
கணேசன் ஆதனியை திருமணம் செய்து கொள்வதாக சொல்ல, அதை கேட்டதும் சங்கரிக்கு ஒன்னும் புரியவில்லை.
சில கஷ்டமான நேரத்தில், நம் மூளை வேலை செய்வதில்லை. புரிந்து கொள்ளும் திறத்தை தற்காலிகமாக மறந்து விடுகிறது. அந்த நேரத்தில் கூட இருப்பவர்களையே நம் மனது பெரிதும் நம்பும்.
பெரிதாக எதையும் யோசிக்காமல், தன் பெண்ணின் எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், “சரிப்பா சரிப்பா…. என் வீட்டுக்காரரை மட்டும் காப்பத்தி கொடுத்துடு. அது போதும் எனக்கு. நீ என் பொண்ணை நல்ல பார்த்துப்ப. உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்” என்றவரிடம்,
அவனோ “உங்க பொண்ணு ஒத்துக்க மாட்ட அக்கா. என்னை எல்லாம் யாருக்கு பார்த்ததும் பிடிக்கும்” என்று சோகம் ததும்பும் குரலில் சொல்ல,
“முகத்துல என்னப்பா இருக்கு மனசுல தான் எல்லாமே இருக்கு. என் பொண்ணை உனக்கு நான் கல்யாணம் பண்ணி தரேன். இது என் வாக்கு” என்றவர் தன் இல்லத்திற்கு கிளம்ப தயாராகி “நான் வீட்டுக்கு போயிட்டு நல்ல செய்தியோடு வரேன். அது வரை அவரை பார்த்துக்கோ” என்று கிளம்பிவிட்டார்.
வெளியே சென்று இருந்த ஆதனி அப்பொழுது தான் வீட்டுக்கே வந்தாள். வந்ததும் பக்கத்தில் இருந்தவர்கள் விசயத்தை சொல்ல, பதறி கொண்டு அன்னைக்கு அழைக்க அவரோ கைபேசியை எடுக்க கூட இல்லை. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் புலம்பிக்கொண்டு இருந்த நேரம் தான் வீட்டுக்கு வந்தார் சங்கரி.
“அம்மா இப்பதான் பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க. அப்பா இப்ப எப்படி இருக்காரு, அப்பாக்கு என்ன ஆச்சு”
“என்ன மன்னிச்சிடும்மா, அப்பாவை காப்பாத்துறதுக்கு எனக்கு இது விட்டா வேற வழி தெரியல. உனக்கு அப்பா உயிரோடு இருப்பினும் என்றால், நான் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு செய். கண்டிப்பா உன் நல்லதுக்கு தான் நான் சேர்த்து சொல்றேன்” என்றும் அவர் பேசுவது புரியாமல் தான் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“அம்மா நான் அப்பாவை பத்தி கேட்டா நீ என்ன லூசு மாதிரி ஏதோ பேசிட்டு இருக்க” என
“நானும் அதை தான் சொல்றேன். நாளைக்கு உனக்கு கல்யாணம். உனக்கு உண்மையாலுமே அப்பா மேல பாசம் இருந்தா நான் சொல்றதை செய்” என
“எது கல்யாணமா எனக்கா? என் கல்யாணத்துக்கும் அப்பாக்கும் இப்ப என்ன சம்மந்தம் இருக்கு”
“நிறைய இருக்கு. உன் அப்பாவை காப்பாற்ற லட்சக்கணக்கில் செலவு ஆகும். ஆனா அந்த தம்பி உன்னை கட்டிட்டு அவர் ஆபரேஷனுக்கு பணம் தரேன் என்று சொல்லி இருக்கு”
“எந்த தம்பி” என்ற குரலில் வெறுமை மட்டுமே நிரம்பி இருந்தது.
“நம்ம கணேசன் தான். ரொம்ப நல்ல பையன். உன் அப்பா அவர் கிட்ட தான் வட்டிக்கு பணம் வாங்கி இருக்காரு. இப்ப அவர் தான் பணம் கொடுக்கறது கூட. உன்னை ராணி மாதிரி பார்த்துப்பான்” என
“உனக்கு உண்மையாவே மூளை குழம்பி தான் போயிருக்கு. கணேசனா?? அம்மா அவன் வயசு என்ன என் வயசு என்ன. அதுவும் அவன் பார்க்க எப்படி இருப்பான் தெரியுமா” என்று ரவுடி போன்ற தோன்றம் கொண்ட உடலமைப்பை பற்றி அவள் சொல்ல,
“வயசுல என்ன கிடக்கு. பார்க்க சினிமா ஹீரோ மாதிரி இருந்தா மட்டும் போதுமா. மனசு வேண்டும். அந்த புள்ளைக்கு தங்கமான மனசு. உன்னை தங்க தட்டில் வைச்சு தாங்கும். எனக்கு உன் கிட்ட பேச எல்லாம் நேரம் இல்லை. நான் ஆஸ்பத்திரி போனோம். இந்த முக்கியமான சமாச்சாரம் சொல்ல தான் வந்தேன். நாளைக்கு கல்யாணம் தயாரா இரு” என்று மகளை பற்றி துளி கூட நினைக்காமல் கணவனின் துணியை பையில் திணித்து கொண்டு கிளம்பி விட்டார். ஒரு நிமிடம் மகளின் முகத்தில் தோன்றிய வலியையும் வேதனையையும் கண்டு இருக்கலாம்.
