Loading

கண்ணைக் கடினப்பட்டுப் பிரித்த இதயாம்ரிதாவிற்கு கண்கள் கூசியது.

ஜன்னல் திரைச்சீலைகள் ஓரமாக ஒதுக்கப்பட்டிருக்க, காலை நேர வெளிச்சம் அவளது உறக்கத்தைக் கலைத்தது.

வெற்று மேனியுடன் ஆடவனது கை வளைவில் உறங்கியது தான் நினைவில் இருக்கிறது.

தற்போது தன்னை அவசரமாகக் குனிந்து பார்த்தாள். சிவப்பு நிற இரவு உடை அவள் மீது பாந்தமாகப் பொருந்தி இருந்தது.

அருகில் கண்ணைத் திருப்பிப் பார்க்க, அங்கு ஆடவனின் வாசம் மட்டுமே மிச்சமாய்!

ஒப்பந்த திருமணத்தில், அவனிடம் தன்னை ஒப்படைத்தது அவளுக்கு ஒன்றும் தவறாய் தெரியவில்லை.

முன்னாள் கணவனிடம் விவாகரத்து பெற்று விட்டாகிற்று. இந்நாள் கணவனை முறையாய் திருமணமும் செய்து முடித்தபின், தன் மனம் முழுக்க வியாபித்திருப்பவனுடன் ஒரு நாள் உலகம் மறந்து கூடி களிப்பது என்ன அத்தனை பிழையா?

‘ செக்ஸுவல் அபியூஸ்’ வழக்கிற்காக சிறைக்குச் சென்று திரும்பியவன் தான். அந்தக் காரணத்தை மூளை ஏற்றுக்கொண்டாலும் மனது ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடிக்கிறது. அவள் மனக்கண்ணிற்கு இன்னும் அவன் அவளது ப்ரொஃபியாகவே தானே தெரிகிறான்.

என்ன முன்பிருந்த கனிவும் அவள் மட்டுமே உணரும் இளக்கமும் மட்டும் இல்லை.

பல்வேறு எண்ணங்களுடன் குளித்து கிளம்பி விட்டவள், கண்காட்சிக்கு தாமதமாவதை உணர்ந்து சார்ஜ் இல்லாம அணைந்து விட்ட அலைபேசியை எரிச்சலாய் பார்த்துக் கொண்டாள்.

அருகிலிருக்கும் சத்யாவின் அறையைப் பார்த்தாள். பூட்டப்பட்டிருந்தது. மற்றவர்கள் கண்காட்சிக்கு கிளம்பி இருப்பதாக உறுதி செய்து விட்டு அவளும் பாரிஸ் எக்ஸ்போ நோக்கிச் சென்றாள்.

அங்கு கண்காட்சி நல்லமுறையில் நடைபெற்றுக்கொண்டிருக்க, அவளது ஒளிரா ஸ்டால் மட்டும் ஒளியிழந்து காணப்பட்டது.

மிதுனாவும் அகிலும் கலங்கிய முகத்துடன் நின்றிருக்க, அவர்களை நோக்கிச் சென்ற இதயாம்ரிதா, “ஹே என்ன இது… ஸ்டால் என்ன ஆச்சு? சத்யா எங்க?” என்றவளின் விழிகள் அவனைத் தேடி அலைந்தது.

அவர்களுக்கு சற்று தள்ளி பூமிகாவும் விதுரனும் நின்றிருந்தனர்.

விதுரனின் முகத்தில் கொள்ளை மகிழ்ச்சி. பூமிகாவிற்கு இப்போதே வியர்த்து வழிந்தது.

“மூஞ்சில சந்தோசத்தை காட்டாதடா… கண்டுபிடிச்சா அவ்ளோ தான்…” என்று முணுமுணுக்க,

“என்ன கண்டுபிடிச்சா வேலையை விட்டு தூக்குவாங்க அதான…” என்றபடி ஐடிகார்டை கழற்றி எறிந்தவன், “எனக்கு இந்த வேலையே வேணாம். பட் உங்க மூணு பேரையும் இதுல சம்பந்தப்படுத்த மாட்டேன் டோன்ட் வொரி” என்றான்.

“நீ இல்லன்னா நாங்க மட்டும் இங்க இருந்து என்ன செய்வோம்?” பூமிகா முறைத்து விட்டு அங்கு நடப்பதை பார்க்கலானாள்.

