Loading

அத்தியாயம் – 11

“வந்துட்டீங்களாப்பா ரெண்டு பேரும்” ஒன்றாக வீட்டினுள் நுழைந்த விக்ராந்த் மற்றும் நித்திலாவிடம் பரிவுடன் வினவினார் மரகத பாட்டி,…

“ஆமா பாட்டி,… எங்கே அப்பா லாம் வரலையா இன்னும்” விக்ராந்த் கேட்க,… “உன் அப்பாவும் சித்தப்பாவும் இப்போ தான் வந்தாங்க, ரூம்ல இருக்காங்க, நீங்க வந்திட்டதா நான் சொல்லிக்கிறேன், நீங்களும் போய் முகம் கை காலெல்லாம் அலம்பிட்டு வாங்க” என்று கூற, அவர்களும் சிறு தலையப்புடன் மாடிப்படியை நோக்கி விரைந்தனர்,…

விக்ராந்த் அறைக்குள் நுழைந்து கொள்ள, நித்திலா அறைக்கு செல்ல பிடிக்காமல் மொட்டை மாடியை நோக்கி சென்றாள்,… அங்கேயே முகத்தை கழுவிவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்,  அவளது எண்ணமெல்லாம் விக்ராந்த் சற்று நேரத்திற்கு முன்னர் பேசியதை தான் நினைத்து பார்த்தது, கோபம் கோபமாக வந்தது, தன் இயலாமை வலி அனைத்தையும் தான் கையோடு கொண்டு வந்திருந்த தன் தாய் தந்தையின் போட்டோவை பார்த்து தான் கண்ணீர் வடிய பேசி கொண்டிருந்தாள், அதில் அவளுக்கு சிறிது நிம்மதி கிடைக்கும், தன் மனபாரத்தை போட்டோவில் சிரித்து கொண்டிருக்கும் அவர்களிடம் கொட்டி தீர்த்தவள்,… மீண்டும் முகம் கழுவிவிட்டு சுமித்ராவை காண வந்தாள்….

சுமித்ரா இரவு உணவிற்க்காக சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள், அவளுக்கு தானும் உதவி செய்து கொண்டு அவளுடன் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா,…

“ஏன்க்கா இந்த வீட்டுல இருக்கிறவங்களையும், அவங்க குணத்தையும் பத்தி மட்டும் சொன்ன நீங்க, நீங்க பிறந்து வளர்ந்த குடும்பத்தை பத்தி எதுவும் சொல்லையே” என்றாள் நித்திலா,….

“இப்போ சொல்லிட்டா போச்சு” என்ற சுமித்ரா,… “எனக்கு அம்மா அப்பா மட்டும் தான், கூட பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது, அப்பா சொந்தமா இரண்டு டெக்ஸ்டைல்ஸ் வச்சிருக்காங்க, அம்மா இல்லதரசி, இவ்வளவு தான் என் குடும்பம்” என்றாள் சுமித்ரா,….

“உங்க அம்மா அப்பாவை நான் பார்த்ததே இல்லயே” நித்திலா உதடு சுழித்து சொல்ல,… “உன் கல்யாணத்துக்கு தான் வந்திருந்தாங்களே, உனக்கு தான் அடையாளம் தெரியல, சரி பரவால்ல விடு, நம்ம வீட்டுக்கு வருவாங்கல்ல அப்போ பார்த்து தெரிஞ்சிக்கோ” சுமித்ரா பேசி கொண்டிருந்த நேரத்தில்,…”வேலை செய்யாம இங்க என்ன பேச்சை வளர்த்துகிட்ட இருக்க” அதட்டலுடன் கேட்டபடி வந்து நின்றார் அன்னலட்சுமி,…

“வேலை தான் அத்தை பண்ணிக்கிட்டு இருக்கேன்” சுமித்ரா சாந்தமான குரலில் சொல்ல,… “என்னத்த பண்ணிட்டு இருக்க, உன் பேச்சு சத்தம் என் ரூம் வரைக்கும் கேட்குது, வேலை பார்த்தா அதை மட்டும் தான் பார்க்கணும், அதை விட்டுட்டு இந்த சத்தம் போட்டு சிரிக்கிறது, ஊர் பழக்கம் பேசுறது இதெல்லாம் இங்க வச்சிக்க கூடாது” கடுகடுவென்று பொறிந்தார் அன்னம்….

