
காதல் – 50
அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் தங்களின் காதல் உலகில் சந்தோஷமாக பயணித்து விட்டு அவர்கள் இருவரும் பிரிய போகும் சமையம் வந்தது…….
அஸ்வதி தன்னுடய காதலனின் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்தாள்……
அவள் மீண்டும் அந்த வீட்டிற்க்கு மருமகளாக வருவேன் என்று தன் மாமியாரிடம் கூறி கொண்டு இருந்தாள்……
அந்த நாளுக்காக தான் நா காத்துட்டு இருக்கேன் என்று அவர் அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்……
அப்பொழுது அங்கு சித்திக் அப்பா வந்தார்……
விஹான் இங்க வாங்க என்று அஸ்வதி அவனை பக்கத்தில் அழைத்தாள்…..
விஹானும் அவள் அருகினில் வந்து நின்றான்……..
அம்மா அப்பா எங்க ரெண்டு பேரையும் நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க என்று இருவரும் அவர்கள் இருவரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்……..
ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா சந்தோஷமா இருக்கனும் என்று அவர்கள் இருவரும் ஆசிர்வாதம் செய்தனர்…….
அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் உடம்ப பாத்துக்கோங்க, நேரத்துக்கு கரெக்ட்டா சாப்பிடுங்க ,மாத்திரை ஒழுங்கா போடுங்க, அப்புறம் என்னோட விஹான பத்திரமா பாத்துக்கோங்க உங்க எல்லாரையும் என்னோட பெஸ்ட் பிரண்ட் விஹானா சூப்பரா பார்த்துப்பா அவளையும் நீங்க சூப்பரா பார்த்துக்கணும் புரியுதா?
நல்லா புரிஞ்சுதுடா கண்ணா நீயும் உடம்ப பத்திரமா பாத்துக்கணும் , நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடணும், அடிக்கடி எனக்கு போன் பண்ணனும் சரியா …..நானும் உனக்கு போன் பண்ணுவேன் …..
சரிங்க அம்மா …..
அஸ்வா சென்னைக்கு போன பிறகு இந்த அப்பாவ மறந்துடுவியா?
அதெப்படி நா மறப்பேன்? மறக்ககூடிய ஆளா என்னோட சித்திக் அப்பா என்று அவள் அவரை அனைத்து கொண்டாள்……
சித்திக் பிளைட்டுக்கு டைம் ஆகுது என்று தேவராஜ் கூறவும் சித்திக் மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் தேவராஜ் குடும்பத்தோடு ஏர்போர்ட்டுக்கு அவர்களை வழி அனுப்ப சென்றனர்…..
தேவராஜ் மற்றும் அவரின் குடும்பத்தினர் தனி காரில் வந்தனர், சித்திக் மற்றும் அவரின் குடும்பத்தினர் தனி காரில் வந்தனர், அஸ்வதி மற்றும் விஹான் தனி காரில் வந்தனர்……
அஸ்வதி விஹானின் தோள்களில் சாய்ந்து கொண்டு அவனின் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டு வந்தாள்…..
அவர்கள் அனைவரும் ஏர்போர்ட்டுக்கு வந்து விட்டனர்…….
அஸ்வதியின் லக்கேஜ்களை விஹானா சரி பார்த்து கொண்டிருந்தாள்…..
பிறகு அஸ்வதி செல்லும் பிளைட் வந்துவிட்டது என்று அனவுன்ஸ் செய்யவும் அவள் தன்னுடய காதலனின் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு தன் காதலனிடம் வந்தாள்…..
விஹான் …..
சொல்லுடா ……
என்ன ஒரு தடவை டைட்டா கட்டி புடிங்களேன் என்று அவள் கேட்கவும் விஹான் தன் காதலியை அவன் உயரத்திற்கு ஏற்ப தூக்கி தன் நெஞ்சோடு சேர்த்து அவளின் எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அவளை இருக்கமாக தன் நெஞ்சினில் புதைத்து வைத்து கொண்டான்……..
