Loading

தன்னைக் கட்டிப்பிடித்த சிந்தாமணியைத் தள்ளி விடக் கூட மறந்து பேயறைந்ததைப் போல நின்றான் கதிரவன்.

ஆஹில்யன் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, மறுநொடி அவளைத் தள்ளி விட்டவன், “பைத்தியமா உனக்கு” என்றான் அதட்டலாக.

“இதுக்கு என்ன பதில் சொல்லணும்? ஆமா நான் பைத்தியம்னா? இல்ல உங்க மேல பைத்தியம்னா?” எனக் கேட்டாள் உள்ளே சென்ற குரலில்.

அவளின் கண்ணீரிலேயே அவளது மனம் புரிந்தது தான். கட்டியணைத்ததும் உயிரில் நிறைந்தே விட்டாள் தான்.

இத்தனை நாள்கள் பேசி பழகியதில் தோன்றாத உணர்வு, நிவேதன் அவனது கற்பனையாக இருவரும் காதலித்தது பற்றி கூறியதில், அவனுள் சில்லென இருந்தது.

உள்ளுக்குள் அவ்வப்பொழுது ஒருவித குறுகுறுப்பு படர்ந்தாலும், தனது எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

ஆனால் அவனது உணர்வை சோதிக்கும் விதமாக அமைந்தது அவளது அணைப்பு.

ஆஹில்யன் இருவருக்கும் தனிமை கொடுத்து நகன்று விட்டான்.

“நல்லவேளை பாஸ்ட்ட நம்ம மட்டும் தான் அடிவாங்க போறோம்னு பயந்துட்டு இருந்தோம். இப்ப நமக்கு ஒரு கம்பெனி கிடைச்சிருக்கு” என்ற நிம்மதி அவனுள்!

“லூசு மாறிக்க பேசாத சிந்தா. மொதோ இந்த ட்ரெஸ்ஸ போடு. போ” எனப் பேச்சை மாற்ற,

“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லல…”

“பதில் சொல்ற அளவு எதுவும் இல்ல” கதிரவன் முணுமுணுத்தான்.

“நான் உங்கள விரும்புறேன் கதிர்” மெல்லிய குரலில் கூறி விட்டு அழுத்தமாக நின்றவளை முறைத்துப் பார்த்தான்.

“உங்க குடும்பத்துல யாருக்கும் லவ் நார்மலாவே வராதா?” எனக் கேட்டதில் இப்போது அவள் முறைத்தாள்.

“உன் அத்தை என்னென்னா தசாவதாரம்ல வர்ற வெளிநாட்டுக்காரன் வில்லன் மாறிக்க இருக்குறவன காதலிச்சு வச்சுருக்காங்க. உன் பெரியம்மா அமுதவல்லி என்னன்னா, சுயநலத்துக்காக பெத்த பொண்ணு பொண்டாட்டியைவே கொல்றவனா பார்த்து காதலிச்சுருக்காங்க. நீ என்னன்னா என்னை காதலிக்கிறேன்னு சொல்ற… கொய்யால” என்றதில்,

“இதோ பாருங்க கதிர். என் அத்தையும் பெரியம்மாவும் இந்த விஷயத்துல லூசுத்தனமா முடிவு எடுத்திருக்கலாம். ஆனா நான் அப்படி இல்ல” என சிலிர்த்துக்கொண்டாள்.

“என்னை விரும்புறேன்னு சொல்றதே லூசுத்தனம் தான்… எனக்கு இப்ப வேலை கூட இல்ல. நான் பொறந்து வளர்ந்ததே ஒரு ஸ்லம் ஏரியால. நீங்க ஆச்சாரமா இருப்பீங்க. நான் பீச்சோரமா இருப்பேன். என்னை கல்யாணம் பண்ணிட்டு என் அம்மா கூடலாம் உன்னால ஒரு நாள் கூட குடும்பம் நடத்த முடியாது. மொதோ, உன்னால என் வீட்டுக்கும் என் ஏரியாவுக்கும் வந்து ஒரு நாள் என்ன, ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. ஓடனே, உண்மய சொல்றவன் தெய்வத்துக்கு சமம்னு நெனச்சு கூட கொஞ்சம் உருகாத. உன் குடும்பத்துக்கு தகுதியே இல்லாதவங்ளை காதலிக்கிறதை மொதோ நிறுத்துங்க. புரியுதா…” எனத் திட்டி விட்டான்.

சிந்தாமணி மூச்சிரைக்க கோபப்பார்வை வீசினாள்.

“யாஷ் மாமா தகுதி பார்த்தா நிதா அக்காவை விரும்புனாங்க?”

