Loading

அத்தியாயம் 31

குருமூர்த்தியின் பிள்ளைகள் யார் என்று அவன் ஆட்களை வைத்து விசாரிக்கக் கிடைத்ததில் நிரஞ்சனா மற்றும் விக்ரமை பற்றி தெரந்து கொண்டான் சஞ்சய்.

 

“நிரஞ்சனா.. இந்த பேரு கேள்விப் பட்ட பேரு போல இருக்கே..” என்று யோசித்தான்.

 

அந்த யோசனையுடன் அலுவலகம் செல்ல, அங்கு ஊழியர்களின் வருகை பதிவேடு மேனேஜர் வந்து காட்ட, அவனும் ஒரு முறை பார்த்துவிட்டு, திரும்ப அவரிடம் கொடுக்கப் போகும் சமயத்தில், நிரஞ்சனா என்ற பெயர் கண்ணில் பட, அவளின் வருகையை கவனித்தான்.

 

அவள் சேர்ந்த நாளில் இருந்து பத்து நாட்கள் மட்டுமே வந்து இருக்க, மற்ற தினங்கள் எல்லாம் விடுப்பு எடுத்து இருந்தாள்.

 

“ஏன் இந்த ஸ்டாப் இத்தனை நாள் லீவ் எடுத்து இருக்காங்க. மெயில் போட்டு இருக்காங்களா உங்களுக்கு. ” என்று அவரிடம் கேட்டிட,

 

“எனக்கு எதுவும் வரல சார்.. உங்களுக்கு எதுவும் வந்து இருக்கானு செக் பண்ணிக்கோங்க..” என்றார் அவர்.

 

அவனும் ஒரு முறை அலசி ஆராய, அவளிடம் இருந்து விடுப்புக்கான எந்த வித அனுமதி மின்னஞ்சல் வந்து சேரவில்லை.

 

ஒரு இரண்டு நாளைக்கு மட்டும் விடுப்பு வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள்.

 

ஆனால் அதற்கு பிறகு ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகி விட்டதே.

 

யோசனையில் இருந்த சஞ்சய், “அவங்க ப்ரொபைல் டீடெயில்ஸ் கொண்டு வாங்க..” என்று அவரிடம் கூற,

 

ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய கோப்பில் இருந்து அவளுடையதை மட்டும் எடுத்து வந்தார்.

 

அவளுடைய போட்டோவை பார்த்தவன், “இந்த பொண்ணு. அன்னைக்கு காயத்ரி கூட பேசிட்டு இருந்தாளே. அவகிட்ட கேட்டா தெரியும்..” என்று அவனது அறையில் இருந்து அவளுக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து, “கம் டு மை ரூம்..” என்றான்.

 

சிறிது நேரத்தில் அவளும் வந்து சேர, “இங்க நியூ ஸ்டாப் நிரஞ்சனா ஜாயின் பண்ணாங்களே.. அவங்க உன் ஃப்ரண்ட் தானே..” என்று கேட்க,.

 

“ஆமா.. சார்..” என்றாள்.

 

“அவங்க, ஏன் இத்தனை நாளா வரல.. உங்களுக்கு எதுவும் தெரியுமா..” என்று அவளிடம் கேட்டான்.

 

அவளோ, “சார்.. அவளோட சொந்தக்காரங்க ரொம்ப வருஷம் கழிச்சு அவளைப் பார்த்து இருக்காங்க. அதுனால அவங்க இவளை கூட்டிட்டுப் போய்ட்டாங்க சார்..”என்று பொத்தாம் பொதுவாக கூறினாள்.

 

ஆனால் இப்படி சொன்னதும் அவனுக்குச் சொல்ல வேண்டுமா..

 

அவன் மூளை யோசிக்க ஆரம்பித்து விட்டது.

 

“ஓகே.. நீ போகலாம்..” என்று அவளை அனுப்பி வைத்து விட்டு, அவளது விலாசத்தை அதில் பார்த்தான்

 

“அங்கு சென்று நேரில் விசாரித்தால் என்ன?? “என்பது போல யோசித்தான்.

 

உடனே தன் ஆட்களில் ஒருவனுக்கு. அழைத்து அவள் விலாசத்தை கூறி, அங்கு சென்று அவளைப் பற்றி விசாரித்து கூறும்படி கூறி இருந்தான்.

 

சொன்னது போலவே, அவனும் கூற, அவளை பரிதி சந்திக்க வந்ததாகவும், அவனின் குடும்பத்தினர் வந்து அவளையும் அவள் தம்பியையும். அழைத்துச் சென்றதாக பக்கத்து வீட்டு பெண்மணி கூறினாள் என்று அவன் கூறினான்.

 

“நெனச்சேன். லைட்டா சந்தேகம் வந்தது நீயா இருக்குமோனு. இப்போ கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.. டேய் பரிதி.. என் வாழ்க்கையை கெடுத்துட்டு நீ எப்படி நிம்மதியா இருக்குறேனு பாக்குறேன் டா..” என்று ஆத்திரத்தில் அவன் கையில் இருந்த பேனாவை உடைக்க, அதுவோ சில்லு சில்லாக உடைந்து விழுந்தது.

 

இது எல்லாம் எதுவும் தெரியாமல் பரிதி, எப்படி அவளுக்கு கனவில் முத்தங்களை வாரி வழங்கினானோ, அப்படியே நிஜத்திலும் தர, பெண்ணவள் தான் அவனது முத்தத்தில் பித்தாகிப் போனாள்.

 

“அய்யோ.. தெரியாத்தனமா உங்ககிட்ட கனவைப் பத்தி சொல்லிட்டேன்.. அதை வச்சியே என்னைப் போட்டு படுத்தி எடுக்குறீங்க நீங்க..” என்றாள் சிணுங்கியபடி.

 

“இன்னும் அது எல்லாம் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள என்ன உன்ன படுத்தி எடுக்குறாங்க..” என்றான் அவளை கேலி செய்தவாரு.

 

“ச்ச.. நீங்க ரொம்ப மோசம். எப்படி எல்லாம் பேசுறீங்க.. அன்னைக்கு என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணும் போது எவ்ளோ டீசென்ட்டான பர்சன்னு நெனச்சேன் உங்கள.. நீங்க என்னடானா வாயில இருந்து வர்றது எல்லாம் டபுள் மீனிங் வேர்ட்ஸ் தான்..” என்றாள்..

 

அவள் கூறியத்தில் அவன் நன்றாக வாய்விட்டுச் சிரித்தவன், “நானும் சாதாரண மனுஷன் தானே.. எனக்கும் உணர்ச்சிகள் எல்லாம் இருக்கத் தானே செய்யும். அதுவும் உன்ன நெனச்சி உருகிப் போய் இருக்கேன். நீ என் பொண்டாட்டி ஆகப் போறவ தானே.. உங்கிட்ட இதுவும் பேசலாம். இதுக்கு மேலயும் பேசலாம். தப்பு இல்லை..” என்றான் சிரித்தபடி.

 

“அடடா.. நீங்க இருக்கீங்களே..” என்று அவனது தோளில் செல்லமாக அடித்து விட்டு அவனது தோளிலேயே சாய்ந்து கொண்டாள்.

 

“எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையும்னு நான் கனவுல கூட நெனச்சிப் பார்த்தது இல்லை..

 

எனக்கும் ஆசைகள் உணர்ச்சிகள் எல்லாம் இருந்துச்சு.

 

ஆனா, அம்மா அப்பா ரெண்டு பேரும் இறந்த பிறகு தம்பிக்கு நான் மட்டும்தான்னு முடிவு பண்ணி, உணர்ச்சிகள் எதுக்கும் இடம் கொடுக்காம இருந்தேன்.

 

அப்புறம் தான் உங்கள பார்த்தது. நீங்க கனவுல வந்தது.

 

என்னையே உசுரா நினைக்கிற ஒருத்தர், அவரோட காதலைப் பார்த்து நானே பிரம்மிச்சி போய்ட்டேன்.

 

நான் எப்படி எல்லாம் வாழனும்னு ஆசைப் பட்டேனோ, அப்படி உங்ககூட கனவுல வாழ்ந்தேன்.

 

கனவுலயும் நினைக்காத வாழ்க்கை, இதோ இப்போ உங்க கூட…” என்றாள் புன்னகையுடன்.

 

அவன், அவள் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டவன்,

 

அவளை எழுப்பி, தன் மடி மீது அமர வைத்து, அவளை பின்னிருந்து அணைத்தவன், “நான் எப்போனாலும் ரெடி தான்.. என்னோட காதலை காட்ட. இது இப்போ கூட காட்டிட்டு இருக்கேனே..”என்றவன், அவளது காது மடலைக் கடித்து, பின் கழுத்தில் லேசாக பட்டும் படமாலும் முத்தமும் வைத்தான்.

 

“மாமா…” என்று அவள் உணர்ச்சிப் பொங்க அழைக்க,

 

அவனோ, “என்ன டி..” என்றான் கர கரப்பான குரலில்.

 

“ஐ லவ் யூ.. மாமா..,” என்று  அவள் தன்னுடைய காதலை கூற,

 

“லவ் யூ டி பொண்டாட்டி..” என்றான் அவனும் பதிலுக்கு மேலும் அவளை இறுக அணைத்தவாரு.

 

இவர்கள் ஒருபக்கம் காதலில் மூழ்கி முத்தெடுக்க, பெரியவரகள் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

 

ஈவென்ட் மேனேஜ்மென்ட்டிடம் கூறி விட்டதால், எல்லா ஏற்பாட்டையும் அவர்களே செய்து விடுவர்.

 

இனி திருமணத்திற்கான உடைகள் மற்றும் தாலி செய்வதற்கு பொன் உருக்க வேண்டும்.

 

அன்று அதற்கு தான் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

இரு காரில் புறப்பட்டு இருந்தனர். பெரியவர்கள் ஒரு காரிலும், இளையவர்கள் ஒரு காரிலும் என..

 

முதலில் நல்ல நேரத்தில் பொன் எடுத்து விடலாம் என்று நகைக் கடைக்குச் சென்று, அவர்கள் அணியும் வகை தாலி மற்றும் செயின்க்கு செய்ய கொடுத்து விட்டு, 

 

அடுத்து புடவை கடைக்குச் சென்று அங்கு மூகூர்த்த புடவைகளை பார்க்க ஆரம்பித்தனர். 

 

அக்கா தங்கை இருவரும் ஆளாளுக்கு எடுத்து அவர் அவர் துணையிடம் காட்ட, அவர்களோ முகத்தை சுழித்துக் கொண்டே இருந்தனர்.

 

“ஏன் டா.. அவங்க எடுக்கிற புடவை பிடிக்கலைன்னா, நீங்க தான் எடுத்துக் கொடுங்களேன்டா. எடுக்குற புடவை எல்லாம் குறை சொல்லிக்கிட்டு..” என்று மங்களம் சிரித்தபடி கூற,

 

இப்பொழுது அண்ணன் தம்பி இருவரும் வந்து பார்க்க ஆரம்பித்தனர்.

 

பரிதி, நிரஞ்சனாக்கு ஏற்ற போல, மாம்பழ நிறத்தில் இருக்கும் பட்டு புடவை எடுக்க, இனியனோ ராமர் பச்சை நிறத்தில் வைஷுக்கு புடவை எடுத்தான்.

 

அது போக, இன்னும் சில புடவைகள் எடுத்துக் கொண்டனர்.

 

அப்படியே மங்களம் மற்றும் மல்லிகாவும் அவருக்கு தேவையான புடவையை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து ஆண்கள் பிரிவிற்கு வந்து அவர்களுக்கு தேவையான பட்டு வேஷ்டி சட்டை மற்றும் கோட் சூட் என இருவரும் அவர்களுக்கு ஏற்ற நிறத்தில் எடுத்துக் கொண்டனர்.

 

விநாயகம் வேஷ்டி சட்டை மட்டும் எடுத்துக் கொண்டார்.

 

பரிதி, நிரஞ்சனாவுக்கு மெரூன் கலர் நிறத்தில் மெல்லியப் புடவை ஒன்றை எடுத்து தனியாக பில் போட்டு வைத்து இருந்தான்.

 

எல்லாம் முடிந்ததும், உணவகத்திற்கு சென்று மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பும் சமயத்தில், பரிதி, “அம்மா.. நாங்க அப்படியே பீச் போய்ட்டு வரோம். நீங்க கிளம்புங்க.” என்றான்.

 

“அப்டியா.. அப்போ நாங்களும் வரோம். நானும் போய் ரொம்ப நாள் ஆச்சு. என்ன தம்பி சொல்ற..” என்று விநாயகத்தைப் பார்த்து மங்களம் கேட்க,

 

“ஆமா க்கா.. போவோம்..” என்றார் அவர்.

 

“டேய்.. நாங்க வர்றது உங்களுக்கு இடைஞ்சலா இருந்தா, நாங்க ஒரு ஓரமா உக்காந்துகிறோம். நீங்க தனியா போய்க்கோங்க..” என்று அவர் கூற,

 

“ம்மா.. அப்படி எல்லாம் இல்லை. நீங்க வருவீங்களா என்னனு தெரியல. அதான் அப்படி சொன்னேன். சரி வாங்க போவோம்..” என்று ஒரே காரில் அனைவரும் புறப்பட,

 

இனியா, “டிரைவர்க்கு போன் பண்ணி  காரை எடுத்துட்டு போகுச் சொல்லிரு..” என்றான் பரிதி.

 

இனியனும் அவர் வீட்டு ஓட்டுநற்கு அழைத்துக் கூறி விட்டான்.

 

அனைவரும் பேசி சிரித்தபடி வர, பரிதியோ பேச்சுகளை கேட்டாலும் சாலையில் கவனமாக வண்டியை செலுத்தினான்.

 

சிறிது நேரத்தில் கடற்கரை வந்து சேர, காரை ஓரமாக நிறுத்த அனைவரும் இறங்கிக் கொண்டனர்.

 

“எந்த மாதிரி வெயில் அடிச்சாலும், இங்க அப்படியே கடல் காத்து நல்லா இருக்கு. என்ன அண்ணி..” என்று மல்லிகா, மங்களத்திடம் கூற,

 

“ஆமாம் மா.. டேய் பசங்களா, இனி மாசத்துக்கு ஒரு தடவையாவது இங்க குடும்பத்தோட வரணும்டா.. ரொம்ப நாள் ஆச்சு இங்க வந்து. நாலு சுவத்தை மட்டும் பார்த்து பார்த்து போர் அடிச்சிப் போச்சு.” என்று மங்களம், நடந்துகொண்டே, பேசிய படி வந்தார்.

 

“அதுக்கென்ன ம்மா.. வந்துரலாம்..'” என்றான் அவனும் சிரித்துக் கொண்டே.

 

பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள, இனியனும் வைஷுவும் கடல் அலைகளில் கால் நனைத்தனர்.

 

பரிதியும் நிரஞ்சனாவும், அலைகளை பார்த்தபடி சற்றுத் தள்ளி மணலில் நின்று இருக்க, “வாங்க.. போய் அலையில கால் நெனச்சிட்டு வருவோம்.” என்று அவள் அழைக்க,

 

“நீ போ.. நான் இங்க நிக்குறேன்..” என்றான்.

 

“நான் மட்டும் தனியா எதுக்கு. நீங்க வாங்க சேந்து போவோம்..” என்று விடாப்பிடியாக அழைத்தாள்.

 

அவனோ சிறு சிரிப்புடன், அவளது கையை பிடித்துக் கொண்டு அலைகள் நன்றாக மோதும் படி நின்று கொண்டான்.

 

பெரியவர்கள் அங்கு வரும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டபடி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

 

பரிதியும் நிரஞ்சனாவும் இவர்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டனர்.

 

சிறிது நேரத்தில் இனியனும் வைஷுவும் வர,பரிதி, “எங்க டா போய் இருந்தீங்க. இங்க தான் இருந்த போல இருந்துச்சு. அதுக்குள்ள மாயமா மறைஞ்சிட்டீங்க..”என்று கேட்க,

 

“அப்படியே அந்த பக்கம் நடந்து போய்ட்டு வந்தோம்..” என்றான்.

 

“ம்ம்ம்.” என்றவன், ஆளாளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு சாப்பிட வாங்கி வந்தான் இனியன்.

 

குடும்பத்துடன் அமர்ந்து பேசி சிரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, இவர்களின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக சஞ்சயின் அலைபேசிக்குச் சென்றது.

 

இந்த திருமண விஷயம் கேள்வி பட்டதில் இருந்து, இவர்கள் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க ஒருவனை நியமித்து இருந்ததால், அவனின் மூலம் பரிதியின் குடும்பத்தை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்து சஞ்சய்க்கு அனுப்ப, அவனோ ஒவ்வொன்றாக பார்த்து விட்டு,

 

“என் வாழ்க்கையை நாசம் ஆக்கிட்டு, நீ மட்டும் எப்படி டா இவ்ளோ சந்தோசமா இருக்கலாம்.

 

நான் உன்ன கொல்லனும்னு நெனச்சேன். ஆனால் அது வேஸ்ட். நான் எப்படி என் பவி இல்லாம இருக்கேனோ அதே மாதிரி நீயும் அனுபவிக்க வேணாம்.. அனுபவிப்ப..” என்றான் அந்த அறையே அதிரும் அளவுக்கு சத்தம் போட்டுச் சிரித்தபடி..

 

நித்தமும் வருவாள். 

 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்