Loading

நேற்று மதியம் அதி நிவேதாவுடன் பேசி இருந்தான்… அதன் பிறகு எந்த அழைப்பும் இல்லை…. இன்று கொஞ்சம் பிரீயாக தான் இருப்பேன் என கூறி இருந்தான் அவன்… எனவே தூங்குவதற்கு முன் அழைத்து இருந்தாள்….

யாரும் அந்த அழைப்பை எடுக்கவில்லை… அவனுக்கு அழைத்தால் முதல் ரிங்கிலே எடுத்து விடுவான் வேலை இல்லை என்றால்…

அவன் எடுக்கவில்லை என்றால் அதி வேலையில் உள்ளான் என தெரிந்து கொள்வாள்… எனவே நேற்று இரவு அழைத்த போது அவன் எடுக்கவில்லை… ஆதலால் அவன் வேலையில் உள்ளான் என நினைத்து விட்டுவிட்டாள்…

காலையில் அழைத்து கொள்ளலாம் என நினைத்து தூங்கிவிட்டாள்… அவள் அழைத்ததை பார்த்து குறுஞ்செய்தியாவது அனுப்பி இருப்பான் என நினைத்து காலை அலைபேசியைத் திறந்து பார்த்தாள்….

ஆனால் அவன் எதுவும் அனுப்பவில்லை… அவனுடன் பேசியே ஆக வேண்டும் என மனம் உந்தியது… ஆனால் பேசவேண்டியவன் தான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளானே….

தேர்வுக்குச் செல்லும் முன் அவனுக்கு அழைத்து பார்க்கலாம் என நினைத்து அழைத்தாள்… அதை பார்த்து தான் மீனாட்சி அழுதது…..

சிவாம்மா அந்த நிலையிலும் “மாப்ள போன் எடுக்காதீங்க… நிவிம்மா ஒரு தடவ பண்ணி பாத்துட்டு விட்ருவா…. அவ பரிட்சை எழுத போகட்டும்…. அதிக்கு ஆக்சிடென்ட் ஆனது தெரிஞ்சா அவ அங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டா…. அதி அவளோட அம்முக்காக கண்டிப்பா வருவான்…. நீங்க விட்ருங்க “என்று கூறினார்….

ஆனால் அங்கு நிவேதாவோ “பாவா ஏன் போன் எடுக்கல…. நேத்து கூட வேலை இல்ல அப்டினு சொன்னாரே…. எதோ அவசர வேலையா இருந்தாலும் மெசேஜ் பண்ணி இருப்பாரே…. நாம எதுக்கும் அத்தம்மா கிட்ட கேட்கலாம்” என்று அவரின் அலைபேசிக்கு அழைத்தாள்…

ஆனால் சிவாம்மாவோ அவரின் அலைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்து இருந்தார் அழுகையில்…. எப்போதும் உடனே எடுத்து விடுபவர் இன்று எடுக்கவில்லையே என நினைத்து பயந்து போய் விட்டாள்…

எனவே அவள் உடனே சுந்தரப்பாவிற்கு அழைத்து விட்டாள்… அவளின் அழைப்பைப் பார்த்து இங்கு இருப்பவர்கள் பதறிவிட்டனர்…. இந்த நிலைமையில் பேசினாள் அவள் கண்டுபிடித்து விடுவாள் என அஞ்சினர்…

இருந்தும் சுந்தரப்பா “ஹலோ சொல்லு கண்ணம்மா….” என்று அழைப்பை ஏற்று உற்சாகமாக இருப்பதைப் போல் பேசினார்…

அவரின் குரலைக் கேட்ட பின் தான் ஆசுவாசம் ஆகினாள்… “அப்பா பாவாவும் அத்தம்மாவும் ஏன் போன் எடுக்கல… பாவா நேத்து நைட்ல இருந்து போன் எடுக்கல… நான் பயந்தே போயிட்டேன்” என்று கூறினாள் நிவேதா….

“டேய் கண்ணம்மா அதி ஒரு கேஸ் விஷயமா தேனி வரை நேத்து ஆறு மணிக்கே போயிட்டான் டா.. ரொம்ப முக்கியமான வேலை போல… அதுனால போன் எடுத்து இருக்க மாட்டானா இருக்கும்….

 நாங்க ஹாஸ்பிடல் வந்து இருக்கோம் டா… எனக்கு தெரிஞ்சவங்களுக்கு ஒரு ஆபரேஷன் பண்ணி இருக்காங்க அவங்கள பாத்துட்டு வர திண்டுக்கல் வர ரெண்டு பேரும் வந்து இருக்கோம்… போன் எடுத்துட்டு வரல போல…. அவ முன்னாடி போயிட்டா… நான் கார் பார்க் பண்ணிட்டு வர வந்தேன் இப்ப உள்ள போகணும் போயிட்டு உன்கிட்ட பேச சொல்றேன் டா” என்று எப்படியோ கூறி முடித்தார்…

“இல்ல ப்பா வேணாம்… எனக்கும் எக்ஸாமமுக்கு லேட் ஆச்சிப்பா யாரும் போன் எடுக்கலனு பயந்து போயிட்டேன்…எக்ஸாம் முடிச்சிட்டு வந்து அத்தம்மா கிட்ட பேசுறேன்… பாவா அதுக்குள்ள வந்துடுவாருல… அப்பறம் நீங்க பாக்க போய் இருக்கீங்கல அவங்க நல்லா இருக்காங்கல ப்பா…” என்று கேட்டாள்…

“நல்லா இருக்காருடா… அதி அதுக்குள்ளே வந்துடுவான்…. நீ எக்ஸாம் நல்லா பண்ணுடா கண்ணம்மா… நான் வைக்குறேன்” என்று கூறி வைத்துவிட்டு ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டார்….

சுந்தரப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே மாறனும் மீனாட்சியும் அவளுக்கு ஆல் தி பெஸ்ட் என குறுஞ்செய்தி அனுப்பி இருந்தனர்…..

சுந்தரப்பா “இப்போதைக்கு சமாளிச்சாச்சு…. சாயந்திரம் பாத்துக்கலாம் “என்று கூறினார்….

.

.

.

.

.

அங்கு சேலத்தில்

“என்ன அப்பா வாய்ஸ் கொஞ்சம் டல்லா இருக்குற மாதிரி இருக்கு… ஒருவேள அவங்க ப்ரண்டுக்கு உடம்பு சரியில்லன்னு சோகமா இருக்காரு போல… பாவா உன் மேல நான் கோவம் போ… ஒரு மெசேஜாவது பண்ணி இருக்கலாம் நல்லா எக்ஸாம் பண்ணு அம்முனு” என்று அவனை திட்டிக் கொண்டே கீழே இறங்கினாள்…

அவள் முகத்தைப் பார்த்து பிரியா அழுதுவிடுவாள் என நினைத்து நிதிஷ் வசும்மாவிடம் சொல்லிவிட்டு அவளையும் நிலவனையும் அழைத்து கொண்டு காலையிலேயே அரசுவின் வீட்டிற்குச் சென்றுவிட்டான்…

அரசு நிவேதாவை தேர்வு மையத்திற்கு அழைத்து செல்ல வந்து இருந்தான்…. அவள் வசும்மாவிடம் “வசும்மா பிரியா அண்ணா நீல் யாரையும் காணோம் எங்க எல்லாரும்” என கேட்டு கொண்டே கீழே இறங்கினாள்…

அரசுவைப் பார்த்து “வாங்க மாமா” என அழைத்துவிட்டு பதிலுக்காக மீண்டும் வசும்மாவைப் பார்த்தாள்…

“டேய் நிலவனுக்கு லைட்டா ஜுரம் இருந்துச்சி டா அத காட்ட ஹாஸ்பிடல் போய் இருக்காங்க… நீ வா வந்து சாப்பிடு… அரசு நீயும் வா” என்று அவனையும் அழைத்தார்…

அரசு “இல்லம்மா வீட்டுலயே எல்லாம் முடிச்சிட்டு தான் வந்தேன்… நீங்க சாப்பிடுங்க… ஒரு ஆபீஸ் கால் பேசிட்டு வரேன்” என்று கூறிவிட்டு காருக்கு சென்றுவிட்டான்….

