Loading

விடியும் முன்….!

 

அத்தியாயம் 03

 

நேரம் முற்பகல் ஏழு மணி முப்பது நிமிடம்.

 

ஆட்கள் ஒவ்வொருவராய் ஏற வெளியே நின்று கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி அவன் நின்றிருக்க அவனுக்கு பயந்தே சத்தம் போடாமல் ஏறிக் கொண்டிருந்தது,

அந்தக் கூட்டம்.

 

ஏழரை மணிக்கு கிளம்புவதாக நேற்றே அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி இருக்க இப்போது தாமதமாகிக் கொண்டிருப்பதற்கே அவனுக்குள் கோபம் பற்றியெறிந்து கொண்டிருந்தது,

உண்மை.

 

இருந்த அனைவரும் மீதும் அவனுக்கு கோபம் தான்.எல்லோராலும் தானே இத்தனை தாமதம்.

 

முகம் இறுகிக் கிடக்க கோபத்தில் பற்களை நறநறத்த படி நின்றிருந்தான்,

அவன்.

 

அவன் சத்யா.

*சத்யரூபன்…!*

 

சத்யாவின் மனநிலைக்கு நேர் மாறான மனநிலையுடன் தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டு சுற்றத்தா பார்வையால் அலசிய படி நின்றிருந்தான்,

கிருஷ்ணா.

சத்யாவின் நெருங்கிய நண்பன்.

 

அனைவரும் பேரூந்தில் ஏறி அமர நேரத்தை பார்த்த படி தானும் ஏறி முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டவனுக்கு அப்படி ஒரு கோபம்.

 

எதையும் நேரத்துக்கு செய்தே பழக்கப்பட்டவனுக்கு நேரம் தவறினால் எழும் கோபத்திற்கு அளவே இல்லை.

சிறு வயது முதல் அந்த்ப் பழக்கம் இருந்தது.

 

சத்யாவை விட அவனருகே அமர்ந்திருந்த கிருஷ்ணாவுக்கு தான் உள்ளுக்குள் அத்தனை கலவரம்.

 

கோபத்தின் உச்சியில் பெண் என்றும் பாராது தோழன் கையை நீட்டி விடுவானோ என்று பயமாக இருந்தது ஒரு புறம்.

 

“மத்தவங்க எல்லாம் வந்தாச்சு..இவ மட்டும் என்ன பண்றாளோ தெரியல..இடியட்ட்ட்ட்..ஒரு காமன் சென்ஸ் இருக்க வேணா..” இதழ்களுக்குள் அவன் திட்டுவது நன்றாக புரிந்தது, கிருஷ்ணாவுக்கு.

 

“ஐயையோஓஓஓஓ..இந்த தர்ஷினி இவன் கிட்ட திட்டு வாங்காம இருக்க மாட்டா போல இருக்கே..பைத்தியம் இன்னும் வராம என்ன பண்றாளோ தெரியல..” அவனும் மானசீகமாய் அவளுக்கு திட்டிக் கொண்டிருக்க பின் இருக்கையில் இருந்து நீண்ட கரமொன்று இடைவெளியின் ஊடு வந்து கிருஷ்ணாவின் முதுகை சுரண்டியது.

 

“சொறியாதடா பக்கி..சொறிடோக் மாதிரி எப்பவும் சொறிஞ்சிகிட்டே இருக்க..விஷயத்த சொல்லு..”

 

“…………”

 

“டேய் பக்கி..பாலா பேயே விஷயத்த சொல்லு..”

 

“நீ திரும்பு நா சொல்றேன்…”

 

“காது ரெண்டும் நல்லா கேக்கும்..நீ என்ன விஷயம்னு சொல்லு..”

 

“டேய் தர்ஷினி வர இன்னும் பத்து நிமிஷம் ஆகுமாம்..அது வர சத்யாவ சமாளிக்க சொல்லி மெஸேஜ் போட்டு இருக்கா..”என்று கிசுகிசுப்பாக அவன் கூறியது, சத்யாவின் கூர் செவிகளை தெள்ளத் தெளிவாகவே வந்தடைந்தது.

 

“இடியட்ட்ட்ட்..” அவன் பல்லைக் கடிக்க கிருஷ்ணாவுக்கு விழி பிதுங்கிய நிலை.

