
கிரீம், ஜெல், செரம், லோஷன் என அனைத்தும் தயாரிக்கும் வேலைகள் ஜரூராக நடைபெற அதனை சோதனைக்குட்படுத்தி புதுப்பெயரை பதிந்து, புது மாடலைப் பிடித்து விளம்பரப்படுத்தும் முன் களைத்து விட்டாள் இதயாம்ரிதா.
ஆனால் உடனடியாய் அவளது தயாரிப்புகளை தகுதி குறைபாடு எனக் கூறி நிறுத்தினர், சோதனை அதிகாரிகள். தயாரிப்பு வெளிவரும் முன்னே நிறுத்தப்பட்டது.
அவளால் உருவாக்கப்பட்ட புதுமுக மாடல்கள் மற்றொரு நிறுவனத்திற்குத் தாவினர். மூன்று வருடங்கள் தங்களது பிராண்டிற்கு மட்டுமே மாடலாக இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை மீறினால், ஐம்பது லட்சம் அபராதம் கொடுக்க வேண்டும் அல்லது வழக்கு பதியப்படும் என்ற கட்டளை பிறப்பித்திருந்தாள் தான்.
மற்ற நிறுவனத்தின் உதவியுடன் அபராதத்தை கொடுத்து விட்டே மாடல்கள் கழன்று கொண்டதில் பத்மபிரியா தான் அதிக அளவில் வருந்தினாள்.
“என்ன மேம் இது… இவ்ளோ கஷ்டப்பட்டு எல்லாம் செஞ்சா இப்ப எல்லாமே வேஸ்ட்டா போச்சு!”
அவளுக்கு அருகில் நின்றிருந்த சத்ய யுகாத்ரன், “ரெண்டு மாடலும் சேர்ந்து ஒன் க்ரோர் ஃபைன் குடுத்து இருக்காங்க. குவாலிட்டில எந்த இஸ்ஸியூவும் இல்லைன்னாலும் இஸ்யூ ரைஸ் பண்ணிருக்காங்க. நெக்ஸ்ட் மூவ் என்ன மேம்?” என்றான் தீவிரமாக.
சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே இருந்தவள், “குவாலிட்டி செக்கிங் எல்லாம் நான் பார்த்து தான் அனுப்புனேன். பைனலா ஏதோ ஒரு குளறுபடி ஆகியிருக்கு…” என்றபடி “கால் ப்ரொடக்ஷன் டீம் ஹெட் பூபதி” என்று சத்யாவைப் பார்த்து கூற, அவன் உடனடியாய் பூபதிக்கு அழைத்தான்.
அங்கோ பூமிகா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
“ப்ளீஸ் அழாத பூமி. இதுல உன் தப்பு எதுவும் இல்ல…” மிதுனா அவளை சமன் செய்து கொண்டிருக்க,
“இல்ல மிது… மேம் அன்னைக்கே சொன்னாங்கள்ல, குவாலிட்டில ப்ராப்ளம் ஆனா கேள்வி கேட்காம ஃபயர் பண்ணிடுவேன்னு. இன்னைக்கு நான் வீட்டுக்கு தான் போக போறேன்” என்று அழுது தீர்த்தாள்.
விதுரனோ, “அந்த டீம்ல நீ மட்டும் தான் இருக்கியா. உன்னோட சேர்ந்து நூத்துக்கணக்கான ஆளுங்க வேலை பாக்குறாங்க. தப்பு பண்ணாம நம்ம மேல பழி போட்டா, அப்படி இந்த கம்பெனி ஒன்னும் நமக்குத் தேவையே இல்ல பூமி. நல்லா புருஞ்சுக்கோ இங்க நம்மளை நம்பி தான் வண்டி ஓடுது…” என்றான்.
அகில் தான், “அடேய் நீ வேற மெதுவா பேசுடா. மேடம் காதுல விழுந்துட போகுது. அவங்க வேற எங்க மைக் வச்சுருக்காங்கன்னே தெரியல. நமக்குள்ள பேசிக்கிறதை கூட புட்டு புட்டு வைக்கிறாங்க…” என மிரண்டவன், “பூமி… மேம் இப்ப உன்ன கூப்பிட்டு கேள்வி கேட்க போறாங்களா என்ன? கூப்பிட்டா பாத்துக்கலாம்…” எனும்போதே பத்மப்ரியா பூமிகாவை அழைத்தாள்.
“மேம் ரூம்க்கு வா!” என்றதுமே பூமிகா பீதியாகி விட்டாள்.
கையெல்லாம் நடுக்கம் காண ஆரம்பிக்க, அகில் ஆதரவாக அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
“லூசு… முதல்ல ரிலாக்ஸா பேசு. உன்னை காரணமில்லா வேலைல இருந்து தூக்குனா, நாங்களும் வெளிநடப்பு செஞ்சுடுவோம்” என்று உறுதியாய் கூறியதில் மற்ற இருவரும் அதனை ஆமோதித்தனர்.
பூமிகா பயந்திருந்ததில் அவளுடன் இணைந்து மற்ற மூவருமே இதயாம்ரிதாவின் அறைக்குச் சென்றனர்.
அங்கு ஏற்கனவே பூபதி நின்றிருந்தார். தந்தை இருந்த காலத்தில் இருந்தே அவர் தான் ப்ரொடக்ஷன் டீம் ஹெட். அவரை விட திறமை வாய்ந்தவர்கள் ஏகப்பட்ட பேர் வந்திருந்தாலும், அனுபவசாலியான அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியதே இல்லை ராம்குமார்.
தன்னை அழைத்துக் கேள்வி கேட்பதே பூபதிக்கு பெரும் அவமானமாக இருந்தது.
“சார்… ப்ரொடக்ஷன் எல்லாம் முடிச்சதும் பேக்கேஜிங்கு அனுப்பிருக்கீங்க. ஆனா பேக்கேஜிங்ல இருந்து நேரா நம்ம கம்பெனில இருக்குற மார்க்கெட்டிங் டீம்க்கு தான போயிருக்கணும். ஏன் பேக்கேஜிங்க மறுபடியும் ப்ரொடக்ஷன் டீம்ல வச்சுருந்துட்டு அனுப்புனீங்க?” எனக் கேள்வி எழுப்பினாள் கண்ணைச் சுருக்கி.
“நீங்க இன்டெர்ன்ஸ்னு சேர்த்துருக்குற புது ஆளுங்க தான், அவங்க இஷ்டத்துக்கு வேலை பாக்குறாங்க மேடம். அந்த பூமிகா பொண்ணு, மார்க்கெட்டிங் போக வேண்டியதை மறுபடியும் ப்ரொடக்ஷன்க்கு வர சொன்னா. நான் தான் அதட்டி ப்ராடக்ட்டை அனுப்பி விட்டேன். அந்தப் பொண்ணு தான் ஏதோ செஞ்சுருக்கணும்…” என்றிட, “ஓ! லெட்ஸ் இன்வெஸ்டிகேட்” எனும்போதே,
பூமிகாவுடன் இணைந்து மற்ற மூவரும் உள்ளே வர, அழுது சிவந்திருந்த பூமிகாவின் முகத்தை ஒரு கணம் ஊடுருவினாள் இதயாம்ரிதா.
“நீங்க என்ன இவளுக்கு இலவச இணைப்பா? அவுட்” என்று விரல் நீட்டிக் காட்ட, விதுரன் “மேம் அவள் எந்தத் தப்பும் பண்ணிருக்க மாட்டா” என்றான் வேகமாக.
“தப்பு பண்ணிருக்காளா இல்லையான்னு டிசைட் பண்ண வேண்டியது நான் தான். ஐ செட் அவுட் த்ரீ ஆஃப் யூ” என்று கண்டனத்துடன் கூறியதில், மூவருக்கும் வெளியில் செல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
“சோ, சொல்லு பூமிகா. பேக்கேஜிங் பண்ணுன ப்ராடக்ட்டை எதுக்காக மறுபடியும் ப்ரொடக்ஷன் குடோன்க்கு அனுப்புன?” எனக் கூர்மையாய் வினவ, அவளுக்கு பயத்தில் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.
“மேம்… நான்… நான் பர்பஸா பண்ணல மேம். ப்ரொடக்ஷன் முடிஞ்சதும் பேக்கேஜ் பண்ணுன சன்ஸ்க்ரீம் ஒன்னை எடுத்து நான் ஜஸ்ட் ட்ரையல் பார்த்தேன். ஆக்சுவலி அந்த கலரோட டெக்சர் ரொம்ப ஸ்லைட்டா வித்தியாசமா இருந்த ஃபீல். அதுனால மறுபடியும் அதை குவாலிட்டி செக் பண்ணிட்டு அதுக்கு அப்பறம் மார்க்கெட்டிங் டீமுக்கு அனுப்பலாம்னு ஹோல்டு பண்ண சொன்னேன்” என அழுகுரலில் கூறியவளை நிறுத்திய இதயாம்ரிதா, “இதை ஏன் நீ அப்பவே என்கிட்ட சொல்லல?” என வினவினாள்.
“நான் பூபதி சார்ட்ட என் சந்தேகத்தைச் சொன்னேன். நம்ம ட்ரையல் பாக்கும்போது இருக்குற லைட்டிங்கும் பேக்கேஜுக்கு அப்பறம் நார்மல் லைட்டிங்கும் கலர் லைட்டா டிஃபர் ஆகும். இதுனால ஒன்னும் ப்ராப்ளம் இல்லைன்னு சொன்னாரு மேம்” என்றதில், இதயாம்ரிதா கன்னத்தில் கை வைத்துக்கொண்டு பூபதியைப் பார்க்க,
அவரோ “எனக்கு 20 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் மேம். பேக்கேஜிங் அப்போ சின்ன சின்ன சேஞ்சஸ் டெக்சர்ல வரும். அதுனால தான் அனுப்ப சொன்னேன். ஆனா ஆஃபிஸர்ஸ் பிராண்டை கேன்சல் பண்ணுனது எனக்கே ஷாக் தான்” என்றார்.
“ஐயோ ரொம்ப ஷாக் ஆகிட போறீங்க. நெஞ்சு வலி எதுவும் வந்துட போகுது…” இதயாம்ரிதா நக்கலடிக்க அவர் முகத்தில் சின்னதாய் வியர்வைத் துளிகள்.
சத்யா ஒரு கணம் இதயாம்ரிதாவை கண்ணெடுக்காமல் ஏறிட்டு விட்டுப் பின் நிகழ்வுணர்ந்து, “ஆபிஸ் குவாலிட்டி டிபார்ட்மென்ட் மூலமா முதல்ல ஒரு டெஸ்டிங் பண்ணலாம் மேம். அதுல தெரிஞ்சுடும் ஏன் ஆபிஸர்ஸ் ரிஜெக்ட் பண்ணுனாங்கன்னு… நம்ம மேல தப்பு இல்லைனா மறுபடியும் அப்பீல் பண்ணலாம். அப்படி தப்பு இருந்தாலும் அகைன் ட்ரை பண்ணலாம்” என்று சத்யா ஒரு தீர்வை வழங்க
“தட்ஸ் ரைட்!” என்றவள் பூமிகாவிடமே அந்தப் பொறுப்பைக் கொடுத்தாள்.
அவள் உடனடியாய் அந்த வேலையில் இறங்கினாள்.
சோதனை செய்யும்போதும் அவளது நண்பர்கள் உடன் இருந்தனர். சிசிடிவி வழியே அவர்களை பார்த்துக்கொண்டே தான் இருந்தாள் இதயாம்ரிதா.
அப்போதே பூமிகாவிற்கு கையெல்லாம் நடுங்கிக்கொண்டே இருந்தது. இம்முறை நால்வரும் உள்ளே வந்தனர். மிதுனா தான் ஆரம்பித்தாள்.
“மேம், ஷீ இஸ் கரெக்ட். சன்ஸ்க்ரீம்ல நம்ம யூஸ் பண்ணுன பேஸ் ஃபார்முலா தவிர வேற ஒரு கன்டென்ட் ஆட் ஆகியிருக்கு. அது ஸ்கின்ன பலவீனப்படுத்தும்…” என்றிட,
மேஜையில் விரல்களால் தட்டியபடி நால்வரையும் ஆழ்ந்து பார்த்த இதயாம்ரிதா, “சோ அவள் மேல தப்பு இல்லன்னா, பேக்கேஜிங்ல நீ தான இருந்த. எப்படி அவங்க குடுத்த க்ரீம் மாறுச்சு?” எனக் கேள்வி எழுப்ப இம்முறை மிதுனாவிற்கு வியர்த்து விட்டது.
“ஐயோ மேம்… சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது” என்ற மிதுனாவின் முகத்தில் தெரிந்த அதிர்வில் விதுரன் இடைபுகுந்தான்.
“இந்தக் கேள்விய பேக்கேஜிங் டீம் ஹெட்ட தான் மேம் கேட்கணும். ஏன்னா, அவர் மிதுனா ஃப்ரெஷர்னு சும்மா வேடிக்கை பாருன்னு ஓரமா உக்கார வச்சுட்டாரு. எந்த வேலையும் செய்ய விடல…” என்று சீறிட, மிதுனா அவனை அடக்கினாள்.
“சும்மா இரு விது…”
“நீ சும்மா இரு. பேக்கேஜிங் மாடல்னு இவள் ஒண்ண ப்ரெசன்ட் பண்ணுனா. அதை அக்செப்ட் பண்ணிக்கனும்னு கூட இல்ல. டீம் ஹெட் அதைக் குப்பைல போட்டுட்டாரு. இன்டெர்ன்ஸ் யாரும் டைரக்ட்டா அவ்ளோ சீக்கிரம் டீம்ல நுழைய முடியாதாமே. உனக்கு என்ன ஸ்பெஷல் பெர்மிஷன்னு பாலிடிக்ஸ் பண்றாங்க மேம். அவ டீம்னு இல்ல. ஐடி டீம், மார்க்கெட்டிங் டீம் எல்லாமே அப்படி தான் இருக்கு” எனக் கொந்தளித்திட, அகிலும் ஏதோ பேச வந்தான்.
அதற்குள் இதயாம்ரிதா, “இங்க என்கொயர் உங்க மேல இல்ல. இவங்க மேல தான? அப்பறம் எதுக்கு நீங்க பேசிட்டு இருக்கீங்க. எதுவா இருந்தாலும் அவங்க பேசட்டும். ரெண்டு பேரும் வெளிய போங்க” என்றிட, விதுரன் அப்பட்டமாய் கோபத்தை முகத்தில் படர விட்டே வெளியேறினான்.
இறுதியில், பேக்கேஜ்ஜிங் டீம் அதிகாரியையும் அழைத்து துருவியபிறகே அத்தனை டிபார்ட்மென்ட் தலைமையையும் விஷால் விலைக்கு வாங்கியிருப்பது தெரிந்தது.
பாரபட்சம் பார்க்காது ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் தூக்கி இருந்தாள்.
“அம்ரி… இவங்களுக்குள்லாம் ப்ராடக்ட்ஸ் பத்தின நுணுக்கம் தெரியும். என்ன இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸ்ட்” என்று பத்மபிரியா பரிதவிக்க,
“எனக்கு உண்மையா இருந்தா போதும் பத்மா” என்றாள் ஒரே வார்த்தையில்.
குழுவில் இருக்கும் இன்னும் சிறந்த வேலையாள்களுக்கு உயர் பதவி கொடுத்திருந்தாள். மீண்டுமொரு முறை உற்பத்தி நிகழ்ந்தது.
மீண்டும் அவளது தயாரிப்புகளை சோதனை அதிகாரிகள் சோதித்து, இம்முறை அத்தனை சோதனையிலும் வென்று தோல் நிபுணர் முத்திரைபெற்ற A+ உயர்தரம் பெற்றது.
ஒவ்வொரு அடிப்படைத்தேவையான பொருள்களையும் அவளே தொழிற்சாலைக்குச் சென்று சோதித்து, உபயோகித்து பிறகே அனுமதித்தாள். கடந்த ஒரு வாரமாக சரியான உறக்கமும் இல்லை அவளுக்கு. கண்ணிற்கு கீழே கருவளையம் வந்திருந்தது. அதனைக் கவனித்த சத்யா, கவனித்ததோடு நிறுத்திக்கொண்டான்.
அலுவலக அறையில் இதயாம்ரிதாவும் பத்மபிரியாவும் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது சத்யா இடைபுகுந்தான்.
“மேம் அப்போ ஒரு கோடியை என்ன செய்றது. செக் குடுத்துருக்காங்க. ரிடீம் பண்ணிடவா?” எனக் கேட்க, இதயாம்ரிதாவும் சரியென தலையசைத்ததில், பத்மப்ரியா தடுத்தாள்.
“ஏன் சார் அதை வாங்கணும்? அந்த மாடல் நம்ப வச்சு ஏமாத்திட்டான். அவனை வச்சு எடுத்த ஷூட்க்கே அவ்ளோ காசு ஆகியிருக்கும். எதுக்கு அவனை விடணும். அந்த காசை குடுத்துட்டு, அவனை வச்சு எடுத்த ஆட் ரிலீஸ் பண்ணலாம் தான” என்றாள்.
“பண்ணலாம். பட், அவனை வச்சு எடுத்த ஆட் கன்டென்ட் நல்ல ரீச் குடுக்கும். அவனும் ரீச் ஆவான். ஆனா யாரும் ஒளிராவுக்கு மார்கெடிங்கா அதை பார்க்க மாட்டாங்க. இப்போதைக்கு அவன் ஃபேஸ் மக்கள் மனசுல பதியும் அவ்ளோ தான். அடுத்து அடுத்து அவன் வர்ற விளம்பரங்கள் தான் அவன் மேல ஒரு அட்டாச்மெண்ட்டை உண்டு பண்ணும். சோ அதுக்கு அப்பறம் அவன் யாருக்காக மார்க்கெட்டிங் பண்றானோ அவனோட ப்ராடக்ட் தான் சேல் ஆகுமே தவிர. இதுனால நமக்கு எந்த பிராபிட்டும் இல்ல. எதுக்காக ஆட் ரிலீஸ் பண்ணி நம்மளே அவனை வளர்த்து விடணும்? இப்போ பேஸ் வேல்யூ தேவையில்லை. ப்ராண்ட் வேல்யூ போதும்” என்றவனை வாயடைத்துப் பார்த்தாள் பத்மபிரியா.
எப்போதும் அவனது வியாபார அறிவின் சின்ன சின்ன நுணுக்கங்கள் இதயாம்ரிதாவும் அறிந்தது தானே! ஒரே ஒரு நொடி அவன் மீது அடர்ந்த பார்வையை படர விட்டு விட்டு கையில் இருந்த கோப்பில் புதைத்தாள்.
பார்வையைப் போலவே எண்ணங்களும் ஒரு கணம் அலைபாய்ந்தது.
—-
வகுப்பறையை அமைதியின் சின்னமாக இருந்தது. அங்கு சத்ய யுகாத்ரனின் குரல் தான் கணீரென எதிரொலித்தது. பழுப்பு நிற சட்டை கசங்காது பேண்டினுள் டக் – இன் செய்யப்பட்டு இருந்தது.
பிராண்ட் ≠ மாடல். பலகையில் எழுதிய அவனது கண்கள் கூர்மையாய் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரையும் அளவெடுக்க, அவனது கரங்கள் மார்கரை ஸ்டைலாக சுழற்றிக்கொண்டே இருந்தது.
அந்தச் சுழற்றலில் முதல் பெஞ்சில் அமர்ந்து அவனது ஒவ்வொரு அசைவையும் கண்ணிற்குள் நிரப்பிக்கொண்டிருந்த இதயாம்ரிதாவின் மனமும் அவனிடமே சுழன்று கொண்டிருந்தது.
“ஒரு பிசினஸ ரீச் பண்றதுக்கு மார்க்கெட்டிங் முக்கியம் தான். அதை செய்யப்போற மாடலும் முக்கியம் தான். ஆனா, மாடல் மட்டுமே உங்க பிசினஸை ரீச் பண்ணுவாங்களா? ப்ராண்ட் வேலியூ முக்கியமா ஃபேஸ் வேல்யூ முக்கியமா?” எனக் கேட்டு விட்டு ஒரு காலை சுவரில் மடக்கி நின்றான்.
“ப்ராண்ட் வேல்யூ தான்” என இதயாம்ரிதாவும் “ஃபேஸ் வேல்யூ தான்” என விஷாலும் ஒரே நேரத்தில் கூறி விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக்கொண்டனர்.
“என் ஆளுட்ட ஸ்கோர் பண்ண விடுறா கொய்யால?” என்ற முணுமுணுப்பு வேறு அவளிடம்.
இதயாம்ரிதாவை ஒரு நொடி பார்வையால் சுண்டி இழுத்த சத்யா, விஷாலிடம் திரும்பி “எப்படி?” எனக் காதை நீவியபடி கேள்வியெழுப்ப,
“மார்க்கெட்டிங் சார். ஒரு பிராண்டுக்கு யார் மார்க்கெட்டிங் பண்றாங்கன்றதை பார்த்து தான் மக்கள் அதை வாங்கலாமா வேணாமான்னு முடிவு எடுக்குறாங்க. சூதாட்டத்துக்கும் பான் பராக்கும் எப்படி சேல் ஆகுது?” என நக்கலாக எதிர்கேள்வி கேட்டான்.
“ம்ம்… இதே அந்த மாதிரி விளம்பரத்துல நடிக்கிற தட் ஃபேஸ் வேல்யூ உள்ள மாடல்ஸ் ஆர் ஆக்டர்ஸ் ஒரு ஆர்கனைசேஷன்க்கு ஹெல்ப் பண்ண சொல்லி விளம்பரம் பண்ணுனா?” எனக் கேட்டு விட்டு நிறுத்த, விஷால் யோசித்தான்.
“அந்த ஆர்கனைசேஷன்க்கு ஹெல்ப் பண்ணுவாங்க தான சார்” இது ஷ்யாம்.
“ரியலி? ஹண்ட்ரட் பெர்சன்ட்?” என நக்கல் நகையுடன் கேட்டதில் ஷ்யாமும் தலையைச் சொரிந்தான்.
“ஹண்ட்ரன்ட் பெர்சன்ட் இல்லைன்னாலும், அந்த மாடல்க்காக கண்டிப்பா பண்ணுவாங்க சார்” என்று தீர்மானமாக உரைத்தாள் யாமினி.
“ஹ்ம்ம்… எத்தனை தடவை? ஒரு தடவை இல்ல ரெண்டு தடவை… விஷால் சொன்ன அந்த பான்பராக்கையும் சூதாட்டத்தையும் ஒரு தடவை ரெண்டு தடவை மட்டுமா யூஸ் பண்றாங்க?” எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.
நிலோஃபருக்கு சப்டைட்டில் இல்லாமல் வேற்று மொழிப்படம் பார்ப்பது போல குழப்பமாக இருந்தது.
“ஸீ கைஸ்… நம்ம பண்ற மார்க்கெட்டிங், ஃபேஸ் வேல்யூ இதெல்லாம் ஒரு தடவையாவது நம்ம பிராண்டை மக்கள் வாங்கணும்னு யூஸ் பண்றது தான். அந்த ப்ராடக்ட் தரமா, அவங்களுக்கு அடாப்ட் பண்ண முடிஞ்ச விலையோட இருந்தா மட்டும் தான் திரும்ப திரும்ப அதை வாங்குவாங்க. ஒரு பொருளை ஒரு தடவை வாங்க வைக்க தான் அந்த ஃபேஸ் வேல்யூ தேவப்படுதே தவிர, திரும்ப திரும்ப வாங்க வைக்க தேவைப்படுறது தரம் மட்டும் தான். ஒன்னு ப்ராடக்ட் தரமா இருக்கணும், இல்லன்னா மக்கள் அந்த ப்ராண்ட்க்கு அடிக்ட்டா இருக்கணும். விஷால் சொன்ன ப்ராண்ட் அடிக்டட் வெர்சன். பட் இப்ப நான் பேசுறது பியூர் குவாலிட்டி பத்தி.
அந்த மாடல், வேறொரு ப்ராண்ட்க்கு மார்க்கெட் பண்ண போனாலும், நம்ம ப்ராடக்ட்டை வாங்க வைக்கிறது தான் நம்மளோட சாமர்த்தியம். பிசினஸ் டாக்டிக்ஸ்! யூ காட் மை பாய்ண்ட்…” என்று வகுப்பு மாணவர்களைப் பார்த்து கேட்ட சத்யாவை வாயில் ஈ போவது தெரியாமல் பார்த்தனர்.
அவனையே ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருந்த பெண்ணவள், “ஐ ஆல்வேஸ் கேட்ச் யுவர் பாய்ண்ட் ப்ரொஃபி…” என சொல்ல வந்து விட்டு, வகுப்பறையை நினைவு கூர்ந்து “சார்ர்ர்” என்று முடித்து வைக்க,
“ஓ ரியலி… தென், நாளைக்கு ‘ப்ராண்ட் அண்ட் ட்ரஸ்ட்’ வச்சு ஒரு ப்ரெசென்டேஷன் ரெடி பண்ணிட்டு வா!” என்று தன்னை சைட் அடித்ததற்கு தக்க தண்டனை கொடுத்தவன், “ஓகே கைஸ்… சீ யூ டுமாரோ” எனப் பொதுவாய் கூறிவிட்டு நகர்ந்திட, அவன் பின்னே திடுதிடுவென ஓடினாள் இதயாம்ரிதா.
“ப்ரொஃபி… ப்ரொஃபி நில்லுங்க…” என வேகமாய் அவனுடன் இணைந்து நடந்தவளைப் பல்லைக்கடித்து ஏறிட்டவன், “வாட்?” என்றான்.
“நீங்க கேட்டா நிவோரா ப்ராண்டையே ப்ரெசென்ட் பண்ணுவேன். நீங்க என்னனா ஆப்டெரால் ப்ரெசென்ட்டேஷன் கேட்டு இந்தப் பிஞ்சு மனச நோகடிக்கிறீங்களே” என நெஞ்சைக் குத்திக் கொண்டாள்.
“நீ இங்க படிக்கவே வரல அப்படி தான?” கடுங்கோபத்துடன் சத்யா கேட்க,
“ச்சே… சத்தியமா இல்ல. பிஜி படிக்க வர பிடிக்காம ஒரு வாரம் க்ளாஸ் கட் பண்ணிட்டு அப்படியே அப்பாட்ட பிடிக்கலைன்னு சொல்லி எஸ்கேப் ஆக தான் நினைச்சேன். நான் – எலெக்டிவ் ப்ரொஃபஸரா உங்களைப் பார்த்ததும், இந்த ஹார்ட்டு ஃபிளாட் ஆகிடுச்சு ப்ரொஃபி. உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? சிங்கிள் தான?” எனக் கேட்டவளை மூச்சிரைக்க முறைத்தவன், பதில் பேசாது அவளைத் தவிர்த்து விட்டு சென்று விட, அவனைக் கண்டு புன்னகைத்துக் கொண்டாள் இதயாம்ரிதா.
புது காதல் மலரும்
மேகா
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

ராதா சத்யா சூப்பர்.