
இருவரது மூச்சுக்காற்று மட்டுமே அவ்வறையை வெப்பமாய் நிறைத்து வைத்திருந்தது.
அத்தனை நேரமும் அழுத்திக்கொண்டிருந்த மனவலியின் பலனாய் அவனது முரட்டுத் தனத்தையும் கூட கர்வமாய் ஏற்றுக்கொண்டவளுக்கு, தற்போது தான் வலியே உறைத்தது.
அடிவயிற்றில் இருந்து கால் வரை நகரக்கூட இயலாத வலியின் பிரதிபலிப்பாய் அதிசயமாய் உறக்கம் கூட கண்ணைத் தழுவியது.
அந்நேரம் மீண்டும் அவளது அலைபேசி ஒலிக்க, “ப்ச்” என எரிச்சலுற்றவள் எழ முயற்சித்தாள்.
அத்தனை நேரமும் அமைதியாய் படுத்திருந்த சத்ய யுகாத்ரன் புயலாய் அவளை முற்றுகையிட்டு, “பர்ஸ்ட்ல இருந்து வலிக்க வைக்கலாமா?” எனத் தாபம் வழிய அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
ஏற்கனவே சிவந்திருந்த பாவையின் வதனம், செங்கொழுந்தாய் மாறிவிட, அதனை கண்டும் காணாது போல ரசித்து வைத்தவன், அவளைக் கொள்ளையடிக்கும் பணியைத் தொடங்கினான்.
பல முறை ஒலித்து அடங்கிய அலைபேசி உயிரற்று அடங்கிவிட, பின் மீண்டும் இருவரது வேக மூச்சுகளின் ரீங்காரம் மட்டுமே நிறைந்தது.
ஆகினும், அவளை முற்று முழுதாய் நாடத் தொடங்கிய கணமே அவளது மேனியின் சோர்வை உணர்ந்து கனிந்தவன், சட்டென விலகி விட்டான்.
அத்தனை சோர்விற்கு பின்னும் அவள் மறுக்காதிருக்க, அவன் விலகிய காரணம் புரியாது புருவம் சுருக்கினாள்.
அவனோ கனிந்த முகத்தை அவளறியும் முன்னே இறுக்கமாய் மாற்றி, “நான் ஓவர்டைம் பார்த்துட்டேன் போல பாஸ். மணி பத்தாகிடுச்சு. என் ஒரு மணி நேர ஹஸ்பண்ட் சாலரியை கரெக்ட்டா போட்டுடுங்க” என ஏளனமாய் குதறியபடி ஆடையை அணிந்தவன், அறைக்கதவை அடையும் நேரம் அவளது குரலில் தடைபட்டு நின்றான்.
“ஓவர்டைம் தர்றதுன்னு முடிவாகிடுச்சு. இன்னைக்கு ஃபுல் நைட்டுக்கும் ஓவர் பே தந்துட்டுப் போறேனே பேபி பாஸ்!” அவனுக்கு சற்றும் குறையாத ஆணவத்தில் அவள் உரைக்க, “அதுக்கு?” என்று திரும்பி முறைத்தான்.
“மூணு மணி நேரம் உனக்குப் பொண்டாட்டியா அட்ஜஸ்ட் பண்ணுனேன்ல. இப்ப எனக்குப் புருஷனா அட்ஜஸ்ட் பண்ணுங்க… கம்!” என்று ஒற்றை விரலை நீட்டி அதிகாரமாய் அழைத்தாள்.
மனதில் வியாபித்திருந்த ஒட்டு மொத்த வஞ்சத்தையும் தாண்டி, அவளது செயலில் புன்னகை புரிய துடித்தது இதழ்கள்.
அதனை இலாவகமாக மறைத்துக் கொண்டவன், அவளைக் காட்டத்துடன் எரித்தபடியே டீ – ஷர்ட்டைக் கழற்றி எறிந்து விட்டு, அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.
மேலும் முன்னேற்றம் இன்றி கண்மூடி படுத்திருந்தவனின் கருவிழிகளுக்குள் காட்சியானாள் இதயாம்ரிதா.
—————–
“ரோடு க்ராஸ் பண்றப்ப பார்த்து போக மாட்டியா விதுரா… எப்படி அடிபட்டுருக்கு பாரு!” என்று விபத்தில் சிக்கி மீண்ட தம்பியைக் கண்டு கவலையுற்றான் சத்ய யுகாத்ரன்.
“நான் சரியா தான்ணா வந்தேன். கார்காரன் தான் பாக்கல” விதுரன் பாவமாய் கூற, தியாகு அதட்டினார்.
“காரு வச்சுருக்குறவனுங்க கண்ணா பின்னான்னு தான் வருவாங்க. நம்ம தான் நாலு பக்கமும் பாக்கணும். நீ பண்ணுன வேலைல, சத்யா எவ்ளோ வேதனைப்பட்டான் தெரியுமா… உனக்கு இரத்தம் குடுக்க முடியலைன்னு அவன் தவிச்சது எங்களுக்கு தான் தெரியும். இனி கவனமா இரு” என்று மகனையே கடிந்தார்.
“என்ன தியாகு. வேணும்னேவா அவன் கார்ல போய் மோத போறான். அவனை போய் திட்டிட்டு இருக்க” என்று சிறிய மகனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு வந்தார் சீனிவாசன்.
விதுரனுக்கோ குற்ற உணர்ச்சி ஆகி விட்டது. தமையனின் தவிப்பு தன்னால் என்ற நிதர்சனம் உணர்ந்து, “சாரி அண்ணா” என்றான் வருத்தமாக.
“ப்ச் சித்தப்பா… என்ன நீங்க… இவனை சாரியெல்லாம் சொல்ல வச்சுட்டு இருக்கீங்க. நீங்க முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க. நைட்டு சாப்பாடு குடுக்க வந்தா போதும். நான் இங்க இருந்துக்குறேன்…” என்று இரு பெரியவரையும் முதல் வேலையாக அனுப்பி வைத்தான்.
அன்று காலையில் தான் கீர்த்தனா, நீலா, மாலதி முதற்கொண்டு அனைவரையும் சமன்செய்து அனுப்பினான்.
காலில் அடிபட்டதால் விதுரன் ஒரு வாரம் முழுக்க மருத்துவமனையில் தான் இருந்தான்.
நடக்கவே சிரமப்பட்டவனுக்கு ஒரே அறையில் அடைந்திருந்தப்பதே பெரும் கவலையாகிப் போனது.
“நான் ரூம்ல அடைஞ்சுருக்குறதும் இல்லாம, நீங்களும் ஏண்ணா உள்ளவே இருக்கீங்க. கேன்டீன்கு போய் ஒரு காஃபியாவது குடிச்சுட்டு வாங்க” என்றதில், “உனக்குத் துணைக்கு ஆள் வேணும் விதுரா” என்று மறுத்தான்.
“அட, எனக்கு ஹெல்ப் வேணும்னா உங்களுக்கு போன் பண்றேன்ண்ணா. ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸ்சா வெளில நடந்துட்டு வாங்க…” என்றான்.
“உனக்கும் உள்ள இருக்குறது அப்படி தான இருக்கு… ஓகே ஒன்னு பண்ணலாம். ரெண்டு பேருமே கேண்டின் போயிட்டு வரலாம்” என்றதும், “ஹை சரிண்ணா” என மலர்ந்தான்.
அவனை வீல் சேரில் அமர வைத்தவன், சறுக்கிச் செல்லும் பாதையில் அவனை கேன்டீன்க்கு அழைத்துச்செல்ல, விதுரனோ, “அண்ணா நான் இப்படியே வீல்சேர்ல இந்த ஜன்னல்கிட்ட உக்காந்துருக்கேன் வேடிக்கை பார்த்துட்டு… நீங்க உள்ள போய் காபி குடிச்சுட்டு வாங்க” என்றிட, “சரி வந்துடுறேன்…” என்றுவிட்டு அவனும் உள்ளே சென்றான்.
காபி வாங்கும் இடத்தில் அவன் நிற்க, சற்று தள்ளி அலைபேசியில் யாரிடமோ அளந்தபடி நின்றாள் இதயாம்ரிதா.