 

“பைத்திய பாலாவே..இத மெதுவாவே சொல்லி இருக்கலாம்ல..”

 

“நீ தான்டா எரும பின்னாடி திரும்பல..பைத்தியம்..சும்மா சும்மா திட்டாத மென்டல்..”

 

“நா எங்கடா பைத்தியம்..நீ தான்டா பைத்தியம்..அர லூஸு..”

 

“ரெண்டு பேரும் வாய மூட்றீங்களா..?” சத்யாவின் அதட்டலில் நல்ல பிள்ளைகளாய் வாய் மூடிக் கொண்டிருந்தனர், இருவரும்.

 

பத்து நிமிடம் கடந்தது.

ஓடி வந்த களைப்புடன் துப்பட்டாவால் முகத்தை துடைத்த படி பேரூந்தில் ஏறியவளின் கரங்கள் துப்பட்டாவைக் கொண்டு முகத்தில் இருந்த வியர்வையை ஒற்றி எடுத்தது.

 

சத்யாவின் அனல் தெறிக்கும் பார்வை அவளை கலங்கடித்தாலும் கண்டும் காணாதது போல் தலையை குனிந்து கொண்டே சென்று கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்,அமைதியாக.

 

அனைவரும் பார்த்த பார்வை கொஞ்சம் குற்றவுணர்ச்சியை தந்தாலும் பெரிதாய் தன் முகத்தில் எந்த வித உணர்வையும் படர விட்டிடவில்லை,அவள்.

 

கொந்தளிக்கும் தன் கோபத்துடன் பெருமூச்சொன்றை இழுத்து விட்டவாறு எழுந்து நின்றான்,

சத்யா.

 

“ஓகே காய்ஸ்..இப்ப நாம போகப் போற எடம் ரணதீரபுரம்..ஒரு வில்லேஜ்..இங்க மாதிரி. எல்லா பெஸிலிடீஸ் உம் அங்க இருக்காது..நாம தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டி இருக்கும்..அது மட்டுல்ல..ப்ரித்வி சார்கு ஒரு முக்கியமான வேல..அதனால பாதில நம்ம கூட ஜாய்ன் பண்ணிப்பாரு..இல்லன்னா அங்க வச்சி மீட் பண்றேன்னு சொன்னாரு..நமக்கு கெடச்சி இருக்குறது டூ டேஸ் தான்..எல்லாருக்கும் தான் சொல்றேன்..பீ பங்சுவல்..உங்களுக்கு மட்டுல்ல..எல்லார்கும் தான் டிலே ஆகும்..” அழுத்தம் திருத்தமாய் பிசிரின்றி கூறி முடித்தவனின் பார்வை ஒரு கணம் தர்ஷினியை கோபமாய்த் தொட்டுத் திரும்பியது.

 

அவன் பார்வை தன் மேல் படிந்தது புரிந்தாலும் தலையை நிமிர்த்தி பார்த்திடவில்லை,அவள்.ஆனால்,மொத்தக் கவனமும் அவன் பேச்சில் மட்டுமே நிலைத்திருந்தது.

 

“ஓகே காய்ஸ்..ஏதாச்சும் கேக்கணும்னு தோணுச்சுன்னா கேளுங்க..”

 

“……………”

 

“யாருக்கும் எதுவும் இல்லயா கேக்கறதுக்கு..இந்த ட்ரிப்ப பத்தி டவுட்ஸ் ஏதாச்சும் இருந்தா கேளுங்க..”

 

“லீடர்ர்ர்ர்..”

 

“யெஸ் சொல்லுங்க தர்ஷினி..”

 

“நாம அங்க இருக்குற மூட நம்பிக்கய பத்தி மட்டுமா ரிஸர்ச் பண்ணப் போறோம்..”

 

“யெஸ் அப்கோர்ஸ்..நாம என்ன விண்வெளிக்கா போகப் போறோம்..ஜஸ்ட் ஒரு வில்லேஜ்கு..ஓஹ்ஹ்ஹ்ஹ்..கிராமம் அப்டிங்குறதால நேச்சர பத்தி ஏதாச்சும் ரிஸர்ச் பண்ணப் போறீங்களா என்ன..?” அமைதியாய்ச் சோன்னாலும் அந்த வார்த்தைகளில் கேலியும் ஒளிந்து இருந்தது.

 

அவளுக்கு அவன் கேள்வியில் சங்கடமாய் இருந்தாலும் தன் மீது தவறிருந்த காரணத்தால் பதில் பேசாமல் நின்றிருந்தாள்.

 

“தர்ஷினி..நீங்க ஏதாச்சும் கேக்கணுமா..இல்லன்னா பஸ்ஸ கெளப்பலாமா..?”

 

“ஹா..ஹான் லீடர்..அங்க ரணதீர வம்சம்னு ஒரு வம்சம் இருக்கு..அதப் பத்தி ஆராய்ச்சி பண்ண எனக்கு பர்மிஷன் வேணும்..”

 

“தர்ஷினி ஹியர்..இது ஒன்னும் உங்க சொந்த ட்ரிப் கெடயாது..இங்க டீமா தான் வர்க் பண்ணனும்..உங்களுக்கு கேள்விப்பட்ட ரூமர்ஸ பத்தி ஆராய்ச்சி பண்றதுக்கு இங்க டைம் இருக்காது..மைன்ட் இட்..” எப்போதும் தோன்றும் கோபம் இம்முறை சற்று உயர்ந்திருக்க காரமாய் தான் விழுந்திருந்தன,

அவனின் வார்த்தைகள்.

 

அவன் செயல் கிருஷ்ணாவுக்கே சரியாய் படாதிருக்க தர்ஷினியின் நிலையை சொல்லித் தான் ஆக வேண்டுமா…?

 

“சாரி லீடர்..” என்று விட்டு அனைவரினதும் பரிதாபப் பார்வை தன் மீது படிவதை கண்டு வலித்தவளாய் யாரையும் பாராது இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

 

பின்னர் தன்னிடத்தில் சத்யாவும் அமர்ந்து கொண்டிட பேரூந்தும் கிளம்பியது, பல புதிர்களுக்கான விடையைத் தந்திட.

 

அதே நேரம்,

அந்த சிறு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தாள்,

மித்ரஸ்ரீ.

 

வாசு வந்து விடுவானோ என்கின்ற எண்ணமே உள்ளுக்குள் அத்தனை பயத்தை தர முகம் வெளிறியது.

போதாதற்கு அந்த இடத்தில் அவளைத் தவிர யாரும் இல்லாதது இன்னுமே அவளைக் கலவரப்படுத்தியது.

 

எப்படியும் ரயிலிலும் பெரிதாய் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று அறிந்தாலும் வாசுவின் கண்களில் சிக்காமல் தப்பிக்கத் தான் அவள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்ததே.

 

பேரூந்தில் ஆறு மணி நேரப்பயணம்.ரயிலில் சென்றால் எட்டு மணி நேரம் எடுக்கும் என்றாலும் பாதுகாப்புக்காத் தானே இந்த முடிவை எடுத்திருந்தே.

 

நேரத்தை பார்த்தவளுக்கு கோபமும் வர நெற்றியில் அறைந்து கொண்டாள்.

 

திடுமென அவளின் வாயை இறுகப் பொத்தியது, வலிய கரமோன்று.எதிர்பாரா செயலில் அவள் திகைத்து திமிற விழிகள் இரண்டும் பெரிதாய் விரிந்து கொண்டன.

 

அவளின் மறுகரத்தை பின்னே முறுக்கி பிடித்து திமிறத் திமிறத் தரதரவென அவளை இழுத்துக் கொண்டு ஒரு மறைவிடத்துக்கு செல்ல அப்பட்டமான பயம் அவள் விழிகளில்.

 

கரங்கள் இரண்டும் அவன் பிடியில் தன் வாயைப் பொத்தியிருந்த உள்ளங்கையை அவள் கடித்தாலும் அசரவில்லை, அவன்.

 

ஓரிடத்தில் இழுத்து வந்து நிறுத்தி தன் கரத்தை அகற்றிக் கொள்ள தனக்கு வந்த கோபத்தில் சட்டென திரும்பி அவனைப் பார்க்க முயல முன் எதிர்பாராமல் அவள் கன்னத்தில் வந்து விழுந்தது, அறையொன்று.

