இப்பவே சொல்லிடுறேன் ப்ளீஸ்” என ௭திரில் நின்று ஆரம்பித்தவள் அவரைப் பேசவிடாமல்.

 

‘அவள் போய் ப்ரொபோஸ் செய்தது, அவன் மறுத்தது, கண்டிப்பா அட்ராக்ஷன் இல்லன்னு ப்ரூவ் பண்ணுவேன்னு சபதம் எடுத்தது, இங்கும் அவனுக்காகவே வந்து சேர்ந்தது, இங்கு வந்த பின்னும் காதலை ஒத்துக்கொள்ள அவன் மறுத்தது, இப்பொழுது கேரிங்காக பார்த்துக்கொள்வது’ என அனைத்தையும் ஒப்பித்தவள், “ப்ளீஸ்மா இத காரணமா வச்சு நாளைக்கு ப்ரசிடெண்ட்ட பாத்தாலும் பேசாம வந்துறாதம்மா, ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க” என்றாள் சேர்த்து.

 

ஜெயந்தி முறைத்தவர், “நாளைக்கு அங்க வந்து என்ன பேசணும்னு மேடமே சொல்லிருங்க. ரொம்ப தைரியம் தான்டி உனக்கு, இவ்வளவயும் என்கிட்ட தயக்கமே இல்லாம சொல்லி முடிச்சுட்டியே” என்க.

 

“சாரி மா” என்றவாறு அவள் அவரை நெருங்கி அமர வர,

“பேசின வரப்போதும், தயவு செஞ்சு என்ன கொஞ்சம் தனியா விடு” என்றுவிட்டார் சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு.

 

அமைதியாக எழுந்து சென்று படுத்து விட்டாள் ஆறு.  இருவர் சொன்னதிலும், இருவருமே மற்றவரை விட்டுக் கொடுக்கவில்லை என நன்றாக புரிந்தது ஜெயந்திக்கு, இதை தன் கணவரும் யூகத்தில் உணர்ந்திருக்க வேண்டும், எனவும் நினைத்தார். இருவருமே பொய் கூறி மழுப்ப முயற்சிக்கவில்லை, மறுநாள் என்ன பேச வேண்டும் என்ற முடிவுடன் சென்று தானும் படுத்தார்.

 

காலையில் எழுந்ததிலிருந்து ஆறு ஜெயந்தி முகத்தை பார்த்தே கிளம்பிக் கொண்டிருந்தாள். அவர் அந்நேரம் வரை அவளிடம் பேசவேயில்லை, என்பது வேறு கவலையாக இருந்தது. கிளம்பி முடித்து பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு திரும்பி அவரைப் பார்க்க, “நீ முன்ன போ, நா ஸ்கூல்ல போய் பர்மிஷன் போட்டுட்டு கிளம்பி வரேன்” என்று விட்டார் எங்கோ பார்த்து.

 

தலையசைத்து “பை ம்மா” எனக் கிளம்பினாள் ‘என்ன நடக்குமோ’ என்ற பீதியுடன்.

 

காலேஜ்ஜில் நுழைய ஒரு குரூப் கேர்ள்ஸ் “ஹே நீ நேத்து ட்ராமா சூப்பரா பண்ண கேர்ள், உன் நேம் என்ன?” என வந்து பேச தன்போக்கில் பதில் கூறி விட்டு சென்றாள்.

 

கிளாசில் அமர்ந்திருக்கும் போதும் எப்பொழுது அட்டெண்டர் வருவார் என வாசலை வாசலைப் பார்த்துக் கொண்டிருக்க, அதில் கடுப்பான கெமிஸ்ட்ரி மேடம் “கவனம் இங்க இருக்கட்டும் ஆறெழில்”  என்றப் பின் மெதுவாக போர்டில் கவனம் வைக்க முயற்சித்தாள்.

 

“டென்ஷன் இல்லாம இரேண்டி, அம்மாகிட்ட சொல்லிட்டல்ல,  அவங்க பாத்துப்பாங்க, எதுக்கு சும்மா உருண்டுட்டு வார?” என லட்சு முனுமுனுக்க.

 

“தலவலியும் காய்ச்சலும் தனக்குன்னு வந்தா தான் தெரியும்” என்றாள் முறைத்து. 

 

“தலைவலியும், காய்ச்சலும் வந்தா பரவால்லயே, உனக்கு காதல் நோய்ல வந்துருக்கு, இது அத விட கொடுமையாவுல இருக்கு”.

 

“ரொம்ப பேசாதடி” என சண்டைக்கு இருவரும் தயாராக.

 

“ரெண்டு பேரும் வெளில போய் பேசிட்டுருந்துட்டு பொறுமையா அடுத்த ஹவர்க்கு வாங்க , கெட் அவுட்” என்றார் கெமிஸ்ட்ரி மேடம்.

