
நினைவுகள் -20
அன்று…
ராதிகாவின் மனதை புரிந்து இருந்த அனன்யா அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு, தனக்கு ஹாய் சொன்ன தோழியை நோக்கிச் சென்றிருந்தாள்.
திரும்பி வரும்போது ராதிகாவின் முகமும் சிவந்து இருந்தது.
‘ஆஹா… நாம போட்ட ப்ளான் வொர்க் அவுட் ஆகிடுச்சு போலயே!’ என்று மனதிற்குள் நினைத்த அனன்யா, ” அப்புறம் ராது?” என்று வினவ…
அவளைப் பார்த்து முறைத்து விட்டு விடுவிடுவென எழுந்து சென்று விட்டாள் ராதிகா.
‘ஐயோ! அப்போ அந்த முகச் சிவப்பு வெட்கத்தால் இல்லையா? கோபத்தாலா… ‘ என தலையில் கைவைத்து யோசித்துக் கொண்டிருந்தாள்.
அனன்யாவை பார்த்த விஸ்வரூபனோ, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, வெளியே ஒன்றும் தெரியாதது போல் அமைதியாக இருந்தான்.
” மாமா! ராது ஏன் கோபமாக போறா?”
‘”அது எனக்கு எப்படி தெரியும் அந்துருண்டை. “
” நீங்க தான் ஏதாவது வம்பு பண்ணியிருப்பீங்க.” என்றுக் கூறிய அனன்யா, அவனைப் பார்த்து முறைக்க.
” நான் ஒன்னும் பண்ணல. ஜஸ்ட் ரெண்டே,ரெண்டு வார்த்தை தான் கேட்டேன். யார் அந்த கண்ணன்? அதுக்கு தான் அவ முறைச்சிட்டு போறா.” என்று குறும்புடன் கூற…
“நீங்க இருக்கீங்களே மாம்ஸ்! எப்பப் பாரு அவ கிட்ட வம்பு பண்றதே வேலை.” என்று கடிந்துக் கொள்ள.
” சரி விடு… நான் கிளம்பட்டுமா?” என்றான் விஸ்வரூபன்.
” ஏன் மாமா! அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்றீங்க.”
” அது தான் நான் வந்த வேலை திவ்யமா முடிஞ்சிருச்சு. அப்புறமென்ன நான் வரேன். அப்படியே அந்த பாப்கார்ன் கிட்டயும் சொல்லிடு.” என்றவன், கிளம்பி விட்டான்.
” மாமா………..” என்று பல்லைக் கடித்தவள், பெருமூச்சு விட்டுக் கொண்டே ராதிகாவைத் தேடி சென்றாள்.
அவளை சமாதானம் செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது.
வருடங்கள் வேகமாக ஓட, இவர்களுடைய படிப்பும் சிறப்பாக சென்றது.
******************
பிலிப்பைன்ஸ் வந்து நான்கு வருடம் முடிந்துவிட்டது.
இதோ, இன்றைய நாள். மருத்துவம் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் முக்கியமான நாள்.
ஆம் இன்று முதல் மருத்துவமனையில் நோயாளிகளை நேரடியாக பார்க்க போகிறார்கள்.
அனன்யா வழக்கம் போல பரபரப்பாக இருக்க.
ராதிகாவோ, அதிசயமாக புடவை கட்டிக் கொண்டு இருந்தாள்.
” ஹே! ராது! என்னை இன்னைக்கு அதிசயமாக சாரி கட்டி இருக்க?” என்று வினவ…
” கோவிலுக்கு போறேன் அனு.”
” ஹா… ஹா… என்ன ஹாஸ்பிடல் போறதுக்கு பயம் வந்துருச்சா.” என்று அனு கிண்டலடிக்க.
” ப்ச்… அக்காவுக்கு இன்னைக்கு பிறந்தநாள் அதான் கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்.”
” ஹே! சாரி ராது… மறந்துட்டேன்.” என்ற அனு அமைதியாகிவிட.
