Loading

அத்தியாயம் – 19

அந்த உணர்ச்சிகரமான மாலை பொழுதிற்கு பிறகு, எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்ல முடியாது. அனைத்தும் அப்படியேதான் இருக்க, ஆங்காங்கே, கடுகு போன்ற மாற்றம் மட்டுமே தென்பட்டது.

ஆனால், அடுத்த சந்திப்பில், ஆரவ் வித்தியாசமாக இருந்தான். அவன் விறைப்பாக இல்லை. ஆனால், சங்கடமாக இருந்தார். 

அமுதினியின் கண்களை நேரடியாகப் பார்க்க தயங்கி, தொழில்முறையாக இருக்க ரொம்பவும் சிரமப்பட்டான்.

அமுதினியும் அதை உணர்ந்தாள். அவள் தன் பலவீனத்தை அவனுக்குக் காட்டியிருக்க, அவனால் முன்பு போல கோபத்தை காட்ட முடியவில்லை. 

இப்பொழுது, இருவரும் இதிலிருந்து எப்படி முன்னேறுவது என்று தெரியவில்லை.

“இந்த வாரம் நாம மூன்று பர்சனை இன்டர்வியூ பண்ணணும்,” என்ற ஆரவ், 

தன் மடிக்கணினியின் திரையை பார்த்துக்கொண்டே, “நீ இன்டர்வியூவில் கேட்கும் கேள்விகளை ஃபைனல் பண்ணிட்டீயா?” என்று கேட்க,

“எஸ் சார்… நான் உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன்…”

“சரி… நான் பார்க்கிறேன்…” 

“சார், நாம ரெண்டு பேரும் இப்ப நார்மலா தான் இருக்கோமா?” அமுதினி மெதுவாகக் கேட்டாள்.

ஆரவ் மேலே பார்த்தான், முதல்முறையாக அவளை நேரடியாகப் பார்த்தான். 

“என்ன?”

“இல்ல சார்… நான் போன வாரம்… என் பர்சனல் லைஃப்பை அதிகமா ஷேர் பண்ணிட்டேனா? அதனால, நீங்க கொஞ்சம் அன்கம்ஃபர்ட்டபிளா இருக்குற மாதிரி தெரியுது சார்…”

ஆரவ் பெருமூச்சு விட்டு, “அமுதினி, நீ எதுவும் தப்பு பண்ணல… நீ உனக்குள்ள இருந்த பெயினை ஷேர் பண்ணின… அவ்வளவுதானே… நான் தான்… நான் எமோஷனல் கான்வேர்சேஷனில நார்மலா இல்ல… நீ வொர்ரி பண்ண வேணாம்…”

“நான் புரிஞ்சிக்குறேன் சார்… ஆனா, நீங்க அன்னைக்கு என்கிட்ட கேர் காட்டனீங்க… அது… அது எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு…” என்று அவள் இலகுவாக பேசவும்,

ஆரவ் தன் கைகளை இறுக்கிக்கொண்டு, “அமுதினி, நாம புரொபஷனல் பவுண்டரிஸ் மெயின்டெய்ன் பண்ணணும்னு சொல்லி இருக்குல்ல… நான் உன் மென்டர்… நீ என் ரிசர்ச் அசிஸ்டன்ட்… அது தான் நம்மோட ரிலேஷன்ஷிப்… அதை தவிர்த்து நமக்குள்ள வேற ஒன்னும் இல்ல…‌ உனக்கு தெளிவா புரியும்னு நம்பறேன்…” என்று அழுத்தமாக சொல்லி விட்டான்.

அது அமுதினிக்கு வலித்தது. அவன் மீண்டும் தனக்குள் ஒரு சுவரை எழுப்பிக்கொண்டிருந்தான். ஆனால், அவள் இதனை முன்பே எதிர்பார்த்திருந்தாள். 

