
திமிர் 5
“உனக்கு என் மேல நிறையக் கோவம் இருக்குன்னு தெரியும். ஒன்னு மட்டும் தான் நான் உனக்குச் சொல்ல முடியும். நடந்த எதையுமே நான் பிளான் பண்ணல, அந்த ரிப்போர்ட்டத் தவிர. எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்துச்சு. இதுதான்னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சிடுச்சு அகா… என்னால மன்னிப்பைத் தவிர வேற எதையுமே கேட்க முடியாது.”
“வேணாம்டி! எனக்கு உன்னோட மன்னிப்பு வேணாம்… எனக்குப் பதில் வேணும்!”
“பதில் வேணுமா, அம்மு வேணுமா?”
“ரெண்டும்!”
“அவள் இனி வரமாட்டா அகா… அங்க நடந்ததோட அவ அத்தியாயம் முடிஞ்சிடுச்சு. உன் லைஃப்ல அவளுக்கு இடம் இல்லை. நடந்ததை மறந்திடு.” என்ற வார்த்தையைக் கேட்டவன் மிருகமாக மாறினான்.
பிடித்த இழுத்து மெத்தையில் தள்ளி, அவள் மீது சரளமாக விழுந்தவன் மூர்க்கத்தனத்தைக் கையாண்டான். அவன் கட்டுப்பாட்டில் இருந்ததில் மூச்சு விட முடியவில்லை. அசையக் கூட இடம் தராமல் சுற்றி வளைத்திருந்தவன் விழிகள் குத்திக் கிழித்தது. பற்கள் கடிபடும் ஓசையில் தன் பலத்தை இழந்தவன் பலவீனமாகக் கெஞ்ச,
“நீ சொன்னாலும், சொல்லலனாலும் என் வாழ்க்கைல அவளுக்கு இடம் இல்லை. ஆனா, அவளை மட்டும் மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன். இவ்ளோத்துக்கும் காரணமான உன்னைக் கொன்னால் தான்டி என் ஆத்திரம் அடங்கும். எதுக்காக எனக்கு இப்படி ஒரு பாவத்தைப் பண்ண… ஏன்டி பண்ண? உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? அன்பைக் காட்டி என்னை ஏமாத்திட்டியே… பொம்பள மோகத்துல இந்த அகம்பன் விழுந்திடுவான்னு உலகத்துக்குக் காட்டிட்டியேடி!” மெத்தையோடு மெத்தையாக அவளைப் புதைத்து, உயிரை வாங்கும் வேலையில் இறங்கினான் அகம்பன் திவஜ்.
அவன் பேசிய பாதி வார்த்தைகள் காதில் விழவில்லை மதுணிகாவிற்கு. கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போவது போல் இருந்தது. கிட்டத்தட்ட மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தவள், தன் உயிருக்காகப் போராடினாள். அதைக் கண்டும் போதவில்லை அகம்பனுக்கு. அவளைப் பிணமாகப் பார்க்க முடிவெடுத்து முகமருகே நெருங்கி,
“உன் உயிரைத் துடிதுடிக்க எடுத்துட்டு, உன்னோட சேர்த்து அவளையும் மொத்தமா மறந்துடுறேன்டி!” அவனைப் போல் அவன் மூச்சுக்காற்றும் மூர்க்கத்தைக் காட்டியது அவளிடம்.
கண்ணில் வடியும் கண்ணீரோடு உயிர்ப்பிச்சைக்கு இறைஞ்சியவள் மீது இரக்கம் வராது, “சாவு!” எனக் கொல்லத் துணிந்தவனை ஒரே வார்த்தையில் அடக்கினாள்.
அவ்வார்த்தையைக் கேட்டவன், மலை உச்சியில் இருந்து விழுவது போல் அவள் மீது வைத்த கையை எடுத்துவிட்டுத் தள்ளிச் சென்று நிற்க, பெருமூச்சு விட்டபடி இரும்பினாள். அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அகம்பன். சுவாசத்தை உள்ளிழுத்து நிதானத்தை உடலுக்குள் ஊடுருவ வைத்தவள் சுயநினைவு பெற்று எழுந்தமர, அவன் பார்வை உயிரையே எடுத்து இருக்கலாம் என்று தோன்ற வைத்தது.
