Loading

ருத்ரன் பல்லைக் கடித்துக் கொண்டு “எனக்குத் தெரியும்டி கேடிங்களா, நீங்க இல்லனா என்னோட மச்சான் இப்படி எடுத்த எடுப்பில் வீடியோ கால் வரமாட்டான்” என்று சொல்ல, இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

லேசாக போனைப் பிடித்துக் கீழே இறக்க அமுதன் சரவணன் மடியில் சிரித்துக் கொண்டிருந்தான்.

 

“என் தங்கக் குட்டி சித்தப்பாவைp பாக்கணும்னு நீங்க தான் போன் போட்டீங்களா?” என்று கேட்க,

 

அகிலாவும், காயத்ரியும் தன்னை மீறிch சிரித்து விட்டார்கள்.

 

“இப்போ, எங்க ரெண்டு பேர் கிட்டயும் முகத்தைக் காமிக்கும்போது கொடூரமா வச்சிட்டு இருந்த, புள்ளகிட்ட வந்த உடனே சிரிச்ச முகமா பேசுற, எப்படி மாமா? ஆனாலும், செம்ம ஆள் மாமா நீ… நிமிஷத்துக்கு நிமிஷம் ரியாக்ஷன் கொடுக்கிற” என்று இருவரும் ஒரே போல் கவுண்டர் கொடுக்க,

 

“உங்கள மாதிரி மச்சினிச்சி வச்சிருந்தா எங்க இருந்துடி வாழ” என்றான்.

 

“எது, ஏதோ நீ பெருசா வாழ்ந்து கிழிச்சிட்ட மாதிரியும், அத வந்து நாங்க ரெண்டு பேரும் பாயை விரிச்சிப் படுத்துக் கெடுத்துட்ட மாதிரியும் இல்ல பேசுற… அங்கேயே ஒன்னும் வாழல” என்று காயத்ரி சொல்ல,

 

“வாயேன், பாயை விரிச்சுப் படுத்துக்கலாம். இந்தப் பக்கம் அக்கா, இந்தப் பக்கம் தங்கச்சி” என்றான் ருத்ரன்.

 

தமிழ் அவனது தலையில் கொட்ட, “இவ்வளவு நேரம் உன் தங்கச்சி பேசினா, அப்ப வாயி திறக்காது” என்றான்.

 

“அவளை நான் ஊருக்குப் போய் பார்த்துக்குறேன் மாமா” என்று தமிழ் சொல்ல,

 

“அது எதுக்கு தமிழ், நீ வேற ஊருக்கு வந்து பார்த்துகிட்டு, எங்க மாமா என்னை இங்கேயே நல்லா தான் பாத்துக்குறாரு” என்று காயத்ரி சிரிக்க,

 

“என்ன மாமா, உண்மையாவே உன் முகத்தில் ஏதோ ஒளிவட்டம் வீசுது” என்று காயத்ரி அவனை உற்றுப் பார்க்க, “ஏண்டி சொல்ல மாட்டீங்க?” என்று சிரித்தான்.

 

“சரி சரி அத விடு, சிம்லால என்ன சுத்திப் பார்த்த இப்ப எங்க இருக்க?” என்று விட்டு “ஆமா, எங்க இருக்கீங்க? இது எதுவும் பிளேஸ் மாதிரித் தெரியலையே… ரூம்ல உட்கார்ந்து இருக்கீங்க போல… இதுக்குத்தான் இங்க இருந்து காசை வேஸ்ட் பண்ணிக் கிளம்புனீங்களோ, புருஷனும் பொண்டாட்டியும், அந்த ரூமை சுத்திப் பார்க்க…

 

அதை இங்க வீட்டில் இருக்கிற ரூமையே சுத்திப் பார்த்து இருக்க வேண்டியதுதானே” என்று கேட்க, அதன் பிறகு தான் சரவணனும், அகிலாவும் வீடியோ காலில் எட்டிப் பார்த்தவர்கள்,

 

இருவரும் ரூமில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டு, “என்னடா மச்சான், ஏன்?” என்று விட்டு தனது நண்பனின் கண்ணை இப்பொழுது சீரியஸாக உற்றுப் பார்க்க,.