அவனால் நிவேதா முகத்தைப் பார்க்க முடியவில்லை…. அதி இருக்கும் நிலை தெரிந்தால் பெண்ணவள் என்ன ஆவளோ என்று அனைவருக்கும் பயம் இருந்தது….கார் சீட்டில் கண் மூடி சாய்ந்து கொண்டான்…

நிவேதா வந்து கார் கதவைத் தட்டும் போது தான் அவளுக்கு ஒரு சிநேக புன்னகை கொடுத்து விட்டு கார் கதவைத் திறந்தான்… பின் சீட்டில் உட்காந்து தெருவுக்கு எடுத்து செல்வது அனைத்தும் எடுத்து கொண்டாளா என சரி பார்த்தாள்…

அரசுவும் நிவேதாவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை… நிவேதாவே “மாமா எதோ பிரச்சனையா??? எனக்கு காலைல இருந்து எல்லாரும் வித்தியாசமா இருக்குற மாதிரி இருக்கு…. பாவா அத்தம்மா ரெண்டு பேரும் கால் எடுக்கல… அப்பா பேசுனாலும் குரல் ஒரு மாதிரி இருந்துச்சு…”

“அண்ணாவும் அண்ணியும் வெறும் மெசேஜ் மட்டும் தான் அனுப்புனாங்க…. தாத்தா அப்பத்தா மணிப்பா அபிம்மா யாரும் கால் பண்ணல… நிதிஷ் அண்ணாவும் பிரியாவும் ஒரு விஷ் கூட பண்ணாம போயிட்டாங்க… அக்கா கூட கால் பண்ணல….. நீங்களும் பேசாம வரீங்க… எதோ ப்ரோப்லமா…. ப்ளீஸ் ஏதாவது சொல்லுங்க” என்று கேட்டாள் அரசுவிடம்…

அவள் கேள்வியில் தன்னை மீட்டுக் கொண்டு “அட அண்ணியாரே நான் கேஸ் விஷயமா குழப்பத்துல இருந்தேன் அது தான் வேற ஒன்னும் இல்ல….. தீபுக்கு இன்னிக்கு முக்கியமான கேஸ் இன்னிக்கு அவ நேத்துல இருந்து அதுக்கு தான் பார்த்துட்டு இருக்கா…

மத்தவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல… நிலவனுக்கு பிவர்னு தானு போயி இருக்காங்க போனதும் வந்துரலாம்னு போய் இருக்கலாம்.. அங்கே ஆளுங்க நிறைய பேரு இருந்து இருக்கலாம் அதுனால லேட்டா இருக்கும்…

நீங்க எத பத்தியும் கவலை படாம உங்க லாஸ்ட் எக்ஸாம் ஜாலியா எழுதுங்க” என்று கூறினான்..

அவளும் சரி எனக் கூறிவிட்டு அமைதியாகி விட்டாள்… ஆனால் அவளின் மனமோ யாருக்கோ எதுவோ ஆகிற்று என அடித்து கூறியது…. அதற்குள் தேர்வு மையம் வந்துவிட்டது…

அவளுக்கு ஆல் தி பெஸ்ட் கூறி அவள் உள்ளே செல்லும்வரை அமைதியாக இருந்தான் அரசு… பிறகு புயல் வேகத்தில் வீட்டிற்கு சென்றான்… அங்கு பிரியா இன்னும் அழுது கொண்டு தான் இருந்தாள்…

அவன் நிதிஷிடமும் பிரியவிடமும் சத்தமிட்டு கொண்டு இருந்தான்… “நான் தான் அப்பயே சொன்னேன்ல நிவேதாகூட பேசுங்கனு… யாருமே ஒழுங்கா பேசாம இப்ப டவுட் வந்துடுச்சு.. சமாளிச்சிட்டு வந்துட்டேன்….

எக்ஸாம் முடிச்சிட்டு எப்படி விஷயத்தை சொல்றதுனு தெரியல” என்று சோபாவில் உட்காந்து கண்களை மூடி சாய்ந்து விட்டான்…

அங்கு தேர்வு எழுத சென்றவளும் மன குழப்பத்துடனே தேர்வை நன்முறையில் எழுதி இருந்தாள்….

.

.

.

திண்டுக்கல் மருத்துவமனையில் இருந்து மதுரைக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அதியை மாற்றி இருந்தனர்….

திண்டுக்கலில் டாக்டர் பரிசோதித்துவிட்டு “தலையில பலமா அடிபட்டு இருக்கு…. ஆபரேஷன் பண்ணனும்.. இங்க பண்ணாலும் ஓகே நீங்க மதுரை இல்லனா வேற ஊருக்கு கொண்டு போனாலும் ஓகே… கை கால் எல்லாம் பிரேக்சர் ஆகி இருக்கு… “என்று கூறிவிட்டு விடை பெற்றுவிட்டார்…

இங்கும் மதுரைக்கும் சென்று வர அலைச்சல் ஆகும் என்பதால் மதுரைலேயே பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு எடுத்தனர்….

மதுரையில் ஒரு முறை பரிசோதித்து “இம்மீடியட்டா ஆபரேஷன் பண்ணனும் சார்… ஆபரேஷன் பண்ணலனா உயிருக்கு ஆபத்தா கூட ஆகலாம்… அதே மாதிரி ஆபரேஷன் பண்ணாலும் அவருக்கு செர்டைன் இயர்ஸ் மெமரி லாஸ் ஆகலாம்…. ஆகாமையும் போகலாம் ஆபரேஷன் பண்றதா வேணாமானு சொல்லுங்க” என்று கூறிவிட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார்….

அனைவரும் இடிந்து போய் நின்றுவிட்டனர்… குழந்தைகளை அபர்ணா பொறுப்பில் விட்டுவிட்டு முரளி மருத்துவமனை வந்துவிட்டான்… அவன் தான் அனைவரையும் தேற்றி என்ன பண்ணலாம் என முடிவு எடுத்து டாக்டரிடம் சென்று பேசினான்….

அதற்குள் மாறன் போய் அதற்கான தொகையை கட்டிவிட்டு வந்தான்… மதியம் மேல் தான் அறுவை சிகிச்சை தொடங்குகிறது… எனவே தாத்தா மற்றும் அப்பத்தாவை வலுக்கட்டாயமாக அழைத்து கொண்டு வீட்டில் விட்டு வந்தான் முரளி…

மீனாட்சி இரவில் இருந்து இருப்பதால் அவளையும் வீட்டில் விட்டு வந்தான்… மாறன் வரவே மாட்டேன் என மறுத்துவிட்டான்… மீனாட்சியை விட்டு வரும்போது அபர்ணா அனைவருக்கும் உணவை தயாரித்து இருந்தாள்…

அதை முரளி முதலில் தாத்தாவிற்கு அப்பத்தாவிற்கும் குடுத்து விட்டு மருத்துவமனை வந்தான்.. மருத்துவமனையில் இருக்கும் மூவரையும் கட்டாயப்படுத்தி உண்ண அனுப்பினான்…

.

.

.

சேலம்

தேர்வு மையத்தில் இருந்து அனைவரும் வெளிவந்து இருந்தனர்…. ஆனால் நிவேதா இன்னும் வந்து இருக்கவில்லை…. நிதிஷும் அரசுவும் வந்து இருந்தனர் அவளை அழைத்து செல்ல…. தேர்வு முடிய அரை மணிநேரம் இருக்கும் முன்னே வந்து இருந்தனர்….

வெளியாட்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என அங்கிருந்தவர்கள் கூறிவிட்டனர்… அரசு தன் ஐடியைக் காட்டி இன்னும் நிவேதா வரவில்லை.. தேடி பார்க்கிறோம் என்று கூறி உள்ளே சென்றனர்…..

அங்கும் இங்கும் அலைந்து தேடினர்… அங்கு இருக்கும் ஒரு மரத்தடியில் யாரோ உட்காந்து கொண்டு இருப்பதாய் தெரிந்தது… அங்கு நிவேதா தான் அலைபேசியை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்….

அந்த அலைபேசியில் அதிக்கு ஆக்சிடென்ட் ஆன செய்தி ஓடிக் கொண்டு இருந்தது… நிதிஷ் நிவேதாவை அழைத்து பார்த்தான்… அவள் திரும்பவே இல்லை…. அவளை தொட்டு அழைக்க அவள் அருகில் சென்று அவளின் தோளை தொட்டான்… அவ்வளவு தான் அவளின் உடல் அப்டியே மண்ணில் சரிந்தது….

 

நிதிஷ் அரசு இருவரும் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் தெளித்து அவளை எழுப்ப பார்த்தனர்…. ஆனால் அவள் எழவில்லை… நிதிஷ் மூச்சு இருக்கிறதா என்று பார்த்தான்… மூச்சு இல்லை… பயந்து கொண்டே இதயத்தின் துடிப்பு இருக்கிறதா என்று பார்த்தான்…. இதய துடிப்பு மிகவும் மெதுவாக கேட்டது…

நிதிஷ் வேகமாக நிவேதாவை தூக்கி கொண்டான்… அரசு அவனிற்கு முன் சென்று காரை இயக்கி வைத்து இருந்தான்…. கார் மருத்துவமனை நோக்கி சென்றது….

அதற்கு முன் நிவேதாவிற்கு எப்படி தெரியும்னு பாக்கலாம் வாங்க…

தேர்வு முடிந்து அறையில் இருந்து வெளியில் வந்து பொருட்களை வைத்து இருக்கும் அறைக்கு சென்று அங்கிருந்து பேக்கை எடுத்து கொண்டு ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தாள்…

அதி அழைத்து இருக்கிறானா என்று பார்க்க அலைபேசியை திறந்து பார்த்தாள்… அவன் அழைக்கவில்லை என தெரிந்தவுடன் மன சோர்வுடன் செய்தியாவது அனுப்பி இருக்கிறானா என்று பார்த்தாள்.. எதுவும் அவனிடம் இருந்து வரவில்லை என தெரிந்து மனசோர்வுடன் பேக்கினுள் வைக்க பார்த்தாள்…

ஆனால் அவள் கை தவறி யூடுப்(youtube) ஓபன் ஆகியது… அதில் முன்னரே “மதுரையின் எஸ்பி அதிவீரபாண்டியனுக்கு ஆக்சிடென்ட்!!!!.. இது விபத்தா???? இல்லை கொலைமுயற்சியா???” என்று தம்ப்நைல்(thumbnail) உடன் ஒரு வீடியோ இருந்தது…

அதை கைநடுக்கத்துடன் அந்த விடியோவை அழுத்தினாள்… அதில் அவள் கேட்ட செய்தியைப் பார்த்து அவள் மயக்கத்திற்கு சென்று விட்டாள்…. அந்த நேரம் தான் நிதிஷ் அரசு இருவரும் வந்து அவளை மருத்துவமனை அழைத்து சென்றனர்….

மருத்துவமனை செல்லும் பொது அவளின் இதய துடிப்பு குறைந்து கொண்டே வந்தது… அங்கிருக்கும் ஒரு மருத்துவர்…. இதயத்துடிப்பே இல்லை என்று கூறிவிட்டார்…

அதை கேட்டு அரசு மற்றும் நிதிஷ் இருவரும் இடிந்து போய் விட்டனர்…. ஒருவனை அந்த நிலையில் பார்த்தே அனைவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.. இதில நிவேதா பற்றி அறிந்தால்?!??!?!…..

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்