“யம்மா ஒடனே நீ அவங்ககிட்ட வராத. அவங்க கத வேற. என்னன்னாலும் நிதாவுக்கு யாஷ் உறவு முறை தான. அவள் இப்ப உங்க வீட்டுப் பொண்ணு. அதுவும் இல்லாம, யாஷ்க்கு எல்லாமே இருக்கு. என்னைக் காதலிக்கிறதா உன் வீட்ல சொன்னா, அவங்களே காறி துப்புவாங்க. போய் படிக்கிற வேலையை பாரு…” என்று உதாசீனம் செய்து விட்டு அங்கிருந்து நகன்றவனைக் கண்டு ஆத்திரம் தலைக்கேறியது அவளுக்கு.

“டேய் கதிறு…” லேசாய் கலங்கிய கண்களை அவளிடம் காட்டாது திரும்பி நடந்தவன் சிந்தாமணியின் குரலில் நின்றான்.

“இங்க பக்க பக்கமா வசனம் பேசிட்டு தனியா போய் ஒப்பாரி வைக்காத!” என்றதில், தலையைக் குனிந்து சின்னதாய் புன்னகைத்தவன் நிற்காமல் சென்று விட்டான். வலித்தது தான். ஆனாலும் நிதர்சனத்தை உணர்ந்து தானே ஆக வேண்டும்.

—-

மெய்ன் லெப் வெடித்துச் சிதறியதில் அங்கு பேரதிர்ச்சி.

நிவேதன் காதையும் கண்ணையும் மூடி ஓரமாக அண்டி விட்டான். ‘என்னடா பாம்லாம் வைக்கிறீங்க’ என்ற பீதி அவனுக்கு.

யாஷ் பிரஜிதனின் நெஞ்சில் புதைந்திருந்த நிதர்ஷனாவின் உடல் அதிர்வில் நடுங்கியது.

ஆடவனின் இறுகிய அணைப்பில் மெல்ல மெல்ல சமன்பட்டவள், வெடுக்கென அவனிடம் இருந்து நகர்ந்து நிற்க, அவனோ அவளைக் கண்டு நக்கல் புன்னகை பூத்தான்.

‘தன்னை ஆழம் பார்த்திருக்கிறான் இந்த கலப்படக்கண்ணுக்காரன்’ என்ற உண்மை உறைக்க, அவனைத் தீயாய் முறைத்தாள்.

“என்ன ஆச்சு யாஷ்?” ஆதிசக்தி கேட்க, “வந்த வேல முடிஞ்சுது மம்மா. கிளம்பலாம்!” என்றவனைப் புரியாமல் ஏறிட்டார்.

ஒரு கையில் நிதர்ஷனாவைப் பிடித்து அங்கிருந்து கிளம்ப முற்பட, அவன் கையை தட்டி விட்டவள் தானே வேகமாய் வெளியேறிவிட்டாள்.

ஆதிசக்தியும் யாஷின் புஜத்தில் செல்லமாக அடித்து, “இப்படியா பயமுறுத்துவ. பாவம் அவ உடைஞ்சே போய்ட்டா…” என்று உதட்டைக் குவித்து கண்டித்தார்.

அதற்கும் தலையாட்டி சிரித்து வைத்தவன், “அவளை எப்படி சரி பண்றதுன்னு எனக்குத் தெரியும் மம்மா… லெட்ஸ் கோ!” என்று அவர் தோள்மீது கை போட்டு அழைத்துச் செல்ல, அவருக்கு கண்கள் பனித்தது.

எத்தனை வருட ஏக்கமிது! மகனின் அரவணைப்பில் பாகாய் கரைந்தார்.

தாயையும் தமையனையும் கண்ணெடுக்காமல் பார்த்த கண்மணிக்கு மகிழ்ச்சி ஊற்று பீறிட்டது.

“அச்சோ… என் கண்ணே பட்டுடும் போல. வீட்டுக்குப் போய் சுத்திப் போடணும்!” என்று நெட்டி முறித்துக் கொண்டவள், அதன்பிறகே ஒரு மூலையில் காலைக் குறுக்கி அமர்ந்திருந்த நிவேதனைப் பார்த்தாள்.

“இங்க என்ன பண்றீங்க? அண்ணா வெளில போய்ட்டாங்க…” எனக் கேட்டதும், மெல்ல தலையைத் தூக்கியவன், “நான்லாம் தீபாவளிக்கு கூட வெடி போட்டது இல்ல…” என்றான் பரிதாபமாக .

பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி அவள் வெளியில் செல்ல, “யம்மா கண்மணி என்னை விட்டுட்டுப் போகாத” என நிவேதனும் தெறித்து வெளியில் ஓடினான்.

யாஷ் அங்கிருந்த ஆள்களிடம் ஏதேதோ உத்தரவு பிறப்பித்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான்.

காரில் செல்லும்போது தான் ரித்திகாவிற்கு அடிபட்டிருப்பது தெரிந்தது யாஷிற்கு.

காரை நேராக மருத்துவமனை நோக்கி செலுத்தியவன், ஆஹில்யனைக் கண்டித்தான், “கவனமா இருக்க மாட்டியா” என்று.

அதில் முகம் வாடி விட்டவனை கண்டு ரித்திகா யாஷிடம் சண்டைக்கு வந்தாள்.

“அவன் என்ன செய்வான்? குண்டை கேட்ச் பண்ணவா முடியும்.”

“இதெல்லாம் நல்லா பேசு. உங்களை யாரு முதல்ல கேட்டைத் தாண்டி வர சொன்னது? இடியட்ஸ்! நான் நிதாவை மட்டும் தான கூட்டிட்டு வர சொன்னேன். எல்லாரையும் கும்பலா வர சொன்னேனா” என மொத்தக் குடும்பத்தையும் பார்வையால் எரித்தான்.

இளவேந்தன் தான், “எப்படிப்பா நீ தனியா ஆபத்துல மாட்டிருக்கன்னு தெரிஞ்சு அமைதியா இருக்க முடியும்?” என்க

“அதுக்கு நீங்களும் வந்து டேஞ்சர்ல மாட்டிக்கிட்டா இன்னும் பரபரப்பா இருக்கும் அப்படித்தான?” என முறைத்ததில் அசடு வழிந்தார்.

ரித்திகா தான், “சரி சரி எனக்கு டயர்டா இருக்கு. நான் தூங்க போறேன்” என்று தூங்குவது போல பாவனை செய்ய, அவளையும் மூக்கு விடைக்க முறைத்து வைத்தவன், “ஆஹில் கம்!” என்று ஆஹில்யனை வெளியில் அழைத்துச் சென்றான்.

“போன விஷயம் என்னாச்சு ஆதி?” இளவேந்தன் கேட்க, அவர் நடந்ததை எடுத்துரைத்ததும் “எவ்ளோ கேவலமான ஜென்மங்க” என்று முகம் சுளித்தார்.

“அப்போ அவங்க ரெண்டு பேரும் செத்துட்டாங்களா அத்தை?” சிந்தாமணி கேட்டதில், “ஆமா… ஆனா என்ன நடந்துச்சுன்னு தெரியல” என்றார்.

கதிரவனோ, அ”தெல்லாம் சரி… அந்த அலெஸ்னால தான நிதாவுக்கு எல்லாம் மறந்துச்சு. அப்போ, அவளை சரி பண்றதுக்கான வழியும் அவன்கிட்ட தான இருக்கும்?” எனப் புரியாது கேட்டதில், கண்மணியும் “கரெக்ட் தான். அண்ணா அதை பத்தி யோசிச்சு வச்சுருப்பாரு” என்றாள்.

“ஒருவேளை சரி பண்ண முடியாததா இருக்குமோ என்னவோ” நிதர்ஷனா முணுமுணுக்க, நிவேதனும் கதிரவனும் ஒருசேர முறைத்தனர்.

“உன்மேல செம கோபத்துல இருக்கேன். அவன் பொண்டாட்டியா நடிக்க கூப்பிட்டா நீ ஏன் ஒத்துக்கிட்ட நிதா?” நிவேதன் கோபமாகக் கேட்டான்.

“பின்ன, அந்த காசியாண்ட என்னை அடகு வைக்க சொல்றியா?” என சீறலுடன் மறுகேள்வி கேட்டதில் நிவேதனுக்கு குற்ற உணர்வாகி விட்டது.

அந்நேரம் யாஷ் பிரஜிதன் உள்ளே நுழைய, நிவேதன் அவனிடம் எகிறினான்.

“யாரும் இல்லாம தனியா இருக்குற பொண்ணுட்ட பொண்டாட்டியா நடிக்க சொன்னது எந்த விதத்துல சரி?” நிவேதனின் கேள்வியில் ஒற்றைப்புருவம் உயர்த்தினான் யாஷ்.

“இதே மாதிரி உன் தங்கச்சிட்ட கேட்டா உன்னால ஏத்துக்க முடியுமா?” அவனது அடுத்த கேள்வியில் கண்மணி விழி விரிக்க, அதன்பிறகே சொன்னதன் அர்த்தம் புரிந்து நிவேதன் திருதிருவென விழித்தான்.

பின்னங்கழுத்தைத் தேய்த்துக்கொண்ட யாஷ் பிரஜிதன், “வைஃபா நடிக்க சொன்னது சரியில்லதான்” என யோசனையுடன் கூற, நிதர்ஷனா அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.

“சோ வைஃபாவே இருக்கட்டும்!” என்றவன் தன்னையே வெறித்துப் பார்த்திருந்த நிதர்ஷனாவை அப்படியே தூக்கி தனது வயிற்றில் வைத்துக் கொண்டான்.

அவளது இரு கால்களையும் அவனது இடையைச் சுற்றி வளைத்து பிடிமானமாக பிடித்துக்கொள்ள, அதிர்வை விழுங்கும் முன்னே அவளின் இதழை விழுங்கத் தொடங்கினான்.

“ம்ம்ம்…” முனகலுடன் அவனது தோள்பட்டையை படபடவென அடித்தவளைச் சட்டை செய்யாதவனின் கால்கள் தானாக மருத்துவமனையை விட்டு வெளியில் சென்றது.

நிவேதனின் பேய்முழியைக் கண்டு கண்மணிக்கு சிரிப்பு பீறிட்டது. ஆதிசக்தி தான், “என்ன காரணம் சொன்னாலும் அவன் செஞ்சது தப்பு தான் நிவே. அவனுக்காக நான் சாரி கேட்டுக்குறேன்…” என்றதும் நிவேதன் திகைப்பில் இருந்து வெளிவந்து,

“அயோ அதெல்லாம் வேணாங்க… என் தங்கச்சியை இவ்ளோ நாள் நல்லபடியா பாத்துக்கிட்டதுக்கு நான் தான் நன்றி சொல்லணும்” என்றவனுக்கு அவர்களிடம் எவ்வாறு உரிமை கொண்டாடுவதென்றே தெரியவில்லை.

“நான் உனக்கு அத்தை முறை தான்…” ஆதிசக்தி அழுத்தமாக கூற, அவனிடம் சிறு தயக்கம்.

“அப்போ நிதா உன் தங்கச்சி இல்லையா?” அவர் இடக்காக கேட்டதில், “அப்படி இல்லைங்க அத்தை” என வேகமாக மறுத்தான்.

அவனது அத்தை என்ற அழைப்பில் சின்னப் புன்னகை சிந்தியவர், மகளை ஒரு பார்வை பார்த்தார்.

கண்மணியின் பார்வை நிவேதனின் மீதே படர்ந்திருந்ததில் அவரது புருவ மத்தியில் சிறு சுருக்கம்.

முத்தமிட்டபடியே நிதர்ஷனாவை காரின் பின் சீட்டில் அமர வைத்த யாஷ் பிரஜிதன் அவளை விட்டுச் சிறிதளவும் நகரவில்லை.

அவளோ வலுக்கட்டாயமாக அவனைத் தள்ளி விட்டு, “என்னை மறக்கணும்னு தான நினைச்ச… போயா!” எனக் கோபத்துடன் பேச வந்தவளுக்கு தானாய் குரல் தேய்ந்தது.

“உன்னை மறக்கணும்னா, நீ என்னை மறந்தப்பவே என் போஸ்டிங் பின்னாடி போயிருப்பேன்டி கடன்காரி…” அவனது கண்களில் கண்டிப்பு தெறிக்க, கீழுதட்டை அழுந்தக் கடித்தாள்.

“கடன்காரி” சில நொடிகள் இடைவெளிக்குப் பிறகு, யாஷ் மென்மையாய் அழைத்தான்.

அவள் விழிகளைத் தாழ்த்தி உர்ரென இருக்க, “ஏய் ஆலம்பனா!” இம்முறை குறும்பாய் வெளிவந்தது.

அதற்கும் அவள் நிமிராது போக, “மை டியர் மின்னல்…” என்றான் அவள் காதோரம்.

அதில் அவளது செவ்விதழ்களில் சிறு நகை எழுந்த கணம் மீண்டும் இருண்டது.

“நான் மறுபடியும் உன்னை மறந்துடுவேனா அரக்கா?” கண்ணில் நீர் திரையிட்டது.

அவளது கேள்வியில் இளகியவன், “நெவர் மின்னல்” என்றான் அவளின் நெற்றியில் மென்முத்தமிட்டு.

