
உமா கண்ணில் நிறைந்த நீருடன் அவசர சிகிச்சைப் பிரிவையே பார்த்திருந்தார்.
சத்ய யுகாத்ரன் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான். அந்நேரம் அவனது அலைபேசிக்கு பூமிகாவிடம் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது.
மிதுனா பேசியதை எல்லாம் ரெகார்ட் செய்து அனுப்பி இருந்தாள்.
அதைக் கண்ட அகில், “ஏய் கேடி… மிது பேசுனத ரெகார்ட் பண்ணியா?” என வியப்பாக கேட்க,
“ம்ம்க்கும் ஆமா அப்பறம் ஒவ்வொருத்தருக்கும் தனி தனியா பிளாஷ்பேக் போட்டா, பாடி தாங்காதுடா” என நமுட்டு நகை புரிய, அவனும் புன்னகைத்தான்.
இருவரும் பால்கனியில் நின்றிருந்தனர். “என்ன இருந்தாலும் சத்யா சார் இப்டி செஞ்சுருக்க வேணாம்ல…” அகில் ஆரம்பிக்க,
“விதுரா சொன்னதை வச்சு பார்த்தா, எந்த தப்பும் செய்யாம சத்யா அண்ணாவோட லைஃபே ஸ்பாயில் ஆகிடுச்சு அகி. பெத்த அப்பாவும் அவரால கூனி குறுகி இறந்து போனது எவ்ளோ வலிச்சுருக்கும். பட்டினி கிடந்தது சாகுற அளவு போயிருக்காரு” என்றாள் பூமிகா.
“அது சரிதான், ஆனா இதுல சம்பந்தப்படாத அம்ரி அக்காவையும் அவங்க ப்ரெண்ட்ஸையும் எதுக்கு பழி வாங்கணும்? அதான் எனக்குப் புரியல…”
“விஷால் சார், கூடவே இருந்த ப்ரெண்ட மேரேஜ் பண்ணி அவங்க தொழிலை ஆட்டைய போட்ட கேரக்டர். அவர் ஏன் இதை செஞ்சுருக்க கூடாது அகி?”
“ம்ம்… இருக்கலாம். சென்னைக்கு போனா தான் இந்த குழப்பம் தீரும் போலருக்கு. மிதுனா வேற செம்ம காண்டுல இருக்கா” என வருந்தினான் அகில்.
—-
அந்த வாய்ஸ் மெசேஜ் மூலமாக, தன்னவள் தனக்காக நின்ற தருணங்கள் யாவும் கண்முன்னே வந்து செல்ல, முற்றிலுமாய் உடைந்து போனான் ஆடவன்.
“உன்மேல காம்ப்ளைன்ட் கொடுத்ததே அம்ரி தான்…” விஷாலின் கூற்றும், தன்னைத் தேடி வந்து பேசும்போதெல்லாம் அவன் முகத்தில் ஏற்படும் அதிருப்தியும் தற்போது விளங்கியது.
திட்டமிட்டு அனைவருமாக இணைந்து, இருவரையும் பிரித்ததை
நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறியது அவனுக்கு.
வேண்டுமென்றே அவளைக் குடிகாரியாக்கி, பின் அன்பைக் காட்டி, பின் வலியையும் தந்துள்ளான்!
நண்பர்கள் என்ற போர்வையில் உலாத்தும் துரோகிகள்.
இதயா விஷாலைத் திருமணம் செய்ததால் தானே, அவர்கள் மீதிருந்த சினத்தைக் கூட அடக்கிக்கொண்டு அவர்கள் வாழ்க்கைக்குள் புகாமல் இருந்தான்.
இவர்கள், அவளுக்கும் துரோகம் இழைத்திருப்பது புரிந்திருந்தால், எப்போதோ வந்திருப்பானே!
சப்பு சப்பென தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டவனின் உள்ளம் ஊசியாய் குத்தி குடைந்தது. கழுத்து நரம்புகள் புடைத்திருக்க, வலியும் வேதனையும் அளவு மீறி அடைத்தது.
உமா அவனை மிரட்சியாய் பார்க்க, இரவு முழுதும் அசையாமல் ஒரே இடத்தில் வீற்றிருந்தான் சத்யா.
பயப்பட ஒன்றுமில்லை என்ற மருத்துவரின் கூற்றில் தான் லேசாய் சமநிலை அடைந்தவன், அவள் விழித்து விட்டாள் என்று கூறிய நொடிப்பொழுதில் புயலாய் அறைக்குள் நுழைந்திருந்தான்.