வழிந்தோடும் கண்ணீருக்கு மத்தியில், “சாரி அகா…” என்றிட, சுவரில் அடித்த பந்து போல் அவளை விட்டு விலகியவன், மீண்டும் கழுத்தைப் பற்றி மெத்தையில் சாய்த்தான்.
போன முறை ஆத்திரத்தால் மட்டுமே சூழ்ந்த அவன் கோபம், இந்த முறை ஏமாற்றத்தால் பலம் இல்லாமல் சூழ்ந்தது. அதை அவளால் தடுக்க முடிந்தது. ஒட்டுமொத்தப் பலத்தையும் ஒரே வார்த்தையில் சரித்தவள், கண்களால் மன்னிப்பை வேண்டிக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில், ஆத்திரம் மட்டுப்படுவதை உணர்ந்து விலகியவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து, தன் உதட்டுக்குள் அவன் உதட்டை ஒளித்து வைத்துக் கொண்டாள் மதுணிகா.
எதிர்பாராத நிகழ்வில் ஆடிப் போனவன் அவளிடம் இருந்து விடுபட முயற்சிக்க, குற்ற உணர்வும் அவன் மீது புதிதாக முளைத்த காதலும் விட்டுக் கொடுக்கவில்லை. திடமானவன் இதழ்களைக் குற்ற உணர்வில் தின்று சுவைத்தாள். ஒவ்வொரு முறையும் அவன் விலக முயற்சிக்கும் பொழுது அவளின் இதழ்கள் வேகத்தை அதிகரித்தது.
பலமிழந்து, அவளுக்குக் கட்டுப்பட்டு இணையத் துடிக்கும் உடலைக் கண்டித்துத் தோற்றுப் போனவன், என்ன செய்வதென்று தெரியாமல் பக்கத்தில் இருந்த பாட்டிலை எடுத்து உடைத்தான். தன்னோடு இருந்தவன் மீது முழுக் கவனமும் இருந்ததால், அதை உதாசீனம் செய்தவள் கழுத்தில் கை நுழைத்து நகர விடாது முத்தத்தைத் தொடர்ந்தாள்.
அவள் எச்சில் அருவருப்பைக் கொடுத்தது அகம்பனுக்கு. தாங்க முடியாத ஆத்திரத்திற்கு ஆளானவன், மீதமிருந்த மற்றொரு பாட்டிலை எடுத்துத் தன் தலையில் உடைத்துக் கொண்டான். இதழை விட்டவள் திகைத்தபடி படுத்திருக்க, வெடுக்கென்று எழுந்தவன் நெற்றியில் ரத்தம் பீறிட்டது.
திகைப்பிலிருந்து வெளி வராதவள் கண்களில் மட்டும் உணர்வுகள். அவன் நிலையை எண்ணிக் கதறித் துடித்தது. அவனுக்கு அந்த வலி எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. அவள் எச்சில் பட்ட தன் உடம்பை என்ன செய்வதென்று தெரியாத ஆத்திரத்தில் பற்களைக் கடித்துக் கொண்டிருந்தான். உள்ளுக்குள் இருந்த அரக்கன், உடைந்த பாட்டிலை மீண்டும் எடுத்து அடித்துக் கொள்ளச் செய்தது. சிலைக்கு உயிர் வந்தது போல் திகைப்பில் இருந்து வெளிவந்து அவன் தோளைத் தொட,
“தொடாதடி!” எனக் கத்தியவனின் கத்தல் அந்த விடுதி முழுவதும் எதிரொலித்தது.
கற்பகம் ஊட்டி வளர்த்த ரத்தம் தரையில் சிந்தத் தொடங்கியது. முட்டிக் கொண்டு வரும் அழுகையோடு, “ரத்தம் வருது அகா…” என்க, “உன் எச்சிலுக்கு ரத்தம் பரவால்ல.” என்றான்.
