Loading

ரேவதியும் செந்தமிழும் மண்டபத்தில் இருந்து கிளம்பி, முதலில் வீட்டிற்குச் சென்றனர். “ஏன் டி தேவையில்லாம அண்ணன் மேல கோபப்படுற? எதுக்கு தேவையில்லாம அழற? உன் சித்தி கோபமா பேசுனதுக்கு அவர் என்ன பண்ணுவாரு?” ரேவதி மனம் தாங்காமல் கேட்க,

“என்னடி நீயும் புரிஞ்சுக்காம பேசுற? இவரை யார் முதல்ல அவங்களை விசேஷத்துக்குக் கூப்பிட சொன்னது. சரி அதைக் கூட விடு. சித்தி அவரோட குறையைப் பத்தி பேசுனா அது அந்தம்மாவோட புத்தி. ஆனா இளாவே தன்னைக் குறைச்சுப் பேசுறாரு. நானே இப்போதான் அவரை சரி பண்ணி வச்சிருக்கேன்.

“அவருக்கு என்னடி குறை? எல்லாருக்கும் கண், காது, மூக்கு எல்லாம் ஒரே மாதிரியா இருக்குது. கொஞ்சம் மாறி மாறி வித்தியாசமா தான இருக்குது. அதே மாதிரிதான், நம்மளை மாதிரி இல்லாம அவருக்கு கால் கொஞ்சம் வித்தியாசமா இருக்குதுன்னு நினைச்சுட்டுப்போக வேண்டியது தான.

“மத்தவங்களை விடு, முதல்ல இளா தன்கிட்ட இருக்கிறது குறை இல்லன்னு மனசார நம்பணும். எங்களோட குழந்தைங்க அவர்கிட்ட போய் இதைப் பத்தி கேட்கும் போதும், ‘ஆமா நான் குறையோட தான் பிறந்திருக்கேன் அப்படின்னு சொன்னா’ அந்த குழந்தைங்க மனசு என்ன பாடுபடும். அவர் தான் அவங்களுக்கு முதல் ஹீரோ.

“அவர் மத்தவங்க கிட்ட தன்னை விட்டுக் கொடுக்காம கம்பீரமா பேசுனாத்தான், மத்த யாரும் அவங்க அப்பா பத்தி பேசும்போது, எங்க குழந்தைங்களும் அது குறை இல்லன்னு தைரியமா பேசுவாங்க. நான் அதை நினைச்சுத்தான் அழுதேன். ‘தமிழ் நீதான் என்னோட உயிர், காதல் எல்லாம்னு’ இளா பக்கம் பக்கமா டயலாக் பேசுவாரு. ஆனா எப்போதான் என்னை சரியா புரிஞ்சுக்கப் போறாரு?” செந்தமிழ் மனதில் உள்ளவற்றை கண்ணீரோடு சொல்ல, ரேவதியும் கண்கலங்கியவாறு சிரித்தாள்.

அப்போதுதான் மண்டபத்தை காலிசெய்து பொருட்களுடனும், பைகளுடனும் வீட்டிற்குள் நுழைந்த அனைவரது காதிலும் அவர்கள் பேசியது விழுந்தது. இளமாறனைப் பார்த்ததும் கண்களைத் துடைத்துக் கொண்ட செந்தமிழ், அவனைக் கோபத்தில் முறைத்தவாறு எழுந்து அறைக்குள் சென்றாள்.

“என்ன மச்சான்.. தங்கச்சி ரொம்ப கோபமா இருக்குது போல, காலுக்கு விழுந்தாச்சும் சமாதானம் பண்ணிடு” சரவணன் கிண்டலாகச் சொல்ல, “மச்சான் கால்ல எல்லாம் விழமாட்டான், அவன் விழற இடமே வேற” கண்ணடித்து மூவருக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் இனியன்.

அவர்கள் கேலிகளை கேட்டும் கேட்காதவாறு இளமாறன் அறைக்குள் நுழைய, மெத்தையில் அமர்ந்திருந்தவள் எழுந்து வெளியே செல்ல முற்பட்டாள். “ஹே.. தமிழ்.. தெலுங்கு.. இங்கிலீஷ்.. நில்லுடி. நான் தப்பு செஞ்சா அப்படி பண்ணாதன்னு சொல்லுடி. அதை விட்டுட்டு எதுக்கு கண்ணுல இருக்க டேம தொறந்து விடுற” அவள் மனதை மாற்ற அவன் குறும்பாகப் பேசிட, சிரித்தவாறு சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஆமா இவர் பாப்பா.. இவருக்கு எல்லாம் சொல்லித் தரணும். குழந்தையே பிறக்கப் போகுது. மத்த எல்லாம் தெரியும். இது தெரியாதாக்கும்” அவளும் குறும்பாய்த்தான் பேசினாள்.