கையில் போடப்பட்டிருந்த க்ளூகோஸ் பாட்டிலை எரிச்சலாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் இதயாம்ரிதா.
சத்யாவைக் கண்டதும் அவனை முறைத்தவள், “எதுக்கு என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்த?” என எடுத்ததும் சீறினாள்.
“ஓங்கி ஒன்னு விட்டேன்னா தெரியும். ஏண்டி, நான் ஜெயிலுக்கு போனப்ப தற்கொலை பண்ணல. அந்த எருமை மாட கல்யாணம் பண்ணுனப்ப தற்கொலை பண்ணல… உன் ப்ரெண்ட்ஸ் உன்னை ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சதும் மட்டும் குடையுதோ!” என அவளைக் குத்தினான் வேண்டுமென்றே!
அவனுக்குத் தெரியும் அவர்களால் தனது வாழ்க்கை வீணானதில் தான் அவளுக்கு அதீத அழுத்தம் நேர்ந்திருக்குமென.
அவனை அழுத்தமாய் ஏறிட்ட இதயாம்ரிதா,
“நான் ஒன்னும் சூசைட் பண்ணல… தூக்கம் வரலைன்னு எக்ஸ்ட்ரா டாப்லட் போட்டேன். விட்டுருந்தா காலைல நானே எந்திரிச்சுருப்பேன். நீ ஹீரோயிசம் காட்டுறதுக்கு வேற எவளாவது சூசைட் பண்ணிருப்பா, அவளைத் தூக்கிட்டு வந்து சோஷியல் சர்வீஸ் பண்ணு…”என உறுத்து விழித்தாள்.
அதில் திருதிருவென விழித்த சத்ய யுகாத்ரன், “ஆனா ஹார்ட் பீட் கம்மியா இருந்துச்சே…” என்றிட,
“ஆமா இவரு பெரிய எம்பிபிஎஸ், எம் எஸ் படிச்ச டாக்டர். ஹார்ட் பீட், பல்ஸ் வச்சே நோயை கண்டுபிடிச்சுடுவாரு…” அவளது முறைப்பில் அவனும் முறைத்து வைத்தான்.
“ஏய், ஒரு அட்டைல பாதி காலி ஆகிருந்துச்சுடி?”
“அந்த அட்டைல இருந்ததே பாதி தான்!” கண்ணைச் சுருக்கி கூறியதில், உமாவிற்கு நிம்மதி பிறந்தது.
அந்நேரம் மருத்துவர் உள்ளே வர, சத்யா அவரைக் கடிந்தான்.
“அவள் நல்லா தான இருந்தா. அப்பறம் ஏன் நைட்டு முழுக்க ஐசியூல வச்சுருந்தீங்க?”
மருத்துவரோ, “அதை தாங்க நானும் சொல்ல வந்தேன். நீங்க தான் பல்ஸ் கம்மியா இருக்குன்னு எங்களை குழப்பி விட்டீங்க.
ஸ்லீப்பிங் டேப்லட் டோஸேஜ் அதிகம் எடுத்துனால நாங்க அப்செர்வேஷன்ல வச்சுருந்தோம். மிட் நைட்ல எமர்ஜென்சின்னு கூட்டிட்டு வர்ற எல்லாரையும் ஐசியூல வச்சு தான் ட்ரீட் பண்ணுவோம். டோஸேஜ் அதிகம் ஆனதுனால, பிபி எல்லாம் கொஞ்சம் அப்னார்மலா இருந்தது. அதுக்கு மெடிகேஷன் குடுத்து, அந்த மருந்தோட வீரியத்தை கம்மி பண்ண ட்ரிப்ஸ் போட்டோம்.
நீங்க நான் சொல்ல வர்றதையே கேட்கலையே!” எனப் பரிதாபமாக கூறிட, சத்யா நெற்றியை நீவிக்கொண்டான்.
மருத்துவர் அவளுக்கு அறிவுரை கூறி விட்டுச் சென்றதும், அவனையே கையைக் கட்டிப் பார்த்துக்கொண்டிருந்த இதயாம்ரிதா,
“இப்ப நான் என் பிசினஸ் போச்சு, என் வண்டவாளம் எல்லாம் நியூஸ்ல வந்துடுச்சுன்னு தெரிஞ்சு சூசைட் பண்ணது வைரல் ஆகணும். அதுக்கு தான, என்னை இங்க கூட்டிட்டு வந்த?” என்று மூச்சிரைக்க கத்தினாள்.