ஆகையால், “நான் புரிஞ்சிக்குறேன் சார்… நாம புரொபஷனாலவே இருப்போம்… அதான் நமக்கு நல்லது…” என்று சொல்லிவிட்டு, வேலையை தொடர்ந்தாள்.

ஆரவும் அவளை மௌனமாக பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

******

அடுத்த சில நாட்கள் மிகவும் சிரமமாக இருந்தன. ஆரவ் மிகவும் சம்பிரதாயமாக இருந்தான். அவன் மின்னஞ்சல்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டான், நேருக்கு நேர் சந்திப்புகளைக் குறைத்திருந்தான். அவன் மீண்டும் அவளை விட்டு விலகிச் சென்றிருந்தான்.

அமுதினி குழப்பமாகவும் வேதனையாகவும் இருந்தது.

‘அவர் ஏன் இப்படி பண்றார்? இப்பதான் நாங்க கொஞ்சம் கனெக்ட் ஆனோம்னு நினைச்சேன்… ஆனா, அவர் மறுபடியும்  பழைய மாதிரி கோபத்தை கொட்டுகிறார்…’ என்று எண்ணிக் கொண்டாள்.

சுருதி அமுதினியின் மனப் போராட்டத்தை கவனித்து, “அமுது, அவர் மறுபடியும் உன்னை ஏதாவது பேசி கஷ்டப் படுத்தறாரா?” என்று கேட்கவும், 

“அப்படின்னு இல்ல சுருதி… அவர் கொஞ்சம் பயப்படுகிறார்… நாங்க கொஞ்சம் கிளோஸ் ஆனதும், அவர் பேனிக் ஆயிட்டார்… இப்போ அவர் திரும்பவும் டிஸ்டன்ஸ் கிரியேட் பண்றார்…”

“நீ என்ன பண்ணப் போற?”

“நான் என்ன பண்ண முடியும் சுருதி? அவர் கிளியரா சொல்லிட்டார் – எங்களுக்குள்ள வெறும் புரொபஷனல் ரிலேஷன்ஷிப் மட்டும் தான்… நானும் அதை ரெஸ்பெக்ட் பண்றேன்…” என்று விட்டேத்தியாக சொன்னாள்.

ஆனால், அமுதினியின் இதயம் சொன்னது என்னவோ வேறு. அவள் ஆரவை ரொம்பவும் மிஸ் பண்ணினாள் – அவன் அன்று காட்டிய அந்த சிறிய அக்கறை, அந்த உண்மையான கவலை. அது உண்மையானது என்று அவள் நன்கு உணர்ந்தாள்.

*******

ஒரு வியாழக்கிழமை மாலை, கல்லூரி வளாகத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. 

தலைப்பு : “மருத்துவப் பயிற்சியில் அதிர்ச்சி-தகவல் சிகிச்சை”. 

பேராசிரியர் சரண்யா, அந்த கருத்தரங்கில் மாணவர்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அமுதினி கருத்தரங்கு மண்டபத்திற்குள் நுழைய, அங்கு ஏற்கனவே பல மாணவர்கள் குழுமி இருந்தனர். 

அவள் உட்காருவதற்கு இருக்கையை தேடிக் கொண்டிருந்தாள். திடீரென்று, முன் வரிசையில், ஆரவ் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவன் தனியாக தான் இருந்தான்.

அவருடன் உட்கார வேண்டுமா? இல்லை, வேறு எங்காவது உட்கார வேண்டுமா? என்று அவள் தயங்கினாள். அவள் யோசித்து முடிவு செய்வதற்கு முன்பே, சரண்யா மேடம் அவளை அழைத்தார்.

“அமுதினி! முன்னாடி வா… இங்க சீட் இருக்கு…”

அமுதினிக்கு வேறு வழியில்லாமல் முன்னால் போனாள். சரண்யா காட்டிய இருக்கை ஆரவுக்கு பக்கத்தில் இருந்தது.

