Loading

இதழ் முத்தத்தில் தனது உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்ய யுகாத்ரனின் செயலில் செவி மடல்கள் பூவாய் மலர்ந்தது இதயாம்ரிதாவிற்கு.

ஆகினும் படபடத்த நாணம் மறைத்து அவனை முறைத்திட, கண் சிமிட்டி சித்தம் கலங்க வைத்தான் அக்கள்வன்.

ஸ்ரீராம் இவர்களை விடுத்து பத்மபிரியாவை ஊடுருவ, தோழியைக் கண்டபின் இதயாம்ரிதாவின் முகம் இறுக்கம் கொண்டது.

“அம்ரி…” பத்மபிரியா தவிப்புடன் அழைத்தவள், இதயாம்ரிதாவின் முகம் கண்டு எழுந்த அச்சத்தை மறைத்துக்கொண்டு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்தாள்.

தன்னையே கண்ணைச் சுருக்கி பார்த்த சத்யாவின் பார்வையில் வேதனையும் எழுந்திட, “நான் சொல்றதை நீ அக்செப்ட் பண்ணுவியான்னு எனக்குத் தெரியல அம்ரி. சத்யா சார பார்க்க நீ பீச்க்கு போயிருந்தல்ல… அப்போ ரொம்ப நேரம் ஆகியும் உங்கிட்ட இருந்து போன் வரலைன்னு நானே உனக்கு போன் பண்ணுனேன் நீ எடுக்கல.

சத்யா சார் உன் ப்ரபோசலை அக்செப்ட் பண்ணிக்கிட்டாரான்னு தெரிய கியூரியஸா இருந்துச்சு. உன்னைப் பார்க்க வீட்டுக்கே போகலாம்னு நான் உன் வீட்டுக்கு வந்தேன். அப்போ தான், அங்கிள் யார்கிட்டயோ ‘சத்யா சார் வெளிலயே வரக்கூடாது ஆதாரம் இல்லைன்னாலும் ஆதாரத்தை கிரியேட் பண்ணி, அபியூஸ் கேஸ்ல ஜெயில்ல போடணும்’னு பேசிட்டு இருந்தாரு. அதைக் கேட்டு ஷாக் ஆகிடுச்சு.

அவர் பாக்குறதுக்குள்ள அங்க இருந்து கிளம்பிடணும்னு பதட்டமா கிளம்பும்போது அவர் என்னை பார்த்துட்டாரு…” என்றவளுக்கு இப்போதும் பயத்தில் நெற்றி வியர்த்தது.

——–

“அங்கிள்…” கைகள் நடுங்க ராம்குமாரை பார்த்தவளிடம், “என்னமா இந்தப்பக்கம்” எனக் கேட்டார் வெகு பரிவாக.

“அது அது அம்ரியைப் பார்க்க”

“அவள் இன்னும் வரலையே…”

‘சரி அங்கிள் நான் நான் பாத்துக்குறேன்” என்று வேகமாக அங்கிருந்து நகர முற்பட, “எல்லாத்தையும் கேட்டுட்ட தான?” என்ற கேள்வியில் நின்று விட்டாள்.

“அங்… அங்கிள்!” என நாக்கு தந்தியடிக்க,
“சத்யா சார் பாவம் அங்கிள். அவர் ரொம்ப நல்ல டைப். அவர் க்ளாஸ் எடுக்குற விதம் கூட ரொம்ப ரொம்ப யூனிக்கா இருக்கும் அங்கிள். வேணாம் அங்கிள்” எனும்போதே அவளுக்கு கண் கலங்கி விட்டது.

“எல்லாம் சரி தான். ஆனா ஸ்டேட்டஸ்னு ஒன்னு இருக்குல்லமா. அது உன் ப்ரெண்டுக்கு தெரிய வேணாமா?” என வருத்தம் போல கூறியவரை அரண்டு பார்த்தவள்,

“நீங்க நீங்க… அம்ரிட்ட பேசுங்க அங்கிள். அவள் புருஞ்சுப்பா. அதுக்காக, இப்படி எல்லாம் பழி போடாதீங்க அங்கிள். ப்ளீஸ்” எனக் கெஞ்சிட,

“என் பொண்ணை பத்தி எனக்கு தெரியறதை விட, கூடவே இருக்குற உனக்கு தெரியாதா? அவள் பிடிவாதம் அழுத்தம் பத்தி…” என கிண்டலாகக் கேட்க,

“அதுக்காக ஏன் அங்கிள் இப்படி? உங்களுக்கு உங்க பொண்ணை பத்தி தெரியும் தான? இது மட்டும் தெரிஞ்சா சத்யா சாருக்காக அவள் எந்த எல்லைக்கும் போவா அங்கிள்” என்றவளுக்கு கோபம் கொந்தளித்தது.

“அவளுக்கு விஷயம் தெரிஞ்சா தான” ராம்குமார் தாடையைத் தடவ,

“தெரிய வைப்பேன்” என நிமிர்வாய் உரைத்தவள், வேகமாய் நகரும்போதே, “அப்படி தெரியும்போது அந்த சத்யாவைக் காப்பாத்த அவனும் உயிரோட இருக்க மாட்டான். உண்மையை தெரிஞ்சுக்க உன் ப்ரெண்டும் இருக்க மாட்டாளே” என்றதில் சுளீரென இருந்தது அவளுக்கு.

“அங்கிள்சி பலமாய் அதிர்ந்தவளுக்கு தெரியுமே, அவருக்கு பெண் மீது எத்தனை அன்பென்று.

அவரோ முகத்தை கடுமையாய் வைத்து, “என்ன பொண்ணு மேல பாசம் பொங்கி வழியும். கொலை பண்ண மாட்டேன்னு நினைக்கிறியா? என்னோட இத்தனை வருஷ ஸ்டேட்டஸையும், தரத்தையும் எவனோ ஒரு ரோட்டுல போறவனை காதலிச்சு கெடுக்கறவளை என் பொண்ணுன்னு கூட வச்சுக்குறதுக்கு, கொன்னே போட்டுடலாம்.

அவளை கொலை பண்ணதே அந்த சத்யா தான்னு அந்தப் பழியையும் அவன் மேல போட்டுட்டா, ஜென்மத்துக்கும் அவன் வெளில வரவே முடியாது” என்று கர்ஜித்தவரைக் கண்டு உறைந்தே போனாள்.

“அவங்களுக்கே இப்படின்னா, விஷயம் தெரிஞ்ச உன்னை?” என யோசனையாய் தாடையை தடவிட, கால்கள் நடுநடுங்கிப் போனது அவளுக்கு.

ராம்குமாருக்கு தொழில் தான் எல்லாம் எனத் தெரியும். அந்த தொழிலில் இருந்து வரும் புகழ் அவருக்கு ஒரு போதையென இப்போது தான் புரிந்து கொண்டாள்.

ராம்குமார் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, அவளோ திடுதிடுவென வெளியில் ஓடும்போதே, வாட்ச்மேன் அவளைப் பிடித்து விட்டார்.

“அண்ணா விடுங்கண்ணா” என்றவளின் கெஞ்சலைப் பொருட்படுத்தாது, அவள் துள்ள துள்ள ஒரு காரில் ஏற்றி முதலாளியின் உத்தரவின் பேரில் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

இங்கோ மாடியில் இருந்து இறங்கி வந்த உமா, “பத்மா வந்தாளா என்ன? அவள் குரல் கேட்ட மாதிரி இருந்துச்சு” எனக் கேட்க, “இங்க யாரும் வரல” என்று கோபத்துடன் பதில் உரைத்தவர் வேகமாய் வெளியில் சென்றார்.

சில மணி நேரங்கள் கழித்து கண் விழித்த பத்மா, ஏதோ ஒரு பங்களாவின் அறையில் இருந்தாள்.

ஆடை கலைந்திருக்க அவளது அலைபேசி அவளுக்கு அருகிலேயே இருந்தது.

தனக்கு என்ன ஆனது என்றே புரியாமல் தத்தளித்து எழுந்தவளுக்குள் அச்சம் குளிராய் ஊடுருவ, அலைபேசியைக் கையில் எடுத்துக்கொண்டு வேக வேகமாய் அங்கிருந்து கிளம்ப முற்பட்டவளின் முன் வந்து நின்றார் ராம்குமார்.

அவரைக் கண்டு எச்சிலை விழுங்கியவள், “அங்கிள் என்னைப் போக விடுங்க…” எனக் கேவலுடன் கூற,

“உன்னை அனுப்ப தான் போறேன் பத்மா. உன்னை இங்க வச்சிருந்தா அம்ரிக்கும் சந்தேகம் வரும்ல… கொலை பண்ணுனா டவுட் வரும்னு தான அந்த சத்யா இப்ப வரை உயிரோட இருக்கான்” என இகழ்வாய் உரைத்தார்.

உண்மை தெரிந்தால் அவர்களையே கொலை செய்து விடுவேன்று கூறிய பின்னும் அவளால் எப்படி உண்மையை கூற இயலும். ஆகினும், எப்படியாவது இங்கிருந்து தப்பித்து இதயாவிடம் சூசகமாகவாவது கூறி விட வேண்டுமென துடித்தாள்.

“நீ உன் ப்ரெண்டுக்கு உண்மையா இருக்கறதை பார்த்து புல்லரிக்குது தான்… ஆனா, வெரி சாரிமா!” என்று தனது அலைபேசியில் ஒரு வீடியோவைக் காட்டினார்.

அதைக்கண்டு உயிரே பறிபோனது போல வலி பிய்த்து எடுக்க, உள்ளம் அருவருத்துப் போனது.

அவளது நிர்வாண வீடியோவை எடுத்து வைத்திருந்தார். அவர் வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்தவன் அவளைக் கண்ட இடத்தில் தொட்டிருக்க, துடித்துப் போனாள்.

முகத்தை மூடி அப்படியே மடங்கி அமர்ந்தவள் “ஐயோ” எனத் தேம்பி தேம்பி அழுதாள்.

உடலெங்கும் கம்பளி பூச்சி ஊர்வது போல உறுத்தி எடுத்தது.

அவரும் அவள் உயரத்திற்கு காலை மடக்கி அமர்ந்து, “கவலைப்படாதமா. என்ன இருந்தாலும் நீயும் என் பொண்ணு மாதிரி தான…” என்று அவள் கேசத்தை தடவி கொடுக்க, வெறுப்பாய் அவர் கையை தட்டி விட்டாள்.

“உன் பொண்ணையும் இப்படி தான் ஒட்டுத் துணி இல்லாம வீடியோ எடுப்பியாடா?” என்று சீறியவளை கன்னத்தில் பளாரென அறைந்தார்.

“உன்னை பொண்ணு மாதிரி பார்த்ததுனால தான், உன் கற்பை மட்டும் விட்டு வச்சுருக்கேன். அதுவும் அம்ரிக்கு சந்தேகம் வரக்கூடாதுன்ற ஒரே காரணத்துக்காக… மூச்சு!” என்று வாயில் ஒரு விரல் வைத்து உறுமியவரைக் கண்டு, வெடித்து அழுதாள்.

“உன்னை என் அப்பா மாறி நினைச்சேன்”

“எனக்கு சாதகமா இருக்குறவரை, நீயும் எனக்கு அம்ரி மாறி தான்மா” எனப் பாசமாக மொழிந்தவரை முகம் சுளித்து பார்த்தாள்.

“உன் வீடியோ வைரல் ஆகணுமா, இந்த போனோட முடிஞ்சு போய்டணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க…” என்றவர் கதவைத் திறந்து விட, குடலைப் பிரட்டி குமட்டியது அவளுக்கு.

கால் வலிக்க நடுரோட்டில் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் வெகு தூரம் ஓடினாள்.

கண்ணீர் நிற்காமல் வழிந்திட, வீட்டிற்கு சென்றவளுக்கு வீடே அலங்கோலமாக இருந்ததைக் கண்டு நடுங்கியது.

“அம்மா… அம்மா அம்மா” என்று தனது தாயை வீடு முழுக்க தேடிட, அவரது சுவடே இல்லை.

அந்நேரம் ராம்குமார் அவளுக்கு அழைக்க, உயர் அச்சத்தில் அழைப்பை ஏற்றியவளிடம், “உன் அம்மா என் கஸ்டடில பத்திரமா இருக்காங்கமா. கவலைப்படாத உடம்பு சரி இல்லாதவங்களை பத்திரமா பாத்துக்குறேன். உன் மேல எப்ப நம்பிக்கை வருதோ அப்போ உன் அம்மா வீட்டுக்கு வருவாங்க” என்றதும் உடைந்து போனாள்.

“ப்ளீஸ் அங்கிள் என் அம்மாவை விட்டுடுங்க. ப்ளீஸ்ஸ்ஸ்…. நான் அவள்கிட்ட எதையும் சொல்ல மாட்டேன் ப்ளீஸ்” என்றவளின் கதறலை காதில் வாங்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டார்.