“அந்த அலெஸ் வைரஸ் பத்தி ஏதோ சொன்னாருல… இனி என்னைக் காப்பாத்த முடியாதுன்னு தான?” ஏக்கத்துடன் கேட்டவளிடம்,

“நோ டி… உனக்கு இஞ்செக்ட் பண்ணுன ப்ராஜக்ட் பெயிலியர் ஆகிடுச்சு. அது சக்ஸஸ் ஆகிருந்தா, வெறும் மெமரி ப்ராப்ளம் மட்டும் இல்ல. மூளை சம்பந்தமான நிறைய பிரச்சினை வந்துருக்கும். காட்ஸ் கிரேஸ் அப்படி எதுவும் நடக்கல. இனியும் எதுவும் நடக்காது. ட்ரஸ்ட் மீ ஆலம்பனா!” என்றான் அவளின் இரு கன்னத்தையும் பற்றி.

“நான் உன்ன மட்டும் தான் நம்புறேன் அப்பவும் இப்பவும்…” கரகரப்புடன் கூறியவளைக் கண்டு மென்னகை புரிந்தவன் “நிஜமாவா?” என்றான் காதல் பார்வை வீசி.

“நெஜம்ம்மா…” கேலியாய் அழுத்திக்கூறியவளின் முகம் புன்னகையில் மலர, அதுவே ஆடவனின் முகத்திலும் பரவியது.

“லவ் யூ டி!” அவளது நெற்றி முட்டி காதலை உரைத்தான் யாஷ் பிரஜிதன்.

நெஞ்சம் நேசத்தில் நிறைய, அவன் தோள் மீது கரத்தை மாலையாக சூட்டியவள், “இன்னும் ரெண்டு தடவை கல்யாணம் பண்ணனும்னு சொன்னியே அரக்கா… அது எப்ப?” எனக் கேட்டாள் கிசுகிசுப்பாக.

கண்ணோரம் சுருங்க புன்னகைத்தவன், “ஆல்ரெடி பண்ணுன கல்யாணத்துக்கு பர்ஸ்ட் நைட் ரெடி பண்ணிடலாம். தென், மீதி ரெண்டு மேரேஜ்க்கும் ப்ரிப்பேர் ஆகிடலாம். ஓகே வா மின்னல்?” என்றான் குறும்பாக.

நாணத்தில் குளித்து விட்ட நிதர்ஷனா, “யோவ்… அது ஏதோ நடிப்புன்னு தான என்னை நம்ப வச்ச. அதுக்குலாம் பர்ஸ்ட் நைட் கிடையாது!” என்று விட,

“மேரேஜ் ஆக்டிங்காக பண்ணுன மாதிரி பர்ஸ்ட் நைட் ஆக்டிங்கா பண்ணலாம்டி…” மூக்கோடு மூக்குரசினான்.

“அதுக்கு வேற ஆள பாரு அரக்கா!”

“வேற ஆளை பாக்கலாம். பட் நீ குடுக்குற கிக் கிடைக்குமான்னு தெரியல” அவன் கிண்டலாய் உரைத்ததில், “உன்னைக் கொன்னுடுவேன் யாஷ்” என்று அவன் முடியைப் பிடித்து இழுத்தாள்.

“அப்பறம் என்னடி… லவ் சொல்றப்பவும் நோ லவ் மேக்கிங்னு சொல்லிட்ட. இப்ப ஆப்டர் மேரேஜும் நோ’ன்னா, ஐ ஆம் சோ பாவம்ல!”

“யாரு நீ பாவமா. பாவியா நீயி. அசால்ட்டா ரெண்டு கொலையை பண்ணிட்டு என்னாண்ட லவ்ஸ் வுட்டுட்டு இருக்க. அதுசரி அவங்க என்ன தான் ஆனாங்க? நீ ஏன் அந்த லேப்குள்ள போன?” என அடுக்கடுக்காய் கேள்வி கேட்க,

“கிஸ் மீ ஃபர்ஸ்ட்!” என்றான் அவளை ஊடுருவியபடி.

வெட்கப் புன்னகை சிந்தியவள், அவனது கன்னம் பிடித்து திருப்பி முத்தமிட்டாள்.

“அவ்ளோதானா?” கிறக்கத்துடன் வினவியவனிடம், “இப்போதைக்கு அவ்ளோதான்… கார்ல இருக்கோம்னு கொஞ்சமாச்சு வெவஸ்தை இருக்காயா ஒனக்கு?” என உதட்டைச் சுளிக்க, “கார்ல இருக்கறதுனால தான் கிஸ் மட்டும் பண்றேன் மின்னல்…” என்றவனின் விஷமக் கூற்றில் செங்கொழுந்தையாகிப் போனாள் நிதர்ஷனா.

அன்பு இனிக்கும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 173

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
25
+1
187
+1
5
+1
7

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment