⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.

“என்னன்னு சொல்லுங்க?” என்றாள் இழையாள் கணவனின் தயக்கத்தை கண்டு.
“நாம தனிக்குடித்தனம் போயிடலாமான்னு பார்க்கிறேன்…”
“என்ன பேசுறீங்க?” என்று இழை திகைக்க,
“உனக்கும் எனக்குமான டைமும் ஸ்பேஸும் குறைஞ்சிட்ட ஃபீல் இழை. எப்பவும் யாராவது ஒருத்தர் உன்னை சுத்தி இருந்துட்டே இருக்காங்க. உன்னை பார்க்க எத்தனை தடையை தாண்ட வேண்டியதா இருக்கு. குழந்தையாவது என்னோட வச்சுக்க முடியுது. ஆனா உன்னை?”
“என்ன தான் என் குடும்பத்தை உன்னோட குடும்பமா நினைச்சு அதை எல்லாம் செய்தாலும் எனக்கென்னமோ உன்னை ஃபேமிலியோட கட்டிபோட்டுட்டதா தோணுது.”
“ஏங்க இது என்ன புதுசா என் குடும்பம் உன் குடும்பம்னு பேசுறீங்க. அப்போ நான் இல்லாம நீங்க இல்ல. முழுமை இல்ல, xx, xy ன்னு சொன்னதெல்லாம் சும்மாவா. என்னை பிரிச்சு தான் பார்க்கறீங்களா,” என்றவளின் விழிகளில் இருந்து கண்ணீர் இறங்கியது.
“ப்ச் அப்படியில்லடி. எனக்கு, நா… நான் உனக்கு நல்ல ஹஸ்பன்ட்டா இருக்கேனா?”
“ஏங்க உங்களை விட யார் இருந்திட முடியும். எதுக்கு இந்த மாதிரி கேள்வி கேட்கறீங்க. என்னாச்சு உங்களுக்கு?”
“உனக்கு தெரியாது. எனக்குள்ள இருந்த உன்னை அடையாளபடுத்த எடுத்த நேரத்துல நான் சந்திச்ச பெண்கள். அப்புறம் நக்ஷத்திரால இருந்து பல பேரால எனக்கு வரப்போற வைஃப், அதாவது நீ எப்படி இருப்பன்னு எனக்கு ஒரு க்ளு கிடையாது. அன்னைக்கு நீ சொன்ன வார்த்தைகளால உன்னால மட்டுமே என் வாழ்க்கையை அழகாக்க முடியும்னு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும் நமக்குள்ள எப்படி ஒத்துபோகும். அதைவிட நான் உன்னோட எக்ஸ்பெக்டேஷன்ஸ் எப்படி மீட் பண்ணுவேன்னு சின்ன பயம் இருந்தது.
என் பிரெண்ட்ஸ் சிலரோட லைஃப் தோத்துடுச்சு. அதெல்லாம் எனக்கு கத்துகொடுத்த பாடமே வேற. குழந்தையால நக்ஷத்ரா விஷாலோட சேர்ந்திருந்தாலும் இன்னும் அவங்களுக்குள்ள பெருசா இணக்கம் வரல.
எனக்கு நீ கிடைச்சா போதும். உன்னை மிஸ் பண்ணிடாம பொக்கிஷமா பாதுகாக்கனும்னு எண்ணத்தோட இருந்த எனக்கு உன்னோட காதல், எனக்கான காத்திருப்பு நிஜமாவே என்னை மூச்சடைக்க வச்சுடுச்சு. எத்தனை பேருக்கு இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வைஃப் கிடைப்பாங்கன்னு தெரியலை. நிஜமாவே நான் லக்கி. எனக்கு அதுல டவுட்டே இல்ல.”