“ஐயோ அம்மா” என்று அடிக்குரலெடுத்து அலறியவளைத் தேற்ற அங்கு யாருமே இல்லை.

உண்மையைக் கூறி சத்யாவை சிறையில் இருந்து விடுவிப்பதா? தன்னையே மறந்து தனது காதல் தந்த காயத்தில் குடிபோதைக்கு அடிமையான தோழியை மீட்பதா? தனது மானத்தை காப்பதா? தாயை மீட்டு எடுப்பதா? உள்ளம் எங்கும் பரவி கனன்று கொண்டிருந்த வலியுடன் இத்தனை வருடங்களும் நரகத்தில் உழன்று கொண்டிருக்கிறாள் பத்மப்ரியா.

அவள் கூறியதைக் கேட்ட மூவருமே அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

தரையில் உடைந்து அமர்ந்த பத்மப்ரியா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

“எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல அம்ரி. அம்மாவைத் தேடி அலைஞ்சேன். எங்க தேடியும் என்னால கண்டுபிடிக்க முடியல. முதல் தடவை உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போனப்பவே, இதை உங்கிட்ட சொல்லிடலாம்னு நினைச்சேன்.

ஆனா, அப்போ அந்த ஆளுக்கு உண்மையாவே உடம்பு நல்லா தான் இருந்துச்சு. உங்கிட்ட உடம்பு சரி இல்லாத மாதிரி நடிச்சு தான் விஷாலை கல்யாணம் பண்ணி வச்சாரு.

‘நான் இருந்தாலும் இல்லைன்னாலும் நான் சொன்னதை மீறுனா, அம்ரிய கொன்னுட்டு பழியை சத்யா மேல போட்டுடுவேன், உன் வீடியோவை லீக் பண்ணிடுவேன், உன் அம்மாவையும் கொன்னுடுவேன்’னு சொன்னாரு.

நீ சொல்லப்போற உண்மையில யாருக்குமே நல்லது நடக்காதுங்கும் போது அதை சொல்றது வேஸ்ட்டுன்னு என்னை பயமுறுத்திட்டான்.

ஆனா ஆனா சத்தியமா இதுல அந்த நாலு பேரும் சம்பந்தப்பட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரியவே தெரியாது அம்ரி. தெரிஞ்சுருந்தா என்ன வேணா ஆகட்டும்னு விஷாலை நீ கல்யாணம் பண்ணும்போதே நான் உங்கிட்ட உண்மையை சொல்லிருப்பேன்” எனக் கேவியவளை கண்ணீர் மறைத்த விழிகளுடன் வெறித்திருந்தாள் இதயாம்ரிதா.

ஸ்ரீராமிற்கும் மனம் வருந்தியது. சத்யாவிற்கோ இப்போது இதயாம்ரிதா எப்படி இதற்கு ரியாக்ட் செய்வாள் என்ற பயமே எழுந்தது. ஏற்கனவே அவளுக்குள் அவள்
உழன்று கொண்டிருக்கிறாளே!

ஸ்ரீராம் தான், “அப்போ அந்த ராம்குமார் செத்தப்ப சொல்லிருக்கலாம்ல ப்ரியா?” எனக் கேள்வி எழுப்ப,

“நான் சொல்ல தான் நினைச்சேன். ஆனா அந்த விஷால் கடன்காரன் என்னை கொழப்பிட்டான். அப்போ தான் இவ ட்ரிங்க் பண்றதை விட்டுட்டு, ஸ்லீப்பிங் டேப்லெட் மறந்துட்டு நார்மல் லைஃப் லீட் பண்ணிட்டு இருந்தா. அந்த நேரத்துல நான் போய் இதை அவள்கிட்ட எப்படி சொல்லன்னு தெரியாம குழம்பி இருக்கும்போது விஷால் என்கிட்ட வந்து கேட்டான்.

‘உன் அம்மாவை பார்த்தே பல மாசம் ஆகுதே எப்படி இருக்காங்க’ன்னு அந்த பரதேசி அவனா வந்து கேட்டான்…

இருக்குற அழுத்தம் தாங்காம, என் பெஸ்ட் ப்ரெண்ட்ன்னு அந்த நாய்ட்ட மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்டுனேன். எல்லாத்தையும் புதுசா கேட்குற மாதிரி கேட்டு, ராம்குமார் இவ்ளோ கேவலமானவனா இருப்பான்னு நான் எதிர்பார்க்கலைன்னு நடிச்சான்.

என் வீடியோவை எப்படியாவது டெலிட் பண்ணிட்டு, அம்மாவைக் கண்டுபிடிச்சு தரேன்னு சொன்னான்… அம்ரிட்ட இந்த விஷயத்தை நீ எப்படி சொல்லாம இருக்கலாம்னு என்கிட்ட சண்டை கூட போட்டான்.

இப்பவாவது சொல்லலாம்னு அவன்கிட்ட சொன்னேன். அவன் தான்,

‘நேரம் பார்த்து நானே சொல்றேன்.
சத்யா எங்க இருக்கான்னே தெரியாது. ஒருவேளை நடந்த அவமானத்துல அவன் தற்கொலை பண்ணிருந்தா, உண்மை தெரிஞ்சு மறுபடியும் அம்ரி டிப்ரெஷன்கு போறது அவள் ஹெல்த்க்கு நல்லது இல்லை’ன்னு சொன்னான்.

‘நான் அம்ரி மேல உயிரையே வச்சுருக்கேன். பட், அவளுக்கு இப்பவும் சத்யா தான் வேணும்னா, நான் தாராளமா விட்டுக்கொடுத்துடுவேன்’அப்டி இப்படின்னு பேசி என்னை ப்ரெய்ன் வாஷ் பண்ணி இவகிட்ட சொல்ல விடாம பண்ணிட்டான்.

அதுக்கப்பறம், இவள்கூட டிவோர்ஸ் ஆனதும் அந்த பரதேசிட்ட சண்டை போட்டேன். அவன் அப்ப கூட, அவனோட தப்பை ஒத்துக்கவே இல்ல. ப்ராப்பர் மெடிக்கல் டெஸ்ட் இருக்கா, நான் இன்னொருத்தி கூட போனதுக்குன்னு ஸ்ட்ராங்கா இருந்தான்.

எப்படியும் இந்த டைவர்ஸ கேன்சல் பண்ணிடுவேன்னு உறுதியா இருந்தான். அப்ப தான் சத்யா சாரோட ப்ரொபைல் வந்துச்சு. எனக்கு இனியும் எதையும் சொல்ல தெம்பில்ல.

