Loading

“அகி…” என்று தமிழ் பேச வர,

 

“போதும் நிறுத்து. அவர் உன்னைப் புரிஞ்சுகிட்டாரா இல்லையா? இல்ல, நீ அவரைப் புரிந்து கொள்ளலையா என்று நீ தான் தமிழ் யோசிக்கணும். நீ எதுக்கு உன் வாழ்க்கையை இப்போ ஒரு வருஷமா வீணடிச்சு கிட்டு இருக்க, எனக்கு உண்மையாவே தெரியல.

 

ஒத்துக்குறேன். மாமா தப்புப் பண்ணாரு தான். நான் இல்லன்னு சொல்ல மாட்டேன். அதுக்காக முழுத் தப்பையும் அவர் மேலே போட முடியாது இல்லையா? அவர் மனசை மாத்திக்கிட்டு உன்கிட்ட நார்மலாப் பேச வராரு. அவர் மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க.

 

அவர் கூட சேர்ந்து வாழுனு சொல்லல, அது உன்னோட தனிப்பட்ட விஷயம். அதுக்குள்ள நான் வரல, சரியா? அவர்கிட்ட நார்மலா பேசு. கொஞ்சம் கொஞ்சமா தான் நார்மல் லைஃப் வாழ முடியும் தமிழ்.

 

ஒரே அடியா வாழ்ந்திட முடியாது. அப்படி நீ நினைச்சா, நீ அடுத்தவங்களுக்காக மட்டும் தான் வாழ முடியும். சரியா? உன் மனசுல இருக்க வலியை அவர்கிட்டச் சொல்லு. அதே மாதிரி அவர் மனசுல என்ன இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கப் பழகு.

 

இத நான் உனக்குச் சொல்ல வேண்டியது இல்ல தமிழ். எனக்கே பலமுறை பல விஷயத்துக்கு நீ சொல்லி இருக்க. உனக்குப் பக்குவம் இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா, உனக்குன்னு வரும்போது அது எல்லாம் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாம  ஓடிருச்சு இல்லையா? அதுவும் அவர் மேல இருக்கற நேசம் போயி இப்ப அவர் மேல முழுக்க வெறுப்போடு சுத்திட்டு இருக்க…”

 

“அப்படி இல்லைடி.”

 

“போதும் தமிழ். நீ எங்க முன்னாடி மாமாகிட்ட எப்பயும் போலப் பேசுறதும், பின்னாடி உங்க ரூம்குள்ள போனதுக்கு அப்புறம் தனிப்பட்ட முறையில், அவர்கிட்ட நீ பேசறதுக்கான வித்தியாசம் உனக்கே தெரியும்.

 

நீ என்கிட்டச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அதை நான் பார்க்க வேண்டிய அவசியமும் கிடையாது. இனி இது உன் வாழ்க்கை. எப்படி அமைச்சுக்கணும் என்று நீ தான் முடிவு பண்ணனும். ஆனால், லைப் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு மாமா உன்னோட லைஃப்க்கு முக்கியம் தான்.

 

அவர் மேல எனக்கும் கோவம் இருந்துச்சு. இப்போ இருக்கா இல்லையா அப்படி எல்லாம் என்னால சொல்ல முடியாது. அதுக்காக உன் லைஃப் எப்படி வேணாலும் போகட்டும்னு நினைச்சுட்டு நான் இருக்க முடியாது சரியா? அன்னைக்கு நீ சொன்ன ஒரே காரணத்துக்காக தான் அவர் விரும்பின பொண்ண அவர் கட்டிக்கட்டும்  என்று அமைதியா இருந்தோம்.

 

உனக்காக, நீ கேட்ட ஒரே காரணத்துக்காக தான் அண்ணனும் சரி, நானும் சரி, காயுவும் சரி அமைதியா இருந்தோம். ஆனா இப்போ நீ பண்றது சரியா? நீயே யோசிச்சிக்கோ. இதுக்கு மேல நாங்க உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில தலையிட விரும்பல.

 

ஆனா லைப் மாறும், உன் மேலேயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. மாமா மேலையும் நம்பிக்கை இருக்கு. இதப்பத்தி இனிமே பேசாத. நேரம் ஆகுது வா…” என்று அவளை ஸ்கூலுக்குள் அழைத்துச் சென்றாள் .

 

அன்று மாலை வீட்டிற்கு சென்றவுடன் தமிழ் ருத்ரனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

 

அவன் வரும்போது அமைதியாக வந்தவன்,

 

தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டு தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு ரூமை விட்டு வெளியில் வந்து விட்டான்.

 

தமிழ் ஏதாவது பேசுவான் என்று காத்துக் கொண்டு இருந்தாள்.

 

அவன் ஒன்றும் பேசவில்லை என்றவுடன் ஒரு மாதிரியாகி விட்டது.

 

ரூமில் இருந்து வெளியில் வந்தவள் அவன் ஹாலில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தாள்.

 

“டீ எடுத்துட்டு வரட்டா மாமா?” என்று கேட்டாள்.

 

அவளை அமைதியாகப் பார்த்தான்.

 

சரி என்று தலையை மட்டும் ஆட்ட,

 

‘வாயைத் திறந்து பேசினால் என்ன குறைஞ்சா போயிடுவாரு?’ என்று முனகிக் கொண்டே அவனுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் எதுவும் பேசாமல் குடித்துவிட்டு அமைதியாக எழுந்து வெளியில் சென்றான்.

 

“மாமா…” என்றாள்.

 

தனா அப்பொழுதுதான் அங்கு வந்தவள், “அண்ணி எனக்குக் கொஞ்சம் டவுட் இருக்கு, சொல்லித் தரீங்களா?” என்று கேட்டாள்.

 

அவளைத் திரும்பிப் பார்த்த தமிழ், “சரி தனா, ரொம்ப அவசரமா இல்ல, கொஞ்ச நேரம் கழிச்சுச் சொல்லித் தரட்டா?” என்று கேட்க.

 

தனா சில நொடி நின்று விட்டுத் தனது அண்ணனையும், அண்ணியையும் பார்த்தவள் எதுவும் பேசாமல் அவளுடைய ரூமுக்குச் சென்று விட்டாள்.

 

“என்ன தமிழ்?” என்று கேட்டான் ருத்ரன்.

 

“இல்ல அது…” என்று விட்டு அமைதியாகி விட,

 

“முக்கியமாக ஏதாச்சும் பேசணுமா? இல்லனா எனக்குக் கொஞ்சம் வெளியே வேலை இருக்கு” என்றான்.

 

“அப்படி ஒன்னும் முக்கியம் இல்ல மாமா, போயிட்டு வாங்க” என்று விட்டு, “நான் பேசறதை என்ன என்று கேட்கிறதை விட உனக்கு அவ்வளவு முக்கியமான வேலை இருக்கா?” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு இங்கு புலம்பச் செய்தாள்.

 

அப்பொழுதுதான் வீட்டுக்குள் வந்த காயு, தன் அக்கா புலம்புவதைக் கேட்டுவிட்டு,

 

“அதை இப்படித் தனியா புலம்பக்  கூடாது தமிழ், மாமா கிட்டக் கேட்டு இருக்கணும்” என்று சொல்ல,

 

தன் தங்கையைப் பார்த்து முறைத்தவள், “ரொம்பத் தாண்டி வர வர உங்க மாமாவுக்கு சப்போர்ட் பண்றீங்க. நீயும், உங்க அக்காவும்” என்றாள்.

 

“அப்போ நீ பண்றது தப்புன்னு அகி அக்காவுக்கும் தெரிஞ்சிருக்கு, அப்படித் தானே” என்றாள்.

 

“நான் என்னடி தப்புப் பண்றேன்? ஒன்னும் இல்ல” என்று விட்டுத் தமிழ் நகர்ந்து செல்ல,

 

“அவ ஏதோ டவுட்டுன்னு சொன்னாடி. நானும் அதுக்கு தான் வந்து இருக்கேன். ரெண்டு பேருக்குமே தான் டவுட்டு, நீ சொல்லித் தருவனு தான் வந்திருக்கேன்” என்றாள் காயத்ரி.

 

“சரிடி, கொஞ்சம் இருங்க”

 

“சரி” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

 

ருத்ரன் இரவு வீட்டிற்கு வரும்போது தமிழ் இரவு உணவு சமைத்து வைத்துவிட்டுக் காயுவையும், தனாவையும் உட்கார வைத்து அவர்களது சந்தேகத்தைத் தீர்த்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

 

உள்ளே வந்த ருத்ரன் “அம்மா சாப்பாடு ரெடி ஆயிடுச்சா?” என்று கேட்டான்.

 

தமிழ் ருத்ரன் கேட்க நிமிர்ந்தவள், ‘தன்னிடம் கேட்காமல் தன் அத்தையிடம் கேட்கிறார்’ என்று மனதிற்குள் லேசாக எண்ணி வருந்திவிட்டு, “வாங்க சாப்பிடலாம்” என்று சொன்னாள்.

 

“நான் பார்த்துக்கிறேன், நீ அவங்களுக்குச் சொல்லிக் கொடு” என்று விட்டுக் கை கழுவிக் கொண்டு வந்தான்.

