
எதிராளிகள் செய்த சதியென்று நிரூபித்தாலும், தரத்திற்கு பாதுகாப்பு குறைவென்று ஒளிரா நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தது தரக்கட்டுப்பாட்டுக் குழு.
இனி பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் தீவிரத்துடன் இருப்பதாக வாக்குறுதி கொடுத்து சில அரசியல்வாதிகளையும் உயரதிகாரிகளையும் பிடித்து, விற்பனைக்கான தடையை நீக்கினான் சத்ய யுகாத்ரன்.
அதற்கே வாரங்களும் கடந்திருந்தது.
இதற்கிடையில், விதுரனின் குழுவினர் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
விதுரனுக்கு இதயாம்ரிதாவை நிமிர்ந்து பார்க்கவே சங்கடமாக இருந்தது.
மிதுனாவோ சத்யாவின் மீது கடும்கோபத்தில் இருந்தாள். ஆனால் விஷாலும் பெரிய தந்தையுமாக இணைந்து இத்தனை பெரிய வேலைகளை பார்த்திருப்பதை அறிந்து அதிர்ந்து போனாள்.
உற்பத்தி தடை செய்யப்பட்டதால், பணியாளர்கள் வேலை இழந்து தவித்தனர்.
இதயாம்ரிதாவின் அறையில் கூடி இருந்த விதுரன், பூமிகா, மிதுனா, அகிலுடன் சத்யா அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதை பற்றி விளக்கினான்.
மீண்டும் நிறுவனத்தை திறக்கும் வரை, மாத ஊதியத்தைத் தடையில்லாமல் வழங்குவதாக இதயாம்ரிதா கொடுத்த வாக்குறுதி, அவர்களின் மனதைக் குளிர்வித்தது.
“ப்ரொடக்ஷன் இல்லாம எப்படி சாலரி குடுப்பீங்க மேம்?” முணுமுணுப்பாய் விதுரன் கேட்க, “அதை அண்ணனும் தம்பியும் சேர்ந்து ப்ராடக்ட்ல கலப்படம் செய்றப்ப யோசிச்சு இருக்கணும்” என்றாள் முறைப்பாக.
கணினியில் புதைந்திருந்த சத்ய யுகாத்ரன் ஒரு நொடி வேலை செய்வதை நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
விதுரனோ, “ஐயோ மேம்… நாங்கள்லாம் எதுவும் பண்ணல” என வேகமாக மறுத்ததில், அகில் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
“ப்ராடக்ட்ல கலப்படம் பண்ணது நீ இல்லயா?” எனக் கேட்டதும்,
“டேய் நான் பண்ணேன்னு எப்போ சொன்னேன்?” விதுரன் கடுப்பாக கூறினான்.
மேலும் அவனே தொடர்ந்து “அன்னைக்கு ஒரு நாள் பூமி ப்ராடக்ட்டோட கன்சிஸ்டன்சி வேற மாதிரி ஆகிடுச்சுன்னு சொல்லிட்டு இருந்தப்ப, நானும் மிதுனாவும் சிசிடிவில எதுவும் சிக்குதான்னு பார்க்க போனோம்ல” என சொல்லி விட்டு அவனது விழிகள் அவளைத் தீண்ட, மிதுனாவிற்கு அந்தக் கை தீண்டல் நினைவடுக்கில் எழுந்து வலித்தது.
அப்போதும் விழிகளை நிமிர்த்தினாளில்லை.
இருவரையும் ஒரு கணம் கூர்மையாய் ஊடுருவிய இதயாம்ரிதா, “ம்ம்” என உறுமிட அதில் விதுரன் பதற்றத்துடன் பார்வையை மாற்றி,
“அது… அன்னைக்கு நாங்க சிசிடிவி செக் பண்ணும்போது குவாலிட்டி டீம்ல ஒருத்தன் ப்ரொடக்டிவிட்டி ஏரியால இருந்தான். அவனைப் பிடிச்சு விசாரிச்சப்ப, விஷால் தான் இதை எல்லாம் செய்ய சொன்னான்னு சொன்னான்.
அதை நான் அண்ணாட்ட சொன்னேன்” என்றதும் இதயாம்ரிதா நயனங்களை ஆடவனை நோக்கித்திருப்ப, அவனோ கையைக் கட்டிக்கொண்டு பெண்ணின் இமையசைவுகளை உள்ளிழுக்கத் தொடங்கினான்.