அட்லீஸ்ட் மறுபடியும் சத்யா சார் இவள் லைஃப்குள்ள வந்தா, எல்லாம் மாறும்னு நினைச்சு தான் அவளுக்கே தெரியாம சத்யா சார இவளோட பிஏவா செலக்ட் பண்ணேன். அவரோட பேக்ரவுண்ட் எதுவும் செக் பண்ணல. உண்மை தெரிஞ்சும் அவரை ஜெயில்ல இருக்க வச்ச குற்ற உணர்ச்சி, அவர் எங்க ஒர்க் பண்ணாருன்னு எதையும் பார்க்க விடல” என்றவளுக்கு சத்யாவை நிமிர்ந்து பார்க்கவே அத்தனை தயக்கமாய் இருந்தது.

சத்யா தான் அவளைக் கடிந்து கொண்டான்.

“பைத்தியமா நீ! அட்லீஸ்ட் நீயாவது ஜெயில்ல வந்து என்னை பார்த்துருக்கலாம்ல?”

“நினைச்சேன் சார். ஆனா அங்க ஜெயிலர்ல இருந்து எல்லாமே அங்கிளோட ஆள் தான். விஷயம் கசிஞ்சு உண்மையாவே அம்ரியை ஏதாவது செஞ்சுட்டு, உங்க மேல கொலை பழியை போட்டா எப்படி வெளிய வர முடியும்… என் அம்மா திரும்பி வர மாட்டாங்கன்னு எனக்கு ஒரு கட்டத்துல புருஞ்சுடுச்சு. என் வீடியோ வெளில வந்தா கூட வந்துக்கட்டும்… ஆனா பெத்த பொண்ணையே கொன்னுடுவேன்னு சொல்ற மனுசன் உண்மையாவே கொன்னுட்டா?” எனத் தவித்து மருகியவளை சமன்செய்ய வார்த்தைகளின்றி போனது ஆடவர்களுக்கு.

இதயாம்ரிதாவோ விரக்தி புன்னகை ஒன்றை பரவ விட்டு, “இதுக்கு நீ என்னை அந்த ஆள் கையால சாகவே விட்டுருக்கலாம்!” என்று விட்டு அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பாராமல் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள்.

“இதயா” அவள் பின்னே செல்லப்போன சத்ய யுகாத்ரன், மொத்தமாய் உடைந்து அழுத பத்மபிரியாவைப் பார்த்து நின்றான்.

“ஐயோ…” எனத் தலையில் கை அடித்து அழுதவளை அவளுயரத்திற்கு அமர்ந்து தடுத்த சத்யா, “பத்மா ஸ்டாப் இட்…” என்றான் கண்டிப்பாக.

“சாரி சார்!” என்றவளுக்கு அவனை எதிர்கொள்ளவே அத்தனை துயரமாக இருந்தது.

“நீ என்ன தப்பு செஞ்ச பத்மா சாரி சொல்றதுக்கு… இவ்ளோ நாளா, என் காதலால நான் தான் கஷ்டபட்டேன்னு நினைச்சேன். அப்பறம் அவள் காதலால அவளும் உயிர்வலியை அனுபவிச்சுருக்குறது தெரிஞ்சு நெஞ்சு வெடிச்சுச்சு… எங்களோட காதல், நாங்க கஷ்டப்பட்டோம்னு மனச தேத்திக்க முன்ன, எங்களால எங்களை விட நீ கஷ்டப்பட்டுருக்கறது ரொம்ப ஹர்ட் ஆகுது பத்மா…” எனத் துன்பத்தின் பிடியில் உரைத்தவனை, கண்ணீருடன் ஏறிட்டாள்.

“உங்க காதல்னா? அப்போ நீங்களும்…” என்று சின்னதொரு வியப்பு மின்னக் கேட்க, அவன் முகம் முழுதும் அப்பட்டமான வலி.

———-

அலுவலகத்தை ஒட்டியுள்ள விசாலமான தோட்டத்தில் நகத்தைக் கடித்தபடி நின்றிருந்தாள் பூமிகா.

“என்ன ஆச்சு பூமி? ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க?” விதுரன் கேட்டதும், அகில் “இவள் டென்ஷன் ஆகலைன்னா தான அதிசயம்” எனக் கிண்டலடித்தான்.

“ச்சு சும்மா இருடா… நானே ப்ரொடக்ஷன் சொதப்புதேன்னு கடுப்புல இருக்கேன்” என்று பூமிகா முகத்தை சுருக்கினாள்.

அத்தனை நேரம் அமைதியாக இருந்த மிதுனா, “ஏன் பூமி? ப்ராடக்ட்கு தேவையான பேசிக் பொருள்களை எல்லாம் தரம் பார்த்து தான, ப்ரொடக்ஷன்கு அனுப்பி வைக்கிறேன்…” எனப் புருவம் சுருக்கி வினவ,

“ஆனா முன்னாடி வந்த கன்சிஸ்டன்சி வரலையே மிது. ப்ரொடக்ஷன் டீம் கோ ஆர்டினேட்டர், ஹெட்ல சிலர் விஷால் கூட போய்ட்டாங்க. மீதி இருந்த ஸ்பெஷலிஸ்ட் எல்லாரும் ஒளிரா பிராண்டை பான் பண்ணதும் வேலையை விட்டே போய்ட்டாங்க. இப்போ ஓரளவு எக்ஸ்பீரியஸ்ஸான ஆள்கள் இருந்து பண்ணாலும், என்னவோ மிஸ் ஆகுற பீல். இப்படியே போனா, பர்ஸ்ட் ரவுண்ட் செக்கிங்கில் கூட தேறாது. ஆல்ரெடி ஒரு வாரமா செஞ்ச ப்ராடக்ட்ஸ் எல்லாமே சொதப்பல் தான்” என்றாள் பூமிகா.

மிதுனா விதுரனை தான் முறைத்தாள்.

“ஒளிரா ப்ராண்ட் மட்டும் இப்படி ஒரு பிளாக் மார்க்ல மாட்டாம இருந்திருந்தா, இப்போ இந்த ப்ராப்ளமே இல்ல. பிரெண்டுன்னு நினைச்ச எல்லாரும் ஒவ்வொரு விதத்துல துரோகம் தான செய்றாங்க…” என்று மறைமுகமாக தாக்க, விதுரனுக்கு கோபம் வந்தது.

“எல்லாரும்னு எல்லாரோடவும் என்னை ஏன் கம்பேர் பண்ற?” என சீறினான்.

“யப்பா உங்கிட்ட நான் எதுவும் பேசல. உன்னைப் பொறுத்தவரை பணக்காரர்களுக்கு உணர்ச்சியே இருக்காதே. இப்போ கூட நான் கோபப்படுறது தான் உனக்கு தப்பா தெரியும்…” மிதுனாவும் தன்பங்கிற்கு சீறினாள். அவளால், இதயாம்ரிதாவின் மீது பழி போட்டு அவளை தவறாக பேசியதை ஒப்புக்கொள்ளவே இயலவில்லை.

“நீ என் மேல கோபப்படு மிதுனா. ஆனா துரோகம் பண்ணேன்னு சொல்லாத. அம்ரி மேமால என் அண்ணனோட வாழ்க்கையே போச்சுன்ற கோபம் தான் அவங்க ப்ராண்ட் என்ன ஆனாலும் எனக்கு என்னன்னு இருக்க வச்சது… நீயும் தான் உண்மை என்னன்னு தெரியாம என் அண்ணனை கண்டபடி பேசுன. அண்ட் மோர் ஓவர், நான் ஒன்னும் யாருக்கும் துரோகம் பண்ணல. பண்ணவும் தேவை இல்ல…”

“ஒரு கம்பெனில இருக்கும்போது, அங்க நடக்குற தப்பை மேலிடத்துக்கு சொல்லி அலெர்ட் பண்றது ஒரு எம்பிளாயியோட வேலை மட்டுமில்ல கடமை. நீ உன் அண்ணனுக்கு தான விசுவாசமா இருந்த…” மிதுனாவின் கூற்றில் அவனும் எகிறினான்.

“ஸ்வேதா தான் விஷால் கூட இருந்தான்னு உனக்கு ஏற்கனவே தெரியும் தான? அப்போ ஒரு ப்ரெண்டா நீ என்ன செஞ்சுருக்கணும். என்கிட்ட விஷயத்தை சொல்லிருக்கணும்ல. ஆனா நீ உன் அக்காகிட்ட தான சொல்லிருக்க. இப்போ நீ உன் விசுவாசத்தை யார்ட்ட காட்டுற? உனக்கு உன் அக்கா முக்கியம்னா, எனக்கு என் அண்ணன் முக்கியம்…” என்றதில் மிதுனா கோபத்தை அடக்கியபடி நின்றாள்.

அவனே தொடர்ந்து, “இப்போ என்ன… இங்க நான் வேலை பாக்குறதுக்கு எனக்கு தகுதி இல்ல. அதான உன் பிரச்சினை. ஃபைன்! எனக்கும் இங்க கன்டினியூ பண்றதுல உடன்பாடு இல்ல…” என்று ஐடிகார்டை தூக்கி எறிந்து விட்டான்.

மிதுனா சன்னமாக அதிர, அகில் கடிந்தான்.

“டேய், ஏன்டா இப்படி பண்ற? எதுவா இருந்தாலும் பேசி சால்வ் பண்ணுங்க. நீ போறன்னா அப்போ நாங்க மட்டும் எப்படிடா…” என்றிட,

பூமிகாவும் “வேலை பார்த்தா ஒண்ணா பாக்கலாம்… இல்லன்னா நம்ம வெளில தேடலாம்” என்று விட்டதில்,

“யாரும் என் பின்னாடி வர தேவை இல்ல. யார் யாருக்கு எங்க இருக்கணுமே இருங்க. தப்பு நான் தான செஞ்சேன். தண்டனையும் நானே அனுபவிச்சுக்குறேன்” என மிதுனாவைப் பாராமல் அங்கிருந்து சென்று விட்டதும், இருவரும் மிதுனாவைப் பார்த்தனர்.

“மிது” அகில் பேச வரும்போதே, “நீங்க அவன் பின்னாடி போறதுன்னா போங்க. எனக்குன்னு எப்பவும் யாரும் இருந்தது இல்ல. இனிமேலும் இருக்க மாட்டாங்கன்னு நினைச்சுக்குறேன்…” எனும்போதே அவள் குரல் உடைந்தது.

“ஏன்டி இப்டி பேசுற. எங்களுக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம்தான். கொஞ்சம் எங்களை பத்தியும் யோசிங்க” பூமிகா வருத்தமாய் உரைத்தாள்.

போன வேகத்தில் திரும்பி அங்கு வந்த விதுரன், “மேம் ஏன் இவ்ளோ வேகமா கார ஓட்டிட்டு போறாங்க. பார்க்கிங்கில இருந்த டிவைடர் எல்லாம் அடிச்சு தூக்கிட்டுப் போறாங்க…” என்றான் பதற்றம் நிறைந்த குரலில்.

அதில் திகைத்த மிதுனா, “காட்! என்ன செஞ்சு வைக்க போறாளோ” என்று பயத்தில் அவளை பின் தொடர முற்பட, அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய விதுரன்

“அகில் அண்ணாட்ட விஷயத்தை சொல்லு” என்று பணித்ததும் அவனும் பூமிகாவும் வேகமாக சத்யாவைத் தேடி சென்றனர்.

“விடு… அவள் எதுவும் முட்டாள்தனம் செய்றதுக்குள்ள அவளை பிடிக்கணும்” மிதுனா எங்கோ பார்த்து பேச,

“பைத்தியமா நீ. அவங்க போற ஸ்பீடுக்கு அவங்களை ஓவர்டேக் பண்றது ரிஸ்க். நான் கூட்டிட்டுப் போறேன்” என்று அவனே பைக்கை எடுத்தான்.

“தேவையில்லை” என்றவள் அவளது ஸ்கூட்டியை எடுக்கப்போக, சாவியை வெடுக்கென பிடுங்கியவன் “சொல்றதை கேட்க மாட்டியா. உன்னை என்னால அனுப்ப முடியாது. அவங்களே டேஞ்சரா கார் ஓட்டுறாங்கன்னு சொல்றேன். என்கூட வர்றதுன்னா வா. இல்லன்னா இன்னைக்கு முழுக்க உன் கையை பிடிச்சுட்டு இங்கயே நிக்கிறதுன்னாலும் எனக்கு ஓகே” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“நான் எப்படியோ போறேன் உனக்கு என்ன வந்துச்சு?”

“நீ எப்படியோ போன்னு என்னால விட முடியாது. எனக்கு என்ன வந்துச்சுன்னு உனக்கு தெரியாதா? புதுசா கேக்குற?”பற்களை கடித்து துடித்த மனதை உரைத்தவனிடம் அமைதியே காத்தாள்.

பின், அவனிடம் போராட இயலாமல் தமக்கையின் எண்ணத்தில் அவனுடனே வண்டியில் அமர்ந்தவளுக்குள் மெல்லிய சாரலாய் அவனுடனான பயணம் நினைவு வந்து கூடவே கண்ணையும் கரிக்க வைத்தது.