 

“நான் போடுறேன் தமிழ், நீ பாரு” என்று விட்டுப் பாக்கியமும் அவனுக்குச் சாப்பாடு போட, அனைத்தும் அவனுக்குப் பிடித்ததாக இருக்க எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு ரூமுக்குச் சென்று விட்டான்.

 

தமிழ் இருவருக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு நேரத்தைப் பார்த்தவள், இன்னைக்கு இங்கயே தங்கிக்கோடி” என்றாள்.

 

“ஏன்?” என்று காயு கேட்க,

 

“நேரம் ஆயிடுச்சு, அதனால தான்” என்றாள் தமிழ்.

 

“வந்த எனக்குப் போகத் தெரியாதா? நான் பிறந்து வளர்ந்த ஊரு, எனக்குப் போகத் தெரியாது பாரு” என்று சொன்னவுடன், உள்ளே இருந்த ருத்ரனுக்கு இதைக் கேட்டவுடன் சிரிப்பு தான்.

 

‘அக்காவும், தங்கச்சியும் ஒரே போல இருக்காங்க’ என்று மனதிற்குள் எண்ணி விட்டுத் தனது மேல் சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியில் வந்தான்.

 

“வா காயு, நான் கொண்டு போய் உன்ன விட்டுட்டு வந்துடறேன்” என்றான்.

 

அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு, “எனக்கு ஒன்னும் பயம் இல்ல மாமா” என்றாள்.

 

“சரிங்க மேடம்… நீ முன்னாடியே போ, வண்டில நான் பின்னாடி வரேன்” என்றான்.

 

“மாமா, என்னை நாய் கடிச்சுக் கொதறிடும் என்று பயமா?”

 

“இல்ல, என் அக்கா பத்தலையா? ரெண்டு வண்டியா ஓட்டலாம் என்று பிளான் பண்ண எதுவும் ஐடியாவா?” என்று கேட்டவுடன்,

 

நாக்கை மடித்து, “அடிங்க” என்று அவளைத் துரத்திக் கொண்டு வர,

 

தமிழ் தான், “காயு, என்ன பேச்சு இது?” என்றாள்.

 

“நான் என் மாமாகிட்டப் பேசி விளையாடிட்டுப் போறேன். அதுல உனக்கு என்ன வந்தது?” என்று விட்டு,

 

“அப்படித்தானே மாமா” என்று தன் மாமனின் தோளில் கை வைத்துத் தட்டிக் கேட்டாள்.

 

ருத்ரனுக்கு அவள் கேட்ட விதத்தில் சிரிப்பு வர, “அது சரி” என்று அவள் தலையில் கொட்டிவிட்டுச் சிரித்தான்.

 

“சரி டி நீ முன்னாடி போ. மாமா பின்னாடி வருவாரு” என்று தமிழ் சொல்ல,

 

“சரி” என்று சொல்லிவிட்டு ஏற்கனவே இருவரையும் சாப்பிட சொன்னாள் தமிழ்.

 

காயு தான் “எனக்குப் போதும்” என்று ஸ்நாக்ஸ் மட்டும் கொஞ்சம் கொறித்துவிட்டு எழுந்து கொண்டாள்.

 

“நான் வீட்டில் போய் சாப்பிடுகிறேன், நான் சாப்பிட நேரமாகும்” என்று சொல்லி விட்டாள்.

 

காயு எப்பொழுதும் லேட்டாக சாப்பிடுவதால், அதன் பிறகு தமிழும் அவளை வற்புறுத்தவில்லை.

 

போகும் வழியெங்கும் காயு ருத்ரனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே போக,

 

“ஏய் காயு மா, ஏன் என்னையவே திரும்பித் திரும்பிப் பார்த்துட்டுப் போற, என்ன விஷயம் சொல்லு மா” என்று கேட்டான்.

 

“விஷயம் சொல்றதுக்கு எதுவும் இல்லை.”

 

“கேட்கறதுக்கு நிறைய இருக்கும் போல” என்றான்.

 

“ஏன் மாமா, முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்க? என் மாமா அப்படிக் கிடையாது. கலகலவென்று இருப்பாரு. அந்த மாமாவை தான் உன் அக்கா முழுசா குழி தோண்டிப் புதைச்சிட்டாளே. அப்புறம் எங்க இருந்து வருவான்?” என்று சொன்னான்.

 

“கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டாள்.

 

“இந்த நேரத்திலா?” என்றான்.

 

“ஆமாம், ஏன்?” என்றாள்.

 

“ஒரு விஷயம் நீ வீட்ல விளையாட்டுக்குச் சொன்ன காயு… ஆனா, இப்போ நம்ம இங்க நின்னு பேசினா ஊரார் வாயிக்கு அவல் போட்ட மாதிரி ஆயிடும்” என்றான்.

 

“அப்போ இது மட்டும் உனக்குப் புரியும், தனா விஷயம் புரியாதா மாமா. இப்ப நீ யாரைப் பத்திப் பேசணும்னு நினைச்ச காயு?”

 

“ஃபர்ஸ்ட் நான் தனாவைப் பத்தி பேச வரல தான் மாமா. இப்ப நீ கேட்டதால…”

 

“தனாவோட விஷயம் வேற, இது வேற சரியா?”

 

“அது அவ வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். இது உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். இது உன்னுடைய எதிர்காலம். உன்னுடைய எதிர்காலத்தை மட்டும் யோசிச்சு தான் பேசிட்டு இருக்கேன். வா போலாம்” என்று அவளது கையைப் பிடித்தான்.

 

“உனக்கும் ஒரு எதிர்காலம் இருக்கு மாமா. அக்காவுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கு, உங்களுக்கு ஒன்னும் வயசாகலை. நீங்க ஒன்னும் வாழ்ந்து முடிச்சிடல மாமா.”

 

“அதுக்கு என்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்று அவளது கையை  விட்டான்.

 

அவளைக் கைகட்டிக் கொண்டு நின்று பார்க்க,

 

“அதுக்கான ஸ்டெப் ரெண்டு பேத்துல ஒருத்தங்களாச்சும்  எடுத்து வைக்கணும் மாமா. ஒருத்தவங்க  விட்டுக் கொடுத்தா மட்டும் தான் அடுத்த ஸ்டெப் முன் நோக்கிப் போக முடியும்.”

 

“இது கூடத் தெரியாத அளவுக்கு தான் நான் இருக்கேன்னு நினைக்கறியா?”

 

“சரி மாமா, நீ விட்டு கொடுத்துப் போனதாவே கூட இருக்கட்டும்.”

 

“நான் அப்படிச் சொல்லல காயு. ஆனா, உன் அக்கா கொஞ்சம் கூட எனக்குப் பிடி கொடுத்துப் பேசறது இல்லையே… எனக்கு அவகிட்ட விட்டுக் கொடுத்துப் போறதுல ஒன்னும் பிரச்சனை இல்ல. இன்னொரு விஷயம், எங்க ரெண்டு பேத்துக்குள்ள இருக்க விஷயத்தை, மூணாவது மனுஷன் உன்கிட்டப் பேச எனக்கு விருப்பமில்லை.

 

என்னதான் நீ அவளுடைய தங்கச்சியா இருந்தாலும், என் மாமா மகளாக இருந்தாலும், புருஷன் பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் அவங்களுக்குள்ள நடக்குற விஷயங்கள்ல தலையிட்டா, பெத்தவங்களா இருந்தாலும் அவங்க மூணாவது மனுஷங்க தான். அப்படிச் சொல்லி தான் என்னை என் மாமா வளர்த்து இருக்காரு.

 

எங்க ரெண்டு பேத்துக்குள்ள இருக்க விஷயத்தை உன்கிட்டப் பேச எனக்கு விருப்பம் இல்ல. இது எப்படிச் சமாளிக்கணுமோ நான் சமாளிச்சுக்குறேன். இன்னும் எத்தனை நாள் ஆகுதோ, நான் பார்த்துக்கிறேன். ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றான்.

 

அவனைப் பார்த்துச் சிரித்தவள், “நான் உங்க ரெண்டு பேத்துக்குள்ள இருக்க விஷயத்தில் தலையிட மாட்டேன். ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன்.”

 

“சரி…” என்று அமைதியாகவே இருக்க,

 

“அடுத்த வாரம் புதன்கிழமை என்ன நாள் என்று தெரியுமா?” என்று கேட்டாள்”

 

“நீ தெரிஞ்சு வச்சிருக்கும் போது நான் தெரிஞ்சு வச்சிருக்க மாட்டேனா காயு? நான் உன் அக்கா கழுத்தில தாலி கட்டி ஒரு வருஷம் ஆகப்போகுது. அப்போ அந்த நிமிஷம் என் மனசுல எதுவும் இல்ல. ஆனா, இந்த நிமிஷம் உன் அக்கா என் மனசுல இருக்கா.

அதை ஃபர்ஸ்ட் நான் உன் அக்காவுக்குப் புரிய வைக்கணும். சரியா? அதைப் புரிய வச்சிட்டாலே, என் லைஃப்ல பாதிப் பிரச்சனை முடிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதைப் புரிய வைக்கிறதுக்கான டைம் உன் அக்கா இன்னும் தரலையா? இல்ல நான் இன்னும் புரிய வைக்க முயற்சி செய்யலையானு எனக்கே குழப்பமா தான் இருக்கு” என்றான்.

 

காயு அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றாள்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment