
“இங்க என் பெர்மிஷன் இல்லாம உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணாதீங்க புரியுதா?” எனக் கடிந்தாள் இதயாம்ரிதா.
“என் வேலையைத் தவிர சம்பந்தம் இல்லாத வேலை குடுத்தா என் ரியாக்ஷன் இதுவா தான் இருக்கும் மேம். உங்களுக்குப் பிடிக்கலைன்னா என்னை ஃபயர் பண்ணிக்கோங்க” என நிமிர்வாய் கூறி விட்டு தனது மேஜைக்கு சென்ற சத்யாவை வெட்டவா குத்தவா ரீதியில் முறைத்தாள்.
நிவோரா காஸ்மெட்டிக் பிராண்ட் மாடலாக விஷாலும் சுனைனாவும் தான் இருந்தனர். தற்போதும் இருவருமே இல்லாது போனதில், புதிதாய் ஒருவரை ப்ராண்ட் மாடலாக அறிமுகம் செய்திட வேண்டும். உடனடியாக அந்த மாடலை பெங்களூருவில் நடக்கும் அழகுகலை சாதனப் போட்டிக்கு அனுப்பி வைத்து, தனது கம்பெனி சார்பாக காஸ்மெட்டிக் பொருள்களை உலகளவில் விற்பதற்கு வழி செய்திட வேண்டும்.
நிவோரை என்ற பிராண்டை தவிர்த்து, இத்தனை வருட தயாரிப்பில் சின்னப் பிசிறும் இருக்கப்போவதில்லை எனப் புரிய வைத்திட வேண்டும். ஆனால், அதெற்கெல்லாம் அவளுக்கு வாய்ப்பு வர வேண்டும். தரைமட்டத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கத் தவழ்கிறாள்.
பல துரோகங்கள் சந்தித்தாகி விட்டது. இனியும் சந்திக்க தீர்மானம் செய்து விட்டாள் தான். ஆகினும், எங்கு தொடங்கி எங்கு முடிக்க என்பதே பெரிய கேள்விக்குறி. தங்களுக்கு உற்பத்தியை பரவலாக எடுத்துச் செல்ல, அழகும் ஆளுமையும் வசீகரமும் நிறைந்த மாடல் நிச்சயம் தேவைப்படுவதாக இருந்தது.
பெண்களுக்கு உரித்தான அழகு சாதனப் பொருள்களை விட, ஆண்களுக்கு தேவைப்படும் அழகு சாதனப் பொருள்கள் தான் உச்ச விற்பனை பெரும். பெர்ஃபியூம், லோஷன் என பலவகையான க்ரீம்களை, தரமுடன் தருவதில் நிவோராவை அடித்துக்கொள்ள ஆள்களே இல்லை.
தற்போது, நிவோரா என்ற பிராண்டை தவிர்த்து, வேறு பெயர் சூட்ட திட்டமிட்டு இருந்தாள் இதயாம்ரிதா. ஆறு மாதங்கள் அப்பெயரை வைத்து தொழிலை நிர்வகித்திட ஏனோ பிடிக்கவில்லை.
ஆனால், மனதிற்கு பிடித்த பெயர் தான் கிட்டவில்லை. சோர்வாய் வீட்டை அடைந்தவளை தாயுடைய காபியின் மணம் வரவேற்றது.
பின் ஐம்பதுகளில் வசீகரிக்கும் முகம் உமாவிற்கு. சில மாதங்களுக்கு முன் கணவனை இழந்து தன்னுடைய தைரியத்தை மீட்டும் முன்னே மகளின் வாழ்வு கண்முன்னே கேள்விக்குறியாய் இருக்கிறது. இந்தக் கவலை அரித்தாலும் கம்பீரத்தை விடவில்லை அவர்.
இதனைக் கடந்து விடுவாள் என்ற மகளின் மீதிருந்த பெரும் நம்பிக்கையே காரணமெனலாம்.