“மன்னிச்சிடுங்க அத்தை” சுமித்ரா படபடத்த குரலில் சொல்ல….. “நீங்க ஏன்க்கா மன்னிப்பு கேட்கிறீங்க, நான் தானே உங்க கிட்ட பேச்சு கொடுத்தேன்” என்ற நித்திலா,… “அக்கா மேல எந்த தப்பும் இல்லை அத்தை, நான் தான் அவங்க குடும்பத்தை பத்தி கேட்டேன், நான் கேட்டதால தான் அக்கா சொன்னாங்க” என்றாள் சுமித்ராவிற்கு பரிந்து கொண்டு,…

“இவ குடும்பம் என்ன பெரிய கோடீஸ்வர குடும்பமாக்கும், ரெண்டு துணிக்கடைக்கு ஓனர்னு அவ அப்பன் சும்மா பந்தா பண்ணிக்கிட்டு திரிவான், ஒரே
ஒரு பொட்டபுள்ளையை பெத்து போட்டிருக்காங்க, அது எங்க உயிரை வாங்கிக்கிட்டு இருக்கு, கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷத்துக்கு மேலாச்சு வயித்துல ஒரு புழு பூச்சை கூட உருவாக காணோம், பொண்ணா பிறந்ததுக்கு எண்ணத்தை சாதிச்சு கிழிச்சா இவ, மலடிங்கிற பட்டத்தை வாங்கிக்கிட்டு, இந்த குடும்பத்தோட பேரை தான் கெடுத்துட்டு இருக்கா” அவர் சிறிதும் மனிதான்பிமானம் இல்லாமல் சொந்த மருமகளையே வாய் நோகாமல் வசைபாட நித்திலாவிற்க்கு கோவம் வந்தது,…

“அத்தை நீங்க” என அவள் ஏதோ பேச வர, அவள் கரத்தை பற்றி அவளை பேச விடாமல் தடுத்தாள் சுமித்ரா, அவளது கெஞ்சல் பார்வையில் நித்திலாவும் அமைதியாகிவிட, இன்னும் நாலு வார்த்தை சுமித்ராவை குத்தி காட்டி பேசிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் அன்னம்,….

“ஏன்க்கா அவங்க பேசுறதை எல்லாம் கேட்டுகிட்டு அமைதியா இருக்கீங்க, எனக்கே அவ்வளவு கோவம் வருதே, உங்களால எப்படிக்கா இவ்வளவு பொறுமையா இருக்க முடியுது” என சற்று காட்டமாகவே வினவினாள் நித்திலா….

சின்னதாய் சிரித்தவள்,…. “அத்தை உண்மையை தானே நித்திலா சொல்லிட்டு போறாங்க, அவங்க குடும்பத்துக்கு என்னால ஒரு வாரிசை கொடுக்க முடியல, அந்த ஆதங்கம் அவங்களுக்கு இருக்க தானே செய்யும்” என்றாள் தன் வேதனையை மறைத்து சாதாரண குரலில்….

“உங்களுக்கு என்னக்கா வயசாகுது, என்னை விட மூணு வயசு பெரியவங்க தான் நீங்க, அதோட உங்களுக்கு கல்யாணமாகி பலவருடம் ஒன்னும் ஓடிபோயிடலையே, ரெண்டு வருஷம் தானே முடிஞ்சிருக்கு, இப்போவே ஏன்க்கா இவங்க இப்படி பேசுறாங்க, இதனால நீங்க எவ்வளவு ஹர்ட் ஆவீங்கன்னு அவங்களுக்கு புரியாதாக்கா, மத்தவங்கலாம் பார்த்துட்டு எப்படிக்கா சும்மா இருக்காங்க” என்றாள் ஆதங்கத்துடன்…

