Loading

பரத்துடன் வெளியே வந்த துஷ்யந்த் அவனிடம் பேச்சுக் கொடுத்தபடியே இருக்க, விம்மிக் கொண்டிருந்த சிறுவன் முதலில் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு பின் துஷ்யந்த்தின் பேச்சை செவிமடுக்கலானான்.

துஷ்யந்த் பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களைக் காட்டி ஒவ்வொன்று கூறவும் பரத் அவற்றை ஆவலாக நோக்கினான்.

பரத் ஓரளவு சமாதானம் அடைந்து விட்டதை உணர்ந்த துஷ்யந்த் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகளைக் காட்டி அவர்களைப் பற்றி கூற, பிஞ்சு நெஞ்சத்தில் அவர்களை நினைத்து பரிதாபம் தோன்றியது.

சகுந்தலா வந்ததும் மூவரும் சேர்ந்து சகுந்தலாவின் வீட்டுக்கு கிளம்பினர்.

பரத் பாதி வழியிலேயே உறங்கி விட, வீடு வந்ததும் தானே அவனைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினான் துஷ்யந்த்.

கதவருகில் நின்று இவற்றை கவனித்த சகுந்தலாவின் கண்களில் ஈரம்.

ஏதோ ஒரு பாரம் நெஞ்சை அழுத்தியது.

பரத்தைத் தூங்க வைத்து விட்டு வெளியே வந்த துஷ்யந்த், “இன்னைக்கு மட்டும் பரத்தோட அழுகைய அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சகுந்தலா. கோவப்பட்டு குழந்தைய திட்ட வேணாம்.‌ அது அவனுக்கு நல்லதில்ல. நாளைக்குள்ள ஓக்கே ஆகிடுவான். நான் அப்போ வரேன்.” என்று விடை பெற்றான்.

“ஏதாவது குடிச்சிட்டாவது போகலாமே.” என சகுந்தலா கூறவும் அவளைப் பார்த்து புன்னகைத்த துஷ்யந்த், “இன்னொரு நாளைக்கு பார்க்கலாம் சகுந்தலா.” என்று விட்டு கிளம்பினான்.

_______________________________________________

அன்று இரவு எதுவும் இமர்ஜென்சி இல்லாததால் வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துஷ்யந்த்தின் கரத்தில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் நள்ளிரவில் திடீரென அலாரம் அடிக்கவும் பட்டென விழித்த துஷ்யந்த் தன் கைக் கடிகாரத்தைப் பரிசோதித்தான்.

பரத்துக்கு பொருத்திய மானிட்டரில் இருந்து தான் தகவல் வந்திருந்தது.

அதில் பரத்தின் இதயத் துடிப்பு வீதம் அதிகரித்திருப்பதாகக் காட்டவும் பதட்டமடைந்த துஷ்யந்த் சகுந்தலாவுக்கு அழைக்க, பல முறை அழைப்பு விடுத்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை.

எதைப் பற்றியும் சிந்திக்காது கையில் கிடைத்த டீ ஷர்ட்டை அணிந்து தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு யாரிடமும் கூறாது துஷ்யந்த் வீட்டில் இருந்து வெளியேற, கீழே தண்ணீர் எடுக்க வந்த சந்திரசேகரன் வேகமாகச் செல்லும் மகனைக் குழப்பமாக நோக்கினார்.

சகுந்தலாவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தவாறே காரை ஓட்டிய துஷ்யந்த் சகுந்தலாவின் வீட்டை அடைந்ததும் அவசரமாக சென்று கதவைத் தட்ட, யாரோ கதவின் அருகே ஓடி வருவதை உணர்ந்த துஷ்யந்த்தின் மனம் பரத்துக்கு என்னவோ ஏதோவென அடித்துக் கொண்டது.

சில நொடிகள் கழித்து கதவு திறக்கப்பட, துஷ்யந்த் கண்டது முகத்தில் பெரிய புன்னகையுடன் மூச்சு வாங்க நின்றிருந்த சகுந்தலாவைத் தான்.

“பரத்…” என துஷ்யந்த் பதட்டமாகக் கேட்கும் போதே, “யாரு மம்மி வந்திருக்காங்க?” எனக் கேட்டவாறு வந்த பரத்தின் முகத்தில் ஆங்காங்கே கேக் பூசப்பட்டிருந்தது.