—-

அகில் விஷயத்தை கூறியதும் சத்யா, “ஷிட்…” என்று நகர போனவன், பத்மப்ரியாவையே பார்த்திருந்த ஸ்ரீராமிடம், “ராம்” எனக் கண்ணைக் காட்ட, “நான் பாத்துக்குறேன்” என்று அவனும் தலையசைத்தான்.

“அகில்… ராம் சொல்றதை செய்” என்று அகிலிடம் பணித்து விட்டு புயல் வேகத்தில் இதயாம்ரிதாவைப் பின்தொடர்ந்தான் சத்ய யுகாத்ரன். அதற்குள் அவனது இதயம் துடித்து வெளியில் வந்து விடும்போல இருந்தது.

இதயாம்ரிதாவிற்கு நெஞ்சம் தீயிலிட்ட புழுவாய் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருந்தது.

தான் கொண்ட காதலென்ன அத்தனை பெரிய குற்றமா? ஒருவன் மீது தான் வைத்த நேசம், அவனையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் ஏனிப்படி வதைத்து துன்புறுத்தியது?

நினைக்க நினைக்க நேசம் கொண்ட இதயமது உயிர்ப்பை இழந்தே போனது.

வேகம் குறையாமல் தனது வீட்டிற்கு சென்றவள், ராம்குமாரின் அறைக்குள் நுழைந்து அவரது புகைப்படத்தை எல்லாம் அடித்து நொறுக்கினாள்.

கோபத்தைக் காட்ட கூட அவரில்லாது போய்விட்டாரே!

உமா மகளைக் கண்டு அதிர்ந்து தடுக்க முற்பட, அவளை பிடிக்க கூட இயலவில்லை அவரால்.

இதயாம்ரிதா வெறிபிடித்தது போல தாயை வெறித்தாள்.

“என் பக்கத்துல வராதீங்க. எல்லா கோபத்தையும் உங்க மேல காட்டிடுவேன். அவுட்!” என்று விரல் நீட்டி எச்சரிக்க, “அம்ரி என்னமா இது” என்று பதறினார் அவர்.

“என்ன…? என்ன மாம்… நீங்க என்ன சொல்ல போறீங்க. என்னால நீங்க என்ன என்ன கஷ்டப்பட்டீங்க லிஸ்ட் போட்டு சொல்லிடுங்க ஒரேடியா” என்றவளின் விழிகள் சிவப்பு நிறமாய் மாறியிருக்க, முற்றிலும் நிதானமில்லை அவளிடம்.

“என்ன பேசுற அம்ரி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” உமா விழி கலங்க கூற,

“என்னால தான் எனக்காக தான், அந்த ஆளு இன்னொருத்திட்ட போனாலும் சகிச்சுக்கிட்டு வாழ்ந்தீங்களா? ஹான்… சொல்லுங்க…” என வெறியாய் கத்த, அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

அதில் “அதுவும் ஒரு காரணம் தான் அம்ரி. உன்னை மொத்தமா அவர்கிட்ட குடுத்துட்டு போக மனசு வரல…” என எதார்த்தமாய் உரைக்க,

“ஓ… அப்போ உங்க வாழ்க்கை போனதுக்கும் நான் தான் காரணம்…” என்றவளின் கர்ஜனை பங்களாவை அதிர வைத்தது. உமாவையும் தான்.

“இல்லமா நான் அப்பிடி சொல்லல” உமாவின் கூற்று எதையும் காதில் வாங்காதவளாக, ராம்குமாரின் பொருள்களை அடித்து உடைத்தவள், கண்ணாடி பொருள்கள் அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்தாள்.

ராம்குமார் வைத்திருந்த மினிபாருக்கு சென்றவள், இன்னும் பல வகையாக வீற்றிருந்த மது பாட்டில்களை எல்லாம் தள்ளி விட்டு, மிச்சமிருந்த மது பாட்டில் ஒன்றை எடுத்து ஒட்டு மொத்த வெறியும் அடங்கும் வண்ணம் தொண்டையில் நிரப்பினாள்.

அவளை அடக்குவதற்கு மாறாக, அந்தப் போதை அவளை இன்னும் வெறிப்பிடிக்கவே வைத்தது.

ஒரு பாட்டிலை முழுதாய் காலி செய்தவள் அடுத்த பாட்டிலை எடுக்கும் முன் சத்யா வந்து விட்டான்.

“ஏய் என்னடி செய்ற…?” என பாட்டிலை வாங்கித் தூர எறிந்தவன், “இதயா” என்று அதட்டினான்.

“என்னடா என்ன? உனக்கு என்ன…” எனப் போதை தலைக்கேற கண் சொருகியவள் வேகமாய் தலையாட்டி,

“உன்னைப் பார்த்தது தான்டா நான் செஞ்ச பெரிய தப்பு. உன்னைத் தேடி காலேஜுக்கு வந்து காதலிச்சேன்ல. அந்தக் காதல் தான்டா உன்னையவே இழக்க காரணம்” என்றவளின் கூற்றில் அதிகமாய் காயப்பட்டுப் போனான் சத்ய யுகாத்ரன்.

அவன் உள்ளத்தின் துடிப்பு புரியாது அவள் மேலும் தொடர்ந்தாள்.

“உன்னைக் காதலிச்சது நான் தான… ஒரு மிருகத்தோட கூட்டுல இருக்குறது புரியாம முட்டாள்தனம் செஞ்சது நான் தானடா…” என்று அவன் சட்டையைப் பிடித்தவள்,

“அப்போ எனக்கு தானடா தண்டனை கிடைக்கணும்… அது கூட வலிக்காதே. ஆனா என்னால எனக்குப் பிடிச்சவங்க வலியால துடிச்சுருக்காங்க. வலிக்குது சத்யா… ரொம்ப வலிக்குது. என்னை கொன்னுடு… எனக்கு எனக்கு முடியல சத்யா… என்னை கொன்னுடு” என்று அவன் கையைப் பிடித்து அவள் கழுத்தில் வைத்து இறுக்கிக் கொண்டவளைக் கண்டு நொறுங்கினான் அவன்.

“இதயா… ப்ளீஸ். ரிலாக்ஸ் ரிலாக்ஸ்… உன்மேல எந்த தப்பும் இல்ல பொண்டாட்டி” என்று மென்மையாய் அவளை நிதானப்படுத்த முயல, அவளோ நிறுத்தவில்லை.

