
ஆர்யாவிற்காக பாழசாறுடன் உள்ளே வந்த தியா, அவன் பால்கனியில் நிற்பதை உணர்ந்து அங்கே வந்தவள் வானை வெறித்து கொண்டிருந்தவனின் தோலில் கைப்போட்டு “ஆர்யா நான் உனக்கு அக்காடா.. நீ யார்கிட்டனாலும் உன் உணர்வ மறைக்கலாம் என்கிட்ட முடியாது.. சோ மறைக்காம என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றவள், தன் கையிலிருந்த திறன்பேசியை காட்டி நம்முடைய ரகசியத்தை வெளியே கொட்டிவிடாதே என்று எச்சரிக்கையை பார்வை விடுக்க,
அதை புரிந்து கொண்டவனும் “மறைக்க எதுவுமே இல்லடி.. அதான் சொன்னேன்ல அந்த பிள்ளை என்ன நம்பி வந்திருக்கு அவளோட பெர்சனல் எனக்கே தெரியாது.. அப்படியிருக்கும் போது நான் என்னத்த சொல்லுறது”
“சரி நீ அவள எப்படி மீட் பண்ணின.. என்ன பேசி அவள உன் கூட கூட்டி வந்த”
“இங்க பாரு தியா.. ஏற்கனவே சொன்னேன்ல.. உன்கிட்ட பேசிட்டு இருக்கும் போது கால் அவசரமா கட் பண்ணினேன்ல அப்போ தான் அவ பின்னால லாரி வருறது தெரியாம சோகமா வந்தா நான் காப்பாத்தினேன்.. மத்தப்படி அவ என்கிட்ட எதுவுமே சொல்லல”
“ஆர்யா மறைக்காம உண்மைய சொல்லு.. நீ சொல்லுறதுல தான் அவ உயிர் அடங்கியிருக்கு என்றதும் பெருமூச்சுவிட்டவன்” அவர்களின் ரகசியம் தவிர்த்து நடந்த அனைத்தையும் கூறியவன், பெண்ணவள் கழுத்தில் தானே தாலி கட்டியதாகவும் அடித்து விட்டான்.
அவன் கூறியதை கேட்டு கண்கள் கலங்கி, அவனை அணைத்து கொண்டவள் “என்ன ஆர்யா இதெல்லாம் என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல” என்றவளை தன்னிடமிருந்து விலக்கியவன் “நீ தேவையில்லாம ஃபீல் பண்ணுவேன் தான் சொல்லல.. இப்போ நீ கேஸ்ன்னு சொல்லவும் என்னால மறுக்க முடியல” என்று கூறி கொண்டிருக்க,
இவர்கள் பேச்சை திறன்பேசியில் கேட்டு கொண்டிருந்த ஆடவர்கள் இருவருக்கும் கூட அவனை நினைத்து கவலையாகி விட, உடனே அவனை தேடி வந்தவர்கள் அவனை அணைத்து ஆறுதல் கூறினார்கள்.
பின் ஆர்யாவோ “இந்த விஷயம் நம்ம நாலு பேரு தவிர்த்து வேற யாருக்கும் தெரிய கூடாது.. அதோட இப்போ யாழிசை எனக்கு பொண்டாட்டி அவ வயித்துல வளருர குழந்தைக்கு நான் தான் அப்பா” என்க, மூவரும் அவனின் வார்த்தையை ஏற்று கொண்டனர்.
இப்போது ரேயனோ “ஆர்யா இப்போ உடனே யாழிசைய பாக்கணும்.. அவ மனசு வச்சா மட்டும் தான் கடத்தப்பட்ட ஆர் கடத்த போற பொண்ணுங்களையும் காப்பாத்த முடியும்..”