வேதனை நிறைந்த முகத்துடன் தன்முன் நின்றிருந்த இருவரையும் பொறுமையிழந்து கத்திய இதயாம்ரிதா,

“உங்களை தான் கேக்குறேன். என்ன ஆச்சு?” என்றிட, “உங்களுக்கு கால் பண்ணிட்டே இருந்தோம் மேம். போன் ஸ்விட்ச் ஆப்” அகில் அமைதியாய் கூறியதில், “சரி என்னனு சொல்லி தொலை” என்றாள் காட்டமாக.

“அது வந்துசி மிதுனா தயக்கத்துடன்,

“ஒளிரா பிராண்டை சென்னைல பேன் பண்ணிட்டாங்க மேம். சோ, ஆப்வியஸ்லி இங்கயும் ஸ்டால் போட அலோ பண்ணல. கம்பெனியோட ட்ரேட்மார்க், லைசன்ஸ் எல்லாத்தையும் பறிமுதல் பண்ணிட்டாங்க… பத்மா மேம் எமர்ஜென்சின்னு நைட்டே சென்னைக்கு கிளம்பிட்டாங்க…” என்றதும் அதிர்ந்து விட்டாள்.

“வா… வாட்? எதுக்காக பான் பண்ணனும்?” எத்தனை முறை தான் அவளும் தோற்றுப்போவாள்!?

“குவாலிட்டி இஸ்யூன்னு சொன்னாங்க மேம். ஒளிரா ப்ராண்ட் மட்டும் இல்ல. நிவோரா பிராண்டும் சேர்த்து…” என்றதும், “காட்… அதை ஏன் பான் பண்ணனும்?” எனக் கேட்டாள் தலையைப் பிடித்துக்கொண்டு.

“தெரியல மேம். இப்ப தான் நியூஸ்ல விஷால் சார அரெஸ்ட் பண்ணிட்டதா சொன்னாங்க… அப்பறம்…” என மென்று விழுங்கினான் அகில்.

“அப்பறம் என்ன? என்னையும் அரெஸ்ட் பண்ண போறாங்களோ?” எரிச்சலாய் கேட்டு வைத்தாள்.

“அதில்ல…” மிதுனாவின் முகம் செத்திருந்தது.

விதுரனோ இளக்கார நகையுடன், “மேடம்கே தயக்கம் இல்ல. நீங்க ஏன் மச்சீஸ் இவ்ளோ ஆக்வார்டா பீல் பண்றீங்க” என நக்கலாய் கேட்டு விட்டு, தனது அலைபேசியில் ஓடிக்கொண்டிருந்த செய்தி துணுக்கை இதயாம்ரிதாவிடம் காட்டினான்.

அவனை புருவம் சுருக்கி பார்த்தபடியே அந்த செய்தியைப் பார்த்தவளுக்கு முகம் இறுகிப்போனது.

பிரபல தொழிலதிபர் ராம்குமாரின் மகளும், நிவோரா நிறுவன முதலாளி விஷாலின் முன்னாள் மனைவியாகிய இதயாம்ரிதா மதுபானம் அருந்தி கொண்டு சுயநினைவின்றி இருக்கும் காட்சி ஒளிபரப்பானது.

அது ஒரு முறை அவள் வீட்டிலேயே மது அருந்தி மயங்கி கிடந்த ஃபுட் ஏஜ்.

மேலும், தனது வியாபார வளர்ச்சிக்காக தன்னிடம் வேலை செய்தவரை மாடலாக்கி ஒப்பந்த திருமணம் செய்தது பேசுபொருளாகி உள்ளது.

தற்போது, அவரது நிறுவனம் பான் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை ஒப்பந்த முறையில் திருமணம் செய்தவர் தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

நிவோராவின் நிர்வாகியான விஷால், தனிப்பட்ட முறையில் அவரது ப்ராண்ட் மாடல்களை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அவரது அலைபேசியில் கண்டெடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து, போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, அவர் தரப்பில் ஜாமீன் வழங்க வழக்கறிஞர்… என செய்தி தொகுப்பாளர் பேசிக்கொண்டே போக, இதயாம்ரிதா சிலையாக நின்றாள்.

அப்போதும் அவள் மீது வழக்கு தொடர்ந்த சத்யாவை மட்டுமே அவள் விழிகள் தேடியது.

“சத்யா எங்க?” எவ்வித உணர்வும் அற்று கேட்டாள்.

மிதுனாவோ “தட் பாஸ்டர்ட், எங்க போனான்னு தெரியல!” என அருவருப்பாய் கூற, விதுரனின் முகம் மாறியது.

“மிது மைண்ட் யுவர் வர்ட்ஸ்… அவர் பாஸ்டர்ட்ன்னா இந்த அம்மா யாராம்?” என்று இதயாம்ரிதாவின் மீது வெறுப்பை உமிழ்ந்தான்.

அவனைக் கையைக் கட்டிக்கொண்டு ஏறிட்டவள், “உன் கதை என்ன?” என்று சலிப்பாய் கேட்டதில், அவனுக்கு கோபம் பெருகியது.

“உனக்கு என்ன… இதெல்லாம் உனக்கு ஒரு பெரிய விஷயமா? காசை காட்டி துடைச்சு விட்டுட்டு போய்டுவ… ஆனா என் அண்ணனுக்கும் என் குடும்பத்துக்கும் நீ செஞ்சதுக்கான தண்டனை எல்லாம் உனக்கு சாகுற வரை கிடைக்கும்…” என்று சாபமிட,

“என்ன உளறுற? உன் அண்ணன் யாரு?” என்று புரியாது கேட்டாள்.

“சத்ய யுகாத்ரன் என் அண்ணன்!” விதுரன் நிமிர்வாய் கூறியதில் இதயா மட்டுமல்ல அகிலும் மிதுனாவுமே பலமாய் அதிர்ந்தனர்.

விதுரனோ உடைந்த குரலில், “பொய் கேஸ் போட்டு என் அண்ணனை கம்பி எண்ண வச்சதும் இல்லாம, அவனை என் குடும்பத்துல இருந்தே பிரிச்சுட்டல்ல… அவன் பின்னாடியே சுத்தி ஆசை காட்டி, உன் பணபலத்தை வச்சு அவனோட ஆசை கனவு எல்லாத்தையும் அழிச்சுட்டல்ல… இப்போ வலிக்குதா? நம்மளோட கனவு கண்ணு முன்னாடி தகர்ந்து போறது எவ்ளோ வலிக்கும்னு தெரியுதாடி…” என்று கொந்தளித்தான்.

“விதுரா” மிதுனா அதட்ட, அவளைக் கண்டுகொள்ளாதவன்,

“கேவலம் தொழில் வளர்ச்சிக்காக உன்னையே வித்துக்குறவளுக்கு குடும்பத்தோட அன்பும், காதலோட ஆழமும் எப்படிடி புரியும்?” உச்சகட்ட வெறுப்பில் வார்த்தைகளை சிதற வைக்க, மிதுனா அவனை பளாரென அறைந்திருந்தாள்.

“பொய் கேஸ்!” இந்த ஒற்றை வார்த்தையில் உறைந்து போன இதயாம்ரிதாவிற்கு அவன் பேசிய மற்றதெல்லாம் மூளையில் பதியவில்லை.

கால்கள் தானாய் அங்கிருந்து எங்கோ நகர்ந்தது.

விதுரனோ “எவளோ ஒருத்திக்காக நீ ஏண்டி என்னை அடிக்கிற?” என கன்னத்தில் கை வைத்து உறுத்து விழிக்க,

மிதுனா கோப மூச்சுகளுடன், “எவளோ ஒருத்தியா? அவள் என் அக்காடா… உனக்கு என்னடா தெரியும் அவளை பத்தி? இஷ்டத்துக்கு பேசுற…” என்றதில் பூமிகாவும் விதுரனும் அதிர்ந்தே விட்டனர்.

“அவள் உன் அக்காவா?” கசப்பாக வினவினான் விதுரன்.

அகிலோ மிதுனாவைத் தடுத்தான்.

“மிது… கொஞ்சம் பொறுமையா அவனுக்குப் புரிய வைக்கலாம்…” என்றதில்,

“இதுக்கு மேல எப்படிடா பொறுமையா போறது? ஏதோ பணக்காரங்கன்னா அவனுக்குப் பிடிக்காதுன்னு அவன் என்ன பேசுனாலும் அமைதியா இருந்தேன். அதுக்காக அவளை கண்டமேனிக்கு பேசுறான் நான் பாத்துக்கிட்டு இருக்கவா?” என்றவளுக்கு கண்ணீர் ஆணை உடைந்தது.

விதுரன் அவளை ஏமாற்றமாய் பார்த்தான்.

“சத்யா உன் அண்ணன்னு ஏண்டா எங்ககிட்ட சொல்லல?” மிதுனா அவன் சட்டையைப் பிடித்து கேட்க,
பூமிகா அவளை விடுவித்து,

“நீ மட்டும் இதயா மேம் உன் அக்கான்னு சொன்னியா?” என்று விதுரனுக்கு ஆதரவாய் நின்றாள்.

“சொல்லிருப்பேன். இதோ இவன் நான் பணக்காரின்னு தெரிஞ்சு என்னையும் அவளை மாதிரி தான் பேசிருப்பான். அதை தாங்க முடியாது என்னால…” என்றவளின் கம்பீரம் தேயும் முன்னே தன்னை மீட்டெடுத்து, “உன் அண்ணன் செஞ்ச தப்பால அவள் எவ்ளோ கஷ்டப்பட்டான்னு உனக்கு தெரியுமாடா பெருசா பேசுற?” என்று சண்டைக்கு வந்தாள்.

“என் அண்ணன் தப்பு செஞ்சான்னு உனக்கு தெரியுமா? அவனை மாதிரி ஒருத்தன் இனி பிறந்து கூட வரமுடியாதுடி. உன் அக்காவும் அவளோட ப்ரெண்ட்ஸும் சேர்ந்து அவன் மேல அபாண்டமான பழி எல்லாம் போட்டு… எந்தப் பொண்ணையும் தப்பா ஒரு பார்வை கூட பார்த்தது இல்ல அவன். அப்படிப்பட்டவன் மேல…” எனப் பேச இயலாமல் திணறிட,

“வாயை உடைச்சுடுவேன் விதுரா. யார் யார் மேல பழி போட்டா? சத்யா தப்பு பண்ணிருக்கான்னு தெரிஞ்சும் கூட, அவனை வெளில எடுக்க முழு முயற்சி செஞ்சதே அக்கா தான்.

அவனுக்கு தண்டனை குடுத்துக்கு அப்பறமும் கூட, அவளும் பெரியப்பாவும் அவனை வெளில எடுக்க எவ்ளோ ட்ரை பண்ணாங்கன்னு உனக்கு தெரியுமா? அவன் வாயால உண்மையை ஒத்துக்கிட்டதுனால தான், அவ்ளோ பிரச்சினை. தப்பு பண்ணாதவன் எதுக்கு ஒத்துக்கணும்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியதில்,

“சபாஷ்… அவனை ஒத்துக்க வச்சு மிரட்டுனதே போலீஸ் தான். இல்லன்னா அவன் ஏன் அப்படி சொல்லிருக்க போறான்…” என்று பல்லைக்கடித்தான்.

“சரிடி நீ சொல்ற மாதிரி அவள் அவனுக்காக உருகுனான்னு வச்சுக்கலாம். அவன் ஜெயிலுக்குப் போனதும் அவனை வந்து பாத்துருக்க வேண்டியது தான? அவனுக்காக நின்னுருக்கலாம்ல… ஓடி ஒளிஞ்சுட்டு… நீ என்ன அவளுக்கு வக்காலத்தா? ஓ! அவ தங்கச்சி தான. அவளோட துரோகம் தான உன் உடம்புலயும் ஓடுது”

“தேவையில்லாம பேசாத விது… உன் அண்ணன் தப்பானவன் தான? அவனோட குணம் உனக்கு மட்டும் எப்படி வராம போகும். அதான் அவனை மாதிரி கூடவே இருந்து குழி பறிச்சு இருக்க…” என்று இருவரும் மாறி மாறி குற்றம் சுமத்திக்கொள்ள, அகில் குரலை உயர்த்தினான்.

“ரெண்டு பேரும் நிறுத்த போறீங்களா இல்லையா? என்னடா இது… சும்மா வார்த்தையை விட்டுட்டு இருக்கீங்க. முதல்ல பொறுமையா என்ன ஏதுன்னு பேசுங்க. யார் மேல தப்புன்னு முடிவு பண்ணாலும் அதை அவங்க அவங்க பிரச்சினை. உங்க ரெண்டு பேருக்குள்ள அதை வச்சு பிரச்சினை பண்றதுல எந்த பிரயோஜனமும் இல்ல…”

விதுரா! மொதோ நீ என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லு… ப்ளீஸ்டா” எனக் கேட்க, அவன் இறுகி நின்றான்.

பூமிகா விதுரனின் கைப்பிடித்து, “ப்ளீஸ் விது… அவன் சொல்றதும் நியாயம் தான. நமக்குள்ள எந்த விதாண்டாவாதமும் வேணாமே. நீ உன் மனசுல இருக்கறதை சொல்லு. மிது சைட் இருக்குற நியாயத்தை பத்தி கேட்கலாம்…” என்று கெஞ்சலாய் கேட்க, அவர்களது நிதானம் அவனை நிதானப்படுத்தியதோ என்னவோ கண்ணில் நிறைந்த நீருடன் அனைத்தையும் விவரித்தான். அவனுக்குத்தெரிந்தவரை!

அதில் ஸ்வேதா கொடுத்த புகார் பற்றி எந்த தகவலும் இல்லை. ஏனென்றால் அவனுக்கே அது தெரியாது.

“என் பெரியப்பா இறந்ததுக்கு கொள்ளி வைக்க கூட விடல என் அப்பா. ஒரு கோபத்துல வீம்புல அண்ணாவை வீட்டை விட்டு அனுப்பிட்டு, அவனை அனுப்பிட்டோமேன்னு தினம் தினம் நொந்துட்டு இருக்காரு.

என் அப்பா எடுத்த முடிவுல தலையிட மனசு வராம என் பெரியம்மா, ரூமுக்குள்ளயே அடைஞ்சுருக்காங்க.

இனி யார் நினைச்சாலும் என் அண்ணாவுக்கு இழந்த வாழ்க்கை திரும்ப வருமா? இல்ல… ஊர்ல அத்தனை பேர் முன்னாடியும் தலைகுனிஞ்சு கூனி குறுகி உயிரையே விட்ட என் பெரியப்பா தான் திரும்ப வருவாரா? சொல்லுடா அகி. அவளுக்கு சப்போர்ட் பண்றல்ல… சொல்லுடா… இவளால என் அண்ணன் செத்து பொழைச்சு வந்துருக்கான். எப்படிடா என்னை அமைதியா இருக்க சொல்ற… என்று தளர்ந்து முட்டியிட்டு அமர்ந்து தேம்பி தேம்பி அழுதவனைக் கண்டு அகிலுக்கும் பூமிகாவிற்கும் கண்ணில் நீர் கோர்த்தது.

சற்று தள்ளி நின்றிருந்தாலும் இவர்களது உரையாடல்கள் அனைத்தையும் கேட்ட இதயாம்ரிதாவிற்கு தலையே சுற்றியது.

அவன் மீது யார் பழி போட்டது? நண்பர்கள் என்று நம்ப இயலவில்லை. ஏதோ சதி நடந்திருக்கிறது. அதற்காக அவன் தன்னை தவறாய் எண்ணி இருக்கிறான் என்ற உண்மை புரிய, இதனை சரிசெய்ய வேண்டுமென துடித்தது மனது.

ஆனால் பலவித குழப்பங்கள் அவளுள். தன்னிடம் விசாரிக்காமல் அவனாக முடிவு செய்து கொள்வதா? என்ற கோபம் எழுந்தது. தற்போது தனது வருங்காலத்தை சூன்யமாக்கி விட்டானே! அவனுக்காக அவனைத் தேடி தேடி சிறைச்சாலைக்கு வந்த போதெல்லாம் தன்னைத் தவிர்த்து விட்டு, இப்போது முதுகில் குத்தியது மனதை உளி கொண்டு அடித்தது போல வலித்தது.

இதை விட பெரிய துரோகத்தை நண்பர்கள் செய்திருப்பது இன்னும் அவளுக்கு உறைக்கவில்லை.

அகில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விதுரனையே வெறித்துக்கொண்டிருந்த மிதுனாவைப் பார்த்து, “இதுல ஏதோ குளறுபடி நடந்துருக்கு மிது” என்றிட, அவளும் குழம்பினாள்.

“நீ கொஞ்சம் அவனுக்கு புரிய வை!” என்ற நேரம் அவனுக்கு பத்மப்ரியா அழைத்தாள்.

அவள் உடனே அலைபேசியை இதயாவிடம் கொடுக்க சொல்ல, அவனும் வேகமாக இதயாம்ரிதாவின் அருகில் சென்றான்.

“மேம்…” எங்கோ வெறித்தபடி நின்றவளை அழைத்தான்.

இரு முறை அழைத்தும் அவள் திரும்பவில்லை என்றதும் “அக்கா” என அழைக்க, அதில் நிகழ்வுணர்ந்து “ம்ம்” என்றவள், “பத்மா அக்கா லைன்ல இருக்காங்க” என்று நீட்டினான்.

அலைபேசியை வாங்கி பேசிய இதயாவிடம் படபடவென பேசினாள் பத்மா.

“உன் போனை எங்கடி போட்டுத் தொலைஞ்ச? இன்னும் ஒரு மணி நேரத்துல உனக்கு பிளைட் சீக்கிரம் வா அம்ரி. இங்க என்னன்னவோ நடக்குது” என்றவள் கேவியபடி

“யா… யாமினி அஞ்சாவது மாடில இருந்து விழுந்து சூசைட் பண்ணிக்கிட்டா… விஷால் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான்.

ஷ்யாம ஒரு பொண்ணு வீடியோ வச்சு எவனோ பிளாக்மெயில் பண்ணிட்டான்னு அவன் ஒரு பக்கம் சூசைட் பண்ணிருந்தான்ல… இப்போ அவன் அந்த பொண்ணோட இருக்குற வீடியோ வெளில லீக் ஆகிடுச்சு. நிலோவும் யாமினியும் தப்பா இருக்குற மாதிரி பார்ன் வீடியோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. அதுல வெக்ஸ் ஆகி தான் ரெண்டுபேரும் சூசைட் பண்ணிருக்காங்க.

இந்த நிலோ எருமை இதை முன்னாடியே சொல்லிருந்தா அலெர்ட் ஆகியிருக்கலாம். யாமினி சூசைட் பண்ணப்பறம் தான் சொல்றா… நீ தண்ணி அடிக்கிற வீடியோ வேற வைரல் ஆகிட்டு வருது… ரொம்ப பயமா இருக்கு அம்ரி” என்று நடுங்கினாள்.

அடி மேல் அடி விழுந்ததில் தலை சுற்றிப்போன இதயாம்ரிதா, “அகில் உன் போனை நான் எடுத்துட்டுப்போறேன். நீங்க அடுத்த பிளைட்ல வாங்க…” என்று விறுவிறுவென கிளம்பினாள்.

யாமினி தற்கொலைக்கு முயன்ற விஷயம் முந்தைய நாள் இரவே பத்மபிரியாவிற்கு தெரிந்தது.

இதயாம்ரிதா அழைப்பை ஏற்கவில்லை என்றதும், அவளுக்கு மிகவும் முக்கியமான கண்காட்சியை கெடுத்து விட வேண்டாமென்று அவளே அன்றிரவு சென்னைக்கு கிளம்பியிருந்தாள்.

விமான நிலையத்திலேயே அலைபேசிக்கு சார்ஜ் போட்டு உயிர் கொடுத்திருந்தாள் இதயா.

பல மணி நேரமாக அழுத்தமும் தன்னவனின் துரோகம் கொடுத்த உயிர்வலியிலும் பயணம் மேற்கொண்டவளுக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்ததும் துணை ஆய்வாளர் அழைத்தார்.

“இந்த வீடியோ பிரச்சினை ரொம்ப சென்சிட்டிவா போயிட்டு இருக்கு மேம். மத்தவங்களோட வீடியோ லீக் பண்ணது யாருன்னு தெரியல. ஆனா நீங்க ட்ரிங்க் பண்ணுன வீடியோவை லீக் பண்ணுனவனோட ஐபி அட்ரஸ் உங்க வீட்டு அட்ரஸ்ல தான் காட்டுது. அதே ஐபி அட்ரஸ் தான் மத்தவங்க வீடியோவுக்கு சிங்க் ஆகுது. பட் ட்ரேஸ் பண்ண முடியல மேம்…” என்றதுமே இவையனைத்திருக்கும் அவன் ஒருவனே காரணம் என்று புரிந்து கொண்டாள்.

உடனே சத்யாவிற்கு அழைக்க அவனுக்கு ரிங் போனது.

“எங்க இருக்க?” இதயாம்ரிதா இறுகளுடன் கேட்க,

“நம்ம வீட்ல தான் பேபி பாஸ்!” என்றான் படுநக்கலாக.

துரிதமாய் வீட்டை அடைந்தவள், சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டிருந்த ஆடவனைக் கண்டதும் சுறுசுறுவென ஆத்திரம் பெருக, அவனைப் பளாரென அறைந்தாள்.

“ஏன்டா இப்படி பண்ண?” அந்த ஒற்றை வார்த்தை அவளது ஒட்டு மொத்த ஏக்கத்தின் வெளிப்பாடு என்று புரியாதவனாய் அவளது கழுத்தை நெறித்தான்.

அவன் விழிகளில் வஞ்சம் கொட்டிக்கிடந்தது.