பாரம் தாங்காது சத்தமிட்டு அழத் தொடங்கினாள். சூனிய உலகத்திற்குள் சிக்கிக்கொண்டு, தன்னிலை இழந்து அமர்ந்திருந்தான் அகம்பன். தேக்கி வைத்த அழுத்தம் மொத்தமும் அழுகையாக வெளிவந்த பின், கண்ணீரைத் துடைத்து அவனை நெருங்கும் நேரம் அழைப்பு வந்தது.
“சொல்லும்மா…”
“இன்னும் என்னடி வீட்டுக்கு வராம இருக்க?”
“ஹாஸ்பிடல்ல கொஞ்சம் வேலை இருக்கும்மா. முடிச்சுட்டு வரேன்.”
“என்ன மது, குரல் ஒரு மாதிரி இருக்கு.”
“ஒ..ஒன்னும் இல்லம்மா.”
“அப்பா பேசுனதை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கியா. அவரப் பத்தி தான் உனக்குத் தெரியுமே. அவருக்குப் பொண்டாட்டி, புள்ளைங்க எதுவுமே முக்கியமில்லை. அந்த ஹாஸ்பிட்டலும், அதுல இருந்து வர லாபமும் மட்டும்தான் முக்கியம். அதுக்காகத்தான், உன்கிட்ட அந்த மாதிரிப் பேசினாரே தவிர, தனிப்பட்ட முறையில் அப்பாக்கு உன் மேல எந்தக் கோபமும் இல்ல மது. அவருக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்.”
“அதெல்லாம் எதுவும் இல்லம்மா. நீ என்னை நினைச்சுட்டு இருக்காம சாப்பிட்டுத் தூங்கு.”
“என்னன்னு தெரியல மது, கொஞ்ச நாளாவே ஏதோ ஒரு பயம் வருது. என் பொண்ண இழந்திடுவனோன்னு தோணுது. என்ன நடந்தாலும் இந்த அம்மாவை விட்டுப் போக மாட்டல்ல.”
“உன்னை விட்டு நான் எங்க போகப் போறேன்? அப்பாவோட கோபம் ரொம்பச் சரி! என்னை நம்பித்தான எல்லாத்தையும் கொடுத்தாரு. அதை இப்படி ஆக்குனது என்னோட தப்பு. நான்தான் சரி பண்ணனும். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுட்டா அப்பாவோட கோபம் குறைஞ்சிடும்.” என்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எள்ளி இதழ் வளைத்தான்.
அவனைப் பார்த்துக் கொண்டு அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தவள், “வேலை இருக்குமா வைக்கிறேன்.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
சிந்தும் ரத்தத்தைப் பொருட்படுத்தாது இருக்கையில் தலை சாய்ந்து கண் மூடினான் அகம்பன். முதலுதவிப் பெட்டியை அவன் பக்கத்தில் வைத்தவள், “உன் அம்முக்கு நீ இப்படி இருக்கிறது பிடிக்காது அகா… அவளுக்காகவாது டிரெஸ்ஸிங் பண்ணிக்க.” என நகர்ந்தாள்.
“உனக்கு ரொம்பப் புடிக்கும்ல.”
சிந்தும் கண்ணீரின் அளவு அதிகரித்தது. மூக்கை உறிஞ்சித் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தவள், “அவளை விட எனக்குத்தான் ரொம்ப வலிக்குது. மதுணிகா தான், உன்னை முதல்ல பார்த்தா… உன்னோட முரட்டுத்தனம் தெரிஞ்சுதான் ஆசைப்பட்டா. அதுக்கப்புறம் வந்தவள் தான் அம்மு. அவள் உன்கிட்டக் கொஞ்ச நாள் நடிச்சா. ஆனா, உண்மையா காதலிச்சா… மதுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. அவளுக்கு உன்னைக் காதலிக்கவும் தெரியல, விட்டுட்டுப் போகவும் தெரியல. அவளால நீ இப்படிக் கஷ்டப்படுறதைப் பார்க்கவும் முடியல. என்ன பண்ணி என்னால ஏற்பட்ட இழப்பைச் சரி பண்றதுன்னு தெரியல. உன் விருப்பப்படி என்னோட உயிர் அதை நிறைவேத்தும்னா, அதுக்கும் நான் தயாரா இருக்கேன். அதுக்கு முன்னாடி உன்ன மாதிரி என்னால பாதிக்கப்பட்ட என் குடும்பத்துகிட்ட அந்த ஹாஸ்பிடல கொடுக்கணும். அதுக்காகத்தான், மதுணிகா இன்னும் இருக்கா.” என அவனை விட்டு இரு அடி எடுத்து வைத்தவளின் கைப்பிடித்தான்.
