Loading

நினைவுகள் -21

அன்று…

ஹாஸ்டலே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.

 ஒவ்வொருவரும், அவரவருடைய தாய்நாட்டிற்கு கிளம்புவதற்காக, தங்களது உடமைகளைப் பரபரப்புடன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

தாய் நாட்டிற்கு திரும்பும் ஆர்வம் ஒருபுறம் இருக்க, இவ்வளவு நாள் தாயாய், சகோதரியாய் எல்லாவுமாக இருந்த தோழிகளை விட்டு பிரிந்து செல்வது மனதை வருத்த, கலங்கிய கண்களுடன் இருந்தனர்.

இந்த ஐந்தரை வருடங்களாக வெளிநாட்டில் குடும்பத்தைவிட்டு இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த நட்பை பிரியும் போது உள்ள வலியை எழுத்தில் சொல்ல முடியாது‌‌.

ராதிகாவும், அனன்யாவும் கூட

 அந்த வலிக்கு விதிவிலக்கு அல்ல.

அவர்களும் கவலையோடு இருந்தனர். ஒரு வழியாக, கண்ணீரோடு பக்கத்து அறைத்தோழிகளுக்கு விடைக்கொடுக்க…

 எஞ்சியிருந்தது அந்த ஃப்ளோரில் இவர்கள் இருவர் மட்டுமே‌.

 கொஞ்ச நேரம் இருவரும் சுருண்டு படுத்திருக்க.

அதற்குள் விஸ்வரூபன் அழைத்திருந்தான். ” ஹேய் அந்துருண்டை… ஃபோனை எடுக்க இவ்வளவு நேரம்? “

” ஒன்னுமில்லை மாமா. கொஞ்சம் டயர்டா இருந்தது. படுத்திருந்தோம். அதான்.” என்று டல்லாகக் கூற.

அவளது மனநிலைப் புரிந்த விஸ்வரூபன், “ஹேய்… நீயும், உன் ஃப்ரெண்டும் இன்னும் கிளம்பலையா? நான் உங்களுக்காக ஜீ மால்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஓ காட்! டைம் மேனேஜ்மென்ட கீப் அப் பண்ண மாட்டீங்களா? எல்லாம் சகவாசதோஷம்…” என்று வேண்டுமென்று ராதிகாவை இழுத்து வைத்துப் பேசினான்.

அவன் நினைத்ததுப் போலவே வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தாள். ” மாமா… அவளை ஏதாவது சொன்னீங்கன்னா பாருங்க.” என்று மிரட்டினாள்.

” சரி… சரி… சீக்கிரமா வாங்க. நான் ஃபிப்த் ப்ளோர்ல வெயிட் பண்ணுறேன்.” என.

” நீங்க எதுக்கு இப்போ ஃபிப்த் ப்ளோர்ல இருக்கீங்க மாம்ஸ்… நாங்க வர்றதுக்குள்ள சாப்பிடலாம்னு ப்ளான்ல இருக்கீங்களா? ” என்று வினவ.

” அட லூஸே… இங்கே வ்யூ பாய்ண்ட் நல்லா இருக்கும். ஹோல் சிட்டியும் தெரியும். நான் இங்கே வேடிக்கைப் பார்த்துட்டு தான் இருக்கேன். உன்னை விட்டுட்டு சாப்பிடமாட்டேன். அப்புறம் நீ வந்ததும், இந்த புட் கோர்ட்ல இருக்குற எல்லா ஐட்டத்தையும் வாங்கித் தரேன் போதுமா” என.

” ஹி… ஹி… வச்சிடுறேன் மாம்ஸ்.” என்று அசடு வழிந்தாள் அனன்யா.

இளம் புன்னகையுடன் அவர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினான் விஸ்வரூபன்.

அனன்யா பேசியதைக் கேட்ட ராதிகா முகம் கழுவி விட்டு, வெளியே செல்வதற்கு கிளம்பி வந்தாள்.

ஏற்கனவே எல்லோரையும் பிரியும் வருத்தத்தில் இருந்த ராதிகா ஏனோதானோவென்று ஒரு ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்ட்டும் எடுத்துப்போட்டிருக்க, அப்போதுதான் ஃபோனை வைத்து இருந்த அனன்யா, ராதிகாவின் தலையில் ஒரு குட்டு வைத்து, ” ஏய் ராது… இன்னைக்கு ஒழுங்கா ட்ரெஸ் பண்ணு. நாம ஃபர்ஸ்ட் ஷாப்பிங் போறோம். அப்புறம் பீச்சுக்கு போறோம். அங்க நீ மாம்ஸ் கிட்ட மனசுல உள்ளதை சொல்லுற புரியுதா?

இப்போ விட்டால் அப்புறம் சான்ஸ் கிடைக்காது. நீ அப்புறம் தஞ்சாவூர் போயிடுவ… என்னோடவே சென்னைல மேற்படிப்பு படின்னு சொன்னால் கேட்க மாட்டேங்குற‌… நீ சரினு சொன்னால் எங்க மாமா காலேஜ்லேயே நானும், உன் கூடவே சேருவேன். இல்லைன்னா வேற காலேஜ் தான்.”

” ப்ச்… அதெல்லாம் சரி வராது அனு… “

“உடனே இதை மட்டும் சொல்லிடு. அட்லீஸ்ட் எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் இருந்துட்டு போயேன் டி. அம்மாவும், அத்தையும் உன்ன பாக்கணும்னு சொல்லிகிட்டே இருக்காங்க. வீடியோ கால்ல பேசு என்று சொன்னால், நீ தான் வரமாட்டேங்குற.”

 ” அது… ஃபோன்ல பார்த்து என்ன பிடிக்காமல் போயிடுச்சுனா… அதான் பேசலை விடு அனு. அதுவுமில்லாமல் உங்க பாட்டியை நினைச்சாலே பயமா இருக்கு.”

” ஹே எங்க பாட்டி ரொம்ப நல்லவங்க. பார்க்க தான் ரஃப் அண்ட் டஃபா தெரிவாங்க. பட் உண்மையிலே ரொம்ப நல்லவங்க. கூடிய சீக்கிரம் எங்க வீட்டு மருமகளா வீட்டுக்கு வா, அப்போ புரிஞ்சுப்ப.” என்று சொல்லி அனு புன்னகைக்க.

“சரி” என தலையாட்டியவள், மீண்டும் அனுவைப் பார்த்து, ” அனு… இன்னைக்கு நான் அவசியம் சொல்லித்தான் ஆகணுமா?”

” யெஸ் கண்டிப்பா இன்னைக்கு உன் மனசுல உள்ளதை எங்க மாமாக் கிட்ட சொல்லுற…”

” எனக்கு பயமா இருக்கு அனு. ஒரு வேளை உங்க மாமாக்கு என்னைப் பிடிக்கலைன்னா?” என்று ராதிகா எதிர் கேள்வி கேட்க.

” ராது டியர். ஃபர்ஸ்ட் நீ சொன்னா தான் அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். இப்படியே பேசிட்டு இருந்தா சரி வராது. இந்தா இதைப் போட்டுட்டு வா.” என்று மிரட்டிய அனு, ராதிகாவின் கையில் ஒரு அழகிய பிராக் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.

விஸ்வரூபன் காத்திருந்த ஷாப்பிங் மாலுக்கு சென்றார்கள்.

விஸ்வரூபனின் கண்களோ, ராதிகாவை மட்டுமே பார்த்தவாறு இருந்தது. லேசான முகச் சிவப்போடு,கொள்ளை அழகாக காட்சியளித்தாள்.

இன்று…

அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்திராத கிருஷ்ணன், அன்று மாலை மருத்துவமனைக்கு வந்தவர், ராதிகாவிற்கு தனிப்பட்ட அழைப்பு விடுவிக்க வேண்டும் என்று எண்ணியவாறே தனது அறைக்கு சென்றார்.

 அவர் வந்த தகவல் எப்படித்தான் தெரியுமோ அடுத்த நொடியே அவர் முன் வந்து நின்றாள் ராதிகா.

 அதை பார்த்த கிருஷ்ணன் முகம் மலர, புன்னகைத்தவர், ” வந்துட்டியா ராதிகா. உட்கார்.” என்று கூற…

” சார் இன்னைக்கு ஏதும் ஆஃப்ரேஷன் இல்லையே?” என்று வினவ.

” ம் தெரியும். உன்னை பார்க்கத்தான் வந்தேன்.”

” ஓ…” என்ற ராதிகா அதற்குப் பிறகு தான் அமர்ந்தாள்.

” சொல்லுங்க டாக்டர். ஏதாவது முக்கியமான விஷயமா?”

” யெஸ் ராதிகா. நெக்ஸ்ட் வீக் என்னோட பேத்தியோட பர்த்டே பங்க்ஷன். தெரியும் தானே.”

” யா டாக்டர்… நெக்ஸ் வீக்னு தெரியும். டேட் எக்ஸாட்டா தெரியாது. ஏன்னா, ஹாஸ்பிடலில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டாச்சு. பட் எனக்கு மட்டும் இன்னும் அழைப்பு இல்லையே டாக்டர்… நான் யாரோ தானா…” என்றுக் கூறி புன்னகைக்க.

” யூவார் மை ஸ்பெஷல் கெஸ்ட். சோ உனக்கு ஸ்பெஷல் அழைப்பு.” என்ற கிருஷ்ணன், அவளுக்கான இன்விடேஷேனை நீட்டியபடியே, ” ராதிகா… இந்த இன்விடேஷன் ஈவினிங் பார்ட்டிக்கானது. கிண்டியில் உள்ள ஹோட்டல் பார்க் ஹையட்.

 மதியம் லஞ்ச்க்கு எங்க வீட்டுக்கு வா. எங்க வீட்ல உள்ளவங்க எல்லாரையும் உனக்கு அறிமுகப்படுத்துறேன். நானே ஃப்ரைடே மார்னிங் வந்து உன்னை அழைச்சிட்டு போறேன்.” என…

” டாக்டர்! நெக்ஸ்ட் ஃப்ரைடேயிலிருந்து, த்ரீ டேஸ்க்கு லீவ் அப்ளை பண்ணியிருக்கேன் சார்.” என்று மெல்லிய குரலில் கூற.

 ஒரு நிமிடம் அதிர்ந்த கிருஷ்ணன்,” ஏன் ராதிகா அவசியம் போகணுமா? லீவை கேன்சல் பண்ணலாமே.”

 ராதிகாவோ வார்த்தைகள் தடுமாற, “டாக்டர்! எங்க அக்காவோட பிறந்தநாள். அன்னைக்கு பெரிய கோவிலுக்கு போவேன். அது மட்டும் இல்லாமல் அன்னதானத்துக்கு சொல்லியிருக்கோம். என்னால அதை மாற்ற முடியாது டாக்டர். ஏன்னா எங்க அக்கா இப்போ உயிரோட இல்லை. அவளோட நினைவுகள் அந்த கோவிலில் தான் இருக்கு. அதான் டாக்டர் என்னால வர முடியாது.” என்று தயங்கித் தயங்கி கூறினாள்.

” இட்ஸ் ஓகே ராதிகா. நோ ப்ராப்ளம் அம்முகுட்டியே பாக்கணும்னு ரொம்ப நாளாக சொல்லிட்டுருந்தியேனு நினைச்சேன். இட்ஸ் ஓகே மா. இன்னொரு நாள் உன்னை நான் வீட்டுக்கு இன்வைட் பண்றேன். அப்போ நீ வா… ” என்று அவளை சமாதானம் செய்தார் கிருஷ்ணன். இருந்தாலும் அவருக்கும் சற்று ஏமாற்றம்தான். அதை அவளுக்காக மறைத்துக் கொண்டார்.

கிருஷ்ணன் கூறியதைக் கேட்ட ராதிகா, முகம் மலர்ந்தாள். ” அம்முக் குட்டியோட பெயர் என்ன டாக்டர்? நானும் கேட்கணும்னு நினைப்பேன், அப்புறம் மறந்துடுவேன்.” என்று கூறியவாறே, இன்விடேஷனைப் பிரித்து பார்த்தாள். பேபி அவந்திகாவின் ஃபர்ஸ்ட் பர்த்டே என்று இருக்க‌… அதில் இருந்த பெயரைப் பார்த்த ராதிகா அதிர்ந்தாள்.

அவந்திகா தன்னுடைய அக்காவின் பெயர். அதுவும் இருவரது பிறந்தநாளும் ஒன்றாக இருக்க. அவளுக்கு அதிர்ச்சி. அதை மறைத்தவள், “கண்டிப்பா அவந்திகாவைப் பார்க்குறதுக்காக உங்க வீட்டுக்கு வருவேன்.” என்றாள் ராதிகா.

“உனக்காக எங்க வீடு எப்பவும் திறந்திருக்கும்.”என்று மர்மப் புன்னகை பூத்தார் கிருஷ்ணன்.