துஷ்யந்த்துக்கு குழப்பமாக இருந்தது.

அவசரமாக பரத்தின் உயரத்துக்கு குனிந்தவன், “சேம்ப்… உனக்கு ஒன்னும் இல்லல்ல. வலிக்கிதா இங்க?” என நெஞ்சைத் தொட்டுக் காட்டி பதட்டமாகக் கேட்டான்.

பரத்தோ துஷ்யந்த்தைக் கண்டதும் மேலும் உற்சாகமாகி, “ஹை சாக்லெட் அங்கிள்… நீங்களும் எங்க கூட சேர்ந்து என்னோட பர்த் டே செலிப்ரேட் பண்ண வந்தீங்களா? ஹே ஜாலி ஜாலி… அங்கிள் வாங்க சீக்கிரம். நான் உங்களுக்கு என்னோட சூப்பர் ஹீரோ கேக்க காட்டுறேன்.” என துஷ்யந்தின் கேள்விக்குப் பதிலளிக்காது அவனின் கைப் பிடித்து உள்ளே இழுத்தான் பரத்.

“பரத் கண்ணா… நீ உள்ளே போய் விளையாடு. அங்கிள மம்மி கூட்டிட்டு வரேன்.” என சகுந்தலா கூறவும் பரத் துள்ளிக் குதித்துக்கொண்டு உள்ளே ஓடி விட, மௌனமாய் மண்டியிட்டிருந்த துஷ்யந்திடம், “என்னாச்சு துஷ்யந்த்? ஏன் இந்த நேரத்துல வந்து இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா?” எனக் கேட்டாள்.

சகுந்தலாவின் கேள்வியில் சட்டென எழுந்து நின்ற துஷ்யந்த், “என்ன நடக்குது இங்க சகுந்தலா?” எனக் கேட்ட துஷ்யந்த்தின் குரலில் லேசாகக் கோபம் எட்டிப் பார்த்தது.

அது பரத்தின் நிலையை எண்ணி ஒரு மருத்துவனாக அவனுக்கு ஏற்பட்ட நியாயமான கோபம்.

“இ…இன்னைக்கு பரத்தோட பர்த் டே… சாரி துஷ்யந்த். இருந்த டென்ஷன்ல உங்க கிட்ட சொல்ல முடியல. அப்புறம் நைட் ரொம்ப லேட்டாச்சேன்னு சொல்லல.” என்றாள் தயக்கமாக.

“நான் அதைக் கேட்கல சகுந்தலா. இந்த மிட் நைட்ல பரத்தோட ஹார்ட் பீட் அதிகமாகிடுச்சுன்னு எனக்கு அலாரம் அடிக்கவும் நான் எவ்வளவு பயந்து போய்ட்டேன்னு புரியுதா? என்ன டேஷுக்கு ஃபோன் வெச்சிருக்க. ஆயிரம் வாட்டி கால் பண்ணேன். அதைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு என்ன வேலை?” எனக் கேட்டான் துஷ்யந்த் அதட்டலாக.

அவனுக்கு மட்டும் தானே தெரியும் பரத்தின் உண்மையான நிலையும் தற்போது நடந்த அசம்பாவிதத்தில் அவன் பரத்தை நினைத்து எந்த அளவுக்கு பயந்தான் என்றும்.

அதன் பின்னர் தான் தன் தவறை உணர்ந்த சகுந்தலா, “சாரி துஷ்யந்த். பரத் கேம் விளையாடிட்டு என் மொபைல சைலன்ட்ல போட்டு இருப்பான்னு நினைக்கிறேன். நான் கவனிக்கல. கேக் வெட்டி பர்த் டே செலிப்ரேட் பண்ணதுக்கு அப்புறம் பரத்துக்கு ஜாலி ஆகி ஓடி பிடிச்சு விளையாட ஆரம்பிச்சுட்டான். நானும்…” என இழுத்தவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

“ப்ச்…” என நெற்றியை அழுத்தப் பிடித்த துஷ்யந்த், “இன்னைக்கு மார்னிங் தான் அவனுக்கு சர்ஜரி நடந்தது. மைனர் சர்ஜரியா இருந்தாலும் ஜஸ்ட் ஒரு நாளாவது ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கணும். காலைல இருந்தே அழுத களைப்பு வேற. இதுல இந்த மிட் நைட் ஓடிப் பிடிச்சு விளையாடினா அப்புறம்…” என்றவன் சட்டென தன் பேச்சை நிறுத்தினான்.

