
நினைவுகள் -32
அன்று…
ஆகாஷும், ஆதவனும் சென்ற பிறகு அங்கு அமைதியே ஆட்சி செய்தது.
கிருஷ்ணன், ” ஏன் அனு மா… அவங்க வீட்டுக்கு எல்லாம் போயிருக்க? ஆனா எங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல.” என்றுக் கேட்க…
“அப்படி இல்ல மாமா… அவங்க வீட்ல ஒரு பார்ட்டி. அதுக்காகத் தான் போனேன். அன்எக்ஸ்பெட்டாட தான் ஆகாஷ் அறிமுகப்படுத்தினான்.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
” ஓ.. காட். இதுவே தப்பு இல்லையா அனு மா. உன் கிட்ட சொல்லாமல், எப்படி அந்த பையனே முடிவெடுக்கலாம்?” என்று கிருஷ்ணன் வழக்கத்திற்கு மாறாக துளைத்து, துளைத்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார்.
விஸ்வரூபனோ, தன் தந்தை பேசுவதால் கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான்.
” சாரி மாமா… அவன் பண்ணது தப்பு தான். நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.” என்று பாவமாக கிருஷ்ணனைப் பார்த்தாள்.
கிருஷ்ணன் பரிதவித்தாரோ, இல்லையோ… ருக்குமணிக்கு பேத்தியைப் பார்த்து தாளவில்லை. அவர்கள் பேச்சிற்கு இடையே புகுந்தார்.
” அதனால என்ன கிருஷ்ணா? பார்க்க பசங்க, நல்ல பசங்களா தானே தெரியுறாங்க. இரண்டு பேரும் டாக்டருக்கு படிச்சிருக்காங்க. நல்ல வசதியாகத் தான் இருப்பாங்க. இல்லைன்னா என்ன? நம்ம அனுவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டு, நம்ம ஹாஸ்பிடல்ல பார்த்துக்கட்டும். இது ஒரு விஷயமா? ” என்று பேத்திக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டு வந்தார்.
இதற்காகவே அனன்யா விஷயத்தில் கிருஷ்ணன் தலையிடமாட்டார்.
விஸ்வரூபனையே பார்த்துக்கொள்ள சொல்லுவார். இன்று தாள முடியாமல் கேட்க, வழக்கம் போல அவரது அன்னை தலையிட்டார்.
அதை விரும்பாத கிருஷ்ணனோ,
ஒரு முறை கண்களை மூடித் திறந்தார்.
பிறகு விஸ்வரூபனைப் பார்க்க…
அவனோ, தான் பார்த்துக் கொள்வதாக, கண்களாலே தந்தையிடம் தெரிவித்தவன், பாட்டியிடம் திரும்பி, ” பாட்டி… நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கத் தெரியுமா? அவங்க யாரு? குடும்பம் இருக்கா? அவங்க எப்படிப் பட்டவங்க? என்று எதுவும் விசாரிக்காமல் நீங்க ஏதாவது சொல்லாதீங்க.
எல்லா விஷயத்திலும் கண்ணை மூடிட்டு சப்போர்ட் பண்ற மாதிரி இதிலையும் செய்யாதீங்க.” என்று கண்டிப்புடன் கூற.
” டேய் ரூபா… அதுக்கு தான் முதல்ல அவங்களை வீட்டுக்கு வரச் சொல்லுவோம். வர்றவங்க கிட்ட நீ விசாரி. பெரியவங்க சொன்னா ஏதாவது காரணம் இருக்கும்.
எல்லாத்துக்கும் அச்சானியமா தடை சொல்லாம, உங்க அப்பனை ஒரு நல்ல நாள் பார்க்க சொல்லு.” என.
அனன்யா,” பாட்டி… என் செல்லப் பாட்டி.” என்று அவர் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவள்,
விஸ்வரூபனிடம், ” மாம்ஸ் பாட்டியே ஓகே சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன சீக்கிரமா ஒரு நல்ல நாளைப் பார்த்து, அவங்களை வர சொல்லுங்க. நீங்க என்ன வேணுமோ விசாரிச்சுக்கோங்க. ஆனா ஆகாஷைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்றுக் கூறியவள் உற்சாகத்துடன் அவளது அறைக்குச் சென்றாள்.
பாட்டியோ அவளையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
” பாட்டி… அவங்க குடும்பத்தைப் பத்தி விசாரிக்கிறதுக்கு முன்னாடி, நீங்க வீட்டுக்கு வரச் சொல்றது எனக்கென்னவோ தப்பா படுது. என்னவோ போங்க… ” என்று விட்டு அனுவின் அறைக்குச் சென்றான்.
கிருஷ்ணன் இறுக்கமாக இருக்க… கௌரி,” அண்ணா… ” என கலக்கமான குரலில் அழைத்தாள்.
தன் முகத்தை இயல்பாக்கிக் கொண்டு, ” நீ கவலைப்படாதே கௌரி. ரூபன் பார்த்துப்பான்.” என்றுக் கூறி விட்டு அவரும் அங்கிருந்து அகன்றார்.
