
ஆஹில்யன் கோப்பை சரி பார்த்தபடி ரித்திகாவிற்கு பை சொல்லி விட்டு நகரப் போக, “மாம்ஸ் சாப்பிட்டுப் போங்க” என்று அழைத்தாள் நிதர்ஷனா.
“இல்லமா ஒர்க்…” என இழுத்ததில், ரித்திகா “ஓவரா பண்ணாத. உக்காரு” எனத் தனக்கு பக்கத்து இருக்கையை கை காட்டினாள்.
பெரியவர்களும் அவளை வழிமொழிய, “ஏன் உங்க பாஸ் சொன்னா தான் உக்காருவீங்களா” என்றாள் நிதர்ஷனா.
அத்தனை நேரமும் தனது ஐ – பாடில் புதைந்திருந்த யாஷ் பிரஜிதன், கண்ணைப் பிரிக்காமலேயே “சிட் ஆஹில்” என்ற பிறகே அமர்ந்தான்.
“நீ என்னை லவ் பண்றியா? அவனை லவ் பண்றியாடா?” என ரித்திகாவும் முறைத்து வைத்ததில் அசடு வழிந்தான்.
கிருஷ்ணவேணியும் கண்மணியும் அனைவர்க்கும் பரிமாற, இன்னும் ஐ பாடில் புதைந்திருந்த யாஷிடம் இருந்து அதனைப் பிடுங்கினாள் நிதர்ஷனா.
“ஒரு மனுசன் 24 மணி நேரமும் வேலை பார்த்துட்டே இருந்தா பைத்தியம் பிடிச்சுடும்…” அவள் பார்வையால் சுட்டெரிக்க,
மெல்ல இதழ் விரித்தவன், “அப்போ உன்னைப் பார்த்துட்டு இருக்கவா?” என்றான் கிசுகிசுப்பாக.
ஆனாலும் அனைவருக்கும் அவர்களது உரையாடல்கள் கேட்க தான் செய்தது.
“ஒன்னு அந்த ஆலம்பனாவை ஆராய்ச்சி பண்ற. இல்லன்னா என்னை ஆராய்ச்சி பண்ற…” என இன்னும் சத்தம் குறைத்து முறைத்து வைத்தவளைக் கண்டு குறும்பாய் நகைத்தவன், “இப்போ வரை உன் லிப்ஸ் பத்தின ஆராய்ச்சி தான் முடிஞ்சுருக்கு. முழுசா ஆராய்ச்சி பண்றது எப்போ?” என்றான் சீண்டலாக.
“யப்பா… உங்க ஆராய்ச்சியை அப்பறம் வச்சுட்டு சாப்பிடுங்க. சிங்கிள்ஸ் பாவத்துல விழுகாதீங்கடா” கதிரவன் வாய் விட்டு புலம்பி விட்டதில் மெல்லிய சிரிப்பலை எழுந்தது.
“யாரு சிங்கிளா இருக்க சொன்னதாம்?” சிந்தாமணி அவன் மட்டும் அறியும் வண்ணம் வாயசைக்க, “இவள் என்னை சிங்கிளா அடக்கம் பண்ணாம விட மாட்டா போல” எனத் தனக்குள் புலம்பிக்கொண்டான்.
நிதர்ஷனாவோ வெட்கம் தோய்ந்த கன்னங்களை மறைத்துக்கொண்டு, “உன் லேப் தான் எரிஞ்சுடுச்சே அப்பறம் என்ன ஆச்சு?” எனக் கேட்டாள். தீவில் நிகழ்ந்ததை பற்றி பேசினால் தானே கழட்டி விடுகிறான் என்ற எண்ணத்தில் பேச்சை மாற்றினாள்.
“நான் வச்சுருக்குறது ஹை டெக்னீக் லேப். அங்க மேக்சிமம் ஃபயர் ஆக்சிடென்ட் ஆகாது. அப்பிடியே ஃபயர் ஆனாலும், தானாவே வாட்டர் ஃப்ளோ வந்து தீயை அணைக்கவும், அங்க இருக்குற இம்பார்ட்டண்ட் ரோபோஸ், ஃபைல்ஸ எல்லாம் சேஃப்டி பண்ணவும் ஹை எண்ட் ஏஐ ரோபோ எப்பவும் அலெர்ட்டா இருக்கும். நானே தரைமட்டம் ஆக்குனாதான் உண்டு” என்றவனைக் கன்னத்தில் கை வைத்துப் பார்த்தாள்.
“இதுக்குலாம் கூடவா ரோபோ இருக்கு?” நிவேதன் வியப்பாகக் கேட்டதில், நிதர்ஷனா “அவன் பாத்ரூம் கழுவ கூட கோடி கணக்குல செலவு பண்ணி ரோபோ பண்ணி வச்சிருக்கான்டா நிவே…” எனக் கலாய்த்ததில்,
“இதுக்கு எதுக்கு ரோபோ? பத்து ரூவாய்க்கு ப்ளீச்சிங் பவுடர் இருந்தா போதுமே…” எனத் தலையைச் சொறிந்த நிவேதனைப் பார்வையால் எரித்தான் யாஷ் பிரஜிதன்.
“நீ ஆபிஸ்க்கு வருவீல… பாத்ரூம் உன்னை விட்டே கழுவ விடுறேன்” என்ற யாஷின் கூற்றில் வாயை கப்சிப்பென மூடிக்கொண்டான்.
