
“சொல்லுடி..!” என்றதும் குரலை செருமியவள், “அது நான் கவுன்ஸலிங் முடிச்சுட்டு காலேஜ் ஜாயின் பண்றதுக்காக காத்துட்டிருந்த நேரம். நிச்சயமா அதுவரைக்கும் எனக்கு உங்க ஞாபகம் பெருசா வந்ததில்ல. சொல்லப்போனா நீங்க கோபப்பட்டது நினைச்சு அப்பப்போ பயமும் ஜுரமும் தான் வரும்.”
“அம்மா ஏற்கனவே உங்களை பற்றி பேசியிருந்தாலும், எனக்கு எதுவும் தோணினதில்லை. அதெல்லாம் அன்னைக்கு விகாஷினிக்கு அந்த கொடூரம் நடக்கிறவரை தான்..!!”
“யார் விகாஷினி..?”
“எங்க பக்கத்து தெருவுல இருந்த குழந்தை. எங்க ஸ்கூல்ல ஃபோர்த் ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருந்தா. வீட்டுக்கு அடிக்கடி வருவா…”
“அன்னைக்கும் அதேபோல என்னோட விளையாடிட்டு, சாயங்காலம் ஒரு ஏழு மணிபோல கிளம்பினா. நான் அவ தெருவை தாண்டும் வரை பார்த்திருந்துட்டு வீட்டுக்குள்ள வந்துட்டேன்.”
“ஆனா அதுக்கப்புறம் அந்த குழந்தையை நாங்க மூணு நாள் கழிச்சுதான் பார்த்தோம்… அதுவும் சடலமா…” என்று நிறுத்தியவளின் தொண்டை குழி ஏறி இறங்கியது.
“குழந்தைக்கு என்னாச்சு?”
“அவ குழந்தைன்னு உங்களுக்கு தெரியுது. ஆனா அவளை கொன்ன மிருகத்துக்கு தெரியலையே..”
“என்னடி சொல்ற?”
“ஆமா. இப்போ இருக்கிற மாதிரி எங்க வீட்டை சுத்தி அதிகமான வீடுகள் அப்போ கிடையாது. கொஞ்சம் தள்ளிதான் இருக்கும்.”
“லேட் ஆகிடுச்சுன்னா அவங்க அப்பாவோ இல்ல எங்கப்பாவோ கூட்டிட்டு போவாங்க. வெளிச்சமா இருந்தா, நான் சொன்னாகூட கேட்காம அவளே ஓடி போயிடுவா.”
“அன்னைக்கும் அப்படிதான். ‘நான் வரேன்னு’ சொன்னா கேட்காம, ‘நானே போயிடுவேன்’ன்னு கிளம்பினா…”
“ஆனா அடுத்த கொஞ்ச நேரத்துல, அதே தெருவை சேர்ந்த மிருகம் விகாஷினியை கடத்திட்டு போய், தன்னோட இச்சையை தீர்த்துட்டு கொடூரமா கொன்னுடுச்சு..”
“தெரிஞ்சவனா?”
“ஆமாங்க. அவனும் அதே தெருதான். காலேஜ் படிச்சுட்டு இருந்தான்…”
“விகாஷினி அப்பப்போ பைக்ல அவனோட போறதை நானே பார்த்திருக்கேன். அவன்தான் இப்படி செய்தது.”
“குழந்தையை மீட்கவே மூணு நாள் ஆகிடுச்சு. அப்புறம் அட்டாப்ஸி முடிஞ்சு, இவனை கண்டுபிடிக்கற வரை எங்க யாருக்குமே தூக்கமே இல்ல.”
“கண்ணை மூடினா அந்த குழந்தைதான் முன்னாடி வந்து நிற்கும்…”
“எதனால இழை..?”
“எதனாலன்னு கேட்டதுக்கு, ‘குடிபோதையில செய்துட்டேன். அவளுக்கு என்னை தெரியும்; காட்டிக்கொடுக்க கூடாதுன்னு தான் கொன்னேன்’ன்னு சொன்னான்..”
“அதுக்கப்புறம் தான் தெரிய வந்திருக்கு. இந்த நாய் அவன் லவ்வர் கூட சண்டை போட்டு, கோபத்துல கையில கிடைச்ச குழந்தையை இப்படி சித்திரவதை செய்திருக்கான்.”
“அவ்ளோ ஈஸி டார்கெட் ஆகிட்டாங்க குழந்தைங்க…”
என்று முடித்த இழை, கண்ணீரோடு கணவனின் தோளில் சாய்ந்தாள்.
அதன்பின்பான நிமிடங்கள் கனத்துப் போனது.
“எங்களுக்கெல்லாம் அந்த துக்கத்துல இருந்து மீள ரொம்ப நாள் ஆச்சு. அதுக்கப்புறம் ஏன்னே தெரியாம, எனக்கு உங்க ஞாபகம் அடிக்கடி வந்துட்டே இருந்தது…”
“சரியா சொல்லணும்னா, யார்கூடவும் என்னை தனியா அனுப்பாத எங்கம்மா, இதே வயசுல ஜித்துவை… உங்களை நம்பி அனுப்பியிருக்காங்க…”
“அவன் என் ஃபிரெண்ட். எங்களுக்குள்ள சண்டை வந்தாலும் சீக்கிரமே சேர்ந்துடுவோம். ஆனா நீங்க அப்படியில்ல…”
“அன்னைக்கு கார்ட் மாத்தி கொடுத்து, அத்தனை பேர் எதிர்ல நீங்க அசிங்கப்பட, நான் காரணம். அப்படியிருந்தும் நீங்க என்னை எதுவும் செய்யலை…”
“என்னடி சொல்ற? நான் என்ன செய்யணும்..?” என்று புரியாமல் பார்த்தான்.
“இல்ல… அன்னைக்கு உங்களுக்கு இருந்த கோபத்துக்கு பழிவாங்க, நீங்க என்னை என்னனாலும் செய்திருக்கலாம்…”
“அதோட, என்னால நீங்க கஷ்டப்பட்டதால, நீங்க என்ன செய்ய சொல்லியிருந்தாலும் நானும் செய்திருப்பேன். ஐ மீன்… தப்புக்கு தண்டனை கொடுக்குறேன்னு சொல்லி…”
“இத்தனைக்கும் நானேதான் உங்களை தேடி வந்தேன்… நீங்க என்…” வார்த்தைகள் கோர்க்க முடியாமல் இழை தயங்கினாள்.
“அடிச்சிட போறேன்! வாயை மூடுடி..!!” என்று வசீகரன் கர்ஜிக்க, அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.
வசீகரனின் விழிகளில் அத்தனை ரௌத்திரம். “ஏய்! என்ன பேச்சு பேசுற? அன்னைக்கு குழந்தைடி நீ..!!” என்று எழுந்துகொண்டவன்,
“என்னை என்ன நினைச்சிட்டு இருக்க..? எதுக்கு உன்னை தண்டிக்கணும்? சொல்லப்போனா, நீ அழுவதைப் பார்த்ததும் எனக்கு இருந்த கோபத்தை காட்டக்கூட முடியல. மனசு ஒரு மாதிரி ஆகிடுச்சு.”
“உன்னை போய் நான்… ப்ச்… நீ நினைக்கிற அளவு நான் மோசமில்லடி…” என்று தன் கோபத்தை கட்டுப்படுத்த வெகுவாக போராடினான்.
“ஸாரி… ஸாரிங்க…”
“அன்னைக்கு அந்த இன்சிடென்ட்க்குப் பிறகு, ஒருவேளை உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, இன்னைக்கு நான் இருந்திருப்பேனான்னு எனக்கும் தோணுச்சு…”
“உங்களை தப்பா சொல்லல. ப்ளீஸ் அப்படி அர்த்தம் எடுக்காதீங்க. நீங்க இல்லைன்னா நான் இல்லைன்னு சொல்ல வந்தேன்…” என்று சொல்ல, வசீகரன் விண்டு போன மனதுடன் மனைவியை பார்த்திருந்தான்.
சில நொடிகளில் தன்னை மீட்டவன், அவள் கையை பிடித்து நடக்க, “என்னங்க… ப்ளீஸ்…”
“நீ பேசாம வரது உனக்கு நல்லது.” என்று வசீகரன் அறைக்கு திரும்பி கதவை அடைத்தான். அவளிடம் எதுவும் பேசாமல் படுத்துவிட இழைக்கு அவனை நெருங்கவே பயமாக இருந்தது.
