
அத்தியாயம் – 19
சக்தி, “சரி அக்கா நீ சொன்னா சரியாக தான் இருக்கும்” என்று மறுப்பு கூறாமல் சுஜிதா கழுத்தில் மாலையை அணிவித்தான்.
சுஜிதாவும் மன நிறைவோடு சக்தி கழுத்தில் மாலையை அணிவித்தாள். விக்ரம் நிலாவை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று டிஷு பேப்பரை எடுத்து அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
பிறகு விக்ரம், “உனக்கு இப்போ சந்தோஷமா? டார்லிங்” என்றான். நிலா அவனை பார்த்து, “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் அப்பா என்னிடம் பேசியே பல வருடம் ஆகிவிட்டது”.
“அதுவும் தன் கையில் இருக்கும் மோதிரத்தை சுட்டிக்காட்டி இந்த மோதிரம் என் அம்மா எனக்காக வாங்கி வைத்திருந்ததாம் இதை என் அப்பா பத்திரமாக வைத்து இருந்து இப்பொழுது என்னிடம் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கும் பொழுதே எனக்கு வானத்தில் பறப்பது போல் இருக்கிறது”.
“எவ்வளவு நாட்கள் நான் என் அப்பா என்னிடம் பேசாமல் இருப்பதை நினைத்து அழுது இருக்கிறேன். ஆனால், அந்த அழுகை அனைத்திற்கும் ஒரு படி மேலே இன்று சந்தோஷமாக இருக்கிறேன் தேங்க்ஸ்” என்றால் உணர்ச்சி பூர்வமாக.
விக்ரம், “சரி ஓகே கூல் நீ கொஞ்சம் தண்ணி குடிச்சு ரிலாக்ஸ் ஆகு” என்றான்.
சிறிது நேரம் கழித்து விக்ரம், “ஓகே டைம் ஆச்சு நம்ப ஸ்டேஜ்க்கு போகணும் எல்லாரும் நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க” என்று அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் மேடைக்கு சென்றான்.
நிலா சந்தோஷமாக வந்தவள் மேடையில் ஏறிய பின் சக்தியை எதிரில் பார்த்து அதிர்ச்சியாகி போனாள்.
சக்தி சிரித்துக் கொண்டே, “உனக்காக தான் இவ்வளவு நேரம் காத்துக் கிட்டு இருந்தேன். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்று உனக்கு தெரிந்திருக்கும் நினைக்கிறேன்”.
“ஆனால், நான் யாரை கல்யாணம் செய்து கொண்டேன் என்று உனக்கு தெரியாது இல்லையா. பாரு இவ தான் என் பொண்டாட்டி” என்று ஒரு அடி பின்னே நகர்ந்தான்.
அப்பொழுது தான் நிலா பக்கத்தில் இருக்கும் சுஜிதாவை பார்த்தாள். நிலாவுக்கு இவ்வளவு நேரம் சந்தோஷத்தில் அதிர்ச்சி கிடைத்தது.
ஆனால், தற்போது கவலையில் அதிர்ச்சி கிடைத்தது. நிலா, “சுஜி” என்றாள் பதட்டமாக. சுஜிதாவுக்கு தன் தோழியை பார்த்தவுடன் ஏனோ கண்கள் கலங்க ஆரம்பித்தது.
நிலா ஒன்றும் புரியாமல் சுஜிதாவை பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள். நிலா, சுஜிதா இருவருக்குமே ஒருசேர கட்டி அணைக்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால், இவர்கள் இருக்கும் சூழ்நிலையில் எதுவும் பேசிக்கொள்ள கூட முடியவில்லையே என்று நினைத்து நொந்து போனார்கள்.
நிலா மனதுக்குள் பல கேள்விகள் தோன்றியது. எப்படி இந்த திருமணம் நடந்திருக்கும்? கண்டிப்பாக சுஜிதாவிற்கு பிடிக்காமல் தான் நடந்திருக்கும்?
சக்தி மாமா மிரட்டி தான் திருமணம் செய்து இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இருக்கும் கலவரத்தை பார்த்து சக்தி ஆனந்தம் கொண்டான்.
இரு தம்பதிகளுக்கும் மித்ரா ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள். நிலா, “எனக்கு வேண்டாம் என்றால்” சோகமாக. சுஜிதாவும், “வேண்டாம்” என்று மறுத்தாள்.
விக்ரம், “நிலா டார்லிங் நீ இதை குடித்தால் தான் கொஞ்சம் தெம்பாக இருக்க முடியும் இல்லை என்றால் மயக்கம் தான் வரும்”. டின்னர் சாப்பிட இன்னும் லேட் ஆகிடும்” என்றான்.
நிலா வேறு வழியின்றி ஜூஸை பருகினாள். அதைப் பார்த்த சக்தி, “சுஜி பேபி நீ ஏன் வேண்டாம்னு சொல்ற இந்த ஜூஸைக் குடி” என்று வல்கட்டாயமாக வாயில் திணித்தான்.
அது லேசாக சுஜிதாவின் ஆடையிலும் சிந்தி விட்டது. அதை பார்த்த நிலா சுஜிதா வின் நிலையை கண்டு வருந்தினாள். அந்த வருத்தத்தை கண்டு சந்தோஷம் அடைந்தான் சக்தி.
விக்ரம் ஒரு பக்கம் கோபம் கொண்டான் நிலா வீட்டில் இருந்த போது சுஜிதா அவனிடம் பேசும் போது எல்லாம் அவனுக்கு மித்ராவை போல் தான் தோன்றும்.
தன் தங்கையை போல் தான் பார்த்தான். அவளுக்கு இவன் மாப்பிள்ளையா? அதுவும் இப்படி முட்டாள் மாதிரி நடந்துக் கொள்கிறான் என்று சக்தியை பார்த்து முறைதான்.
சக்தி, சுஜிதாவின் தோள்பட்டையில் கை போட்டு இறுக்கி பிடித்தான். சுஜிதா வலியில் நெலிந்தால்.
ஆனால், அதை எல்லாம் சக்தி கவனிக்கவில்லை. நிலா மற்றும் விக்ரம் இதை பார்க்கிறார்களா? என்று மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்தான்.
இதை எல்லாம் கீழே இருந்து கவனித்த ஜெயலட்சுமி மனதுக்குள் ஐயோ இந்த சக்தி இப்படி முரடனை போல் நடந்துக் கொள்கிறானே யாராச்சும் பார்த்தால் ஜெயா தம்பி இப்படி பன்னுகிறான் என்று எனக்கு தானே அவமானம் ஏற்படும்.
இவன் எங்கே இது போல் நடந்து கொள்வானோ என்ற பயத்தில் தான் வீட்டிலேயே நிலா உன்னை திருமணம் செய்யாததை நினைத்து வருத்தப்பட வேண்டும்.
அதற்கு நீ உன் பொண்டாட்டியை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளனும் அனைவர் முன்பும் என்று அவன் மண்டையை கழுவி வைத்திருந்தேன்.
இருந்தும் இப்படி படுத்துகிறானே என்னை என்று சரசரவென மேலே வந்து சக்தி காதருகில் சென்று, “என்ன டா பண்ணிக்கிட்டு இருக்க இப்ப எதுக்கு ஜூசை அந்த பொண்ணு மேல் ஊத்தின?” என்றார்.
சக்தி, “அக்கா நம்ப பிளான் பண்ண மாதிரி தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன். அங்க பாரு அந்த நிலா இவளை நினைத்து எப்படி வருத்தப்படுறா” என்றான்.
ஜெயலட்சுமி, “அட பைத்தியக்காரா அவ சுஜிதாவை நினைத்து வருத்தப்படுறதா முக்கியம். உன்னை வேண்டாம் என்று சொன்னதை நினைத்து வருத்தப்பட வேண்டும்”.
“அதுக்கு நீ உன் பொண்டாட்டியை பாசமாக பார்த்துக் கொல்லனும். அப்போ தான் அவ இவனை நம்ப கட்டிக்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படுவாள்”.
“ஆனா, நீ பண்ண காரியத்துக்கு நல்லா உற்று பாரு அந்த நிலா முகத்தில் சந்தோஷம் தான் தெரியுது நல்ல வேலை நம்ம தப்பிச்சிட்டோம் அப்படின்னு நினைச்சு அவ சந்தோஷமா இருக்கா” என்றாள்.
சக்தி இரண்டு நிமிடம் நிலா முகத்தை உற்றுப் பார்த்தவன், “ஆமா அக்கா நீ சொல்ற மாதிரி எனக்கும் அப்படி தான் தோன்றுது”.
“சரி இதுக்கு அப்புறம் பாரு நான் எப்படி நடந்து கொள்கிறேன்” என்று கூறினான். ஜெயலட்சுமி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அனைவர் முன்பும் சக்தி, “சுஜி பேபி இப்படி வா” என்று நிலா அருகில் நிற்க்க வைத்து முட்டி போட்டு ஒரு மோதிரத்தை எடுத்து அவள் கையில் அணிவித்தான்.
அந்த மோதிரத்தில் ஓர் முத்தத்தை கொடுத்து விட்டு நிலாவை பார்த்தான். பிறகு அனைவரும் இரு தம்பதிகளுக்கும் வாழ்த்து கூறி விட்டு சாப்பிட சென்று விட்டார்கள்.
ராஜலட்சுமி இரு ஜோடிகளையும் உணவு அருந்த செல்லுமாறு கூறினார். விக்ரம், நிலா கைகளை பிடித்து உணவருந்தும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
அது பஃப்பே என்பதால் நிலாவிற்கு அவனே ஒரு தட்டில் அனைத்து டிஷ் எடுத்து வைத்து சாப்பிடுமாரு கூறினான்.
விக்ரம் எவ்வாறு நிலாவிடம் நடந்து கொண்டானோ அதே போல் சக்தி, சுஜிதா வை அழைத்துச் சென்று அவளுக்கு உணவுகளை பறிமாறினான்.
சுஜிதா குழப்பமாக அவனை பார்த்தாள். இங்கு வர வரைக்கும் நல்லா தானே இருந்தான்.
திடீரென இவனுக்கு என்ன ஆயிற்று ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்கிறானே என்று ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
நிலா இது வரைக்கும் பஃப்பே எல்லாம் போனது கிடையாது இதுவே முதல் முறை என்பதால் அவலுக்கு சாப்பிடவும் சரியாக வரவில்லை.
போக் ஸ்பூனை எடுத்து நூடுல்ஸில் குத்தி அவள் எடுத்து பார்க்க அதில் ஒன்றுமே வரவில்லை.
இரண்டு, மூன்று முறை முயற்சி செய்தும் அவளுக்கு அதே போல் இருக்க, “எனக்கு பசி இல்லை சாப்பாடு வேண்டாம்” என்றாள்.
அதை பார்த்த சக்தி சுஜிதாவுக்கு நான் மோதிரம் போட்டதை பார்த்து தான் நிலா வருத்தமாக சாப்பாட்டை கூட வேண்டாம் என்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்.
நான் எப்படி என் பொண்டாட்டிக்கு ஊட்டி விடுகிறேன் பாரு அதை பார்த்து இன்னும் வருத்தபடு என்று நினைத்து சுஜிதாவுக் அனைத்து உணவுகளையும் ஊட்டி விட்டான்.
விக்ரம் நிலாவை பார்த்து, “அது எப்படி பசிக்காமல் இருக்கும். இரவு நேரத்தில் சாப்பிடாமல் தூங்க கூடாது உனக்கு தெரியாதா” என்று விட்டு.
அவனே ஃப்போக் ஸ்பூனை நூடுல்ஸில் குத்தி ஒரு சுழற்று சுழற்றி எடுத்தான் அதில் அனைத்து நூடுல்ஸும் துவண்டு தொங்கியது அழகாக.
நிலா அதை ஆச்சரியமாக பார்த்தாள். அழகாக நிலாவுக்கு ஊட்டியும் விட்டான். அவளும் இருக்கும் பசிக்கு வேண்டாம் என்று மறுக்காமல் மொத்தமாக சாப்பிட்டு விட்டாள்.
அங்கு வந்த ஆதித்யா மற்றும் மித்ரா அடப்பாவிங்களா உங்கள ஒரு போட்டோக்கு போஸ் கொடுங்க உங்க பொண்டாட்டிக்கு ஊட்டி விடுற மாதிரி அப்படின்னு கேட்கலாம்னு வந்தேன்”.
“நீங்க ரெண்டு பேரும் அவங்க அவங்க பொண்டாட்டிக்கு மொத்த டின்னரையும் ஊட்டிக்கிட்டு இருக்கீங்க நடத்துங்க நடத்துங்க” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.
பிறகு ஜெயலட்சுமி அனைவரிடமும், “சரி அப்போ நாங்க கிளம்புறோம்” என்றார். ராஜலட்சுமி, “சரி” என்று கூறினாள். விக்ரம், “அதுக்குள்ள ஏன் ஆன்ட்டி கிளம்புறிங்க” என்றான்.
ஜெயலட்சுமி மனதுக்குள் எனக்கு மட்டும் என்ன போகணும் என்று ஆசையா. நான் உங்க வீட்டுக்கு வந்தால் மட்டும் தான் நிலாவிடம் கையெழுத்து வாங்க முடியும்.
ஆனால் எப்படி நான் வருவது நீங்கள் கூப்பிடாமல் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
விக்ரம், நிலாவை திரும்பிப் பார்த்தான். நிலா சுந்தரத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
உடனே விக்ரம், “ஆன்ட்டி ஒரு இரண்டு நாள் நிலா கூட தங்கிட்டு போங்களேன் நிலாவும் சந்தோஷப்படுவா” என்றான்.
ஜெயலட்சுமி, “அது எப்படி நல்லா இருக்கும்” என்று இழுத்தாள். விக்ரம், “சரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்” என்றான்.
ஜெயலட்சுமி அடுத்த நொடி, “இல்ல இல்ல எனக்கு பிடிக்கவில்லை என்று நான் எப்போ சொன்னேன். என் பொண்ணு கூட இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்” என்றார்.
பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்தார்கள். ஜெயலட்சுமி மனதுக்குள் அச்சச்சோ இப்போ இந்த சக்தி பையன் கிட்ட என்ன சொல்லி விக்ரம் வீட்டுக்கு வர வைக்கிறது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
அந்த சமையம் சரியாக அங்கு வந்த சக்தி, “அக்கா கிளம்பலாமா? மணி ஆச்சு” என்றான்.
ஜெயலட்சுமி, “இல்ல டா நம்ப எல்லாறையும் அவங்க வீட்டுக்கு வந்து இரண்டு நாள் தங்க சொல்லி ரொம்ப வம்பு பண்றாங்க நீ என்ன சொல்ற” என்றார்.
சக்தி, “அதெல்லாம் முடியவே முடியாது நான் வரவே மாட்டேன்” என்று ஒரே பிடியாக கூறினான்.
ஜெயலட்சுமி, “நாளைக்கு கையெழுத்து வாங்கிட்டு நம்ம கிளம்பிடலாம்” என்றாள்.
சக்தி, “நீ வேண்டும் என்றால் போ என்னால் எல்லாம் வர முடியாது” என்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இவங்க என்ன வில்லங்கத்தை வீட்டுக்கு கூட கூப்பிட்டு போறாங்க …
சக்தி விக்ரம் ரெண்டு பேரும் போட்டி போட்டு பொண்டாடிய கவனிக்கிறாங்க …