“ஆனா நான் உனக்கு நல்ல ஹஸ்பன்ட்டா இருக்கேனா. எப்பவும் போல இல்லாம இந்தமுறை நமக்குள்ள ஒருமாச பிரிவு. என்னதான் நீ எதிர்பார்ப்பு இல்லைன்னு சொல்லியிருந்தாலும் பொதுவாவே மனசை குரங்குக்கு ஒப்பிடுவாங்க. அதனுடைய ஆசை, தேவைகள் ஒன்றுபோல இல்லாம மாறிட்டே இருக்கும். உன்னோட அந்த டைம்ல எடுத்த டிசிஷன் இத்தனை வருஷத்துல மாறியிருக்க வாய்ப்பு இருக்குதானே.”
“அப்படின்னு நீங்களா முடிவு செய்துப்பீங்களா? எனக்கு மெட்டீரியலிஸ்டிக் திங்க்ஸ் மேல பெருசா ஆர்வமில்லன்னு உங்களுக்கு தெரியாதா. எப்பவும் கடவுள் எனக்கு கொடுத்திருக்க அழகான நொடிகளுக்கும் உறவுகளுக்கும் நன்றி சொல்வேனே தவிர எனக்கு வேணும்னு நான் கேட்டது உங்களை மட்டும் தான்..”
“பொருட்களுக்கு அழிவுண்டு. ஆனா நினைவுகளுக்கு இல்லை. அப்படி பார்த்தா இதுவரை நீங்க எனக்கு எத்தனையோ அழகிய நினைவுகளை, தருணங்களை பரிசா கொடுத்திருக்கீங்க. இன்னைக்கு எனக்கு முதல்ல விஷ் பண்ணனும்ன்னு ரெஸ்ட் எடுக்காம ட்ராவல் செய்து வந்திருக்கீங்க..”
“இப்படி ஒவ்வொரு நாளும் காதலை அள்ளி கொடுத்துட்டு நல்ல ஹஸ்பன்ட்டான்னு கேள்வி வேற. இன்னொரு முறை கேட்பீங்க?” என்றவள் அவன் அதரங்களை தண்டிக்க, சுகமாய் அவள் தண்டனைகளை ஏற்றவன்.
“அப்படியில்லடி. ஒருவேளை இத்தனை வருஷத்துல என்கிட்டே ஏதாவது சேஞ்சஸ் இல்ல. உனக்கு பிடிக்காதது, குறை, அப்படி ஏதாவது இருந்தா சொல்லு. நான் மாத்திக்கிறேன்.”
“நீங்க எப்படி இருக்கீங்களோ அதுவே எனக்கு பிடித்தம். அப்புறம் ஏன் மாறனும். சொல்ல போனா அப்படி ஒரு நிலைக்கு நீங்க என்னை கொண்டு வந்ததே இல்லை. எந்த விஷயம் செய்யறதா இருந்தாலும் என்னை கலந்துக்காம செய்யறதில்லை.
ஒவ்வொரு பெண்ணும் அதிகபட்சமா தன் கணவனிடம் எதிர்பார்க்கிறது அவங்களோட முக்கிய தருணங்களில் கூட இருக்கணும்னு தான். அதை குறையில்லாம செய்திருக்கீங்க.
இன்னும் முப்பது வருஷம் கழிச்சு குழந்தைகளை எல்லாம் செட்டில் பண்ணிட்டு நம்ம லைஃப்பை புரட்டி பார்த்தா அத்தனை நினைவுகள் குவிஞ்சு கிடக்கும். அதுல நீங்க கொடுத்திருக்க அத்தனையும் சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கக்கூடியது.
இப்போ நமக்கான ஸ்பேஸ் குறைஞ்சுடுச்சுன்னு தனிக்குடித்தனம் போக எதிர்பார்ப்பேன்னு நீங்க எப்படி நினைப்பீங்க?”
