
“ஜாதகம் பொருந்தி இருக்கு, வசதியிருக்கு, படிப்பிருக்கு, பணமிருக்கு, அழகிருக்கு அந்தஸ்திருக்குன்னு நீங்க சொல்ற காரணத்துக்காக எல்லாம் நான் அவசரபட்டு கல்யாணம் பண்ணிக்க முடியாது..”
“இதெல்லாம் தவிர புதுசா வேற என்னடா இருக்கணும்” என்று அவன் பேச்சு புரியாமல் கேட்டார் அபிராமி.
“என் குழந்தையை சுமக்க போறவளுக்குன்னு ஒரு தகுதி இருக்கணும்..” என்றவன் அடுத்தநொடி வீட்டில் இருந்து வெளியேற மொத்த குடும்பமும் வசீகரனின் வார்த்தையில் ஸ்தம்பித்து போனது!!
சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்த வசீ உணர்வற்ற முகத்தோடு அமர்ந்திருந்த தாயிடம், “ம்மா சிலவிஷயம் எல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது கல்யாணமும் அப்படிதான் வாழ்க்கை முழுக்க வர துணை என்னோட சுக துக்கம் எல்லாத்துலயும் பங்கெடுக்க போற உறவு அதை நீங்க சொல்றதுக்காக அவசரப்பட்டு முடிவு பண்ணமுடியாது புரிஞ்சுக்கோங்க” என்றான்.
“தம்பு இதுநாள் வரை பொண்ணுக்கு அப்பா அம்மா , அண்ணன் தம்பி இருக்கணும், தூரமா இருக்க கூடாது அது இதுன்னு எவ்வளவோ கண்டிஷன் சொன்ன இப்போ என்னன்னா பெண்ணுக்கு தகுதி வேணும்னு சொல்ற? இது என்ன புதுக்கதை நாங்க என்னன்னு சொல்லி பொண்ணு கேட்க..? அப்படி கேட்டா என்ன நினைப்பாங்க..”
வசீகரனின் நிபந்தனைகள் எப்படி பெண் வீட்டார் ஏற்பார்கள் என்று அபிராமி கேட்கவும், “அதெல்லாம் நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் நானே பேசிப்பேன் நீங்க பொண்ணு மட்டும் பாருங்க..” என்றதில் அவருக்கு பதறி போனது…
“என்.. என்ன நீ அந்த பொண்ணுகிட்ட… தம்பு அப்போ நூர்த்துகணக்கான பொண்ணுங்ககிட்ட இப்படிதான் சொல்லி வச்சியா?” என்று அச்சத்தோடு பார்க்க, “ம்மா..” என்று அழுத்தமாக தாயை பார்த்தவன்,
“அப்படி இல்ல… யார்கிட்டயும் சொல்லலை அவங்ககூட பேசி பார்க்கும் போதே எனக்கு செட் ஆகுமா ஆகாதான்னு தெரிஞ்சிடும்..”
“என்ன பேசுற? கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க அடிப்படையா கேட்கிற விபரம் எதையும் பார்த்து ஒரு பொண்ணு உன்னை கட்ட கூடாதுன்னா என்ன அர்த்தம்? இவன் நம்மளை வச்சு காப்பாத்துவானான்னு கூட தெரியாம ஒரு பொண்ணு எப்படி உன்னை நம்பி தன்னை ஒப்படைப்பா? அப்படி ஒப்படைக்கிற பொண்ணுகிட்ட நீ என்ன தகுதி எதிர்பார்க்கிற?” என்று பொறுமை இழந்து போனார் திரு.
“ஏன் அன்னைக்கு நீங்க அம்மாவை பிடிச்சிருக்குன்னு தாத்தாகிட்ட பொண்ணு கேட்டு போனபோது அம்மா என்ன உங்களை கேள்வியா கேட்டாங்க?”
“இல்லை..”