கட்டுப்படுத்தி வைத்த அழுகை வெடித்துச் சிதறியது. அதைத் தனக்குள் அடக்கிக் கொண்டான் இழுத்து மடியில் சாய்த்து. நெஞ்சோடு சேர்ந்து கொண்டவள், தோள் மீது கை சுற்றி உணர்வுகளைப் புரிய வைக்க முயற்சிக்க, அவன் உணர்வுகளைத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்தான் இதழோடு இதழ் பொருத்தி. மதுணிகாவின் விரல்கள் அகம்பனின் பின் கழுத்தில் புதைந்து போனது. அவன் விரல்கள் அவள் இடையோடு ஒளிந்து கொண்டது. மதுவைத் தொட்டவன் உடலில் இருந்த மது காணாமல் போனது. அனைத்தையும் தன் உதடு வழியே தனக்குள் எடுத்துக் கொண்டாள் மதுணிகா.
குடித்து உண்டான போதையை விட, அவள் கொடுக்கும் போதை கிறங்கடித்தது. இருவருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கும் போர் மறந்து, பிடிக்காது என்றவளைப் பிடித்தத்தோடு முத்தமிட்டுக் கொண்டிருந்தான். பல நாள்களாகத் தேங்கி இருந்த பாரங்கள் எச்சில் பரிமாற்றத்தில் குறைந்தது. மூச்சுக்காற்றுத் தொந்தரவு செய்யும் வரை ஆழ்ந்த முத்தத்தில் உறவாடிக் கொண்டிருந்தவர்கள் விலகினார்கள்.
இருவரின் எண்ண ஓட்டமும், ஒன்றுபோல் எதிராக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கனத்த மௌனத்தைக் கையாண்டார்கள். மதுணிகாவின் பார்வை நெற்றி மீது நகர்ந்தது. அதில் கை வைக்கத் தட்டி விட்டான். ஒரு நொடி அமைதிக்குப் பின் மீண்டும் தொட, “ப்ச்!” என நிராகரித்தான்.
மனம் தளராமல் மூன்றாவது முறையாகக் கை வைக்க, இந்த முறை எதிர்ப்புக் குறைந்தது. நிம்மதிப் பெருமூச்சோடு முதலுதவி செய்யத் தொடங்கியவளிடம், தன்னை விட்டுக் கொடுத்து இருக்கையில் சாய்ந்து கண் மூடினான். கண் கலங்க அவன் ரத்தத்தைத் துடைத்து மருந்திட்டவள் விலகி அமர்ந்தாள். எதுவும் சொல்லவில்லை அகம்பன் திவஜ். நேரத்தைப் பார்க்க நள்ளிரவைத் தொட்டிருந்தது.
“நான் கிளம்பவா?”
அமைதியாக அமர்ந்திருந்தான். பதிலுக்காகக் காத்திருந்து வெகு நேரம் ஆனதும், “அகா…” என்றழைக்க, அவனிடம் எந்த அசைவும் இல்லை.
அவனைப் பற்றித் தெரிந்தும் வீணாகக் காத்திருந்தவள், “சீக்கிரம் தூங்கு…” என்று விட்டு வெளியேற, அவள் செல்லும் வரை கண்மூடி அமர்ந்திருந்தவன் கண் திறந்தான். விழிகளில் வலியும், காதலும் நிறைந்திருந்தது. கூடவே அளவில்லாத வெறுப்பும்.