“ஆனா குழந்தை பிறந்த பிறகு நான் உன்னை மிஸ் பண்ற மாதிரி நீயும் பண்ணுவ தானேடி. அதான் தனிக்குடித்தனம் போனா நமக்கு இன்னும் டைம் கிடைக்குமேன்னு பார்த்தேன்..” என்றவனின் பேரன்பில் திளைத்த இழைக்கு வார்த்தை வசப்படாது போக, மௌனமாய் அவன் மார்பில் சாய்ந்தாள்.
“சொல்லுடி, என்னை மிஸ் பண்ற தானே.”
“ஹ்ம்ம். ஆனா உங்களுக்கும் எனக்குமான நேரம் குறைய குறையத்தான் உங்களை இன்னும் அதிகமா நேசிக்கிறேன். உங்களுக்காக யோசிக்கிறேன். காத்திருப்பு உங்க மேல இருக்க காதலை தேடலை அதிகமாக்குது. நீங்களும் அப்படி தானே. அப்புறம் ஏன் அதை மாற்றனும்.”
“இல்லடி, நக்ஷத்ரா குழந்தையை விட்டு போக காரணமே கேரியர் தான். ஆனா நீ கல்யாணம் ஆனதுல இருந்து ப்ராக்டீஸ் பண்றதே விட்டுட்ட. இப்போ அடுத்த குழந்…” என்றவனை இடையிட்டு,
“ஏங்க வேலைக்கு போற என் பிரெண்ட்ஸோட கர்ப்பகாலம் எவ்ளோ ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா. மூட் ஸ்விங்ஸ், வீட்டு வேலை, குழந்தையால ஏற்படும் மாற்றம், ஆபிஸ் வேலை எல்லாம் சேர்ந்து அவங்களை ஒருவழியாக்கி இன்னொரு குழந்தையே வேண்டாம்ன்னு முடிவெடுக்க வச்சுடுச்சு. பொதுவாவே கர்ப்பமா இருக்கப்பவும் சரி, குழந்தை பிறந்த பிறகும் சரி, ஒரு அம்மாவா தன் பெண்ணை பார்க்கிறதுக்கும் மாமியாரா தன் மருமகளை பார்க்கிறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கும். ஆனா இங்க என்னோட அத்தைங்க எனக்கு அம்மாவா இருக்காங்க.”
“குழந்தைகளுக்காக ப்ரேக் எடுத்து தாய்மையை நான் சந்தோஷமா அனுபவிச்சிட்டு இருக்கேன். பாப்பாவோட இருக்க ஒவ்வொரு நிமிஷமும் அம்மாவா பல விஷயம் கத்துக்கறேன். இதையெல்லாம் வேலை, பணத்துக்காக என்னால இழக்க முடியாது.”
“ஜீவியோட வேலை பார்க்கிற பலர் கேரியருக்காக குழந்தையை தள்ளிப்போட்டு, முப்பது முப்பத்திஐந்து வயசுல ட்ரீட்மென்ட்ல இருந்து குழந்தை பிறந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாம எவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்க தெரியுமா. நீங்க என்ன சொன்னாலும் என்னோட ப்ரையாரிட்டி எப்பவும் மாறாது. இதையெல்லாம் இழந்து என்னை நிரூபிச்சு, கடைசியில இழந்ததுக்காக வருத்தப்பட நான் தயாரா இல்லை.”
“ஜீவி பசங்களை சொல்லினாலும் நிஜமாவே அவளுக்கு கல்யாணம் செய்யற அளவு தைரியமில்ல. நம்ம வாழ்க்கையும் மத்தவங்களை போல தோத்துடுமோன்னு பயந்தே மறுத்துட்டு இருந்தா. என்னதான் நான் அவளை குழப்பி சம்மதிக்க வச்சிருந்தாலும், நம்ம ஃபேமிலி கொடுத்த நம்பிக்கையில இங்க வந்தவளுக்கு, நம்மளை பார்த்த பிறகு தான் லைஃப்பையும் கேரியரையும் பேலன்ஸ் பண்ண முடியும் என்ற நம்பிக்கையும், குழந்தை பெத்துக்குற தைரியமும் வந்திருக்கு.”
“நிச்சயமா குழந்தை பிறந்த பிறகு நம்முடைய தினசரி வாழ்க்கையில நிறைய மாற்றம் வந்திருக்கு. நீங்க அதுக்கு தயாரா இருந்ததால நமக்குள்ள பெருசா பிரச்சனை வரல. திகழ்குட்டி என்னைவிட ஜீவிகிட்ட ரொம்ப அட்டாச்ட்டா இருக்கா. நீங்க சொல்ற மாதிரி தனிக்குடித்தனம் போனா தான் யாருமில்லாம கஷ்டப்படுவேன். அதை விட இங்க எல்லாரும் பொறுப்பை பகிர்ந்துக்கிறோம். தனியா இருந்தா குழந்தைக்கான பொறுப்பு நம்ம இரண்டு பேரோடதா மட்டும் சுருங்கி போயிடும். அப்போ எனக்கு உங்களையும், உங்களுக்கு என்னையும் யோசிக்க கூட நேரமிருக்காது.”
“உங்களுக்கு தெரியுமா, தனிக்குடித்தனத்துல இருந்துட்டு வேலைக்கு போற பலரோட பிரச்சனையே வீடு வந்த பிறகும் தான். எல்லாம் இழுத்துப்போட்டு செய்யணுங்கிறது. அவ்ளோ டையார்ட்டா வீட்டுக்கு வரவங்களுக்கு ஒரு கப் காஃபி போட்டுக் கொடுக்க கூட யாரும் இருக்க மாட்டாங்க. தானே செய்துக்கணும்.”
“அதுவே அவங்களுக்கு ஒருவித வெறுப்பை கொடுத்து, நாளடைவுல பிரிவுக்கு வழிவகுக்கும். என்னோட பிரெண்ட்ஸ் எப்பவும் அவங்க பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து தான் பிரச்சனையை சொல்லுவாங்க. ஹஸ்பன்ட் நிலையை யோசிச்சதே இல்லை. அதேபோல தான் அவங்க ஹஸ்பன்ட்ஸும். அவங்களோட லைஃப் ஜெயிக்காம போக, அன்னைக்கு நீங்க சொன்னீங்களே ‘the worst of all defects is to be unaware of them’ன்னு. அதுதான் அவங்களோட பிரிவுக்கு காரணம்.”
“ஆனா நாம அப்படி இல்லையே. நான் வேண்டாம், அடுத்த குழந்தை பிறந்த பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லியும் கேட்காம, வீட்டு பக்கத்துல இடம் வாங்கி ஹாஸ்பிட்டல் கட்டிட்டு இருக்கீங்க. எத்தனை பேர் இப்படி வைஃபுக்காக யோசிப்பாங்க, செய்வாங்க.”
“அதைவிட கொஞ்சமும் ஈகோ இல்லாம, எனக்காக என் வீட்ல தங்கறது. அதைவிட என்கிட்ட ஏதாவது குறை இருந்தா சொல்லு, உனக்கு பிடிக்கலைன்னா நான் மாத்திக்கிறேன்னு புருஷன் பொண்டாட்டிக்கிட்ட சொல்றது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா. இதை சொல்லாதது தான் பல இடங்களில் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.”
“அப்படியில்ல இழை.”
“நீங்க ஒன்னும் பேசாதீங்க. தனிக்குடித்தனம் போகணுமாமே, தனிக்குடித்தனம். யார் உங்களுக்கு இதையெல்லாம் சொல்லி கொடுக்குறான்னு தெரியலை. ஆனா இன்னொரு முறை இப்படி பேசுங்க, இருக்கு உங்களுக்கு.” என்றவள் கம்பளியோடு சோஃபாவில் சென்று படுத்தாள்.
“இங்க என்னடி பண்ற?”
