
பூகம்பம் – 12
ஆதிரா திகைத்து கத்துவாள் என்று நினைத்த துருவினியின் எண்ணத்தை பொய்யாக்கி எவ்வித திகைப்பான பாவனையுமின்றி “அப்படியா.? வாழ்த்துக்கள் பேபி.. மறக்காம டிரீட் வெச்சிரு” என்றதோடு நிற்காமல் தங்கையின் கையை பிடித்தும் குலுக்கினாள்.
கடைசியில் துருவினி தான் அதிர்ந்த நிலைக்கு சென்று ஆதிராவை ஙே வென விழித்து பார்க்க, அவள் தன்னிடம் விளையாட நினைக்கிறாள் என்பதை முதலிலே ஆதிராவும் உணர்ந்திருந்ததால் தான் சாதாரணமாக பதிலளித்தாள்.
“நீ என்ன சொன்ன.?” – துருவினி
“டிரீட் வெக்க சொன்னேன் பிசாசே” – ஆதிரா
“எதே.?” – துருவினி
“புஜ்ஜிமா காதலிக்கறது தப்பு இல்லமா..” என்று ஆதிரா பேச்சை தொடங்கிய நேரம் சரியாக காவ்யாவும் அங்கு வந்தாள்.
“என்னடி.? என்னமோ காதல்னு பேசிட்டு இருந்த.? யாரு காதலிக்கறது.?” என்று கேட்ட காவ்யா அவர்களின் அருகில் அமர்ந்திட, “அட வா வா காவு.. நம்ம துரு தங்கம் லவ் பண்ணுதாமா.. இப்பதான் என்கிட்டயே சொன்னா..” என்றதும் காவ்யா வாயை பிளக்க, கண்ணடித்து சிரித்தாள் ஆதிரா.
அதன்பிறகு தான் அது பொய்யென்று உணர்ந்த காவ்யா ஓஹோ என்று கேலியுடன் “வாவ் வாழ்த்துக்கள் தங்கமே.. நீதான் முதல்ல கமிட் ஆகிருக்க.. சோ அக்காக்கு மறக்காம டிரீட் வெச்சிரு..” என்றவாறு கன்னத்தை கிள்ளினாள்.
“இங்க பாரு புஜ்ஜிமா.. காதலிக்கறது தப்பு இல்ல..” – ஆதிரா
“அதைய மறைக்கறதும் தப்பு இல்ல தங்கம்..” – காவ்யா
“ஆனா அந்த காதலுக்காக நீதான் போராடணும்..” – ஆதிரா
“ஆமா தங்கம்.. வீட்டுல வேணாம்னு தான் சொல்லுவாங்க..” – காவ்யா
“ஏன் நாலு மிதியும் கூட இலவச இணைப்பா குடுப்பாங்க..” – ஆதிரா
“அதைய எல்லாம் தாங்கிட்டு அவங்க தான் வேணும்னு அடம்பிடிச்சு சம்மதம் வாங்கணும்..” – காவ்யா
“உன் கல்யாணத்துக்கு கையெழுத்து போட கூட நான் வர்றேன்..” – ஆதிரா
“ம்ம்ம்ம் ஆமாடா.. அதுவும் வீட்டுக்கு தெரியாம வந்து உன் கல்யாணத்தை நடத்தி வெப்போம்..” – காவ்யா
“அதுக்கு பதிலா உன் பேபிக்கு எங்க பேரை வைக்கணும்..” – ஆதிரா
“ஆமா தங்கம்.. நாங்க செஞ்ச உதவிக்கு பரிகாரமா உன் குழந்தைக்கு எங்க பேரை வெச்சு எங்களைய நீ பூஜிக்கணும்..” – காவ்யா
“யூ டோண்ட் வொர்ரி புஜ்ஜிமா.. நாங்க இருக்க பயமேன்” என்ற ஆதிரா தங்கையை அணைக்க, அதில் தான் சிலைக்கு உயிர் வந்ததை போல் பக்கென்று திகைப்பில் இருந்து முழித்த துருவினி “நீங்க இருக்கறது தான்டி எனக்கு பயமா இருக்கு” என்றாள் கதறலுடன்.
“பாவி பாவி நான் ஒரு வார்த்தை தான் சொன்னேன் நீங்க என்னடானா என் குழந்தை வரைக்கும் போயிட்டீங்க.. விட்டா நீங்களே என்னைய எவன் கூடயோ துரத்தி விட்டுருவீங்க போல” என்று மூச்சு வாங்க பொரிந்தாள் துருவினி.