“எந்த நம்பிக்கையில அம்மா உங்ககிட்ட தன்னோட வாழ்க்கையை ஒப்படைச்சாங்களோ அப்படி ஒரு பொண்ணு தான் எனக்கு வேணும்..”
“டேய் ப்ரோ அப்போ பிள்ளையார் போலவே அம்மும்மா மாதிரி பொண்ணு வேணும்னு அண்ணா சொல்றாங்களா?”
“தெரியலையேடா..” என்று அவன் உதட்டை பிதுக்க…,
“தம்பு அந்த காலம் வேற இந்த காலம் வேற..”
“ஏன் அபிம்மா அப்போ எந்த கேள்வியும் கேட்காம கல்யாணம் பண்ணின உங்களை சித்தப்பா என்ன விட்டுட்டா ஓடிட்டார்..” என்று எதிர்கேள்வி கேட்க…
“என்ன பேசுற தம்பு மாமாகூட வந்தவரை பார்த்தப்போ இவர்தான் எனக்கு எல்லாமேன்னு தோனுச்சு வசதி இருக்கா, என்ன வேலை, வருமானம் எதுவும் கேட்க தோணலை.. இரண்டு பேரும் எங்கப்பாகிட்ட பேசிட்டு இருந்தாங்க நானும் அக்காவும் உள்ள இருந்தோம் அப்பா கூப்பிட்டு அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டப்போ டக்குன்னு சரி சொல்லிட்டேன்”
“ஏன் அபிம்மா?”
“என்னன்னு தெரியலை ஆனா அவர் பேசினது அவரோட கண்ணுல கள்ளமில்லாம இருந்தது எல்லாம் சேர்த்து ஏதோ ஒரு நம்பிக்கை அது கொடுத்த தைரியத்துல சரி சொல்லிட்டேன்”
“என்ன நம்பிக்கை?”
“நிச்சயம் இவர்கூட இருக்கப்போ என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு முழுசா நம்பினேன் தம்பு..”
“அதுல இப்போவரை ஏதாவது குறை இருக்கா அபிம்மா..”
“இல்லைப்பா நான் நினைச்சதைவிட ரொம்ப சந்தோஷமா வச்சிருக்கார் உன் சித்தப்பா..”
“எஸ் இதுதான் எனக்கும் வேணும்..”
“என்னது?”
“நீங்க சொல்ற அந்த நம்பிக்கை என்னை கட்டிக்க போற பெண்ணுக்கும் வேணும்…! மத்த உறவைவிட இந்த உறவுல நம்பிக்கை ரொம்ப முக்கியம்மா அதைதான் நான் எதிர்பார்க்கிறேன்..”
கலக்கத்தோடு தன்னை பார்த்திருந்த நாயகி அருகே அமர்ந்த வசீ, “இதோ பாருங்கம்மா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே கண்டிப்பா பண்ணிப்பேன் ஆனா எனக்கு டைம் வேணும் தப்பான நபர்கிட்ட வாழ்க்கையை ஒப்படைச்சிட்டா அப்புறம் மீதமிருக்க வாழ்க்கை நரகமாகிடும்மா..”
“முதல்ல நான் கட்டிக்க போற பெண்ணுக்கு கல்யாணம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கணும் அடுத்து என்மேல அதோடு சேர்ந்து வரக்கூடிய உறவுகளின் மீது மரியாதை இருக்கணும் நீங்க சொல்ற காதல், புரிதல் இருக்கோ இல்லையே இன்னைய தேதியில சக மனுஷன் மேல அடிப்படையான அன்பும் அவன் உணர்வுகளை மதித்து பரஸ்பர மரியாதையோடு இருந்தாலே போதும்மா சந்தோஷமா வாழ்ந்துடலாம்”
“என்னப்பா பேசுற? எனக்கு புரியலை..” என்று பரிதவிப்புடன் நாயகி..
“சரிம்மா உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன்..” என்றதும் அனைவரின் பார்வையும் அவன் மீது படிந்தது.
“கொஞ்சம் முன்ன லிவிங் பத்தி என்கிட்ட நீங்க கேட்டதே தப்பு..” என்றிட பதறிபோனார் நாயகி.
“முதல்ல நீங்க ரெண்டு பேரும் என்னை அப்படி வளர்க்கலை அடுத்து எனக்குன்னு சில மாரல்ஸ் இருக்கு..”
“நீ சொல்லவேண்டியதில்லை எங்க பிள்ளையை பத்தி எங்களுக்கு தெரியும் நீ சொல்ல வந்ததை தெளிவா சொல்லு..” என்றார் திரு.
“நான் ஒரு டீட்டோட்டலர்! அப்போ எனக்கு வரப்போற லைஃப் பார்ட்னர் அதே போல இருக்கணும்னு நான் எதிர்பார்க்கிறது தப்பா?”
“டீடோட்டலர்கும் பொண்ணுங்களுக்கும் என்ன கரண் சம்பந்தம்?”
“இருக்கு சித்தப்பா! நீங்க கொண்டு வந்த பொண்ணுங்கள்ல சிலருக்கு சிகரெட் பழக்கமும் இன்னும் சிலருக்கு குடி பழக்கமும் இருக்கு..”
“என்னது பொண்ணுங்க குடிப்பாங்களா?”
“ஆமாம்மா என்னால எப்படி அதை ஏத்துக்க முடியும்?”
“என்னடா சொல்ற இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?”
“சித்தப்பா இது மட்டுமில்லை நான் அந்த பொண்ணுங்க கிட்ட பேசினதால தான் இன்னும் பல விஷயம் புரிஞ்சது..”
“என்னப்பா?”
“நான் பார்த்த பெண்கள்ல இருபது பேர்க்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்ல, கமிட்மென்ட்க்கு யாரும் தயாராயில்லை.. நீங்க சொன்னீங்களே லிவிங் இன் ரிலேஷன்ஷிப் அதுல இருக்காங்க.. ஊருக்காக, பெரியவங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உடனே டிவோர்ஸ் பண்ணிடுவாங்களாம்..”
“ஏன்?”
“ஏன்னா அந்த ரிலேஷன்ஷிப் தான் முக்கியமாம்.. அவங்க ரொம்ப சுதந்திரமா இருக்காங்களாம் யாரும் கேள்வி கேட்பதில்லையாம்.. அதோட பெரியவங்க நடத்தின கல்யாணம் தோற்ற பிறகு அந்த பெண்ணை பெருசா கேள்வி கேட்க மாட்டாங்களாம் அதனால பேருக்கு ஒரு கல்யாணம் செய்துட்டு டிவோர்ஸ் பண்ணிடுவாங்களாம்..” என்றிட வாயடைத்து போயினர் பெற்றோர்.
“இதை விடுங்க கோயம்பத்தூர், திண்டுக்கல்ல இருந்து சென்னைல வேலை செய்யற கிட்டத்தட்ட நாலு பொண்ணுங்க ஜாதகம் பொருந்தியிருக்குன்னு சொன்னீங்களே அவங்க எல்லாம் நேரம் வரப்போ சொல்லிக்கலாம்னு சொல்லி லவ் பண்ற பையனை வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு இருக்காங்க..”
“என்னடா சொல்ற..?”
“இன்னும் சிலர் நான் ஹான்ட்ஸம்மா இருக்கேன், என்னோட செலரி பேக்ரவுன்ட் எல்லா தெரிஞ்சிட்டு கல்யாணம் செட் ஆகாது வேணும்னா பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ல (FWB) இருக்கலாம்னு சொன்னாங்க..”
“பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்டா அப்படின்னா என்னபா?”
“அது எப்படி சொல்றது.. உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா ஒரு பையனும் பெண்ணும் பிரெண்ட்ஸ்ன்னு சொல்லிப்பாங்க ஆனா அவங்களோட உறவு அதையும் தாண்டி எல்லா எல்லையையும் கடந்தது”
“அப்படின்னா?”
“எப்படி சொல்றது என்று ஒரு நொடி நிதானித்தவன் .. ம்மா அந்த பொண்ணுக்கு ப்ரெண்டா மட்டுமில்லாம தாலி கட்டாத புருஷனாவும் இருப்பான்.. அதேபோல அவனுக்கு அந்த பொண்ணு மனைவியாவும் இருப்பா ஆனா அவங்க பிரெண்ட்ஸ் இப்ப புரியுதா..?”
“அடப்பாவிகளா இப்படியுமா..? ஃபிரெண்ட்க்கான அர்த்தமே மாத்தி வச்சிருக்காங்களேடா..” என்று திகைத்து போயினர் அபியும் நாயகியும்.
“ஆமாம்மா சிலர் கல்யாணமான பிறகும் அவங்க குடிக்கிறதுக்கு தடை சொல்ல கூடாதாம்.. வீக் எண்ட்ல ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு போய் ஒண்ணா சேர்ந்து குடிப்பாங்கலாம் நானே கொண்டு போய் விடணுமாம்..” என்றதும் சிவ சிவா என்று அரண்டு போனார் நாயகி.
“ம்மா கடைசியா நீங்க சொல்லி ஒரு பெண்ணை சென்னைல பார்த்தேனே நியாபகம் இருக்கா..?”
“ஹ்ம்ம் ஐடியில் வேலை செய்யற பொண்ணு தானே!”
“ஆமா, அந்த பொண்ணு என்ன சொன்னா தெரியுமா..?”
“என்ன சொன்னா..?”
“கல்யாணத்துக்கு அப்புறம் அவ பர்சனல் ஸ்பேஸ்ல நான் தலையிட கூடாதாம் என்னோட பெர்சனல் குள்ள அவ வரமாட்டாளாம்.. அவ இஷ்டத்துக்கு என்னனாலும் பண்ணுவாளாம் நான் அதை ஏன்னு கேட்க கூடாதாம் அதேபோல என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணும்னாலும் பண்ணலாமாம் அவளும் கேட்க மாட்டாளாம்…”
“என்னடா சொல்ற அப்புறம் எதுக்கு கல்யாணம் ?’
“அதைவிட முக்கியமான விஷயம் பெங்களூர்ல ஏழு பொண்ணுங்க பார்த்தேனே அதுல நாலு பேர் குழந்தை பெத்துக்க மாட்டாங்களாம்..‘
“என்னது நிஜமாவா சொன்னாங்க? ஏன்டா இப்படி ஒருவேளை அவளுக்கு உன்னை பிடிக்கலையா இல்ல என்ன காரணம் தம்பு..” என்ற நாயகிக்கு மயக்கம் வராத குறை தான்.
“இல்லம்மா என்னை பிடிச்சிருக்காம் ஆனா கெரியர் முக்கியம் குழந்தைக்கான கமிட்மென்ட் எடுக்க முடியாதாம்..”
“யாரும் குழந்தை பெத்துக்கமாட்டேன் சொன்னா மனித இனம் என்னாகும்?” என்றார் பசுபதி.
“அதுதான் AI இருக்கே! இப்போ எல்லா ஃபீல்ட்லயும் மனுஷங்களை ரீப்ளேஸ் பண்ணிட்டு இருக்கேபா..” என்று சர்வஜித் சொல்ல அடுத்த கேள்வி கேட்க முடியாத நிலையில் நின்றார்.
அடுத்து இன்னும் சிலர் பப்புக்கு போவாங்களாம் அவங்களுக்கு நானும் கம்பெனி கொடுக்கனுமாம்…‘
“பப்னா (PUB) என்ன தம்பு..?”
“குடிச்சிட்டு கூத்தடிக்கிற இடம்..” என்றார் திருவேங்கடம்.