“நீங்க தானே தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்பட்டீங்க. இனி ஒரே ரூம்ல தனித்தனியா குடித்தனம் செய்யலாம்,” என்று படுத்துக்கொள்ள,
“என்ன கோபம் வருதுடி உனக்கு..” என்றவாறே வசீ கம்பளிக்குள் நுழைய முயல, இழை அவனை தள்ளிவிட, வசீ அவள் மீதே விழ அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அடுத்த சில நிமிடங்களில் அறையை காதல் போர்க்களமாக மாற்றியவர்கள், விடியலில் துயில் கொண்டனர்.
காஃபியின் நறுமணத்தோடு இழையின் பகல்பொழுது விடிய, எழுந்தவள் கைபேசியை தேடும்முன்,
“பாப்பா எந்திரிச்சுட்டா உன்னை தேடவே இல்லையாம். ஜீவியோட சமத்தா குளிச்சு சாப்பிட்டுட்டு, இப்போ ப்ரணவோட மேடம் ரவுண்ட்ஸ்க்கு கிளம்பிட்டாங்களாம்,” என்றவன் குளித்து வந்தவளிடம் கோப்பையை நீட்ட, அதை வாங்காமல் மீண்டும் கைபேசியை எடுத்தாள்.
“யாருக்கு பண்ற?” என்றவனுக்கு பதிலளிக்காமல் முறைத்தவள்,
“மாமா,” என்றதும், கைபேசியை பிடுங்கி வீசியவன்,
“எதுக்குடி அவருக்கு கால் பண்ற.” என்றவாறு காஃபியை புகட்ட வேண்டாம் என்று மறுத்தவள்,
“நீங்க முதல்ல தனிக்குடித்தன பேச்சை இனி எடுக்கமாட்டேன்னு சொல்லுங்க,” என்றாள் அடமாக.
“நீ சொன்னதெல்லாம் சரிடி. ஆனா ஒரு பத்து வருஷம் கழிச்சு இந்த எண்ணம் மாறலாம். உனக்கு அப்படி தோணினா எனக்கு மறைக்காம சொல்லு. நான் அப்பா அம்மாகிட்ட பேசறேன். அவங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்க.”
“இவ்ளோ சொல்றேன் கேட்க மாட்டீங்களா?!” என்று தலையணை கொண்டு மொத்த தொடங்கிவிட்டாள்.
“ஹே விடுடி.”
“இல்ல முடியாது. ஒரே பெண்ணா வளர்ந்த எனக்கு, என் பொண்ணுக்கு சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டின்னு எல்லாரோட பாதுகாப்பா வளருறாளேன்னு நான் சந்தோஷமா இருந்தா, நீங்க அதை கெடுக்க பார்க்கறீங்க. அதைவிட அவங்க இருக்கிறதாலதானே இப்போ நீங்க என்னை தனியா தள்ளிட்டு வர முடிஞ்சது. இல்லனா வரமுடியுமா,” என்று கேட்க, அடக்கமாட்டாமல் சிரிக்க தொடங்கிவிட்டான்.
“எதுக்கு சிரிக்கிறீங்க?”
“பின்ன என்னடி, நேரடியா விஷயத்துக்கு வராம எங்கெங்கேயோ சுத்தி எப்படியெல்லாமோ உருட்டிட்டு இருக்க.”
“நான் என்ன உருட்டினேன்?”
“இதோ இப்போ சொன்னியே, எல்லாரோடவும் இருக்கிறதால தான் நினைச்ச போது தள்ளிட்டு வர முடிஞ்சதுன்னு. அதை முதல்லயே சொல்ல வேண்டியது தானே.” எனவும் தன்னை கண்டுகொண்டதில், இழையின் கன்னங்கள் சிவக்க, பார்வையை தாழ்த்தியவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “ஆமாவா இல்லையா?” என்றான்.
“என்னதிது,” என்றவள் அவன் தோளில் தன் முகம் மறைக்க.
