
ஆசிரமத்தின் பின் பக்கம் சுவரின் பின்னே சற்று விலகி நின்று கைக்கணினியில் (டேப்லெட்) எதையோ செய்து கொண்டிருந்தவனை கண்டு தியா “என்ன பண்ற”
“கேமரா ஹேக் பண்றேன்டி..” என்று அனைத்து கேமராவையும் செயலிழக்க செய்து கைகணினியை கைப்பைக்குள் போட்டுவிட்டு சத்தம் வராமல் பெண்ணவளுடன் சுவர் ஏறி குதித்தவன் “தியா.. இப்படியே இந்த பைப் வழியா ஏறி போனா.. செகண்ட் பிளோர்ல பைக்கு லெஃப்ட் சைட் டூ ஸ்டெப் தான்டி ஒரு ஹோலிருக்கும் அது கிட்சென்ங்குறதுனால அந்த ஹோல்ல ஏர் பேன் அட்டச் பண்ணியிருப்பாங்க அத ரிமூவ் பண்ணி அந்த ஹோல் வழியா ஃபர்ஸ்ட் புளோர் வந்துடு” என்று முடிப்பதற்குள் தியாவோ
“நீ எப்படி வருவ” என்க
“சொல்லுறத முழுசா கேளுடி” என்று மேலும் தொடர்ந்தவன் “அதோட அந்த கிட்சென்ல டோர் கூட கிடையாது சோ அந்த வழியா ஃபர்ஸ்ட் பிளோர்ல ஸ்டெப்ஸ் இறங்கி ரைட் சைட் வந்தா நாலாவாது ரூம் தான் ஸ்டோர் ரூம் உள்ள வந்து அங்க ஜன்னலிருக்கும் அத ஓபன் பண்ணிவிடு.. அது வழியா நான் வந்திடுவேன்” என்றதை பெண்ணவள் முறைக்க, அதற்கு ரேயன் “என்னடி”
“நான் மட்டும் குரலி வித்தை காட்டுற போல எல்லா பக்கமும் தாவி வரணும்.. நீ மட்டும் ஜாலியா வருவியா”
“நான் எங்கடி ஜாலியா வர போறேன்.. அதே பைப் வழியா தான் நானும் ஸ்டோர் ரூம் ஜன்னல்கிட்ட போவேன்.. இப்போ சண்டை போட நேரம் இல்ல தியா.. அந்த ஹோல் உனக்கு தான் கரெக்ட்டா இருக்கும் அதான் உன்ன போக சொன்னேன்” என்று தன் கைப்பையை அவளின் தோலில் இடம் பெயர்த்தவன் மாஸ்க் அணிந்து முகத்தை மறைத்துவிட்டு பெண்ணவளுக்கு கண்ணை காட்ட,
அவளும் தன் முகத்தை மறைத்து அவனிடமிருந்து தலையாட்டி விடைபெற்று பைப் மீது ஏறி, அவன் கூறிய வெட்கை மின்விசிறி பொறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவள் தன் தோல் பையிலிருந்த ஆயுதங்கள் மூலம் அதனை கழட்டி ஓரம் வைத்துவிட்டு அதன் வழியே குதித்து படியில் இறங்கி முதல் தளத்திற்கு வந்து ஸ்டோர் ரூமையும் கண்டறிந்து, அவ்விடம் வந்தவள் ஸ்மார்ட் லாக்கையும் ஹேக் செய்து உள்ளே நுழைந்து விட, அதற்குள் பைப் வழியாக ஸ்டோர் ரூம் ஜன்னல் அருகே அவளுக்காக காத்திருந்தான்.
அவன் கூறியது போல் ஸ்டோர் ரூமிலிருந்த ஜன்னல் கதவையும் திறந்து விட, அதன் உள்ளே வர எந்த தடையும் இல்லாததால் எளிமையாகவே உள்ளே வந்துவிட்டான்.
இப்போது தியா “நரேன்.. ஸ்மார்ட் லாக் ஹேக் பண்ணியிருக்கேன் ஹாஃப் ஹவர் தான் டைம் அதுக்குள்ள நம்ம வெளியே போகலன்னா தானவே லாக் ஆயிடும்”
“சரிடி.. நான் சிஸ்டம்ல உள்ளத என்னோட டேப்லெட்ல டிரான்ஸ்ஃபர் பண்றேன்.. நீ இருக்கிற பைல்ஸ எல்லாம் நோட் பண்ணு முக்கியமா எதாவது கண்ணுல பட்டா ஃபோட்டோ எடுத்து வச்சிக்க..” என்று கூறிய ரேயன் அங்கிருந்த கணினியின் முன் அமர்ந்துவிட, தியாவும் அங்கிருந்த கோப்புகளை ஆராய தொடங்கி விட்டாள்.
*****
பின் அரைமணி நேரம் முடிவதற்கு பத்து நிமிடம் முன் தியா “நரேன் பத்து நிமிஷம் தான் இருக்கு முடிஞ்சுதா”
“பின்னிஷ்டி” என்று தான் கணினியை பயன்படுத்தியதற்கான தடயம் கூட தெரியாதப்படி பழையப்படி மாற்றி அணைத்துவிட்டு “தியா ஆசிரமம் பின் பக்க சுவர்க்கிட்ட உனக்காக வெயிட் பண்ணுவேன்.. சீக்கிரம் வந்துடு” என்று வந்தது போல் ஜன்னல் வழியாக சென்று சுவர் ஏறி குதித்து சுவருக்கு சற்று தள்ளி நின்று பெண்ணவளுக்காக காத்திருந்தான்.
அவன் சென்றதும் ஜன்னலை மூடிவிட்டு வெளியே வந்தவள், படியேறி இரண்டாம் தளத்திலிருக்கும் சமையல் அறை மேலியிருந்த ஓட்டைக்குள் ஏறி வெளியே வந்து வெட்கை மின்விசிறியை இடைவெளியில் பொருத்திவிட்டு பைப்பை பிடித்து கீழே இறங்கியவள் சுவர் ஏறி குதித்துவிட்டு அவன் அருகே வந்ததும் பெண்ணவளால் தான் மூச்சு கூட விட முடிந்தது.
பின் ரேயன் தான் செயலிழக்க செய்த கேமராவை பழையப்படி மாற்றிவிட்டு “தியா இன்னைக்கு ரெஸ்டாரன்ட்லயே ஸ்டே பண்ணிட்டு மார்னிங் போல வீட்டுக்கு போகலாம்” என்க, அவளுக்கும் அதுவே சரியென தோன்றியதில் சம்மதமாக தலையசைக்க, இருவரும் ரெஸ்டாரன்டை நோக்கி நடந்தனர்.
போகும் வழியில் ஐஸ்கிரீம் தள்ளுவண்டியை கண்டு தியா “ஐஸ் கிரீம் சாப்பிடலாம் வா” என்றவள், அவன் பதிலை கூட கேட்காமல் துள்ளி குதித்து தள்ளு வண்டி அருகில் வந்து “அண்ணா குல்பி ஐஸ” என்க,
அவளின் குழந்தை தனத்தை கண்டு “இவ இன்னும் மாறவே இல்ல” என்று இரு பக்கமும் தலையாட்டி அவ்விடம் வந்தவன் “எனக்கும் வாங்குடி”
“உனக்கு வேணும்ன்னா நீயே சொல்லிக்க” என்று கூறிவிட்டு தனக்கானதை வாங்கிய பெண்ணவள் சாப்பிட்டவாறே நடக்க தொடங்கி விட, அவளை முறைத்துவிட்டு தானும் வாங்கியவன், அவளுடன் இணைந்து நடந்தவாறே “ருத்ரன ரொம்ப பிடிக்குமோ” என்றதில் புருவம் உயர்த்தியவள் “வாட் டூ யூ மீன்”
“தப்பா மீன் பண்ணல.. அவனுக்காக பொஸசிவ்லாம் ஆகுறீயே ரொம்ப ஆழமான நட்போ”
“ம்ம் அப்படியும் சொல்லலாம்”
“அப்போ ஏன் உன் உயிர் தோழன்ட பாஸ்ட் லைஃப் பத்தி சொல்லல ஐ மீன் நம்ம விஷயத்தை பத்தி..” என்றதில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விரகத்தியான புன்னகையை சிந்தியவள் “சொல்லுறளவு வொர்த்தான விஷயமா தோணல” என்றவளின் முகம் அவனை காதலித்த நாட்களை எண்ணி இறுக, அதற்கு மேல் சாப்பிட தோன்றாமல் பாதியிலே குல்பியை தூக்கி எறிந்துவிட்டு விறு விறுவென ரெஸ்டாரன்டிற்கு நுழைந்து கொண்டாள்.
அவளிடம் உண்மையை போட்டு வாங்க எண்ணி பேச்சு கொடுத்தவன் பெண்ணவளின் பதிலில் “என்னோட காதல் உனக்கு வொர்த் இல்லையாடி” என்று காலை தரையில் உதைத்து கோவத்தை கட்டுப்படுத்திவிட்டு பெண்ணவளை பாராமல் சோபாவில் படுத்து கொண்டான்.
*****
மறுநாள் காலையில் ரெஸ்டாரன்டிலிருந்து அவரவர் வீட்டிற்கு சென்று தயாராகி பணிக்கு வர, ருத்ரனோ தோழி வருவதற்கு முன்னே அவள் கண்ணில் படாமல் அங்கிருந்து நழுவிவிட்டான்.
இப்போது இருவரும் தாங்கள் திரட்டியதை நகளாக எடுத்து அனைத்து தாள்களையும் முன் வைத்து ருத்ரனுடன் இணைந்து மூவரும் புரட்டி தடையத்தை கண்டறிய முற்பட,
இரண்டு தாள்களில் பார்வையை பதித்த ரேயன் “தியா.. அந்த லெட்டர்ல அன்பு ஹோம்ல கடத்தப்பட்டவங்க எண்ணிக்கை 12 தான மென்சன் பண்ணியிருந்துச்சு” என்றதுக்கு பெண்ணவளும் ஆமென்று தலையாட்ட,
அதை கண்டு தாடையை தடவியவன் “அடுத்த டார்கேட் யாருன்னு கண்டுபிடிச்சுட்டன்” என்றதில் மற்ற இருவரும் விழி விரித்து “வாட்” என்றனர் ஒரு சேர,
அவர்களின் பாவனையில் வரும் சிரிப்பை இதழ் கடித்து மறைத்தவனோ “எஸ் காய்ஸ்.. அந்த பொண்ணு நேம் யாழிசை.. காலேஜ் ஸ்டூடண்ட் அண்ட் இந்த பொண்ணு கடத்தப்பட்டவளா இல்ல இனி தான் கடத்தப்பட போறாளான்னு நோ ஐடியா.. ஆனா இந்த பொண்ணு கிட்டனபர்ஸ் டார்கேட் லிஸ்ட்ல உண்டு” என்றதுக்கு தியா “எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற”
“இங்கயிருக்கிற பேப்பர்ஸ நல்லா பாருங்க இது அங்க ஸ்டே பண்ணியிருக்கிற பொண்ணுங்க நேம் அண்ட் டீட்டைல்ஸ் இருக்கு.. அதோட ஒவ்வொரு பேப்பர்ஸலயும் ஒவ்வொரு நேம் ரிஜெக்ட் ஆகிட்டேயிருக்கு சோ இந்த மாசம் லிஸ்ட்லயிருந்த யாழிசை நேம் அடுத்த மாச குறிப்பேடுல இப்போவே ரிமூவ் பண்ணிட்டாங்க..” என்றதும் இருவரும் அதனை ஆராய,
ருத்ரன் புறம் திரும்பிய ரேயன் “மச்சி.. இந்த பொண்ணு அந்த ஹோம்ல இருக்காளா இல்லையான்னு தெரியனும்.. சோ ஹோம வாச் பண்ணிட்டேயிரு அண்ட் சந்தேகம் வர கூடாது” என்று கூறிவிட்டு, அவன் கூறிய பெண்ணின் புகைப்படத்தை காட்ட,
அதிலிருந்த கல்லூரி பெயரை கண்ட ருத்ரன் “மச்சி… இந்த பொண்ணு நம்ம தேவி படிக்கிற காலேஜ்ல தான் படிக்குறா” என்று தியாவிடம் தான் பார்த்ததை காட்ட,
புருவம் உயர்த்திய ரேயன் “யாரு தேவி”
“தியா தங்கச்சி ரேயன்”
“ஓகே ருத்ரன்.. நீ ஹோம்லிருந்து அந்த பொண்ணு எங்க போகிற வரான்னு பாலோ பண்ணு.. நானும் உன் தோழியும் அவளோட அருமை தங்கச்சிய பாத்துட்டு வரோம்” என்றதில் பதறிய ருத்ரன் “ரேயன் அவகிட்ட எதுக்கு விசாரிச்சு பயம் காட்டிட்டு” என்றதில் நக்கலாக சிரித்த ஆடவன் “தங்கச்சி மேல உன்னவிட அவனுக்கு பாசமா தியா.. அப்போ கூட பிறந்த தங்கச்சி இல்ல போல” என்றவனின் கின்டலில் கையை இறுக்கி மூடியவள்
“மிஸ்டர் ரேயன் தங்கச்சி மேல அக்காக்கு மட்டும் தான் அக்கறை இருக்கணும் சட்டம் ஒன்னும் இல்லையே.. கட்டிக்க போறவனுக்கும் இருக்கலாமே” என்றதை கேட்டு ருத்ரன் அவளை அதிர்ந்து நோக்க,
அவனிடம் அர்த்த பார்வையை வீசிய தியா “அட் த சேம் டைம் கூட பிறந்தா தான் ஒட்டுதலாயிருக்கனும் அவசியம் இல்ல சோ பிளீஸ் ஹோல்ட் யூவர் டங்” என்றவள் அதிர்ந்து நின்ற நண்பனிடம் “என்ன மச்சி நான் சொன்னது சரி தான” என்றவள் அவனிடம் பழகிய நாட்களில், அவன் எவ்வளவு முறை கூப்பிட கூறியும் கேட்காதவள் இன்று தான் நண்பனை மச்சி என்று அழைத்திருக்கிறாள் அதுவும் அதில் நக்கல் தோனியேயிருக்க,
அதன் அர்த்தம் புரிந்து ருத்ரன் “மச்சி..” என்று ஏதோ கூற வர, அவனை தடுத்த “தியா விடு மச்சி.. ஏமாற்றம் எனக்கு பழக்கப்பட்டது தான் சோ ஃப்ரீயா விடு மேன்” என்று அவனின் தோலை தட்டியவள் “ரேயன் போலாம்” என்று செல்ல,
ருத்ரனின் உணர்வு புரிந்து தன் பங்கிற்கு அவன் தோலை தட்டிய ரேயன் “விடு மச்சி.. நான் சொன்ன வேலை பாரு” என்று பெண்ணவளின் பின்னே செல்ல, சிறிது நேரம் உணர்வற்று நின்ற ருத்ரன் தோழியை பிறகு சமாதானம் படுத்தி கொள்ளலாம் என்று எண்ணி ரேயன் கொடுத்த பணியான யாழிசை என்ற பெண்ணை நோட்டமிட சென்றான்.
******
ரேயனுடன் வண்டியில் வீட்டிற்கு வந்து இறங்கியவளிடம் “வீட்டுக்கு எதுக்குடி வந்திருக்க.. உன் தங்கச்சி பாக்கணும் சொன்னேன்ல”
“அவளுக்கு இன்னைலயிருந்து செமஸ்டர் ஹாலிடே சோ வீட்டுல தான் இருக்கா” என்று வீட்டிற்கு நுழைய, தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்த பட்டம்மாள் இருவரையும் கண்டு வாயை பிளக்க, அவரின் வாயை மூடிவிட்டு அருகில் அமர்ந்தவள் “இப்போ எதுக்கு உன் டேங்க ஓபன் பண்ணின”
“பின்ன ரெண்டு நாள் முன்னாடி தான் கல்யாணமாகி குழந்தை குட்டியோட வாழுன்னு ஆசிர்வாதம் பண்ணினேன்.. நீ ஜெட் ஸ்பீட்ல ஒருத்தன இழுத்துட்டு வந்துட்ட” என்றவர்,
அவள் “கிழவி” என்று பல்லை கடித்ததை கூட கண்டு கொள்ளாமல் ரேயனிடம் “என்ன தம்பி வீட்டுக்கு வந்த மாப்பிளை நின்னுட்டு இருக்கீங்க.. உங்க வீடு போல தான் கூச்சப்படாம உக்காருங்க” என்றதை கேட்டு பெண்ணவளை முறைத்துவிட்டு அமர்ந்தவன் “பாட்டி” என்று ஏதோ கூற வர,
அதனை தடுத்தவரோ “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் தம்பி.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு நீங்க சொல்லி தெரியிறளவு கூறுகெட்டவ இல்ல நான்.. அதுனால சீக்கிரம் குடும்பத்தோட வந்து என் பேத்திய முறைப்படி பொண்ணு கேளுங்க.. சந்தோசமா கல்யாணத்த முடிச்சிடலாம்” என்க,
அவரின் பேச்சில் காளியானவள் தான் அழைப்பதையும் கண்டு கொள்ளாததில் மேலும் சினம் தலைக்கேற எழுந்து டைனிங் டேபிளிலிருந்த கண்ணாடி பாத்திரத்தை தள்ளிவிட்டு “நிறுத்து கிழவி.. யாரு என்னன்னு தெரியாம.. உன் இஷ்டத்துக்கு பேசுற அறிவில்ல உனக்கு.. அவன கட்டிக்கிட்டு வப்பாட்டியா போகிறதுக்கு என்ன கிணத்துல தள்ளி விட்டுரு.. யாருக்கும் இடைஞ்சல் இல்லாம நிம்மதியா போய் சேந்திருரேன்.. எப்போ பாரு கல்யாணம் கல்யாணம்ன்னு உசுர வாங்காத” என்று கத்தியவள் உடைந்த கண்ணாடி பாத்திரத்தின் மீதே ஏறி, காலில் ரத்தம் வருவதை கூட பொருட்படுத்தாமல் மாடியேறி அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்தினாள்.
இவளின் செயலில் இருவரும் அதிர்ந்து நிற்க, பெண்ணவளிடம் இப்படியொரு அவதாரத்தை எதிர்பார்க்காமல் திகைத்தவன், அவளின் காலில் குருதியை உணவற்று வெரிக்க, முதியவரோ “நீங்க உக்காருங்க தம்பி.. நான் போய் அவளுக்கு குடிக்க எதாவது கொடுத்துட்டு கால்ல கட்டு போட்டுட்டு வரேன்” என்றவருக்கு ‘இது அடிக்கடி நடக்கும்’ வாடிக்கை என்றாலும் பேத்தியின் நிலை வேதனையாக இருந்தது.
இப்போது ரேயன் “என்னாச்சி பாட்டி அவளுக்கு.. என் இப்படி ரூடா நடந்துக்குறா”
“இது புதுசுலாம் இல்ல தம்பி அடிக்கடி நடக்கிறது தான்.. கல்யாணத்த பத்தி பேசினாலே இப்படி தான் பஜாரியாயிடுவா.. நீ அத பெருசா எடுத்துக்காத தம்பி.. உக்காரு உனக்கு குடிக்க எதாவது கொடுத்துட்டு போறேன்”
“இல்ல பாட்டி ரெண்டு பேருக்கும் ஜூஸ் எடுத்துட்டு மேல வாங்க.. நான் போய் அவளுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்றேன்”
“இல்ல தம்பி அவ ரொம்ப கோபமா இருப்பா.. நீங்க போனா சமாளிக்க முடியாது நான் பாத்துக்கிறேன்”
“நான் தான் சொல்லுறேன்ல ஃபர்ஸ்ட் எய்ட் கிட் கொடுங்க” என்று அவரிடம் முதலுதவி பெட்டியை வாங்கியவன் “நான் போய் பத்து நிமிஷத்துல வாங்க” என்று பெண்ணவளின் அறைக்குள் சென்றான்.
****
தியாவின் அறைக்குள் நுழைந்தவன் பெண்ணவள் கோவத்தில் கையை சுவரில் குத்தி கொண்டிருப்பதை தடுத்து “பைத்தியமாடி உனக்கு.. பாட்டிக்கு எனக்கு கல்யாணமான விஷயம் தெரியாம பேசிட்டாங்க.. பெரியவங்கன்னு கூட மரியாதை இல்லாம சைகோ போல நடந்துக்குற” என்றதில் அவனிடமிருந்து தன் கையை உதறி “ஆமா நான் சைகோ தான்டா.. கண்ணு முன்னாடி நிக்காம போயிடு” என்று படுக்கையிலிருந்த தலையணை நான்கையும் வீச,
அதனை வாகாக கையில் பிடித்து கீழ வைத்த ரேயன், பெண்ணவளை இழுத்து படுக்கையில் தள்ளிவிட்டு காலை பிடிக்க, அவளோ எழுந்து அவனை தள்ளி விட, பொறுமையிழந்த ரேயன் அவளின் செவியிலே பளாரென்று ஒன்று விட்டான்.
ஏற்கனவே அழுத்தம் தாங்காமல் கத்தி கொண்டிருந்ததாலும் காலில் வந்த குருதியாலும் ஒரு அடிக்கே தியா மயங்கி விட, பெண்ணவளை கையில் ஏந்தி படுக்கையில் கிடத்திவிட்டு,
அவள் காலை தன் மடியில் வைத்து ரத்தத்தை துடைத்துவிட்டு கட்டு போட்டுவிட்டு பெண்ணவளின் முகத்தை வெறித்திருந்தவன் “சாரி தியா.. உன்னோட இந்த மாற்றத்துக்கு நானும் காரணம்ன்னு நினைக்கும் போது வலிக்க தான் செய்து.. அதுக்காக நீ பண்ணினது மன்னிச்சி விட்டுருவேன் நினைக்காத” என்று அவளுக்காக வருந்திய முகம் நொடியில் இறுகி போனது.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍

