
அத்தியாயம் – 5
நிலா இந்த கல்யாணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை சுஜிதாவிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
அதேசமயத்தில் எதிரில் இருந்து கைதட்டும் சத்தம் கேட்டது. இருவரும் ஒரே சமயத்தில் நிமிர்ந்து பார்க்க அங்கு நடந்து வந்தது வேறு யாரும் இல்லை நம்ம ஜெயலட்சுமி.
இவர்கள் அருகில் வந்த ஜெயலட்சுமி, “மேடம்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?” என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கைகட்டியவாறு கேட்டார்.
அதில் பதறிப்போன நிலா, “அ…அ…அ.து…. அது வந்து சித்தி” என்று வார்த்தைகல் தந்தி அடிக்க மேற்கொண்டு அவளை பேசவிடாமல் ஜெயலட்சுமி கைகளை ஓங்கி அவளை அறைய சென்றாள்.
அதே சமயத்தில் அங்கு ஏதோ ஒரு சத்தம் திடிரென்று கேட்டது. அதில் ஜெயலட்சுமி அவளை அடிக்காது ஓங்கிய கைகளோடு அப்படியே நின்று விட்டார்.
அனைவரும் திரும்பி பார்க்க அங்கு வேறு யாரும் இல்லை விக்ரம் தான் தண்ணீர் டம்ளரை கீழே போட்டிருந்தான். ஆனால், அந்த டம்ளர் அவனுக்கு தெரியாமல் கை நழுவி விழுந்ததா அல்லது தெரிந்தே கீழே விழுந்ததா என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை.
அந்த சத்தத்தில் ஜெயலட்சுமி நிலாவை அடிக்காமல் நிறுத்தி விட்டார். பிறகு, கடையில் இருப்பதை உணர்ந்த ஜெயலட்சுமி நிலாவிடம் திரும்பி ஒற்றை விரலை நீட்டி “இந்தக் கல்யாணம் நடக்கும். கட்டாயம் நடக்கும்”.
“நான் ஜெயலட்சுமி நினைச்சதை நடத்துறது தான் என்னோட ஸ்பெஷல் புரிஞ்சுதா. உனக்கு பிடிக்குதா, இல்லையா அப்படின்றது முக்கியம் இல்ல. நான் நினைச்சது நடக்கணும் அவ்வளவுதான்”.
“இன்னும் இரண்டே நாளில் உனக்கு கல்யாணம் அது வரைக்கும் நீ வாயை திறக்கவே கூடாது“ என்று அவளை எச்சரித்து விட்டு அனைவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
வீட்டிற்கு வந்த நிலா கண்களில் கண்ணீர் தேங்கிக் கொண்டே இருந்தது. ஏனென்றே தெரியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
அவள் அம்மாவின் புகைப்படத்தை பார்த்து விரல்களால் தொட்டு நெஞ்சோடு புதைத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். எவ்வளவு அழுதும் அவள் மனதில் உள்ள பாரம் மட்டும் குறையவே இல்லை.
சுஜிதா அதை வாசலில் இருந்து பார்த்து விட்டு ‘முதலில் விக்ரம் கிட்ட இந்த கல்யாணத்தில் நிலாவுக்கு விருப்பம் இல்லை என்னும் உண்மையை கண்டிப்பா சொல்லியே ஆகணும்’ என்று மனதுக்குள் ஒரு உறுதியான தைரியத்தை வரவழைத்து வேகமாக விக்ரமை நோக்கி சென்றாள்.
சுஜிதா, “அண்ணா ஒரு நிமிஷம்” என்றாள்.
விக்ரம், என்ன என்பது போல் திரும்பி புருவத்தை உயர்த்தி கேட்டான்.
சுஜிதா, “அண்ணா நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்க இல்ல?” என்றாள் கேள்வியாக.
விக்ரம், “அதெல்லாம் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன் என்னன்னு சொல்லும்மா” என்றான் கைகளை கட்டிக்கொண்டு.
சுஜிதா, “ என்னோட பிரெண்டு நிலாவுக்கு சின்ன வயசுல இருந்து சந்தோஷமான வாழ்க்கை அமையவே இல்ல. அவ சந்தோஷமா இருந்தது அவளோட அஞ்சு வயசு வரைக்கும் தான்” என்றாள் மெல்லிய குரலில்.
விக்ரம், “ஏன்?” என்றான் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்.
சுஜிதா, “நிலா அவளோட அஞ்சு வயசு வரைக்கும் தான் அவ அம்மா கூட இருந்தா. அப்போ வரைக்கும் தான் அவளுக்கு புடிச்ச ஒரு பையனும் கூட இருந்தான்”.
“அவ வாழ்க்கை ரொம்ப அமைதியா சந்தோஷமா இருந்துச்சு. அவங்க அம்மா இறந்து போன அதே வாரத்தில் அந்தப் பையனும் இந்த ஊரை விட்டு போயிட்டான்”.
“அப்போல இருந்து அவளுக்கு அந்த பையனை தவிர வேறு யார் மேலையும் விருப்பமே கிடையாது. அவளுக்கு இந்த கல்யாணத்துல எந்த ஒரு இஷ்டமும் கிடையாது”.
“அதனால், தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நீங்களே நிறுத்திடுங்க. எங்களால் ஒண்ணுமே பண்ண முடியல எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறதுன்னு எங்களுக்கே தெரியல”.
“சித்தி கிட்ட சொன்னா நிலாவ கொன்னே போட்றுவாங்க” என்று கை கூப்பி தன் தோழிக்காக கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
ஆனால், விக்ரம் “அப்படியா? எனக்கு இது எதுவுமே தெரியாது. இதை நினைச்சு எனக்கு கவலையும் இல்ல. நான் வேலை கேட்டு என்னோட நண்பன் மூலமா தான் உங்க சித்தியை பார்த்தேன்”.
“உங்க சித்தி ரொம்ப நல்லவங்களா பேசினாங்க எனக்கு வேலையும் கொடுத்தாங்க. கொடுத்துட்டு கல்யாணம் ஆயிடுச்சான்னு என் குடும்பத்தை பத்தி கேட்டாங்க”.
“அப்போ பேசும் போது எனக்கு ஒரு பொண்ணு தெரியும் அவளுக்கு யாரும் இல்ல அதனால் அவளுக்கு நான் தான் மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்கேன்”.
“நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி உங்க சித்தி தான் சொன்னாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன்“ என்றான்.
சுஜிதா அவனை பார்த்து முறைத்தாள். விக்ரம் கூலாக, “என்ன அப்படி பாக்குற. நிலா எந்த பையனை விரும்பி இருந்தாலும் பரவால எனக்கு எந்த பிரெச்சனையும் இல்லை”.
“அதுவும் அஞ்சு வயசுல பார்த்த பையனை நினைச்சு எந்த நம்பிக்கையில் உன் பிரென்ட் இப்போ காத்துகிட்டு இருக்கா. இன்னேரம் அந்த பையன் உயிரோடு இருக்கானோ? இல்லையோ?” என்றான்.
சுஜிதாவுக்கு பயங்கர கோபம் வந்தது, “இவ்வளவு தூரம் நான் பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்கேன் சித்தி சொன்னாங்க சித்தி சொன்னாங்கன்னு அதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க”.
“அவளுக்கு படிச்சு சாதிக்கணும் அப்படின்னு தான் ஆசை. நீங்க அவ கால் தூசிக்கு வர மாட்டீங்க. உங்களுக்கு தான் படிப்பறிவும் இல்ல எந்த அறிவும் இல்லையே”.
“எதாச்சும் மண்டையில் இருந்து இருந்தால் இந்நேரம் நான் சொன்னதை நீங்க புரிஞ்சுகிட்டு இருப்பிங்க“ என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் கத்தினாள்.
விக்ரம், சுஜிதா அழுவதை பார்க்க முடியாமல் அவளிடம் ஏதோ கிசுகிசுப்பாக கூறினான். பிறகு, அதிர்ந்து போய் அவனை பார்த்த சுஜிதா “அப்படியா அண்ணா? நீங்க சொல்றது எல்லாம் உண்மையா?” என்று கண்கள் கலங்க கேட்டாள்.
விக்ரம் சிரித்துக் கொண்டே ஆம் என்பது போல் தலை அசைத்தான். அத்துடன் சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பி விட்டால் சுஜிதா.
விக்ரம் சுஜிதாவை ஆச்சரியமாக பார்த்து வியந்து போனான். தன் தோழிக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறாளே. இந்த மாதிரி பெண்களும் பிரெண்ட்ஸ் காக வந்து நிப்பாங்களா.
இத்தனை நாட்களாக ஆண்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி உயிரை குடுக்கும் நண்பர்கள் இருக்காங்க என்று நினைத்திருந்தான்.
ஆனால், பொம்பள பசங்களுக்கும் அதே போல் பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்கிறது பெரிய விஷயம் தான் என்று நிலா, சுஜிதா பிரெண்ஷிப்பை பார்த்து வியந்து போனான்.
சக்தி தன் அக்கா ஜெயலட்சுமியிடம் சென்று, “அக்கா நம்ம வீட்டில் கல்யாணம் நடப்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லையே துணி எடுத்ததோடு அப்படியே இருக்கு”.
“ஒரு வாரத்தில் கல்யாணம்னு நீ சொல்லி நாலு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு நாளில் கல்யாணம். ஆனால், இன்னும் மண்டபம் பார்க்கவே இல்லையே?” என்றான் கேள்வியாக.
ஜெயலட்சுமி, “இந்த கல்யாணம் நான் சொன்னது டா எனக்கு தெரியாதா எப்படி நடத்தணும்னு நீ எனக்கு பாடம் எடுக்குறியா?” என்றார்.
சக்தி இல்லை என்னும் விதமாக தலை அசைத்து அது வந்து அக்கா என்று பேச்சை ஆரம்பித்தான்.
ஜெயலட்சுமி, “இந்த நிலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதே பெரிய விஷயம். இதுல மண்டபம் வேற தேவையா?” என்றாள் எரிச்சலாக “எல்லாம் கோவிலில் சின்னதா பண்ணிக்கலாம்” என்று பேச்சை முடித்து விட்டாள்.
சக்தி மனதில் எனக்கும் நிலாகும் நடக்கும் திருமணத்தில் எந்த குறையும் இருக்க கூடாது எல்லா சடங்கும் பன்னனும் என்று உறுதியாக இருந்தான்.
சக்தி, “அப்படி பண்ணா ஊர்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. ஏற்கனவே நிலாவை நம்ம என்னமோ அடிமையா வச்சிருக்கோம் ன்னு சந்தேகப்படுறாங்க”.
“இந்த கல்யாணத்தில் ஏற்கனவே நிலாவுக்கு விருப்பம் இல்ல எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறாங்க”.
“அதனால் ஊர் காரங்க கிட்ட நிலா கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா அப்புறம் பெரிய பிரச்சனை ஆகிடும். அதனால், பெரிய மண்டபத்தில் நாம்ம கல்யாணம் வச்சா சந்தோஷமா தான் இந்த கல்யாணம் நடக்குதுன்னு எல்லாரும் நம்பிடுவாங்க” என்றான்.
இதை சிந்தித்த ஜெயலட்சுமி, “பரவாலையே உனக்கு கூட கொஞ்சம் அறிவு இருக்கு” என்றார்.
பிறகு ஜெயலட்சுமி, “சக்தி சரி அப்போ நீயே மண்டபம் பார்த்து ஐயர் கிட்ட சொல்லிடு எனக்கு ஒரு சில வேலைகள் இருக்கு”.
“நிலாவோட சொத்து மொத்தத்தையும் ஒரே பத்திரமாக மாற்றி அதில் நிலாகிட்டயும், விக்ரம்கிட்டயும் ஒன்னா கையெழுத்து வாங்கிட்டு அந்த நிமிஷமே ரெண்டு பேரையும் வீட்டை விட்டு அனுப்பனும். அப்படி செஞ்சா தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்” என்றார் ஆக்ரோஷமாக.
சக்தி, “அக்கா அப்படி இல்லன்னா கல்யாண முடிஞ்சு சில நாட்களுக்கு அப்புறம் கூட கையெழுத்து வாங்கிக்கலாம் இல்ல” என்றான்.
ஜெயலட்சுமி, “அதெல்லாம் சரிப்பட்டு வராது டா மனிதர்கள் குணம் குரங்கு மாதிரி எப்போ வேண்டுமானாலும் மாறிடும். விக்ரம் இப்போ எனக்கு பயப்படுறான்”.
“ஆனா, அவன் பேச்சில் ஒரு திமிர் இருக்கு என்கிட்ட போன் ல வேலை கேட்டு பேசுன விக்ரம்கும் இப்போ வீட்டுக்கு வந்த பிறகு இருக்கும் விக்ரம் கும் சில வித்தியாசம் இருக்கு சில நாட்களில் என் மேல் பயம் இல்லாமல் போகலாம் அவனுக்கு”.
“அதனால், இப்போவே கையெழுத்து வாங்கினால் தான் எல்லாம் சரியா வரும்” என்று தன் தம்பியிடம் தன் மனதில் நினைத்த அனைத்தையும் கூறிக் கொண்டு இருந்தாள்.
ஜெயலட்சுமி சொல்லும் பொழுது சக்தி மறுபடியும் குறுக்கிட்டான், “அக்கா இன்னொரு விஷயம் நாளைக்கு நலுங்கு வைக்கணும் இல்லையா நிலாவுக்கு” என்றான் யோசனையாக.
ஜெயலட்சுமி, நிலாவின் சொத்தை பற்றி பேசியது எதையுமே சக்தி ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில், தன் அக்கா நிலா சிறு வயதிலிருந்து இந்த சொத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்று மிகவும் நுணுக்கமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கும் தெரிந்த ஒன்று.
ஜெயலட்சுமி, “அதெல்லாம் எதுக்கு டா இப்போ” என்றார் எரிச்சலாக.
சக்தி, “இல்ல அதையெல்லாம் செய்தால் தான் நம்ப நல்லவங்களா தெரிவோம்” என்றான்.
ஜெயலட்சுமி, “சரி என்னமோ நீயே பாத்து பண்ணு” என்றாள் சலிப்பாக.
மறுநாள் பரபரப்பாக வீட்டில் நலுங்குக்கான ஏற்பாடு எல்லாம் சக்தி தலைமையில் ஆரம்பமானது.
விக்ரம் கூறியதும் சந்தோஷமாக சென்ற சுஜிதா நிலாவிடம் சென்று, “நிலா நீ எதுக்கும் பயப்படாத உன் வாழ்க்கை கண்டிப்பா சந்தோஷமா தான் அமையும். நான் வாக்கு தருகிறேன்” என்றாள்.
நிலா, “என்ன டி உளருர இன்னும் இரண்டு நாள்ல என் தலையெழுத்தே மாறப்போகுது. நானே பல குழப்பத்தில் இருக்கிறேன் நீ வேற சும்மா இரு” என்றாள்.
சுஜிதா, “நீ எதையும் நினைத்து குழம்பாத உனக்கு எது நடந்தாலும் எல்லாம் நல்லதாக தான் நடக்கும். இந்த கல்யாணம் உன் தலையெழுத்தை கண்டிப்பா மாற்றும்“ என்றாள் விக்ரம் கூறியதை மனதில் வைத்து கொண்டு.
நிலா அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள். சக்தி, “நிலா குட்டி” என்று அங்கு வந்தான். சக்தி, “சுஜிதாவை பார்த்து நீ கூறியது சரிதான். இந்த கல்யாணம் கண்டிப்பா நிலாவோட தலையெழுத்தை மாற்றும் நான் அவளை ராணி மாதிரி வச்சு பார்த்துபேன்” என்றான் புன்னகையோடு.
நிலா பயந்து கொண்டு சுஜிதாவின் பின்னால் சென்று மறைந்தாள். அதை பார்த்த சக்திக்கு கோபம் தலைக்கேறியது, “நான் உன் வருங்கால மாமா என்னை பார்த்து நீ ஏன் பயப்படுற? உனக்கு அறிவு இருக்கா இல்லையா?”.
“நீ என்ன பயந்தாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணினால் ஒரே ரூம்ல என் கூட தான் இருக்க போற புரிஞ்சுதா.
“நீ இப்படி பண்றதினால் எனக்கு எரிச்சலா இருக்கு” என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடடா ஒருவேளை இவன் தான் அந்த குட்டி பையனா இருக்குமோ