“அதையே தான்டி நானும் கேக்குறேன். நீங்க எல்லாருமா சேர்ந்து ஏன்டி எனக்கு இப்படி செஞ்சீங்க?” அவனது விழிகளின் சிவப்பிலும் கர்ஜனையிலும் ஒரு கணம் உறைந்து போனவள்,

“நீ தப்பா புருஞ்சுட்டு இருக்க சத்யா. நாங்க ஏன் உன்னை டிராப் பண்ணனும்?” எனும்போதே அவனது கையை எடுக்க முயன்றாள்.

முடியவில்லை. முந்தைய நாளிரவு தன் மேனியின் மீது இலகுவாய் படிந்த கரங்கள் இப்போது இடியாய் அழுத்தியது.

“என் மேல அபியூஸ் கேஸ் கொடுத்ததும் இல்லாம, என் அத்தை பொண்ணை கூட எனக்கு எதிரா திருப்பி விட்டுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியா? என்னோட ஃபேக் வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணீங்கள்ல… இப்ப உங்களோட ஃபேக் வீடியோஸ் பார்த்து உலகமே என்ஜாய் பண்ணட்டும். நமக்குள்ள நடந்ததை வீடியோ எடுத்து வச்சுருக்கேன். நாளைக்கு பிரெஷா ரிலீஸ் பண்றேன்…” எனக் கண்ணடித்து குதர்க்கமாய் கூறியவனை விழி தெறிக்க முறைத்தாள்.

“ரிலீஸ் பண்ணிக்கோ. ஐ டோன்ட் கேர். இனிமே நான் இழக்க என்ன இருக்கு? உன்னையவே இழந்துட்டேன். கேவலம் இந்த மானம் மரியாதையை இழக்கிறதா எனக்கு பெருசு” சொல்லும்போதே அவள் குரல் உடைந்தது.

“இந்த மாதிரி டையலாக்ஸ் எல்லாம் இன்னும் யூஸ் பண்ணிட்டு இருக்கியா… ஹ்ம்ம்?” அவன் யோசனையாய் உறுமிட, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

“நீ என்னை கொலை கூட பண்ணிக்கோ. ஆனா நான் உன் மேல பழி போட்டேன்னு சொல்லாத சத்யா. இட் ஹர்ட்ஸ் மீ அ லாட்!” என்றவள் கண்கள் கலங்கி நிற்க,

“ஓ! வலிக்குதா… அச்சோ! உனக்கு காதல் வலி இருக்குமா… அதெப்படி அந்த காதல் வலியோட என்னை அழகா ஜெயிலுக்கு அனுப்பிட்டு என்னைப் பார்க்க முயற்சி கூட பண்ணாம, இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு அழகா போஸ் குடுத்தியே…” எனும்போதே அவனது விரல் வைத்து அவள் கன்னத்தை அழுந்தக்கீறினான்.

“வலிச்சா… இப்படியெல்லாம் இருப்பாங்கன்னு எனக்கு தெரியாதே இதயா!” என்றதில், பல்லைக்கடித்துக்கொண்டு வலியை பொறுத்தவள்,

“நான் பார்க்க வரலைன்னு உனக்கு தெரியுமா. உன்னைப் பார்க்க வந்தும், என்னைப் பார்க்க பிடிக்கலைன்னு அனுப்பி விட்டுட்டு ஜெயில்லயும் உன் கீழ்த்தரப்புத்தியால அங்க இருக்குற லேடீஸ வீடியோ எடுத்து நீ மாட்டல. அப்படியும் உன்னை நம்பி தொலைச்சேன்ல… என்னை சொல்லணும். அங்க சுத்தி இங்க சுத்தி உன் வேலையை எங்கிட்டயே காட்டிட்டீல… விஷால் அப்பவே சொன்னான் உன்னை மறந்துட்டு வேலையைப் பாருன்னு… உன்னால என் அப்பாவை கூட இழந்தேன்டா” என்றவளின் கன்னத்தில் கைரேகை பதிய அறைந்தான்.

அவளது வார்த்தைகள் அவனை மிருகமாக்கியது. அதிலும் விஷாலை பற்றி பேசியதில் வெறியானான்.

“என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசுற? அந்த விஷால் ரொம்ப புனிதமானவனா ஆகிட்டானோ உனக்கு…”

“வேணாம் சத்யா… இதோட நிறுத்திடு”

“ஏய் இதான்டி ஆரம்பம். என்னை வேணும்னே கார்னர் செஞ்சு சூசைட் பண்ற அளவு யோசிக்க வைச்ச உங்களை சும்மா விடவா இவளோ பண்ணியிருக்கேன். இதெல்லாம் உங்களுக்கு ஒரு விசயமே இல்லன்னு தெரியும்டி. இன்னும் பலமா அடிச்சு உங்களை எல்லாம் ரோட்டுல பிச்சை எடுக்க வச்சாலும் எனக்கு கோபம் குறையாது” என்று சீறினான்.

அந்நேரம் பத்மா அவளுக்கு அழைத்து, “அம்ரி நீ சொன்ன மாதிரி விஷால பெயில்ல எடுத்தாச்சு. பட் நீ வரலைன்னு அவன் செம்ம கோபத்துல இருக்கான்.

யாமினி ரொம்ப சீரியஸ். இப்ப எல்லாருமே ஹாஸ்பிடல்ல இருக்கோம். சத்யா சார் தான் இது எல்லாத்துக்கும் காரணம்னு மூணு பேரும் கொலைவெறில இருக்காங்க. எனக்கு ஒரு எழவும் புரியல சீக்கிரம் வாடி” என்று விட்டு அழைப்பைத் துண்டிக்க, சத்யாவின் விழிகள் ஆதங்கத்தில் அத்தனை சினத்தையும் மீறி கலங்கியது.

“பைனலி… எனக்கு ஒரு நாள் நல்லா செய்வேன் செய்வேன்னு சொல்லிட்டு… நல்லா செஞ்சுட்டல்ல… ஓ உனக்கு உன் பிரெண்ட்ஸ் தான முதல்ல… அந்த பரதேசிங்களுக்காக என்னையவே எதிர்த்த உன்கிட்ட போய் நான் காதல் வலியை எதிர்பார்க்கிறது எல்லாம் சுத்த வேஸ்ட்! அதெப்படிடி… அவனுக்குலாம் மட்டும் உடனே உன்னால பெயில் எடுக்க முடியுது. எனக்காக ஒரே ஒரு தடவ உன்னால வர முடியலையா?” அத்தனை நேரமும் ஆத்திரத்தில் சீறியவனின் வதனம் முழுதும் மண்டிக்கிடந்தது ஏக்கமும் வேதனையும்.

“அதுசரி… என் மேல கம்பளைண்ட் குடுத்த முதல் ஆளே நீ தான? நீ எப்படி என்னை வெளில எடுப்ப” சொல்லும்போதே அவனது கண்ணில் இருந்து ஒரு துளி நீர் பிரிந்த நேரம், அவனது வலியின் தாக்கத்தில் அவள் கண்ணிலிருந்தும் பிரிந்து துடித்தது கண்ணீர்.

“நான் உன்மேல கேஸ் கொடுக்கல சத்யா… நா… கொடுக்கல…” என்றிட அவனுக்குள்ளும் அது பொய்யாய் இருக்க வேண்டுமென்ற ஆசை தானே அளவில்லாது ஓடியது.

ஆனால் விரக்தி நகை அவனிடம்.

“உன்னை வெளில எடுக்க ரொம்ப முயற்சி பண்ணேன். என் பிரெண்ட்ஸ்ட்ட கூட கேட்டு பாரு… சத்தியமா… என் அப்பா மேல சத்தியமா…” கீழுதட்டைக் கடித்து தன்முன் சிதைந்து நின்றவளை ஒருமுறை யோசனையாக ஊடுருவினான்.

“உன் பிரண்ட்ஸ்கிட்டயே கேட்கலாமா?” அவன் ஒரு மாதிரியாகக் கேட்க அதே விரக்தி நகை அவளிடமிருந்து வந்தது.

“சோ என் வார்த்தைல நம்பிக்கை இல்ல? ஓகே கேக்கலாம்…” என அவள் நகரப்போக,

அவளைப் பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு ஒட்ட வைத்தவன், “உன் நம்பிக்கை பொய்யானது நிரூபிக்கணும்ல…” என்று அர்த்தத்துடன் கூறி விட்டு காரில் ஏறி அமர்ந்தவனுக்கு எதுவோ சரியாக படவில்லை. எதிலோ சறுக்கிய உணர்வு.

இருவரின் முகமும் பாறையாய் இறுகி இருக்க, அவர்களது கார் நேராக மருத்துவமனையை அடைந்தது.

புதுக்காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 113

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
121
+1
3
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. Ella problems ku Karanam antha vishal thana.. itha epa tha amri and sathya purinjika porangalo…

  2. Ipadi thorgam panitangalaey yelarum senthu
    Idhaya ah yepudi thanguva ah