“காஃபி,” என்று அவள் முன் சூடான கோப்பையை நீட்டினான்.
“எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்றாள் குறையாத வெட்கத்தோடு.
“தெரியும்டி. நீ இன்னும் மாறவே இல்ல. என்னை சுற்றி மட்டும் தான் உன்னோட உலகத்தை அமைச்சிருக்க. அதே நிபந்தனையற்ற காதலோடும் நம்பிக்கையோடும். நான் பெஸ்ட் ஹஸ்பன்ட்டான்னு தெரியாது. ஆனா நீதான் பெஸ்ட் வைஃப்.” என்று பேசிக்கொண்டிருக்க, அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது.
“யாருங்க இது.”
“தெரியலையே. ஃபூட்கூட ஆர்டர் பண்ணலை. இரு பார்க்கிறேன்.”
“ஏங்க இருங்க. உடனே திறக்காதீங்க,” என்றவளை “ஏன்” என்பதாக பார்க்கவும், “ப்ச், நான் ஷேர்ட்ல இருக்கேன். மாத்திடுறேன்.” என்றவள் உடை மாற்றிய பின் கதவை திறக்க, அங்கே மொத்த குடும்பமும் விடாது கருப்பு போல அவர்களை துரத்தி வந்திருந்தது.
“ப்பா,” என்று வசீ அதிர்ந்து பார்க்க,
“தம்பு, பிங்கிக்கு குளிர் தாங்காதுன்னு தெரியாதா. கார்ல கூட்டிட்டு வராம புல்லட்ல கூட்டிட்டு வந்திருக்கன்னு அப்பா கோபமா இருக்கார்,” என்றவருக்கு பதிலளிக்கும் முன்,
“ஹாப்பி பர்த்டே டூ யூ,” என்று அவனை இடித்துக்கொண்டு பாடியவாறு அவர்கள் உள்ளே நுழைய, வழக்கம்போல வசீகரன் விலகி நிறுத்தப்பட்டான்.
“எப்படிங்க?” என்று இழை கண்களால் கேட்க, அப்போது தான் பார்கவி கைலாசத்தை கண்டவன்,
“இப்படிதான் இருக்கணும்,” என்று புன்னகையோடு பார்க்க, அண்ணி, பிங்கி என்று அனைவரும் சூழ்ந்துகொண்ட அதே நேரம், ஜீவியிடமிருந்து இறங்கி,
“ப்பா, ப்பா,” என்று வாய்கொள்ளா புன்னகையோடு வசீகரனை நோக்கி தளிர்நடை போட்டுவந்தாள் திகழினி.
இழையின் விருப்ப உணவுகளை சமைத்து வந்திருந்த அபியும் நாயகியும், இழைக்கு பரிமாறிட, அனைவரோடு சேர்ந்து உண்டு முடித்தவளிடம், ஒவ்வொருவரும் பரிசுகளை கொடுக்க,
“அண்ணா, உங்களோடது,” என்று ப்ரணவ் கேட்கவும், இழையிடம் மற்றொரு பெட்டியை நீட்டினான் வசீகரன்.
ஆவலோடு பிரித்து பார்க்க, அதில் அவனது சட்டை உடன் fairy tales புத்தகம்.
திகைத்த இழை வசீயை பார்க்க, அவனோ அட்டகாசமான சிரிப்போடு மகளை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
“அண்ணி, இது நம்ம ஸ்கூல் லைப்ரரி புக். இது எப்படி,” என்று சர்வா கேட்க, “உங்களை,” என்று கணவனை முறைத்தவளிடம் “எப்படி,” என்று சுற்றி இருந்தவர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
பதில் சொல்ல முடியாது தவித்திருந்த இழையாளை, அவளறியாமல் விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான் வசீகரன்.
சுபம்
Click on a star to rate it!
Rating 5 / 5. Vote count: 6
No votes so far! Be the first to rate this post.