“எனக்கு புரியுது மாம்ஸ்.. பட் அவ எந்த வித ஸ்ட்ரேஸ் இல்லாம நீங்க கேக்குறதுக்கு பதில் சொன்னா ஓகே.. அப்படியில்லன்னா அவள எந்த விதத்துலயும் ஃபோர்ஸ் பண்ண கூடாது.. இது ஓகேனா நாளைக்கே அவள இங்க கூட்டிட்டு வரேன்” என்க, மூவரும் அவனுக்கு சம்மதமாக தலையாட்டினார்கள்.
பின் ருத்ரன் சூழ்நிலை மாற்றும் பொருட்டு, தன் சந்தேகத்தை முன்வைத்து “அது சரிடா சித்திரா உன் தங்கச்சி சோ நீ என்ன மாம்ஸ் கூப்பிடுற.. ஆனா ரேயன் எந்த முறைல மாமா”
“அது பழக்க தோஷம் மாம்ஸ்” என்றதில் தலையை சொரிந்த ருத்ரன் “எப்படி வந்தது.. அந்த தோஷம்” என்றவனின் பாவனையில் சிரித்த ஆர்யன்
“என்ன மாம்ஸ் தெரியாத மாதிரி கேட்டுகிட்டு ரே மாம்ஸ் தியாவோட எக்ஸ் லவ்வர்ல.. அப்போவே பழக்கத்துல மாம்ஸ்ன்னு கூப்பிட ஸ்டார்ட் பண்ணிட்டேன்” என்றவன் ரேயனை குற்ற பார்வை பார்க்க, தியாவோ ‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என்பது போல் தம்பியை முறைத்துவிட்டு நண்பனை பார்க்க, அவனோ பெண்ணவளின் பார்வையை தவிர்த்திருக்க, அவளுக்கு தான் ஒரு மாதிரியாகி விட்டது.
அதன் பின் அனைவரும் தன்னை இயல்பு நிலைக்கு மாற்றி கொள்ள, கீழே அனைவருடனும் இணைந்து உணவருந்த வந்த ஆர்யன் பரிமாறி கொண்டிருந்த முதியவரிடம் “சாரி பாட்டி.. ஏதோ டென்ஷன்ல உங்ககிட்ட பேசாம போயிட்டேன்.. தியா என்ன பத்தி சொல்லியிருப்பான்னு நினைக்கேன்”
“ஆமா ஆமா சொன்னா ரெண்டு வருஷத்துல இன்னைக்கு தான் இதையே சொல்லியிருக்கா.. இன்னும் என்ன ரகசியம்லாம் இருக்கோ தெரியல.. ஒருவேளை அவ சொந்த பாட்டியாயிருந்தா சொல்லியிருப்பாளோ என்னவோ” என்றதில் பாதி சாப்பாட்டியில் கையை கழுவிய தியா சித்திராவிடம் விளையாடி கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை பட்டென்று சாத்தினாள்.
அவளின் கோவம் புரிந்த ஆர்யாவோ “அப்போ நான் அமெரிக்காலயிருந்தேன் பாட்டி.. அவ அப்போயிருந்த நிலைல யாரையும் நம்பல பாட்டி.. அதோடு மறுபடியும் எந்த உறவு மேலயாவது நம்பிக்கை வச்சி ஏமாந்துருவோம்ன்னு தன்ன பத்தின எந்த விஷயமும் வெளியே தெரிய கூடாதுன்னு ஸ்ட்ராங்காயிருந்தா..” என்றவனின் பார்வை ரேயனை தொட்டு சென்று ருத்ரனிடம் நிலைத்து “ஏன் ருத் மாம்ஸ்க்கு கூட தெரியாது.. நான் கூட பெயருக்கு தான் தம்பி என்கிட்டயே கடமைக்கு தான் பேசுவா.. நான் கொஞ்ச நாள் முன்னாடி தான் இங்க வந்தேன்.. அப்போ தான் உங்கள பத்தி எல்லாம் என்கிட்ட சொன்னா” என்று முடித்திருக்க,
அதன் பிறகு அவர்களுடன் சிறிது நேரம் பேசியதிலே நன்றாக ஒன்றி விட்டான்.