“நிவே எதுக்கு ஆபிஸ்க்கு வரணும்?” நிதர்ஷனா புரியாமல் வினவினாள்.
யாஷ் விவரம் கூறியதும் அவளது விழிகள் வியப்பில் விரிந்தது. தன்னைக் காக்க படிப்பையும் விட்டவனுக்கு பிரகாசமான எதிர்காலம் கிடைக்கப்போவதில் பெருமகிழ்ச்சி அவளுக்கு.
கடந்த இரு நாள்களாக இதைப் பற்றி யாஷ் பேசாமல் இருந்ததில், தன்னை விட்டுவிட்டான் என்று நிம்மதி கொண்ட நிவேதனுக்கு விழி பிதுங்கியது.
“நிதா நீயாவது சொல்லு. அங்க வந்து நான் செய்வேன்? இதுல பிசினஸ் நாலேஜ்ட் இருக்குன்னு இவரே சொல்லிக்கிறாரு! நானே என் அப்பாவ கடுப்பேத்த தான், ஜவுளி கடை ஆரம்பிக்கற பிளானே பண்ணுனேன்” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான்.
நிதர்ஷனா கூர்மையுடன் “புரியல? நீ ஜவுளி கடை ஆரம்பிக்க நினைச்சதுக்கும் அந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள் ஒருமாதிரியாக.
“அது…” என விழுங்கியவன், “என்கிட்ட மட்டும் எல்லா கேள்வியையும் கேளு. உன் புருசன்ட்ட எந்த கேள்வியும் கேக்க மாட்டியா? என்னை சென்னைக்கு அனுப்பி விட சொல்லு நிதா. நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டுப் போறேன்…” என்றான்.
“என்னை விட்டுட்டா?” நிதர்ஷனா சற்றே திகைப்பாய் கேட்க, அதன்பிறகே நிதர்ஷனா தன்னுடன் வரப்போவதில்லை என்பதே உறைத்தது.
அவளை விட்டு விட்டு தான் மட்டும் எப்படி வாழ இயலும்… அதற்காக அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதா? அழைத்துச் சென்றால் தான் என்ன தவறு இருக்கிறது… நடிப்பிற்காக நிகழ்ந்த திருமணத்தை எவ்வாறு ஏற்க இயலும்? தன்னுள் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டிருக்க, அவனுக்கு மறுபக்கம் அமர்ந்திருந்த ரித்திகாவும்,
“டேய் அண்ணா… நீ மட்டும் சென்னைக்குப் போய் என்ன பண்ண போற? நானே அந்தக் காசியை ஏவி விட்டுடுவேன்” என்றாள் கண்ணைச் சுருக்கி.
அதில் யோசனையுடன் புன்னகைத்தவனின் முகம் வாடிப்போனது.
தட்டில் இருந்த சப்பாத்தியை உண்டபடி யாஷ் பிரஜிதன், “அடுத்த வாரம் எல்லாருமே இந்தியா ரிட்டர்ன் ஆகிடலாம். அதுக்கு முன்னாடி எனக்கும் நிதுவுக்கும் இங்க மேரேஜ். சர்ச்ல” என்றான் சேர்த்து.
“ஊர்ல போய் க்ராண்டாவே வைக்கலாமே யாஷ்” இளவேந்தன் கேட்டதற்கு, “இந்த கண்ட்ரி படி லீகல் வைஃபா அவள் இருக்கணும்…” என்றதில் மறுப்பு ஏதும் கூற இயலவில்லை.
—-
மறுநாளே திருமணத்திற்கு திருமண கவுன் எடுப்பதற்காக நிதர்ஷனாவை கடைக்கு அழைத்துச் சென்றான் யாஷ் பிரஜிதன்.
வெள்ளை நிற கவுன் ஒன்றை ட்ரையல் பார்த்துக் கொண்டிருந்தவள், “இதென்னயா இம்மாம் வெய்ட்டாகீது…” என்று விட்டு யாஷ் முறைத்ததும், “அதாவது இந்த உடை வெகு கனமாக இருக்கிறதென்பதால் தாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றாள் சுத்தத் தமிழில்.
உதட்டை மடக்கி சிரிப்பை அடக்கிய யாஷ், எடை குறைவுள்ள மற்றொரு கவுனை எடுத்துக்கொடுத்து உடுத்த கூறினான்.
அது சற்றே பரவாயில்லை என்று தோன்ற, அதையே தேர்ந்தெடுத்தனர்.
அதற்கு மேட்சாக வைர நகைகளையும் அள்ளிக் குவித்தவனை மேலும் கீழுமாக பார்த்தாள்.
“என்னடி? செலக்ட் பண்ணு” என்றவனிடம்,
“யோவ்… எங்கூருல வெள்ளை ட்ரெஸ் போட்டாலே அபசகுணம் மாதிரி பாப்பாங்க. நீ வெள்ள கலர்ல ட்ரெஸ் எடுத்துட்டு அதுக்கு இம்புட்டு காசுல நகை வேறயா. எனக்கு இதுலாம் வேணாம். நம்ம கோயில்ல கல்யாணம் பண்றப்ப வாங்கிக்கலாம்” என்றாள்.
“அது தனி. இது தனி!” என்றவன், தேவையான அனைத்தையும் வாங்கி விட்டே கிளம்பினான்.
இருவரும் காரில் அமர்ந்த தருணம் முதல் அவன் சாலையைப் பார்த்தபடி காரை ஓட்டிக்கொண்டு வர, அவனைப் பார்ப்பதும் பின் திரும்புவதுமாக இருந்தாள் நிதர்ஷனா.
“என்னடி மின்னல்? வாட் இஸ் ஈட்டிங் யூ?” எனக் கேட்டான், கியரைப் பிடித்திருந்த கையால் அவள் தொடை மீது கை வைத்து.
அந்தக் கையை அவளும் பிடித்துக்கொண்டவள், “என்கிட்ட எதுனா மறைக்கிறியா?” எனக் கேட்டாள் விழிகளை அகல விரித்து.
“ஏன் அப்படி கேக்குற?” அவனிடம் அதிர்வெல்லாம் இல்லை. இயல்பாகவே இருந்தான்.
“தெரியல. கேக்கணும்னு தோணுது. வீட்ல இருக்க மாட்டுற. என்னைப் பார்த்து பேச மாட்டுற. என்கூடவே இருந்தா கூட நீ வேற யோசனைல தான் இருக்க! என்னாச்சு அரக்கா?” கேட்கும்போதே அவளிடம் அத்தனை ஏக்கம்!
தாடை இறுக காரை நிறுத்தாமல் ஓட்டியவன் பதிலின்றி வீட்டை அடைந்தான்.
அதிலேயே அவளுக்குள் பல கலவரம் நிகழ்ந்தது.
“எதுவா இருந்தாலும் சொல்லிடு அரக்கா… உன் ரிசர்ச் எல்லாம் வீணா போச்சா?” என்றாள் பரிதாபமாக.
அவன் மறுப்பாகத் தலையசைக்க, சற்றே யோசித்தவள் “நிவே வந்துட்டனால நீ சேர்மன் போஸ்ட் வாங்க முடியாதுன்னு யோசிக்கிறியா?” எனக் கேட்டதில், அவளைத் திரும்பி முறைத்தான்.
“உன் பிரதரே ஒரு அரை வேக்காடு. சேர்மன் போஸ்ட்னு சொன்னா, போஸ்ட் ஆபிஸ்ல போய் நிப்பான்” எனக் கடுகடுக்க, முகத்தை சுண்டியவள் “உன் அப்பா செத்ததுக்கு கவலைப்படுறியா?” என்றாள் வேகமாய்.
“இறங்கிப்போ!”
“நீ சொல்லு. எனக்குத் தெரிஞ்சே ஆகணும்.”
“போ ஆலம்பனா…”
“நீ சொல்ற வரை போக மாட்டேன். எனக்குத் தெரியும். ஏதோ ஒன்னு இருக்கு. என்னை டெஸ்டிங் மவுசா யூஸ் பண்ணானே உன் அப்பா… அதுனால நான் எதுவும் அல்பாயுசுல சாகப்போறேனா?” எனக் கேட்ட நொடி, அவளது கழுத்தை இறுகப் பிடித்து ஜன்னலில் நங்கென மோத வைத்தான்.
கழுத்து நரம்புகள் புடைத்து கண்கள் ஜிவ்வென சிவந்து போனது ஆடவனுக்கு.
இரவு நேரத்தில் தோட்டத்தில் இருந்து வந்த வெளிச்சம் மட்டுமே காரினுள் பரவ, அந்த மெல்லிய இருளில் அவனது கலப்படக் கண்கள் பயம் தந்தது.
அதையே உற்றுப்பார்த்தவள், “ப்பா… இந்தக் கண்ணை தான் ஒரு நாள் நான் கனவுல பார்த்தேன்!” என கண்ணிமைக்காது கூற, மெல்ல பிடியைத் தளர்த்திய யாஷ் பிரஜிதன், “ரியலி?” என்றான் அசத்தல் புன்னகையுடன்.
“ம்ம்ம்… ஒடனே நீ வானத்துல பறக்காத. அன்னைக்கு ஏதோ பேய பாத்துட்டேன்னு நினச்சு, செருப்ப தலைமாட்டுல வச்சுட்டுத் தூக்கம் வராம இருந்தது எனக்குத் தான் தெரியும்” என சிலுப்பியவளின் இதழ்களை இரு விரல்களால் பிடித்தான்.
“ஓவரா பேசுறடி. என்னைப் பார்த்தா பேய் மாதிரி இருக்கா?”
“ச்சே! பேய் கூட பவர் கம்மியா தான் இருக்கும். நீ ஏ. ஐ வித்தை தெரிஞ்ச பேய் அரக்கா…” என கிளுக்கிச் சிரிக்க, அவனைக் கிண்டல் செய்யும் இதழ்களுக்கு தக்க தண்டனை அளித்தான் யாஷ் பிரஜிதன்.
பிடிவாதமாக அவனிடம் இருந்து விடுபட்டவள், “யோவ்… இடம் பொருள் ஏவல்லாம் பாக்க மாட்டியா. எல்லார் முன்னாடியும் பொசுக்கு பொசுக்குன்னு முத்தம் குடுக்குற. இப்ப என்னனா வீட்டு வாசல்ல நின்னுட்டு கிஸ் அடிச்சுட்டு இருக்க” என முறைத்தாள்.
