
நிவேதாவுடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து அரசு(சூர்யா) அதிர்ந்து நின்று விட்டான்… அவளை பார்த்து கிட்ட தட்ட எட்டு மாதங்கள் ஆகிவிட்டது… பேசி நாலு மாதம் ஆகிவிட்டது …. அவள் அதி மற்றும் அரசுவைப் பார்த்ததும் இவர்கள் முன் வந்து நின்றாள்….
ஆனால் அரசுவைக் கண்டுகொள்ளாமல் அதியிடம் “எப்படி இருக்கீங்க மச்சான்… பார்த்து ரொம்ப மாசம் ஆகுது… நல்லா இருக்கீங்களா” என்று கேட்டாள்…..
அதியும் அவளிடம் “நல்லா இருக்கேன் தீப்திமா…. நீ எப்படி இருக்க… டெல்லில எந்த பிரச்சனையும் இல்லல… எல்லாம் ஓகேவா” என்று கேட்டான்….
அதியால் தீப்திமா என்று அழைக்க பட்டவளும் “நல்லா போகுது மச்சான்… நாலு வருஷம் ஆனாலும் வீட்டு ரொம்ப மிஸ் செயுறேன்… எப்படா லீவு கிடைக்கும் எப்படா ஊருக்கு வரலாம்னு இருக்கு” என்று கூறினாள்….
“இன்னும் ஒரு வருஷம் தானு தீப்திமா அதுக்கு அப்பறம் இங்கயே ப்ராக்டிஸ் பண்ணிக்கலாம்” என்று கூறினான்…
அவளும் “சரி மச்சான்” என்று கூறிவிட்து “அத்தைகிட்ட பேசிட்டு வரேன்” என்று கூறி சிவாம்மாவிடம் பேச சென்றுவிட்டாள் அங்கு அவளையே பார்த்து கொண்டிருக்கும் ஒரு ஜீவனை கண்டுகொள்ளாமல்….
பாவம் அவன் தான் இவள் அவனிடம் பேசுவாள் என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தான்… அவனை ஒரு பொருட்டாக கூட கண்டுகொள்ளவில்லை அவள்….
சிவாம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தவள் அவர் அருகில் இருக்கும் அரசுவின் அம்மா அபிராமியை கண்டு கொள்ளவே இல்லை… அவரோ அவளிடம் “ஏன்டி மருமகளே என்கிட்ட பேசமாட்டீங்களா???? அவ்ளோ பெரிய மனுஷி ஆகிட்டியா” என்று கேட்டார்….
அதற்கு அவளோ “என்ன பாக்க வராதவங்க கூடலாம் பேச மாட்டேன்… நான் மதுரைக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு… ஆனா நீங்க என்ன பாக்க கூட வரல” என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள்….
“நேரமே இல்லடி… இல்லனா என் மருமகளை பாக்க வராம இருப்பனா” என்று அவளின் மோவாயைப் பிடித்து கொஞ்சிக் கேட்டார்…
“ஆன் உன் புருசன் அது தான் என் தாய்மாமனுக்கு நேரம் இருக்கு… உனக்கு நேரம் இல்லையா… கலெக்டர் வேலையா பாக்குற” என்று அபிராமியிடம் மேலும் எகிறினாள்…
அவள் சொன்னவுடன் அரசுவின் அப்பா மணிகண்டன் “எம்மா மருமகளே திரும்பியும் எதுக்கு அவகிட்ட அத நியாபகம் படுத்துற… அவ ஏற்கனவே திட்டிட்டு இருக்கா இத சொல்லி… நீ வேற ஏன்??… நான் வேல விசயமா வந்தேன்.. அப்படியே நம்ம மருமகளை பாக்கலாம் வந்தேன் அது ஒரு குத்தமா” என்று அவளிடம் கேட்டார்…
“குத்தமே இல்ல மாமா… யூ சோ ஸ்வீட்… அத்தைக்கு என்மேல பாசம் இல்ல… ஆனா அத்தையே பரவால்ல… இங்க ஒருத்தர்லாம் என்கிட்ட பேசி நாலு மாசம் ஆகுது… பிறந்தநாளைக்கு கூட வாழ்த்து சொல்லல” என்று அரசுவை பார்த்து கூறி பிறகு முகத்தை திருப்பி கொண்டாள்…
அதன் பிறகு தான் அந்த மரமண்டைக்கு பல்பு எரிந்தது…. அவன் அப்படியே அதியிடம் “ஏன்டா தேவா நீ எப்ப தீபு கூட பேசுன???” என்று கேட்டான்….
அதற்கு அதி அவனிடம் “அதுவா ஒரு வாரத்துக்கு முன்னாடி அவ பொறந்த நாள் வந்துச்சே அப்ப” என்று இளித்து கொண்டே கூறினான்….
“என்கூட தானு தேவா இருந்த எப்ப விஷ் பண்ண” என்று அதியிடம் பாவமாக கேட்டான் அரசு…
அதி அதற்கு “நீ ஒரு வேலையா நாமக்கல் போனல அப்ப” என்று கூறினான்…
“துரோகி” எனக் கூறி விட்டு மெதுவாக அவளிடம் போய் “தீபுமா ” என்று அழைத்தான்… அவள் திரும்பாமல் மீண்டும் நிவேதா அருகில் போய் அமர்ந்து கொண்டாள்….
நிவேதாவின் உடல் இங்கு இருந்தாலும் அவளின் மனமோ அவளின் பாவாவிடம் இருந்தது… இதுவரை அவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை… அந்த கவலையில் மீண்டும் அரசு என்ன செய்கிறான் என்று பார்த்தாள்..
அரசு என்ன பண்றான்னு பாக்குறதுக்கு முன்னாடி யாரு அந்த பொண்ணுனு பாக்கலாம் வாங்க
அவள் பெயர் தீப்தி … பெற்றோர் ஆறுசாமி மாதவி… அவளுக்கு ஒரு தங்கை உண்டு அவள் பெயர் ஆராதனா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்…..
மாதவியின் அண்ணன் தான் அரசுவின் அப்பா மணிகண்டன்… அதுபோல் ஆறுசாமியின் தங்கை தான் அரசுவின் அம்மா… இவர்களின் பெற்றோர் அண்ணன் தங்கை ஆவர்…. ஆறுசாமியின் அம்மா தன் மக்களை தன் அண்ணன் மக்களுக்கே கல்யாணம் செய்து வைத்துவிட்டார்….
தீப்தி பிறந்தவுடனே அபிராமி கூறிவிட்டார் தன் அண்ணன் மகள் தான் என் வீட்டு மருமகள் என…. ஆறுசாமிக்கும் சந்தோசம் தான்…
ஆறுசாமி மதுரையில் கிரிமினல் லாயர் ஆவார்… அவரை பின்பற்றியே அவர் மகளும் கிரிமினல் லாயர் ஆக டெல்லி சட்ட கல்லூரியில் படிக்கிறாள்…
சிறு வயதில் இருந்தே இவனுக்கு அவள் என்று பேசி முடித்ததாலோ என்னவோ இருவரும் மிகுந்த பாசத்துடன் நடந்து கொள்வர்… ஆனால் ஆறு மாதம்முன் ஆன சிறு சண்டையினால் இருவரும் பேசிக் கொள்ளவது இல்லை…
இப்ப வாங்கோ கதைக்கு போகலாம்….
நான்கு மாதமாக இருவரும் பேசிக் கொள்வது இல்லை… ஆனால் அவனின் அம்மா அப்பா இருவரும் இரவு அவளுடன் வீடியோ கால் பேசிவிடுவர்… அதி வாரத்திற்கு ஒருமுறை ஆடியோ காலிலும் நிவேதா மற்றும் பிரியா இருவரும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வீடியோ கால் பேசிவிடுவர்…
நிவேதா மற்றும் பிரியாக்கு அதி தான் தீப்தியை அறிமுகம் செய்துவிட்டான்…. மூவரும் தற்போது நெருங்கிய தோழிகள் போல் ஆகி விட்டனர்… தீப்தி இருவரை விட இரண்டு வருடங்கள் பெரியவள் ஆவாள்….
நிவேதா பிரியாவுடன் பேசாமல் இருந்த போதும் இருவரும் தனி தனியாக பேசிவிடுவர்.. அதே போல் தான் அப்பத்தா மீனாட்சி சிவாம்மா இருவரும் பத்து நாட்களுக்கு ஒருமுறை பேசிவிடுவர்…
இது எதுவுமே அரசுவுக்கு தெரியாது…. நிவேதா பிரியாவுக்கு தீப்தியைத் தெரிவதையே பேவென பார்த்து கொண்டிருந்தான்… ஆனால் அவர்களோ பல நாள் தோழிகள் போல பேசிக் கொண்டிருந்தனர்…
அவளின் பிறந்த நாளை நியாபகம் படுத்தாத தந்தையிடம் “துரோகி டாடி” என்று கூறிவிட்டு அவன் அம்மாவிடம் “யூ டூ புரூட்டஸ்” என்று கூறினான்… அவனை ஒரு பொருட்டாக கூட இருவரும் கருதவில்லை….
இவள் கெஞ்சினால் மிஞ்சுவாள் என அறிந்து விறுவிறுவென அவளிடம் சென்று அவளைத் தூக்கி தோளில் போட்டு கொண்டு நிவேதாவிடம் “அண்ணி மேல உங்க ரூம் யூஸ் பண்ணிக்கிறேன்” என்று கூறிவிட்டு மேல சென்றுவிட்டான்….
அனைவரும் பே பேவென பார்த்து நின்றனர் அவனை… பிரியா சும்மா இல்லாமல் அபிராமியிடம் “அம்மா அரசு அண்ணாக்குள்ள இவ்ளோ பெரிய காதல் மன்னன் இருக்காரா” என்று கேட்டாள்…
அவரோ அவளிடம் “அவன் அவ்ளோ பெரிய அப்பாட்டகர்லாம் இல்ல மகளே.. உன் அண்ணன் உன் அண்ணி கால்ல விழுந்து தான் சமாதானம் செய்வான்… இங்க கீழ இருக்குற ரூம்ல கால்ல விழுந்தா நமக்கு தெரிஞ்சி அவன் இமேஜ் என்ன ஆகும்… அதுனால தான் மேல போய் விழுவான்” என்று கூறினார்…
அவரின் பதிலில் அனைவரும் சிரித்துவிட்டனர்… அவர் சொல்வது உண்மை தான்…. அரசு அங்கே அவளிடம் கெஞ்சிக் கொண்டு தான் இருந்தான்…
” தீபுமா சாரி உன்கூட பேசாம இருந்தது தப்பு தான், உன் பர்த்டேக்கு விஷ் பண்ணாம இருந்தது தப்பு தான் இனிமே அப்படிலாம் பண்ண மாட்டேன் சாரி டா… வேணும்னா உன் கால்ல விழுந்து சாரி கேட்கட்டுமா” என்று கேட்டான்…
அவள் எதுவும் கூறவில்லை… தான் போட்டு இருந்த ஸ்கிர்ட்டினை தூக்கி அவனிடம் காட்டினாள் விழு என்ற கண் அசைவில்… அவன் கூச்சம் எல்லாம் படவில்லை… உடனே காலில் விழுந்துவிட்டான்…
அவளும் பதறி போய் தூக்கவும் இல்லை… கெஞ்சு என நின்று விட்டாள்… சிறிது நேரம் கழித்து தான் “போதும் எந்திரிங்க” என்று கூறினாள்…
“கோவம் போச்சா தீபுமா” என்று கேட்டான் … அவளும் ஆம் என்று தலை ஆட்டினாள்… அவ்வளவு தான் அவளை அணைத்து அவளின் உதட்டில் தன் முத்திரையை பதிக்க ஆரம்பித்தான்…. அவளும் அவனின் பின்னந்தலையில் உள்ள முடியுனுள் கையை நுழைத்து அவனுடன் ஒன்றினாள்…
சிறிது நேரம் கழித்து அவனை தன்னிடம் இருந்து பிரித்து “அச்சோ மாமா வா கீழ போலாம் எல்லாரும் இருப்பாங்க” என்று கூறினாள்…. அவனும் “சரி வா” என்று கூறி அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு இருவரும் வெளியேறினர்…
அபிம்மா அவனிடம் “என்னடா என் மருமக கால்ல விழுந்து சமாதானம் பண்ணிட்டியா” என்று கேட்டார்…
அவன் இல்லை என்று சொல்வதற்குள் தீப்தி “ஆமா அத்தை … நேர்ல பார்த்த மாதிரி சொல்றிங்க” என்று கேட்டாள்…
அவள் சொல்வதை கேட்டு அனைவரும் சிரித்தனர்… அரசு மட்டும் அவளை முறைத்தான்…. அபிம்மா அவளிடம் “என் பையன் காதல் மன்னன் இல்லையே கால்ல விழுந்து தான் சமாதானம் செய்வான்னு தெரியும்” என்று கூறினார்…
அவள் அதை கேட்டு சிரித்து விட்டாள்… அரசு அதை பார்த்து அவள் காது அருகினில் வந்து “கால்ல மட்டும் விழுந்தனா….. இன்னொன்னும் பண்ணேன்ல அதுவும் சொல்லு தீபுமா” என்று கூறினான்…
அவன் கூறியதை கேட்டு அவள் கன்னம் சிவந்துவிட்டது… அவள் மீண்டும் நிவேதாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்… பிரியா நிவேதா இருவரும் அவளை கேலி செய்து கொண்டிருந்தனர்….
இவர்கள் இப்டி இருந்தால் அதி அனைவரிடமும் வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சிவாம்மா கூப்பிட கூப்பிட நிற்காமல் சென்றுவிட்டான்….
நிவேதா சிவாம்மாவிடம் “நான் போய் அவர் கிட்ட பேசுறேன் அத்தம்மா நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று கூறினாள் …
“அடியே பைத்தியக்காரி அவனை நான் திட்டுறதே உங்கிட்ட பேசாம பாக்கம போறான்னு தான்… நீயே போய் அவன்கிட்ட பேசுறியா அதுலாம் வேண்டாம்” என்று கூறினார்…
அவர் அப்படி கூறியவுடன் முகத்தை பாவமாக வைத்துகொண்டாள்… அந்த முகத்தை பார்த்து அவளின் அண்ணன்களுக்கு பொறுக்குமா…. மாறன் நிதிஷ் இருவரும் ஒரே நேரத்த்தில் சிவாம்மாவிடம் “அத்தை அவ போகட்டும்” என்று கூறினர்….
அதை கேட்டு தலையில் அடித்து கொண்ட சிவாம்மா “போ நிவிம்மா” என்று கூறினார்… அவ்வளவு தான் பாட்டம்பூச்சியாக பறந்து அதி இருந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள்….
சிவாம்மா “இந்த பையன் ஏன் தான் இப்படி பண்றானோ தெரியல… நிவேதாவ பாக்க கூட இல்ல… இவனை என்ன பண்றதுனே தெரியல” என்று புலம்பினார்…
மாறன் தான் “அத்தை அவனை திட்டாதீங்க” என்று கூறி “நான் அவன்கிட்ட கேட்டேன் ரெண்டு நாள் முன்னாடி ஏன்டா நிவேதாவை பாக்க மாட்டிங்குற…. கோவமா இருக்கியானு”…
அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா ‘மாமா அம்முவை கட்டு போட்டு என்னால பாக்க முடியாது மாமா… அந்த தைரியம் எனக்கு இல்ல… அந்த முகத்துல சந்தோசமா பாக்கணும் மாமா….
அதுமட்டும் இல்லாம என் அம்முவோட நிலைமைக்கு காரணமானவங்கள பழி வாங்காம அவளை நான் பாக்க மாட்டேன்னு சொல்லிட்டான்” என்று அதி மாறனிடம் கூறியதை அவன் அனைவரிடமும் கூறினான்…
“அவனுக்கு பாப்பாவை கட்டோட பாக்க பயம்… நிவேதாவுக்கு எதோ ஆகிடுமோனு பயம்…. அது பாப்பா தான் அவன்கிட்ட பேசனும்… பாப்பா போயி அவனை சமாதானம் செஞ்சிடும்” என்று மாறன் கூறினான்
அவன் கூறியதை கேட்டு அனைவரும் அமைதியாகி விட்டனர்…..
அரசு மற்றும் தீப்தி இருவருக்கும் பார்வையிலேயே காதல் பண்ணிக் கொண்டு இருந்தனர்.. அதை பார்த்து அபிம்மா தான் இதுங்க வேஸ்ட் என நினைத்து கொண்டு அரசுவிடம் “டேய் தம்பி மருமகள வெளியே கூட்டிட்டு போயிட்டு வா” என்று கூறினார்…
அவனும் இதற்கு தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா என்று நினைத்து தீப்தியைக் கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்….
இங்கு நிதிஷோ பிரியாவைப் பார்வையால் களவாடி கொண்டிருந்தான்… இவர்கள் இருவரும் நன்றாக பேசியே நிறைய நாட்கள் ஆகிவிட்டது…
அதை கவனித்த சிவாம்மா இருவரை பார்த்தும் “நிதிஷ் பிரியா ரெண்டு பேரும் போய் தூங்குங்க…. ரெண்டு பேரும் இத்தனை நாள் நல்லாவே தூங்கி இருக்க மாட்டீங்க… மதியம் பக்கம் எழுந்து வந்தா போதும்” என்று கூறிவிட்டார்….
பிரியா நிதிஷ் இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர்… முதலில் பிரியா குளிக்க சென்றாள்… பிறகு நிதிஷ் இருவரும் எதுவும் பேசவில்லை.. இத்தனை நாள் பேசாததை அணைப்பின் மூலம் தீர்த்தனர்.. இருவரும் அணைத்த வாக்கிலேயே தூங்க ஆரம்பித்தனர்
வாங்கோ நாம தேவதையும் அவளோட தேவதூதனையும் பாக்கலாம்… வீடு வெறுமனே சாத்தி தான் இருந்தது…. அவனின் அறையில் போய் பார்த்தாள்… அங்கு அவன் இல்லை….
எங்கே இருப்பான் என யோசித்து மேல் இருக்கும் அவனின் அலுவலக அறைக்கு சென்றாள்.. அவள் நினைத்ததை போலே அங்கு தான் இருந்தான்.. ஜன்னல் வழியே வெளியே நடக்கும் நிகழ்வை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்…..
அவள் வந்ததை உணர்த்தும் அவன் திரும்பவில்லை… அவள் மெதுவாக வந்து அவனை பின்னிருந்து அணைத்து கொண்டான்…. அவள் ஸ்பரிசம் பட்டவுடன் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது….
அதை உணர்ந்து அவள் அவனை வேகமாக திருப்ப முயன்றாள்.. ஆனால் அவளால் முடியவில்லை.. எனவே அவனுக்கும் ஜன்னலுக்கு இருந்த சிறிய இடைவெளியில் போய் நின்றாள்…
அவளுக்கும் கண் கலங்கி தான் இருந்தது…. இருந்தும் அவனிடம் “பாவா என்ன பாருங்க எதுக்கு இந்த அழுகை நான் நல்லா தான் இருக்கேன்… பாருங்க சின்ன காயம் கூட இல்லை….
நீங்க பயப்படுற மாதிரி கட்டு எதுவும் இல்லை ரிலாக்ஸ் முதல்ல என்ன பாருங்க” என்று கூறி அவனை தன்னை நோக்கி பார்க்க வைத்தாள்…
அவளை கண்டவன் எதுவும் பேசவில்லை… வன்மையாக அவளை அணைத்தான்… அவள் அப்படியே அவனுள் செலுத்துவது போல்… அவளுக்கு வலித்தது தான் ஆனால் அவனின் பயத்தை அறிந்து அவனின் முதுகை தடவி கொடுத்தான்…
“பயந்தே போயிட்டேன் அம்மு… டாக்டர் உன்ன அட்மிட் பண்ண அப்ப நீ திரும்பி வரது கொஞ்சம் கஷ்டம்னு சொன்னாங்க… அத கேட்டு துடிச்சு போயிட்டேன் தெரியுமா… நீ மட்டும் திரும்பி வரலைனா நானும் உன்கூடவே வந்து இருப்பேன்” என்று கூறி முடிக்கும் முன் அவனின் வார்த்தைகளை நிவேதா தன் இதழினுள் அடைத்து கொண்டாள்…
அதி முதலில் அதிர்ந்து ஆவலுடன் இணைந்து கொண்டான்… அவள் சிறிது நேரத்தில் விட பார்த்ததை இவன் தன்னுடைய முயற்சியால் நீடித்து கொண்டான்… அவளின் உதட்டில் தேன் சுவையைக் கண்டானோ என்னவோ…. அதை விட்டு விலக அவனுக்கு மனது இல்லை…
வேறு ஒரு உலகத்தில் இருப்பது போல் இருந்தான்…. மெதுவாக அவனின் கை மெதுவாக அவளின் டீஷர்டின் வழியே அவளின் உடலில் மேய்ந்தது… நிவேதா சுதாரித்து கொண்டாள்…
அவனின் இதழை கடித்து அவனை கிள்ளி தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்தினான்… அப்போது தான் அவனுக்கு சுயநினைவு வந்தது…. “அம்மு சாரி அம்மு ரியலி சாரி டா…” தன்னுடைய தலையை அழுந்த கோதிக் கொண்டு பால்கனியில் போய் நின்று கொண்டான்…
அவன்மீதே அவனுக்கு கோவம்.. படிக்கும் பெண்ணிடம் இப்படி தான் நடந்து கொள்வாயா என்று அவனே அவனை அடிக்க முயற்சித்தான்.. ஆம் முயற்சி தான் செய்தான்…