“சரி ஐ லவ் யூ சொல்லு.. எவ்ளோ நாளா என்னை ஏங்க விடுற?” என்று அவன் கேட்க, “உங்களுக்கு ஐ லவ் யூவும் கிடையாது.. ஒண்ணும் கிடையாது” என்றவாறு மாற்றிக்கொள்ள துணிகளை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குச் சென்றாள்.

“ஹே பிளீஸ் டி..” அவன் கெஞ்சுதலாகக் கேட்க, “போடா..” என்றவள், சிரித்தவாறு பாத்ரூம் கதவைத் தாழிட்டாள்.

இன்னும் சில நாட்கள் கழித்து….

இளமாறனின் குடும்பமும், சரவணனின் குடும்பமும் அன்று இனியன் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றவர்கள், ஒன்று சேர்ந்து சமைத்து, சாப்பிட்டு மாலை வரையிலும் அங்கு இருந்தார்கள்.

இரவு உணவு முடிந்தபின் நண்பர்கள் மூவரும் சரவணனின் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். “இனியா.. இருந்தாலும் நீ இவ்ளோ நல்லவனா இருக்கக்கூடாது, போதும் உன்னோட விரதம்” சரவணன் கிண்டலாகச் சொல்லிட, அவன் பதிலேதும் பேசாமல் சிரித்தான்.

“நாங்க மட்டும் குழந்தை குட்டின்னு கஷ்டப்படணும். நீ மட்டும் ஜாலியா இருப்பியா. சீக்கிரமே ரெண்டு பேரும் ஒண்ணாகி எங்களை மாதிரியே சம்சார சாகரத்துல சேர்ந்திடுங்க” இளமாறன் சொல்ல அதற்கும் சிரித்தான்.

“இவன் திருந்தமாட்டான் டா, எதுக்கெடுத்தாலும் சிரிப்பு. இதுல சார் என் கல்யாணத்தன்னைக்கு என்ன சொன்னாரு தெரியுமா? உனக்கு ஏதாவது டவுட் இருந்தா என்கிட்ட கேளுடான்னு சொன்னான்” இளமாறன் கேலி செய்திட மூவரும் சிரித்தார்கள்.

“நீயும் ரேவதியும் இன்னைக்கு எங்க வீட்டுக்குப் போயிருங்க. நாளைக்கு காலைல, இல்ல மச்சான்.. ஒரு ரெண்டு நாள் கூட எடுத்துக்கோங்க. சீக்கிரமே மச்சான்ல இருந்து எனக்கு மாமான்னு ப்ரமோஷன் குடுக்கிற வழியைப் பாருடா” இளமாறன் சிரித்துக் கொண்டே சொல்ல, அதற்கும் வெட்கச் சிரிப்புத்தான் இனியனிடம்.

பெண்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, “நாம எல்லாரும் நைட் ஷோ சினிமாவுக்குப் போகலாமா?” ரேவதி ஆர்வமாய் கேட்க, “நாங்க வரலப்பா எங்களுக்கு டயர்டா இருக்கு” என்றனர் தீபாவும், செந்தமிழும். “சரி நாங்க எல்லாரும் போயிட்டு வர்றோம். நான் குழந்தைகளைக் கூப்பிட்டுப் போறேன்” என்றாள் ரேவதி.

“நீ முதல்ல கிளம்பு. நாங்களும் வர்றோம்” என்ற செந்தமிழ் ஒரு புதுப்புடவையை அவளிடம் தந்து, அவளுக்கு தலை நிறைய பூவும் வைத்து விட்டாள். இனியனும் குளித்துக் கிளம்ப, “நீங்களும் சீக்கிரமா கிளம்புங்க” ரேவதி கிளம்பியபின் தண்ணீர், ஸ்நாக்ஸ் எல்லாம் எடுத்து வைத்தாள்.

இனியன், ரேவதி இருவரும் ரெடியானதும், “நீங்க முன்னால போய் டிக்கெட் எடுத்து வைங்க. நாங்க பின்னாடி வர்றோம்” என்று குறும்பாகச் சிரித்தனர் மற்றவர்கள். “சரி நான் எடுத்து வச்சதெலாம் மறக்காம எடுத்துட்டு வந்துடுங்க” ரேவதி சொல்லியபின், அவர்கள் இருவரும் பைக்கில் கிளம்பினர்.