தனது மொத்தச் சந்தோஷத்தையும் தனது கண்ணில் திரட்டிய ருத்ரன் தனது நண்பனைப் பார்த்துச் சிரிக்க, அவனது கண்கள் சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்த சரவணன், “சரி நீங்க பேசுங்க, எனக்குக் கொஞ்சம் காட்டுல வேலை இருக்கு” என்று விட்டு எழுந்து செல்ல,

 

“டேய் அண்ணா, ஃபோனே உன்னோடது தான். நீ மாட்டும் கிளம்புற” என்று காயத்ரி கேட்க,

 

“அந்த போன்ல என்ன பெருசா இருக்கப் போகுது. நமக்கு யார் போன் பண்ணப் போறா. போன் பண்ண வேண்டியவனும் அங்க போய் பொண்டாட்டி கூட இருக்கான்” என்று சொல்ல,

 

“பொண்டாட்டி கூட தான் இருக்காரு, ஆனா…” என்று இழுக்க,

 

“அதெல்லாம் சந்தோஷமா தான் இருக்கான்” என்று சொல்லிய சரவணன் தனது தங்கைகளைப் பார்த்துச் சிரிக்க, அவனது கண்கள் கலங்கி இருந்தது.

 

வேகமாகத் தனது மாமாவைப் பார்த்த காயத்ரி, “சரி மாமா நீ பாரு” என்று சொல்ல,

 

“கேடி கேடி கட் பண்ணாத” என்றான். “என்ன மாமா?” என்று கேட்க,

 

“உன் அண்ணனைப் பத்திரமா பார்த்துக்கோ” என்று சொல்ல,

 

“இங்க யாரும் இல்ல, நாங்க மட்டும் தான் இருக்கோம். அகி அக்கா, நான் மட்டும் தான் இருக்கோம். அகிலா அக்கா இங்க வரேன்னு சொன்னுச்சு. எனக்கும் தம்பியப் பாக்கணும் போல இருந்துச்சுன்னு வந்தேன்” என்று சொல்ல,

 

“எங்க உன் பிரண்டு?” என்று கேட்டான்.

 

“அவ எங்க இங்க இருக்கா?”

 

“யார் கூட உட்கார்ந்து பேசுறாங்கனு கூட உனக்குத் தெரியல.”

 

“அவ இந்தப் பக்கம் வந்துட்டாலும், நல்ல நாளிலேயே வரமாட்டா. அண்ணா இருக்குன்னு தெரிஞ்சா வருவாளா?” என்று நொடிந்து கொண்டாள்.

 

“ஆனா, இதே தனா தான அன்னைக்கு உன்னை போன் போட்டுத் தரச் சொல்லி தனியா பேசணும்னு ஆசைப்பட்டா” என்று கேட்டான்

 

“அன்னைக்கு ஏதோ ஆர்வக் கோளாறுல பண்ணிட்டா. அன்னைக்கு அவ வாங்கின டோஸ் அவளுக்குத் தானே தெரியும்” என்று சிரிக்க,

 

சிரித்த ருத்ரன், “உன் அண்ணனிடம் ஃபோனை கொடு” என்றான்.

 

“என்கிட்ட எல்லாம் பேச மாட்டியோ?” காயத்ரி விளையாட்டாகக் கேட்க,

 

“லூசு கொடு” என்றவுடன் தனது கண்ணீரைத் துடைத்த சரவணன் வீடியோ காலில் வர,

 

“மச்சான், நான் ஊருக்கு வரும்போது எனக்குப் பெருசா என்ன வாங்கி வச்சிருக்க?” என்று கேட்க,

 

“நீ வா மச்சான், உனக்குத் தலை வாழை இலை போட்டு விருந்தே வைத்து விடுகிறேன். என் மச்சானுக்கு இல்லாததா?” என்று சிரித்த சரவணன்,

 

“சரிடா உண்மையாவே காட்டுல தண்ணி கட்டணும். இதுங்க ரெண்டும் போன் பண்ணி அவசரமா வரச் சொன்னதால, என்னமோ ஏதோ என்று நினைச்சுட்டு வந்தேன். இந்த ரெண்டு லூசுகளும், என்ன ஆளுக்கு ஒரு பக்கம் கையப் புடிச்சு வச்சுட்டு தான், வீடியோ கால்லயே வந்துச்சுங்க” என்று சொல்ல,

