
ரூபிணியின் மிரட்டல் உதயாவை வெறியேற்றியது.
“பண்ணிக்க என்ன வேணுமோ பண்ணிக்க.. என் கிட்ட வரும் போது எப்படி பதில் சொல்லனும்னு எனக்கு தெரியும்” என்று திமிராக சொன்னான்.
“என்ன சொல்லுவ?” என்று நாடியை தட்டி யோசித்தாள் ரூபிணி. அவனது பார்வை அவள் முகத்தை விட்டு அகலவே இல்லை.
“இந்த காலத்துல சிலர் சீக்கிரமே மேல வரனுங்குறதுக்காக என்ன என்னமோ செய்யுறாங்க. அத பத்திலாம் பேச எனக்கு விருப்பமில்லனு சொல்லுவியா உதயா?” என்று நல்ல பிள்ளையாக கேட்டு வைத்தாள்.
மிகச்சரியாக சொல்லி அவனை அதிர வைத்தாள். அவன் அப்படித்தான் சொல்வான். எந்த வதந்தி வந்தாலும் அதற்கு ஒரு பதில் வைத்திருப்பான். இவள் அந்த படத்தை காட்டி எதாவது செய்து கேள்வி வந்தாலும் கூட, இது போலத்தான் அவனது மூளை யோசிக்கும்.
முதல் முறையாக ரூபிணி அவனை மனதார ஆச்சரியப்பட வைத்தாள்.
“அப்படி நீ சொன்னதும் நான் என்ன சொல்லுவேன் தெரியுமா? நாம பழைய காதலர்கள். நாம சண்டை போட்டதால தான் உன் கம்பெனிய விட்டே வெளிய வந்தேன். உன் காதல மறக்க முடியாம நீ என் கிட்ட வந்து பேசுன.. நான் மாட்டேன்னு சொன்னதால என் பாய்ஃப்ரண்ட்ட என்னமோ பண்ணிட்டனு சொல்லுவேன். எப்படி கதை சூப்பரா இல்ல?” என்று முகபாவனைகளை மாற்றி மாற்றி பேசினாள்.
அவனது முகத்தில் அதிர்ச்சி விலகி சிரிப்பு வந்தது.
“பரவாயில்ல நீயும் தேறிட்ட” என்றான் பாராட்டும் நக்கலும் கலந்த குரலில்.
“பின்ன வளராமலே இருந்துடுவனா? உன் கம்பெனிய விட்டு வெளிய போனா எதுக்குமே வழியில்லாம இருந்துடுவேன்னு நினைச்சா எப்படி?”
“அப்புறம் ஏன் இப்ப என் கம்பெனிக்கு வர பார்க்குற?”
“விட்ட இடத்துல தான் பிடிக்கனும் உதயா. நான் இத ஆரம்பிக்கும் போது எனக்கு இருந்த பல கனவ நீ பறிச்சுட்ட.. அத உன் கம்பெனிலயே நிறைவேத்திக்கனும்”
“நீ கேட்குறது ரொம்ப பெருசு ரூபிணி”
“சோ?”
அவளருகே வந்து நின்றான். முதல் முறையாக இருவருக்கும் இடையில் இருந்த தூரம் குறைந்தது. அவள் கையிலிருந்த கைபேசியை பார்த்தான். அதை வாங்க கை நீட்ட, உடனே பின்னால் இழுத்துக் கொண்டாள்.
அவனது முகத்தில் சிரிப்பு பரவியது.
“அத கொடு”
“நோ”
“உன் ஆதாரத்த அழிக்க மாட்டேன் கொடு”
“நம்ப மாட்டேன்”
“நீயா கொடுக்குறியா? நானா புடுங்கவா?”
“எதுக்குனு சொல்லு”
“என் நம்பர் வேணாமா?”
ஒரு நொடி அதிர்ந்தவள், “நீ சொல்லு நான் எழுதிக்கிறேன்” என்று பேனாவை தேட குனிந்தாள்.
அவளது இரவு ஆடை அவ்வளவு ஒன்றும் நல்லதாக இல்லை. குனிந்த பிறகே அது புரிய, அவசரமாக நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
அவன் அவளை பார்த்து புருவம் உயர்த்தினான்
“உன் கிட்ட ஒரு பேனா கூட இல்லையா? இடியட்” என்று திட்டி விட்டு தன் பேனாவை எடுத்தான்.
அவனை சந்தேகத்தோடு பார்த்ததை நினைத்து தன்னை தானே மனதில் திட்டிக் கொண்டு ஒரு புத்தகத்தை காட்டினாள்.
அதில் தன் எண்ணை வேகமாக எழுதியவன், “பிரேக் அப் பண்ணுற நியூஸ் வரனும். அஃபிஷியலா வரனும்.” என்றான்.
“வரும் வரும் . இப்ப கிளம்பு..”
உடனே திரும்பி நடந்தான்.
கீழே கிடந்த படங்களை பார்த்தவள், அதை எல்லாம் அள்ளி எடுத்துக் கொண்டு அவசரமாக அவனிடம் ஓடினாள். கதவை நெருங்கியவனை தடுத்தாள்.
“வெயிட் இத எடுத்துட்டு போ”
அந்த படத்தை பார்த்தவன், “தூக்கி குப்பையில போடு” என்றான் வாங்காமலே
“குப்பையில நீயே போட்டுக்க என் வீட்டுல இத நான் வச்சுக்க மாட்டேன்” என்று நீட்டினாள்.
உடனே சலிப்பாக பிடுங்கிக் கொண்டான்
“சரியான இம்சை”
“ஹலோ நக்கலா?”
“நக்கல் எல்லாம் இல்ல. உண்மையே அதான்… நீ ஒரு இம்சை தான்”
“நீயும் ஒரு அரகண்ட் தான்”
“டீல் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கிறேன் உன்னை” என்று பல்லைக் கடித்தான்.
“நீ இன்னும் முழுசா சொல்லவே இல்ல.. நம்பர மட்டும் தான் கொடுத்துருக்க. உன் கம்பெனியில இருந்து கால் வந்தா தான் நான் பிரேக் அப் அஃபிஷியல் ஆக்குவேன்”
“அசால்டா எவ்வளவு பெரிய டீல கேட்குற?”
“வேணும்னா உனக்காக இன்னொரு ஃபேவர் சேர்த்து பண்ணுறேன்.. ஓகே?”
“எனக்காக? நீ?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான்.
“என்ன பண்ணுவ? சொல்லேன்?”
“ஆமா.. பிரேக் அப் பண்ணுற மாதிரியே வேற யாரு கூடயும் பேட்ச் அப்பும் ஆகிடுறேன். ரெண்டு விசயத்துக்கு ஒரு காண்ட்ராக்ட் ஒத்து வரும்ல?” என்று கையை விரித்தாள்.
அது வரை இல்லாத ஐடியா ஒன்று அப்போது அவனது மனதில் உதித்தது. அதன் விளைவாக அவனது கண்கள் விரிந்தது.
அவள் அவன் பதிலுக்காக புருவம் உயர்த்த அவனது உதடுகள் வளைந்தது.
“நீ என்ன செய்யனும்னு காண்ட்ராக்ட் சைன் பண்ணும் போது சொல்லுறேன்”
உதயா அதோடு கிளம்பிச் சென்று விட அவள் தோளை குலுக்கிக் கொண்டு சென்றாள்.
இது வரை இருந்த அத்தனை குழப்பமும் இப்போது காணாமல் போனது. இனி பழைய ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு, உதயாவின் நிறுவனத்தில் சேர வேண்டியது தான் மிச்சம். ரூபிணி சந்தோசமாக உதயாவின் எண்ணை கைபேசியில் பதிந்து கொண்டாள்.
உதயா காருக்கு வந்தான். கையில் இருந்த படங்களை பார்த்தான். அங்கேயே தூக்கி எறிந்து விட வேண்டும் போல் இருந்தது. ஆனால் தேவையில்லாதவர்கள் கையில் மாட்டினால் வீண் பிரச்சனை என்பதால் காருக்குள் போட்டு விட்டு, சில நிமிடங்கள் காரில் சாய்ந்து அமைதியாக நின்றான்.
விசயம் தெரிந்ததும் இருவரையும் சாகும் வரை அடிக்கும் அளவு கோபம் வந்தது தான். ஆனால் ஒரு முறை ரூபிணியிடம் தெளிவாக கேட்க வேண்டும் என்று நினைத்தான்.
அவளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாக வேண்டும். ரூபிணி அவனை பழிவாங்க இவ்வளவு தூரம் இறங்க மாட்டாள் என்று அவனது மனம் சொன்னது. அதை தெளிவு படுத்தத்தான் வந்தான்.
விஷாலின் பெயர் ரூபிணியின் பெயரை விட்டு பிரிந்த பிறகு, அவன் காணாமல் போனால் கூட யாரும் கவலை படப்போவது இல்லை.
விஷாலை எதாவது செய்யப்போய், உண்மை தெரியாமல் ரூபிணி அவளை பழிவாங்க உதயா செய்ததாக நினைத்து மீண்டும் எதாவது செய்யக்கூடாதே?
ஆனால் கடைசியாக சொன்ன விசயம் தலைக்குள் ஓடியது. விஷாலின் பெயரை நீக்குவதை விட வேறு ஒன்றும் செய்ய வேண்டும் என்று தோன்றியது.
மெடோனாவிற்கு மாடலிங் ஆசை திடீரென முளைத்திருந்தது. அதைப்பற்றி அவள் அடிக்கடி பேசியதால் தான், அவளை அந்த பார்ட்டிக்கு அழைத்துச் செல்ல உதயா முடிவு செய்தான்.
மெடோனாவிற்கு நன்றாகவே தெரியும். உதயாவிற்கு ரூபிணியை பிடிக்காது என்று. முழுகாரணம் தெரியாவிட்டாலும் ரூபிணியோடு உதயாவுக்கு பகை என்னும் அளவு சொல்லி வைத்திருந்தான்.
அது தெரிந்தும் கூட ரூபிணியின் காதலனோடு சேர்ந்து அவனை ஏமாற்றியிருக்கிறாளே?
முதல் வேலையாக மேனேஜரை அழைத்தான். ரூபிணிக்காக புது ஒப்பந்தம் தயாரிக்கச் சொன்னதும் மேனேஜருக்கு பெரிய ஆச்சரியம். ஆனாலும் எதிர் கேள்வி கேட்காமல் இரண்டு நாட்களில் தருவதாக சொல்லி விட்டார்.
அடுத்தது அசிஸ்டண்ட்டை அழைத்தான்.
“ஹலோ சார்”
“மெடோனாக்கு நான் கொடுத்த கார்ட கேன்சல் பண்ண சொல்லு”
“ஓகே சார்”
“அண்ட் அவ தங்கியிருக்க வீட்டோட காண்ட்ராக்ட்ட கேன்சல் பண்ணு. விஷால் இருக்க வீட்டு ஓனர கண்டு பிடி.”
“நாளைக்குள்ள தேடிச் சொல்லுறேன்”
கைபேசியை அணைத்து விட்டு காரில் ஏறிக் கிளம்பினான். மெடோனாவின் மீது கொண்ட காதல் எல்லாம் சில நாட்களிலேயே வன்மமாக மாறி விட்டது.
அவனுக்கு உண்மையாக இல்லாதவர்களை அவன் என்றும் விட்டு வைத்தது இல்லை. மெடோனாவிற்காக அவன் செய்த அனைத்தையும் நிறுத்த முடிவு செய்தான்.
அவள் தங்கியிருக்கும் வீடு, கார், செலவழிக்கும் பணம் அனைத்தும் அவனுடையது தான். அனைத்தையும் பிடுங்கி செல்லாக்காசாக்கி அவளை ஓட ஓட விரட்ட வேண்டும்.
அதே நேரம் மெடோனா எதிர்பார்க்காதபடி உதயா வேறு ஒரு பெண்ணோடு இணைய வேண்டும். அதற்கு இப்போது ரூபிணி நல்ல வழி.
இதற்காக அவனுக்கு ரூபிணியின் மீது ஆர்வம் வந்து விட்டதாக நினைத்தால், அது முட்டாள் தனம். இப்போதும் ரூபிணியை பார்க்கும் போது மனதில் எரிச்சலும் கோபமும் மட்டும் தான் வரும்.
ஆனால் யாருடைய காதலனை வைத்து மெடோனா ஏமாற்றினாளோ, அவளை வைத்து அவன் அவளுக்கு பாடம் புகட்டலாம் அல்லவா?
இதை எப்படி ரூபிணியிடம் சொல்வது என்பது தான் பெரிய கேள்வி. ரூபிணி இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாள். ஒப்புக் கொண்டாலும் அதற்கு பதிலாக எதையாவது கேட்பாள்.
எப்படி சமாளிப்பது? என்ற யோசனையுடனே அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றான்.
ரூபிணி தங்கியிருப்பது வேறு ஊரில். அவன் இருப்பது வேறு ஊர். இரண்டும் அருகருகே கிடையாது. இரவு இனி பயணம் செய்ய உடல் ஒத்துழைக்காது.
ஹோட்டலுக்கு வந்து சேர, அவனது எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்து விழுந்தது.
“நாளைக்கு காலையில நீ கேட்டது நடந்துடும். காண்ட்ராக்ட்ட மறந்துடாத” என்று அனுப்பியிருந்த செய்தியை படித்தவன் எண்ணை பார்த்தான்.
ரூபிணியின் புது எண் போலும். அதை பதிவு செய்து விட்டு, கட்டை விரலை தூக்கிய இமோஜியை அனுப்பி வைத்தான்.
பேச்சு முடிந்தது என்று படுக்கச் சென்று விட்டான்.
அதே நேரம் மெடோனாவை தோளில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விஷால்.
மெடோனா பத்தாவது முறையாக பெருமூச்சு விட்டாள்.
“என் பாய் ஃப்ரண்ட்ட என்னால பிரிய முடியாது விஷால்”
“என்னாலயும் ரூபிணிய விட முடியாது”
“சோ.. இத கண்ட்னியூ பண்ணாம இருக்கது தான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது”
“ஆமா..”
“நான் நாளைக்கு கிளம்பிடுவேன்”
“ம்ம்..”
“காண்டாக்ட் பண்ணாத”
“பட்.. நாம ஜஸ்ட் பேசிட்டு மட்டும் இருக்கலாம்ல?”
“உதயாக்கு தெரிஞ்சா பிரேக் அப் பண்ணிடுவான். அவன என்னால பிரிய முடியாது*
“அவன அவ்வளவு லவ் பண்ணுறியா?” என்று கேட்டவனின் குரலில் அவ்வளவு பொறாமை.
“அவன் எனக்காக எவ்வளவு செலவு பண்ணுவான் தெரியுமா? நான் இருக்க வீடு.. என் கார்.. எல்லாம் அவன் கொடுத்தது. அவன விட்டுட்டா நான் பழைய நிலைமைக்கு போக வேண்டி வரும்”
“பணத்தால எல்லாத்தையும் வாங்க முடியாது. நான் உன்னோட ஃபர்ஸ்ட் லவ்”
“நானும் தான் உனக்கு ஃபர்ஸ்ட்.. அந்த ரூபிணிய விட்டுரு பார்க்கலாம்?”
“நோ.. நீ உதயாவ பணத்துக்காக லவ் பண்ணுற.. பட் நான் ரூபிணிய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்”
மெடோனா அவனை பிடித்து தள்ளி விட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
“வாட்? கல்யாணம் பண்ணிக்க போறியா?”
“எஸ்.. எனக்கு அவ கடைசி வரை வேணும்”
மெடோனாவின் மனதில் பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரிய, அவசரமாக விஷாலை முத்தமிட்டு அந்த தீயை அணைத்தாள்.
“நாம டேட்டிங் பண்ணும் போது நீ கல்யாணத்த பத்தி பேசுனதே இல்ல.. ஆனா ரூபிணி.. அவள கல்யாணம் பண்ணப்போற?” என்று கேட்ட போது அவள் குரலில் பொறாமையும் கோபமும் பல மடங்கு எரிந்தது.
“லுக்.. ரூபிணி நல்ல பொண்ணு.. என்னை சின்சியரா லவ் பண்ணுறா.. நான் அவள விட முடியாது. நீயும் உதயாவ விட மாட்ட.. சோ இதுல நீ ஏன் கோபப்படுற?”
“ஆனா.. ஆனா.. உதயா கல்யாணத்த பத்தி பேசல.. அவன் கூட கடைசி வரை இருப்பனானு எனக்கு தெரியல. நீ.. நீ அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற”
“கமான்.. அவன் பேசலனா நான் என்ன பண்ண முடியும்?”
“ச்சே..” என்று மெடோனா கோபமாக தலையணையை தூக்கி எறிந்தாள்.
அவள் வாழும் நாட்டில் ஆண்கள் பெண்களை திருமணம் செய்ய நினைப்பது எல்லாம் மிகவும் அதிசயமான ஒன்று தான். அதுவும் திருமணமான ஆண்களின் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகமாக வரும்.
நிறைய ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதில்லை. அப்படியே செய்தாலும் அவர்கள் நேர்மையாக இருப்பது இல்லை. அப்படியிருக்க விஷால் ரூபிணியை திருமணம் செய்வதா?
வயிறு பற்றி எறிய அவள் அமர்ந்திருக்க, “டால்.. இன்னைக்கு மட்டும் தான் உன் கூட இருக்கப்போறேன்.. அத இப்படி கோபப்பட்டு வேஸ்ட் பண்ணாத” என்று முத்தமிட்டு மெடோனாவை அமைதிபடுத்தினான் விஷால்.
தொடரும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

விஷால் மொடனோ நல்ல கொள்கை