மேலும் இரண்டு நாட்கள் கடந்த நிலையில், வசீகரன் மனைவியை அழைத்து கொண்டு குருவாயூர் கோவில், இன்னும் சில இடங்கள் என்று சுற்றிவிட்டு வந்தானே தவிர அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இழை எத்தனையோ முயன்ற போதும், அவன் மனம் இறங்கவில்லை.
வெளியில் மட்டுமல்ல, அறையிலும் அவள் பேசுவதை அவன் காது கொடுத்து கேட்டால் தானே சமாதானப்படுத்த முடியும்…!!
ஆனால் இழை பேச்சை ஆரம்பித்தாலே, கதவை அடைத்துவிட்டு வெளியில் அமர்பவன் அவள் உறங்கிய பிறகே அறைக்கு திரும்புவான். அறியாமல் வசீயை காயப்படுத்திவிட்ட இழைக்கு, ஊடல் கொண்டு குளிரில் தன்னை வருத்திக் கொள்பவனை கண்டு கண்ணீர் பெருக்கெடுத்தது.
வசீகரனை காதலிக்கத் தொடங்கிய பின், “நிச்சயம் இன்னொரு முறை அவன் கண்ணீருக்கு நான் தான் காரணமாகி விடக்கூடாது” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டவளுக்கு, இப்போது தானே அறியாமல் காயப்படுத்தியதை அத்தனை எளிதாக கடக்க முடியவில்லை.
திருமணத்திற்கு பிறகான முதல் ஊடல்! கணவனின் பாராமுகம், ஒதுக்கத்தில் பெண் அரண்டு போயிருந்தாள்.
எத்தனை இனிமையாக தொடங்கிய நாள், இப்படி முடிவடையும் என்று எதிர்பாராதவள், இரவு முழுக்க தலையணையை நனைத்தாலும், விடியலில் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து விட்டாள்.
பின்னே! இரண்டு நாட்களும், பகலில் வெளியில் அழைத்துச் சென்று முடிந்த வரை அவளிடமிருந்து ஒதுங்கியிருந்த வசீகரனது இரவு ஜாகையும் வெளியில் இருக்கும் ஊஞ்சலில்தான்…!!
அவள் எத்தனை முயன்றபோதும், ஊசியாய் தைக்கும் குளிரில் இரவு முழுக்க இருப்பவனை எள்ளளவும் அசைக்க முடியவில்லை.
வசீகரனின் கோபத்தை மட்டுமே அறிந்திருந்தவளுக்கு, அவனது அழுத்தமும் ஒதுக்கமும் பேரதிர்ச்சியே…!!
சத்தியமாக எப்படி கையாள்வது என்று புரியாது அலமலந்தவள், இன்று எப்படியேனும் பேசி தீர்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு காத்திருந்தாள். குளியலறையிலிருந்து வெளியேறிய வசீயிடம், “ப்ளீஸ் ஸாரிங்க… நான் ப்ராமிஸா அப்படி மீன் பண்ணலை… உங்ககிட்ட சேஃபா இருந்தேன்னு சொல்ல வந்தேன்… ஆனா நீங்க…” என்று பரிதவிப்போடு பார்த்தவளிடம்,
“ஒரே ஒரு கேள்வி கேட்கணும்…” என்று அவன் மௌனம் உடைத்தான்.
“சொ… சொல்லுங்க…”
“நான் உன்னை முதல் முறை கிஸ் பண்ணினப்போ, அதை தண்டனையா தான் ஏத்துக்கிட்டியா?”
“தண்டனையா? அதுவும் தன்னவனின் முத்தமா?” என்று அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“முத்தத்தை மட்டும் இல்ல… மொத்தமும் தண்டனைன்னு சொல்லிடாதடி… நான் தாங்க மாட்டேன்…” என்றவனின் குரல் உடைய, துளிர்த்த கண்ணீரோடு, “ரொம்ப வலிக்குது இழை…! எனக்கென்னமோ இந்த முறை மோசமா தோத்துட்டதா தோணுது…” என்றதுமே, பதறியவள் கணவனை நெருங்க அவனோ அவளிடமிருந்து தள்ளி நின்று,
“தண்டனையா நான் உனக்கு வேண்டாம்!! கிளம்பு… உங்க வீட்ல விட்டுடுறேன்…” என்று வெளியேற முயன்றான்.
கண்ணீரோடு பாய்ந்து சென்று, வசீகரனை பின்னிருந்தே இறுக்கமாக கட்டிக்கொண்டவள்,
“நான் எங்கயும் போகமாட்டேன்… உங்களோட தான் இருப்பேன்… நீங்க அத்தனை முறை கேட்டபோதும் உண்மையை சொல்லாம, உங்க மேல இருந்த பயத்துல ‘அம்மா’ன்னு சொன்னது தப்பு தான்…”
“ப்ராமிஸா… எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்… உங்களுக்காக தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்…” என்றவளின் கண்ணீர், வசீயின் முதுகில் சூடாக இறங்கியது.
வசீ அவள் கரத்தை அகற்ற முயல, இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டு, “ஆனா நான் பேசினது தப்பா கன்வேயாகியிருக்கு… ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க… நான் தெளிவா சொல்றேன ப்ளீஸ்..!!அட்லீஸ்ட் எனக்காக கொஞ்ச நேரம் இப்படியே இருங்க… நான் பேசி முடிச்சிடுறேன்…” என்று அவன் வெற்று முதுகில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
“பிங்கி ப்ராமிஸ்!! அன்னைக்கு நான் தப்பான அர்த்தத்துல சொல்லலை… எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும். அந்த இன்சிடென்ட்க்கு அப்புறம், அடிக்கடி உங்க முகம் மனசுல எழுந்து, நமக்குள்ள நடந்ததை நினைவு படுத்திட்டே இருந்தது…”
“அதுவரை உங்களை ‘ஹிட்லர்’ன்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு, உங்களோட நல்ல மனசு, குணம், கண்ணியமான அணுகுமுறை, ஆளுமை எல்லாமே புரிஞ்சது…” என்று கணவனின் பின்னங்கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள்,
“அப்போயிருந்து அடிக்கடி உங்க ஞாபகம்… சரியா தப்பான்னு தெரியாம தான் உங்களை விரும்ப ஆரம்பிச்சேன்…”
“நீங்க உங்களை பத்திரமா பிடிச்சிட்டு உட்கார சொன்ன போதும் கேட்காம கீழ விழுந்த என்னை, பொறுப்பா அம்மா மாமாக்கு தகவல் கொடுத்து, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனீங்க…”
“அந்த பொறுப்பு பிடிச்சது… நீங்க என்னை சான்ஸ்ன்னு யூஸ் பண்ணிக்கலை… அந்த கண்ணியம் பிடிச்சது…”
“அதுக்கப்புறம் தான் உங்களை மொத்தமா பிடிக்க ஆரம்பிச்சது… நம்ம கல்யாணத்தையும் காதலையும் நான் எப்பவுமே தண்டனையா பார்க்கலை… உங்களோட சேரனுங்கிறது என்னோட கனவு!”
“உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதானு தெரியாம இருந்தும், இந்த கல்யாணத்துக்கு தயாரானதுக்கு காரணம் நீங்க மட்டுமே… உங்க மேல எனக்கிருந்த நம்பிக்கை…” அவள் சொல்ல சொல்ல, வசீகரனின் உடலில் இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது.
அதை உணர்ந்தவள் முன்னே வந்து ஆல்பத்தை எடுத்துக் காட்டி, “தண்டனையா நினைக்கிறவ தான் இப்படி விதவிதமா ஃபோட்டோ எடுத்து ரசிப்பாளா? புருஷனா நினைச்சு உரிமையோட தினமும் பேசுவாளா? ஏற்பாடு செய்த கல்யாணத்தை நிறுத்த முயற்சிப்பாளா?”
“என்னை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?” என்று சொல்லி அவனை கட்டிக்கொண்டு, “தண்டனை அனுபவிக்க நினைக்கிற யாரும் இப்படி ஆசையா கட்டிப்பிடிக்க மாட்டாங்க… முத்தம் கொடுக்க மாட்டாங்க…” என்று சொல்லி, முத்தம் மட்டுமல்ல, மொத்தமாகவும் கொடுக்க மாட்டார்கள்… என்று நிரூபிக்க, மனைவியின் காதலில் திளைத்த வசீகரனின் மனச்சுமை மெல்ல விடை பெற்றது.
“அப்புறம் ஏன்டி அப்படி பேசின?” என்ற வசீயின் மார்பில் சுகமாய் சாய்ந்தவள், “ஹப்பா சொல்றதை முழுசாகூட கேட்காதளவு உங்களுக்கு எவ்ளோ கோபம் வருது.. என்னென்னமோ பேசுறீங்க, தள்ளி போறீங்க, குளிருல உட்காரறீங்க, என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?” என்று அவனிதழை முற்றுகையிட.,
“விடுடி நான் தான் சொன்னேனே என்னை யோசிக்க முடியாதளவு உன்னோட காதல் கட்டிபோடுதுன்னு!! வீடியோ ஆல்பமெல்லாம் பார்த்துட்டு என்னை எனக்காகவே கட்டியிருக்க நான்தான் ஹாப்பியஸ்ட் மேன்னு நினைச்சிருந்தேன் தெரியுமா? ஆனா எப்படி என்னை காதலிக்க ஆரம்பிச்சன்னு கேட்டா நேரடியா என்னை பிடிக்கும்னு சொல்லாம என்னென்னமோ சொல்ற அப்போ கோபம் வரத்தானே செய்யும்?”
“அச்சோ அதுதாங்க நிஜம்!! ஆனா நான் சொன்னது ஒன்னு நீங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு..”
“புரியற மாதிரி உனக்கு சொல்ல தெரியலடி…”
“சரி சொல்றேன்!! உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியலை ஆனா ஸ்வேதாவை விட்டு நீங்க பிரிஞ்சபிறகு ஒருநாள் நானும் ஜித்துவும் எயிட் கலர் பென் வாங்க வேறவழியில போயிட்டு இருந்தோம், அப்போ என்னோட சைக்கிள் பஞ்சராகவும் என்னை தனியா விட்டுட்டு அவன் பஞ்சர் போட போயிட்டான்…”
“அது ஜனநடமாட்டம் அதிகமில்லாத இடம் எனக்கு ரொம்ப பயமா இருந்தது… அப்போ சில ஆளுங்க தூரத்துல என்னையே பார்த்துட்டு இருக்கவும் ஜித்து எப்போ வருவான்னு வழியை பார்த்திருந்தேன் ஆனா அப்போ நீங்க வந்தீங்க.”
“நானா?” என்றவன் நினைவடுக்கில் இந்நிகழ்வை தேடி பார்த்தான்..
“ஆமா!! உங்களை பார்த்ததும் நான் பயத்துல தலையை குனிஞ்சுகிட்டேன் நீங்க என்னை தாண்டி போகவும் தான் நிமிர்ந்து பார்த்தேன் அப்போ அந்த ஆளுங்க என்கிட்ட வந்துட்டு இருந்தாங்க.. எனக்கு வியர்க்க ஆரம்பிச்சுடுச்சு அம்மா சொன்னதையும் மீறி ஒரு பென்னுக்காக நாங்க தனியா வந்திருக்ககூடாதோ நம்மளை கடத்தி கூட்டிட்டுபோய் பிச்சை எடுக்க வச்சிடுவாங்களோன்னு கை காலெல்லாம் உதறிட்டு இருந்தப்போ தான் நீங்க திரும்ப வந்தீங்க..”