“உன் இமேஜினேஷன்க்கு நான் பதில் சொல்ல முடியாது…” எனத் தோளைக் குலுக்கிக் கொண்ட சத்ய யுகாத்ரன், “டிஸ்சார்ஜ் எப்போன்னு கேட்டுட்டு வரேன்” என்று வெளியில் சென்றான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளை வீட்டிற்கு அனுப்ப, அவளோ சத்யா அவளுடன் வருவதைத் தடுத்தாள்.
“உங்க நைன் டு நைன் ஹஸ்பண்ட் ஜாப் தான் முடிஞ்சுதே. தி கிரேட் ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸோட ஜி. எம், உங்க ஹஸ்பண்ட் ஜாபை ரிசைன் பண்ணிக்கலாம்…” என்றாள் தீப்பார்வையுடன்.
“இன்னும் காண்ட்ராக்ட் முடியலையே?” காரின் மீது சாய்ந்தபடி சத்யா வினவ,
“அதான் டிவோர்ஸ் தர மாட்டுறேன்னு என்மேல கேஸ் போட்டுருக்கீங்களே… ஒரே வருஷத்துல ரெண்டு டிவோர்ஸ் வாங்குன பெருமை யாருக்கு கிடைக்கும் சொல்லுங்க” என்றவளின் விழிகளில் மறைக்கப்பட்ட வலி.
“அந்தப் பெருமையை உனக்குத் தர்றதுல எனக்கு விருப்பம் இல்ல. உனக்கு லேட்டஸ்ட் அப்டேட்ஸ் தெரியலைன்னு நினைக்கிறேன்… வீட்டுக்குப் போய்ட்டே பாக்கலாமா?” என அவளை வலுக்கட்டாயமாக காரில் அமர வைத்தான்.
“என்ன லேட்டஸ்ட் அப்டேட்ஸ்? நம்ம பர்ஸ்ட் நைட் வீடியோ லீக் பண்ணி சாதனை புருஞ்சுட்டீங்களோ?” என்றாள் படுநக்கலாய்.
அதில் அவன் முகம் மாறிவிட, “நான் எந்த வீடியோவும் எடுக்கல” என அமைதியாய் உரைத்தான்.
அக்கூற்றில் அவளிடமும் கடும் மௌனம். உமா முன்னரே வீட்டிற்கு சென்றிருந்தார் அவளுக்கு தேவையான உணவைத் தயார் செய்வதற்கு.
வீட்டினுள் நுழைந்ததும் தனது அறைக்குள் புகுந்து கொண்டவளின் பின்னால் அவனும் சென்றதில், அவள் திரும்பி முறைத்தாள்.
அதனைக் கண்டுகொள்ளாமல் அவளைத் தாண்டி நடந்தவன், முதல் வேலையாக தூக்க மாத்திரைகளை அப்புறப்படுத்தினான். அவனைக் கண்டும் காணாதது போல குளியலறைக்குச் சென்றவள், ஷவரின் அடியில் நனைந்தாள்.
எத்தகைய நம்பிக்கையை உடைத்திருக்கிறார்கள்! நண்பர்களென உயிரையே வைத்திருந்தாளே… தனக்குப் பிரியமானவனின் ஒட்டு மொத்த வருங்காலத்தையும் கனவையும் தான் காதலித்த ஒரே பாவத்திற்காக சிதைத்து சின்னாபின்னமாக்கி…
மனமேனோ ஆறவே மறுத்தது. தந்தை இறப்பிற்கு தான் தான் காரணமென எத்தனை இரவுகள் கண்ணீரில் கரைந்திருப்பாள்? உதிர்ந்த கண்ணீர் சருகுகளுக்கு சற்றும் தகுதியில்லாத மனிதரவர்!
இவர்களை நம்பாமல் சத்யாவின் விஷயத்தில் தான் இன்னும் ஆழமாய் இறங்கி ஆராய்ந்திருக்க வேண்டும்! கண்மூடித்தனமாக அன்பு வைத்ததற்கு தக்க தண்டனையைக் கொடுத்து விட்டு உயிரை உருவிச் சென்று விட்டனர்…
போதும்! இனியும் ஏமாற பலமில்லை. இவர்களுக்கு தண்டனையை சத்யா கொடுத்து விட்டான். அவர்களைத் தண்டிக்க முழு உரிமை இருக்கிறதே! அவன் மீது கொள்ளைக்காதல் வைத்ததன் பிரதிபலனாய் தனக்கும் பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட்டான்!
தன்பங்கிற்கு அந்த துரோகிகளின் கூட்டத்திற்கு மரண அடி கொடுத்து விட்டு ஒரேடியாக அனைவரிடமும் இருந்து விலகி விட வேண்டும்! சத்யாவை விட்டும் தான்… என முடிவெடுக்கும் முன்னே உள்ளே அத்தனை வலி.
மீண்டுமா? அவனைப் பிரிக்கத் தானே இத்தனை சதிகளும்… அந்த சதிகளுக்கு உயிர் கொடுத்து துரோகம் செய்தவர்களுக்கு வெற்றி தரப் போகிறாயா? மனசாட்சி அவளைக் கடிந்தது.
பிறகு!? ஒரு தலையாய் காதலித்து சுற்றி இருப்பவர்களின் வஞ்சம் புரியாமல் அவன் தலையில் தணலைக் கொட்டியாகிற்று.
தன்னைப் பழி வாங்க, தன்னைத் திருமணம் செய்து தன்னுடன் இணைந்து அவன் பங்கிற்கு தணலைக் கொட்டி விட்டான். இனியும் மாறி மாறி நெருப்பை அள்ளி வீசுவதற்கு பதிலாய் அவனுக்கான வாழ்வை வாழ விட்டு விலகியே ஆக வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டாள்.
ஒருமுறை அவனிடம் பேசிப் பார்த்து விடு என மீண்டும் ஆழ்மனம் குரல் கொடுக்க, “இட்ஸ் டூ லேட்” என்றெண்ணத்தில் ஷவரை நிறுத்தியவள், பாத் ரோபில் தன்னைப் புதைத்து கொண்டு வெளியில் வந்தாள்.
கட்டிலில் அமர்ந்து மடிக்கணினியில் புதைந்திருந்த சத்ய யுகாத்ரன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.
“சீக்கிரம் கிளம்பு ஆபிஸ்கு போகணும்…” என்றவனை விசித்திரமாகப் பார்த்தவள்,
“எந்த ஆபிஸ்க்கு… நீ இழுத்து மூடி, குழி பறிச்ச ஆபிஸ்க்கா?” என்றாள் ஒற்றைப்புருவம் உயர்த்தி.
“அதை திரும்ப திறக்குற ஐடியா இல்லையோ?”
“இல்ல”
“பட் எனக்கு இருக்கு. கெட் ரெடி!” என அசட்டையாக உரைத்தவன், அவள் முகம் துடைத்துக் கொண்டிருந்த துவாலையைப் பிடுங்கிச் சென்றான்.
பற்களை நறநறவெனக் கடித்த இதயாம்ரிதா, உடையை மாற்றி விட்டு அலைபேசியை எடுக்க, அதில் பிளாஷ் நியூஸாக ஒளிரா நிறுவனத்தின் பெயர் தான் ஓடிக்கொண்டிருந்தது.
ஒளிரா அழகு சாதனப்பொருள்களில் முகம் தெரியாத ஆள் ஒருவன், ஏதோ கலப்படம் செய்வதும், பின் அங்கிருந்து தப்பித்துச் செல்வதும் உறுதியானது.
அந்த முகம் தெரியாத ஆளை இயக்கியது, நிவோரா நிறுவனத்தின் முதலாளியான விஷால் எனத் தெரியவர, விஷாலும் அந்த ஆளும் அலைபேசியில் பேசும் ஆடியோ வெளியானது.
அதில் விஷால், ஒளிரா நிறுவனத்தின் பொருள்கள் அனைத்தையும் நாசம் செய்யச் சொல்லி கட்டளையிட்டது அப்பட்டமாக தெரிந்தது.
கூடவே, தன்னுடன் விவாகரத்து செய்த கோபத்தில் இதயாம்ரிதா மற்றும் சத்ய யுகாத்ரனின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது போல, அவளைப் பற்றிய தவறான தகவலைப் பரப்பி இருந்ததாக மொத்த பழியையும் அவன் மீது போட்டு விட்டான்.
அந்த செய்தியே இப்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வைரலாகிக் கொண்டிருந்தது.
காலையிலேயே சத்யா விதுரனுக்கு அழைத்திருந்தான். விதுரன் நண்பர்களுடன் விமான நிலையத்தில் இருந்தான்.
இன்னும் நான்கு மணி நேரம் இருந்ததில் மிதுனா ஒரு புறமும் விதுரன் ஒரு புறமும் முகம் பார்க்காது அமர்ந்திருந்தனர்
அப்போது தமையனின் அழைப்பை ஏற்றவன், “அண்ணா” என்றான் தயக்கமாக.
“விது… நான் சொல்றதை உடனே செய்! நான் குடுக்குற தகவல் எல்லாம், சோஷியல் மீடியால வைரல் ஆகணும். உன் பி. ஆர் டீமை ஆன்லைன்ல கனெக்ட் பண்ணி, இமீடியட்டா ஒர்க் ஸ்டார்ட் பண்ணு” என்றதும் எந்தக் கேள்வியும் கேளாமல் உடனடியாக மடிக்கணினியை எடுத்தான்.
அவன் மூலமாக, முந்தைய நாள் பரவிய தவறான செய்திகள் தற்போது இதயாம்ரிதாவைப் பற்றி நன்முறையில் பரவியது.
அதனை சலனமின்றி பார்த்தவள், குளியலறையில் இருந்து இடுப்பில் துவாலையோடு வந்தவனை முறைத்துப் பார்த்தாள்.
தான் முகம் துடைத்த துவாலையை எங்கு கட்டி இருக்கிறான்? எனக் காட்டத்துடன் ஏறிட்டவளுக்கு தானாய் மேனி சிவந்து போனது.
கேசத்தைக் கையால் தட்டிவிட்டபடி கண்ணாடி வழியே பெண்ணவளின் மீது பார்வையை பதித்தான்.
“ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் ஜி. எம் இப்ப என்ன ட்ரை பண்றீங்க?” இடுப்பில் கை கொடுத்து திமிராய் கேட்டாள்.
“ஜி. எம்மா இருக்கறத விட ஓனராகிடலாம்னு பாக்குறேன்” என மூக்கைச் சுருக்கிக் கூறியவனிடம், “ஓனர் ஆகுறதுக்கு உரிமை இருந்தா தான?” என கேலிபோல கேட்டாள்.
“உரிமைக்கு என்ன குறைச்சல்!” இரு புருவமும் ஏளனமாய் உயர்ந்ததில் நெற்றி மத்தியில் பல கோடுகள் உருவானது.
“கான்டராக்ட் மேரேஜ்ல அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணதுக்கு பேர் உரிமையா?” லேசாய் இதழ் வளைத்து வினவியவளை அழுத்தமாய் ஏறிட்டவன்,
“கான்டராக்ட் இருக்குறவரை உரிமை இருக்கும்! ஒரு வருஷத்துக்கு நீயே என்னை விட்டு போகணும்னு நினைச்சாலும் முடியாதுன்னு கான்டராக்ட்ல இருக்கிறதா ஞாபகம்!” எனத் தாடையைத் தடவிக்கொண்டான்.
எரிச்சலாய் தலையசைத்தவள், “அதான் நீ நினைச்சது நடந்துருச்சுல… இப்போ எதுக்கு மறுபடியும் உடைஞ்சு கீழ தள்ளுனத மறுபடியும் தட்டி எழுப்பணும்னு நினைக்கிற சத்யா? டூ யூ திங்க் ஐ ஆம் வீக்?” என்று சீறிட,
“என்னால உடைஞ்சதை நான் தான் சரி செய்யணும்… இட்ஸ் மை ரெஸ்பான்சிபிலிட்டி! ஒளிரா மாதிரி இன்னும் பல பிராண்டை நீ உருவாக்கிக்க முடியும் இதயா. நான் இருந்தாலும் இல்லைன்னாலும்… பட், நீ எத்தனை ப்ராண்ட உருவாக்கினாலும் அதுக்கு மாடல் நான்… நான் மட்டும் தான்!” என்றவனின் கூற்றில் பலவித அர்த்தங்கள்.
அவனை மூச்சு முட்ட முறைத்தவள், “உடைஞ்சதை எல்லாம் பெர்பக்ட்டா சரி பண்ண முடியாது சத்யா. இட்ஸ் இம்பாசிபிள்…” என்று அழுத்தம் திருத்தமாய் உரைக்க,
“சரி செஞ்சா?” அவனிடம் திமிர்த்தனம் தூக்கலாய் தெரிந்தது.
“முதல்ல நீ கீழ தள்ளி விட்ட தொழிலையே தூக்கி நிறுத்த முடியாது. மறுபடியும் இந்த ப்ராண்ட் மார்க்கெட்கு வரவே முடியாது. அப்படியே வந்தாலும் இன்டர்நெஷனல் லெவல்ல நடக்குற பாரிஸ் எக்ஸ்போல இந்த ப்ராண்ட் ஓரமா கூட வராது. வரவும் முடியாது. ஒரு தடவை பிளாக் மார்க் வாங்குனா வாங்குனது தான்…” எனத் திட்டவட்டமாக உரைக்க, அவனிடம் கசந்த முறுவல்.
“அது என்னவோ உண்மை தான். பிளாக் மார்க் வாங்குனா சாகுற வரை அது போகாதுல!” எனும்போதே அவன் குரலில் எதுவோ உடையும் உணர்வு.
பெண்ணவள் திகைத்து சிலையானாள்.
தன்னைப் பற்றி பரப்பியதை எல்லாம் வதந்தி என்று விட்டான். நாளடைவில் மறந்தும் கூட போய்விடும். அல்லது மறக்கவைக்கப்படலாம்… விஷாலும் அவனது நண்பர்களும் கூட காசை தூக்கி எறிந்து இந்த செய்திகளை அப்புறப்படுத்தி விடுவார்கள்.
ஆனால், சத்யா? கல்லூரி பேராசிரியராய் பொறுப்பான வேலையில் இருக்கும்போது படிந்த கறை என்றும் மாறாதே. மாறினாலும் கூட, கறை படிந்து துடைக்கப்பட்டவனுக்கு மீண்டும் அவனது கனவான அரசு வேலையோ அல்லது பேராசிரியர் வேலையோ கிடைக்க வாய்ப்பே இல்லையே!
பொசுங்கி போன கனவுகள் இனி மீள வாய்ப்பில்லாது, பாலியல் வழக்கில் எத்தனை துவண்டிருப்பான்? கண்ணைக் கரித்தது இதயாம்ரிதாவிற்கு.
தனது முகத்தை அவனுக்கு காட்டாமல் திரும்பிக் கொண்டவள், கலங்கிய கண்களை சிமிட்டி, கேவலைத் தனக்குள் அடக்கினாள்.
நீர் துளிர்த்த கண்களையும் முகத்தையும் சத்யாவும் இரு கரம் கொண்டு அழுத்தித் துடைத்து விட்டு,
“நெக்ஸ்ட் இயர் நடக்கப்போற எக்ஸ்போவுக்கு இன்டர்நெஷனல் லெவல்ல ஒளிரா ப்ராண்ட் போகும். போக வைப்பேன். படிஞ்ச கரையைத் துடைக்குறது எனக்குப் புதுசு இல்ல இதயா!” என நிமிர்வாய் கூறினாலும் அதில் அத்தனை வலி புதைந்திருந்தது.
கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கியவள், தன்னைத் தாண்டி சென்றவனை நிறுத்தினாள்.
அவன் முதுகு காட்டியபடி அப்படியே நிற்க,
“ஏன் ஒத்துக்கிட்டீங்க? தப்பு செய்யலைன்னு ஸ்ட்ராங்கா இருந்துருக்கலாம்ல?” கேட்கும்போதே வார்த்தைகளும் வதங்கியது.
“என் குடும்பம்!” ஒற்றை வார்த்தையில் அவளுக்குப் புரிந்து போனது. அவனை மட்டுமல்லாது அவனது மொத்த குடும்பத்தையும் பகடையாக உபயோகித்து இருக்கிறார்களென.
மீண்டும் நகரப்போனவனை அவளது கேள்வி நிறுத்தியது.
“ஒருதடவை கூட நான் உங்க மேல கம்பளைண்ட் குடுத்து இருக்க மாட்டேன்னு நீங்க யோசிக்கவே இல்லைல?
ஒரு கட்டத்துல என் காதல் வெறும் பொழுதுபோக்குன்னு நம்ப தொடங்கியாகிச்சு… ரைட்?” கண்ணைச் சிமிட்டியபடி ஆதங்கம் மிக கேட்டாள்.
ஒரு கணம் அமைதி காத்தவன், “ஒரு கட்டத்துல நான் தப்பானவன் தான்னு நீயும் நம்ப தொடங்கிட்ட தான?” என ஆழ்ந்த குரலில் கேட்க, அவளுள் அத்தனை தேம்பல்.
இருவரிடமும் ஒரு கணம் நிலவிய பலத்த அமைதியில் நூறாயிரம் உளைச்சல்கள்.
அதற்கு மேல் முடியாதவனாய், மீண்டும் அவளிடம் திரும்பி வந்து அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அணைப்பைக் கேட்டு அடம்பிடித்த மேனியைக் கடுமையாக அதட்டியவள், வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து பிரிந்து,
“டைவோர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம். ஒரு வருஷத்துல இந்த டிராமா முடிவுக்கு வர்றதோட இந்த உரிமையும் முடிவுக்கு வந்துடும்…” என்று இறுக்கத்துடன் கூறியவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன், சின்னதாய் புன்னகை சிந்தினான்.
“ஓகே உன் இஷ்டம். அதுவரை உரிமை இருக்கு தான?” எனச் சில்மிஷமாய் கேட்டு அவளை இடையோடு அணைத்துக் கொண்டவன், அவளது காதோரம் மூச்சுக்காற்று தீண்ட, “உடைஞ்ச எல்லாத்தையும் சரி செஞ்சா, எனக்கு என்ன கிடைக்கும்?” எனக் கேட்டான் கிசுகிசுப்பாக.
மீண்டுமொரு முறை, அவனது வாழ்வில் தான் வந்து இருப்பதையும் அவன் இழக்க வேண்டாமென அவளும் விலகிச் செல்ல முற்பட, அவனது நெருக்கம் கொலையாய் கொன்றது.
ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸில் ஜி. எம் போஸ்ட் வாங்குவது ஒன்றும் அத்தனை எளிதல்லவே!
அவளை பொறுத்தவரை தான் அவனைக் காதலித்ததாலே தானே இந்தளவு இழப்புகள். தனது முட்டாள்தனத்தால் அவன் ஒரு முறை பட்டது போதுமே! என்ற ஆதங்கம் அவளை உருக்குலைக்க, அவனோ தனக்கு தவறிழைத்து விட்டதாய் எண்ணி, தனக்காக எதையும் செய்வது அவளுக்குப் பிடிக்கவில்லை.
மருத்துவனையில் இதயா வீசிய ஒற்றைப் பார்வையை வைத்தே அவளைக் கணித்திருந்தான் சத்ய யுகாத்ரன்.
தற்போது அவள் மீது தானும் காதலித்து பித்து பிடித்து அலைந்ததை கூறினால் பிடிவாதக்காரி அதனை ஏற்றுகொள்ள மாட்டாள்.
தன்னைத் தவிர்க்கவே முயல்வாளென அவளது எண்ணத்தை உள்வாங்கி இருந்தவன், அவளது ஈகோவைத் தூண்டி விட்டு மீண்டும் தொழிலுள் நுழையவே முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் கண்டு விட்டான்!
அவனிடம் இருந்து விலகிய இதயாம்ரிதா, “நீங்க உங்க வேலையை பாருங்க. என் தொழிலை நான் பாத்துக்குறேன்…” என நாசுக்காக விலக முற்பட,
உதட்டைக் குவித்து அவளை மேலும் கீழுமாக ஆராய்ந்தவன், “என் வேலையைப் பார்க்க தான திரும்பவும் வந்துருக்கேன்” என சுவாஸ்யமாய் அவளை ஆராய்ந்தது அவனது கரங்கள்.
“ஹான்?” இதயா விழிக்க,
“ஐ மீன், உன் கூட வேலை பாக்குறது
தான் எனக்கு முக்கியமான வேலையே…” எனக் கேலியாய் கூறியவன், முதன்முறை சந்திப்பில் அவனைத் திகைக்க வைத்தது போல, அவளைத் திகைக்க வைத்து விட்டு,
“சைட் அடிக்க எனக்கு ஒரு வருஷம் லைசன்ஸ் இருக்கு பொண்டாட்டி” என்று குளிர்கண்ணாடியை அணிந்து கொண்டவனின் இதழ்களில் சின்னஞ்சிறு குறும்பு!
புது காதல் வளரும்
மேகா
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super
ரிதா சத்யா அழகு