தந்தை இருந்தவரை அவருடன் மட்டுமே அளவுக்கதிகமான பாசமும் நெருக்கமும் வைத்திருந்தவள் இதயாம்ரிதா. உமாவிடம் இருந்து இரண்டடி தள்ளியே நிற்பாள். அவர் கண்டிப்பதும் ஒரு காரணம் தான். தந்தை மறைந்தபிறகே தாயின் நிதானமும், அவரது அளவு கடந்த அமைதியான அன்பையும் தனியே அனுபவிக்கிறாள். தாயின் அன்பை முழுதாய் உணர்கிறாள்.
மகளைக் கண்டதும் தானாய் ஒரு முறுவலை பரவ விட்ட உமா, டயர்டா “தெரியுறியேடா. எல்லாம் ஓகே வா?” எனக் கேட்டபடி காபியை நீட்டினார்.
பெருமூச்சு விட்டவள், “எதுவுமே ஓகே இல்ல. ஆனா உங்களைப் பார்த்ததும் எல்லாம் சரியாகிடும்னு ஒரு நம்பிக்கை வந்துருக்கு மாம்!” என்றாள் சோர்வாய்.
“சரி ஆகிடும்டா!” மகளின் தலை கோதினார். கண்ணில் நீர் நிறைந்து நின்றது.
“மாம் ப்ளீஸ்” கண்ணைச் சுருக்கிக் கெஞ்சினாள் இளையவள்.
சட்டென தன்னை மீட்டவர், “வேற என்ன நடந்துச்சு ஆபிஸ்ல?” எனக் கேட்டார்.
“ம்ம்ம்… ஆபிஸ்ல இப்போதைக்கு ஃப்ரெஷர், இன்டெர்ன்ஸ் தான் நிறைய. அப்பறம் அம்சமா ஒரு பி. ஏ வந்துருக்கான். கொஞ்சம் ஆட்டிடியூட் காட்டுறான்” என மூக்கைச் சுருக்கிய மகளைச் செல்லமாய் தலையில் தட்டினார்.
காபியை ஒரு மிடறு பருகிய இதயாம்ரிதா, “மாம்! நீங்க ஓகே தான?” எனக் கேட்க, அவரிடம் சிறு விரக்தி.
“நீ இருக்கும்போது எனக்கு என்ன… ஓகே தான்டா” சின்னப் புன்னகை அவரிடம். அதில் முழுக்க நிறைந்துள்ள வலி அவளுக்குப் புரியாதா என்ன?
சற்றே சிந்தித்தவள், “மாம்… நீங்க டேடிட்ட அடிக்கடி ஒரு விஷயம் கேட்பீங்களே. ஞாபகம் இருக்கா?” என ஆரம்பித்தாள்.
உமா புரியாது பார்க்க, “உங்க நேட்டிவ் ஏதோ ஒரு வில்லேஜ் தான? அங்க போகணும்னு கூட அடிக்கடி கேட்பீங்களே…” என்றாள்.
“அதுக்கு என்ன இப்போ?”
“டேடி உங்களுக்கு எப்பவும் பெர்மிஷன் கொடுத்ததே இல்ல. நீங்களும் அவரை மீறி போனது இல்ல. இப்போ ஏன் நீங்க அங்க போக கூடாது” என வினவினாள்.
“இப்பவா? உன்னைத் தனியா விட்டுட்டா? விளையாடுறியா அம்ரி?” உமா கண்டித்தார்.
“கமான் மாம். இவ்ளோ நாளும் டேடிக்காக நீங்க உங்களுக்குப் பிடிச்சது எதுவும் செஞ்சது இல்ல. உங்களுக்குப் பிடிச்ச இடத்துல கொஞ்ச நாள் இருந்துட்டு வாங்களேன். உங்களுக்கு ஒரு மனமாற்றமா இருக்கும்.”
