
அவள் சொன்னதை கேட்டு இருவரும் அதிர்ந்து இருவரின் முகத்தை தான் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர்.
குரு தான் முதலில் அதிர்வில் இருந்து முதலில் வெளியே வந்தான்.
“ஆரா என்ன சொல்ற, நீ சொல்லுறதுக்கு அர்த்தம் தெரியுதா உனக்கு. இதை ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லவில்லை” என்று கசங்கிய முகத்துடன் கேட்க,
காவ்யா “சொல்லுங்க ஆதனி. இது இவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா. இதை தானே முதலில் சொல்லி இருக்கணும்” என்றாள்.
“சொன்னா என்னை தப்பா நினைச்சுட்டா அதான் சொல்லல. நான் வேண்டும் எல்லாம் கல்யாணம் பண்ணல” என
“இதுல உன் தப்பு என்ன இருக்குன்னு நீ பயப்படுற” என்ற காவ்யா, குருவிடம் “இதை கண்டிப்பா சுமுகமாக முடிக்க முடியாது பிரசாத். கேஸ் போட்டா மொத்த மீடியா கவரேஜும் இதை தான் பேசும். கேஸ் போடலாமா இல்ல வேற விதமாக முடிக்கலாமா” என
“கேஸ் எல்லாம் வேண்டாம்” என்று வேகமாக ஆதனி சொல்ல, ஆனால் “இல்ல காவ்யா அவன் மேல கேஸ் போடணும். கண்டிப்பா போடணும். இது ரொம்ப கம்பிளிகேட் ஆன விசயம். மைனர் மேரேஜ் கண்டிப்பா கேஸ் போடணும். நீ அதுக்கான ப்ரோசீஜர் எல்லாத்தையும் பாத்துக்கோ. முக்கியமான விஷயம் எனக்கு இந்த கல்யாணத்துக்கு டிப்ஸ் வேண்டாம் இது கல்யாணமே இல்லை என்று தீர்ப்பு வேணும். நடந்த மேரேஜ் கல்யாணத்தை வாயிடாக்கணும் (void) முடியுமா” என்று கேள்வியாக அவளைப் பார்க்க,
“கண்டிப்பா…. கண்டிப்பா பிரசாத் இது ஒன்னும் நார்மல் மேரேஜ் இல்லையே. எனக்கு அந்த கல்யாணம் நடந்ததுக்கான தேதியோடு ஏதாவது ஒரு சின்ன எவிடன்ஸ் மட்டும் கலெக்ட் பண்ணி கொடு போதும். நானும் என்னுடைய ஜூனியர் கிட்ட சொல்லி ஏதாவது தேடறேன்” என்று காவியாவும் சொன்னாள்.
குரு பிரசாத்தின் கைகளைப் பற்றிக் கொண்ட ஆதனி “பயமா இருக்கே திருப்பி அவன் கிட்ட போயிட்டேனா. என்ன செய்யறது? அவன் ரொம்ப பெரிய ரவுடி. நிறைய தப்பு பண்ணி இருக்கான். கொலை கூட பண்ணி இருக்கான். நம்ம எப்படி எதிர்த்து போராட முடியும்?”
குரு “கண்டிப்பாக போராடி தான் ஆகணும் ஆரா. நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க, வாழ்க்கை முழுக்க இப்படியே தலைமறைவா ஓடி ஓடி வாழ்ந்துக்கலாம்னு இருக்கியா. காவியா கண்டிப்பா பெரிய தண்டனை வாங்கி தரணும். உன்ன தான் மலை போல நம்பி இருக்கோம். சரி போலீஸ் ஸ்டேஷன் வர சொன்னாங்களே இப்ப அதுக்கு என்ன செய்யறது”
காவியா “என்னோட ஜூனியர் பையனைப் போய் இன்பார்ம் பண்ணிட்டு வர சொல்றேன். கோர்ட்ல கேஸ் போட போறோம் சொல்லிட்டா போலீஸ் ஸ்டேஷன்ல பெருசா எந்த ப்ராப்ளம் இருக்காது. ஒரு பேப்பர்ல மட்டும் இது மாதிரி கோர்ட்ல கேஸ் போட போறோம் என்று எழுதி சைன் மட்டும் போட்டு கொடுத்துருங்க போதும்” என்று காவ்யா சொன்னது போல எழுதி ஆராவிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டான் குரு.
அடுத்த நாள் சென்னை ஐகோர்ட்டில் ஆதனி சார்பாக காவியா வழக்கை தொடர்ந்து விட்டு எதிர் தரப்பிற்கு சமன் அனுப்பப்பட்டது.
திருச்சிக்கு இருவரும் திரும்பி விட்டனர். வந்த பின்பு தான் தன் தாய் தந்தையிடம் ஆதனி நிலைமையை கூறினான் குரு பிரசாத்.
எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. கல்லூரி திறக்க இன்னும் இரு தினங்களே இருந்தது.
தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளத்திலும் ஆதனி கேஸ் தான் தீயாக பரவிக் கொண்டு இருந்தது. அதுவும் இவர்களுக்கு எதிராக தான்.
குரு அந்த விசயம் அறிந்து ஒரு சேனல் ஒன்றை ஃபோனில் ஓட விட, அதில் “வணக்கம் நேயர்களே.. இன்று இந்த நகரத்தையே உலுக்கி கொண்டிருக்கும் முக்கிய வழக்கை பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த வழக்கில் சம்பந்தமான ஆதினி என்பவர் தன் கணவனோடு இல்லாமல் திருச்சி அருகே தனியாக தங்கி கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் இப்பொழுது திருச்சிக்கு அருகே உள்ள கல்லூரியில் ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவியும் கூட. படிக்கும் சமயத்திலேயே கல்யாணம் முடித்துக் கொண்ட இவர் சில காரணங்களுக்காக கணவனை விட்டுவிட்டு தனியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு செங்கம் அருகே இருந்த ஒரு மகளின் காவல் நிலையத்தில் இவரின் கணவர் கணேசன் தன் மனைவி தன்னோடு வந்து வாழ வேண்டும் என்று ஒரு புகாரை அளித்துள்ளார். ஆனால் அதற்கு இவரோ தன்னை அவர் மைனராக இருந்த பொழுது திருமணம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தின் வழக்கு பதிந்துள்ளார்.
மேற்கொண்டு, கணேசன் சில மாதங்களுக்கு முன்புதான் கொலை வழக்கில் இருந்து விடுதலை ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கை மேலும் தெரிந்து கொள்ள எங்கள் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள்”
என்று அவர்களுக்கு கிடைத்த ஒரு தகவலை வைத்துக் கொண்டு கதைகள் பலகட்டி கோட்டையை கட்டி விட்டனர் சமூகத்தில் மிகுந்த ஆர்வம் உடைய சமூக சேவர்கள்.
அடுத்த நொடியே அவனுக்கு ஃபோன் வந்தது காவியாவிடம் இருந்து தான்.
“என்ன காவ்யா இது. இப்படி எல்லாம் கண்டமேனிக்கு பேசிட்டு இருக்காங்க. எது உண்மை என்று தெரியாமல் அவங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காங்க” என்று ஆதங்காமக சொல்ல,
“நானும் பார்த்தேன் பிரசாத். நமக்கு இப்ப அதில் எல்லாம் கவனம் செலுத்த நேரம் இல்லை. இன்னும் பத்து நாளில் நமக்கு கோட் ஹேயரிங் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது ஒரு ஆதாரம் கிடைக்குமா??” என்று காவியா கேட்க,
“அந்தப் பிராட் தெளிவா எந்த எவிடன்ஸ் கிடைக்க கூடாதுன்னு பக்காவா பிளான் பண்ணி தான் அந்தக் கோவிலில் கல்யாணம் பண்ணி இருக்கான். கோவில் உள்ளையும் சரி சுற்றியும் சரி ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை. நமக்கு இருக்கிற கடைசி ஹோப் அந்த ஹாஸ்பிடலில் இருக்கிற சிசிடிவி தான்.
அதுக்காக தான் நம்ம கூட படிச்சானே வினோத் அவன் கிட்ட சொல்லி இருக்கேன். அவன் பார்த்து விட்டு சொல்லுவான். இன்னும் இந்த விசயம் ஆராவிற்கு தெரியுமானு தெரியல. ஒரு வேள தெரிஞ்சி இருந்தா ஃபீல் பண்ணிட்டு இருப்பா. வெளிய சொல்ல கூட மாட்ட. அவளை எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளிய கொண்டு வர போகிறேன் என்றே தெரியல” என்று பெருமூச்சுடன் பேச்சை நிறுத்த,
“நான் ஒன்று கேட்கவா பிரசாத்” என்று காவியா தயக்கத்துடன் நிறுத்த,
“ம்ம்… கேளு காவியா” என்ற அவனின் ஒப்புதலுக்குப் பின் “உனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிக்குமா? இப்படி அவளுக்காக ரொம்ப ரிஸ்க் எல்லாம் எடுக்கிற. நீ இப்படி எல்லாம் கிடையாதே. நம்ம லவ் பண்ண டைமில் கூட ஏதாவது பிரச்சனை அது எனக்கே இருந்தாலும் நீ அந்த பக்கமே வர மாட்ட.
இப்ப இந்த பொண்ணுக்காக இவ்வளவு ரிஸ்க். உனக்கும் அந்த பொண்ணுகும் நடுவுல ஏதாவது” என்று அவள் மேலே பேசும் முன்,
“போதும் காவியா. எங்க இரண்டு பேருக்கும் நடுவுல என்ன இருக்கிறது என்று நான் பார்த்துக்கிறேன். அது உனக்கு வேண்டாத விசயம். அவ எனக்கு என்னவா இருந்தாலும் நான் அவ கூடவே இருப்பேன். நான் பண்ண பெரிய தப்பே அவளை விட்டு இத்தனை வருடம் தள்ளி இருந்தது தான்.
நான் மட்டும் கூட இருந்து இருந்ததால் இதை எல்லாம் தடுத்து இருப்பேன். இப்ப கூட என் வீட்டில் உனக்கு எதுக்கு இது எல்லாம் திட்டிட்டு தான் இருக்காங்க. பச்… இதை எல்லாம் எதுக்கு நான் இப்ப கடை பரப்பிட்டு இருக்கேனோ. இதை விடு, இனி இது மாதிரி எதுவும் கேட்காத. முக்கியமாக ஆதனி கிட்ட.
நாங்க எப்ப வரணும் என்று முன்னாடியே சொல்லிடு. காலேஜ் திறந்துடுவாங்க. லீவ் எல்லாம் முன்னாடியே சொல்லணும்” என்று மேலும் தனக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு தெளிந்த பின்னே அசைபேசியை அனைத்தவன், ஆதனியை தேடி அவள் இல்லத்திற்கு சென்றான்.
அங்கே ஆதனி மிகுந்த கவலையுடன் கையும் அலைபேசியை வைத்துக் கொண்டு இருந்தாள். அவள் கையில் இருக்கும் அலைப்பேசியை வைத்தே அவன் கணித்து விட்டான் விஷயம் அவளுக்கும் தெரிந்து விட்டது என்று.
“என்ன ஆரா எதோ பெரிய யோசனையில் இருப்பது மாதிரி தெரியுது” என
“இல்ல யூடியூப் நியூஸ் எல்லா பக்கமும் என் பெயரை தான் போட்டு கிழிச்சிட்டு இருக்காங்க. காலேஜ் வேற திறக்க போறாங்க. இந்த மாதிரி நேரத்தில் காலேஜ் போகலாமா வேண்டாமா என்று யோய்சிட்டு இருக்கேன்” என்று கவலையாக சொல்ல,
“யார் என்ன பேசின உனக்கு என்ன. நீ கண்டிப்பா காலேஜ் வர” என்று சொன்னவன் அப்பொழுது தான் ஒரு விசயத்தை கவனித்தான். உடனே
“என்ன எந்த முறையும் வெச்சி கூப்பிடாமல், மொட்டையாக பேசற. ஏதாவது ஒரு முறையை வெச்சி சொல்றது தானே. இல்ல சின்ன வயசுல கூப்பிட்ட மாதிரியே” என்று அவன் முடிக்கும் முன்னே “இல்ல இல்ல நான் எப்படியும் கூப்பிடல. காலேஜில் வேண்டும் என்றால் சார் என்று சொல்லிக்கிறேன்” என்று அவசரமாக சொன்னாள்.
பின்னே அப்பொழுது போல் அண்ணா என்று அழைக்க சொல்லிவிட்டால், அந்த பயம் தான் அம்மணிக்கு.
அவளின் அவரச பதிலில் ஒரு மார்க்கமாக அவளை பார்த்து வைத்தவன் பின், “கேக்கணும் நினைச்சேன். இப்ப பாட்டி எப்படி இருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல தானே”
“இப்ப ஓகே தான். இருந்தாலும் முன்ன மாதிரி இல்ல. வேகமாக பேச கூட முடியாமல் கஷ்டப்படுறாங்க. அவங்க வயசு ஒரு காரணம் என்றால் என்னை நெனச்சியே ரொம்ப கஷ்டப்படுறாங்க”
“உனக்கு உங்க அம்மாவை பார்க்கணும்னு தோணவே இல்லையா” என்று குரு கேட்க,
“அவங்க தனியா இருக்கிறதை நினைச்சா வேதனையா தான் இருக்கு. அதனால எல்லாம் அவங்க கூட என்னால இருக்க முடியாது. எல்லாரும் சொல்லுவாங்க அம்மாக்கு எப்பவும் அவங்க குழந்தை தான் முதலில் என்று. ஆனால் என் அம்மா அப்படி இல்லையே. முதல என்ன கடைசியாக கூட என்னை பற்றி நினைக்கலையே. அவங்க மட்டும் எனக்கு துணையாக இருந்து இருந்ததால் இப்ப எனக்கு இந்த நிலை இருந்து இருக்காது தானே. எனக்கு அவங்க மேல கோவம் எல்லாம் இல்ல வருத்தம் தான். இந்த வலி என்னோட இதயத்தில் இருந்து போகிற வரை நான் அவங்க கூட இல்லாதது தான் அவங்களுக்கு நல்லது” என்று அவளது முடிவில் உறுதியாக இருக்க அவனும் இதனை விட்டுவிட்டான்.
கல்லூரியின் திறந்து விட்டது. வழக்கம் போல் அனைத்து வகுப்புகளும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்தது. அடுத்த வகுப்பிற்கு நடுவில் 15 நிமிடம் இடைவேளை கொடுக்கப்பட்டது.
சரியாக ஆதனி வெளியே செல்ல நினைக்கும் போது “இதோ இவளை பற்றி தெரியுமா?? ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சாம். அப்பறமா புருஷன் கூட சண்டை போட்டு இங்க வந்து படிக்கிற போல. இன்னும் நிறைய சொல்றாங்க இவளை பற்றி. இவள் எல்லாம் நல்ல பொண்ணே இல்லையாம். புருஷனை விட்டுட்டு தனியா இங்க வேற யார் கூடவோ இருக்கிறதா சொல்றாங்க.
ஒரு சேனலில் சொன்னாங்க, இவங்க அப்பா நிறைய கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் இவளை அந்த கடங்கரணிடம் வித்துட்டாங்க என்று.
ஸ்கூல் முடிக்க முண்ணவே ஓடி போய் கல்யாணம் பண்ணி இருக்கா” என்று அவள் வகுப்பு மாணவிகள் இவளை பற்றி பேசிக்கொண்டு இருக்க,
அதை காதில் வாங்கி கொண்டு வெளியே வந்தவள் ‘என்ன வாழ்க்கை நான் வாழரேன். என் கஷ்டம் எல்லாம் இவங்களுக்கு வெறும் கதை தான் போல’ என்று அந்த காரில் காரிடாரில் நடந்து செல்ல,
கண்கள் கலங்க நடந்த செல்லும் இவளை தூரத்தில் இருந்து பார்த்து விட்டான். இருந்தும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
மாலை மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டு, இதமான வானிலையும் ரசித்துக்கொண்டு சென்றிருந்த குரு பிரசாத்தில் வண்டியை சீறிக்கொண்டு முன் சென்ற கார் ஒன்று அவனை வழி மறித்து நின்றது.
காரில் இருந்து நான்கு அடியார்களை போன்றவர்கள் இறங்கினார்கள். அவர்கள் பார்த்ததும் புரிந்து கொண்டான், இது கண்டிப்பாக கணேசனின் வேலையாகத்தான் இருக்கும் என்று.
“இதோ பாரு வாத்தி, உன்னோட வேலை பசங்களுக்கு பாடம் எடுக்கறது மட்டும் தான் எங்க அண்ணாக்கு என்ன பண்ணனும் சொல்லி கொடுக்கறது இல்லை. நீ இந்த உலகத்தில் நிம்மதியாக வாழனும் என்றால் இந்த கேஸில் இருந்து விலகிக் கொள். நீ போயிடா அந்த பொண்ணை என் தலைவன் ஈஸியாக மடக்கிடுவான்” என்று ஒருவன் சொல்ல,
மற்றொருவன் “இவன் கிட்ட என்ன டா பொறுமையாக பேசிட்டு இருக்க. ஹே வாத்தி உனக்கு இந்த ஊருல மரியாதையா வாழனும் என்ற எண்ணம் இருந்த இதோட போயடு. என் தல உன்னை மன்னிச்சிடும்” என
குரு வண்டியை விட்டு இறங்கவே இல்லை. அவர்களை பார்த்து “இந்த குருக்கு எதுவா இருந்தாலும் நேரா பார்த்து தான் பழக்கம். முடிஞ்சா உன் தலையை வந்து பேச சொல்லு. அப்பறமா இந்த கேஸ் விசயத்தில் என் கிட்ட பேசறது வேஸ்ட். நான் கேசை வித்டிரா பண்ண மாட்டேன்” நீங்க பேசுங்க டா நான் ஏன் கேட்கணும் என்று தன் வண்டியை திருப்பி மீண்டும் கல்லூரியை நோக்கி சென்றான்.
அங்கே அப்பொழுது தான் ஆதனி பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து வருவது தெரிய, நேரே அவள் முன் நிறுத்தி “ஏறு ஆரா. அந்த கணேசன் ஆட்கள் இங்க தான் இருக்காங்க” என்றதும் சுற்றி பார்க்க, அப்பொழுது தான் எல்லாரும் கல்லூரியை விட்டு வெளியே வருவது தெரிந்தது.
எல்லார் பார்வையும் இவர்கள் மேல் தான். அதை குரு பெரிதாக எண்ண வில்லை. ஆனால் ஆதனியோ “எல்லாரும் பார்க்கிறாங்க” என்று மெதுவாக சொல்ல,
“அட நேரம் ஆச்சு. ஏறு மா” என்றான்.
“நான் ஒன்று சொல்றேன் ஆரா. தப்பா எடுத்துக்காத. இப்ப படிப்பில் மட்டும் தான் உன் கவனம் இருக்கணும். இப்ப நீ எமோஷனலா ரொம்ப வீக்காக இருப்ப. உன் கிட்ட சாதரணமாக யாராவது பேசனா கூட உன் மனசு அவங்க கிட்ட அலைபாய ஆரம்பிக்கும். உனக்கு என்ன வேண்டும் என்று இப்ப சரியாக உன் மனசும் சரி மூளையும் சரி யோசிக்காது. உன்னை யார் கிட்டவும் பேச வேண்டாம் என்று எல்லாம் நான் சொல்லல. படிப்பை தாண்டி பேச வேண்டாம் என்று தான் சொல்றேன். யார் என்ன பேசின நமக்கு என்ன? எல்லார் கிட்டவும் உன்னை பற்றி சொல்லணும் என்ற அவசியம் உனக்கு இல்ல. நீ முதல அதில் இருந்து வெளிய வரணும். அப்ப தான் உன்னால் உன் வாழ்க்கையில் அடுத்து என்ன பண்றது என்று யோசிக்க முடியும்.
இன்னும் ஒரு மாசம் இல்ல இரண்டு மாசம் தான் இந்த பிரச்சனை எல்லாம். சீக்கிரமே உன்னை இந்த பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வரேன்” என்று அவளுக்கு நல்லதை சொல்கிறேன் என்று வீடு வரும் வரை காதை அறுத்துவிட்டான்.
அவள் வீடு வந்ததும், “நாளைக்கு ரெடியாக இரு நானே உன்னை காலேஜ்க்கு கூட்டிட்டு போறேன். இன்றைக்கே உன் டிரஸ் எல்லாம் பேக் பண்ணிடு. நாளைக்கு நைட் கிளம்ப சரியாக இருக்கும். பை” என்று அவன் இல்லம் நோக்கி வண்டியை செலுத்த,
“கண்டிப்பா என் மனசில் இருக்கிறதை நான் உங்க கிட்ட சொல்ல மாட்டேன். முதல் முறை இது என்ன உணர்வு என்று தெரியாமல் உங்களை தவற விட்டேன். இந்த முறை தெரிந்தே தவற விட போறேன். உண்மையாலுமே நான் உங்களை காதலிக்கிறேனா??” என்ற கேள்வி குறியோடு தான் அவள் வாழ்க்கை பயணிக்கிறது.