நீண்ட நேரம் அவர்கள் இருவரும் அவ்வாறு இருந்தனர்……
பிறகு கடைசி அனவுன்ஸ்மெண்ட் வரவும் விஹான் தன் காதலியை இறக்கி விட்டு விட்டு அவளின் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டு அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்…….
நா போயிட்டு வாரேன் என்றிட்டு அவள் அழுதுகொண்டே தன் உயிரையும் மனதையும் அவனிடம் கொடுத்து விட்டு வெறும் உயிரற்ற உடலாக தன் காதலனை பார்த்து கொண்டே சென்றாள்……
அஸ்வதி விஹானை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்…..
அஸ்வதி விஹானின் கண்களில் இருந்து மறையும் வரை அவன் கண்களில் வழியும் கண்ணீரை கூட துடைக்கமல் அவளை பார்த்து கொண்டே நின்றான்……
அஸ்வதியின் பிளைட் டேக் ஆப் ஆகி டெல்லி சென்று இருக்கும் அதுவரை விஹான் ஏர்போர்ட்டிலே அமர்ந்து கொண்டிருந்தான்……..
அந்த ஏர்போர்ட்டில் வித விதமான உணர்வுகள் வெளிப்பட்டு கொண்டு இருந்தது…….
அந்த விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது, அடுத்தடுத்து விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்க மக்கள் கூட்டம் மொய்ப்பதும் பிறகு கூட்டம் குறைவதுமாக இருந்தது…..
ஒருவர் அவரின் குடும்பத்தை விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறார் போல அவரின் மனைவி கண்ணீரால் அந்த விமான நிலையத்தை மூழ்கடித்து கொண்டு இருந்தார் …..
இன்னொருவர் வேலை கிடைத்து வெளிநாடு செல்கிறார் போல அவரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபடி இருந்தார் ….
இன்னொருவர் காதல் ஜோடிகள் போல அவர்களின் கட்டிப்பிடி வைத்தியத்தை அவன் பார்த்து விட்டு சற்று நேரத்திற்கு முன்பு தன் காதலியை கட்டி அணைத்து கொண்டது அவன் நினைவுகளில் எழ அவளின் வாசனை இன்னும் அவன் மேல் ஒட்டி கொண்டு இருந்தது…..
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஒரே உணர்ச்சியான அழுகையை மட்டுமே திரும்ப திரும்ப வெளிப்படுத்தி கொண்டு இருந்தார்கள்…….
வேதனையில் இருப்பவர்களை காட்டிலும் விமான நிலையத்தில் சென்ட் ஆஃப் வழியனுப்ப வருபவர்களும் வழியனுப்பி வைக்கப்படுபவர்களும்தான் அதிகமான கண்ணீரை உதிர்க்கின்றார்கள்…..
என்று அஸ்வதி நினைத்து கொண்டு இருப்பது போலவே விஹானும் தன் காதலியை நினைத்து கொண்டு அங்கேயே அமர்ந்து கொண்டு இருந்தான்…….
“வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்
ஆழி நான் விழுந்தாள்
வானில் நீ எழுந்தாய்
என்னை நட்சத்திர காட்டில் அலையவிட்டாய்
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்”……..
“நீ என்ன விட்டுட்டு தூரமா போயிட்ட நா மேல வானத்தயே பார்த்து உன்ன தேடிட்டு நிக்கறேன்” என்னையும் உங்கூடவே கூட்டிட்டு போயிருக்க கூடாதா?
நீ உன் உலகத்துக்குள மூழ்கிட்ட நீ இல்லாம நா இப்ப என்ன பண்றது?
நீ பிளைட்ல மேலே போக போக நா ஆழமான துக்கத்துக்குள் விழுந்துட்டே இருக்கேன் என்ன காப்பாத்த எப்ப வருவ?