பைக் நேராக இளமாறன் வீட்டிற்குச் சென்றது. “இனி.. ஷோக்கு டைம் ஆகுது. இங்க எதுக்கு வந்தீங்க?” ரேவதி குழப்பமாய் அவனைப் பார்த்திருக்க, “வீட்ல ஒண்ணு எடுக்கணும். நீ உள்ள வா” என இனியன் கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

“இனி.. சினிமாக்கு டைம் ஆகுது. உங்களுக்கு என்னதான் வேணும்?” அவள் சிணுங்கிக் கொண்டிருக்க, வேகமாக கதவைத் தாழிட்டவன், அவளைத் தூக்கிக்கொண்டான்.

“சினிமாவுக்குத் தான போகலாம்” என்றவாறு அவளை அறைக்குத் தூக்கிச் சென்றால், அங்கு அவர்களுடைய முதலிரவுக்காக மெத்தை மட்டுமல்லாது, அறை முழுக்க பூக்களால் அலங்காரம் செய்திருந்தார்கள். ரேவதி இதைப் பார்த்து முதலில் திகைத்தவள், எல்லாம் புரிந்ததும் வெட்கத்தில் அவன் மார்பிலேயே புதைந்து கொண்டாள்.

இனியன் வீட்டு மொட்டை மாடியில் இளமாறனும் சரவணனும் பாயில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “அவனுக்கு முதலிரவு நடக்கிறதுக்கு என்னையும் என் பொண்டாடியையும் ஏன்டா பிரிச்சு வச்சிருக்கீங்க? நீ தங்கச்சியைக் கூப்பிட்டு உன்னோட வீட்டுக்குப் போக வேண்டியது தான” இளமாறன் ஆதங்கத்தில் கேட்க,

“ஒருநாள் தான மச்சான் விடுடா, பேசாம தூங்கு” சமாதானமாகப் பேசிய சரவணனை எரிச்சலோடு பார்த்தான்.

“உனக்கென்னப்பா நீ ரெண்டு குட்டி போட்டுட்ட. எனக்கு ஒண்ணு தான் ஆன் தி வே. நானும் அடுத்தடுத்து பெத்துக்க வேணாமா? பாவம் செந்தமிழ் என்னைக் கட்டிப்பிடிக்காம அவளுக்கு தூக்கமே வராது” அவன் கவலையாய் பேசிக் கொண்டிருக்க,

“அதெல்லாம் எனக்கு நல்லாத் தூக்கம் வரும். உங்களுக்குத் தூக்கம் வரலன்னா எங்க அண்ணனை கட்டிப்பிடிச்சு தூங்குங்க என்றவாறு கையில் சொம்புத்தண்ணீரோடு அங்கே வந்தாள் செந்தமிழ்.

*********************************************

“இங்க ஷோ தான் நடக்கப் போகுது. ஆனா நீ இதுவரைக்கும் பார்க்காத ஷோ” என்ற இனியன் ரேவதியை மெத்தையில் போட்டு அவள் மேல் படர்ந்தான். “குட்டிமா.. நான் உன்னை ரொம்ப நாள் வெயிட் பண்ண வச்சுட்டேன்ல. இன்னைக்கு நாம ஒண்ணா..” சொல்ல வந்ததையும் சொல்லாமல், அவளையும் பேச விடாமல் அவளது இதழை தனது இதழால் பூட்டிக் கொண்டான்.

அவன் முத்தத்தோடு ஆரம்பித்து அவளை மொத்தமாய் எடுத்துக் கொண்டிருக்க, ஏற்கனவே அவனுடைய காதலில் மயங்கியிருந்தவள், அவன் தந்த மோகத்தில் மயங்க ஆரம்பித்தாள். அவன் ரசிக்கும் அவளது கோலிக்குண்டு கண்களில் மோகமேறியிருக்க, அவளது மோகப் பார்வையில் அவனுக்கும் போதையேறியது.

காதலில் தங்களைத் தொலைத்த இருவரும், மாறி மாறி ஒருவருக்குள் ஒருவரைத் தேடி, மாறி மாறி ஒருவருக்குள் ஒருவரைத் தேட வைத்து காதலுக்குள்ளிருக்கும் அழகை, அது தரும் இன்பத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.