“ஏன் அப்பவே சொல்லல?” தீஜுவாலையாய் சுட்டவளிடம்,
“எதுக்கு சொல்லணும்னு தோணுச்சு. சொல்லல…” என்றான் அசட்டையாக.
“ஓஹோ அப்ப இப்ப எதுக்கு பிராயச்சித்தம் பண்ணிட்டு இருக்கீங்க?” எனப்பல்லைக்கடிக்க,
“இது பிராய்ச்சித்தம் இல்ல இதயா. பிரேமசித்தம்…” என்றதும் அவள் விழித்தாள்.
“ஹான் அப்படினா?”
“ப்ரேமம் கொண்டு சித்தம் செய்றது!” குறுகுறுப்பு நிறைந்திருந்தது அவனது சீண்டலில்.
சற்றே திகைத்தவள், பின் முகம் இறுகி, “ப்ரேமம் இல்ல… பிராந்துசித்தம் இது. சர்வைவ் ஆகுறதே கஷ்டமா இருக்கும்னுபோது, உலக அளவுல போட்டி போட நீங்க பண்ணிட்டு இருக்குற பிளான் எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்” என்று சுட்டெரித்தாள்.
அதில் இதழோரம் குறுநகை சிந்தியவன், எழுந்து வந்து அவளது இருக்கைக்கு நேராய் குனிந்து ஒரு கையை அவளுக்கு முன்னே மேஜையில் குன்ற வைத்து நின்றான்.
மற்ற நால்வரும் ‘பே’ வென இருவரையும் பார்த்திருக்க, சத்யாவோ “நான் பிராண்டை நம்புறவன். நாட் பேஸ் வேல்யூ, ரெகமெண்டேஷன், பாப்புலாரிட்டி… பியூர் பிசினஸ்கு, இது எல்லாம் தேவையே இல்லே” என்று ஒற்றை விரலால் அவளது நெற்றிப்பொட்டில் வருடினான்.
முந்தைய பாரிஸ் எக்ஸ்போவிற்கு, என்னதான் திறமை இருப்பினும் தந்தையின் பெயரை வைத்தே கண்காட்சியில் இடம்பிடித்திருந்தாள். அதைக் குத்தி காட்டுகிறானாம் .
அவன் கையை வெடுக்கென தட்டி விட்டவள், “பிசினஸ்கு வெறும் தரம் மட்டும் போதுமா? நீங்க சொன்ன பேஸ் வேல்யூ, ரெகமெண்டேஷன், பாப்புலாரிட்டி இல்லாம இங்க ஒரு செங்கலை கூட நகர்த்த முடியாது” என்றிட,
அதில் அர்த்தமாய் புன்னகைத்தவனின் முகத்தில் இருந்து பார்வையை திருப்பவுது அவளுக்கே கடினமாகிப் போனது.
“வெல்…நம்ம பிசினஸ் செங்கலை நகர்த்துறது இல்லையே!” எனக் கண்சிமிட்டியவனின் மீது தடுமாறி தடம் மாறியது அவளது மனது.
“வெரி ஃபன்னி!” ரசிப்பை மறைத்து விட்டு முறைப்பை முகமூடியாக்கிக் கொண்டவள், சுழல் நாற்காலியை சற்றே நகர்ந்தாள்.
“உங்க பிராய்ச்சித்தம்ல… இன்னொன்னை ஆட் பண்ணிக்கனுமே!” முன்னெற்றி முடிகளை கோதி விட்டு ஸ்டைலாக கேட்டவளை ரசித்துப் பருகினான் சத்ய யுகாத்ரன்.
ஒற்றைப்புருவம் உயர்த்தி என்னவென வினவ, “எனக்கு நிவோரா ப்ராண்ட் மறுபடியும் வேணும்!” என்றதில் அவனது நெற்றி மத்தியில் சின்ன சுருக்கம்.
மிதுனாவோ “எதுக்குகா? ஆல்ரெடி அதையும் இழுத்து மூடியாச்சே?” என குழப்பமாய் வினவ,
“எஸ். விஷால் கைக்கு எடுத்ததுக்கு அப்பறம் தான் கலப்படம் நடந்துருக்கு. சோ பிராண்ட் அவன்கிட்ட இருக்குறது பாதுகாப்பு இல்லைன்னு கேஸ் எடுத்துட்டுப் போகணும்…” என்றவளின் இதழ்களில் ஒரு குரூர புன்னகை மின்னி மறைந்தது.
அவளை யோசனையுடன் ஏறிட்ட சத்ய யுகாத்ரன், “முதல்ல ஒளிரா கைக்கு வரட்டும்” எனத் தாடையைத் தடவிக்கொண்டான்.
—–
யாமினியின் நிலை வெகு மோசமாக இருக்க, மற்ற மூவரின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது.
ஷ்யாமின் தொழில் முற்றிலும் சரிந்து விட, நிலோபரின் உறவினர்கள் அலைபேசியில் அழைத்துப் பேசி அவளை வார்த்தையால் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.
விஷாலுக்கோ அனைத்தும் கை மீறி போன்றதொரு பிரம்மை என்றாலும் சினம் துளியும் குறையவில்லை.
யாமினி கிட்டத்தட்ட அரை உயிராய் இருந்தாள்.
“அந்த சத்யா… தட் பாஸ்டர்ட் என்னைக்கு வந்தானோ அன்னைல இருந்தே நிம்மதி போச்சு. அவனை நிம்மதியா விட மாட்டேன்” விஷால் கர்ஜிக்க,
ஷ்யாம், “அவன் செஞ்ச வேலையால இங்க மானமே போகுது டா. பேசாம நான் தற்கொலை பண்ணிக்கும்போதே என்னை சாக விட்டுருக்கலாம். நீயும் உன் பொண்டாட்டியும் புது பிராத்தல் பிஸினஸ்ல இறங்கிட்டீங்களான்னு போற வர்றவன் எல்லாம் சீண்டுறான்” எனக் குமுறினான்.
“எனக்குப் பயமா இருக்குடா. அம்ரிக்கு வேற உண்மை தெரிஞ்சுடுச்சு. அவள் நல்லதுக்காக செஞ்சோம்னு கண்டிப்பா புரிஞ்சுக்க மாட்டா. இப்ப சத்யாகூட ஜாயிண்ட் அடிச்சு வேற ஏதாவது செஞ்சா…” என நிலோபர் கண்ணீரில் மிதந்திட,
“எதுவும் செய்றதுக்கு அவன் இருந்தா தான?” என ஏளனமாய் இதழ் வளைத்த விஷால், மீண்டுமொரு கொடூர திட்டம் உருவாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினான்.
—–
பத்மபிரியாவிற்கு உணவும் இறங்கவில்லை. உறக்கமும் சீண்டவில்லை. இன்னும் நெஞ்சம் நடுங்கி கொண்டே இருந்தது. தோழியை எதிர்கொள்ள தேவையான தைரியமின்றி நாளைக் கடத்தியவளுக்கு அதற்கு மேலும் தாமதிக்க இயலவில்லை.
இதயாம்ரிதா அலுவலகத்திற்கு வரும் நேரமாக பார்த்து அலுவலக வாசலிலேயே நின்றவளை திரும்பியும் பாராது இதயாம்ரிதா அலுவலகத்தினுள் நுழைய, பத்மபிரியா வேகமாக அவளை அணுகினாள்.
“அம்ரி…”
“உனக்கு எல்லாம் தெரியும் தான?” ஒற்றைக் கேள்வியில் சகலமும் ஆடியது அவளுக்கு.
“அம்ரி… நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளேன்” தைரியம் வற்றிப்போய் தேம்பலுடன் கூறியவளை எரித்தவள்,
“உனக்கு… சத்யா மேல போட்டு பொய் கேஸ் பத்தி தெரியுமா தெரியாதா?” பல்லைக்கடித்து உறுமலாக வினவியவளைக் கண்டு கிலி பிடிக்க, “தெ தெரியும்… ஆனா” என்ற பத்மபிரியாவின் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.
“அவுட்!” ஆள்காட்டி விரலால் எச்சரித்தவள், விறுவிறுவென தனது அறைக்குச் செல்ல, பத்மபிரியாவிற்கு மொத்த நம்பிக்கையும் உதிர்ந்து போனது.
“அம்ரி நான் சொல்றதை கேளு அம்ரி…” என்றவளின் கதறலை காதில் வாங்கியும் வாங்காதவளாக கலங்கி நின்ற கண்ணைச் சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு திரும்பி பாராமல் சென்று விட்டாள் இதயாம்ரிதா.
பத்மபிரியாவோ கத்தலை நிறுத்தவில்லை.
“உனக்கு துரோகம் பண்ணனும்னு சத்தியமா நான் நினைக்கல அம்ரி. எனக்கு ஒரு சான்ஸ் குடு அம்ரி ப்ளீஸ்…” என முட்டி இட்டு தளர்ந்தமர்ந்து கேவி கேவி அழுதாள்.
அந்நேரம் வேகமாய் வந்த கார் ஒன்று அவள் மீது இடிப்பது போல நிறுத்தப்பட, சட்டென பின்னே நகர்ந்து அமர்ந்தவள், அதிர்ச்சியாய் ஏறிட்டாள்.
உள்ளிருந்து குளிர்கண்ணாடியை கழற்றியபடி ஸ்டைலாக இறங்கினான் ஸ்ரீராம்.
அழுது அழுது முகம் வீங்கி காணப்பட்ட பத்மாவை கண்ணாடியை லேசாக இறக்கி விட்டு பார்த்தவன், “ஓ மை டியர் ஜூனியர். ஆபிஸ் வாசல்ல அங்கப்பிரத்தச்சனம் பண்ணுனா ஒளிரா ஒளிரும்னு உன் ப்ரெண்ட்ஸ் யாரும் சொன்னாங்களா என்ன?” எனக் குத்திக்காட்டி அவளை வார,
அவனை கண்டு திகைத்தவள், பின் முறைக்க முயன்று தோற்றாள்.
அவனது ‘ப்ரெண்ட்ஸ்’ என்ற வாசகம் மீண்டும் அவளைத் தோண்டி துருவி கண்ணீர் அலையை எழுப்பியது.
கீழுதட்டைக் கடித்தபடி தலையைக் குனிந்து கொண்ட பத்மபிரியாவை சில நொடிகள் கண்ணெடுக்காமல் பார்த்தவன், ஒரு கையை நீட்டி அவள் எழுவதற்கு உதவி செய்ய விழைய, அவள் அசைந்தாளில்லை.
“என் கையைப் பிடிக்க எப்பவும் உனக்கு தடையா இருக்குறது உன் ப்ரெண்ட்ஸ் தான்னு நினைச்சேன். பட் ஐ ஆம் ராங். பிரச்சினை உன் ப்ரெண்ட்ஸ்ட்ட இல்ல. உன்கிட்ட தான் இருக்கு…” என மெல்லிய காட்டத்துடன் கூறியவளை நிமிர்ந்து பார்த்தவள்,
“ஆமா என்கிட்ட தான் இருக்கு. தப்ப தப்புனு சொல்ல முடியாத சூழ்நிலை எனக்கு. பிடிச்சதை பிடிக்குதுன்னு சொல்ல தைரியம் எனக்கு எப்பவும் இருந்தது இல்ல. இனியும் இருக்காது. போதுமா…” என சீறியவளின் தேம்பல்கள் அதிகமாக,
“நீ திருந்தவே மாட்டடி… இன்னைக்கு முழுக்க இங்கயே முட்டி போடு. அதான் உனக்கு பனிஷ்மென்ட்…” என்று கடிந்து விட்டு அலுவலகத்திற்கு சென்றவனின் முதுகை துளைத்தது பத்மபிரியாவின் காரப்பார்வை.
——
சிசிடிவியின் வழியே பத்மப்ரியா அழுவதை கண்ட சத்ய யுகாத்ரன், இதயாம்ரிதா அறைக்குள் நுழைந்ததும், “அவளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல இதயா!” என்றான்.
“அவளுக்கு உண்மை ஏற்கனவே தெரிஞ்சுருக்கு சத்யா. என்கிட்ட சொல்லிருக்கணுமா இல்லையா?” சிவந்த விழிகளுடன் கேட்டவளிடம்,
“அவளுக்கு தெரியும்னு உனக்கு எப்படி தெரியும்?” என வினவினான்.
“உங்களை போலீஸ் பிடிச்சுட்டுப் போனதுல இருந்து, என் அப்பா இறக்குற வரை அவள் என்கிட்ட அவ்ளோவா பேசவே இல்ல. அப்போ அவளை கவனிக்கிற மனநிலை எனக்கு இல்ல தான். பட் அப்பறம் யோசிச்சப்ப தான், அவளும் விஷாலும் அப்போ அப்போ எனக்கு தெரியாம பேசிக்கிறது புரிஞ்சுது. என் அப்பா கூட அவளை கூப்டு பேசி இருக்காரு.
அவங்களுக்கு பயந்துட்டு அவள் எப்படி என்கிட்ட மறைக்கலாம்? என்னால இதை அக்செப்ட் பண்ணிக்க முடியல” என்றவளை பெருமூச்சுடன் பார்த்தவன், “அட்லீஸ்ட் அவளோட பக்கத்தை சொல்ல அவளுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாமே” என்றான் சத்யா.
“எதுக்கு குடுக்கணும் சத்யா? முடிஞ்சு போனதுல இருந்து எனக்கோ உங்களுக்கோ இன்னொரு சான்ஸ் கிடைக்க போறது இல்லை தான?” சுட்டெரித்த கருவிழிகளதில் சொல்லிலடங்கா வலி.
“சோ எனக்கும் நீ இன்னொரு சான்ஸ் தரப்போறது இல்ல?” அர்த்தப்பார்வையுடன் வினவினான் அவன்.
அதில் தடுமாறியவள், “எனக்கு நானே சான்ஸ் குடுத்துக்க போறது இல்ல” என முடிவாய் உரைத்திருந்தாள்.
இனியொரு முறை காதலென்ற பெயரில் யாருடைய வாழ்வையும் கெடுக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. காதல் என்ற பெயரைக்கேட்டாலே மனம் பதறி துடிக்கிறது.
இன்பத்தை அள்ளித் தரத் தானே காதலித்தாள்? இறந்தாலும் இனித்திடாத கசப்பை மட்டுமே தந்த தனது காதலில் எங்கனம் நேசம் மீண்டும் பிறக்கும்…
அவன் மறுத்தபோதே விட்டிருந்தால்… தினம் தினம் இந்த ஆறாத வடுக்களுடன் வாழ்வதே அவளுக்கு போராட்டமாக இருக்கிறது.
அவள் மனது படும்பாடு புரிந்தவனுக்கும் அதே வேதனை.
‘எல்லாத்தையும் விட்டுத் தள்ளுடி’ என அவளைக் கட்டியணைத்து ஆறுதலுரைக்க ஒவ்வொரு அணுவும் துடித்து கதறியது.
ஆகினும் தன்னை அடக்கிக்கொண்டான்.
அது இன்னும் கொஞ்சம் அவளது குற்ற உணர்வை கீறி விடும். அவளிடம் அவன் வேண்டுவது நேசத்தையன்றி யாசகத்தை அல்லவே!
குற்ற உணர்வை கீழே தள்ளி காதல் மேலெழும்பிட வேண்டும். அதன்பிறகே அவளால் நிதானமாக இயலும். அந்த நேசத்தின் வடு அவளை இறுதி வரை வதைக்காமல் காக்கும்.
அவள் படும் உளைச்சலை இறுகிய முகத்துடன் ஏறிட்ட சத்ய யுகாத்ரன், அவளை நெருங்கி அவளது பின்னந்தலை முடியை கொத்தாக பிடித்து நிமிர்த்தினான்.
“தப்பு எல்லார் மேலயும் தான் இருக்கு. உன்னைத் தேடி நான் காலேஜ்க்கு வந்தது தப்பு. நீ உன் ப்ரெண்ட்ஸை கண்மூடித்தனமா நம்புனது தப்பு. நடந்த விஷயத்துல தப்பு சொல்ல ஆயிரம் இருக்கு…
ஆனா இந்தக் காதலே தப்புன்னு நினைச்சன்னா…” எனும்போதே அவனிடம் சிறு விரக்தி புன்னகை.
“இந்தக் காதலால நம்ம பட்ட கஷ்டத்துக்கும் மதிப்பில்ல. இந்தக் காதலுக்கும் மதிப்பில்ல! இவ்ளோ சூழ்ச்சி செய்றதுக்கு இந்தக் காதல் ஒர்த்தும் இல்லன்னு அர்த்தம்…” என்று அழுத்தம் திருத்தமாய் அவளது காதலின் அளவை அவளுக்கே உணர வைத்தான்.
“சத்யா” என அலறிய இதயாம்ரிதாவிற்கு பேச்சற்ற நிலை.
“என் காதல் உங்களுக்கு ஒர்த் இல்லையா? ஒர்த் இல்லாததுனால தான் அலைய விட்டீங்களா?”
“நான் உன்ன அலைய விடல. நான் இருந்த பொசிஷன்கு மரியாதை குடுத்து விலகி நின்னேன். அவ்ளோ தான்…” என்றவனின் கூற்றில் தவிப்பு பெருகியது அவளுக்கு.
“அந்த பொசிஷன்ல இல்லைன்னா என்ன செஞ்சுருப்பீங்க?” ஏக்கம் கலந்த வினவள் அவளிடம்.
அவளது விழிகளைத் தன்னுடன் கலக்க வைத்தவன்,” நான் அந்த பொசிஷன்ல இல்லாம இருந்துருந்தா, நீயும் நிவோராவோட ஓனர் பொண்ணா இல்லாம இருந்திருந்தா உன் காதல், என் காதல்னு பிரிஞ்சுருக்காது. நம்ம காதல் ஆகியிருக்கும்…” என உருக்கம் நிறைய உரைத்தவனை விழி அகல பார்த்தாள்.
“சோ என்னைப் பிடிச்சு தான் விலகி நின்னீங்க?”
அக்கேள்விக்கு எப்படி விடையளிப்பான்… அவளைப்பிடித்து பித்து பிடித்து அலைந்தவனுக்குள்ளும் தீராக்காதல் தானே!
“மே பி” பட்டும் படாமல் பதில் கூறியவன், “நிவோராவோட ப்ராண்ட் உனக்கு கிடைக்க போட்ட கேஸ், வர்ற வெள்ளிக்கிழமை ஹியரிங்கு வருது. தேவையான டாகுமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிக்கலாம்” எனப் பேச்சை மாற்றியவன், வியாபார ரீதியாக பேசத் தொடங்க, அவள் முறைப்புடன் கேட்டுக்கொண்டாள்.
“தென், பத்மபிரியாவைக் கூப்பிட்டு பேசு” என்றதும் அவளிடம் பெருமூச்சு வெளிப்பட்டது.
அந்நேரம் ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்றவள், “பத்மா இருக்காளா?” எனக் கேட்க,
“இப்ப தான் கிளம்புனாங்க மேம். கூப்பிடட்டுமா?” என வினவினாள் ரிஷப்ஷனிஸ்ட்.
“வேணாம். நான் பாத்துக்குறேன்” என்றவள் அப்போதே அலைபேசியை எடுத்து பத்மபிரியாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வரக் கூறினாள்.
ரிஷப்ஷனிஸ்ட்டோ தொடர்ந்து, “மேம் உங்களை பார்க்க ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் எம். டி ஸ்ரீராம் வந்துருக்காரு. பட் அப்பாயின்மென்ட் இல்ல மேம்…” என்றதும் அவள் திரும்பிக் கணவனை முறைத்தாள்.
‘எதுக்கு முறைக்கிறா’ என கருவிழிகளை உருட்டிய சத்யா சிசிடிவியில் பார்வையிட்டான். அங்கு ஸ்ரீராமைக் கண்டு, ‘இருக்குற பிரச்சினை போதாதுன்னு இவன் வேற. ராங் டைம்ல என்ட்ரி குடுக்குறான்’ என்று நொந்து கொண்டான்.
ஸ்ரீராமை உள்ளே அனுப்ப பணித்து விட்டு அழைப்பைத் துண்டித்த இதயாம்ரிதா,
“அவன் எதுக்கு இங்க வர்றான்?” எனப் பொரிந்தாள்.
“அவன் என் ப்ரெண்ட். என்னைப் பார்க்க வர்றான்னு நினைக்கிறேன்…”
“உங்களுக்கு ப்ரெண்ட்ஷிப் வச்சுக்க என் எதிரிதான் கிடைச்சானா?”
“துரோகிகளுக்கு ப்ரெண்ட்ஸா இருக்கிறதை விட… ஒரு நல்ல ப்ரெண்ட்க்கு எதிரியா இருக்கலாம் இதயா…” சத்யாவின் கூற்றில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது அவளுக்கு.
“அந்த பாஸ்டர்ட்க்கு ஓவரா சப்போர்ட் பண்ணாதீங்க…” எனும்போதே ஸ்ரீராம் உள்ளே வந்து விட்டான்.
தன்னைத் தான் அவள் ‘பாஸ்டர்ட்’ என்றிருக்கிறாள் எனப் புரிந்தாலும், அவளைக் கணக்கிலேயே எடுக்காமல் சத்யாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டவன், “மச்சான்… எப்படி இருக்கடா. புகுந்த வீட்டுல உன்னை எல்லாரும் நல்லா பாத்துக்குறாங்களா!” என்று நடிப்பில் சிவாஜியை மிஞ்சி விடுவன் போல பாசத்தைக் கொட்ட,
“டேய் ஏன்டா…” எனப் பல்லைக்கடித்தான் சத்ய யுகாத்ரன்.
“நண்பனை ஒரு பஜாரிக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு தினமும் வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்குறது எனக்கு தான்டா தெரியும்…” என வராத கண்ணீரை கண்ணைக் குத்தி வர வைத்துக் கொண்டவனின் கூற்றில் இதயாம்ரிதா வெகுண்டு எழுந்தாள்.
“டேய் யாருடா பஜாரி… ப்ராடுக்காரநாயே”
“ஒரு ப்ராடோட பொண்ணே பிராடை பற்றி பேசுகிறதே அடடே ஆச்சர்யக்குறி!” ஸ்ரீராம் விடாமல் வம்பிழுக்க,
“சத்யா இவனை இங்க இருந்து போக சொல்லுங்க. இல்ல இப்பவே டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடுவேன்…” என்று எச்சரிக்க, சத்யா நெற்றியில் கை வைத்து நின்றான்.
“நீ என்ன அப்ளை பண்றது. நான் சொன்னா என் நண்பன், உன்னைத் தலைமுழுகிட்டே வந்துடுவான்” என்று சவால் விட்ட ஸ்ரீராமை காட்டத்துடன் முறைத்த சத்யா, “அடேய்” என அடக்க பார்த்தான்.
“ஓஹோ…” என்றபடி சத்யாவின் சட்டையை பிடித்த இதயாம்ரிதா,
“ஏய் ப்ரொஃபி… அவன் சொன்னா நீங்க என்னை கழட்டி விட்டுடுவீங்களா? நான் சொல்றேன்… இந்தப் பைத்தியக்காரனோட பிரெண்ட்ஷிப்ப இப்பவே கட் பண்ணுங்க. இல்ல மவனே உன்னைத் தூக்கி கடல்ல போட்டுடுவேன்” என்று மீண்டும் கல்லூரியில் மிரட்டித் திரியும் அவனது இதயாம்ரிதாவாக உரிமை கோரியவளை நெஞ்சம் குளிர ரசித்தான்.
“நீ அவனைக் கடல்ல தூக்கிப் போட்டாலும் நெஞ்சுல சுமக்கிற நட்பை கடல் நீரா குடிச்சுப்பான் என் நண்பன்” என்ற ஸ்ரீராமிடம்,
“ம்ம்க்கும் உன் நட்பு என்ன நட்ஸ் பவுடரா கடல்ல கலக்கி குடிக்க… போடா வெண்ண”
“நீ போடி தொண்ண” என இருவரும் மாறி மாறி சண்டையிட “அடச்சே நிறுத்துங்க…” என்று சத்யா குரலை உயர்த்தி அதட்டினான்.
“நீ தானடா என்னை வர சொல்லி அவளை தூண்டி விட சொன்ன?” ஸ்ரீராம் சத்யாவின் காதில் முணுமுணுக்க, “அதை போட்டுக்குடுத்து என்னை செருப்படி வாங்க வைக்காத. மூடிட்டு நில்லு “என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியதில், “ரைட்டு” என்று உதட்டைச் சுளித்து நின்றான் ஸ்ரீராம்.
கோபத்தில் பெருமூச்சுகள் எடுத்த இதயாம்ரிதா, “இவனை முதல்ல கிளம்ப சொல்லுங்க ப்ரொஃபி” என்றிட,
“இதயா. ஹீ இஸ் மை ப்ரெண்ட்.” என்றான் மெதுவாக.
“ஓ அப்ப அவன் சொன்னான்னு என்னைக் கழட்டி விட போறீங்க? ஆல்ரெடி அவன் அப்பா அப்படி தான் திட்டம் போட்டு குடுத்துருப்பாரு. நிவோராவை நான் தான் கண்டுபிடிச்சேன்னு உருட்டுவாரே இன்னுமா இந்தப் பைத்தியம் சரியாகல அவருக்கு…”
இதில் ஸ்ரீராமிற்கு உண்மையிலேயே கோபம் வர, “ஏய் என் அப்பா பத்தி பேசாத…” என்று மிரட்டினான்.
“நான் உண்மையை தான பேசுறேன்” என சிலுப்பிக்கொண்டவள், “சொல்லுங்க ப்ரொஃபி… இவனுக்கு முன்னாடி உங்க லைஃப்ல வந்தது நான் தான். அவனுக்காக என்னையவே கழட்டி விடுவீங்களா?” என சண்டைக்கு வர,
“நான் எப்போ சொன்னேன். நீ தான் என்னை விட்டுப் போறதுல முடிவா இருக்க. முன்னாடியே லைஃப்க்குள்ள வந்தவங்க, அவசரமா விட்டுப் போக தான் பாக்குறாங்க…” சத்ய யுகாத்ரன் கொட்டு வைக்க,
“ஓ அப்ப பின்னாடி வந்த அவன் மட்டும், உங்க லைஃப்குள்ள குடிசை போட்டு உக்காந்துட்டானா ப்ரொஃபி?” என கண்களை உருட்டி மிரட்டியதில் சத்யா சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
“ஏய் நான் குடிசை போட்டு உக்காருவேன், குத்த வச்சு கூட உக்காருவேன். அவன் ஃபர்ஸ்ட் எனக்கு நண்பன்…” ஸ்ரீராம் உரிமையை நிலைநாட்ட,
“டேய் அவர் முதல்ல எனக்கு ப்ரொபஸர், என் லவர் அப்பறம் தாண்டா நீ தேவையில்லாத ஆணியா வந்து நிக்கிற டொமேட்டோ…” என்றதில், இருவரும் மீண்டும் சண்டையிட, சத்ய யுகாத்ரனுக்கு அவர்களை நிறுத்தவே பெரும்பாடானது.
“பொண்டாட்டி போதும் நிறுத்துடி. அவன் சும்மா உன்ன டீஸ் பண்றான். நான் தான் அவனை வர சொன்னேன்… ஹே பாஸ் பேபி ஸ்டாப்…” என்ற சத்யாவின் கூற்றை எல்லாம் காதில் வாங்கவே இல்லை அவள்.
சத்யாவின் புறம் இருந்து திடீரென ஒருவன், தன்னை விட அதிக ஒட்டுதலுடன் இடையில் குதித்தது அவளது பொறாமையைத் தூண்டி விட்டது. உள்ளே அமிழ்ந்திருந்த காதலையும் தான்.
அவள் நிறுத்தாமல் குழாயடி சண்டையை தொடங்கியதில் சத்ய யுகாத்ரன் அவளை நிறுத்தும் பொருட்டு, ஸ்ரீராம் முன்னேயே அவளுக்கு அழுத்த இதழ் முத்தத்தைக் கொடுத்து விட, அதில் திகைத்தது ஸ்ரீராம் தான்.
‘ஒரு முரட்டு சிங்கிள வச்சுக்கிட்டு என்னடா செய்றீங்க!?’ என நொந்து போனவனின் கண்களுக்கு விருந்தானாள் சிவந்த விழிகளுடன் உள்ளே வந்த பத்மபிரியா.
புது காதல் மலரும்
மேகா
ஹாய் டியர்ஸ்… சாரி for the delay. ஒரு வாரமா ஹிப் பெயின். எலும்பு எல்லாம் சேதாரம் ஆகியிருக்கு. சோ, முடிஞ்ச அளவு ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு குடுக்க முயற்சி பண்றேன். கொஞ்சம் ஹெல்த் ரெகவர் ஆனதும் ரெகுலர் பதிவு கொடுக்கிறேன் டியர்ஸ்… Thanks for understanding 🥰🥰🥰🥰🥰🥰😍😍😍
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரிதாவை வழிக்கு கொண்டு வர நல்ல வழிதான்.
Super
Amri is back to form.. super epi sis..
Take care of your health sister…
Ithu thaan two days once podra latchanama. Story super aa irundha matum podhuma consistent aa chapters release panna thaan readers ku interest varum padika. Take care of ur health but atleast oru naal vitu aavathu inimel olunga chapters release pannunga pls.