நீ பிளைட்ல பறக்க ஆரம்பிச்சுட்ட ஆனா உன் நினைவோட கணம் தாங்க முடியாம என்னால நடக்க கூட முடியல, என்ன என்ன பண்ணின நீ?
உன்னோட நா கழிச்ச நிறைய நினைவுகள், கனவுகளுக்குள்ள தனியா என்ன அலையவிட்டுட்டு போயிட்டயே, நா இப்ப என்ன பண்றது?
உன்னை விட்டு தூரமா நா பிரிஞ்ச பிறகுநா யார்ன்னு எனக்கே தெரியல என்று அவன் அந்த ஏர்போர்ட்டில் தனியாக அமர்ந்து கொண்டு அழுது கொண்டு இருந்தான்…….
அப்பொழுது அங்கு வந்த அவன் தங்கை அவனை தேற்றி அவர்களின் வீட்டிற்க்கு அழைத்து சென்றாள்…….
ஒரு மனி நேர பயணத்திற்கு பிறகு அஸ்வதி மற்றும் அனைவரும் டெல்லி ஏர்போர்ட்டை வந்தடைந்தனர்……
அஸ்வதி அவளின் டிராலி மற்றும் லக்கஜ்களை வைத்து கொண்டு சோகமாக அமர்ந்து கொண்டு இருந்தாள்…….
அந்த டெல்லி ஏர்போர்ட்டில் அவள் முதன் முதலாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தது…..
அந்த விமான நிலையமும் அவ்வாறு தான் இருந்தது…..
அந்த விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது, அடுத்தடுத்து விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்க மக்கள் கூட்டம் மொய்ப்பதும் பிறகு கூட்டம் குறைவதுமாக இருந்தது…..
ஒருவர் அவரின் குடும்பத்தை விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறார் போல அவரின் மனைவி கண்ணீரால் அந்த விமான நிலையத்தை மூழ்கடித்து கொண்டு இருந்தார் …..
இன்னொருவர் வேலை கிடைத்து வெளிநாடு செல்கிறார் போல அவரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபடி இருந்தார் ….
இன்னொருவர் காதல் ஜோடிகள் போல அவர்களின் கட்டிப்பிடி வைத்தியத்தை அவள் பார்த்தாள் அந்த அமைப்பு தன் காதல் கணவனை அவளுக்கு நினைவு படுத்தியது அவனின் நினைவுகளின் கணம் தாங்காமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…..
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஒரே உணர்ச்சியான அழுகையை மட்டுமே திரும்ப திரும்ப வெளிப்படுத்தி கொண்டு இருந்தார்கள்…….
வேதனையில் இருப்பவர்களை காட்டிலும் விமான நிலையத்தில் சென்ட் ஆஃப் வழியனுப்ப வருபவர்களும் வழியனுப்பி வைக்கப்படுபவர்களும்தான் அதிகமான கண்ணீரை உதிர்க்கின்றார்கள்…..
அவள் ஒரு ஓரமாக தன் கைப்பையை இறுக்கமாக பிடித்து கொண்டு அங்கு நடக்கும் அனைத்து சம்பாஷனைகளையும் பார்த்து கொண்டு இருந்தாள்……
அவளின் வாழ்நாளில் இதுதான் அவளின் முதல் உல்லாச பயணம், மனதில் ஒரு மூலையில் புது இடத்திற்கு சுற்றுலா சென்று விட்டு வந்தோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொருபுறம் அவளின் உயிருக்கு மேலான தன் காதலனை விட்டு தூரமாக வந்து விட்டோம் என்று இரு உணர்வுகள் ஒரு மனதிற்குள் மாறி மாறி ஆட்டிப்படைக்க அவள் அமைதியாக அழுது கொண்டே அமர்ந்து கொண்டு இருந்தாள்…….
பிறகு அவர்கள் சென்னை செல்ல வேண்டிய விமானம் வரவும் அவர்கள் அனைவரும் சென்னை விமானத்தில் ஏறி சென்னை நோக்கி பயணப்பட்டனர்….
இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் டெல்லியில் இருந்து சென்னையை வந்தடைந்தனர்……
அவர்கள் அனைவரும் தங்களின் வீட்டிற்கு சென்றனர்……
அஸ்வதி அவளின் டிராலி மற்றும் பொருட்களை அவள் அறையில் வைத்து விட்டு தன்னுடைய அறையை சாத்தி வைத்து விட்டு தன்னுடைய அறையை சுத்தம் செய்து விட்டு தன் காதலன் தனக்கு வாங்கி கொடுத்த பொருட்களை எல்லாம் அழகாக அடுக்கி வைத்து விட்டு குளித்து விட்டு தன்னுடைய காதலனுக்கு ஃபோன் செய்தாள்……
ஒரே ரிங்கில் விஹான் அவளின் அழைப்பை எடுத்து விட்டான்…….
அஸ்விம்மா……
விஹான்……
இருவருக்கும் பேச்சு வரவில்லை, கண்களில் இருந்து கண்ணீர் தான் வழிந்தது…….
என்னோட செல்ல அஸ்வி இப்படி அழுக கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல??
அப்போ நீங்க மட்டும் அகுகுறீங்க??
சரி சரி நா அழல,இப்போ என்னோட செல்ல பொண்டாட்டியும் அழுகைய நிப்பாட்டிடுவா …….
விஹான் என்னோட ரூம் பாருங்க என்று அவள் வீடியோ காலில் தன் அறையை அவனுக்கு காட்டினாள் அவன் வாங்கி கொடுத்த பெட் ஷீட் , ஷோ கேஸ் பொருட்கள் என்று அனைத்தையும் அவள் அழகாக ரெடி செய்து வைத்து இருந்தாள்……
அஸ்வி என்னோட ரூம்ல நீ நிக்குற மாதிரியே தெரியுது…..
அது என்னோட ஆவி , நா இங்க வந்துட்டேன்ல உங்கள பாத்துக்க நா செட் பண்ண அஸ்வி ஆவி அது என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்…….
எனக்கு அந்த அஸ்வி ஆவி ஓகே தான் ஆனா அந்த ஆவிய என்னால கட்டி பிடிக்க முடியலையே, என்ன செய்ய?
இப்ப கொஞ்ச நாளைக்கு மட்டும் அந்த ஆவி பொன்ன வச்சிக்கிங்க, இன்னும் கொஞ்ச நாள்ல நா உன்கிட்ட வந்துருவேன் என்ன என்று அவள் அவனை பார்த்து சிரித்து கொண்டே கூறினாள்…….
அஸ்வி ……
சொல்லுங்க விஹான்……
டெய்லி என்கிட்ட இப்படி பேசுவியா?
எனக்கு பேச வேற யாரு இருக்கா?நீங்கதான் எனக்கு எல்லாம் , உங்ககிட்ட நா டெய்லி பேசுவேன் , விஹான் இங்க மழை வருது என்று அவள் ஜன்னல் வழியே பெய்யும் மழையை தன் காதலனிடம் காட்டினாள்…..
மழை இருக்கட்டும் , ஆமா அஸ்வி சாப்பிட்டியா?
இல்ல விஹான் , பசிக்கல……
அடிங் ,மண்டைய உடச்சி போட்டுருவேன் உன்னோட ஹேன்ட் பேக்ல நா கெலாக்ஸ் வச்சிருக்கேன் பாரு அதை பால் ஊத்தி சாப்பிடு……
நா சாப்பிடுறது இருக்கட்டும் நீங்க சாப்பிட்டீங்களா?
அது…..
அது…..
நீங்க மொதல்ல உங்க ரூம்ல நா ஊற போட்ட பட்டானிய சாப்பிடுங்க என்று அவள் கூறவும் அவன் சிரித்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தான்……
அவளும் அவன் வைத்த கெலாக்ஸ்சை பாலில் போட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தாள்……
தொடரும்……
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