நாணல் பூவாய் நானும் வளைந்தாட…

மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தாட…

மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட…

யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற…

முத்தம் கேட்டு இதழ்கள் படியேற…

சத்தம் போட்டு இதயம் தடுமாற…

வாடை காற்றில் தேகம் குளிராக…

வா வா என்னை போர்த்து அனலாக…

தேனும் நீயும் ஒன்றுதான்…

தேனில் மூழ்கும் வண்டு நான்…

தீயும் நீயும் ஒன்றுதான்…

தீயில் ஒளிரும் தீபம் நான்…

தேவை தீருமா… தேடல் தொடருமா…

வெல்வேனே உலகை நொடியிலே…

வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

********************************************

காலையில் இனியனின் செல்போன் ஒலித்துக் கொண்டேயிருக்க, குளித்து முடித்து வந்த ரேவதி, போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க,

“என்னம்மா ரோகிணி.. புருஷன் கூட சந்தோஷமா இருக்க போல. நான் ஒரு வீடியோ அனுப்பிருக்கேன் பாரு” சிங்கண்ணன் இறுக்கமான குரலில் சொல்லி போனை வைத்தான்.

வாட்ஸப்பில் வீடியோ வர, அதை டவுன்லோட் செய்து பார்த்தால் சிங்கண்ணன் பாண்டியின் கழுத்தில் கத்தியை வைத்து துடிதுடிக்க அறுத்துக் கொன்றிருந்தான். அதைப் பார்த்த ரேவதி நடுங்க ஆரம்பித்தாள்.

அடுத்து இத்தனை நாட்களாக தங்கள் அனைவரையும் சிங்கண்ணன் ஆள் வைத்து கண்காணித்த வீடியோக்களும் வர பயந்து போய் நின்றிருந்தவள், மறுபடியும் போன் ரிங் ஆக அட்டென்ட் செய்தாள்.

“இப்போ நீ என்ன பண்ற. உன் புருஷனை விட்டுட்டு வர. அப்படி வந்தா நீ மட்டும் தான் சாவ. இல்ல உன் புருஷனையும் கூப்பிட்டு வந்தா அவனும் சேர்ந்து உங்க அப்பன் செத்த மாதிரியே சாவான். உனக்கு தெரிஞ்ச யாருக்கு நீ தகவல் சொன்னாலும் முதல்ல அவங்க உயிர் போகும், அப்புறம் தான் உன்னோட உயிர் போகும். நீ மட்டும் சாகனுமா இல்ல உன்கூட சேர்ந்தவங்க எல்லாரும் சாகாணுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்ற சிங்கண்ணன் போனை வைத்துவிட,

மெத்தையில் அசதியாய் தூங்கிக் கொண்டிருந்த இனியனை ரேவதி கண்ணீரோடு பார்த்தாள். அவனுக்கு அருகில் சென்றால், எழுந்து விடுவானோ என பயந்தவள், சத்தம் வராமல் “ஐ லவ் யூ இனி..” என்று சொல்லியபின் அங்கிருந்து வெளியே சென்றாள்.

********************************************

சரவணன் தன்னுடைய மனைவியையும், பெரிய மகள் அமுதினியையும் வீட்டில் இறக்கி விட்டு, கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான். வீட்டிற்கு கொஞ்சம் அருகிலேயே அமுதினி படிக்கும் பள்ளி இருப்பதால், தீபா நடந்தே சென்று தினமும் அவளை பள்ளியில் விட்டு அழைத்து வருவாள்.

அன்றும் அவளை பள்ளிக்கு கிளப்பி அழைத்துச் செல்லும் வழியில், இருவரும் பள்ளியின் கேட்டிற்கு அருகே சென்றிருக்க, வேகமாக வந்த பைக் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இடித்ததில் கைபிடித்து நடந்து கொண்டிருந்த இருவரும் தனித்தனியே விழுந்தனர்.

தீபா சுதாரித்து எழுந்து வந்து பார்த்தால், அமுதினி தலையில் அடிபட்டு ரத்தம் வழிய கிடந்தாள். “அய்யோ அம்மு.. அம்மாவைப் பாருடா..” என மகளைத் தூக்கி அணைத்துக் கொண்டாள்.

அவள் கையில் வைத்த போனும் கீழே விழுந்து நொறுங்கியிருக்க.. “யாராவது ஹெல்ப் பண்ணுங்க” என்று கத்தியவாறு இருந்தாள்.

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்