“நான் என்ன பண்றது. அப்பா முக்கியம் தான் நான் இல்லனு சொல்லலையே. அதுக்கு இப்படி ஒரு முடிவா. இந்த அம்மாக்கு அந்த கணேசனை பற்றி என்ன தெரியும்? அவன் இவ்வளவு பெரிய பொறுக்கி. எதோ நல்லவன் மாதிரி சொல்லிட்டு போரங்க. இல்ல ஆரா நீ இங்க இருந்தா உன்னை கார்னர் பண்ணி அந்த உருப்படாதவனுக்கு கல்யாண் பண்ணின்வெச்சாலும் வைக்கும் இந்த தாய் குலம். இது தான் என்னை பெத்துச்சானு கூட தெரியல. என்ன பண்ணலாம்” என்று யோசித்தாலும் அந்த நேரத்தில் ஒன்றும் தோன்றவில்லை என்பது தான் உண்மை.
மருத்துவமனைக்கு வந்த சங்கரி “தம்பி பொண்ணுகிட்ட செய்திய சொல்லிட்டேன். நாளைக்கே சின்னதா கோவிலில் கல்யாணம் பண்ணிட்டு இவருக்கு ஆபரேஷன் பண்ணிடலாம். இவர் சரியானதும் பெருசா பண்ணிக்கலாம்” என,
தான் எண்ணியது இவ்வளவு சீக்கிரம் நடைபெறும் என்று நம்பிக்கை இல்லாத போதே அவனை கையில் பிடிக்க முடியாது. இப்பொழுது அவன் நினைத்தது நடக்க போகிறது. சொல்லவா வேண்டும்.
“சரிங்க அக்கா. நான் போய் டாக்டர்கிட்ட மாமா ஹெல்த் பற்றி கேட்டுட்டு மேற்கொண்டு என்ன பண்றதுனு பார்த்திட்டு வாரேன்” என்று சென்றவன் டாக்டரிடம் அரை மணி நேரம் கிட்ட உரையாடிவிட்டு வெளியே வந்தான்.
“என்ன தம்பி இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கீங்க. ஏதாவது பெரிய பிரச்சனையா, காப்பாத்திடலாம்ல” என்ற கண்கள் பயத்தோடு கேட்டார் சங்கரி.
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல அக்கா. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். அடுத்தது எப்படி மாமாவ காப்பாற்றுவது, என்னென்ன புதுசா இப்ப வைத்தியம் இருக்கு என்று கேட்டுட்டு இருந்தேன். அவர் வயசுக்கு ஆபரேஷனை உடம்பு எத்துக்குமானு தெரியல என்று தான் டாக்டர் சந்தேகமா சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா நீ பயப்படாத அக்கா பாத்துக்கலாம்” என்று நல்லவன் வேசத்தை தொடர்ந்தான்.
வெகு நேரம் யோசித்த ஆதனிக்கு ஒன்று மட்டுமே புரிந்ததும். தன் தாய் தற்பொழுது தான் சொல்வதை கேட்க போவது இல்லை என்பதே. நேரத்தை பார்த்தால் நள்ளிரவை கடந்து சென்று கொண்டு இருந்தது.
ஒரு முடிவை எடுத்தவள், வேகமாக வெளியேறிவிட்டாள்.
மறுநாள் அதிகாலையிலே சங்கரி வீட்டுக்கு வந்துவிட்டார். மகளை அலங்கரித்து கோயிலுக்கு அழைத்துச் செல்ல,
“ஆதனி!! ஆதனி!! ரெடி ஆகிடியா” என்று கூச்சலிட்ட அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாகத் தேட, இவளை ஒரு அறையிலும் காண முடியவில்லை.
உடனே கணேசனை கைபேசியில் அழைத்தவர், “தம்பி இந்த சிறுக்கி மவ எங்கனே தெரியல பா. நீ கொஞ்சம் தேடி பரேன்” என்று கண் கலங்க குரல் பதைபதைக்க கூறினார்.
கோபத்தில் மொத்த இரத்தமும் முகத்தில் வந்து, முகமே சிவந்து நின்றான் கணேசன். கோபத்தில் வார்த்தை வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு “சின்னன்பொண்ணு தானே அக்கா. பயந்து இருக்கும். பக்கத்துல தான் எங்கேயாவது இருக்கும். நான் பார்க்கறேன்” என்று கைபேசியை வைத்தவன், பக்கத்தில் இருந்தவனிடம்
“டேய் அந்த பொண்ணு எங்கவோ ஓடி போயிடுச்சு போல. ஒரு இடம் விடாமல் எல்லா இடத்திலும் தேடுங்க. பத்து மணிக்கு முகூர்த்தம் அதுக்குள்ள எனக்கு அவ கிடைக்கணும்” என்றதும் அவன் அட்கள் நகரத்தில் இருக்கும் எல்லா இடத்திலும் தேட தொடங்கினார்.
காலையில் தொடங்கிய தேடல் இரவு வரை நடைபெற்று கொண்டே தான் இருந்ததே தவிர அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, மகளை காணோம் என்று கவலையில் அழுதுகொண்டு இருக்கும் சங்கரியிடன் “அக்கா, மாமா இவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் நான் அவரை மரியாதையா தான் நடத்தி இருக்கேன். இப்ப வரை எனக்கு இவ்வளவு ஆசிங்கம் நடந்த பின்னும் உங்களை மரியாதையா தான் நடத்துவேன்” என்று சொன்னவன் கண் முன்னே கோபாலன் அன்று காலையில் இவனிடம் பேசியது தான் நினைவுக்கு வந்தது.
***
கோபாலன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் முன்பு,
“என்ன கோபாலா இந்த பக்கம் காத்து வேசுது. வாங்குன பணத்துக்கே இன்னும் வட்டி காணோம் என்ன என்ன பிரச்சனை விட்டு போச்சு போல” என்று கணேசன் தன் முன் நின்ற கோபாலிடம் சொல்ல,
“அது இல்லங்க தம்பி. உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. ஒரு லட்ச ரூபாய் கடனா கொடுக்க முடியுமா? கண்டிப்பாக என் புள்ளை வேலைக்கு போயிரும் தம்பி. அது என் கடனை எல்லாம் அடிச்சிடும். இப்ப கொஞ்சம் அவசரம்” என்று தர்ம சங்கடமாக தன் தேவைக்காக அவனிடம் கைகட்டி கோபாலன் கடனாக காசை கேட்க,
“இப்படி கடனா வாங்கிட்டே போறதுக்கு பதில் நான் சொல்றதை கேட்கலாம் தானே” இது பொடி வைத்து பேச, கோபாலன் அவனை புரியாமல் பார்த்தார்.
“என்ன புரியலையா, சரி நானே சொல்றேன். கிளி மாதிரி பொண்ணு பெத்து வெச்சிருக்கியே. சும்மா கடன்காரன் மகளா இருக்கிறது பதில் எனக்கு பொண்டாட்டியா இருக்கலாமே. என்ன நான் சொல்றது சரிதானே” என்று விஷமாக கேட்க,
கேட்டவரின் முகமும் நொடியில் செத்து விட்டது. பதில் ஒன்றும் பேசாமல் வெளியே வந்தவர் மனதில்,
‘என் பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சோ. பிறந்ததில் இருந்து அதுக்கு சந்தோஷமா என்னனு கூடத் தெரியாது. அது கிட்ட பெருசா நான் பேசனதே இல்ல. இந்த நோய் வந்த பின்னே தானே மகள் என்ற உறவு மேல பாசமே வருது. ஆனாலும் காட்ட முடியாத நிலையில் என்னை அந்த கடவுள் நிற்க வெச்சி இருக்கான்.
இவ்வளவு நாள் நான் போனாலும் என் பிள்ளையை அது பெருசா பாதிக்காது என்ற நம்பிக்கையில் தான் இருந்தேன். ஆனால் இப்ப இப்படிபட்ட குள்ளநரி கிட்ட என் பொண்ணை விட்டு போக பயமா இருக்கே. நான் என்ன செய்வேன். என் பிள்ளையை ஒருத்தன் கையில் பிடிச்சி கொடுக்கிற வரை என்னை உயிரோட வைச்சிக்கோ ஈஸ்வரா…’ என்று அதையே திரும்ப திரும்ப யோசித்து கொண்டு வந்தவர் ஒரு கட்டத்தில் நெஞ்சை பிடித்துக் கொண்டு ரோட்டிலேயே மயங்கி விழுந்தவர் தான்.
இந்த நிலைமையை தான் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள பார்க்கிறான் இந்த கணேசன்.
***
“ஐயோ தம்பி என் தாலியை காக்க நினைக்கிற உன்னை இப்படி அசிங்கப்பட வெச்சிட்டெனே. இந்த கழுத எங்க போச்சோ” என்று பெருங்குரலில் அழத்தொடங்கினார்.
அப்பொழுது “அப்படி கல்யாணத்தில் இருந்து தப்பிச்சாசு. பாரேன் என் முளையும் வேலை செய்யுது. கடைசி நேரத்தில் வந்த ஐடியா தான். இருந்தாலும் வேலை செய்து இருக்கு” என்று கல்யாணம் நடக்காத சந்தோசத்தில் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தாள் ஆதனி, நடக்க போகும் விபரீதம் அறியாமல்.
எங்கே சென்றாலும் தன்னை கண்டுபிடித்து விடுவார்கள் என்று அறிந்த பக்கத்து தெருவில் இருந்த குட்டி கோவிலுக்கு சென்று விட்டாள். சென்ற நேரமோ நள்ளிரவு யாரும் காணவில்லை. சிறிய கோவில் என்பதால் பெரிதாக யாரும் பகல் நேரத்திலும் வரவில்லை. இதோ இப்பொழுது தன் முடிவை நோக்கி அவளே சென்று கொண்டு இருக்கிறாள்.
“அம்மா” என்று அழைத்துகொண்டு வந்தாள். அவளுக்கு தெரியும் தாய் திட்ட போகிறார் என்று. ஆனால் அவளே எதிர் பார்க்காத பல விசயத்தை தான் அவள் தாய் செய்ய போகிறாள்.
“அங்கேயே நில்லு” என்ற குரலில் திரும்பி பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள். குறைந்தது பத்து பதினைந்து பேர் அங்கே அவள் வீட்டில் இருந்து இருப்பார்கள்.
“அம்மா.. எனக்கு” என்று மேலும் சொல்லும் முன் சங்கரியோ “நீ எல்லாம் ஒரு பொண்ணா டி.. பெத்த அப்பன் உயிருக்கு போரடித்து இருக்கான். அவனை காப்பாத்த சம்மந்தமே இல்லாத மனுஷன் எல்லாம் போரடித்து இருக்காரு. நீ என்னடான்னா மினிக்கி மாதிரி ஊரை சுற்றிட்டு வந்து இருக்க.
உன்னை இந்த வயதுள்ள இருந்து தான் பெத்தெனா…. மனசே இல்லையாடி உனக்கு. எவன் கூட ஊரை சுற்றித் திரிஞ்ச.
இந்த மனுஷனுக்கு என்ன டி குறை. கல்யாணம் பண்ணிக்க தானே கேட்கிறான். வப்பட்டியா வெச்சிக்க இல்லையே. உன் அப்பன் வாங்கன கடனுக்கு அப்படி தான் டி வேற எவனாவது இருந்த கேட்டு இருப்பான்.
நீ பிறந்ததே சுத்த வேஸ்ட். நீ பிறக்காமலே இருந்து இருக்காலாம். நீ பிறந்து உன் அப்பனுக்கு ஒரு பிரோசனமும் இல்ல. மத்த பிள்ளைய இருந்து இருந்தா அப்பணுகாக என்ன வேன்ன பண்ணி இருப்பாங்க. நீயும் இருக்கியே.
உன் முகத்தை கூட பார்க்க பிடிக்கல. உன் காலை பிடிச்சி கேட்கிறேன். உனக்கு இப்பவச்சு மனசுனு ஒண்ணு இருந்த இந்த மனுஷனை கல்யாணம் பண்ணி என் தாலியை காப்பாற்று” என
அவரை வெறுத்து பார்த்த ஆதனி “சரி கல்யாணம் பண்ணிக்கிறன்” என்று உயிர்ப்பே இல்லாத குரலில் சொன்னவள் அதன் பின் பேசவே இல்லை.
அவளுக்கு அவள் தந்தையின் நிலையை யாரும் சொல்லவில்லை. ஹாஸ்பிடலில் இருப்பது மட்டுமே தெரியும். எந்த அளவுக்கு சீரியஸ் என்று கூட தெரியாது.
அதை தான் அவள் அன்னை சொல்ல விழையவே இல்லையே.
இதோ பெத்ததுக்கு அவளை பலி கொடுக்க தயாராகி விட்டனர். இவளும் தெரிந்தே பலியாக தயாராகி விட்டாள்.
இப்படி அவள் வாழ்க்கையையே பலியாக கொடுக்க வந்தவள் இப்பொழுது மறைந்து வாழும் அளவுக்கு என்ன நடந்தது இருக்கும்???
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Apudi yena nandathuchu