சென்றவளையும், அவன் காதலித்தவளையும் எண்ணிப் பெரும் மனவலியில் போராடிக் கொண்டிருந்தவனுக்கு அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்று தெரிந்தே எடுக்காமல் இருந்தான். மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. வேண்டாம் என்ற மனத்திற்கு எதிராக அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.
“இன்னைக்கு ஒரு நைட் மட்டும் நான் உன் அம்முவா இருக்கவா…”
திக்கித் திணறி வார்த்தையை வெளியிட்ட மதுணிகாவைக் கன்னத்தில் அறைந்தான், பட்டென்று அழைப்பைத் துண்டித்து. அறையை விட்டு வெளிவந்தவள், செல்ல மனம் இல்லாமல் அங்கு இருந்துதான் அழைத்தாள். அவன் கொடுத்த பதிலில் மனம் கசங்கி, அவன் மனத்தில் என்றும் தனக்கு இடமில்லை என்ற விரக்தியில் நடக்கத் தொடங்கினாள்.
தன் போக்கில் நடந்து கொண்டிருந்த அவளை வலக்கரம் மட்டும் மேலே தூக்கியது. திடுக்கிட்டு அசைந்து திரும்பியவளின் உணர்வுகள் மனமாரச் சிரித்தது அகம்பன் என்றறிந்து. ஒரு கையால் அவளைத் தூக்கிக்கொண்டு நடந்தவன் முகத்தில் துடைத்து எடுத்தது போல் இருந்தது உணர்வுகள். அதில் எதையோ தேடித் தோற்றுப் போனவள், சிரித்த உணர்வுகளைக் கட்டிப் போட்டாள். ஜடமாகத் தூக்கிக் கொண்டு வந்து மெத்தையில் தள்ளியவன் அவள் மீது விழுந்தான்.
காதலால் தழுவ வேண்டியவன் கோபத்தில் தழுவ நினைப்பது புரிந்தது. தானே தேடிக் கொண்டதால் ஒத்துழைப்புக் கொடுக்க எண்ணி அரவணைத்துக் கொண்டவன் செவியில், “இன்னைக்கு நைட் மட்டும் இல்ல, அம்மு எனக்குக் கிடைக்கிற வரைக்கும் என்னோட ஒவ்வொரு நைட்டையும் நீதான் ஃபுல்ஃபில் பண்ணனும்.” என அவளுக்குள் தன் தேடுதலைத் தொடங்கினான்.
இடைக்குள் விரல் நுழைத்துத் தன் தடம் பதித்தவன், இதழை மொத்தமாகத் தன்வசம் ஆக்கிக் கொண்டான். துடிக்கும் அவள் உணர்வுகளைக் கொஞ்சிக் குலாவித் தழுவி ஆராதனை செய்தான் முரட்டுத்தனமாக. வலியும், காதலும் அவன் இஷ்டப்படி நடந்தது. ஆடைகள் அவன் கோபத்திற்கு அஞ்சி எங்கோ பறந்தோடிக் கிடக்க, அகம்பன் தேகமே ஆடையானது அவளுக்கு. முதுகோடு கை நுழையத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டவளுக்கு மனம் லேசாக நிறைந்தது.
அவளை அணுகும் பொழுது இருந்த இறுக்கம் தளர்வதை நன்றாக உணர்ந்தாள். இதுவே தனக்குப் போதும் என்று அவனுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க, அகம்பனின் மீசை உரசாத இடமில்லை. எச்சிலுக்குப் பரிமாற்றங்கள் போதவில்லை. மீண்டும் மீண்டும் தன் தேவையை நாடியது இதழை ஒட்டவைத்து. தன் கனத்தைத் தாங்க முடியாமல் போராடும் பெண்மையைச் சரி சமமாகத் தளர்த்தி மூச்சு விட வைத்தவன், ஆண்மைக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொண்டான்.
குளிருக்கு இதமாகத் தடித்த போர்வை இருவருக்கும் பாதுகாப்பானது. பருத்திக் கம்பளிக்குள் உடல்கள் பாதுகாப்பாகத் தன் தேவைகளை நிறைவேற்றியது. பல மனப் போராட்டங்களுக்குப் பிறகு உடலால் ஒன்றிணைந்தவர்கள், மனம் ஒன்றிணையவில்லை. காதல் இல்லை என்று இருவரும் சொல்லிக்கொண்டு, காதல் இல்லாத காமத்தை உறவாக வைத்துக் கொண்டனர்.
தனக்கானதை முழுவதுமாக எடுத்துக் கொண்டவன், அவளையும் திருப்தியாகக் கையாண்டான். அகம்பன், மதுணிகா இருவருக்குள்ளும் என்ன உறவு என்று தெரியாமலே தாம்பத்தியம் தொடங்கியது. எல்லாம் முடிந்தபின் அவளை விட்டு விலகினான். மனம் வலித்தது மதுவிற்கு. அதைப் பெரிது படுத்தாமல் அவன் மார்போடு தலை சாய, சேர்த்தணைக்காமல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதைவிட, அவனை நம்பி அவனோடு சேர்ந்தவளுக்குப் பெரிய அவமானம் இல்லை. எல்லாம் முடிந்தபின் கண்ணீர் வடிப்பது முட்டாள் தனம் என்று மெல்ல அவனை விட்டு விலக, அவன் கரங்கள் சேர்த்தணைத்தது. எந்த யோசனைக்கும் இடம் தராமல் வயிற்றோடு கை போட்டு அவனோடு ஒன்றிப்போனாள். இருவருக்குள்ளும் மனப்போராட்டங்கள் விடியும் வரை குறைவதாக இல்லை.
விடியல் பொழுதில் உறங்க ஆரம்பித்தான் அகம்பன் திவஜ். சிறுதுளி உறக்கம் இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதுணிகா. விடியல் பிறந்தும் வராத மகளை அழைத்தார் அஞ்சலை. அன்னையின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தவள் சத்தத்தைக் குறைத்து, “வந்திட்டு இருக்கேம்மா.” பதில் கொடுத்துவிட்டு மெத்தையை விட்டு எழப் போனாள். சேர்த்துப் பிடித்துப் போர்வையைப் போர்த்தினான்.
“அகா…”
அதற்கு மேல் எந்தப் பேச்சுக்களும் அங்கு இடம் பெறவில்லை. அவளுக்கும் சேர்த்து அவனே அவளை ஆளத் தொடங்கினான். நள்ளிரவு, ஒத்துழைப்புக் கொடுத்தவள் இப்பொழுது அடம் பிடித்தாள். அதை வெகு நேரம் கழித்து உணர்ந்தவன், அவளைப்போல் ஒரே அழைப்பில் அவள் உணர்வுகளைக் கட்டிப் போட, அதன்பின் அவள் ஆட்சியே அங்கு அதிகமாக நடந்தது. ஆடையில்லாத காதல் அரங்கேறியது. பல்தடம் அவன் மார்பில் சின்னமாக, பதிலுக்கு ஆசை கொண்ட இடத்தில் எல்லாம் தடம் பதித்துத் தன் பலத்தைக் காட்டினான் அகம்பன் திவஜ்.
***
“நில்லு…”
தந்தையின் குரலுக்குக் கட்டுப்பட்டு நின்றாள் மதுணி. கணவனின் அதிகாரக் குரலில் சமையலறையில் இருந்த அஞ்சலை எட்டிப் பார்த்தார்.
“எங்க போயிட்டு வர?”
“ஹாஸ்பிடல் ப்பா…”
“என்கிட்டப் பொய் சொல்லலாம் ஸ்டார்ட் பண்ணிட்டியா மது?”
“இ..இல்லப்பா”
“என் முன்னாடி நிக்கறது என் பொண்ணே இல்ல. வேற யாரோ மாதிரி இருக்கு. என் பொண்ணுக்கு நேருக்கு நேராய் பேசித்தான் பழக்கம். எப்போ அவன் நம்ம வாழ்க்கைக்குள்ள வந்தானோ, அப்பவே நீ ரொம்ப மாற ஆரம்பிச்சுட்ட. என் பேச்சை மீறி அவன் விஷயத்துல நடந்துகிட்ட. இப்போ அவன் சொல்றதை மட்டும் தான் கேட்கிற.”
“எல்லாம் நம்ம ஹாஸ்பிடலை வாங்கத்தான்.”
“அதுக்காக ராத்திரி முழுக்க அவன் கூட இருக்கணுமா?”
“மது!” அதிர்ந்தார் அஞ்சலை.
“நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்லம்மா.”
“இதை ஊரு உலகமும் நம்பாது. ராத்திரி முழுக்க அவன் கூட என்ன வேலை உனக்கு?”
“நைட்டெல்லாம் அவன் கூட இல்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்புனோம்.”
“ஓஹோ, அப்ப ராத்திரி ஒன்பதரை மணிக்கு அவன்கூட கார்ல போனது நீ இல்லையா?” என்றதும் அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
“பார்த்துக்கடி உன் பொண்ண… அவ மேல கோபப்பட்டதுக்கு எவ்ளோ சண்டை போட்ட என்கிட்ட. என் கண்ணு முன்னாடி அவன்கூட ஏறிப் போயிட்டுக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போனன்னு சொல்றாள். இவளுக்கும் அவனுக்கும் நடுவுல என்னமோ நடந்திருக்கு. அதை நம்மகிட்ட இருந்து மறைக்கிறா…”
“அப்பா என்னடி சொல்றாரு? அவனுக்கும், உனக்கும் நடுவுல என்ன இருக்கு? என்னமோ ரிப்போர்ட் மாறிப் போச்சு, அதை வாங்கணும்னு தான பேசிகிட்டு இருந்தீங்க. இப்ப அவன் ஹாஸ்பிடல்ல உட்கார்ந்துட்டு என்னென்னமோ பண்றான்னு சொல்றாங்க. நீயும் அமைதியா இருக்க. நீ இந்த மாதிரி இருக்கற ஆள் கிடையாது மது. எனக்கே நீ ரொம்ப வித்தியாசமாத் தான் தெரியுற.”
தாய் தந்தையருக்கு எப்படித் தெரிவிப்பாள், அவனைக் கண்ட நாள் முதல் அவளைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருப்பதை. அவள் அவளாக இருந்து வெகு நாள் ஆகிறது. அவனிடம் இவள் தைரியம் செல்லாக்காசு. முதல் முறையாகப் பெற்றவர்கள் முன்பு தலை குனிந்து நிற்கிறாள்.
“இப்போதைக்கு என்கிட்ட எதையும் கேட்காதீங்க. ஹாஸ்பிடலை அவன்கிட்ட இருந்து வாங்கணும். அது மட்டும் தான் என்னோட ஒரே எண்ணம்.” எனத் தன் அறைக்குச் செல்லப் படி ஏறினாள்.
செல்லும் மகளை வேறு கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டிருந்தார் முரளி. கணவர் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார் அஞ்சலை. அகம்பனுக்கும் தன் மகளுக்கும் என்ன உறவு என்பதைத் தெரிந்து கொள்ள முடிவெடுத்தவர், “மெல்ல அவகிட்டப் பேசி என்ன விஷயம்னு வாங்கப் பாரு. எதையோ மறைக்கிறாள். இவளால அந்த ஹாஸ்பிடலை வாங்க முடியாதுன்னு தோணுது. அப்படி ஒரு நிலைமை வரதுக்குள்ள அவனை ஒழிச்சுக் கட்டணும்.” தன் போக்கில் பேசிக் கொண்டிருக்க,
“நிஜமாவே நைட் எல்லாம் அவன்கூட தான் இருந்தாளா?” நம்ப முடியாது கேட்டார்.
“ஆமா!”
“அவங்க ரெண்டு பேருக்குள்ள…”
“தெரியாது. ஆனா, அப்படி எதுவும் நடக்கக்கூடாது. நடக்கவும் நான் விடமாட்டேன்.”
“மதுக்குப் புடிச்சா அவனையே…”
“அஞ்சலை!”
“எல்லாரையும் அதிகாரம் பண்ணிட்டு, அவன்கிட்ட அடங்கிப் போறானா, அவனைப் புடிச்சிருக்குன்னு தான அர்த்தம். ஒரு அம்மாவா என் பொண்ணு மனசை ஒரு அளவுக்குக் கணிக்க முடியுது. அவளுக்குப் புடிச்ச வாழ்க்கையக் கொடுக்கறது தானங்க நம்ம கடமை.”
“வாய மூடு! என் கடமை என்னன்னு எனக்குத் தெரியும். அவளைக் கடைசி வரைக்கும் இப்படியே வச்சிருந்தாலும் வச்சிருப்பனே தவிர, அவன் கூட மட்டும் சேர்த்து வைக்க மாட்டேன். அப்படி ஒரு நிலைமை வந்தா நானே விஷத்தை வச்சு மதுவைக் கொன்னுடுவேன்.” என்று விட்டுச் செல்லும் முரளியை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார் அஞ்சலை.
***
தன்னறைக்குச் சென்று, குளியலறை புகுந்தவள் ஷவரைத் திறந்து விட்டு ஆடையோடு அப்படியே நின்றாள். மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளுக்கு எது தேவை என்று புரியவில்லை. அகம்பனுக்குத் தேவையானதைக் கொடுக்க மனம் வரவில்லை. தந்தையின் கோபத்திற்கு ஆளானதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உலகமே அவளுக்கு எதிராக நடப்பது போன்ற பிரம்மை.
அகம்பனைச் சந்திக்கும் வரை, வருங்கால வாழ்வை எண்ணியது இல்லை. பெண்மையின் அழகை ரசித்ததில்லை. எல்லாம் அந்த முரடன் வந்த பின் தான் மாறியது. அதனால்தான், அவன் காட்டும் கோபத்திற்குக் கட்டுப்பட்டு நிற்கிறாள். தன்னையே, தனக்கு மீட்டுக் கொடுத்தவன் வாழ்வைச் சூனியமாக்கிய குற்ற உணர்வு அவள் தூக்கத்தைக் கெடுக்கிறது.
ஈரமான ஆடைகளைக் கழற்றினாள். அகம்பன் நினைவு பல் தடமாக நெஞ்சுக்குழியில் பதிந்திருந்தது. கண்ணாடியில் அதைக் கண்டு வருடியவள், “நீ வருவன்னு தெரியும் அகா… ஆனா, எனக்காக வருவன்னு தெரியாது. அம்முவா வாழனும்னு ஆசைப்படுறேன். என்னை அம்முவா ஏத்துப்பியா? அவகிட்டக் காட்டுன காதலை என்கிட்டக் காட்டுவியா…” என்றவள் நினைவு தனியாக அம்முவைச் சந்தித்த தருணத்திற்குச் சென்றது.
***
“உனக்கு யாரும் இல்லையா?”
“இல்ல மேடம், நான் ஆஸ்ரமத்துல வளர்ந்தேன்.”
“அகம்பன் திவஜூக்கு எந்தப் பொண்ணுங்க கூடவும் பழக்கம் இல்லை. சோ, அவன் உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசுறதே பெரிய விஷயம். அவன் கோபத்தைத் திசை திருப்பணும். உன் விஷயத்துல அவன் ரொம்ப யோசிக்கவே கூடாது. இதெல்லாம் நடக்கணும்னா உன் மேல கருணை வரணும். அந்தக் கருணை தான் அவனை நெருங்க வைக்கும்.” என்ற மதுணிகா அவள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று பெரிய திட்டத்தையே கூறினாள்.
அவை அனைத்தையும் கேட்ட அம்முவின் மனத்திற்குள் திக்! திக்! ஓசை. இது சரியாக வருமா என்று ஆயிரம் கேள்விகள் அவளுக்குள். அதை வெளிப்படையாக மதுவிடம் கூற, “அவனை மாதிரி ஒருத்தனை அடக்கணும்னா இதுதான் ஒரே வழி!” என அவளைச் சமாதானப்படுத்தினாள்.