“இல்ல நித்தி,… அத்தை தான் அப்படி பேசுவாங்களே தவிர இந்த வீட்ல உள்ள மத்தவங்கள்லாம் என்னை ஒரு வார்த்தை கூட அதட்டி பேச மாட்டாங்க, அத்தையும் தங்கமானவங்க தான், ஆனா நான் இன்னும் குழந்தை உண்டாகலன்னு என் மேல சின்னதா கோவம் அவ்வளவு தான்” தன்னை தேற்றி கொள்வது போல் நித்திலாவையும் தேற்றினாள் சுமித்ரா,……

“ரொம்ப நல்லாவே சமாளிக்கிறீங்கக்கா,….” என சலித்துக் கொண்டவள்.. அவளின் கரங்களை பற்றி,… “நீங்க வெளியே என்னை சமாதானம் படுத்த இப்படி பேசினாலும், உள்ளுக்குள்ள எவ்வளவு வேதனையை அனுபவிசிக்கிட்டு இருக்கீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுக்கா” என நித்திலா சொன்னதில், அவள் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை முட்டிக் கொண்டு வெளிவந்தது, அவளை அரவணைத்தபடி ஆறுதல் கூறினாள் நித்திலா….

“இதுக்கு முன்னாடி எப்படியோ எனக்கு தெரியாதுக்கா, இப்போ உங்களுக்கு துணையா உங்க தங்கச்சி நான் இருக்கேன், நீங்க சொன்னீங்கள்ல உங்களுக்கு கூடபிறந்தவங்கனு சொல்லிக்க யாரும் கிடையாதுன்னு, எனக்கும் அப்படி தான், உங்களுக்கு அம்மா அப்பாவாச்சும் இருக்காங்க, ஆனா எனக்கு அந்த குடுப்பணை கூட இல்ல” என்று வருத்தத்துடன் கூறிய நித்திலாவை, இப்போது சுமித்ரா அரவணைத்தாள்,….

“உனக்கு அப்பா அம்மா இல்லன்னு நினைச்சு கவலை படக் கூடாது நித்தி, உனக்கு நான் இருக்கேன், ஒரு அக்காவா, அன்னையா, தந்தையா உனக்கு துணையா எப்போதும் நான் இருப்பேன்,” என அவள் கன்னம் பற்றி கூறினாள் சுமித்ரா, நித்திலாவிற்கு தனக்கு எதோ மிகப்பெரிய உறவு கிடைத்தது போல் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது,….

“ஆனா ஒன்னு நித்தி,… அத்தை கிட்ட எனக்கு சாதகமா நீ பேசவே கூடாது, இதனால அத்தை உன் மேல கோபப்பட வாய்ப்பிருக்கு, என் தங்கச்சியாவது அத்தைக்கு பிடித்த மருமகளா இருக்கட்டுமே” சுமித்ராவின் சொல்லை தட்ட முடியாமல், அப்போதைக்கு சரி என்றாள் நித்திலா…

இத்தனை ஒத்துமையோடும் அன்போடு பேசிக் கொண்டிருந்தவர்களின்  நேசத்தை இரு ஜோடி கண்கள் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தது, அவர்கள் வேறுயாருமில்லை இவர்கள் இருவரின் கணவர்மார்கள் தான்,..

வித்தார்த்திற்க்கு தன் மனைவிக்கு ஆறுதலாய் இந்த வீட்டிற்கு இன்னொரு உறவு வந்துதுவிட்டதை எண்ணி, மனம் குளிர்ந்து போனது… விக்ராந்த் அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவன் முகத்தை வைத்து நம்மால் கணிக்கவே முடியவில்லை,….

அன்றைய இரவு உணவுக்கு பின் அனைவரும் தத்தம் அறையில் தஞ்சமடைந்தனர், நித்திலாவுமே தன் அறைக்கு சென்றாள்,…

“என்ன பேபி, வந்துட்டியா, ஆச்சரியமா இருக்கு, நேத்து மாதிரி மாடிக்கு வரணும்னுல திங்க் பண்ணிக்கிட்டு இருந்தேன்” அறைக்குள் நுழைந்த நித்திலாவை வாரியபடி அவன் சொல்ல,…. “நான் எங்கே போய் ஒளிஞ்சிக்கிட்டாலும், நீங்க தேடி கண்டுபிடிச்சிடுவீங்கனு தெரிஞ்சு போச்சு, இனி நான் ஒளிஞ்சு என்ன பயன், அதான் வந்துட்டேன்” என்றாள் சலிப்புடன்….

“குட் பேபி, இவளோ சீக்கிரம் நீ என்னை புரிஞ்சிகிட்டனு நினைக்கும் போது, ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்றான் கள்ளப்பார்வையுடன்,…

‘ம்ம்ம்… இவனை நான் புரிஞ்சிகிட்டேனா, இவன் எந்த நேரத்துல எப்படி மாறுவான்னே நமக்கு புரியல, இதுல எங்கே இவனை நான் புரிஞ்சிக்கிறது’ அவள் மனதில் பேசிக் கொள்ள…. “என்ன நினைக்கிறியோ, அதை வெளியே கேட்டுடு பேபி,” என்றாள் அவள் தன்னை பற்றி தான் ஏதோ நினைக்கிறாள் என்பதை அறிந்து,…

‘எப்படி தான் நான் இவனை பத்தி தான் மனசுல நினைக்கிறேன் அப்டிங்கிறதுலாம் தெரியுதோ எனக்கு புரியல’ என நினைத்தவள்,…”நான் எதுவும் நினைக்கல” என்றுவிட்டு தான் எங்கே படுத்துக் கொள்வது என தெரியாமல் திணறி போய் நின்ற நேரம்,… “இங்க வா பேபி, இப்படி வந்து உட்காரு” என்றான் மெத்தையை தட்டி காட்டி,….

‘மாட்டேன்னு சொன்னா விற்றவா போறான்’ இரு நாட்களிலேயே அவனை ஓரளவு புரிந்து கொண்டவள், அவன் சொன்னது போல் மெத்தையில் வந்து அமர்ந்தாள்,…. அவள் அமர்ந்த மறுகணமே அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் விக்ராந்த்…

இதை எதிர்பார்க்காதவள்,…”என்ன பண்ணுறீங்க,” என அவனை தள்ள முயல, இன்னும் வாகாக அவளின் மடியில் படுத்துக் கொண்டவன், அவள் கரத்தை தன் தலையில் மீது வைத்து வருடி கொடுக்கும் படி சொல்லிவிட்டு, கண் மூடி படுத்தான்,…

“என் மடி என்ன உங்களுக்கு தலகாணி மாதிரி இருக்கா” அவள் சற்று எரிச்சலுடன் கேட்க,….”ச்சே… இல்ல பேபி, அதை விட மெத்து மெத்துன்னு, தூங்குறதுக்கு இதமா இருக்கு” என்றான் கண்கள் திறக்காமலேயே…

‘ம்ம்ம்… இருக்கும் இருக்கும்’ என முணங்கியவள், அவனின் அடர்ந்த கேசத்தையும் வருடிக் கொடுத்தாள்,…

“ஏதாச்சும் சொல்லு பேபி” அவன் அவள் தலை கோதலை இதமாய் அனுபவித்துக் கொண்டே கேட்க,… “என்ன சொல்லணும்?” என்றாள் அழுத்துக் கொண்டு…

“ஏதாச்சும்,…. உன் லைஃப்ல நடந்த மறக்க முடியாத விஷயம் இருக்கும்ல அதை பத்தி சொல்லு” விக்ராந்த் கேட்க,…. “அதை பத்திலாம் ஏன் நான் உங்ககிட்ட சொல்லணும்” என்றாள் முக சுழிப்புடன்…..

“நான் கேட்டா நீ சொல்லி தான் ஆகணும் பேபி” என்று சொன்னவன்,.. “என் மைண்டை அப்சட் பண்ணாம சொல்லு” அவன் பொறுமையாக கேட்க,….. ‘இதுக்கு மேல ஏதாச்சும் வாக்குவாதம் பண்ணுனோம்னா வேற மாதிரி நம்மல எரிச்சல் படுத்துவான், ஏதாச்சும் மொக்கையை போட்டு இவனை தூங்க வைப்போம், அப்போ தான் நாம இவன் கிட்டருந்து தப்ப முடியும்’ என கணக்கு போட்டவள், தன் சிறு வயது நிகழ்வுகளை பற்றி கூற ஆரம்பித்தாள்….

சின்ன வயதில், சிறு வயது தோழிகளுடன் சேர்ந்து, வீட்டுத் தோட்டத்து மாமரத்தில் ஏறித் திருட்டுத்தனமாக மாங்காய் பறித்த அந்தச் சுட்டித்தனமான கதைகள்,
​பள்ளித் தோழிகளுடன் சேர்ந்து கல்லூரியிலும் தொடர்ந்த நட்பு, அங்கே பரீட்சை நேரத்தில் பிட் அடித்து எழுதிய ஜாலியான சம்பவங்கள் ​என தன் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான மற்றும் சந்தோஷமான விஷயங்களை மட்டும் தேடிப் பிடித்து, ஒரு குழந்தையைப் போல அவனிடம் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் நித்திலா.

அவன் தான் சொல்லியதை கேட்டானா இல்லையா என்பதையெல்லாம் அவள் கவனிக்கவில்லை, பழைய நினைவுகளை நினைத்து பார்த்து, சிரித்துக் கொண்டே அவள் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருந்தாள்,….

சற்று நேரத்தில் எல்லாம் அவனிடமிருந்து எந்த சத்தமும் வராமல் போகவே, தன் பேச்சை நிறுத்தி விட்டு, அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள், கண்கள் மூடிய நிலையில் தான் இருந்தது,….

“தூங்கிட்டாருன்னு நினைக்கிறேன்” என வாய்விட்டே சொல்லிக் கொண்டவள்,…. தன் மடிமீதிருந்த அவனது தலையை விலக்க போன நேரம்,… “நான் தூங்கல பேபி, என் வேலையை முடிக்காம தூங்கவும் மாட்டேன்” என்றவன்,…. “ஆனா பேபி, ஃபைனலா நீ குறும்புக்காரின்னு நீ சொன்னதை வச்சு நான் தெரிஞ்சிக்கிட்டேன், கரெக்ட் தானே” என்றான் அவள் முகத்தை பார்த்து,…

“உங்களை கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி குறும்புக்கார பொண்ணா, சுதந்திர பறவையா தான் இருந்தேன், ஆனா இப்போ சிறகொடிந்த பறவை மாதிரி ஆகிட்டேன்” என்றாள்…..

“டோன்ட் வொர்ரி பேபி, ஜஸ்ட் சிக்ஸ் மந்த்க்கு தானே” அவன் அழுத்தமான பார்வையுடன் சொல்ல, அதில் கோபம் கொண்டவள், அவன் தலையை தன் மீதிருந்த தள்ளி விட போன நேரம், அவளது தலையை அழுத்தி குனிய வைத்து, அவளது இதழை கவ்வினான், அதற்கு பிறகு அவளது கட்டுப்பாடு மொத்தத்தையும் அவன் ஆக்கிரமித்திருந்தான்,…..

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்படியே ஆஃப் பண்ணிட்டான் .. இவன் ஒருத்தன் ஆறு மாசம் ஆறு மாசம் சொன்னதையே சொல்லிட்டு … ஆறு மாசம் ஆனதும் நாங்களே நித்தியை வெளில அனுப்பிடுறோம் 😜😜😜😜 நித்தி நல்ல பொண்ணு இவன் ஆறு மாசத்துக்கு அப்புறம் என்ன பண்ண காத்திருக்கானோ …

  2. விக்ராந்த் வீசிய வார்த்தைகள் கூறிய வாளாக நித்திலாவை வதைக்கின்றது.

    ஒரே வீட்டில் வாழ வந்த இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக அனுசரணையாக இருக்கின்றனர்.

    பொண்டாட்டி மடியில் படுத்து கொண்டு, அவள் தலை கோதிவிடும் சுகம் போதாமல் கதை வேறு சொல்லவேண்டும் அதுவும் ஆறு மாதத்திற்கு மட்டும்.

    Smart Boy விக்ராந்த் 😎 நியாயமான வில்லன்.