Loading

அத்தியாயம் -9

சத்தி திரும்பி பார்க்க அங்கு கோட் சூட் உடன் ஒரு கும்பலே நின்று இருந்தது.

விக்ரம், நிலா கையை பிடித்து அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே சென்றான்.

ஜெயலட்சுமி, “விக்ரமை பார்த்து நீ… என்று ஒற்றை விரலை நீட்டி நீ யாரு? “என்றாள்.

விக்ரம் வெளியே செல்ல காலை எடுத்தவன் அப்படியே நின்று ஜெயலட்சுமி பக்கம் திரும்பினான், “ நான் நீங்க நினைக்கிற விக்ரம் கிடையாது. நான் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் பண்ற விக்ரம் தேவ்“ என்றான் கம்பீரமாக.

ஜெயலட்சுமி, அதிர்ச்சியாக “மிஸ்டர் தேவ்…” என்றாள். விக்ரம், ஆட்களில் ஒருவன் “மல்ட்டி மில்லியன் ராஜேந்திரன் தேவ் ஓட முதல் பையன் விக்ரம் தேவ்”  என்றான்.

நிலா, ஒன்றும் புரியாமல் பயந்து விழித்தபடி நின்று இருந்தாள். நிலாவுக்கு விக்ரம் யாரென்றே தெரியவில்லை. இதில் அவன் தந்தை ராஜேந்திரன் யார் என்று எவ்வாறு தெரியும் .

விக்ரம், நிலா கையை பிடித்து அழைத்துக் கொண்டு கம்பீரமாக காரில் ஏறி சென்று விட்டான்.

நிலா செல்லும்பொழுது வாசலில் நின்றிருந்த தன் தோழி சுஜிதாவை பார்த்து கொண்டு எதுவும் பேச முடியாமல் கண்கள் கலங்க மௌனமாக விக்ரம் பின்னாலே சென்றாள்.

சுஜிதா, “ஜாடையாக நான் போன் பண்றேன் பயப்படாதே” என்று ஆறுதல் கூறினாள்.

ஆனால், நிலா இருக்கும் மனநிலைக்கு அந்த ஆறுதல் போதவில்லை. எங்கு செல்கிறோம்? ஏன் செல்கிறோம்? இவன் யார்? எதற்காக நம்மை கல்யாணம் செய்தான்?

என்று ஒன்றும் புரியாமல் பயந்த சுபாவத்தோடு இருக்கும் நிலா இனி இவன் நம்மை என்ன செய்வானோ.

இவன் நம்மை ஏதேனும் செய்து விட்டால் கூட கேட்க ஆல் இல்லை என்று உச்சகட்ட பதட்டத்தில் கண்ணீரோடு சென்றாள்.

சக்தி, கோபமாக சுஜிதாவிற்கு எதிரே வந்து நின்றான். சுஜிதா, இவனை சிறிது அச்சத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.

சக்தி, கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது. எப்போதும் தைரியமாக பேசும் சுஜிதா க்கு தற்போது பயம் தொற்றிக் கொண்டது.

சக்தி, “ஏய் திமிர் பிடித்தவளே உன்னால் தான் டி இன்னைக்கு என் நிலா என்னை விட்டு போயிட்டா. இனி அவ எனக்கு கிடைக்கவே மாட்டா”.

“ஆனால், அவ எனக்கு கிடைக்காமல் போனதுக்கு காரணமாக இருந்த உன்னை நான் நிம்மதியாக இருக்கவே விட மாட்டேன் டி” என்றான் கோபமாக.

சுஜிதா, “நான் ஒன்றும் பண்ண வில்லையே“ என்றால் மெதுவான குரலில்.

சக்தி, “நீ தான் ஆரம்பத்தில் இருந்து நிலா எனக்கு கிடைக்க மாட்டான்னு அபசகுனமா சொல்லிக்கிட்டே இருந்த. இப்போ நீ சொன்ன மாதிரியே தான் நடந்திருக்கு”.

“அப்போ எல்லாத்துக்கும் காரணம் நீ தானே. அன்னைக்கு நலுங்கு வைக்கும் போது கூட இந்த விக்ரம் அருகில் சென்று நிலாவுக்கு புருஷன் நீங்கதான் அப்படின்னு நீ சொன்ன”.

“அது நான் காதில் வாங்கினேன். அப்படின்னா உனக்கு இவன் யார் என்று முன்னாடியே தெரியுமா?” என்றான் சந்தேகமாக பார்த்து.

சுஜிதா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைப்போடு தெரியும் என்று தலையை அசைத்தால். சக்தி வேறு எதுவும் கேட்க வில்லை அவளிடம்.

ஊர் காரர்கள் அனைவரும் சலசலத்து கொண்டு இருந்தார்கள். பளீர் என்று ஒரு சத்தம் கேட்டது அனைவரும் திரும்பி சுஜிதாவை பார்த்தார்கள். சுஜிதா கன்னத்தில் கை வைத்த படி நின்று இருந்தாள்.