“அப்படி இல்ல தங்கம்..” என்று பேச வந்த காவ்யாவை விடாமல் “வேணாம் தெய்வமே.. நான் எவனையும் லவ் பண்ணல.. நல்லா இருக்கற என்னைய வீட்டுல செருப்படி வாங்க வெச்சராதீங்க” என்று பதறினாள்.
“அப்ப உன் லவ்வு..” – ஆதிரா
“நான் எப்ப லவ் பண்ணுனேன்..” – துருவினி
“இப்ப நீதான்டி சொன்ன.?” – ஆதிரா
“நீ எல்லாம் அக்காவா.?” – துருவினி
“எஸ் பேபி மீ அக்கா.. யூ தங்கச்சி.. இதுல என்ன டவுட்டு.?” – ஆதிரா
“எல்லாமே சந்தேகம் தான்.. நான் நேராகவே கேட்கறேன்.. எப்ப இருந்து நீ ரூபன் ப்ரோ கூட பேசிட்டு இருக்க.?” என்று இடுப்பில் கை வைத்து துருவினி வினவ, “ரூபனா.? அது யாருடி.?” என்று எதுவும் புரியாத பாவனையில் கேட்டாள் ஆதிரா.
‘அடிப்பாவி என்னமா நடிக்கறா.. நடிகர் திலகத்துக்கே டஃப் குடுத்துருவா போல..’ என்று உள்ளுக்குள் காவ்யா திகைத்தாலும் “யாருடி அது.?” என்று புரியாதது போல் ஆதிராவிடம் வினவினாள்.
“எனக்கும் தெரில காவு.. இவளுக்கு என்னமோ ஆகிருச்சு.. ஒருவேளை கனவு கண்டுட்டு வந்து பேசறாளோ.?” என்று அப்படியே திருப்பி துருவினியை குழப்பி விட்டு “துரு தங்கம் என்னமா ஆச்சு.? அக்காவை பத்தி ஏதாவது கனவு கண்டீயா.? அதுலயாவது நான் மிங்கிளா இருந்தனா.? இல்ல இப்படி சிங்கிளா இருந்தனா.?” என்று கேட்டு பாசமாக அவளின் தலையை வருடினாள்.
ஆதிராவின் பேச்சில் துருவினிக்கு ஒன்றும் புரியவில்லை.. தான் கண்டது நிஜமா.? என்று யோசித்து குழப்ப நிலைக்கே சென்றிருந்தாள்.
இன்னும் இங்கிருந்தால் தன்னை பைத்தியமாக்காமல் விட மாட்டார்கள் என்பதை அறிந்து “ச்சீ போங்கடி” என்று கோவமாக செல்வதை போல் துருவினி ஓடி விட, இவ்வளவு நேரம் சிரிக்காமல் நடித்திருந்த இருவரும் வாய்விட்டு சிரித்து ஹைபை குடுத்தனர்.
“அய்யோ அய்யோ பாவம்டி புள்ள..” – காவ்யா
“பெரிய சிபிஐனு நினைப்பு.. என்னைய கண்டுபிடிக்க வந்துட்டா..” – ஆதிரா
“ஹஹஹஹ உன் முடிவுல நீ உறுதியா இருக்கறப்ப துரு கிட்ட சொல்றதுக்கு என்னடி.?” – காவ்யா
“அட போ லூசு.. இங்க நான்தான் அவன் வேணும்னு நிற்கறேன்.. அவன் மனசுல என்ன இருக்குனு இப்ப வரைக்கும் தெரிலடி.. இந்த லட்சணத்துல நான் எப்படி இவகிட்ட சொல்றது.?” – ஆதிரா
“அவங்க பேசுனாங்களா.?” – காவ்யா
“இல்லவே இல்லடி.. அன்னைக்கு நான் நிஜமா பேசுவீங்களானு கேட்டப்ப என்னைய நம்ப மாட்டியானு எல்லாம் கேட்டாங்கடி” – ஆதிரா
“ஹஹஹ புலம்பு புலம்பு.. இன்னும் புலம்பு.. கேட்கவே எனக்கு சந்தோசமா இருக்கு..” – காவ்யா
‘அடிப்பாவி’ என்று தலையணையை எடுத்து அவளை ஆதிரா மொத்திட, “நீ அடிச்சாலும் உதைச்சாலும் நோ ப்ராப்ளம் திரா செல்லம்” என்று அவளுக்கு போக்கு காட்டி சிரித்தாள் காவ்யா.
“முதல்ல என் லவ்வு செட்டாகட்டும்.. அப்பறம் உன்னைய பார்த்துக்கறேன்” என்ற ஆதிரா முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.
“நீ எப்படி வேணாலும் இரு.. அது எல்லாம் எனக்கு கவலையில்ல” – காவ்யா
“ஆமா நீ மொதல்ல எதுக்கு இங்க வந்த.?” – ஆதிரா
“அடிப்பாவி வீட்டுக்கு வந்தவ கிட்ட கேட்கற கேள்வியா இது.?” – காவ்யா
“நடிக்காம என்ன விசயம்னு சொல்லு” – ஆதிரா
“கொடுமையின் உச்சம்.. ரெண்டு நாளைக்கு முன்னாடி ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இந்த மன்த்ல ஒரு நாள் ஊட்டிக்கு போலாம்னு ப்ளான் பண்ணிருக்காங்கடி” – காவ்யா
“வாவ் குட் நியூஸ்” – ஆதிரா
“ஐடியா குடுத்தது ரஞ்சித்” – காவ்யா
“பேட் நியூஸ்” – ஆதிரா
“அதான் போலாமா.? வேணாமானு யோசிக்க வந்தேன்” – ஆதிரா
‘எதே.? இவ யோசிக்க வந்தாளா.?’ என்று பைத்தியத்தை போல் அவளை பார்த்த ஆதிரா “ஏன் மேடம் அங்க இருந்து யோசிச்சா உங்க மூளை யோசிக்க மாட்டேனு அடம் பிடிக்குதா.?” என்று கேட்டாள் நக்கலுடன்.
“அப்கோர்ஸ்” – காவ்யா
“த்துதுது” – ஆதிரா
“நீ இல்லாம நான் எங்கடி போயிருக்கேன்.. சொல்லு போலாமா.? வேணாமா.?” – காவ்யா
“எதுக்கு நம்ம ரஞ்சித்தை கண்டு பயப்படணும்.? போலாம்டி போய் என்ஜாய் பண்ணலாம்” – ஆதிரா
“டன் டன் டன்” என்று மகிழ்ச்சியில் ஆதிராவை அணைத்து கொண்டு காவ்யா சுற்ற, “அட லூசே” என்று அவளை விலக்க முயற்சிப்பதை போல் நடித்த ஆதிராவுக்கும் ஏகப்போக ஆனந்தமே.
பாட்டிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் தான் தாயும் மகனும் பெங்களூருக்கு கிளம்பினர். நிலத்தை பற்றி வேலுச்சாமியிடம் பேசுகிறேன் என்று நின்ற சிவாவையும் வீரச்சாமியையும் சமாளிக்கவே அவன் வழியாகி இருந்தான்.
அது தன் உரிமை என்று மனது எடுத்துரைத்தாலும் ஏனோ அவர்களிடம் சண்டையிட்டு வாங்கவும் மனதில்லாமல் இருந்தது. இருக்கும் காலம் வரை தந்தையின் ஒரு ரத்தபந்த உறவிடம் சொந்தமாக இருந்து விடலாம் என்பது தான் அவன் மறுக்க முதல் காரணம்.
விடுமுறை எடுத்ததால் பெங்களூருக்கு சென்றதும் வேலை விடாமல் அவனை துரத்திட, உறங்குவதற்கும் நேரமின்றி வேலை வேலையென ஓடி கொண்டிருந்தான்.
அவ்வப்போது ஆதிராவின் ஞாபகங்களும் அவனுள் எழும். ஆனால் அவளிடம் பேச நேரமின்றி வேலையே அவனை ஆட்கொள்ள, அவனும் என்னதான் செய்வான்.?
இரண்டு வாரங்களுக்கு பின்னர் மாலை நேரத்தில் சாய்வு நாற்காலியில் காப்பி கோப்பையுடன் சாய்ந்து அமர்ந்திருந்த ஆடவனின் விழிகள் சூரியன் மறையும் காட்சியில் பதிந்திருந்தாலும் எண்ணம் அனைத்தும் பெண்ணவளை பற்றியே சுற்றியது.
‘பேசறேனு சொல்லிட்டு பேசாம விட்டுட்டனே.? என்ன நினைப்பாங்க.?’ என்று பலவித வினாக்கள் அவனின் மூளையை குடைந்தது.