 

அது உண்மை என்பதை உணர்ந்த ருத்ரனும், “சரிடா மச்சான், நீ பாரு” என்று சொல்ல, “மாமா நாங்களும் அப்புறமா பேசறோம். நீ உன் வேலையைக் கண்டினியூ பண்ணு” என்று சிரிக்க,

 

வேகமாக வீடியோ காலில் நுழைந்த அகிலா, “மாமா நான் சொன்னது ஞாபகத்துல இருக்குல்ல, அடுத்த மாசம் ரெடி பண்ணிடுவ இல்ல. ஸ்பீடா வேலை செய்யணும் குமாரு” என்று விட்டு, அவன் அந்தப் பக்கம் திட்ட வருவதற்குள் போனை கட் பண்ணி விட்டாள்.

 

இங்கு சரவணன் தனது இரண்டு தங்கைகளின் தலையிலும் கொட்டியவன்,

 

“பொம்பளப் புள்ள மாதிரிப் பேசிப் பழகுங்க. யாராச்சும் கேட்டா என்ன ஆகிறது?” என்று திட்டிவிட்டுத் தனது தங்கையின் கையில் இருக்கும் போனை புடுங்கிக் கொண்டு அவனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப, எதிரில் தனா வந்து நின்றாள். ஒரு சில நொடி அவளைப் பார்த்தவன் வண்டியை நிறுத்தினான்.

 

அவளும் திருதிருவென முழித்துக் கொண்டு நிற்க, “அண்ணா, வராதவ வந்து இருக்கா, என்னன்னு கேட்டுப் போறது” என்றார்கள் அகிலாவும், காயத்ரியும்.

 

“அதான் ஒன்னுக்கு ரெண்டு நாத்தனார் இருக்கீங்களே, என்னன்னு கேளுங்க எனக்கு வேலை இருக்கு” என்று தனாவைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு சரோ கிளம்பி விட,

 

இங்கு தனாவிற்கு தான் உள்ளுக்குள் உடல் சிலிர்த்து அடங்கியது.

 

‘நான் சின்னப் புள்ளன்னு சொல்லி என்னை விட்டு ஒதுங்கிய மாமாவா?’ இது என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு தனது துப்பட்டாவைக் கைகளில் சுற்றிக்கொண்டு இருவரும் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

 

“என்னம்மா அதிசயமா இந்தப் பக்கம் காற்று வீசுது?” என்று அகிலா கேட்க,

 

“என் மாமா வீட்டுக்கு வரதுக்கு நான் எதுக்கு அண்ணி உங்ககிட்டப் பதில் சொல்லணும்?” என்று தனா சொல்ல,

 

“அப்படிக் கேளுடி ராசாத்தி, மாமா வீடுனு சொல்லாதே, என் வீடுன்னு உரிமையா கேளு” என்று அப்போதுதான் வெளியில் வந்த இளவரசி சொல்ல,

 

“ரொம்ப தான்” என்று அகிலா நொடிந்து கொண்டாள்.

 

“அது சரி, இப்பவே இவ வீடாம்ல. அப்போ நான் எங்க போறது? என்று கேட்க,

 

“இது இனிமே உனக்கு அம்மாவோட அப்பாவோட வீடு தான்டி  என் வீட்டுக்கு ஒரு மகராசி வந்ததுக்கப்புறம் உனக்கு என்னடி இங்க வேலை?” என்று சொல்ல,

 

வேகமாக தனா தான், “என்ன அத்தை, இப்படிச் சொல்றீங்க, அண்ணிக்கு இல்லாத உரிமையா?” என்று சொல்ல,

 

அகிலா சிரித்த முகமாக, “லூசு, அம்மா தான் விளையாட்டுக்குச் சொல்லுது. நீ எந்த நேரம் பார்த்தாலும் சீரியஸாவே சுத்தாத… அது சரி, போகும்போது அண்ணா என்ன சொல்லிட்டுப் போச்சு. தனியா ஏதோ கண்ணால சேதி சொன்ன மாதிரி இருக்கு” என்று சொல்ல,

 

தனா சிரித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

“அம்மா உன் மகன் ஏதோ கொஞ்சம் தேறிட்டான் போல” என்று அகிலா சிரிக்க,

 

“லூசு, உன்னுடைய அண்ணன்டி. வயசுப் பிள்ளைங்க மாதிரி நடந்துக்குங்கடி” என்று தன் மகள், தனது கொழுந்தனார் மகள் தலையிலும் கொட்டிய இளவரசி வீட்டுக்குள்ள வாங்கடி. ரொம்ப நேரமா வெளியவே உட்கார்ந்து அரட்டை அடிக்க வேண்டியது” என்று விட்டு உள்ளே சென்றார் இளவரசி.