தான் பேசியதை நினைத்து வருந்திய பட்டம்மாளோ பெண்ணவள் பாதி சாப்பாட்டில் எழுந்து போனதால் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கொஞ்சி தியாவிற்கு ஊட்டிவிட்டு சாப்பிட வைக்க,
யாழிசை அழைத்ததால் “சரி நாளைக்கு என் பொண்டாட்டியோட வந்து மீட் பண்றேன்” என்று அனைவரிடமும் கூறி குழந்தையின் நெற்றியில் இதழ் பதித்து “மாமா போயிட்டு வரேன்டா குட்டி” என்று மூவரிடமும் தலையசைத்து விடை பெற்றான்.
*****
மறுநாள் காலையில் யாழிசை கூட்டி கொண்டு கிளம்பியவன், முந்தைய நாள் இரவே அனைத்தையும் விளக்கியிருக்க, ஏனோ ஒப்புக்கொண்டாலும் பெண்ணவளை பயம் ஆட்கொள்ள கையை பிசைந்தப்படியே அமர்ந்திருந்தாள்.
அதை கண்டு கொண்ட ஆர்யாவோ “யாழிசை நீ பயப்பட ஒன்னும் இல்ல எல்லாமே நம்ம ஆளுங்க தான்.. உனக்கு நடந்த பிராப்ளமும் பத்தி விசாரிப்பாங்க நீ சொல்ல போற பதில தான் மத்த பொண்ணுங்கள பாதுகாக்க முடியும்..” என்றவாறே காரை வீட்டியின் முன் நிறுத்தி இறங்க, பெண்ணவளும் பெருமூச்சுவிட்டு இறங்கி கொண்டாள்.
அனைவருமே இவர்களின் வருகைக்காக காத்திருக்க, தியாவின் கூற்றுப்படி பாட்டி இருவருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்க, சித்திரா தான் தோழியின் அவதாரத்தில் அதிர்ந்து விட்டாள்.
அதன் பின் இருவரையும் உபசரித்து முடிய ஐவரும் தியாவின் அறையில் ஆஜராகினார்கள்.
பெண்ணவள் தன்னை சுற்றி உள்ளவர்களை கண்டு மிரட்சியாக அமர்ந்திருக்க ரேயனோ தியாவிற்கு கண்ணை காட்ட, அதன் அர்த்தம் புரிந்து குரலை செருமிய தியா, பெண்ணவளின் கையை பற்றி “யாழிசை தைரியமா என்ன நடந்துச்சுன்னு சொல்லு.. உன்ன சுத்தி நிறைய ஆபத்து இருக்கு.. நீ சொல்லுறத பொறுத்து தான் உன்னையும் மத்தவங்களையும் வெளிய கொண்டு வர முடியும்” என்றதும் யாழிசை எதிரே நிற்கும் ஆர்யாவை பார்க்க,
அவனோ ‘நான் இருக்கேன் தைரியமா சொல்லு’ என்பது போல் கண்களை மூடி திறந்து பெண்ணவளுக்கு தைரியம் அளிக்க,
அதில் கண்களை மூடி தன்னை நிதானித்த யாழிசை “ஒன் மந்த் முன்ன என்கூட ஹோம்லயிருந்த அக்காவுக்கு மேரேஜ் பெருசா நான் அந்த அக்கா கூட அட்டாச் இல்லைனாலும் பாக்குற நேரம் பேசிப்போம் அவங்களுக்கு நான் மெகந்தி நல்ல போடுவேன் தெரியும்.. சோ மேரேஜ்க்கு என்னைய அவங்களுக்கு மெகந்தி போட சொல்லி கேட்டுயிருந்தாங்க.. நானும் மறுக்க முடியாமல் முந்தின நாள் நைட்டே அங்க போய் போட்டுவிட்டுட்டு மார்னிங் போல ரெடியாகி அவங்களுக்கு கிஃப்ட் எதாவது வாங்கலாம்ன்னு போனேன்” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்து மூச்சு வாங்க,