அதற்குள் அவன் தேவதை வந்து கையை பிடித்து கொண்டாள்… “ச்சு பாவா என்ன இது… கூல் பயத்துல என்ன பண்றதுனு தெரியாம பண்ணிட்டீங்க.. என் பாவா சுத்த தங்கம்… அவரால அவரோட அம்முவ காய படுத்த தெரியாது…. என்று கூறி அவனை அணைத்து கொண்டாள்…
ஆனால் அதி அவளை அணைக்கவில்லை… இவளே அவனின் கையை எடுத்து தன்னை சுற்றி போட்டு கொண்டாள்… பிறகு தான் அவளை இறுக்கமாக அணைத்து கொண்டு “சாரிடா என்னோட கன்ட்ரோல நான் மிஸ் பண்ணிட்டேன்… இனிமே இப்படி பண்ண மாட்டேன்…” என்று கூறினான்…
“இப்ப பயம் போயிடுச்சா பாவா… இத்தனை நாள் வந்து பாக்காம இந்த மனநிலைல தான் இருந்திங்களா”… என்று கேட்டாள்…
“உன்ன அப்படி பாக்க எனக்கு தைரியம் இல்ல அம்மு… உன்ன அன்னிக்கு பாத்த அப்ப ரத்த வெள்ளத்துல இருந்த தெரியுமா… உன்ன கட்டு போட்டு ஹாஸ்பிடல்ல பாக்குற அளவுக்கு நான் தையிரியசாலி இல்ல…
நான் போலீஸ் தான் எத்தனையோ கொலை ஆக்சிடென்ட் தற்கொலை எல்லாம் பார்த்தவன் தான் ஆனா உன்ன அப்படி பார்க்க என்னால முடியாது அம்முடா…. என்று கூறினான்…
“உங்க அளவுக்கு என்னால உங்கள லவ் பண்ண முடியுமா தெரியல பாவா” என்று நிவேதா கூறினாள்….
“டேய் அம்மு உன் இடத்துல வேற பொண்ணுங்க இருந்தாங்கன்னா நான் பாக்காம இருந்ததுக்கு என் கூட பேசி கூட இருந்து இருக்க மாட்டாங்க.. ஆனா நீ என்ன புரிஞ்சிகிட்டு என்னை பார்க்க வந்து இருக்க… இதுக்கு மேல எனக்கு என்னடா வேணும்” என்று கூறி அவளின் உச்சியில் முத்தமிட்டான்
இருவரும் கீழே வரும் போது ஹாலில் இரண்டு ஜோடிகளை தவிர அனைவரும் இருந்தனர்…. நிவேதா சென்று மாறனின் தோளில் சாய்ந்து கொண்டாள்…
அதை பார்த்து சுந்தரப்பா “கண்ணம்மா அப்பா கிட்ட வரமாட்டியா” என்று கேட்டார்… அவர் கேட்டவுடன் அவள் எழுந்து சென்று அவரின் தோளில் சாய்ந்து உட்காந்து கொண்டாள்… பெண்கள் அனைவரும் சமையல் அறையில் இருந்தனர்… இவள் உள்ளே சென்றால் வெளியே தான் துரத்தி விடுவர்.. அதனால் அவள் வெளியவே ஹாலில் உட்காந்து கொண்டாள்…
இருவர் வந்ததை பார்த்து மீனாட்சி இருவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.. மற்றவர்கள் ஏற்கனவே குடித்து விட்டனர்…
நிவேதா சுந்தர் அப்பா மேலே சாய்ந்து உள்ளதை பார்த்து வசும்மா கண்கலங்கி விட்டார்… சிவாம்மா என்னவென்று கேட்டார்…
அதற்கு அவர் “என்ன தான் என் வீட்டுக்காரர் நிவேதா மேல பாசமா இருந்தாலும் நிவேதவ இப்படி தோள்ல சாய்ச்சிக்கிட்டது இல்ல… அவ எப்படி அப்பா பாசத்துக்கு ஏங்கி இருக்கானு இப்ப தான் தெரியுது” என்று கூறினார்..
“அண்ணி அவ என் வீட்டு தேவதை அவ எப்பயும் சந்தோசமா எங்க வீட்டுல இருப்பா” என்று கூறினார்… அதற்கு வசும்மா “அது எனக்கே தெரியுமே” என்று கூறி சமையல் செய்ய ஆரம்பித்தனர்….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
+1
+1