” அதுக்கு ஏன் நீ கவலைப்படுற.விடு அனு! இத்தனை வருஷத்துல நானே மறக்க ஆரம்பிச்சுட்டேன். காலம் எல்லாவற்றையும் ஆற்றும் மருந்து என்பது உண்மை தான்.
அக்காவுக்காக ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் அங்க உட்கார்ந்துட்டு வந்தா, கொஞ்சம் மனசு ரிலாக்ஸா இருக்கும் வேணும்னா நீயும் வாயேன். கடவுள் கிட்ட நல்லா வேண்டிக்க… கடவுளே! என்கிட்ட வர பேஷண்டெல்லாம் நீதான் காப்பாத்தணும்.” என்று ராதிகா சொல்லி முடிக்கலை.
அனு அவளை துரத்த ஆரம்பித்தாள். ” ஏய் ராது!உன்னை சும்மா விட மாட்டேன்.” என…
” வேண்டாம் அனு… இந்த புடவையை கட்டிட்டு என்னால ஓட முடியலை.”
” அதெல்லாம் முடியாது. உன்னை சும்மா விட மாட்டேன்.” என்று அனு துரத்தினாள்.
அந்த சின்ன அறையில் ஒரு வழியாக ராதிகாவை பிடித்தவள், அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தாள்.
” ஏய் அனு இன்னமும் என்னைப் பிடித்துக் கொண்டு கீழே விழுவதை விடவே இல்லையா?” என்று சொல்ல…
இப்பொழுது அனு, ” ஹேய் ராது … அதைப் பத்தி மட்டும் பேசாத.” என்று தடுக்க…
” ஏன் பேச கூடாதா? நான் அப்படித்தான் பேசுவேன். எப்ப வேணுமுன்னாலும் பேசுவேன்.” என்று சிரித்துக்கொண்டே ராகம் பாடினாள் ராதிகா.
” சிரிக்காதே ராது.” என்று அனு கெஞ்சும் குரலில் கூறினாள்.
” ஹா… ஹா… ஆனாலும் உனக்கு இவ்வளவு கான்பிடன்ஸ் இருக்கக் கூடாது அனு.” என்றுக் கூறிய ராதிகா, மீண்டும், மீண்டும் பொங்கி சிரித்தாள்.
அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் அனு.
” அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே தோழியே!” என்று ராதிகா பாட.
” உனக்கு கிண்டலா இருக்கா ராது. நான் பாவமில்லையா.” என்று வினவிய அனுவும், ” இல்லையே.” என்ற ராதிகாவும் அன்றைய நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தனர்.
‘ இவர்கள் பிலிப்பைன்ஸ் வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது.
பி.எஸ் ( சைக்காலஜி) ஒரு வருடம் முடித்து விட்டு மெடிக்கலுக்கு வந்த புதிது.
முதல் வருடம் முழுவதும் அனாடமி… பையோ கெமிஸ்ட்ரி… பிஸியாலஜி…
இதைப் பற்றி தான் படிப்பார்கள். வாரத்திற்கு இரண்டு அனாடமி கிளாஸ்.
முதல் அனாடமி வகுப்பிற்கு செல்லும் எல்லா மாணவர்களுக்குமே சற்று படபடப்பாகத் தான் இருக்கும்.
அப்படி இருக்க, அனுவும், ராதிகாவும் அந்த புது அனுபவத்திற்கு கிளம்பினர்.
அனு, ” ராது பயப்படாதே… நான் உன் பக்கத்திலேயே இருக்கேன்.பயமா இருந்தா என் கைய புடிச்சுக்கோ…” என்று அவ்வளவு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பத்துப் பத்து பேர் ஒரு குரூப். ஒரு குரூப்பிற்கு ஒரு கேடவர்( இறந்த உடல்) கொடுத்துடுவாங்க.