“என்கிட்டே ஏன் நிற்கிறன்னு கேட்டு அத்தனை கோபத்துலயும் என்னை நீங்க தனியா விட்டுட்டு போகலை… சைக்கிள் அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லி என்னை உங்க சைக்கிள்ல உட்காரவச்சு பத்திரமா கூட்டிட்டு வந்தீங்க.” என்றிட வசீக்கு லேசாக நினைவு வந்தது
“அதோட ஜித்துவை அன்னைக்கு வீடு வந்ததும் என்னை தனியா விட்டதுக்காக அடி வெளுத்துட்டீங்க., தெரியாமன்னு எடுத்துகிட்டாலும் உங்களுக்கு கெடுதல் செய்த எனக்கு நீங்க நல்லதுதான் செய்தீங்க அது எனக்கு அப்போ புரியலை பயந்துட்டே தான் உங்களோட வந்தேன். ஒருவேளை அன்னைக்கு எக்கேடோ கெட்டு போகட்டும்னு நீங்க விட்டுட்டு போயிருந்தா நானும் விகாஷினி மாதிரி அந்த நாலு பேர் கையில சிக்கி இன்னைக்கு இல்லாம போயிருந்திருப்பேனோ என்னவோ!! அப்படி பார்த்தா இப்போ நான் உங்க கூட இருக்க காரணமும் நீங்கதானே?”
“அன்னைக்கு போலவே இன்னைக்கும் கோபத்துலகூட என்னை விட்டுட்டு போகாம கூடவே ரூம்க்கு கூட்டிட்டு வந்திருக்கீங்களே இது போதாதா உங்களை இன்னுமே பிடிக்க!! நீங்க சொன்னமாதிரி நமக்குள்ள எவ்ளோ புரிதல் இருக்குன்னு எனக்கும் தெரியாது, ஏதாவது தப்பிருந்தா எடுத்து சொல்லுங்க நான் திரும்ப செய்ய மாட்டேன்.. பட் என்மேல கோபபடகூடாதுன்னு உங்களை வருத்திக்காதீங்க அது எனக்கு இன்னும் வலிக்கும்.. எனக்கு உங்களை விட வேறே எதுவும் முக்கியமில்ல நான் விட்டு கொடுத்து போக தயாரா இருக்கேன்..”
“எனக்காக விட்டு கொடுப்பியா?”
“ஆமா!! நீங்க தானே என் புருஷன் உங்களுக்கு விட்டு கொடுத்து அனுசரிக்காம யாருக்கு செய்யணும்னு சொல்றீங்க?” என்று கேட்க வசீகர புன்னகை வசீகரனிடம்..
“ஆனா உனக்குன்னு எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்லையாடி எனக்கு விட்டு கொடுத்து அடிமையா இருக்க போறீயா?”
“விட்டுகொடுக்கறது அடிமைத்தனம்னு யார் சொன்னா? விட்டு கொடுக்குறதுன்னா தோத்து போறது கிடையாது.. புத்திசாலிங்க விட்டுகொடுப்பாங்கன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க.. எல்லாராலயும் ஈஸியா செய்திடமுடியாது அப்படி ஒருத்தருக்கு செய்யறாங்கன்னா அவங்க எவ்ளோ ஸ்பெஷல்ன்னு புரிஞ்சுக்கலாம்…”
“எனக்கும் நீங்க ரொம்பவே ஸ்பெஷல்!! என் புருஷன் கிட்ட விட்டுகொடுத்து அடிமையா இல்லாம அவர் மனசுல ராணியா இருக்க ஆசைபடறேன் இது தப்பா?”
“தப்பில்லடி..!! ஆனா உனக்கு ஒன்னு தெரியுமா?”
“என்னது?”
“நானும் இதைதான் நினைச்சேன்.. உனக்கு புரியலைன்னா நான் விட்டு கொடுத்து போயிடனும்னு.. ஆனா நீ வீடியோல பேசினதுக்கும் அப்போ பேசினதுக்கும் இருந்த வித்யாசத்துல எது நிஜம்னு புரியாம திரும்ப முட்டாளாகிட்டோமோன்னு கோபபட்டுட்டேன் ஸாரிடி..” என்றதும் இழை முகத்திலும் புன்னகை அரும்பியது..
“என்னங்க நான் வீடியோல பேசினதெல்லாம் உங்களை ஆஷ்மி அனுப்பின ஃபோட்டோல பார்த்த பிறகு.. எப்படி உங்களை விரும்ப ஆரம்பிச்சேன்னு சொன்னது அதுக்கும் முன்ன காலேஜ் சேர்ந்த புதுசு… அப்புறம் அம்மாக்காகவான்னு கேட்டீங்களே? நிச்சயமா கிடையாது உங்களுக்காக மட்டுமே!!”
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1