அவளுக்கு தண்ணீர் கொடுத்த தியா தண்ணி குடிச்சி “ரிலாக்ஸ் ஆயிட்டு பேசு” என்க, தண்ணீரை வாங்கி கைகள் நடுங்க குடித்தவள் “அப்போ அப்போ யாரோ என் மூக்குல துணி வச்சி அமுக்கிட்டாங்க.. அதுல மயங்கினவ தான் என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் தெரியல.. அப்புறம் கண் முழிக்கும் போது நா..ன் நா..ன்” என்றவள் தியாவை அணைத்து கதறி அழுது விட,
அவளின் தலையை ஆதரவாக வருடிய தியா “யாழிசை நீ அழ கூடாது.. உன்ன அழ வச்சவனுங்கள அழ வைக்கணும் சொல்லு.. அவனுங்கள பாத்தியா” என்றதும் அவளிடமிருந்து விலகி கண்ணை துடைத்த கொண்டவள்
“இல்..ல நான் மயக்கம் கலஞ்சு எழுந்த நேரம் யாருமே அங்க இல்ல.. அப்புறம் கஷ்டப்பட்டு நான் ஹோம் வந்து சேந்துட்டேன்.. நான் வந்த நேரம் எல்லாரும் கல்யாணத்துக்கு போயிட்டாங்க வார்டன் வந்து கேட்கவும் கொஞ்சம் ஃபீவரிஷா இருக்கு.. அதான் வந்துட்டேன் சொல்லி சமாளிச்சிட்டன் யாருக்கும் சந்தேகம் வர கூடாதுன்னு பெயருக்கு காலேஜ் போவேன் அதுலிருந்து வெளிய வருரதுக்குள்ள இப்போ ப்ரெக்னன்ட்” என்று முடித்திருக்க,
ரேயனோ “யாழ்.. அது என்ன இடம் நினைவிருக்கா”
“வீடு தான் அண்ணா..” என்றவள் தெளிவாக அதன் விலாசத்தை அவனிடம் கூற, மூவருமே காதை தீட்டி நன்கு கவனிக்க, தியாவோ “யாழிசை நெக்ஸ்ட் மந்த் உனக்கு எக்ஸாம் வருதுல இங்கிருந்தே சித்திரா கூட சேந்து பிரிபர் பண்ணிக்க அண்ட் எந்த வித சங்கடமும் இல்லாம உன் வீடு போல இங்க இருக்கலாம்” என்றவள் தம்பியிடம் “ஆர்யா.. இனி யாழிசை இங்கேயே இருக்கட்டும் அவ திங்ஸ்லாம் எடுத்துட்டு வந்துரு” என்றதும் அவனும் சம்மதமாக தலையாட்ட,
ரேயனோ “யாழ் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுற வரை வெளியே எங்கையும் அதிகமா போகாதா.. ஹோம்ல உன்ன காணாம கம்பிளைனட் கொடுத்தாங்கனா கேஸ் மூவ் பண்ண இன்னும் ஈஸியாயிருக்கும்” என்று இருவரிடமும் கண்ணை காட்டி வெளியே சென்று கீழேயிருந்த சித்திராவிடம் “செல்லமே குட்டியோட யாழிசை கூடயிரு அவகிட்ட எதுவும் கேட்டு ஸ்ட்ரெஸ் பண்ணாத” என்றுவிட்டு காரில் ஏறி கொள்ள,
அவனை பின் தொடர்ந்து இருவரும் ஏறி கொள்ள தியாவோ “ஒரு முக்கியமான க்ளூ கிடைச்சிருக்கு வண்டிய நம்ம ஆபீஸ் விடு ரேயன்” என்றதும் அவளை யோசனையாக பார்த்தவன், வண்டியை அலுவலகத்தை நோக்கி செலுத்த போகும் வழியில் யாழிசை கூறிய விலாசத்தை நோட்டமிட்டு விட்டே வந்து சேர்ந்தனர்.
ஆர்யாவும் கூட பெண்ணவளின் உடமைகளை எடுக்க அவனின் வீட்டிற்கு சென்றிருந்தான்.
****
அன்பு இல்லத்தில் திரட்டிய ஆதாரத்தை முன் வைத்த தியா “அன்னைக்கு நான் வீட்டுக்கு போறேன் சொன்னதும் இதெல்லாம் மறுபடியும் செக் பண்ண சொன்ன நினைவு இருக்கா.. அப்போ ஒரு விஷயம் கண்டுபிடிச்சேன்” என்றதை கேட்டு குரலை செருமிய ரேயன் ‘அப்போ உன்ன வீட்டுக்கு விட்டுருந்தா எனக்கு தான ஆபத்து.. பரவால நம்ம சும்மா சொன்னதையும் கேட்டு சீரியஸா கண்டுபிடிச்சுருக்கா’ என்று எண்ணி பெண்ணவளை சொல் என்பது போல் பார்த்திருக்க,
தியாவோ “நம்ம யாழிசை முன்னாடி காணாம போன ரெண்டு பொண்ணுங்களுக்கு முன்னாடி சத்யாங்குற பொண்ணு மிஸ்ஸிங்..” என்று அந்த பெண்ணின் புகைப்படத்தை இருவரிடமும் காட்ட, அதில் இரு ஆடவர்களின் விழிகளும் விரிய ரேயனோ “இது நம்மகிட்ட இருக்கிற குட்டி பேபி மதர் தான..”
*ஆமா ரேயா.. இவங்களும் இந்த ஹோம்ல வளைந்தவங்க தான்.. ஷீ ஆல்சோ ப்ரெக்னன்ட்” என்பதை மட்டும் அழுத்தி சொல்ல,
ஏதோ புரிந்து கொண்ட ருத்ரனோ “மிஸ் மச்சி அப்போ கிட்டனப்பர்ஸ் டார்கெட் ப்ரெக்னன்ட் லேடீஸ்ன்னு சொல்லுறியா” என்றவனின் மிஸ் என்ற வார்த்தையை கவனித்தாலும் வழக்கு பற்றின யோசனையில் புறம் தள்ளியவள் “மே பீ இருக்கலாம்” என்றதை கேட்டு தாடையை தடவிய ரேயன் “சத்யா பத்தி யாழிசைக்கிட்ட விசாரிக்கலாம் தென் அவ சொன்ன ஏரியால நைட் போய் சர்ச் பண்ணலாம்” என்று நிறுத்தி “இதுல எத்தன பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும் கண்டிப்பா அவங்களலாம் ஆப்ரேட் பண்றது ஒருத்தன தான் இருக்கும் என்னோட கெஸ் படி அந்த எக்ஸ்
(X) சத்யா நம்ம கண்ணுல பட்டதுமே நம்மள ஃபாலோ பண்ண ஸ்டார்ட் பண்ணியிருப்பான்.. சோ நம்மளோட இன்வஸ்டிகேஷன் பத்தி கண்டிப்பா கண்டு பிடிச்சிருப்பான்.. ஏன் இனி நம்ம பண்ற ஒவ்வொரு மூவும் தெரிய வரும் சோ நம்ம மூணு பேரையும் திசை திருப்ப முயற்சி பண்ணுவான் நம்ம ரொம்ப கவனமாயிருக்கணும் அதோட யாழிசை அண்ட் குட்டி பேபி ரெண்டு பேர் மேலயும் அவன் கண் இருக்கும்” என்று சில நொடி சிந்தித்த ரேயன் திறன்பேசியில் யாருக்கோ அழைத்து காதில் வைத்தப்படி வெளியேறி விட,
பெண்ணவளை அழுத்தமாக ஏறிட்ட ருத்ரன் “மிஸ் மச்சி.. இன்னும் என்னலாம் ரகசியம் வச்சிருக்கீங்க” என்க, அவன் தன் காதல் விவகாரத்தை தான் கூறுகிறான் என்பதை உணர்ந்த தியாவும்
“மிஸ்டர் மச்சி.. அத கண்ணாடி பாத்து உங்களையும் கேட்டுக்கங்க” என்று வாரிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
*****
இரவு போல் மூவரும் வீட்டிற்கு வந்திருக்க வாசலில் ஒரு ஜோடி செருப்பு அதிகமாகயிருந்ததை கண்டு புருவம் சுருக்கி உள்ளே சென்ற தியா,
குட்டி குழந்தையை கையில் வைத்திருக்கும் பெண்ணவளை கண்டு காளியாக மாறி “சித்திரா..” என்று கத்த, தியாவின் குரல் தெரிந்து பயத்துடனே, அவள் நின்ற திசையை அனைவரும் நோக்க,
தியாவோ “பாப்பா தூக்கிட்டு.. என் ரூமுக்கு போ சித்திரா” என்றதும் கை குழந்தையுடன் நிஷாவை அழைத்து கொண்டு தியாவின் அறைக்குள் அவள் நுழைய,
மறுநிமிடம் பெண்ணவளை நோக்கி கோவமாக சென்ற தியாவை மறைத்து நின்ற ரேயன் “தியா நான் சொல்லுறத பொறுமையா கேளு” என்றதை காதில் வாங்காமல்,
அவனை கடந்து அவளருகில் சென்றவள் “இப்போ என்கிட்டயிருந்து அந்த குழந்தையும் பிடுங்கிட்டு போக வந்தியாடி.. மரியாதையா போயிடு” என்று கூறியும் பெண்ணவள் அசையாமல் நின்றதில் தியாவோ “சொல்லிட்டே இருக்கேன்” என்று அவளை நோக்கி கையை ஓங்க, அடுத்த நிமிடம் தியாபின் கையை தட்டிவிட்ட ரேயன் அவளின் கன்னத்தில் இடியென அடியை இறக்கினான்.
தமக்கையை அடித்ததில் அவளருகில் வந்த ஆர்யன் “மாம்ஸ் நீங்க என்ன பண்ணினாலும் எப்போவுமே அமைதியா இருக்க மாட்டேன்” என்றவனின் குரல் எச்சரிக்கையாகவே ஒலிக்க, ருத்ரனும் கூட “கை நீட்டுறதுலாம் ரொம்ப ஓவர் மச்சி” என்க, இருவரையும் பார்வையால் தடுத்த தியா உணர்ச்சியின்றி ரேயனை வெரித்திருக்க,
அவளின் பார்வையில் முகம் இறுகியவன் “இங்க பாரு தியா.. நான் சொல்லி தான் வாகி டியர் இங்க வந்தா கேஸ் முடியுற வரை இங்க தான் இருப்பா..”
“ஓ சார் நேத்து வீட்டுக்கு போக வேண்டாம்ன்னு பதறுணதுக்கு இது தான் காரணம் போலவே” என்று நக்கலாக ஏறிட,
“ஆமா இப்போ அதுனால என்ன.. உனக்கே தெரியும் நம்ம மூணு பேரும் கேஸ் பின்னாடி போறோம்.. அதோட உன் தம்பி அவன் வீடே கதின்னு இருப்பான் அப்படியிருக்கும் போது வாகி இங்கயிருக்கிறது தான் எல்லாருக்கும் சேப் அதோட இந்த கேஸ் முடியுர வரை எல்லாரும் பிடிக்கலனாலும் ஒன்னா கோப்பரட் பண்ணி தான் ஆகனும்” என்று “கட்டளையிட்டு கார்ல இருக்கேன் ரெண்டு பேரும் வந்து சேருங்க” என்று ஆடவன் சென்று விட,
தியாவிற்கு கூட அவன் கூறுவது புரிந்தாலும் ஏனோ வாகினியின் துரோகத்தை பெண்ணவளால் ஏற்று கொள்ள முடியவில்லை, இருப்பினும் அனைவரையும் கருத்தில் கொண்டு உணர்வுகளை அடக்கிவிட்டு ருத்ரனுடன் காரில் ஏறி கொண்டாள்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

