Loading

அத்தியாயம் – 18

நிலா கலங்கிய விழிகளுடன் விக்ரமை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையின் வீரியத்திலே அவள் தந்தையின் பாசத்திற்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. 

யாரும் பார்க்காத வண்ணம் அவள் கண்களை இவன் கரங்களைக் கொண்டு துடைத்து அழாதே என்பது போல் தலையாட்டினான். 

திடீரென ஜெயலட்சுமிக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதை எடுத்து “ஹலோ யாரு” என்றாள் கம்பீரமாக. அந்த பக்கம் இருந்தவன், “நான் விக்ரம் சாரோட பீஏ” என்றான்.  

ஜெயலட்சுமி அங்கும் இங்கும் திரும்பி பார்க்க மேடைக்கு பக்கத்தில் ஒருவன் இவளைப் பார்த்துக் கொண்டே காதில் ஹெட்போன் உடன் நின்றிருந்தான். 

ஜெயலட்சுமி, “என்ன விஷயம்?” என்றாள் அதே கம்பிறத்துடன். அந்த பீஏ, “நீங்களும் உங்க புருஷனும் மேடைக்கு சென்று நிலா மேடம் கிட்ட பாசமாக பேச வேண்டும்” என்றான்.

ஜெயலட்சுமி ஏளனமாக சிரித்துக் கொண்டு, “அவ கிட்டையா? அதுவும் நான் பாசமா பேசணுமா?” என்றாள். 

பீஏ, “இது எங்க சார் ஓட கட்டளை உங்களுக்கு சொத்து வேண்டும் என்றால் எங்க சார் சொல்றபடி நீங்க நடந்து கொண்டு தான் ஆக வேண்டும்” என்று ஃபோனை துண்டித்து விட்டான். 

ஜெயலட்சுமி அவள் கோபத்தை வெளியே காட்ட முடியாமல் சுந்தரத்திடம், “வாங்க உங்க பொண்ணை பார்த்து வாழ்த்திட்டு வரலாம்” என்றாள். 

சுந்தரம் அதிர்ச்சியாக, “ஜெயா நீ என்ன சொல்ற எனக்கு சரியா புரியல” என்றான். 

ஜெயலட்சுமி எரிச்சலாக, “ஒருவாட்டி சொன்னா உங்களுக்கு புரியாதா வாங்க மேடைக்கு போகலாம்” என்றாள்‌.

சுந்தரம் எதுவும் கூறாமல் அவள் பின்னாலேயே சென்றான். ஜெயலட்சுமி நிலா அருகில் சென்று, “எப்படி மா இருக்க? நல்லா இருக்கியா?” என்றார் பாசமாக கேட்பது போல். 

நிலா, “சித்தி…” என்றாள் எப்பொழுதும் போல் பயத்துடன் நடுங்கும் குரலில். ஜெயலட்சுமி விக்ரமை பார்த்தாள் நிலா இன்னமும் தன்னை பார்த்து பயப்படுவதை கண்களால் காண்பித்த ஏளனமாக சிரித்தார்.

பிறகு ஜெயலக்ஷ்மி அவள் என்ன கூற வருகிறாள் என்பதை கூட காதில் வாங்காமல் கீழே இறங்கி விட்டாள். 

ஜெயலட்சுமி சென்ற பின் சுந்தரம், நிலாவின் தலையை தடவிய படி, “நல்லா இருக்கியா மா?” என்றார். பல வருடங்களுக்குப் பிறகு தன் பிள்ளையை பார்த்து பேசினார். 

நிலா ஒரு நிமிடம் தன் தந்தையை கட்டி அணைத்து சந்தோஷத்தில் அவளையும் மீறி அழுது விட்டாள்.

சுந்தரம், “உங்க அம்மா உனக்கு எப்பயும் துணையாக இருப்பாள். நீ எதுக்கும் கவலைப் படாதே” என்று விட்டு சுந்தரம் கையில் இருந்து ஒரு மோதிரத்தை கழட்டி நிலாவிற்கு அணிவித்தார். 

நிலா, “அப்பா இதெல்லாம் வேண்டாம் அப்புறம் சித்தி உங்களை ஏதாச்சும் சொல்ல போறாங்க” என்றாள் பாவமாக. 

சுந்தரம், “நீ சின்ன பிள்ளையா இருக்கும் பொழுது இது உன் கல்யாணத்துக்காக உன் அம்மா முதல் முதலில் சீட்டு கட்டி வாங்கின மோதிரம்”. 

“இதை உன் கல்யாணத்தப்போ கொடுக்க வேண்டும் என்று நான் இவ்வளவு வருடமாக பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் உன் சித்திக்கு தெரியாமல்” என்று கூறி அவள் கையில் அணிவித்து தலையை வருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

விக்ரம், நிலாவின் கைகளை ஆறுதலாக பிடித்து தலையை இருபக்கமும் ஆட்டி அழாதே என்று அவள் கையில் அழுத்தம் கொடுத்தான். 

அந்த நிமிடம் நிலா அவளையும் மீறி விக்ரம் ஆறுதலை ஏற்றுக் கொண்டாள். லேசாக அவள் தலையை விக்ரம் தோல் பட்டையின் மேல் சாய்த்துக் கொண்டாள்.

பிறகு விக்ரம், “டூ மினிட்ஸ் ஃப்ரஷ் ஆகிட்டு வந்துடரோம்” என்று ராஜலட்சுமியிடம் சொல்லிவிட்டு நிலாவை அழைத்துக் கொண்டு ஓர் அறைக்கு சென்று விட்டான். 

அதே சமயம் வாசலில் ஜீப் ஒன்று மணல் பறக்க வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து சக்தி எகிறி குதித்து இறங்கி கடகடவென உள்ளே சென்றான்.

அதை தூரத்தில் இருந்து பார்த்த ஜெயலட்சுமி இவன் வேற நம்பள அசிங்கப்படுத்தி விடுவான் போலயே. 

பெரிய இடத்து பசங்க மாதிரி கெத்தா வந்து ஸ்லோ மோஷன் இல் இறங்குவான்னு பார்த்தா இப்படி ரவ்வுடி மாதிரி எகிரி குதித்து இறங்குகிறான். 

அதுவும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகிட்ட மாதிரி ஒரே ஓட்டமா ஓடிக்கிட்டு இருக்கானே என்று தலையில் அடித்து கொண்டு அவசர அவசரமாக தன் தம்பிக்கு செல்போனில் அழைத்தாள். 

சக்தி செல்போனை எடுத்து, “சொல்லுக்கா எங்க இருக்க?” என்றான். 

ஜெயலட்சுமி கோபமாக, “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா டா. நீ பாட்டுக்கு என்னமோ சன்டைக்கு போற மாதிரி கடகடவென்று போய்கிட்டே இருக்க. அந்த பொண்ணை யாரு டா கூட்டிட்டு வருவா” என்றாள். 

சக்தி, “இங்க பாரு நீ ஏதேதோ சொன்னியேன்னு நானும் வந்துட்டேன் சும்மா அவளை கூட்டிட்டு வா இதை பண்ணு அதை பண்ணு என்று என்னை சொல்லாத” என்றான். 

ஜெயலட்சுமி தலையில் அடித்துக் கொண்டு இவன வச்சிட்டு என்று, “என்னடா நம்ப திட்டத்தையே மறந்துட்டியா. அந்த நிலாவ வெறுப் பேற்றுவது தானே நம்பளோட திட்டமே”. 

“நீ இப்படி தனியா வந்தினா அந்த நிலா பார்த்துட்டு நல்ல வேலை நம்ப இவனை கட்டிக்கல என்று சந்தோஷப் படுவா டா புரியுதா சந்தோஷப் படுவாள்” என்று அந்த வார்த்தையை மட்டும் அழுத்தி கூறினார். 

சக்தி, “அதெல்லாம் முடியாது அக்கா அவள் சந்தோஷப்படவே கூடாது” என்றான். ஜெயலட்சுமி நம்ப வழிக்கு வர ஆரம்பிச்சிட்டான் என்று மேலும் பேச்சை தொடர்ந்தால்.

ஜெயலட்சுமி, “அந்த விக்ரம் நிலாவுடன் சந்தோஷமாக நெருங்கி இருந்து உன்னை வெறுப் பேற்றுவான் அதுக்கெல்லாம் நீ இடம் கொடுக்கலாமா? நல்லா யோசிச்சு பாரு”. 

“நீ இவ கூட சந்தோஷமா இருக்க மாதிரி சும்மா நடிச்சா மட்டும் போதும் எல்லாம் உனக்காக தான் அவ கைய புடிச்சு உள்ள கூட்டிட்டு வாடா” என்று போனை துண்டித்தாள்.

பிறகு ஜெயலட்சுமி ஐயோ இந்த பைத்தியக்காரனை வைத்துக் கொண்டு நான் எப்படித் தான் பணக்காரியாக மாற போகிறேனோ தெரியலையே என்று நொந்து போனார்.

சக்தி அக்கா சொல்வதும் சரிதான் என்னை திருமணம் செய்யாததை நினைத்து அவள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டும். 

அடியே நிலா உன்னை நான் எப்படி வெறுப் பேற்றுகிறேன் பார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். 

சக்தி பிறகு சுஜிதா வை திரும்பி பார்த்தான். அவள் கீழே இறங்காமல் ஜீப்பிலே அமர்ந்த இருந்தாள், “ஐயோ இவ கூட எப்படி சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறது இவ ரொம்ப ஓவரா பண்ணுவாலே” என்று நினைத்து நொந்து போனான்.  

சக்தி சுஜிதா அருகில் சென்று, “நான் இறங்கி உள்ளே செல்கிறேன்ல நீயும் இறங்கி வர வேண்டியது தானே” என்றான்.

சுஜிதா, “நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க. அப்போ நீங்க தான் கைய புடிச்சு உள்ளேயும் கூட்டிட்டு போகனும்” என்றால் அவனைப் பார்த்து கண் அடித்த படி.

சக்தி, “எல்லாம் என் நேரம்” என்று முனு முனுத்துக் கொண்டு சுஜிதா விடம் தன் கைகளை நீட்டி இறங்குமாறு சைகை செய்தான். 

சுஜிதா ஆச்சரியமாக பார்த்தாள் என்ன இவன் பதிலுக்கு எதுவும் தன்னுடன் சண்டை பிடிக்காமல் ரொமான்டிக்காக கைகளை நீட்டுகிறானே. 

சரி எதுவா இருந்தால் நமக்கு என்ன இந்த நிமிடம் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைத்து அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள். 

சக்தி, “என்ன பாத்துட்டே இருக்க சீக்கிரம் இறங்கு” என்றான். சுஜிதா, “அதை கொஞ்சம் அன்பாக சொன்னால் என்ன” என்றாள். 

சக்தி அவளை முறைத்துக் கொண்டு, “அதெல்லாம் எனக்கு வராது நீ இறங்கு சீக்கிரம்” என்றான்.

சுஜிதா இறங்குவதற்காக கீழே கால்களை எடுத்து வைத்தாள். ஆனால், அந்த ஜீப் கொஞ்சம் உயரமாக இருந்ததால் இவளுக்கு கால் எட்டாமல் சற்று தடுமாறினாள். 

அதை கவனித்த சக்தி கலகலவென சிரித்து, “குட்டி கத்திரிக்கா நீ எல்லாம் இறங்கணும் என்றால் உனக்கு ஏணி தான் எடுத்துட்டு வந்து போடணும்” என்று கிண்டல் செய்தான்.

அதற்குள் ஜெயலட்சுமி, சுந்தரம் மற்றும் ராஜேந்திரன், ராஜலட்சுமி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து இவர்களை உள்ளே வரவேற்றார்கள். 

சக்தி தன் அக்கா சொன்னது போல் சுஜிதா கையை பிடித்துக் கொண்டு ஒன்றாக நடந்து சென்றான். 

ஆனால், சுஜிதா இவன் உயரத்திற்கு ஈடு கொடுப்பதற்காக காலில் பெரிய ஹீல் அணிந்து இருந்தாள். 

அவள் அணிந்து இருந்த லெஹன்காவும், ஹீளும் ஒன்று சேர்ந்து சதி செய்தது போல் பேலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறினாள். 

அந்த நேரம் சரியாக சக்தி அவளை தாங்கிப் பிடித்து கீழே விழ விடாமல் தடுத்தான், “உனக்கு ஒழுங்கா நடக்க கூட தெரியாதா?” என்று அவளை திட்டிக் கொண்டே தன் கைகளில் ஏந்திக் கொண்டு உள்ளே சென்றான். 

சுஜிதா, “ஐயோ கீழே இறக்கி விடுங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றாள் வெட்கம் கலந்த பதட்டத்தில்.

சக்தி, “சும்மா இரு நீ எங்கேயாவது கீழே விழுந்து தொலைச்சேனா ஜெயா அக்காக்கு அவமானம் ஆகிடுச்சுன்னு என்னைய தான் திட்டுவா” என்றான்.

அனைவர் கண்களுக்கும் இவர்கள் ஜோடி பொருத்தம் அம்சமாக இருந்தது. சக்தி ஆறடி உயரமும், கம்பீரமான நடையும், முறுக்கு மீசையுடன் மிதமான தாடியும், ஆளையே மயக்கும் படி இருந்தான்.

சுஜிதா அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் 4.9 அடி உயரத்தில், பலிச் என்ற வெள்ளை நிறத்தில், 23 வயதுக்கு ஏற்றது போல் உடல் பாவனையும். 

மற்றும் சிவப்பு நிறத்தில் லெஹங்கா போட்டு கொண்டு மிதமான ஒப்பனைகளுடன் அவன் உயரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஹீல் ஷு போட்டு இருந்தாள். 

அப்பொழுதும் சக்தியின் தோல்பட்டை உயரத்திற்கு தான் இருந்தால் சுஜிதா. 

இருவரும் எலியும், பூனையுமாக இருந்தாலும் அது வெளியே தெரியாததால் அனைவர் கண்களுக்கும் இவர்கள் ரோமியோ, ஜூலியட் போல் பிரதிபலித்தார்கள். 

இவர்களை அழைத்துச் சென்று விக்ரம், நிலா நின்றிருந்த இடத்திற்கு பக்கத்தில் சக்தி, சுஜிதாவை நிற்க வைத்தார்கள். 

மேடை ஏறிய பிறகு தான் சக்தி, சுஜிதாவை கீழே இறக்கி விட்டான். இவர்கள் வந்து நிற்கும் வேலையில் விக்ரம், நிலாவை உள்ளே அழைத்துச் சென்றிருந்தான். 

சக்தி ஒரு புறம் நிலாவை வெறுப்பேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை தேடிக் கொண்டிருந்தான். 

சக்தி மனதுக்குள் நிலா என்னைய கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனால இப்போ உன்னோட ஆருயிர் தோழியவே நான் கட்டிக்கிட்டு வந்திருக்கேன். 

இத பார்த்து நீ கஷ்டப்படணும். நீ கஷ்டப்படுறதை பார்த்து நான் ரசிக்கனும் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்.

ஜெயலட்சுமி அனைவர் முன்னிலையிலும் தன்னை ஆடம்பரமாக காமித்துக் கொள்வதற்காக மேடைக்கு சென்று தன் தம்பிக்கு ஒரு தங்க சங்கிலியை அணிவித்தாள். 

இருவர் கையிலும் மாலை கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு கூறினார்கள். 

சக்தி என்ன அவசரம் இரு என்று கண்களால் தன் அக்காவிற்கு சைகை செய்தான். 

சக்தி, “அந்த நிலா வரட்டும்” என்றான். ஜெயலட்சுமி, “எல்லாரும் பார்கிறாங்க முதலில் மாலையை மாத்திக்கோ. 

பிறகு ஒரு மோதிரத்தை சக்தி கையில் கொடுத்து நிலா வரும் பொழுது இந்த மோதிரத்தை சுஜிதா கையில் போட்டு விடு” என்று இவளும் கிசுகிசுப்பாக கூறினாள்‌.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. என்ன செகண்ட் ஹீரோ சக்தி ரொம்ப தான் பண்றார் … அவர் வந்தா அதிரடி தான் …

    ஜெயா ஏதேதோ பேசியே அவங்களை ஒண்ணு சேர்த்து வச்சிடும் போல …

    நிலாவை நீ வெறுப்பேத்துறது இருக்கட்டும் … விக்ரம் நிலாவை பார்த்து நீ டென்ஷன் ஆகிடாத பா சக்தி ..