நாட்கள் விரைந்தோட குழந்தை அவந்திகாவின் பிறந்தநாளும் வந்தது. அந்த வீட்டின் முதல் வாரிசு. பிறகென்ன காலையிலிருந்தே அந்த மாளிகை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காலையில் கோவிலில் அபிஷேகத்திற்கு கொடுத்து இருந்தார்கள். அதற்கு சென்று விட்டு வந்ததும், மதிய உணவு ஏற்பாட்டை கவனிக்க ரஞ்சிதமும், கௌரியும் சென்றனர்.

 எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருந்தாலும், மேற்பார்வை நாம் தான் பார்க்க வேண்டும். அதனால் தான் கௌரி, மனதிற்குள் அவ்வளவு கவலை இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, தன் அண்ணியுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

 கௌரியின் முகத்தையே அவ்வப்ப்போது பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதம், ” கௌரி… நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. ” என்று ஆறுதலாக கூற…

” இல்ல அண்ணி… தனியா இருந்தா அனுவோட ஞாபகம் தான் வருது. அவ உயிரோட இருந்திருந்தாலே எனக்கு போதுமே. நான் மிகவும் சந்தோசமாக இருந்திருப்பேனே. எந்த ஜென்மத்திலோ நான் பாவம் பண்ணியிருக்கேன் போல, அதான் இன்னமும் என்னை தொடர்ந்து வந்துட்டே இருக்கு…” என்று கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.

” கௌரி… என்ன பேச்சு பேசுற ? உதை வாங்கப் போற… அம்முக் குட்டியோட பிறந்தநாள். அதை மட்டும் நினை. முடிஞ்சது பற்றி பேசாத… சரி ஸ்வீட் மட்டும் வீட்ல செய்யலாம்னு இருக்கேன். நம்ம அனுவுக்கு பிடிச்ச குலோப்ஜாமூன் தான் செய்யப் போறேன். வா… நீயும் வந்து ஹெல்ப் பண்ணு…” என்றுக் கூறி அவளது மனதை மாற்றினார் ரஞ்சிதம்.

மதிய விருந்திற்கு முக்கிய விருந்தாளிகளை மட்டும் அழைத்திருந்தனர். அவர்களை எல்லாம் நன்றாக கவனித்து அனுப்பி விட்டு வீட்டில் உள்ளவர்கள் சற்று நேரம் ஆற அமர்ந்தனர்.

 கிருஷ்ணனின் சகதர்மினி தனது கேள்வியை ஆரம்பித்தார். ” ஏங்க… உங்களோட ஸ்பெஷல் கெஸ்ட்ட இன்னைக்கு அறிமுகப்படுத்துறதா சொன்னீங்களே… எங்க அவங்களைக் காணோம்.”

 ” அது… ரஞ்சி… அவங்களுக்கு ஒரு முக்கியமான வொர்க். அதனால் வர முடியலைன்னு சொன்னாங்க.” என்றுக் கிருஷ்ணன் கூற…

” யாரு பா அது? உங்க ஸ்பெஷல் கெஸ்ட். நீங்க இன்வைட் பண்ணியும் வராமல் இருக்கிறாங்க?” என்றுக் வினவிய விஸ்வரூபன், கிருஷ்ணனை ஆழ்ந்துப் பார்க்க…

” அது… ” என்று கிருஷ்ணன் தயங்கினார்.

” டாட்…” என்று ஆச்சரியமாக விஸ்வரூபன் வினவ.

ரஞ்சிதம் வந்து, கிருஷ்ணனின் வேலையை குறைத்தார். ” அது தான் பா… நம்ம காஞ்சிபுரம் பிரான்ச்ல பார்ட் டைமா வொர்க் பண்ணுற பொண்ணு. நம்ம காலேஜ்ல தான் படிக்குது. பேரு என்னங்க… ஹாங்… ராதிகா… எப்ப பார்த்தாலும் என் டார்லிங், என்று உங்க அப்பா சொல்லிக்கிட்டே இருப்பார். இன்னைக்கு என் கிட்ட அறிமுகப்படுத்துறேன் என்று சொன்னார். ஆனா அவ வரலை…” என்றார்.

அதைக் கேட்ட விஸ்வரூபனின் முகம் இறுகியது. ‘ தன் தந்தை யாரை அழைத்திருக்கிறார், அவள் ஏன் இங்கு வரவில்லை? எங்கு சென்றிருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரிந்து விட்டது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்