ஒரு டேபிளில் பத்மபிரியா அமர்ந்திருக்க, அவ்வப்பொழுது “காபி ஆறுதுடி” என்று இதயாம்ரிதாவைப் பார்த்து சைகை காட்டிட, அவளும், “டூ மினிட்ஸ்” என்றாள்.
அந்நேரம் பத்மபிரியாவைப் பார்த்த ஒரு தாதியர், “உங்க அம்மாவோட ரிப்போர்ட்ஸ் வந்துடுச்சு மேம்… அப்பறம், உங்க ப்ரெண்ட் ஒரு பேஷண்ட் பத்தி கேட்டங்கள்ல…” என்று ஆரம்பிக்க பத்மபிரியா என்னவென பார்த்தாள்.
அவளது தாய்க்கு ஏற்பட்ட உடல்நல கோளாறை சரி செய்ய, முந்தைய நாளே அவரை இங்கு அழைத்து வந்து பலவித சோதனைகள் செய்திருந்தாள். அந்த ரிப்போர்ட்டை வாங்க, தானும் உடன் வருவதாய் அடம்பிடித்த இதயாம்ரிதாவையும் அழைத்து வந்திருந்தாள்.
அவளோ வந்ததுமே சத்யாவைப் பற்றி விசாரிக்க, “ஓஹோ… கத அப்படி போகுதா. அதான் அவனைப் பார்க்க நீ காலேஜுக்கே போக போறியே அப்பறம் என்னடி?” என்று கிண்டல் செய்தாள்.
“லன்ச் இருக்குன்றத்துக்காக ஸ்னாக்ஸ் சாப்பிடாம இருப்போமா மச்சி” என்று கண் சிமிட்டியவளை முறைத்து வைத்தாள் பத்மப்ரியா.
அதனைக் குறித்து தான் தாதியர் கூறினார்.
“அதோ அந்த ஜன்னல் பக்கத்துல வீல் சேர்ல இருக்குற பையனை தான் உங்க ப்ரெண்ட் சேவ் பண்ணாங்க. அவரோட அண்ணா கூட அவங்களை பத்தி கேட்டாங்க. எங்களால பெர்சனல் டீடெய்ல்ஸ் குடுக்க முடியாது. சோ இங்க திரும்ப வந்தா கண்டிப்பா காட்டுறோம்னு சொல்லிருந்தோம்…” என்றதும், “ஓகே சிஸ்டர் நான் கன்வே பண்ணிடுறேன்…” என்றாள்.
தாதியர் அங்கிருந்து நகர்வதற்கும், இதயாம்ரிதா அலைபேசியை அணைத்து விட்டு வரவும் சத்யா காபி கோப்பையை ஏந்திக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.
அவனுக்கு முதுகு காட்டி அவள் பத்மபிரியாவின் எதிரில் அமர, அவளுக்குப் பக்கவாட்டில் சற்று பின்னால் தள்ளி அவன் அமர்ந்தான்.
இதயா வந்து அமர்ந்ததுமே, பத்மப்ரியா, “மச்சி” எனக் கத்தினாள்.
அதில் மொத்த கேன்டீனும் அவளைப் பார்க்க, சத்யாவும் பார்த்தான்.
“எதுக்குடி இந்தக் கத்து கத்துற?” பல்லைக்கடித்து இதயா அதட்ட,
“அதோ அங்க ஒரு பையன் இருக்கான்ல. அவனை தான் நீ ஆக்சிடெண்ட்ல இருந்து காப்பாத்துன…” என்று விதுரனைக் காட்ட, அவளோடு சேர்ந்து அவனும் பார்த்தான்.
“ஓ… பாவம் செம்ம அடி போல. அன்னைக்கு முகமெல்லாம் ரத்தமா இருக்கவும். எனக்கு அடையாளம் தெரியல. ஆமா உனக்கு எப்படி தெரியும்? நம்ம தான் போய் பாக்கவே இல்லையே?”
“இப்ப தான் நர்ஸ் சொல்லிட்டுப் போனாங்க. நீ போய் சொல்லலாம்ல நீ தான் காப்பாத்துனன்னு…” பத்மபிரியா கேட்கும்போதே, சத்யாவிற்குள் ஒரு ஆர்பரிப்பு.
தனது தம்பியைக் காப்பாற்றியவளாகிற்றே! அவளுக்கு நன்றி கூறியே ஆகவேண்டுமென்ற எண்ணத்திலிருக்க, “அவளோ அட நீ வேற ஏன் மச்சி… அவனுக்கு அன்னைக்கு பிளட் தேவைப்பட்டுச்சு. அது இருந்தா தான் அவன் பொழைக்கவே முடியும்ன்ற அளவு… அட்லீஸ்ட், அதை ரெடி பண்ணி குடுத்துருந்தா கூட பரவாயில்ல… நான் ஜஸ்ட் ஹாஸ்பிடல்ல சேர்த்தேன் அவ்ளோ தான். நான் இல்லைன்னா வேற யாராவது கண்டிப்பா பண்ணிருப்பாங்க. தேவையானதை குடுக்காம, என்னமோ அவனுக்கு உயிர் காப்பானா நான் இருந்தேன்ற மாதிரி போய் நின்னா சில்லியா இருக்கும்டி” என்றாள் தலையாட்டிக்கொண்டே.
அவளது கூற்றில் சுவாரஸ்யமடைந்தவனின் இதழ்களில் சின்னப் புன்னகை.
“ஓஹோ அப்போ உன் ஆளு…” என பத்மபிரியா ஆரம்பிக்கும் முன்னரே அவளது தாய் போன் செய்திட, “அச்சோச்சோ அம்மா நமக்காக சாப்பிடாம வெய்ட் பண்றாங்க. கிளம்புவோமா” என்று துரிதமாய் அவள் எழுந்ததும் இதயாம்ரிதாவும் எழுந்துகொள்ள, எதிரில் ஆளுயரக் கண்ணாடியில் மிளிர்ந்தது அவளது பொன்முகம்.
அவளது பேச்சில் மட்டுமல்லாது, முக வசீகரத்திலும் தானாய் ஈர்க்கப்பட்டான் ஆடவன்.
அளவாய் செதுக்கப்பட்ட கண்கள், அதற்கு மேல் குடையாய் அடர்ந்த புருவம், பனித்துளியின் சிதறல்களாய் நுனி மூக்கின் வியர்வை, இயல்பிலேயே சிவந்திருந்த வடிவான இதழ்கள், முதல் பார்வையிலேயே எதிராளிகளை திணறவைக்கும் கம்பீரமென, கண்ணாடியில் பிரதிபலித்த பெண்ணின் மொத்த உருவமும் அவன் மனதில் வடுவாய் பதிந்து போனது.
அவள் சென்ற பின்னரும் அந்தக் கண்ணாடியிலிருந்து கண்ணைப் பிரிக்க இயலாது அமர்ந்திருந்தவன், அதன்பிறகே தலையை உலுக்கி, வேகமாய் எழுந்தான்.
நேராய் விதுரனிடம் சென்றவன், “விதுரா இங்கயே இரு. உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்த பொண்ணு இங்க தான் இருக்கா பாத்துட்டு வந்துடுறேன்” என்று வேக வேகமாய் கீழே இறங்கியவனை விசித்திரமாகப் பார்த்தான் விதுரன்.
எத்தனை முயன்றும் அவளை பிடிக்க இயலவில்லை. ‘ச்சே… ஹாஸ்பிடல்ல டீடெய்ல் கேட்டாலும் சொல்ல மாட்டாங்களே!’ என்று முகம் வாடிப்போனவனுக்கு, வாழ்வில் முதன்முறையாக சலனம் ஏற்பட்டது.
அந்தச் சலனம், அவ்வப்பொழுது அவனை உலுக்கவும் செய்தது.
அதன்பிறகு, அந்த மருத்துவமனையில் அவன் தேவுடு காத்தும் பிரயோஜனமில்லை. அவள் வரவே இல்லை.
சிலரின் சந்திப்புகளெல்லாம் வாழ்நாளில் ஒரு முறையாக கூட முடிந்து விடும். அவளும் அதே போலானவள் தானோ என எண்ணும்போதே சின்னதாய் ஒரு வாட்டம்.
நாள்கள் நீராய் கரைந்தும் கூட, அந்த முகம் கண்ணை விட்டு மறையவில்லையே!
விதுரனும் மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிலேயே ஓய்வெடுத்தான். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு சரியாக மூன்று மாதங்கள் ஆகிவிடும் என்றதில் மலைத்துப் போனான்.
ஒரு மாதமே இன்னும் முடியவில்லையே. அதுவே அறைக்குள்ளே அடைந்திருப்பது மூச்சு முட்டியது.
அவன் சோகமாய் இருப்பதைக் கண்டதும், “என்ன ஆச்சுடா ரொம்ப வலிக்குதா” என சத்யா கேட்டான் அக்கறையாக.
“அதுவும் தான். ஆனா வீட்டுக்குள்ளேயே இருக்குறது மண்டை காயுதுண்ணா” என உதட்டைப் பிதுக்கினான்.
அதில் புன்னகைத்த சத்ய யுகாத்ரன், “சரி நான் காலேஜுக்குப் போறேன், டிசி வாங்க… நீ வர்றியா?” எனக் கேட்டதும், “ஓ வர்றேனே ஆனா என்னால வண்டில உக்கார முடியாதே” என்றான் உர்ரென.
“அது பரவாயில்ல. நம்ம ஆட்டோல போலாம்” என்றவன், ஆட்டோவை பிடித்து அவனை அழைத்துச் செல்ல, கீர்த்தனா தான் குறைபட்டார்.
“ஏன் சத்யா… உனக்கு சிரமம் தான?”
“எனக்கு என்ன சிரமம் அவனைத் தூக்கிட்டா போகப்போறேன்” என்று செல்லமாய் சித்தியை முறைத்தான்.
கல்லூரிக்குச் சென்றதும் அவனை காரிடோரில் அமர வைத்தவன், உள்ளே சென்றான்.
அங்கு பேராசிரியை சுஜாதாவும் எச். ஓ. டி ஆந்தைக்கண்ணனும் இருக்க, இருவருக்கும் காலை வணக்கம் வைத்தான்.
“வாங்க ரேங்க் ஹோல்டர். ஸ்டூடண்ட் பீப்பிள் லீடர்” என்று சுஜாதா புன்னகையுடன் அழைக்க, அழகாய் புன்னகை சிந்தினான் அவனும்.
ஆந்தைக்கண்ணனும், “உன் ப்ரிபெரேஷன் எல்லாம் எந்த அளவுல இருக்கு சத்யா” எனக் கேட்க, “நாளைக்கு எக்ஸாம் வச்சா கூட எழுதிடுவேன் சார்” என்றான் கண் சிமிட்டி.
“குட் குட்! யூ ஆர் சச் அ பிரில்லியண்ட் பாய்” எனப் பாராட்டியவர், “எக்ஸாம்க்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு தான?” எனக் கேட்டார்.
“ஆமா சார்… அதுவரை ஒரு டியூஷன் சென்டர்ல பார்ட் டைம்க்கு அப்ளை பண்ணிருக்கேன்” என்றவனிடம், “ஏன் சத்யா… நீ இங்க எம். பி. ஏ முடிச்சுருக்க. இங்கயே டெம்பரவரி ப்ரொபஸரா ஜாயின் பண்ணிக்கோயேன். உன் பிரில்லியன்ஸ் பத்தி பிரின்சிபல்க்கும் தெரியும்… சோ பெருசா பார்மாலிட்டி கூட தேவை இல்ல” என்றதும் அவன் அமைதியாய் மறுத்தான்.
“உங்க சப்போர்ட்டுக்கு தேங்க்ஸ் சார் பட் எனக்கு ப்ரிபேரேஷன்க்கு டைம் கிடைக்காம போய்டும் சார். டியூஷன்னா டூ ஹவர்ஸ் தான் இருக்கும்” என்றவனிடம், “நீ நான் எலக்டிவ் மட்டும் எடு சத்யா. ஹாப் டே ஒர்க் பண்ணு. மீதி நேரம் ப்ரிப்பேர் பண்ணிக்கலாம். உனக்கு மேனேஜரியல் கமியூனிகேஷன்க்கு எல்லாம் ட்ரெயினிங் குடுக்கணுமா என்ன? லாஸ்ட் இயர், நான் எலக்டிவ் ஸ்டாப் சடனா வராம போனப்ப, உன் க்ளாஸ்க்கு நீயே க்ளாஸ் எடுத்தியே! எல்லாருக்கும் உன் வே ஆஃப் டீச்சிங் பிடிச்சுருந்துச்சு. இது உனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தான?” என்று சுஜாதாவும் ஊக்குவித்தார்.
“கரெக்ட் தான் மேம்… பட்…” எனத் தயங்கியவனுக்கு படிக்க நேரம் போதாதென்ற யோசனை வர, “சரி சரி நீ யோசிச்சு சொல்லு. வேணாம்னாலும் பரவாயில்ல. நீ உன் கோல் நோக்கி போ” என்று ஆந்தைக்கண்ணன் கூறியதில், இருவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு வெளியில் வந்தான்.
சில அடிகள் எடுத்து வைத்தவனின் கால்கள் மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்து பின்னால் சென்றது.
உடலை லேசாய் பின்னால் சாய்த்து எட்டிப்பார்த்தவனின் கண்ணுக்கு விருந்தானாள் இதயாம்ரிதா.
விஷாலின் தோளில் கை போட்டு, “மச்சி காலேஜ் நல்லா தானடா இருக்கு. இங்க படிக்கிறதுல என்னடா பிரச்சினை” என்று சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
“இங்க அட்மாஸ்பியரே பிடிக்கல” விஷால் முகம் சுருக்க,
“ஏண்டா இங்க நிறைய மரம் இருக்கு, காத்து வருது, தோ… கேன்டீன் கூட இருக்கே!” என்று சின்ன அளவிலான கடையொன்றை கை காட்ட, “அதுக்கு பேர் கேன்டீன் இல்ல மச்சி. பெட்டிக் கடை” என்று முறைத்தான்.
“அந்தப் பெட்டிக்கடைல உக்காந்தா படிக்கப்போற. மூடிக்கிட்டு வாடா. நான் இங்க தான் எம்பிஏ படிக்கப்போறேன்…” என்று வீம்பாய் அட்மிஷன் பார்ம் வாங்க வந்தவளை ஒளிந்து நின்று ஊடுருவியது ஆடவனின் கருவிழிகள்.
அவள் எம்பிஏ என்றதும் சட்டென ப்ரகாசமானவன் மீண்டும் குடுகுடுவென ஆந்தைக்கண்ணின் அறைக்கு ஓடினான்.
அவனைக் கண்டு அவரும் சுஜாவும் விழித்து விட்டு, என்ன சத்யா எனக் கேட்க,
“சார்… இப்ப நான் இங்க ப்ரொபஸரா ஜாயின் பண்ணுனா, எந்த கிளாஸ்க்கு எடுப்பேன்” என்று கேட்டதும், “இனிஷியலா நீ யூஜிக்கு எடுக்குற மாதிரி தான் இருக்கு. மெயின் சப்ஜெக்ட்ஸ்…” என்றார்.
“நான் மெயின் எடுக்காம நான் எலக்டிவ் எடுத்தா, எம்பிஏக்கு எடுக்கலாமா சார்?” எனக் கேட்டவனை புரியாமல் பார்த்த சுஜாதா, “ஆனா அதுக்கு எலிஜிபிள் க்ரிடேரியா இருக்கு சத்யா…” என்றதும்,
“எவ்ளோ டஃப் இன்டெர்வியூன்னாலும் நான் அட்டென்ட் பண்றேன் மேம். பட் எம்பிஏக்கு கிடைச்சா எனக்கு ஓகே” என்றிட, இருவரும் முதல்வரிடம் பேசி விட்டு நேர்முகத்தேர்விற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.
அதில் மர்மப்புன்னகை பூத்தவன் குதூகலத்துடன் தம்பியிடம் வர, அவன் தமையனை நன்றாகவே நோட்டமிட்டான்.
“என்ன அண்ணா, வெளில வந்துட்டு மறுபடியும் அரக்க பறக்க ஓடுனீங்க? அது இருக்கட்டும் யாரை ஒளிஞ்சு நின்னு வேவு பார்த்த்தீங்க?” எனக் கிண்டலாய் கேட்டான்.
“நான் யாரையும் வேவு பாக்கலையே!” சத்யா தோளைக் குலுக்கியதில், “அண்ணா… என்கிட்ட மறைக்காதீங்க. என்னவோ சரி இல்ல” என்றான் முறைப்பாக.
“ம்ம் எனக்கும் அதே பீல் தான் என்னமோ சரி இல்ல. உன்னை காப்பாத்துனான்னு சொன்னேன்ல அந்தப் பொண்ணை பார்த்ததுல இருந்தே எனக்கு மனசும் மூளையும் என் பேச்சைக் கேட்க மாட்டேங்குது விதுரா” என்றவனை விழி அகல பார்த்தான்.
“லவ் பண்றீங்களா அண்ணா?”
“தெரியல… இப்ப அந்த பொண்ணு இங்க எம்பிஏ படிக்கப்போறான்னு தெரிஞ்சதும், இங்க ப்ரொபஸர் ஜாப்க்கு ஓகே சொல்லிருக்கேன்” என்றவனை வியப்பாய் ஏறிட்டான்.
“பாருடா… ஆனா ப்ரொபஸரா இருந்துட்டு ஸ்டூடண்ட்டை சைட் அடிக்கிறது தப்புண்ணா” விதுரன் கேலி செய்ய, “டேய்! நான் ப்ரொபஸர் ஆகுறதே அவளை சைட் அடிக்கிறதுக்கு தான்டா. நான் என்ன அவள்கூட லவ் பண்ணிட்டு ஊர் சுத்தவா போறேன். ஜஸ்ட் அவளைப் பார்க்கணும்னு தோணுது. சோ, எனக்கு கெரியர் செட் ஆகுற வரை அவளை சைட் அடிச்சுக்குறேனே!” என்று குறும்பாய் கூறிய சத்ய யுகாத்ரனைக் கண்டு விதுரனும் சிரித்தான்.
அடுத்த சில நாள்களில், நேர்முகத்தேர்வில் தேர்வானவனுக்கு, அவன் கேட்ட வகுப்பும் பாடமும் கிடைத்தது.
ஆனால், யாருக்காக இந்த வேலையில் சேர்ந்தானோ அவள் மட்டும் வகுப்பிற்கு வரவே இல்லை.
‘அட்மிஷன் பார்மை மட்டும் வாங்கிட்டு ஜாயின் பண்ணாம விட்டுட்டாளா?’ என வருத்தம் கொண்டவன், வகுப்பு ஆசிரியரிடம் இருந்து மாணவர்களின் விவரப்படிவம் கேட்டு வைத்தான். அவரோ அவனுக்குத் தராமல் இழுத்தடிக்க, அவன் வகுப்பில் ஆறு பேர் மட்டும் கட் செய்து கொண்டே இருந்ததைக் கவனித்தான்.
இதனை ஆந்தைக்கண்ணனின் கவனத்திற்கு கொண்டு வரும்போது தான், படத்திற்கு சென்று விட்டு கல்லூரிக்குத் திரும்பிய இதயாம்ரிதாவை கண்டு கொண்டான்.
‘அடிப்பாவி… நீ இங்க படிக்கவே வரலையா?’ என மனதினுள் திட்டிக்கொண்டவன், அவளைக் கையும் களவுமாக பிடித்து விட்டான், பேராசிரியருக்கான தோரணையுடன்.
தனது வேலைக்கு மரியாதை கொடுத்து, அவளை மாணவியாய் மட்டுமே நடத்த எண்ணியவன் முதல் சந்திப்பிலேயே அவன் மீது மையல் கொண்டு அவனை வம்பிழுத்தவளைக் கண்டு பலமாய் அதிர்ந்து பின் நேசமும் வளர்க்கத் தொடங்கினான்.
புது காதல் மலரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
94
+1
4
+1
3
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Autha ah ud yepo sis