“ஹாய்மா” என்று அனுப்பி விட்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தான். நேரங்கள் தான் கடந்து சென்றதே தவிர எதிர்மொழி வராமல் போக, “சாரிமா பாட்டி இறப்பு.. வேலைனு ரொம்ப பிஸியாகிட்டேன்” என்று தன்னிலையை உரைத்து மன்னிப்பும் வேண்டினான்.
ஆதிரா பதிலுரைக்க ஆன்லைனில் இல்லையே.. அவள் தான் பெற்றோருடன் கோவிலுக்கு சென்றிருக்க, வீட்டிற்கு வந்ததும் தான் ஆடவனின் குறுஞ்செய்தியை இமைகள் சிமிட்டா வண்ணம் கண்டவளுக்கு சொல்லவொண்ணா சந்தோஷம்.
“சாரி நான் கோவிலுக்கு போய்ட்டேன்” என்று தன்னிலையை இவளும் எடுத்துரைத்து ஆடவனின் வார்த்தைக்காக காத்திருக்க, அப்போது தான் உண்டு விட்டு பால்கனிக்கு வந்தவன் அந்நேரத்தில் அவன் ஆதியின் குறுஞ்செய்தியை எதிர்பார்க்கவில்லை.
“பரவால்லமா.. எப்படி இருக்கீங்க.? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க.?” – ரூபன்
“எல்லாரும் சூப்பரா இருக்கோம்.. நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கீங்க.?” – ஆதிரா
“நல்லா இருக்கோம்டா..” – ரூபன்
“வேலை அதிகமா.?” – ஆதிரா
“ம்ம்ம் ஆமாடா.. லீவு எடுத்தேனு வெச்சு செஞ்சுட்டாங்க” – ரூபன்
“அச்சோ பாவம் தான் நீங்க” – ஆதிரா
“உங்க வொர்க் எப்படி போகுது.?” – ரூபன்
“அது பாட்டுக்கு போகுது.. பட் வீக் எண்ட்ல மட்டும் ஜாலியா இருக்குது” – ஆதிரா
“ம்ம்ம்ம் என்ஜாய்டா” – ரூபன்
“ம்ம்ம்ம்ம்” – ஆதிரா
“அப்பறம்..?” – ரூபன்
“ம்ம்ம்ம் அப்பறம்…?” – ஆதிரா
இருவரின் தவிப்பான மனநிலைக்கு இடையில் ‘அப்பறம்..?’ என்ற வார்த்தை சிக்கி தவிக்க, அதை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் இருவரும் இல்லை.
சட்டென்று ஆதிராவுக்கு துருவினி தன்னிடம் பேசியது ஞாபகம் வர, விளையாடி தான் பார்ப்போம் என்ற முடிவில் “ஐ திங்க்” என்று அனுப்பினாள்.
இதை பார்த்து ஒன்றும் புரியாமல் “என்னமா.?” என்று ரூபன் வினவ, ‘இவனை வெச்சுக்கிட்டு.? அய்யோ அய்யோ’ என்று கட்டலில் முட்டி கொண்டவள் மறுபடியும் “ஐ திங்க்..” என்றே அனுப்பினாள்.
“என்னமா.? என்னது.?” – ரூபன்
“ஐ திங்க்..” – ஆதிரா
“அட என்னமா ஆச்சு.?” – ரூபன்
“ப்ச் ஐ திங்க்..” – ஆதிரா
“சொல்லுமா என்ன.?” – ரூபன்
“ஐ லவ்…” என்று முழுவதையும் கூறாமல் பாதியாக அனுப்பி விட, ரூபனுக்கு தான் இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது. ‘வேணாம் ஆதி.. வேண்டாம்’ என்று நினைத்தவாறு பதற்றத்துடன் “என்னமா.?” என்றான் வினாக்குறியுடன்.
‘ச்சை இவன்கிட்ட போய் இப்படி பேசுனேன்ல.? என் தப்புதான்.. என்னமானு தவிர வேற ஏதாவது கேட்கறானா பாரு.?’ என்று தன்னவனை முடிந்
தளவுக்கு திட்டியவள் மறுபடியும் “ஐ லவ்..” என்று முடிக்காமல் அனுப்பி அவனின் இதயத்துடிப்பை எக்கச்சக்கமாக துடிக்க விட்டாள்.
காதலை கூறி விடுவாளோ.?
அழகிய பூகம்பம் தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