“என்னடா தப்பு இல்ல… என்ன தப்பில்ல?” மீண்டும் மூச்சிரைக்க அவனது சட்டையைப் பிடித்தவள்,

“நான் காதலிச்சது தப்பு தான. வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல உன் பின்னாடி சுத்துனது தப்புதான. வம்படியா உன்னை பீச்சுக்கு கூப்டதுனால தான உனக்கும் அவளுக்கும் இந்த நரக வலி” எனும்போதே அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை சட்டையில் துடைத்துக்கொண்டான்.

“பைத்தியக்காரி… அதே வலி உனக்கும் தானடி” சத்யா சலிப்பாய் உரைக்க,

“நான்… நான் என்ன… வலி… வலிச்சுது. வலிய மறைக்க பழகிட்டேன். மறக்க பழகிட்டேன். அவன்கூட கூத்தடிக்க கிளம்பிட்டேன் சத்யா. அவ்ளோ தான என் வலி. என் காதலால ஆரம்பிச்சு வச்ச வலியை எல்லாம் ஒரு பொருட்டாவே நினைக்கலையே நான்” என்றவள் இன்னும் இன்னும் அழுத்தத்தின் பிடியில் தன்னை இழக்கிறாளென புரிய சத்யாவிற்கு செய்வதறியாத நிலை.

“உன் சூழ்நிலைக்கு நீ அதை தான்டி செய்ய முடியும். உன்னை நீயே ப்ளேம் பண்ணாத இதயாம்மா. அதுல என் காதலும் தானடி அடங்கி இருக்கு?” என அவள் கன்னம் பிடித்து தவிப்பாய் உரைத்ததில், அவனைத் தள்ளி விட்டவள்,

“என்னடா போனா போகுதுன்னு காதல் பிச்சை போடுறியா எனக்கு. ஹான்… எனக்கு வேணாம்… எதுவும் வேணாம்… இந்தக் காதல்… இது போதும் சத்யா. அய்யோஓஓஓ! இது எப்பவும் யாருக்கும் சந்தோஷத்தை தராது சத்யா. போய்டு நீ போய்டு… போய்டு போய்டு” எனப் புலம்பி கதறியவளை நெஞ்சில் புதைத்துக்கொண்டான் சத்ய யுகாத்ரன்.

“வேணாம்டி. வேணாம் வேணாம்… என் செல்லம்ல… ரிலாக்ஸ் ஆகுடி. என் பொண்டாட்டி தான… ஹ்ம்” என்று பொங்கி வந்த கேவலை அடக்கி அவளை தன்னுள் அடக்கிக்கொண்ட சத்யாவிடம் இருந்து விடுபட அவள் போராடினாள்.

“விடுடா விடுடா என்னை” என்று அவனை அடித்து சட்டையை கிழித்திட, அவனோ சற்றும் அவளை விலக விட்டானில்லை.

“விடுறதுக்கா இவ்ளோ போராட்டம். இந்த வலிக்கு மருந்து வேணும்டி பொண்டாட்டி. காலம் முழுக்க இந்தக் காதலை வடுவாவே சாக விட்டுடாத” என்றவன் அவள் முகத்தை அவனது கழுத்துக்குள் வைத்து அழுத்திக் கொள்ள,

“உன் வலிக்கு மருந்து நான் இல்ல ப்ரொஃபி!” எனத் தேய்ந்த குரலில் போராட்டம் வெற்றி பெறாத சோர்வில் உரைக்க,

“நீயில்லாம இந்த வலி செத்தாலும் ஆறாது இதயா. இந்த இதயத்துக்குள்ள ஓயாம துடிக்கிற துடிப்புடி நீ. இதெல்லாம் உன்னால நடக்கல. என்னால நடந்துச்சு. உன்னைப் பார்க்க நான் அங்க ப்ரொபஸரா வராம இருந்துருந்தா நீ என்கிட்ட காதலை சொல்லிருக்க வழியே இல்ல. உன்னால தான்டி நான் ப்ரொபஸரே ஆனேன்…” என்றவனின் நலிந்த குரலில் சற்றே அதிர்ந்தவள் முகத்தை விலக்கி அவன் முகம் பார்த்தாள்.

“ஹாஸ்பிடல்ல விதுரனை காப்பாத்துனது நீ தான்னு சொன்னப்பவே, உன்னோட பேச்சும் உன் பார்வையும் இந்த குட்டி முகமும் என் மனசுல அப்படியே பதிஞ்சுடுச்சு.

என் காலேஜ்ல சர்டிபிகேட் வாங்க போனப்ப தான், நீ அங்க அட்மிஷன் வாங்க வந்த. நீ அட்மிஷன் வாங்க வர்ரன்னு தெரிஞ்சதும் தான் நான் அங்க வேலைக்கு சேர்ந்தேன். இந்தக் காந்தக் கண்ணு என்னை ஒவ்வொரு தடவையும் ரசிச்சு பார்க்கும்போதெல்லாம், அட்மிஷன் போட வந்தப்பவே உன் முன்னாடி வந்து நின்னுருக்கலாம்னு நூறு தடவை யோசிப்பேன்டி.

ஒரு ப்ரொபஸரா, என்னோட வேலை என்னோட ஆசையை தடை செஞ்சுடுச்சு. அதுக்கு அப்பறம் உன்னை என் பின்னாடி சுத்த வைக்க எனக்கு பிடிக்கல. அதுனால தான், எக்ஸ்சாம காரணம் சொல்லி வேலையை அவ்ளோ சீக்கிரம் விட்டேன். வேலையை விட்டதும் உனக்கு என் சூழ்நிலையைப் புரிய வைச்சு வெய்ட் பண்ண சொல்லத்தான், பீச்கு வர ஒத்துக்கிட்டேன். ஆனா என் காதலை உனக்குப் புரிய வைக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சுது!

உன்னை அவனோட கல்யாண கோலத்துல பார்த்தப்ப… முடியலடி. செத்துட்டேன். ஒரு மனுஷன் எத்தனை தடவை தான் சாக முடியும்… நானும் உன்னை காதலிக்காம இருந்துருக்கலாம்ல… நீயாவது நிம்மதியா இருந்துருப்ப” என சொல்லி முடிக்கும்போதே அவனை பளாரென அறைந்தாள்.

“என்னைக் காதலிக்காம இருந்துருக்க முடியுமாடா உன்னால?” ஆத்திரத்துடன் வேதனை கலக்க வினவியவளுக்குள், அவன் கொண்ட காதலை எண்ணி வியப்பு பரவ, வெறிபிடித்த மனதை மயிலிறகாய் நீவி விட்டது. ஆனாலும் குற்ற உணர்விற்கு தூபமிட்டது போல அதிகமாய் தீப்பிடிக்க வைத்தது அவனது பெருங்காதல்.

“இப்படி தான்டி… நீ சொல்றப்பவும் எனக்கு குத்துது. உன் காதல் தான் இதுக்கெல்லாம் காரணம்னு சொல்றப்ப இந்த மனசு நெருப்புல வதங்குது.

இதை முன்னாடியே சொல்லணும்னு நினைச்சேன். என் காதலை பத்தி சொல்லும்போது இந்த கண்ணுல காதல் கொட்டணும்னு நினைச்சு தான் உன் குற்ற உணர்ச்சியை எல்லாம் மூட்டை கட்டி வெளில அனுப்புற வரை வெயிட் பண்ண நினைச்சேன்.

இப்பவும் இதை நான் சொல்லலைன்னா, உன்னை நீயே இன்னும் ப்ளேம் பண்ணி நமக்குள்ள சிக்கி திணறுற காதலை அதிகமா கொல்லுவன்னு தான் இப்ப சொல்றேன்.

ஆனா இப்பவும் உன் கண்ணுல அதே குற்ற உணர்வு தான்டி தெரியுது. அது என்னை அதிகமா கொல்லுதுடி. முடியல இதயா… மூச்சடைக்குது! உன் மூச்சு வேணும்டி. நான் இழந்த எல்லாத்துக்கும் ஈடா இந்தக் காதல் எனக்கு வேணும் பொண்டாட்டி” என அவள் முன் முட்டியிட்டு தளர்ந்து அமர்ந்து விட்டவன் காதலின் உச்ச விளிம்பில் அக்காதலையே யாசகமாய் கேட்டான்.

“இது நீ விரும்புன காதல் இல்லயே சத்யா” உதட்டை பிதுக்கி உரைத்தவள், “இந்தக் குடிகாரி, இந்தப் பைத்தியக்காரிகிட்ட, இன்னொருத்தனோட எக்ஸ் பொண்டாட்டிகிட்ட அதே காதல் இல்லையே ப்ரொஃபி” சொல்லும்போதே அதிகமாய் தேய்ந்து தேம்பியது அவள் குரல்.

“எனக்கு அதே காதல் வேணாம்டி பொண்டாட்டி. இந்தக் குடிகாரி, இந்தப் பைத்தியக்காரி, இன்னொருத்தனோட எக்ஸ் பொண்டாட்டிகிட்ட அதை விட அதிகமான காதல் அடியாழத்துல புதைஞ்சு மண்டி கிடக்கு. அது தான் வேணும்…” என்றவன் அவளது வயிற்றில் முகம் புதைத்து முத்தமிட தொடங்கினான்.

வயிற்றிலிருந்து மேலேறி கழுத்து வழியே முத்தத்தை தொடர்ந்து இதழ்களைக் கவ்வி விழுங்கியவன், அவளது கண்ணீரை எல்லாம் அதரங்களின் ஈரம் கொண்டே துடைத்தெறிந்தான்.

முத்த சத்தம் முழு அறையையும் நிறைத்திருக்க, “ஐ லவ் யூ இதயா. ஐ லவ் யூ… ஐ லவ் யூடி பாஸ் பேபி” என முத்தத்திற்கு இடையே முழுப்பெறாத காதலை கொட்டித் தீர்த்ததில், கண்மூடி அமைதியாய் நிச்சலனமாய் அவனது ஒவ்வொரு முத்தத்தையும் அடிநெஞ்சில் சேமித்துக்கொண்டிருந்தாள் இதயாம்ரிதா.

பின், அவளும் வேக வேகமாய் அவனது நெற்றி தொடங்கி முத்தத்தால் அவனைக் குளிப்பாட்டினாள்.

அவனது இதழ்கள் அவளிடம் சிக்கி சிறை பெற, இருவரும் மாறி மாறி உதடுகளை சிறையெடுத்து சோர்ந்தனர்.

“போதை தெளிஞ்சதும் இதெல்லாம் மறந்துட்டா என்ன செய்வ பிரொஃபி” அவசரமாக ஒருமுறை அவன் இதழைத் தண்டித்து விட்டு இதயா வினவ, அவனிடம் சின்னதாய் ஒரு முறுவல்.

“ஓஹோ போதைல இதெல்லாம் பண்ணிட்டு இருக்குறதா நினைச்சுட்டு இருக்கியா? கண்ணை நல்லா தொறந்து பாருடி பாஸ் பேபி. நீ தெளிவா தான் இருக்க” என்றதும் தான் அத்தனை நேரமும் அவனது நெருக்கம் தந்த தகிப்பில் அரை மயக்கத்தில் இருந்தவள் கண்களை நன்றாக விரித்தாள்.

“நான் ஒரு பாட்டில் முழுக்க குடிச்சேனே” இதயாம்ரிதா குழம்ப,

“பாட்டில் முழுக்க நீ குடிச்சது பச்சை தண்ணி தான். நீ ஒரு தடவை குடிக்கிறதை பார்த்தப்பவே இங்க இருந்த பாட்டில் எல்லாத்துலயும் சரக்க காலி பண்ணி தண்ணியை ரீபிளேஸ் பண்ணிட்டேன்…” என்றவனின் குறும்புச் சிரிப்பில் திருதிருவென விழித்தவள், போதையில் தானே என்றெண்ணி அவனுக்கு பிரென்ச் முத்தத்தை வகை வகையாய் கொடுத்ததை எண்ணி செங்கொழுந்தாய் சிவந்து நகர்ந்தாள்.

“இதை முன்னாடியே சொல்ல வேண்டியது தான” அவனது முகம் பார்க்கவே வெட்கம் பிடுங்கித் தின்ன வினவியவளிடம்,

“முன்னாடியே சொல்லிருந்தா, என் லிப்ஸ்கு லிப் தெரபி கிடைச்சுருக்காதே” காதல் பார்வையால் அவளைத் திணறடித்தவன், அவளது சிவப்பை தனது நெஞ்சில் மறைய வைத்து இறுக்கி அணைத்துக்கொண்டான்.

புது காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 186

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
190
+1
10
+1
10

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

7 Comments

  1. Superb
    Ithuku apuram revenge bayangarama ah irukanum
    Friends ah vathu manavathu….

  2. அம்ரி சத்யா கியூட். பாவம் பத்மா

  3. Yamaa neenga episodes olunga release pannavae maatingala naanga evlo naal
    thaan wait pandrathu atleast be consistent