“நான் இங்க இருக்குறது உனக்குத் தொந்தரவா இருக்கா அம்ரி?” உமா நேரடியாகக் கேட்டார்.
“ஆமா ஆமா ரொம்பத் தொந்தரவா இருக்கு…” தாயை முறைத்தவள்,” எனக்கு பிசினஸ்ல ஸ்டாண்ட் ஆக கொஞ்சம் டைம் வேணும். ப்ளஸ் தனிமையும் வேணும்மா. நீங்க என்னை எந்த விதத்துலயும் டிஸ்டர்ப் பண்ணல. பட், ஐ ஜஸ்ட் தாட்… நீங்க உங்களுக்குப் பிடிச்ச இடத்துல கொஞ்ச நாள் இருந்துட்டு வர்றதுக்குள்ள, இங்க நான் எல்லாமே செட்டில் பண்ணி வைக்கலாம்னு” என்றவளை ஆழ்ந்து பார்த்தார்.
அவரது பார்வையில் பெருமூச்சு விட்டவள், “இழந்ததை திரும்ப மீட்குறதுக்கு ஒரு போராட்டமே செய்யணும்மா. அதை மீட்க இன்னும் என்னவேணாலும் இழக்க வேண்டியது இருக்கும்… நம்மகிட்ட மிச்ச இருக்குற ப்ராபர்டீஸ்ஸயும்…” என்றாள் இறுக்கத்துடன்.
அவளது மனநிலை புரிந்தது உமாவிற்கு. இந்த பங்களாவையும் ஒருவேளை இழக்க நேரிட்டால், தன்னை எதிர்கொள்வது அவளுக்கு கடினமாக இருக்கும் என்று!
குளம் கட்டிய கண்களை சிமிட்டவர், காலியான காபி கப்பை எடுத்து எழுந்து, “நாளைக்கே கிளம்பட்டாடா?” என்றார்.
அவரது புரிதலில் அவளது உள்ளமும் உருகியது.
“மாம்…” அவரை இடையுடன் கட்டிக்கொண்டாள் இதயாம்ரிதா.
மகளின் கேசத்தைக் கோதி விட்டவரின் அரவணைப்பு அவளை இளக்க, “நான் வேணும்னா கிவ் அப் பண்ணிடவா மாம்…” என்றாள்.
“உனக்காக கிவ் அப் பண்றதும் போராடுறதும் உன் விருப்பம் அம்ரி. ஆனா எனக்காகன்னு யோசிச்சா, கண்டிப்பா போராடுன்னு தான் சொல்லுவேன்.”
அவரது வார்த்தையில் நிமிர்ந்தவள், “என்னால முடியுமா? என்னவோ சட்டுனு வீக்காகிட்ட மாதிரி ஒரு ஃபீல் மாம்!” என்றவளை கூர்மையாய் பார்த்தார்.
அனைத்தும் இழந்து நின்ற போது கூட அவள் உடையவில்லையே!
“உன்னைப் பாதிக்கிற மாதிரி எதுவும் நடந்துச்சா அம்ரி?” அன்னைத் தன்னைக் கண்டுகொண்டதை உணர்ந்தவள், “நாட் அட் ஆல். என்னால நீங்க சஃபர் ஆக வேணாம்ல. அதான்… ஓகே மாம். இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிவடைந்தது. இன்னைக்கு நைட் எட்டு மணிக்கு இம்பார்ட்டண்ட் மீட்டிங் இருக்கு. நான் ரெடியாகுறேன்” எனக் கண்சிமிட்டி விட்டு எழுந்தாள்.
மாலை வேளையில் தவறாது வீட்டிற்கு வந்து தாயுடன் நேரம் செலவழிப்பது புதிதாய் அவள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். அவருக்கும் அது தேவையானதாய்!
மீண்டும் தயாராகி அலுவலகம் சென்றவள், இன்டெர்ன்ஸ் நால்வரையும் அழைத்தாள்.
“என்னடா மேம் திடீர்னு கூப்பிட்டு விட்டுருக்காங்க. அவங்க கூப்ட்டாலே பதறுது!” என்றபடி மிதுனா உள்ளே நுழைய மற்ற மூவரும் அவளைப் பின்தொடர்ந்தனர்.
சத்யா தனது இருக்கையில் வேலையில் மூழ்கி இருந்தான். வந்தவர்களை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“மேம் கூப்டீங்க…” பூமிகா வியர்த்து வழிந்தாள்.
“எஸ் கூப்பிட்டேன். பட் நீ ஏன் இப்படி ஸ்வெட் ஆகியிருக்க?” இதயாம்ரிதா புருவம் சுருக்கினாள்.
அகில் தான், “அவளுக்கு டென்ஷன் ஆனா பிபி ஏறி படபடன்னு ஆகிடுவா மேம்” என நக்கலாய் கூற, “அமைதியா இருடா பிசாசு” என அவன் காலை மிதித்தாள்.
“இப்ப இங்க என்ன டென்ஷன்?” தாடையில் ஒரு விரலை அழுத்தி கேட்ட இதயாம்ரிதாவிடம், “நீங்க கூப்பிட்டு விட்டதே ஒரு டென்ஷன் தான் மேம்…” என்றான் அகில்.
“என்ன உங்களை ஃபயர் பண்ணிடுவேன்னு பயமா?” அவர்களை கண்டுவிட்டு கேட்டவளைக் கண்டு விழித்தனர்.
“டோன்ட் வொரி. இப்போதைக்கு எனக்கு அந்த ஐடியா இல்ல. வெல்! உங்கள நான் வர சொன்னதுக்கு ரீசன் வேற.”
“கிட்டத்தட்ட நம்ம கம்பெனில இன்டெர்ன்ஸ் மட்டுமே 50 பேர் ஜாயின் பண்ணிருந்தாங்க. யூ நோ தட்! அதுல பத்து பேர் ரிலீவ் ஆகிட்டாங்க. மீதி பேர் அவங்க ஒர்க்க தட்டி கழிச்சாங்க. பிகாஸ், அவங்க எதிர்பார்த்த ப்ராண்ட் இது இல்லன்னு. பட் கைஸ், உங்க ட்ரைனிங் பீரியட் எல்லாம் அனலைஸ் பண்ணுனேன். கம்பெனிக்குள்ள என்ன நடந்தாலும், உங்க ஒர்க் க்ளியரா இருக்கு. குட்…
உங்க ப்ராகிரஸ் என்னை இம்ப்ரெஸ் பண்ணிருக்கு. சோ உங்க நாலு பேரை மட்டும் இங்க எம்பிளாயியா அப்பாய்ண்ட் பண்றேன். பட் எனக்கு இது மட்டும் பத்தாது” என்றவளை விதுரன் தவிர மூவரும் மகிழ்வும் குழப்பமும் கலந்து பார்த்தனர்.
சில நொடி இடைவெளிக்குப் பிறகு, “விதுரன்” என அழைக்க, அவனோ தலையைக் குனிந்தபடி வேறொரு யோசனையில் இருந்தான்.
“விதுரன்” இம்முறை குரலை உயர்த்தி இதயாம்ரிதா அழைத்ததில் மிதுனா அவனைக் கிள்ளியதன்பிறகே நிகழ்விற்கு வந்தான்.
“மேம்!” என்றவனை அழுத்தமாக ஏறிட்டவள், “கவனம் முக்கியம் விதுரன்” என்று அதட்டி விட்டு, “உன்னோட பி. ஆர் ஐடியாஸ் எல்லாம் டிஃபரெண்ட்டா இருந்துச்சு. சோ யூ கேன் ஜாயின் டூ தி டீம். அண்ட், கிவ் யுவர் ஐடியாஸ். ஐ. டி டீம் ஹெட் பவன் உன்னை கைட் பண்ணுவாரு.
அகில்… நீ ஆஃப்லைன் மார்க்கெட்டிங் மேனேஜ் பண்ணனும். யூடியூப், இன்ஸ்டா இன்ப்ளூயர்ஸ பிடிச்சு அவங்க மூலமா ப்ரொமோட் பண்ணனும்.
டுமாரோ ஆன்வர்ட்ஸ், ஆடி அசைஞ்சு ஆபிஸ் வர்றதுக்கும் கேன்டீன்ல உக்காந்து என் டைவர்ஸ் பத்தி அலசி ஆராயிறதுக்கும் இப்ப நீங்க இன்டெர்ன்ஸ் கிடையாது. இந்த கம்பெனியோட எம்பிளாயிஸ். இந்த ப்ரெஷர், எக்ஸ்பீரியன்ஸ்னு நான் பிரிச்சு எல்லாம் பார்க்க மாட்டேன். உங்க க்ரியேட்டிவிட்டியை எந்த அளவு காட்டுறீங்களோ அந்த அளவு உங்க ப்ரோமோஷன்ஸ், ஹைக் எல்லாமே இருக்கும்” என்றவளை நால்வரும் பேயறைந்தது போல பார்த்தனர்.
கேன்டீனில் இவர்கள் பேசியது இவளுக்கு எப்படி தெரிந்தது? என்ற பயம் தான்.
“ஓகே நொவ் கேர்ள்ஸ்… மிதுனா அண்ட் பூமிகா. பாய்ஸ் ரெண்டு பேரும் கம்பெனிக்கு அவுட்சைட் ஒர்க்ஸ் பார்ப்பாங்க. நீங்க அப்படி கிடையாது. மிதுனா, நீ இப்ப ரிசர்ச் அண்ட் டெவெலப்மென்ட் டீம்ல ஜாயின் பண்ண போற. நம்ம தயாரிக்கிற கிரீம்ஸ், ஜெல் இதோட தன்மை எப்படி இருக்கணும், பேக்கேஜிங் எப்படி இருக்கணும், பசங்களையும் பொண்ணுங்களையும் எப்படி இம்ப்ரெஸ் பண்ணனும். அண்ட், இதெல்லாம் விட நம்ம தயாரிக்கிற ஒவ்வொரு ப்ராடக்டுக்குமான சேஃப்ட்டி டெஸ்டிங் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்.
அண்ட் ஆல்சோ பூமிகா, நீ ப்ரொடக்ஷன் டீம்ல என்டர் ஆக போற. ஒரு காஸ்மெட்டிக் தயாரிக்கிறதுக்கு தேவையான அந்த பேஸ் பார்முலா, பேசிக் திங்ஸ் பத்தின அத்தியாவசியம், அதோட தரம் இதெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஆகியூரேட்டா பாக்கணும். இதுல எந்த சின்ன தப்பு நடந்தாலும், உங்க சைட் நியாயத்தை நான் கேட்க மாட்டேன். இமீடியட்டா பயர் பண்ணிடுவேன். காட் மை பாய்ண்ட்!” என்று தெளிவாய் அவர்களுக்கான வேலையை விளக்கிட, நால்வரும் தலையாட்டினர்.
“ஓகே ஃபைன்… உங்க நாலு பேரையும் உங்க டீம் ஹெட் மேனேஜ் பண்ணுவாங்க. ஸீ, நீங்க இங்க இருக்குறவரை ஹண்ட்ரட் பெர்சன்ட் ஒர்க் பண்றதை விட முக்கியம், டூ ஹண்ட்ரட் பெர்சன்ட் எனக்கு உண்மையா இருக்கணும். எனிவேஸ், கங்கிராச்சுலேஷன்ஸ்…” என்று கை கொடுத்தாள்.
பின் “சத்யா” என அழைக்க, தனது இடத்தில் அமர்ந்து தீவிரமாய் வேலை செய்து கொண்டிருந்தவன் இறுகிய முகத்துடனே அங்கு வந்தான்.
“பத்மா லீவ்ல போயிருக்காங்க. இவங்களுக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் ரெடி பண்ணுங்க. கெட் தெம் சர்டிபிகேட்ஸ் டூ!” என்றவள் சோதனைக்கூடத்திற்கும் தொழிற்சாலைக்கும் ரௌண்ட்ஸ் சென்றாள்.
எத்தனை பெரிய ஆட்டோமேட்டிக் கருவிகள் இருந்தாலும், நிவோரா கம்பெனியில் பணியாளர்களுக்கு பஞ்சம் இருக்காது. எப்போதுமே வாக்கன்ஸி இருக்கும். எப்போதுமே ஆள்களை எடுத்த வண்ணம் இருப்பார்கள். இப்போதோ பணியாளர்களின் எண்ணிக்கை எல்லாம் கணிசமாக குறைந்திருந்தது.
இன்னும் சிலர் வேறு கம்பெனிக்கு தாவ பேப்பர் கொடுத்திருந்தனர். தந்தை காலத்தில் இருந்து விசுவாசத்திற்காக இருப்பவர்கள் மட்டுமே தற்போது மிச்சம்.
“ஓ! டேடி ஃபேக்டரி எல்லாம் செம்ம போர். இங்க வந்து நான் என்ன செய்ய போறேன்…” ஒருமுறை அலுவலகத்திற்கு அழைத்த தந்தையிடம் சிணுங்கியது நினைவில் ஆடியது. கண்ணிலும் ஒற்றைத்துளியாய் கண்ணீர்.
இங்கு, பணியில் அமர்த்தப்பட்ட நால்வரின் விவரங்களையும் தனி தனியாய் வாங்கிக் கொண்டிருந்தான் சத்யா யுகாத்ரன்.
மிதுனா, பூமிகா, அகில் மூவரும் தங்களது பெயர் முகவரி அனைத்தையும் கூறி விட்டு வெளியில் செல்ல, விதுரன் மட்டுமே எஞ்சி நின்றான்.
சத்யா நிமிரவே இல்லை. தானாய் அவனது விரல்கள் மடிக்கணினியில் டைப் அடித்தது.
“விதுரன் s/o முருகேசன்” என ஆரம்பித்து அவனது பிறந்த நாள், பள்ளியில் எடுத்த மார்க் வரை பதிந்தான்.
முகவரி இருந்த இடத்திலும் அவனாகவே தட்டச்சு செய்ய, விதுரன் அப்போது தான் பேசினான்.
“இப்ப அந்த அட்ரஸ்ல இல்லண்ணா…”
எத்தனை வருடங்கள் கடந்து விட்டது, தம்பியின் அழைப்பைக் கேட்டு!
சத்ய யுகாத்ரனின் விழிகள் சிவந்து வஞ்சத்தின் பிடியில் சிக்கியது. தனது அழைப்பைக் கேட்டும் தன்னை நிமிர்ந்து பார்க்க இயலாத நிலையைக் கொடுத்து விட்ட விதியை எண்ணி நொந்தான் விதுரன். இதற்கெல்லாம் காரணமானவர்களின் மீது கோபம் கொப்பளித்தது.
ஆனால், தமையன் மட்டும் எப்படி இத்தனை அமைதியாய் இருக்கிறானென்ற வியப்பு மட்டும் அவனை விட்டு அகலவில்லை.
அவனுக்கென்ன தெரியும், சதுரங்க ஆட்டத்தின் ராணியை சுற்றி வளைத்திடவே இந்தப் பேரமைதி என!
புது காதல் மலரும்
மேகா
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

விது சத்யா அண்ணா தம்பியா?. ரிதாவை தான் காதல் புரிய வந்திருக்கானா?.