சகுந்தலா துஷ்யந்த்தைக் குழப்பமாக நோக்க, “லீவ் இட்… முடிஞ்சத பத்தி இனி பேசி பிரயோஜனம் இல்ல. இனிமேலாவது கேர்ஃபுல்லா இரு. நான் வரேன்.” என்ற துஷ்யந்த் வெளியே செல்ல சில அடிகள் நடந்து விட்டு ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி வந்து சகுந்தலாவைக் கடந்து வீட்டினுள் சென்றான்.

சகுந்தலாவும் தயக்கத்துடனே அவனைப் பின் தொடர, விளையாடிக் கொண்டிருந்த பரத்திடம் சென்ற துஷ்யந்த், “சேம்ப்… அங்கிள் ஒன்னு சொன்னா கேப்பீங்களா?” எனக் கேட்டான்.

“அஃப்கோர்ஸ் அங்கிள். மம்மிக்கு அப்புறம் எனக்கு ரொம்ப ரொம்…….ப பிடிச்ச பர்சன் நீங்க தான். எனக்கு உங்கள இவ்……வளவு பிடிக்கும்.” என மறு நொடியே எதையும் யோசிக்காது தன் கரங்களை இயன்றவரை அகல விரித்து பரத் கூறவும் துஷ்யந்த்தின் கண்களில் லேசான நீர்ப் படலம்.

பரத்தை தூக்கி அவன் கன்னங்களில் அழுத்தமாக முத்தமிட்ட துஷ்யந்த், “அங்கிளுக்கும் சேம்ப்ப ரொம்….ப பிடிக்கும். இவ்……வளவு பிடிக்கும்.” என பரத் போலவே செய்து காட்டவும் குலுங்கிச் சிரித்தான் சிறுவன்.

அதனைக் கண்டு சகுந்தலாவின் முகத்திலும் புன்னகை.

“சரி அப்போ சேம்ப் இப்போ ரொம்ப நேரம் விளையாடுனீங்க தானே. மிட் நைட் வேற ஆகிடுச்சு. சூப்பர் ஹீரோஸ் போல ஸ்ட்ரோங்கா இருக்கணும்னா ஹெல்த்தியா இருக்கணும்ல. அதுக்கு கரெக்ட் டைமுக்கு தூங்கணும்ல. இல்லன்னா சேம்ப்போட கண்ண சுத்தி டார்க் சர்க்கிள் வந்து டிமோன் போல இருப்பீங்க.” என்கவும், “பரத் ஆல்ரெடி தூங்கிட்டான் அங்கிள்.” எனக் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு துஷ்யந்த்த் தோளில் முகம் புதைக்கவும் துஷ்யந்த்தின் முகத்தில் புன்னகை அரும்பியது.

பரத்தை தூக்கிச் சென்று சகுந்தலாவிடம் கொடுத்த துஷ்யந்த், “குட் பாய். பரத் இப்போ மம்மி கூட தூங்குவீங்களாம். அங்கிள் இப்போ வீட்டுக்கு போவேனாம். நாளைக்கு அங்கிளும் பரத்தும் சேம்ப்போட பர்த் டேய க்ரேன்ட்டா செலிப்ரேட் பண்ணுவோமாம்.” என்கவும், “ஹே ஜாலி…” என சகுந்தலாவின் கையில் இருந்தவாறே துள்ளிக் குதித்தான் பரத்.

பின் சகுந்தலாவிடம் கூறிக் கொண்டு துஷ்யந்த் வெளியேற, அவனை வழி அனுப்ப வாசல் வரை வந்த சகுந்தலா, “சாரி துஷ்யந்த். என்னால உங்களுக்கு ரொம்ப டிஸ்டர்ப்.” என மன்னிப்பு வேண்டவும் லேசாகப் புன்னகைத்த துஷ்யந்த், “டேக் கேர். பாய்…” என்று விட்டு கிளம்பினான்.