 

இருவரும் முழிக்க, “கெட் அவுட்”  என இருவரயும் கைகாட்ட, 

“சாரி மேம்” லட்சு சொல்ல,  

“நோ நீட், ப்ளீஸ் லீவ்” என்றுவிட்டார் முடிவாக.

 

“சரி வா போவோம், அம்மா வந்தா ஈசியா பாத்துக்கலாம் அப்பதான்” ஆறு சொல்ல.

 

“எங்களயும் கூட்டிட்டு போங்கடி” நிலா நடுவில் புகுந்து கிசு கிசு வென சொல்ல.

 

“இவளும் கூட வரலாம் மேம், அப்றம் அமலாவும் ௭ப்டியும் கேப்பா சோ மொத்தமாவே ஒரே டைம்ல ௭ங்களோடவே ரெண்டு பேரையும் சேர்த்து அனுப்பிடுங்க”  ஆறு சொல்ல.

 

“ரெப் தான நீ, கேங் சேத்து உருப்படாமா போக போறீங்களா? கிளாசுக்கு நல்ல நேம் சீக்கிரமே வாங்கி கொடுத்திருவ, இப்ப எல்லாமே எளக்காரமா தான் தெரியும். ஸ்கூல்ல நல்லா படிச்சு இங்க வந்துட்டோம், போதும் வேல கிடைச்சிடும்ன்னு எண்ணம்மா? நாயா பேயா வேலை தேடி அலையும்போது தெரியும்” என்றார் அவர்.

 

அப்போது லட்சு மட்டும் மேம் பார்த்து நல்ல பிள்ளை போல் குனிந்து கொண்டு “வெளில வேடிக்க பாத்தது அவ, இப்பயும் ௭தித்து பேசுறது அவ, ஆனா திட்றது மட்டும் ௭ன்னய” ௭ன முனங்கி கொண்டிருந்தாள்.

 

அது ஏதோ லட்சுவிற்கும் மேடத்திற்குமான பிரச்சினை போன்று மற்ற மூவரும் பேச்சு வார்த்தையில் இருந்தனர்.

 

“ஏன்டி கோர்த்து விட்ட” என நிலா ஆரம்பிக்க, 

“நீதானடி கூட்டிட்டு போக சொன்ன, உனக்காக தான் மேடம்ட்ட பேசுனே” ௭ன ஆறு சொல்ல. 

“௭ன் நேம் ஏன்டி சொன்ன?” அமலா கேக்க, 

” நீ மட்டும் உள்ள இருந்து ௭ன்ன பண்ண போறன்னு தான் உனக்கும் அட்வான்ஸா வெளில இடம் புக் பண்ணேன், பாவம் பாத்தா ரெம்ப பண்றீங்கடி” ஆறு திட்ட, ௭ன அவர்களுக்குள் அடுத்த சண்டை ஆரம்பம்மாக, 

அவர்களை முறைத்த லட்சு “சாரி மேம் இனிமே இப்டி நடக்காது” என லட்சு தான் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.

 

அந்நேரம் அட்டெண்டர் வர எல்லோரும் அமைதியாக, “ஆறெழில்ல ஹய்ச்.ஓ.டி கூப்பிடுறாங்க” அட்டெண்டர் சொல்லி செல்ல.

 

“அப்டியே போயிரு” என்றார் மேம். அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் பதில் கவுண்ட்டர் குடுக்க மறந்து சென்றாள் ஆறு.

 

ஆறெழில் வகுப்பிலிருந்து வெளியேறி, கொஞ்சம் பத்டடமாகவே ஹெச் ஓ டி அறையில் “எக்ஸ்கியூஸ்” கேட்டு நுழைய, அங்கு அவள் அம்மா, ஹெச்.ஓ.டி., மற்றும் அவள் கிளாஸ் ஸ்டாஃப்(௭ஃப்.௭) மூவரும் இருந்தனர்.

 

இவளை கண்டதும் “அவ கிளாஸ் போட்டும் சார், உங்களுக்கு தேவையானத நா எக்ஸ்பிளைன் பண்றேன்” என்றார் ஜெயந்தி.

 

ஜெயந்தியே சொல்லவும், அவளைக் “கிளம்பு” என்று விட்டனர் மற்ற இருவரும். ஆறு ஜெயந்தியை பாவமாகவே பார்த்து கொண்டு வெளியேறினாள்.

 

ஹெச்.ஓ.டி ரூம் 2வது தளத்தில் இருக்க, ஆறெழில் வகுப்பு அவர் அறைக்கு ௭திராக 3வது தளத்தில் இருந்தது. அங்கு, கெமிஸ்ட்ரி மேடம் வெளியே கழுத்தை பிடித்து தள்ளியதால் வாசலில் நின்ற லட்சு, நிலா, அமலா மூவரும் ஹச்.ஓ.டி அறையில் தான் மொத்த கண்ணயும் வைத்திருந்தனர்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்