‘இன்னும் சிலருக்கு பாய் பெஸ்டி (Boy bestie) இருக்காங்களாம்..”
“புதுபுதுசா சொல்றியேபா எனக்கு ஒன்னும் புரியலை…”
“அதாவது அவங்களுக்கு ஃபேமிலி புருஷனைவிட பாய் பெஸ்டிதான் முக்கியமாம் கல்யாணத்துக்கு அப்புறமும் அவன்கூட வெளில போவாங்களாம் டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்களாம் நான் எதுவும் கேட்க கூடாதாம்..”
“என்னது வெளியே போறது, நேரம் செலவிடுறதா அப்போ புருஷன்னு நீ எதுக்கு..?” என்றார் அபிராமி
“அதுக்கு பதில் அந்த பொண்ணுங்க தான் சொல்லணும்..”
“தம்பு என்னென்னமோ சொல்றியே இப்படியெல்லாமா பொண்ணுங்க இருக்காங்க என்னால நம்ப முடியலை தலையே சுத்துது… நாங்க எல்லாம் உங்க தாத்தா அப்பாவையும் சித்தப்பாவையும் கைகாட்டினப்போ அமைதியா கழுத்தை நீட்டினோம்.. ஆனா நீ சொல்றதை கேட்டா பயமா இருக்கு..“
“அம்மூம்மா அண்ணா சொல்றது எல்லாமே உண்மை தான்! எங்க காலேஜ் பொண்ணுங்க சிலர் லவ்ங்கிற பேருல பசங்களை atm மாதிரி யூஸ் பண்றாங்க அண்ணா சொல்ற பாய் பெஸ்டி கல்ச்சரும் இருக்கு.. என்ன இந்த பொண்ணுங்க உண்மையா இருக்க பசங்களை விட்டுட்டு மோசமானவனை நம்புவாங்க..” என்றான் பிரணவ்.
“ஆமா பெரிம்மா FWB இப்போ ரொம்ப சர்வசாதாரணமாகிடுச்சு என்கூட வேலை செய்ற பசங்க எல்லாருமே கல்யாணமான்னு தெறிச்சு ஓடுறாங்க..” என்று சர்வஜித்தும் ஆமோதித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



வசியின் திருமண வரன் பற்றிய எதிர்பார்ப்பு இப்பொழுது தான் புரிகின்றது.
பணம், அந்தஸ்து, வேலை என்று கேட்டு தெரிந்து ஏற்படும் பரஸ்பர நம்பிக்கை என்பதாக இல்லாமல் கல்யாணத்தின் மீது உறவுகளின் மீது நம்பிக்கை வைத்து இருவரும் மனிதருக்கு அளிக்கும் அடிப்படையான மரியாதையுடன் அணுகினாலே போதும் என்று நினைக்கின்றான்.
அவன் எதிர்ப்பட்ட விடயங்கள் அவனது கருத்தை இன்னும் ஆழமாக அவன் மனதினில் சரி எனவே விதைத்துள்ளது.
எனக்கு உறவுகள் மேல் நம்பிக்கை, அன்பு, மரியாதை அனைத்தும் இருக்கின்றது அதே போல் என்னை, என்னுடனான உறவை நம்பி ஏற்கும் ஒரு பெண் வேண்டும் என்கின்றான்.
அவனது நிலைபாடும் சரியே. இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்றும் கூட.
நாயகியை காணவில்லை. 😀 ஏலகிரியிலேயே தங்கிவிட்டாரா?
நல்ல குடும்ப பாங்கான பொண்ணு வேணும் … அதுக்கு ஏன் இவ்ளோ சுத்தி வளைக்கிற வசீகரா … இருக்காங்க நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க … ஆனாலும் நீ முதல்ல பேசினது லாம் இடிக்குதே … ரூம் ஷேர் பண்ண மாட்டேன்னு சொல்றான் … ரெண்டு பேரும் புரிஞ்சு வச்சுக்க வேணாம்னு சொல்றான்