 

தனா சிறிது நேரம் பேசிவிட்டுக் கையோடு காயத்ரியையும் அழைத்துக் கொண்டு தங்களது வீட்டிற்குச் சென்று விட்டாள்.

 

இரவு ருத்ரன் வீட்டில் உள்ள அனைவருக்கும் போன் செய்து பேச, அனைவரிடமும் என்ன விஷயம் என்று அவன் சொல்லவில்லை. என்றாலும், அவன் குரலில் உள்ள சந்தோஷத்தை வைத்து இருவரும் சந்தோஷமாகத் தனது வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என்று எண்ணி விட்டு அமைதியாகி விட்டார்கள்.

 

ருத்ரனும், தமிழும் 5 நாள்கள் அங்குச் சந்தோஷமாக இருந்துவிட்டுத் தங்களது வாழ்க்கையையும் ஆரம்பித்துவிட்டு, சிம்லாவையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஐந்து நாள்களுக்குப் பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு சில பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களது சொந்த இருப்பிடத்தை நோக்கி வந்தார்கள்.

 

ருத்ரன் வேகமாகத் தனது மச்சானைக் கட்டிக்கொண்டு சிரிக்க, சரவணனின் கண்கள் கலங்கி இருந்தது.

 

“ஒன்னும் இல்லடா மச்சான்” என்று சிரித்த சரோ, “தங்கச்சின்னு நினைச்சு என்னைக் கட்டிப் பிடிசிட்ட போல” என்று சரவணன் சிரிக்க,

 

“படுபாவி, இந்த ரெண்டு குட்டிப் பிசாசு கூடவும் சேராதன்னு சொன்னா கேக்குறியா?” என்று தனது மச்சான் தோளில் தட்டியவன், தனது இரண்டு மச்சினிச்சிகளையும் பார்க்க, இருவரும் முறைத்துக் கொண்டு நின்றார்கள். “என்னடி?” என்று கேட்க,

 

“உன் மச்சானை மட்டும் வேகமா வந்து கட்டிப் பிடிக்கிற? உன்னையே நினைச்சு, இங்க ஏங்கி உடல் இளைத்துப் போய் இருக்க எங்களைக் கண்டுக்கவே மாட்டேங்குற” என்று இருவரும் ஒரே போல் சொல்ல, சுற்றிப் பார்த்த ருத்ரன் வீட்டில் அனைவரும், இருவரையும் முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு வேகமாகவே சிரித்து விட்டான்.

 

“அச்சோ, மண்டையில இருக்க கொண்டையை மறந்துட்டோம். நம்ம மட்டும் இருக்க ஞாபகத்துல சொல்லித் தொலச்சுட்டோமே” என்று இருவரும் பேந்தப் பேந்த முழிக்க,

 

“அகிலாவின் அருகில் வந்து அவள் தலையில் கொட்டிய மகி, “அப்போ உன் மாமாவையே கட்டிட்டு இருக்க வேண்டியதுதானே? என்ன எதுக்குடி கட்டிக்கிட்ட?” என்று முறைத்துக் கொண்டு கேட்க,

 

“சாரி மகி” என்று லேசாக வழிந்து கொண்டே சிரித்தாள்.

 

“லூசு அகி, சும்மாதான் கேட்டேன். நீங்க விளையாட்டுக்குப் பேசுறீங்களா, இல்லலையானு கூடவா எனக்குத் தெரியாது” என்று சிரித்தான்.

 

“சரி சகல, போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுச்சு போல.” மகி சிரித்த முகமாகக் கேட்க,

 

“அதுக்கு என்ன சகல, அதெல்லாம் அமோகமா முடிஞ்சிடுச்சு” என்று அவனது கையில் தட்டிக் கொடுத்த ருத்ரன் சிரிக்க, தமிழ்தான் சங்கடமாக உணர்ந்தாள்.

 

“இதுல என்ன இருக்கு தமிழ், எப்பயும் போல இரு. என்னை வேற ஆள் மாதிரி நினைக்கறியா? உன்னோட பர்சனலை என்கிட்ட நார்மலா ஷேர் பண்றது உனக்குப் புடிக்கலையா?” என்று மகி கேட்க,

 

“அப்படிலாம் இல்ல மகி. நான் பேசலனாலும், மாமா பேசலனாலும் அகி உங்ககிட்ட எதையும் மறைக்காம சொல்லதானே போறா” என்று சிரித்தாள்.

 

“அப்புறம் என்ன, ஃப்ரீயா விடு” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான் மகி.

 

“கல்யாண வேலை எல்லாம் எந்த அளவுக்கு போயிட்டு இருக்கு?” என்று ருத்ரன் கேட்க,

 

“வந்ததும் வராததுமா…” என்று சரவணன் கேட்க, தனது மச்சானை முறைத்தவன், தனது இரண்டு மாமாக்களையும் பார்க்க,

 

“இன்னும் பத்து நாள்ல கல்யாணம். முக்கால்வாசி வேலை முடிச்சாச்சு. சரியாப்பா… உங்க பக்கம் இருக்க நெருங்கின சொந்தத்துக்கு மட்டும் நீயும், தமிழும், நேர்ல போயி பத்திரிகை வச்சிட்டு வந்தா வேலை முடிச்சிடும்.

 

ரெண்டு பேருமே வேலைக்குப் போறதால சாயங்கால நேரத்தில் கொடுங்க. கல்யாணத்துக்கு அஞ்சு நாளைக்கு முன்னாடி ரெண்டு பேரும் லீவ் போட்டீங்கன்னா, நம்ம ஊரு முழுக்கப் பத்திரிகை கொடுக்க சரியா இருக்கும்.

 

இப்பவும் சொல்றேன், உங்க பக்கம் இருந்து நீங்கதான் பத்திரிகை கொடுக்கணும்” என்று முனுசாமி எடுத்துச் சொல்ல,

 

“ஏன் மாமா, உங்க தம்பி எதையும் செய்ய மாட்டாரோ?” என்று ருத்ரன் கேட்க,

 

முனுசாமியின் பார்வை தனாவின் பக்கம் செல்ல, தனாவின் கண்கள் அலை பாய்ந்து கொண்டு இருந்தது.

 

தமிழ் சிரித்த முகமாகத் தனாவின் அருகில் வந்தவள், “உன்னோட கல்யாணத்தை முழுசா எடுத்து நடத்தப் போறது நான்தான். அதே போல உன் அண்ணனும், அந்த உரிமையை எப்பவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் விளையாட்டுக்கு தான் கேட்டாரு, சரியா? அப்பாவும் அம்மாவும் என்னதான் பெரியப்பா பக்கம் நின்னு மாப்பிள்ளை வீட்டு சார்பாக செஞ்சாலும்,

 

நாங்க என்ன செய்யணும் அப்படின்னு எங்களுக்கு வழி நடத்திட்டு தான் இருக்கச் செய்கிறார்கள். அது மட்டும் இல்லாம உன் பிரண்டும் முழுக்க முழுக்க உன் பக்கம் மட்டும் தான். நானும் சரி, உன் அண்ணனும் சரி எப்பவும் உன் பக்கம் தான்” என்று சிரிக்க,

 

காயத்ரி தோழியைப் பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு, அவளது கழுத்தில் மாலையாகத் தனது கையைப் போட்டவள், அவளது தலையோடு முட்டிவிட்டு, “என் தனு செல்லத்துக்கு என்ன கோபமா?” என்று கேட்க,

 

அவளது கண்கள் தன்னையும் மீறிச் சரவணனைப் பார்க்க,

 

இங்கு சரோவிற்கு தான் புரை ஏறியது.

 

தனது மச்சான் ஏதோ கேடி வேலை பார்த்திருக்கிறான் என்பதை உணர்ந்த ருத்ரன், சரவணனைப் பார்த்துச் சிரித்துவிட்டு அமைதியாக வீட்டிற்குள் சென்று விட்டான்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்