அவளை அப்படியே தூக்கி மடியில் அமர வைத்தவன், “கிஸ் மட்டும் குடுத்ததோட விட்டேன்னு சந்தோஷப்படுடி மின்னல். உன்னை என்னன்னவோ பண்ண தோணுது…” என முகத்தை அவளது தோள்களில் வைத்து தேய்த்தான்.
கிறங்கி மயங்கியவள் அவனது மார்பில் உரிமையாய் சாய்ந்து கொண்டு, “இப்படி தேய்ச்சு உரசி என்னை டிஸ்ட்ராக்ட் செஞ்சது எல்லாம் போதும். என்ன மேட்டர்னு சொல்லு. எதுவாருந்தாலும் சேர்ந்தே பேஸ் பண்ணலாம் அரக்கா” என்றான் அவன் தோள்களைக் கட்டிக்கொண்டு.
பெருமூச்சு விட்டவன், “என் அப்பாவும் உன் அப்பாவும் இன்னும் சாகல!” என்றவனின் சுருங்கிய புருவத்தை நீவி விட்டவள், “தெரியும்!” என்றாள்.
அதில் மேலும் நெளிந்த நெற்றியை இதழ்களால் வருடியவள், “அவங்களை அவ்ளோ ஈஸியா சாக விட்டுடுவியா நீ. கெஸ் பண்ணுனேன்” என்றவளின் இதழ்களை மீண்டுமொரு முறை கவ்வி விடுவித்தான்.
சில்லிட்ட இதயம் அதிவேகமாய் துடிக்க, சிவந்து கிறுகிறுத்தவள் மீண்டும் அவன் மார்பில் தஞ்சம்.
“சரி அவங்க சாகாததுக்கு நீ ஏன் உர்ருன்னு சுத்திட்டு இருக்க?” விழி நிமிர்த்தி வினவினாள்.
அவளது கேசத்தை மெல்ல கோதி விட்டவன், “நிது… உன்னையும் உன் அம்மாவையும் கொலை பண்ண சொல்லி சொன்னது வரதராஜன் தான். அதை என் பப்பா நீலகேசி மூலமா செய்ய நினைச்சதும் உண்மை தான். இடைல மனசு மாறுன நீலகேசி, சம்பந்தமே இல்லாம உன்னையும் நிவேதனயும் எதுக்காக தனியா வளர்க்கணும். அப்படி மனசு மாறுனவன் உன் அம்மாவையும் காப்பாத்தி இருக்கலாம் தான?” என்றான் கூர்மையாக.
“இதை பத்தி யோசிச்சு யோசிச்சு தலைவலி வந்தது தான் மிச்சம். ஒருவேளை என் அம்மா செத்ததுக்கு அப்பறம் அவனுக்கு ஞான உதயம் வந்துருக்கலாம் தான யாஷ்?” சற்றே கவலையுடன் கேட்டாள்.
“ம்ம்ஹும்! அலெஸ், வரதராஜன், நீலகேசி… நம்ம கண்ணுக்கு தெரிஞ்சது இவங்க தான். பட், நம்ம கண்ல படாத நாலாவது ஒரு ஆள் இருக்காங்க. ஹூ இஸ் தட்? அவங்களுக்கு நிவேதன் எலைட் கம்பெனிக்குள்ள வரக்கூடாது. நீயும் சாக கூடாது. ஏதோ ஃபிஷியா இருக்கே…”
“நாலாவது ஒரு ஆளா? இருக்குறவங்களை சமாளிக்கிறதே பெரும்பாடா இருக்கே! நீ ஏன் ரொம்ப யோசிக்கற யாஷ்.”
“நான் ஓவர் திங்கிங் பண்றேனோன்னு எனக்கும் டவுட் வந்திச்சு மின்னல். அதான், உன் ப்ரதரை எலைட் எம்பயர்க்குள்ள இழுத்தேன்” என்றபடி சொடுக்கிட்டவன், “விஷயம் எப்படி காட்டுத்தீயா பரவுச்சுன்னு தெரியல. லாஸ்ட் டூ டேஸா நிவேதனை அட்டாக் பண்ண ரெண்டு பேர் நம்மளை ஃபாலோ பண்ணிட்டே இருக்காங்க. அதுவும் சைனீஸ்” என்றதில் அதிர்ந்து விட்டாள்.
“என்ன சொல்ற யாஷ். அவனுக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல தான? இதெல்லாம் அவனுக்கு வேணாம் யாஷ். நீ ஜிம் பாடி. எவ்ளோ அடிச்சாலும் திருப்பி அடிப்ப. அவனே ஒரு நோஞ்சான். அதும் இல்லாம, அவனுக்கு சூதுவாதும் தெரியாது யாஷ். நாங்கல்லாம் நாலு தெருவுக்குள்ள பாலிடிக்ஸ் நடந்தாலே தெறிச்சு ஓடுவோம். நீ என்னன்னா உலக அரசியல் கூட எல்லாம் ஃபுட்பால் வெளயாடிட்டு இருக்க. சைனாக்காரனுக்கு என்ன கேடு வந்துச்சுன்னு தெரியல. அவன் முன்னாடி வந்து நின்னாலே மூச்சா போய்டுவானுங்க இந்தப் பசங்க. சைனாக்காரனை எல்லாம் எதுக்கு இழுத்துக்கிட்டு, அந்த காசியாண்ட கூட எதிர்த்து பேசாத பச்சை மண்ணுங்க அரக்கா” எனப் புலம்பித் தள்ளினாள் நிதர்ஷனா.
“சோ என்ன பண்ணலாம். அவனை அனுப்பி விட்டுடலாமா?” யாஷ் கடுப்புடன் வினவ,
“நீ தான் சென்னை போலாம்னு சொன்னியே. அங்க போய் அவனுக்கு எதுனா வேலை வாங்கி குடு. அது போதும்” என்றவள் அவனது பார்வையில் மெல்ல தழைந்தாள்.
“சில பொறுப்புகளை தட்டி கழிக்க முடியாது நிதா. அப்டியே அவன் வேணாம்னு ஓடுனாலும் நேரா சுடுகாட்டுல பெட் போட்டு படுத்துட வேண்டியது தான். பிகாஸ் இப்ப அவன் வரதராஜன் பையன்னு வேர்ல்ட் வைடா முத்திரை குத்தியாச்சு. இன்டர்நெஷனல் மேகசின்ஸ் எல்லாம் எடுத்துப் பாரு. அதுல நிவேதன் தான் ஹாட் டாபிக். தான் வைரல் ஆகிட்டோம்ன்றது கூட புரியாம அதோ பாரு சிந்தா கூட சீரியல் பாத்திட்டு இருக்கான்…” என்று மேலே கையைக் காட்டினான்.
அவன் சொன்னது போன்றே பால்கனியில் அமர்ந்து சிந்தாமணியுடன் அலைபேசியில் சைனீஸ் நாடகத்தை தீவிரமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.
சிந்தாமணியைத் தவிர்க்க கதிரவன் ஒதுங்கி விட, அவள் தான் நிவேதனை வம்படியாக அழைத்தாள்.
“ஹையோ… சைனாக்காரன் சங்கூதப்போறது தெரியாம சைனீஸ் சீரிஸ் பார்த்துட்டு இருக்கானே. முருகா!” என்று தலையிலேயே அடித்துக்கொண்டவளைக் கண்டு நமுட்டு நகை புரிந்தான் யாஷ் பிரஜிதன்.
“இப்ப அவனுக்கு வேற சாய்ஸ் இல்ல. என் நிழலத் தாண்டி போனா, சிங்கிளாவே சாக வேண்டியது தான். அதுக்கு பிசினஸை கத்துக்குறது எவ்ளோவோ மேல். அவனுக்கு செட் ஆகுற மாதிரி நான் யோசிச்சும் வச்சுருக்கேன். சோ நீ அவனை புஷ் பண்ணு. அதான் அவனுக்கும் நல்லது” என்றதில் இருந்த நியாயம் உறைக்க,
“புரியுது யாஷ். நான் சொல்றேன் அவன்ட்ட. சைனாக்காரன பத்தி சொன்னா பயத்துலயே செத்துருவான். அவனுக்கு ஏதும் ஆகாது தான?” என சோகமாய் கேட்டுக்கொண்டாள்.
அவளது இரு கன்னத்தையும் பற்றிக்கொண்டவன், “நீயும் அவனும் என் பொறுப்பு மின்னல். என்னை மீறி ஒரு துரும்பும் படாது உங்க மேல. பட விட மாட்டேன். ம்ம்?” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
முழுநிலவின் ஏகாந்த பொழுதில் இரு தேகங்களும் நெருக்கத்தில் திளைக்க, அவனது அதரங்கள் அவள் காதோரம் உறவாடியது.
அதில் சிலிர்த்து முகத்தை பின்னால் இழுத்தவள், “ஆமா சர்ச்ல கல்யாணம் எப்படி நடக்கும்?” எனக் கேட்டாள் மெலிதாக.
அவனது கண்களோ மோகத்தில் திளைத்திருக்க, “பர்ஸ்ட் ரெண்டு பேரும் ரிங் சேஞ்ச் பண்ணிப்போம்” என்றான்.
“இன்னைக்கு வாங்கி குடுத்தியே அதுவா?”
“ம்ம்!”
“அப்பறம்?”
“அப்பறம்… என்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதமான்னு பாஸ்டர் கேட்பாரு. நீ ஓகே சொல்லணும். நானும் ஓகே சொல்லுவேன். தென், ரெண்டு பேரும் கிஸ் பண்ணிக்கணும்” என்றபடி வெப்ப மூச்சு அவளைச் சுட்டெரிக்க வன்மையாய் இதழ்களை சிறைபிடித்தான்.
—-
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா. உலகின் மிகப்பெரிய, அழகான மற்றும் முக்கியமான தேவாலயங்களில் ஒன்று. இது கிறிஸ்தவ உலகின் இதயமாகக் கருதப்படுகிறது.
பொன்னால் ஒளிவீசும் கூரைகள், மரபு மிக்க தூண்கள், சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட உள்ளமைப்பு. திருமணத்திற்காக இங்கு அனுமதி கிடைப்பது கடினம். ஆனால், இளமை ததும்பிய, நாட்டின் தலைசிறந்த ஏ. ஐ ரோபோடிக்கின் ஆசானான யாஷ் பிரஜிதனுக்கு அனுமதி மறுக்கப்படுமா என்ன?
திருமண உடைத் தரையில் பரவ கண்மணி, சிந்தாமணியின் கையைப் பிடித்துக்கொண்டு மெல்ல தேவாலயத்தினுள் நடந்து வந்தாள் நிதர்ஷனா.
மேற்கூரைகளின் எதிரொளிப்பில் மணப்பெண்ணின் முகமும் பொன்னாய் ஜொலித்தது.
அவளையே ரசனை மிக்க ஏறிட்ட யாஷ் பிரஜிதனின் விழிகளில் ஒரு கர்வமும் அரங்கேறிட, அதில் அளவுக்கதிகமான காதலும் மிதந்தது. மொத்தக்குடும்பமும் மகிழ்வில் திளைத்தது.
ரித்திகா மணப்பெண் தோழியாய் அருகில் நின்று கொண்டாலும், இருவரும் வெளிப்படையாய் பேசிக்கொள்வதில்லை. ஏதோ ஒரு சிறு தயக்கம் இருவருக்கும். ஆனால் நிவேதனுக்கு இருவரும் உயிரான தங்கைகள் தான்.
நிதர்ஷனாவின் முகத்தில் தெறித்த மிதமிஞ்சிய மகிழ்வில் அவனது உள்ளமும் குதூகலித்தது.
யாஷ் பிரஜிதனும் நிதர்ஷனாவும் கண்களால் காதலைப் பரிமாறி மோதிரத்தை மாற்றிக்கொள்ள, தனது மகனின் திருமணத்தைக் கண்ணால் பார்த்து களிப்புற்ற ஆதிசக்திக்கு கண்கள் நீரால் நிறைந்தது.
தனது தங்கை மகளின் வாழ்வு சிறப்பாய் அமைந்ததில் நிம்மதியடைந்த இளவேந்தன் அவரது கையைப் பிடித்து ஆசுவாசம் செய்ததும், மெல்லப் புன்னகைத்துக் கொண்டார் ஆதிசக்தி.
மகேந்திரன், அழகேசன், கிருஷ்ணவேணி என அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.
நிதர்ஷனாவோ முத்தம் எதுவும் கொடுத்து விடுவானோ என்ற கலக்கத்தில் நின்றிருந்தாள்.
அவளது கலக்கம் புரிந்தவன், நமுட்டு நகையுடன் அவளது வெட்கத்தை பருகியபடி நெற்றியில் இதழ் பதித்து விலக, அதில் நாணம் நிறைந்தது பெண்ணவளுக்கு.
—-
திருமணம் முடித்தது முதல், நிதர்ஷனாவிற்கு இதயம் படபடவென துடித்தபடி இருந்தது.
யாஷ் பிரஜிதனின் உரிமைப்பார்வையும் அதற்கு காரணம் தான். ஏனிப்படி பார்த்து வைக்கிறானோ… எனச் சிணுங்கி கொண்டாள்.
நிவேதன் தான், “என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் மச்சான். அதுல மை கலையாம பாத்துக்கங்க…” என்று ஆனந்த கண்ணீர் விட,
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னைக் கலங்க விடாம இருந்தா சரி தான்” என முணுமுணுத்துக் கொண்டான், நிஜமாய் நடக்கப்போவதை அறியாதவனாக.
நிவேதனும் கதிரவனும் இணைந்து முதல் இரவிற்கு அறையைத் தயார் செய்ய, பலவித நறுமணங்கள் கொண்ட பூக்களை மெத்தையில் பரவ விட்டதில், உடை மாற்றும் பொருட்டு அறைக்கு வந்த நிதர்ஷனா அதிர்ந்தாள்.
“டேய் டேய் என்னடா பண்றீங்க?”
நிதர்ஷனாவின் கேள்வியில் கதிரவன் அவள் கன்னத்தில் குத்தினான்.
“குறும்பு! இது கூட தெரியாதாக்கும் உனக்கு…” என்று.
“அடேய்… எதுக்குடா ரூமை குப்பையாக்கிட்டு இருக்கீங்க?” எனப் பல்லைக்கடிக்க,
“எதே குப்பையா? டெக்கரேஷன் பண்றோம் நிதா” என்றான் நிவேதன்.
“இதான் நீங்க டெக்கரேஷன் பண்ற லட்சணமா. கீழ பாரு எவ்ளோ தூசியாக்கி வச்சுருக்கீங்கன்னு. ஆலம்பனா…” எனச் சத்தம் கொடுக்க, தரை துடைக்கும் இயந்திரம் வெளிவந்து கீழிருக்கும் தூசியை அள்ளிச் சென்றது.
எத்தனை உற்றுப்பார்த்தும் தரையில் ஒரு பொட்டு தூசி தெரியவில்லை நிவேதனுக்கு.
“மொதோ இந்த பூவை எல்லாம் எடுத்துட்டு போங்க. இதெல்லாம் யாஷுக்கு சேராது. ஓவர் ஸ்மெல்லா இருக்கு” என்றவள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டே ஓய்ந்தாள்.
நிவேதன் அவளை மேலும் கீழும் பார்க்க, “இன்னாடா பாக்குற? அவன் வர்றக்குள்ள இத்தல்லாம் எடுத்துட்டு போய்டு. அப்பறம் மூக்குல இருந்து ரத்தம் வந்துட்டுருப்பான்” என்றதும் தான் கதிரவனும் நினைவு வந்தவனாக “ஆமால்ல” என்றான்.
நிவேதன் அதன்பிறகே விவரம் அறிந்து, தங்கையை முறைத்து வைத்தான்.
கூடவே சிவாஜி கணேசனின் தோரணையில், “என்னையெல்லாம் பாத்ரூம் கழுவுற வெளக்கமார வச்சு எத்தனை வாட்டி அடிச்சுருக்க. அப்பல்லாம் சுத்தம் பாக்காதவ. இப்ப எப்படி மாறிருக்கா பார்த்தியா கதிரு. நான் பொத்தி பொத்தி வளர்த்த மணிமேகலை… இன்னைக்கு என்னையவே எதிர்த்து நிக்குது பார்த்தியா…” என வராத கண்ணீரை பிழிந்து வர வைத்து சீன் போட, நிதர்ஷனா பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றாள்.
கதிரவனோ, “மணிமேகலையா… ஓ உனக்கு மூணாவதா ஒரு தங்கச்சி வேற இருக்கா?” எனக் கேட்டு வைக்க, நிவேதன் நெஞ்சில் கை வைத்தான்.
“என் அப்பன் குடும்பம் நடத்துனானா இல்ல புள்ளைங்கள மேனுபேக்சர் பண்ணுனானா. இதுக்கு மேல தாங்காதுடா. ரெண்டே போதும்!” என்றவனை நிதர்ஷனா அடிக்க வரும் முன் ஓடியே விட்டான்.
எப்போதும் போல தன்னவளின் தனக்கான பேச்சில் தன்னை மறந்து அவளை ரசித்திருந்தான் யாஷ் பிரஜிதன்.
என்றும் விட, இன்று கம்பீரம் மிகுந்திருந்தது அவனுக்கு. தனக்கென ஒரு குடும்பம் அமைந்து விட்ட கர்வம். அழுத்தக் காலடி ஓசையுடன் அறையினுள் நுழைந்தவனை இமைக்க மறந்து ஏறிட்டவள், “நா நா இன்னும் ட்ரெஸ் மாத்தல” என்றாள் தடுமாற்றமாக.
“நான் ஹெல்ப் பண்றேன் மின்னல்!” நளினமான குறும்பு அவனிடம்.
செங்கொழுந்தாய் சிவந்தவள், “வேணாமே. நானே பண்ணிப்பேன். நீ போ வெளில…” என்றாள் தலையை தரையில் புதைத்து.
“ம்ம்ஹும்… திஸ் டைம் ஃபார் அஸ். நான் போகமாட்டேன்” என்றபடி அவளது இடையை இழுத்து சுற்றி வளைத்தான்.
“ஏன்டி இப்படி ஷிவர் ஆகுற?” தலையாட்டி சிரித்தபடி யாஷ் கேட்க, “தெரியலையே… ஆனா நல்லாருக்கு இந்த ஃபீல்!” என்று கூறி விட்டு வெட்கத்தை அவன் மீது சாய்ந்தே மறைத்துக்கொள்ள, “ஹும்! எனக்கும் நல்லாருக்கே இந்த சாஃப்ட் பீல்…” என்று அவளது மென்மையை உணர்ந்து கூறியதில், அவளுக்கு உயிரின் ஒவ்வொரு அணுவும் சிலிர்த்து சிதைந்தது.
பாவையின் தோளில் இருந்து ஒற்றை விரலால் பயணம் செய்தவன், அவளது உள்ளங்கையில் முடித்து வைக்க, அவளோ கையை இறுக்கி மூடிக்கொண்டாள்.
மறுகையையும் அதே போல பிடிக்க வந்தும் அவனுக்கு தோல்வியே.
விரல்களால் நடத்திய ஊர்வலத்தை இதழ்களால் தொடங்க, அவளோ ஆடவனின் தீண்டலில் சுயமிழக்க தொடங்கினாள்.
அப்போதும் உள்ளங்கையை இறுக்கி மூடி வைத்துக்கொள்ள, மூடப்பட்ட விரல்களுக்கு முத்தமிட்டுக்கொண்டே இருந்தவன், கையை விரிக்க முயன்றும் முடியவில்லை.
“என்னடி பண்ற. ஐ நீட் டூ கிஸ் யுவர் பாம்…” என்றான் கிறக்கமாக.
“அது… அது… க்ரீம் போட்டும் இன்னும் சொரசொரன்னு தான் இருக்கு” மயக்கமும் தயக்கமும் கொண்டு அவள் உரைத்ததில் தான் அவனது கிறக்கம் கலைந்தது.
“வாட்?” ஒரு கணம் புரியாது வினவியன் புரிந்த கணம் மென்மையை விடுத்து வன்மையாய் அவளது உள்ளங்கையைப் பற்றி விரித்து அதில் மீசை கொண்டே காயம் செய்தான்.
பற்களை நறநறவெனக் கடித்தவன், அவளது உள்ளங்கையை இழுத்து வாசம் பிடித்து, பின் மீண்டும் அவளது இடையை இறுக்கமாய் மூச்சு விடவும் அனுமதி மறுக்கப்பட்டு அழுத்தமாய் பிடித்து தனது உரிமையை நிலைநாட்ட, அவளோ நடுங்கிப் போனாள்.