சக்தி, சஜிதா கையைப் பிடித்து நேராக மனமேடைக்கு அழைத்துச் சென்று அவளை தள்ளிவிட்டான். அதில் சுஜிதா தொப் என்று மன மேடையில் அமர்ந்தால்.

பக்கத்தில் அமர்ந்த சக்தி கையில் இருந்த தாலியை அவளிடம் காமித்து, “இது உன் தோழி நிலா கழுத்தில் கட்டலாம் என்று வாங்கினது”.

“ஆனால், அவளை வேறு ஒருத்தன் கட்டிக்கிட்டு போறதுக்கு நீ காரணமா இருந்திருக்க உன்னை எப்படி பழி வாங்குகிறேன் என்று பார்” என்று அந்த தாலியை சுஜிதாவின் கழுத்தில் கட்டி விட்டான்.

ஊர் காரர்கள் அனைவரும் அந்த சம்பவத்தை பார்த்து வாயில் கை வைத்து என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, “ஜெயலட்சுமி அம்மா நீங்க என்ன பாத்துட்டு சும்மா இருக்கீங்க. உங்க தம்பி பன்றது ரொம்ப பெரிய தப்பு” என்று சண்டைக்கு கிளம்பி விட்டார்கள்

ஜெயலட்சுமி ஏற்கனவே நிலா கதையில் என்ன செய்வது என்று தெரியாமல் கையில் இருக்கும் பத்திரத்தை பார்த்து விழித்துக் கொண்டு இருந்தால்.

அது போதாது என்று சக்தி செய்த இந்த காரியத்தில் அங்கேயே சேரில் அமர்ந்து விட்டால்.

ஊர் காரர்கள் அனைவரும், “உங்க தம்பி பண்ணது மிகப்பெரிய தப்பு, மிக பெரிய பாவம் ஒரு பொண்ணோட விருப்பமில்லாம இப்படி கல்யாணம் பண்றது ரொம்ப பெரிய தவறு” என்று சண்டைக்கு கிளம்பினார்கள்.

சுஜிதா, “இது எங்க குடும்ப பிரச்சனை நாங்க பார்த்துக்கிறோம்” என்றாள். அனைவரும் வாயை மூடி கொண்டார்கள்.

சக்தி, சுஜிதாவை அங்கேயே விட்டுவிட்டு அவள் முகத்தைக் கூட பார்க்க விருப்பம் இல்லாமல் அவன் மட்டும் வீட்டிற்கு செல்ல முன்வந்தான்.

ஜெயலட்சுமி ஊர் காரர்கள் முன்பு நல்லவளாக காட்சியளிக்க வேண்டும் என்று சக்தியை பார்த்து “அவளை உன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டீர்க்கு போ” என்றாள்.

சக்தி, “என்னால் முடியாது அக்கா. இவ பண்ண தப்புக்காண தண்டனை தான் இது“ என்றான். ஜெயலட்சுமி, “அக்கா சொல்றேன்ல அவளை கூட்டிட்டு வீட்டுக்கு போ எதுவாக இருந்தாலும் வீட்டில் பேசிக்கலாம்” என்றாள்.

மறு வார்த்தை இன்றி சக்தி அவள் கையைப் பிடித்து விறு விறு என முன்னே நடந்தான். அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடையும், ஓட்டமும் ஆக சுஜிதா அவனை வெரித்த படி பார்த்துக் கொண்டே அவன் பின்னாடியே சென்றாள்.

சுஜிதா மற்றும் நிலா இருவரும் எந்த அளவுக்கு நெருக்கமாக, ஒன்றாக இருந்தார்களோ அதற்கு நேர் மாறாக இருவர் வாழ்க்கையும் அமைந்தது.

கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாகி போனது. இனி தன் வாழ்வில் என்ன நடக்கும் என்று இருவருக்கும் தெரியாமலே தன் வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.

விக்ரம் வீட்டை சென்று அடைந்தான். காரில் இருந்து இறங்கி வந்த விக்ரம் நிலா அமர்ந்திருக்கும் பக்கம் வந்து கதவை திறந்து விட்டான். விக்ரம், “நிலா பார்த்து கீழே இறங்கு” என்றான்.

நிலா பயந்த படி மெதுவாக இறங்கினாள். நிமிர்ந்து வீட்டை பார்த்த நிலா கண்ணை அகல விரித்தாள். கடல் அளவுக்கு இருந்தது அந்த வீடு.

நடந்து உள்ளே செல்ல தனி பாதையே இருந்தது. இரு பக்கமும் சிறு பூக்களோடு கார்டன் இருந்தது. வெளியில் இருந்து பார்த்த நிலா இந்த வீட்டில் இனி நாம் இருக்கப் போகிறோமா என்று ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.

கார் ஹாரன் சவுண்டில் வெளியே வந்த ராஜேந்திரன் தேவ், “டேய் என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்க” என்று விட்டு பக்கத்தில் இருந்த ஆட்களைப் பார்த்தான்.

மேலும் பேச்சை தொடர்ந்தவன், “உங்ககிட்ட நான் என்ன சொன்னேன் இந்த கல்யாணத்தை நிறுத்தி அவனை அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னா இப்படி கல்யாணம் பண்ணி பொண்ணு மாப்பிள்ளையாக கூட்டிட்டு வந்து இருக்கீங்க இப்போ இவனோட அம்மா வந்தா நான் என்ன சொல்லுவேன்”.

“நல்லவேளை இந்த நேரம் பார்த்து அவ ஏதோ திருமணத்திற்காக வெளியே சென்று இருக்கிறால்” என்றான் படபடவென.

விக்ரம், “அதற்கு நான் என்ன பண்ண முடியும் கல்யாணம் ஆயிடுச்சு அவ்வளவுதான். சீக்கிரம் யாரையாவது கூப்பிட்டு ஆரத்தி எடுக்க சொல்லுங்க. உள்ளே போகனும். எனக்கு ஆபீஸ் வேலை நிறைய இருக்கு” என்றான்.

ராஜேந்திரன் வேலை ஆட்களை அழைத்து ஆரத்தி எடுக்குமாறு கூறினார். அங்கு வேலை செய்யும் சித்ரா ஆரத்தி எடுத்துவிட்டு, “உள்ளே செல்லுங்க ஐயா” என்றாள்.

விக்ரம், நிலா கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு உள்ளே அடி எடுத்து வைக்க சென்றான்.

நில்லுங்க என்ற சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கு அவன் சித்தி ராதிகா நின்றிருந்தால்.

ராதிகா, “யாரை கேட்டு நீ இவளை கல்யாணம் செய்து கூட்டிட்டு வந்த. இந்த வீட்டுக்கு பெரிய பையன் இப்படி ஒன்னும் இல்லாதவளை கட்டிக்கிட்டு வந்து இருக்க”.

“நம்ம குடும்பத்தையே அவமானப் படுத்துறியா. நம்ம குடும்பத்துக்கு இருக்கிற அந்தஸ்துக்கு எவ்வளவு பணக்கார பொண்ணுங்க லைன்ல வந்து நிக்கிறாங்க. உங்க அம்மாவோட கனவு உன்னோட கல்யாணம்”.

“நீ இப்படி பண்ணுவேன்னு உங்க அம்மா கனவில் கூட நினைச்சு பார்த்திருக்க மாட்டாள். அவளை அங்கேயே விட்டுட்டு நீ மட்டும் உள்ளே போ” என்றார்.

விக்ரம், “ஷி இஸ் மை வைஃப்” என்று அவள் தோள்பட்டையில் கை போட்டு இருக்கி அனைத்து நின்றான்.

விக்ரம், “உள்ளே வந்தால் இருவரும் தான் வருவோம். முதலில் இவளை உள்ளே வரக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?“ என்றான்.

நீங்கள் யார்? என்ற அந்த ஒற்றை வார்த்தையில் ராதிகா ஸ்தம்பித்து போய்விட்டாள். ராதிகா, நிலாவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவர் பார்வையாலே தன்னை எரித்து விடுவார்களோ? என்று நிலா மனதுக்குள் நினைத்தாள்.

விக்ரம் நேராக நிலாவை அழைத்துக் கொண்டு அவன் அறையை நோக்கி சென்றான். நிலா அவன் பின்னாடியே சென்றாள்.

விக்ரம், “நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்று விட்டு விக்ரம் அமைதியாக அங்கு கட்டிலில் படுத்து விட்டான். வெகு நாட்களுக்கு பிறகு விக்ரம் தன்னுடைய அறையில் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.

நிலாவை திருமணம் செய்வதற்காக ஒன்றும் இல்லாதவன் போல் நடித்து தரையில் படுத்து தூங்கி இவ்வளவு நாளாக கஷ்டப்பட்டவனுக்கு இப்பொழுது தூக்கம் மிகவும் அவசியமாகவும், நிம்மதியாகவும் இருந்தது.

நிலா மாற்றுவதற்கு துணி இல்லாமல் பாத்ரூம் சென்று முகத்தை மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வெளியே வந்தாள். அதற்குள் விக்ரம் தூங்கிவிட்டான்.

வெளிய வந்த நிலா கண்ணாடியை பார்த்து அழுது கொண்டிருந்தாள். இவ்வளவு வசதியாக இருக்கிறான் இவன் ஒற்றை அறையே நம் வீட்டில் பாதி அளவுக்கு இருக்கிறது.

இவன் நமக்காக எதற்கு அங்கு வந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று முனங்கி அழுதால். முதலில் இவன் விழித்தவுடன் எதற்காக நம்மை திருமணம் செய்தான் என்று கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தால்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கேளு நிலா நாங்களும் தெரிஞ்சுக்கணும் … ஆமா துருவ் எங்க … இவன் விக்ரம் தேவ் வாம்… சகி அத்தியாயம் 8 எங்க ?? கல்யாணம் நடந்ததை காணோம் … நான் நினைச்சேன் சக்தி சுஜியை கல்யாணம் பண்ணுவான்னு … அவனுக்கு இந்த வாயாடி தான் கரெக்ட் …