துஷ்யந்த்தின் கார் மறையும் வரை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா.

வீட்டுக்கு வந்த துஷ்யந்த்தை வரவேற்றது சந்திரசேகரனின் சந்தேகப் பார்வை தான்.

ஹால் சோஃபாவிலேயே காத்திருந்தவர் துஷ்யந்த்தைக் கண்டதும், “இந்த நேரத்துல அவ்வளவு அவசரமா எங்க துஷ்யந்த் போய்ட்டு வர?” எனக் கேட்டார் அழுத்தமாக.

துஷ்ய்ந்த் பதிலளிக்க வாயைத் திறக்கும் முன்னே, “ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி விசாரிச்சேன். எந்த இமர்ஜென்சி கேஸும் வரலன்னு சொன்னாங்க. என்ட் நீ அங்க போகவே இல்லன்னாங்க.” என்றார் சந்திரசேகரன்.

பதிலுக்கு தந்தையை அழுத்தமாக நோக்கிய துஷ்யந்த், “முதல் விஷயம்… நான் போனது ஒரு இமர்ஜென்சி கேஸ் தான். பட் ஹாஸ்பிடலுக்கு இல்ல. சகுந்தலா வீட்டுக்கு. பரத்தோட ஹார்ட் பீட் சடன்னா ரெய்ஸ் ஆகவும் எனக்கு அலாரம் அடிச்சது. அதான் போனேன். அவன் நல்லா இருக்கான்னு தெரிஞ்சதும் நான் திரும்பி வந்துட்டேன். அடுத்த விஷயம்… நான் அம்மாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன். அதை நினைச்சு நீங்க ஒன்னும் பயப்பட வேண்டியது இல்ல. சகுந்தலா இஸ் ஜஸ்ட் மை ஃப்ரெண்ட். புரிஞ்சதா?” எனக் கேட்டான்.

தன்‌‌ தவறை உணர்ந்த சந்திரசேகரன், “எல்லாம் சரி துஷ்யந்த். உன் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்குது. அந்தப் பொண்ணு‌ தனியா இருக்கா. நீ இப்படி நடு ராத்திரியில போய் நின்னா ஒரு‌ டாக்டராவே இருந்தாலும் அந்தப் பொண்ணோட பெயர் தான் கெட்டுப் போகும். புரியும்னு நினைக்கிறேன். சரி…‌ ரொம்ப லேட் ஆகிடுச்சு.‌ போய் தூங்கு. குட் நைட்.” என்றவர் அத்துடன் பேச்சு முடிந்ததாக அங்கிருந்து அகன்றார்.

_______________________________________________

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, எந்தப் இமர்ஜென்சி கேஸும் வராததால் துஷ்யந்த் விடுமுறை எடுத்திருந்தான்.

காலையிலேயே துஷ்யந்த்தை தன் வீட்டு வாசலில் கண்டதும் பரத்திற்கு சந்தோஷம் தாளவில்லை.

பரத்தை வாக்களித்தவாறே வெளியே அழைத்துச் செல்ல வந்திருந்தான் துஷ்யந்த்.

பரத் முதல் ஆளாக காரில் ஏறிக்கொள்ள, சகுந்தலாவோ துஷ்யந்த் எவ்வளவோ அழைத்தும் தனக்கு வேலை இருப்பதாக கூறி வர மறுத்து விட்டாள்.

வேறு வழியின்றி துஷய்ந்த் பரத்தை மட்டும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

முதலில் ஒரு ஷாப்பிங் மாலிற்கு சென்று பரத்துக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோஸ் உடையை வாங்கி அணிவித்தவன் இன்னும் இதர பொருட்களை பரத்துக்காக வாங்கினான்.

அன்று முழுவதையும் பரத்துடன் அவனுக்கு பிடித்தவாறு செலவிட்டு, அவனின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட துஷ்யந்த் எண்ணியிருக்க, இங்கோ துஷய்ந்த் பரத்துடன் கிளம்பி அரை மணி நேரம் கழித்து சகுந்தலாவின் வீட்டு வாசலில் தன் காரை நிறுத்தினான் ரிஷிகேஷ்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்