 

அவள் கன்னத்தை பொத்திக் கொண்டு அவனை அதிர்ந்து பார்த்திட செந்தணல் விழிகளுடன் முகத்தில் ரௌத்திரம் படர்ந்திருக்க அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்,

*ரிஷி…!*

 

சத்தியமாய் அவனை இங்கு எதிர்பாரா திகைப்பு அவள் மனதில் நிறைந்திருக்க அவன் கொடுத்த அறை தற்காலிகமாய் அவளுக்கு உரைக்கவில்லை என்பதே உண்மை.

 

விழி விரித்து மாறா அதிர்வுடன் தன்னைப் பார்த்தவளின் செயலில் அவனுக்கு எரிச்சல் மண்டியதன் காரணம் தான் என்னவோ..?

 

“ப்ச்ச்ச்..மித்ரா..ஹலோ மித்ரஸ்ரீ..ஏய் மித்ரா..” அவன் கத்தவும் தான் சிந்தை கலைந்தவளின் முகம் அடுத்த நொடியே கடுகடுவென மாறிற்று.

 

“எதுக்கு அறஞ்சீங்க..கை நீளம்னா என் கன்னத்துல கை வக்கிறதா..திரும்ப ஒரு தடவ கைய வச்சீங்க..”

 

“என்னடி பண்ணுவ..?” அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்,பையன்.

 

“நானும் பதிலுக்கு அறைவேன்டா பக்கீஈஈஈ” அவள் சொல்லி முடிக்கும் முன்னமே பட்டென ஒன்று போட்டான், வாயில்.

 

“மரியாதயா பேசுடி பைத்தியம்..”

 

“ஆ..கிறுக்கு ..” கத்திய படி பையனவன் சுதாரிக்கும் முன்னமே அவனின் விரல்களை பிடித்து அவள் கடிக்க அவள் செய்யப்போவதை உணர்ந்தவனோ கத்தவில்லை.

 

அந்தளவு அழுத்தக்காரன் அவன்.

அவளுக்கு அவன் கத்தாதது இன்னும் கோபத்தை தர மீண்டும் கடிக்க பார்த்தளின் முதுகின் பின்னே தன் கரத்தை கொண்டு சென்று அவளின் பின்னியிருந்த சடையை அவனிழுக்க வலியில் உயிர் போனது,அவளுக்கு.

 

அவன் இழுத்த இழுப்பில் அவள் கரம் தானாக அவனின் விரல்களுக்கு விடுதலை அளித்திருக்க இப்போது அலறினாள், அவள்.

 

“ஆ..ஆ..விடுங்க..வலிக்கிது..ஆஆஆஆ..அம்மா..இந்த கிறுக்கு பயல் கிட்ட இருந்து என்ன காப்பாத்த யாரும் இல்லியா..ஆஆஆ..இழுக்காதடா…யோவ் கிறுக்கு விடுய்யா..கிறுக்கு மாடு விடுய்யா” அவளின் மரியாதையின்றிய ஒவ்வொரு அழைப்புக்கும் எகிறிய கோபத்துடன் வலிக்க வலிக்க இழுத்து வைத்தான்,பையன்.

 

அவன் குணம் அப்படி.

யாரின் இறைஞ்சலும் அத்தனை எளிதில் அவன் கோபத்தையும் அழுத்தத்தையும் கரைப்பதில்லை.

ஓரிருவர் அதற்கு விதிவிலக்கு.

 

கத்தி கத்தி அவளுக்கு தொண்டை வரண்டு விட்டது.வலியில் கண்கள் கலங்க தன் கண்ணீரை துடைத்தவாறே “சாரி..இனி இப்டி பண்ண மாட்டேன்..” தலை குனிந்து அவள் சொன்னதும் தான் தளர்ந்திருந்தது, அவன் பிடி.

 

அவன் விட்டது தான் தாமதம்,அதற்கெனவே காத்திருந்தது போல் பாய்ந்து வந்து அவனின் தோற்பட்டையை அழுந்தக் கடிக்க தன்னை மறந்து “ஆ” என கத்தி விட்டிருந்தான்,பையன்.

 

மீண்டும் அவனிடம் சிக்காது அவள் விலகி நின்று கொள்ள அழுத்தமாய் அவளைப் பார்த்து தன் தோற்பட்டையை ஆராய கன்றிச் சிவந்திருந்தது,

அவள் கடித்து வைத்த இடம்.

 

இன்னும் தாமதித்திருந்தால் இரத்தம் கசிந்திருந்தாலும் அதிசயம் இல்லை.

 

“இட்ஸ் பைன்ன்ன்ன்..நீ கடிச்சு வச்சதுக்கும் சேத்து வாங்கத் தான் போற..

அப்போ இருக்குடி உனக்கு..” உறுமியவனின் அதட்டலுக்கு துளியும் பயப்படாது அசட்டையாய் நின்றிருந்தவளின் பார்வை அவனுக்கு இன்னுமே கோபத்தை ஏற்றிட மறக்கவில்லை.

 

அவளும் பதிலுக்கு அவனை கனல் பார்வை பார்த்த படி நிற்க அவளின் விழிகளைப் பார்த்துக் கொண்டே தலையில் ஓங்கிக் கொட்டியவனுக்கு அவள் முன் மட்டும் சுற்றம் உரைக்காது போவதன் மாயம் தான் இன்னும் புரியவில்லை.

 

அவன் கொட்டிய தலையைத் தடவிக் கொண்டு முறைத்து பார்த்தவளின் விழிகள் தன்னை மறைந்து அவன் முகத்தை ரசித்துத் தான் தொலைத்தது.

 

ஏட்டிக்கு போட்டியாய் பேசினாலும் வேண்டுமென்று வம்புக்கு நின்றாலும் அவனை அவள் காதலிப்பது நிஜமாயிற்றே.

 

என்ன அது அவளைத் தவிர யாருக்கும் தெரியாது.அதற்காக அவளையே அவளால் ஏற்றுக் கொள்ள முடியாதே.

 

“என்ன இருந்தாலும் இவன் இவ்ளோ அழகா பொறந்துருக்க வேணாம்..” எண்ணியவாறு பெருமூச்சொன்றை இழுத்து விட அவளின் பார்வையின் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது,

அவனுக்கு.

 

“என்னடி..சைட் அடிக்கிறியா..?” பற்களை நறநறத்த படி கேட்டான்.ஏனோ அத்தனை கோபமாய் வந்தது.

 

“கொரில்லாவ எல்லாம் மனுஷன் சைட்டடிப்பானா..?உங்கள பாத்தா என் கண்ணு தான் பாவம்”

சடுதியாய் தன் பார்வையை மாற்றிக் கொண்டு பதில் சொன்னவளுக்கு இன்னும் நான்கு அறை விட வேண்டும் என்கின்ற வேகம் தான் அவன் மனதில்.

 

சுற்றம் கருதி தம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்துக்களை கருதி தன்னை அடக்கிக் கொண்டு நின்றிருந்தவனின் முகத்தில் இருந்த தீவிரம் அவளுக்குப் புரிய சின்னதாய் உருவெடுத்தது, பயமொன்று.

 

●●●●●●●●

 

அதே நேரம் ரணதீர புரத்தில்…

 

பக்கத்தில் கேட்ட சத்தத்தில் மெல்ல மெல்ல விழிப்புத் தட்டியது விஜய்க்கு.

 

கண்களை திறக்க நேரடியாய் தெரிந்தது என்னவோ பரந்து விரிந்த ஆகாயம் தான்.

ஏனோ சிறு புன்முறுவல் தோன்ற சோம்பல் முறித்த படி எழுந்து கொண்டவனுக்கு தான் மண்ணில் படுத்திருப்பது புரிய சிறு அதிர்வு.

பக்கத்தில் தான் கை கால்களை விரித்து அடித்துப் போட்டது போல உறங்கி இருந்தான்,ஜீவா.

 

கொஞ்சம் கொஞ்சமாய் நேற்று நடந்தது உரைக்க தேகம் ஒருமுறை அதிர்ந்திட அடங்கிட முதலில் தன்னை ஆராய்ந்து விட்டு தோழனை ஆராய இருவருக்கும் எந்த வித சேதமும் இல்லை என்பது பெரும் நிம்மதியாய்.

 

நேற்று அந்த கரும்புகை மனித உருவத்துக்கு மாறிக்கொண்டிருந்தது வரை தான் அவன் நினைவில் இருந்தது.

அந்த அதிர்ச்சி தாளாமல் அவனும் மயங்கி விழுந்திருக்க அதன் பின் நடந்தது எதுவும் அவனுக்குத் தெரியாது.

 

பயந்தவனாய் அருகே இருந்த தோழனை தட்டி எழுப்பிட ஜீவாவிடத்தில் சிறு முணகல் சத்தம் மட்டுமே.

தோழனை எழுப்புவது வீண் என்று புலம்பிக் கொண்டே எழுந்தவன் சுற்றம் ஆராய அந்த மாயனத்தின் மத்தியில் தான் நின்றிருப்பது கண்டு உடல் தூக்கி வாரிப் போட்டது.

 

●●●●●●●

 

கோபத்துடன் முன்னே சென்ற பர்வதத்துக்கு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த உருவத்தைக் கண்டதும் மூச்சடைத்தது.

 

அவரோ திரும்பி மாணிக்கத்தை பார்க்க அவரின் விழிகள் பிதுங்கி வெளியே வரும் போல் இருந்தது.

 

மெல்ல நடந்து அந்த உருவத்தின் அருகே செல்ல அது யாரென கண்டு கொண்ட பர்வதத்துடக்கு தொண்டைக்குழி அடைக்க மூச்சு வாங்கியது.

 

“யோவ் போயி ஆளுங்கள கூட்டிட்டு வா..” என்க திரும்பியும் பாராது ஓடியவரின் கண்களில் அப்படி ஒரு பயம்.

 

நாக்கு வெளியே வந்திருக்க கட்டியிருந்த புடவையுடன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்,

பெண்ணொருத்தி.

 

பர்வதத்துக்கு தூரத்து உறவு தான்.அதிகமாக பேசியதில்லை.அவளின் காதல் விவகாரம் ஊர் முழுக்க பரவியிருக்க அதற்காக தான் இப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பாள் என ஊகித்தவருக்கு தன்னாலே ஒரு பரிதாபம் எட்டிப் பார்க்காமல் இல்லை.

 

சுற்றும் முற்றும் பார்த்த படி பர்வதம் நின்றிருக்க ஓரடி எடுத்து வைத்தவருக்கு பின்னிருந்த புதருக்குள் ஏதோ மறைந்திருப்பது போல் தோன்ற எட்டிப் பார்த்தவர் கத்தியிருந்தார், அதீத பயத்துடன்.

 

●●●●●●●●

 

வீசிச் சென்ற காற்று புழுதியை கிளப்பிக் கொண்டு நகர்ந்திட வெளியே எட்டிப் பார்த்த படி முன் வாசற்கதவை அடைத்து திரும்பிய காவேரியின் செவிகளை நிறைத்தது,

அந்த கோயில் மணியோசை.

 

இதயம் ஒரு கணம் நின்று துடிக்க சடாரென கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றவளுக்கு தன் செவியை நிறைக்கும் சத்தத்தை இன்னும் நம்ப இயலவில்லை.

 

அவளின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோயில் அது.ரணதீர புரத்தில் பல வருடங்களாக மூடப்பட்டு பாழடைந்த நிலையில் இருக்கும் இடம் தான் அது.

 

“ரணதீர வம்சத்தோட மூத்த வாரிசுங்களோட ஜனனத்துக்கும் மரணத்துக்கும் தான் இந்த மணி அடிக்கும்..” தந்தை கூறியது அச்சுப் பிசகாமல் செவிகளில் ஒலிக்க உள்ளம் படபடத்தது.

 

ஏதோ தவறு நடந்திருப்பதாய் மனம் அடித்துக் கொள்ள என்னவென்று அவளுக்குத் தெரியவில்லையே.

 

இது மரணமா..?

இல்லை ஜனனமா..?

என்கின்ற கேள்வி தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

 

தொடரும்.

 

🖋️அதி….!

2024.02.21

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஹையோ விறுவிறுன்னு போகுது கதை … மரணமா ஜனனமா தெரியலையே ஒரு கெஸ் ஆர்யா இறந்து வாசு மேல போயிட்டானா … அப்போ ரிஷி யாரு … இந்த விஜய் ஜீவா எதுக்கு அரண்மனைக்கு போனாங்க