கேடவரை க்ளீன் பண்றது, அதாவது ஹேரை ரீமுவ் பண்ணுறது, நைல் கட் பண்ணுறது, ஸ்கின்ன எடுக்கறது, அப்புறம் ஒவ்வொரு ஆர்கன்ஸையும் எடுக்கறது எல்லாமே, எக்ஸ்பீரியன்ஸ் டாக்டர்ஸ் மூலமா சொல்லிக் கொடுப்பாங்க. ஒவ்வொரு ஸ்டுடென்ட், ஒவ்வொன்று செய்யணும்.
ஒவ்வொரு மாணவர்களும் தயங்கிக் கொண்டிருக்க, ராதிகா முன் வந்து முதலில் ஆப்ரேட் பண்ணினாள். அடுத்து, அடுத்து ஒவ்வொருவராக செய்ய, திடீரென்று தான் இழுக்கப்படுவதை உணர்ந்த, ராதிகா என்னவென்று திரும்பி பார்க்க, அனன்யா பயந்து, இவளது கையை இறுகப் பற்றியிருந்தாள்.
இவ்வளவு நேரம், டாக்டர் சொல்வதை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த ராதிகா, பயந்துக் கொண்டிருந்த அனுவை கவனிக்கவில்லை. இப்போது அனு மயங்கி விழும் போது, இவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு விழுந்தாள். அதற்குப் பிறகு அவளுக்கு முதலுதவி செய்தனர்.’ அதைத் தான் இப்போது சொல்லி ராதிகா கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தார்கள்.
” சரி… சரி… விடுடி… வீராங்கனையின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.” என்றாள் அனு.
” யாருடி வீராங்கனை?” என்ற ராதிகா, அவளை கேலியாக பார்க்க.
” ஐயோ! ராது… என்னால முடியல… விட்டுடு….”
” என்னது முடி இல்லையா? இதோ இவ்வளவு இருக்கே…” என்று அவள் தோள்பட்டை வரை இருந்த முடியை காண்பித்து கேலி செய்ய…
” ராது… என்னோட சேர்ந்து நீயும் கெட்டு போயிட்ட… டூ பேட். நான் உனக்கு குரு. கொஞ்சமாவது மரியாதைக் கொடுடி.” என அழா குறையாகக் அனு கூற…
” சரி பொழைச்சு போ. “என்றாள் ராதிகா.
அவளை பொய்யாக முறைத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தாள் அனு.
” ஏய் அனு சீக்கிரமா வா. அப்போ தான் குருத்துவார்க்கு போயிட்டு, காலேஜுக்கு போக சரியா இருக்கும்.” என்று ராதிகா குரல் கொடுக்க…
” சரி.” என்ற அனுவும் ஐந்து நிமிடங்களில் ரெடியாகி விட… இருவருமாக கிளம்பிச் சென்றனர்
அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று அவுட்டோரில் இருந்தது. குருத்துவார்.
இங்கே இந்தியாவில் இருப்பது போல கோவில் இருக்காது. கோபுரம் அமைப்பு இல்லாமல், வீடு போலவே இருக்கும். அங்கு போய் சாமி கும்பிட்டு விட்டு, சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்து விட்டு வருவார்கள்.
அதேபோல் இன்றும் அவர்கள் இருவரும் சென்று விட்டு, காலேஜிற்கு திரும்பியிருந்தனர். இப்போது ராதிகாவின் மனம் இலகுவாக இருந்தது.
இன்று முதல் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை நேரடியாக பார்க்க போகிறார்கள்.
ஒவ்வொரு பேஷண்டையும் பார்த்து அவர்களுக்கு என்ன பிராப்ளம் என்று டையக்னஸ் செய்து, அதற்கு சரியான மருந்தை கூறி அவர்களை க்யூர் செய்து, அவர்களால் தான் சரியானது என்று பேஷண்ட் கூறும் போது இத்தனை வருஷமாக அவர்கள் படிப்பதற்காக பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் மாயமாக மறைந்து, ஒரு பெரும் நிம்மதி கிடைக்கும். அதை ராதிகாவும், அனுவும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தனர்.
அப்படியே அவர்கள் மருத்துவப் படிப்பில் ஒவ்வொன்றையும் கத்துக்கொண்டு, இந்தியாவை நோக்கிச் செல்லும் நாளும் வந்தது.
வழக்கம் போல விஸ்வரூபன், அனுவை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தான்.
வந்தவன், இந்தியா செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு, ஒரு நாள் சுற்றிப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று கூறியவன், ராதிகாவையும் அவர்களுடன் வருமாறு அழைத்தான்.
ராதிகாவும் ஒரு முடிவுடன் இருந்ததால், அவன் கூறியதற்கு சரி என்று தலையாட்டினாள்.
‘ இந்தியாவிற்கு சென்று விட்டால், மீண்டும் அவனிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமோ, இல்லையோ இந்த சான்ஸை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’ என்று நினைத்தாள்.
விஸ்வரூபனும் மனதிற்குள் ஒரு திட்டம் தீட்டிருந்தான்.
இன்று..
ஹாஸ்பிடலில் உள்ள எல்லா டாக்டர்ஸ் அண்ட் வொர்க்கர்ஸெல்லாம் பயந்து, மரியாதையுடன் பார்க்கும் கிருஷ்ணனை, ஈஸியா அப்ரோச் செய்வாள் ராதிகா.
அதைப் பார்த்து எல்லோரும் வியந்து தான் போவார்கள்.
கிருஷ்ணனும் ராதிகாவிற்கு நிறைய சலுகைகள் கொடுத்து இருக்கிறார். அது அவளுக்கு தெரியவில்லை, மற்றவர்களுக்கு நன்கு புலப்பட்டது
ராதிகா மேல் உள்ள அன்பு எப்படிப்பட்டது என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அவருக்குள்ளே சில ரகசியங்கள் இருக்கிறது.
அவருக்கு ராதிகாவிடம் ஒரே ஒரு குறை தான்.
ஆதவனுடன் ராதிகா பேசுவது தான். அதை அவரால் தடுக்க முடியவில்லை.
ஏற்கனவே தனக்கு பிடிக்கவில்லை என்பது ராதிகாவிற்கு தெரியும், இருந்தாலும் அவள் பேசுவதை நிறுத்தவில்லை.
அதனால் அவர் அவரோட எல்லைக்குள்ளே நின்றுக் கொண்டார்.
அவளிடம், ஆதவனிடம் பேச வேண்டாம் என்று தான் தடுக்க, நினைத்தால், அவளுக்கு மீறிக்கொண்டு செய்யத் தோன்றும். அதனால் விட்டுப் பிடிப்போம் என்று கிருஷ்ணன் நினைத்தார்.
**************
அடுத்த வாரம் கிருஷ்ணானின் செல்ல பேத்திக்கு பிறந்தநாள். தனது மருமகள் இறந்த நிலையில் சிம்பிளாக செய்வோம் என்று நினைத்தால், அவரது மனைவியும் தங்கையும் ஒத்துக் கொள்ளவில்லை.
சரி தான் அவர்களுடைய ஆசையை பூர்த்தி செய்ய, பிறந்தநாளை கிராண்டாக செய்ய முடிவெடுத்து விட்டார்.
சென்னையில் அவர்களது மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அனைவரையும் அழைத்து பெரிதாக ஹோட்டலில் பார்ட்டி அரேஞ்ச் செய்து இருந்தார். அது ஈவினிங் பார்ட்டி.
முக்கியமானவர்களை வீட்டிற்கு அழைத்து மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
ராதிகா இன்னும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பார்க்கவில்லை.இந்த சந்தர்ப்பத்தில் அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்த, ஒரு எண்ணம்.
என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்னு கிருஷ்ணன் நினைத்திருக்க.
விதியானது அவளை, அந்த வீட்டு மருமகளா தான் அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