“யாஷ்!” அவளது குரலை கண்டுகொள்ளாது அவளைத் தூக்கி படுக்கையில் கிடத்தியவன் மேலும் முன்னேறிட, “யோவ் அரக்கா! பயமா இருக்குயா. கோபமா இருந்தா சொல்லிடு!” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
அதில் தான் சற்றே தணிந்தவன், “உன் கை ரஃப்பா இருக்குன்னு சொன்னேன். பிடிக்கலைனு சொன்னேனாடி. ஸ்டார்டிங்க்ல இருந்தே உன்மேல தானாவே வந்த இன்டரஸ்ட். அது என்ன விதமான பிடித்தம்னு தெரியாம… அது பிடித்தமான்னே தெரியாம… ப்ச்…” என அவள் மீது அவளுக்கு வலிக்காதவாறு அமர்ந்தபடி பின்னந்தலை கேசத்தை கோதினான்.
நிதர்ஷனா அவனை மிரட்சியாய் பார்த்து வைக்க, “ஐ லவ் யூ டி. யூ… யூ ஆர் மை சார்ம். உன் சொரசொர கை என்னை சீண்டிப்பாக்குதுடி. உன் ஸ்லிம் ஹிப் என்னை ஸ்லிப் ஆக்குது. உன் கழுத்து எலும்பு என்னை கிறுக்கு பிடிக்க வைக்குது…” என்றவன் முத்தங்களை மீண்டும் தொடர்ந்திருந்தான், இம்முறை மென்மையாக.
அவனது கூற்றில் இதழோரம் நகைத்தவள், “ஏதோ உனக்குப் பிடிக்காதேன்னு சொன்னேன். அதுக்கு இப்படியா…” என்றவளை அதற்கு மேலும் பேச விடவில்லை அவன்.
நிதர்ஷனாவின் உள்ளங்கையோடு தனது முரட்டு கரங்களை இணைத்தவன் வெகு நேரம் பிரிக்கவே இல்லை.
இரு உள்ளங்கைகளும் முட்டி முட்டி தேய்ந்து, உச்சப் பொழுதுகளில் ஆரத்தழுவி கட்டிக்கொண்டது.
அவளுள் தனது தேடலை தொடங்கி, முற்றுப்பெற விருப்பமின்றி அலைபாய்ந்து கொண்டே இருந்தான் யாஷ் பிரஜிதன்.
அவன் தந்த ஒவ்வொரு முத்தமும், ஒவ்வொரு தீண்டலும் அளப்பரிய காதலின் சின்னமாகவே அவளுள் அடைக்கலமாக, அவனிடம் தன்னை மொத்தமாய் ஒப்படைத்து உயிர்வதையில் இன்பம் கண்டாள் நிதர்ஷனா.
இருவரது மோகப் பயணங்களும் முடிவில்லாது தொடர, கையில் கிட்டிய காதலைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூட இந்தக் காதலில் இன்னும் வெகு தூரம் பயணித்திட விழைந்தவர்களுக்கு தனிமை கொடுத்து விடைபெறுவோம்!
மேகா
பார்ட் 1 completed.
அடுத்து பார்ட் 2 இருக்கு டியர்ஸ். அது ஜனவரில இருந்து வரும். நிவேதன், கதிரவன் காதல் கதை இன்னும் கொஞ்சம் காமெடி சீக்குவன்ஸ், சஸ்பென்ஸ், ரொமான்ஸ் எல்லாம் செகண்ட் பார்ட்ல தொடரும். ☺️ பார்ட் 1 எப்படி இருக்குன்னு சொல்லுங்க டியர்ஸ்… இந்தக் கதை புத்தகமா வேணும்னா என்னை கான் டாக்ட் பண்ணுங்க😍😍 வழக்கம் போல உங்க ஆதரவும் அன்பும் என்னை நெகிழ்த்திடுச்சு♥️♥️♥️ எல்லாருக்குமே என்னுடைய நன்றிகள். இடை இடையில் கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ணலனு கோச்சுக்காதீங்க. 🥹 என் பையன் பகல்ல தூங்கவே மாட்டுறான்🤧 அவன் தூங்குற ரெண்டு மணி நேர கேப்ல தான் நான் டெய்லி ud போட்டேன். அது ஸ்டாப் ஆனதுனால தான், நானும் டைம் இல்லாம டிலே பண்ணிட்டே போயிட்டேன். சோ லேட்டா கதை போடுறதுக்காக மன்னிச்சு… 🙈 இப்ப வேற வழியே இல்லாம நைட்டு ரெண்டு மணிக்கு type பண்ணேன் 😐 mee to mee … Eppdi iruntha mega nee 🤣🤣🤣 இடையில புதுக்காதல் ஸ்டோரி முடிக்கணும். அது முடிச்சதும் செகண்ட் பார்ட் ஸ்டார்ட் பண்றேன். ♥️ Once again thank you soooooo much all for ur love and lovely support 🥳🥳🥳😘😘😘
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                +1
	                                18        
	+1
	                                124        
	+1
	                                2        
	+1
	                                3        
	உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Very super story sis…
sema sister. unka story ku na adimai akiten. epa nenka part 2 poduvinka nu wait panite irupen . ❤️