
அழகியே 13
செழியன், “அப்போ அந்த காலேஜ்லயே படிக்கிறியா? உனக்கு ரொம்ப பிடிச்சு போய் தானே சேர்ந்துருக்க, நீ அங்கேயே படிடா.அது எவ்ளோ பெரிய காலேஜ் எனக்கும் தெரியும். என் பிரண்ட் ஒருத்தி தன்விகா, அங்கதான் ஜூவ்ல்ஸ் டிசைனிங் கோர்ஸ் படிச்சுட்டு இருக்கா” என்று கூற, அதை கண்டு கொள்ளாதவளோ, “அப்போ நான் உங்களை விட்டு போகணுமா? ஸ்டடிஸ் முடிஞ்சதும் கூப்பிட்டுக்குவீங்க தானே, இல்லை நான் தொல்லையா இருக்கேனு அப்டியே விட்டுடுவீங்களா”என்று பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்தியவாறே கேட்டவளை கண்டு ஒரு நிமிடம் திகைத்து போனான்.
மறு நொடியே அவளை அணைத்துக்கொண்டவனோ, “என்ன தங்கமே உன்ன படிக்க தானே சொன்னேன். நீ படிச்சப்புறம் நாம எப்போவும் ஒண்ணாதானே இருக்க போறோம். இப்போதைக்கு நம்ம முன்னேற மாட்டோம்னு நினைக்கறவங்க முன்னாடி நாம நல்லா வாழ்ந்து காட்டணும். அதுக்கு நீ படிக்கணும். உனக்கு இருக்குற மாதிரியே எனக்கும் கனவு இருக்கு. நான் போலீஸ் ஆகணும், நம்ம எப்படி எப்படியோ வாழணும்னு அவ்வளவு கனவு இருக்கு. அது மட்டும் இல்லை உனக்கும் சரி எனக்கும் சரி இது கல்யாண வாழ்க்கைக்கான வயசு இல்லை. நாம செஞ்சதை எவ்வளவு நியாய படுத்தினாலும் அதிலும் சில முரண்கள் இருக்கத்தான் செய்யுது.நம்ம நினைச்சது நடக்கணும். இன்னிக்கு நம்ம அசிங்கப்படுத்துனவங்க முன்னாடி தலை நிமிர்ந்து நிக்கணும்னா நமக்குள்ள இந்த பிரிவு அவசியம் தான்” என்றவன் அவளிடம், “நான் ஒன் வீக்ல அமௌன்ட் ரெடி பண்ணிட்டு காலேஜ் போகலாம்” என்றான்.
அவளோ, “எதுக்கு அமௌன்ட்” என்று கேட்க, “காலேஜ் பீஸ்” என்று செழியன் கூற, அவளோ, “அது நான் பர்ஸ்ட் இயர் படிக்கும்போதே அப்பா எல்லாத்தையும் கட்டிட்டார். ஹாஸ்டல் பீஸ் முதற்கொண்டு” என்றவள், “நாம இன்னிக்கே போகலாம்” என்று கூற அவனோ அதிர்ந்து போனவனாய், “இன்னிக்கே போகணுமா?”என்று அதிர்ச்சியாய் கேட்டான்.
“நான் எவ்ளோ சீக்கிரம் படிச்சு முடிக்கிறனோ அவளோ சீக்கிரம் நான் உங்க கிட்ட வந்துடுவேன். டெய்லி போன் பண்ணுவீங்களா? வீக்லி ஒன்ஸ் நான் இங்க வருவேன். உங்கள பாக்காம என்னால இருக்க முடியாது” என்றவள் கூறும் முன்பே அழுதுவிட்டாள்.
அவளை இழுத்து அணைத்துக்கொண்டவனோ, “நாம கஷ்டப்படாம எதுவுமே கிடைக்காது தங்கமே, கொஞ்சநாள்தான். வீக்லி ஒன்ஸ் பாப்போம் இல்ல. நான் உனக்காக காத்துட்டு இருப்பேன். உனக்காக மட்டும்” என்று கூறியவன் முகமெங்கும் இதழ் பதித்தான்.
“இதே இருபது நாள் முன்னாடி இதெல்லாம் கனவுல வந்துருந்தாலே நான் சிரிச்சிருப்பேன். நீ என்னை என்னமோ பண்ற தங்கமே” என்றவன் அவளை விலக்கி நாளைக்கு காலேஜ் போகலாம், “இப்போ உன் பிரண்ட்ஸ், டீச்சர் நம்பர் இருந்தா கால் பண்ணி பேசு. இன்னிக்கு உனக்கு தேவையான திங்ஸ் வாங்கிட்டு வந்துரலாம்” என்றவன் அதே போல அவளை அழைத்துக்கொண்டு சென்று அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்தான்.
தேவ் பெற்றோருடன் தன் தாத்தாவை பார்க்க சென்றிருந்தான். அவனுக்கு செழியனை விட்டு செல்ல மனமே இல்லை. அங்கு சென்றும் அவர்களின் நினைவே தான்.அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவனுக்கும் எதுவும் தெரியாமலே போனது. மறுநாளே அவளை அழைத்துக்கொண்டு கல்லூரி சென்றவன், நிர்வாகத்திடம் அவர்களின் நிலையை எடுத்து கூறினான்.
விபத்து நடந்ததில் இருந்து அனைத்தையும் கூறியவன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் பிரச்சினை தற்போது எதுவும் இல்லை. அவள் மேற்கொண்டு படிக்க விரும்புவதையும் கூற, ஏற்கனவே கல்லூரியில் நல்ல பெயருடன் இருந்த அவள் திரும்பி வந்ததில் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி. அவளுக்கு அவளின் தோழிகளை நினைத்துதான் அதிகம் வலித்தது.அந்த விபத்தில் அவளின் தோழிகள் பலர் அந்த நில சரிவுக்கு இரை யாகி இருந்தனர்.
செழியன் அவளின் அனைத்திலும் வேத மித்ரா அன்பரசினில் இருந்து வேத மித்ரா இன்ப செழியனாக மாற்றி இருந்தான்.
அலுவலக அறையில் இருந்து வெளியில் வர அவர்களுக்காக காத்திருந்தாள் தன்விகா செழியனின் தோழி. அதே கல்லூரியில் தான் அவளும் படிக்கிறாள். அவளிடம் வந்தவன் “தங்கமே இது தன்வி. நான், தேவ், இவ மூணு பேரும் கிளோஸ் பிரண்ட்ஸ் இவளும் இங்க தான் படிக்கிறா என்று அவள் படிக்கும் பிரிவை கூறியவன் தன்வியிடம் திரும்ப, அவளோ செழியனை தான் அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டு இருந்தாள்.
அவளின் கையை ஆட்டியவன் “தன்வி ஏய் லூசு என்ன இப்படி பாக்குற, நான் பேசுறது புரியுதா? இது தான் என் வைப் வேதா. இங்க தான் படிக்குறா”என்று போனில் கூறினாலும் மீண்டும் ஒரு முறை அவளுக்கு அறிமுக படுத்தி வைக்க, அவளோ நெஞ்சில் கைவைத்தவள்”செழியா அப்போ நீ நிஜமாவே கல்யாணம் பண்ணிகிட்டியா? நான் நீ என்கிட்ட ப்ரான்க் பண்றதா நினைச்சிட்டேன்”என்றவள் வேதாவை பார்க்க, அவளோ செழியனை பிரிந்து போகும் தவிப்பில் நின்று இருந்தாள்.
அவளிடம் வந்தவர் “ஹாய் அழகி, ஐ ம் தன்வி உன் புருசனோட சைல்ட் ஹூட் பிரண்ட். உன் பேர் என்ன?”என்று கேட்க, அவளோ ஒரு நிமிடம் தயங்கினாலும்”வேத மித்ரா க்கா” என்றவள் அவள் படிக்கும் பிரிவையும் சேர்த்தே கூறினாள்.
தன்வி “அட பரவால்ல பக்கத்து டிபார்ட்மென்ட் தான். நான் பாத்துக்குறேன் செழியா. நான் இருக்க ஹாஸ்டல். ஒரு பிளேஸ் இருக்கு. நான் ஹாஸ்டல்ல பேசிடுறேன் டா. நான் பாத்துக்குறேன். நீ கவலைப்படாதே. எந்த பயமும் வேணாம். அது ரொம்ப பாதுகாப்பான இடம் தான்”என்று கூறினாள்.
அவனோ”நானும் இதைப்பத்தி தான் உன்கிட்ட பேசணும்னு நினச்சேன் தன்வி. அவ ஆல்ரெடி இருந்த ஹாஸ்டல் இருக்கு பட் அங்க அவகூட இருந்த பொண்ணுங்க இப்போ இல்லை. நீயும் அந்த ஆக்சிடென் பத்தி கேள்விப்பட்டு இருப்ப தானே “என்றவனுக்கு ஆமாம் என்ற ரீதியில் தலையாட்டி பதில் அளித்தவவள் “செழியா அதெல்லாம் நீ எதுவும் நினைக்க வேண்டாம் பாத்துக்கலாம்”என்றவள் அவள் போனில் ஹோஸ்டல் நிர்வாகியிடம் பேசி ஒப்புதல் வாங்கியவள் செழியனையும் வேதாவையும் அழைத்து கொண்டு அங்கு சென்று இருந்தாள்.
அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தவன் அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி தன்வியின் பொறுப்பில் விட்டு விட்டு வந்தான். அவனுக்கும் வரும்வழியெல்லாம் அவளின் அழுகை அவனை என்னவோ செய்தது.வேதாவிற்கும் அழுகை அடங்க நெடு நேரம் எடுத்தது.மிகுந்த மன போராட்டத்துக்கு மத்தியில் தான் கண்களை துடைத்து கொண்டு செழியனுக்கு விடை கொடுத்தாள். அவளை சமாதான படுத்துவது தன்விக்கு பெரும் பாடாகி போனது.
அவளுக்கும் ஏதேதோ நினைவுகள். பிறந்த ஊர் வேறு. தாய் தந்தை, அண்ணன் களின் நியாபகம் வேறு அதிகமாக வாட்டியது. அவர்களின் நலத்திற்காக கடவுளை வேண்டியவளுக்கு கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை. கடைசியில் தன்வி தான் அவளின் எண்ணைத்தை அறிந்து அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
செழியன் அவளை கல்லூரியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவனால் அவளின்றி இருக்க முடியவில்லை. ஒரு சிறு பெண் தன்னை இப்படி ஆட்டுவிக்கிறாளே என்று தனக்குள்ளே யோசித்து மாய்ந்து போனான்.
அவளின் துப்பட்டா ஒன்று சோபாவில் கிடக்க, அதை எடுத்து கையில் வைத்துக் கொண்டவன் அப்படியே சாய்ந்து படுத்தான்.
“நான் வந்துட்டேன்.. வந்துட்டேன்.. செழியா என்னடா பண்ற? வேதாமா அண்ணனுக்கு ஒரு காபி” என்றாவாறே உள்ளே வந்தவன் செழியனை கண்டதும், “டேய் என்னாச்சு ஏன் இப்படி இருக்க.. அழுதியா? ச்சே என் மேல உனக்கு அவளோ பாசமாடா? நான் இல்லனு பீல் பண்ணியா? அவ்ளோ பாசமா மச்சான் என் மேல உனக்கு?நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்.அதான் வந்துட்டேன்” என்று அவனை அணைத்துக் கொள்ள, செழியனுமே அவனை மிகவும் தேடியிருந்தான்.
நண்பனை அணைத்து விடுத்தவனோ, “வேதா, வேதா” என்று உள்ளே குரல் கொடுத்தவன், தன் வண்டி சத்தத்திற்கே அண்ணா வாங்க வாங்க என்று வரவேற்பவள் இத்தனை அழைத்தும் வராமல் இருக்க, செழியனை பார்க்க, அவனுமே அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா வேதா வீட்டுல இல்லையா? கோவிலுக்கு எதுவும் போயிருக்காளா? நீ வீட்டுலதான இருக்க கூட போயிருக்கலாம்ல” என்று கேட்க, அவனோ, “கோவிலுக்கு போகல.. காலேஜ் போயிருக்கா” என்று கூற, தேவ் அவனை புருவமுயர்த்தி பார்த்தான்.
செழியன் முதலில் இருந்து கூறி முடிக்க, தேவ் வேகமாக அவனை இழுத்து அணைத்திருந்தான். “எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா. உன்னை நினச்சு நான் ரொம்ப பெருமைபடறேன். பசங்க எல்லாம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணதும் கர்ப்பமாக்கி குழந்தை வந்ததும் முழுநேரம் குடும்பத்தை பாத்துக்குற மிஷினா வச்சுருக்காங்க. ஆனா நீ அவளோட அம்பிஷன் தெரிஞ்சு அவளை படிக்க அனுப்பியிருக்க. நிச்சயம் அதோட நிக்காது. அவ லட்சியத்துக்கு உதவி பண்ணுவ எனக்கு தெரியும். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல டா. நிஜமா உன்னை நினைச்சு கொஞ்சம் கவலையா தான் இருந்தேன். இப்போ அதெல்லாம் நீ ஒரு விஷயமே இல்லாம ஆக்கிட்ட, லவ் யூ மச்சான்” என்றவன் மீண்டும் அணைத்து கொண்டான்.
செழியனோ, “போதும் டா. மூச்சு முட்டுது விடு. இதுவும் என்னோட சுயநலம்தான். எனக்கும் சில கனவு இருக்கு. அவ என்னோட இருந்தா என்னால கான்செண்ட்ரேஷன் பண்ண முடியாது. இந்த ரெண்டு வருஷம் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியமானது. அசிங்கப்படுத்தினவங்க முன்னாடி நாங்க ஆசை தீர்ந்ததும் ஓடி போறவங்க கிடையாதுனு நிரூபிக்கணும். அவங்க முன்னாடி அவளும் சரி நானும் சரி தலை நிமிர்ந்து நடக்கணும் மச்சான். என்னையோ அவளையோ அவ புருஷன். அவன் புருஷன் அப்படினு சொல்லி தெரிஞ்சுக்கறதை விட செழியன் வேதா யார்னு காட்டணும் நினைக்கிறேன். கண்டிப்பா நடக்கும் டா” என்று கூறியவனை பிரம்மிப்புடன் பார்த்தான்.
தேவ்வோ “கண்டிப்பா மச்சான். நீ நெனச்ச எல்லாமே நடக்கும். அதுக்காக அவளை ஏங்க விட்டுராதடா. உனக்காக எல்லாத்தையும் இழந்துருக்கா. நீ எதுக்காகவும் அவளை இழந்துறாத, எனக்கு நான் எதுவுமே சொல்ல வேண்டியது இல்லடா.” என்று அறிவுரை கூறியவன், “சரி வா, வெளியே போய் டீ குடிச்சுட்டு வரலாம், வீட்டுலயே இருந்தா உனக்கும் கொஞ்சம் மனசு கஷ்டமாகும்” என்று அவன் மனநிலையை மாற்ற எண்ணி அவனை வெளியே அழைத்து சென்றான்.
இந்த பிரிவு இரண்டு வருடத்தில் முடிவுக்கு வருமா, நிரந்தரமாய் தொடருமா?