” நீ கவலைப்படாதே கௌரி. பார்க்கும் போதே நல்ல பசங்களாத் தான் தெரியுறாங்க. ரூபன் அப்படி ஒன்னும் அனுவை விட்டுட மாட்டான்.” என்று ரஞ்சிதமும் சமாதானம் செய்தார்.
அனுவின் ரூமிற்கு சென்ற விஸ்வரூபனோ, கதவில் சாய்ந்து, கையைக் கட்டிக்கொண்டு அனுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ, ஆகாஷிடம் பேசிக் கொண்டிருந்தாள். ” ஆக்ஸ்… எங்க பாட்டி ஓகே சொல்லிட்டாங்க. என்னைக்கு அங்கிள், ஆன்ட்டிக்கு ஃப்ரீனு சொல்லு. அன்னைக்கு எங்க வீட்ல மீட் பண்ற மாதிரி பார்த்துக்கலாம்.” என்று சொல்ல.
ஆகாஷோ, ” ஆதி தான் அப்செட்டா இருக்கான். அவனால உனக்கு ப்ராப்ளம் வந்துடுச்சுனு புலம்பிட்டே இருக்கான்.” என.
” அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ முதல்ல ஃபோனை ஆதிக்கிட்ட குடு.” என்றாள் அனன்யா.
” ஹேய் ஆதி… நீ எனக்கு நல்லது தான் செய்துருக்க. நானே வீட்ல சொல்லணும்னா, என்னைக்கு சொல்லிருப்பேனோ. உன்னால தான் இப்போ எங்க வீட்டுக்கு தெரிய வந்தது. தேங்க் யூ சோ மச்…” என்றுக் கூறிக் கொண்டே திரும்ப, அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஸ்வரூபனை பார்த்து விட்டாள்.
” சரி! ஆதி. அப்புறம் பேசுறேன். பை.” என்று வைத்தவள், மெல்ல விஸ்வரூபன் அருகே சென்றாள்.
” மாம்ஸ்…” என்றாள்.
” மேடம் பெரிய மனுஷி ஆகிட்டீங்க. எங்களுடைய அனுமதியெல்லாம் தேவையில்லை.” என.
” ஏன் மாமா… நான் காதலிக்க கூடாதா? ஆக்ஸ் என் கிட்ட லவ் சொன்னப்பக் கூட,
உங்க கிட்ட கேட்டுட்டு தான் ஓகே சொல்லணும்னு வந்தேன். பட் நீங்க தான் பிஸி. எனக்காக ஐந்து நிமிடம் ஒதுக்கக் கூட முடியலை.” என்றாள் அனன்யா.
விஸ்வரூபனுக்கோ குற்ற உணர்ச்சியாக இருந்தது.
‘நாம அவளிடம் பேசியிருந்தா, அனு இவ்வளவு பிடிவாதமாக இருந்திருக்க மாட்டாள்.’ என்று நினைத்தவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
**********
இன்று…
ராதிகா தனது முக மாற்றத்தை நொடிப்பொழுதில் மாற்றியவள்,
” அது வந்து அப்பா… இப்போ தான் இரண்டு வாரமா காலேஜுக்கு லீவ் போட்டுருக்கேன். மறுபடியும் எக்ஸ்டென் பண்ண முடியாது. செமஸ்டர் லீவ் அப்ப வரோம் பா.” என்று பதில் கூறிய மகளின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை பார்த்து அவர்களும் சரி என்று தலையசைத்தார்.
இதையெல்லாம் பால்கனியில் நின்று ஃபோன் பேசி முடித்து விட்டு வந்த விஸ்வரூபன் ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஃபோனை வைத்து விட்டு திரும்பிய ராதிகா, அவனது பார்வையைப் பார்த்து திகைத்தாள்.
‘இவனை புரிந்துக்கொள்ளவே முடியலை.’ என்று எண்ணிக் கொண்டே ப்ரெஷ்ஷப் ஆகிவிட்டு வந்தவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.
எப்போதும் போல் உறங்கலாம் என்றுப் பார்க்க, அங்கோ விஸ்வரூபன் குழந்தையுடன் இருந்தான்.
என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க… குழந்தை ” மா…” என்று அழைக்க…
அவளும் படுத்துக் கொண்டாள்.
நாளையிலிருந்து கல்லூரிக்குப் போக வேண்டும். அவளுக்கோ தயக்கமாகவே இருந்தது. யார் அந்த வீடியோவை எடுத்தது என்று அவளுக்கு தெரியவில்லை அது வேறு குழப்பமாக இருக்க… உறக்கம் வருவேனா என்று இருந்தது.
மறுநாள் காலையில் எழுந்ததவள், அந்த குழப்பத்துடனேயே கல்லூரிக்கு கிளம்பினாள்.
அவளது முகத்தைப் பார்த்த விஸ்வரூபன், ” அடுத்தவங்க என்ன சொல்வாங்க என்று நினைத்துக் கொண்டே இருந்தால், நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. சோ எதையும் கேர் பண்ணாமல் இருக்க பழகு.” என்றுக் கூற…
” அதை நீங்க சொல்றீங்களா? எதை எதையோ நினைச்சுட்டு தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னீங்க.” என்று பதில் கூறிய ராதிகா வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.
‘ நான் படும்பாடு உனக்கென்ன புரியும்.’ என்று புலம்பியவன், அவள் பின்னே சென்றான்.
சாப்பிட்டு முடித்ததும், ” நானே காலேஜ்ல ட்ராப் பண்றேன்.” என.
” இல்லை … நான் பஸ்ஸிலே போறேன்.” என்று மறுத்துக் கூறினாள் ராதிகா.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஹாஸ்பிடல் போகும் போது நானே ட்ராப் பண்றேன்.” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்று கல்லூரியில் விட்டான்.
கல்லூரியில் உள்ளவர்கள் எல்லோரும் அவளிடம் சினேகமாக பேசிவிட்டு, பின்னாடி கிண்டலடித்தனர்.
அவளுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பாரேன் என்று பொறாமைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதையெல்லாம் அலட்சியம் செய்த ராதிகா ஆதவனிடம், ” ஹாய் ஆதி.” என.
அவனோ ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
” ஆதி… என் மேல கோவமா? ஏன் எதுவும் பேசமாட்டேங்குற?” என கண்கள் கலங்க வினவ.
” நான் யார் உன் மேல கோபப்பட? நான் யாரு? இல்லைன்னா கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டுருக்க மாட்டியா? ” என.
” ஹேய் ஆதி. உனக்கு தெரியாததா? விஷ்வா மேரேஜ்ஜை சிம்பிளா செய்தால் போதும் என்று சொல்லிட்டார். அப்புறம் நான் என்ன பண்ண முடியும் சொல்லு. நீ கவலைப்படாதே. உன்னை மட்டும் ஸ்பெஷலா எங்க வீட்டுக்கு இன்வைட் பண்றேன். நீ வா…” என்றுக் கூற…
” ஷ்யூர்?” என்று கேள்வியாக வினவினான் ஆதவன்.
“ஷ்யூர் ஆதி. கண்டிப்பா உன்னை என் வீட்டுக்கு இன்வைட் பண்றேன்.” என்றாள் ராதிகா.
” சரி ராது! ஆனால் மறந்துடாத.புது பொண்ணு வேற.அந்த பிஸில என்ன டீல்ல விட்டுடப் போற.”
” அப்படியெல்லாம் ஒன்றும் நான் மறக்க மாட்டேன். இல்லன்னா இன்னைக்கு ஈவினிங்கே என்னோட வா. எங்க வீட்டுக்கு போகலாம்.என்று முடித்துவிட்டாள்.
” ஹேய் ராது… வீட்ல பர்மிஷன் கேட்க வேண்டாமா? நீ பாட்டுக்கும் கூப்பிடுறே. நான் சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன். இன்னொரு நாள் பார்க்கலாம் .” என்று ஆதவன் அங்கு செல்வதை தவிர்க்க பார்க்க…
” அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அது என்னோட வீடும் கூட. என்னோட நீ வா.” என்று அவள் விடாப்பிடியாக காலேஜ் முடியவும் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
அவள் சென்ற நேரம், ஆதவனுக்கு நல்ல நேரமோ என்னவோ…
வீட்டில் ரஞ்சிதம் மட்டுமே இருந்தாள்.
ஆதவன் உள்ளே நுழைய தயக்கத்துடன் இருக்க… அவனை கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றாள் ராதிகா.
உள்ளே ரஞ்சிதம் மட்டும் குழந்தையுடன் இருக்க…
” அத்தை… என்னோட ஃப்ரெண்ட் ஆதி.” என்று அவனை அறிமுகம் செய்ய.
ரஞ்சித்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே, தலையாட்டி விட்டு, ” இதோ பேசிட்டு இருங்க வரேன்.” என்றவர் கிச்சனில் நுழைந்துக் கொண்டார்.
குழந்தையோ, ராதிகாவைப் பார்த்ததும், அவளிடம் தாவி சென்று இருந்தது.
ஆதவன், குழந்தையிடம் சென்று விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். குழந்தையோ, சிரித்துக்கொண்டே, அவனிடம் தாவியது.
ஆசையாக வாங்கியவன், அழுத்தமாக குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, விளையாடிக் கொண்டிருந்தான்.
அதை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.
அதற்குள் ரஞ்சிதம், இருவருக்கும் காஃபி, ஸ்னாக்ஸை வேலையாட்கள் மூலம் குடுத்து விட்டிருந்தார்.
முதலில் விருந்தோம்பல் கடமையை செய்தவர், அடுத்து கிருஷ்ணனுக்கு அழைத்திருந்தார். ” என்ன செய்வது?” என்று கேட்பதற்காக …
ஆனால் அவரோ எடுக்கவில்லை, என்றதும் அவரது பதட்டம் அதிகமானது.
ஆனால் அவரைக் காப்பது போல் அந்த நேரம் விஸ்வரூபன் வீட்டிற்கு வந்தான்.
அங்கு கண்ட காட்சியை நம்ப முடியாமல் கண்ணை விழித்துப் பார்த்தான் விஸ்வரூபன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