அவள் மெதுவாக அமர, ஆரவ் அவளைப் ஆச்சர்யமாக பார்த்தான். அவளது பக்கத்தில் அவன் சங்கடமாக உட்காரந்திருந்தான்.

“ஹாய் சார்…” என்று அவனிடம் மென்னகையுடன் சொல்ல,

ஆரவோ வேண்டாவெறுப்பாக, “ஹம்ம்… ஹாய்…” என்றுவிட்டு மேடையில் கவனத்தை பதித்தான்.

கருத்தரங்கு தொடங்கியது. விருந்தினர் பேச்சாளர் – டாக்டர் ரஞ்சிதா, அதிர்ச்சி சிகிச்சை நிபுணர். அதிர்ச்சியில் இருந்து தப்பியவர்களின் மீள்தன்மை, சிகிச்சையாளர்களின் பங்கு மற்றும் சுய பராமரிப்பின் முக்கியத்துவம் பற்றி அவர் அனைவருக்கும் புரியும் வகையில் பேசினார்.

அமுதினி கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால், அவளுடைய விழிப்புணர்வின் ஒரு பகுதி எப்போதும் ஆரவில் இருந்தது. அவனது இருப்பு, அவளைப் பாதித்தது.

ஒரு கட்டத்தில், Dr. ரஞ்சிதாவோ, “டியர் ஃப்யூச்சர் தெரபிஸ்ட்ஸ், நீங்க உங்க கிளையண்ட்ஸ் பெயினை கேரி பண்ணுவீங்க… தட்ஸ் குட்… ஆனா, உங்களோட சொந்த ட்ராமாவை நீங்க ஹீல் பண்ணாம இருந்தீங்கன்னா, நீங்க மத்தவங்களுக்கு பயனுள்ள உதவியை பண்ண முடியாது. காயமடைந்த சிகிச்சையாளர்களுக்கும் சிகிச்சை தேவை… அது அவசியமும் கூட…” என்று பேசிக் கொண்டிருந்தார்.

அமுதினி ஆரவை பார்க்க, தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, இறுக்கமாக அமர்ந்திருந்தான். அந்த வார்த்தைகள் அவனைத் வலுவாக தாக்கின.

கருத்தரங்கு முடிந்தது. மாணவர்கள் வெளியேறத் தொடங்கினர். ஆரவ் உடனடியாக எழுந்து செல்ல முயல, கூட்டம் அவனை வேகமாக நகரவிடாமல் தடுத்தது.

அமுதினி அவன் பின்னால் நின்று, “சார், டாக்டர் ரஞ்சிதா நல்லா பேசினாங்க… இல்லையா?”

“ஆமா,” ஆரவ் திரும்பாமலே சொன்னான்.

“அவங்க சொன்னது சரி தானே சார்… காயமடைந்த சிகிச்சையாளர்களுக்கும் சிகிச்சை தேவை…”

ஆரவ் திடீரென்று திரும்பி, “நீ என்ன சொல்ல வர்ற அமுதினி?”

அமுதினி நேராகப் பார்த்து, “நான் எதுவும் சொல்லலை சார்… நான் சும்மா… அந்த ஸ்பீச்சை அக்ரீ பண்றேன்… அவ்வளவுதான்…”

ஆரவ் அவளை முறைத்துப் பார்க்க, அவனுடைய கண்களில் விரக்தி தெரிந்தது. 

“நீ இப்போ என்னைப் பத்திதான் பேசுறியா?”

“நான்—”

“என்னைப் பற்றி எதுவும் அஸ்யூம் பண்ணிக்காத அமுதினி… உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது… எனக்கு எந்த ஹீலிங்கும தேவையில்ல… என் விஷயத்துல மூக்கை நுழைக்காத… அப்பறம் பின்விளைவுகள் மோசமா இருக்கும்…”

“இல்ல சார்… எல்லாருக்கும் ஹீலிங் தேவை… இதை நான் பொதுவா தான் சொன்னேன்…”

ஆரவ் கோபமாக, “நீ என்னை ஃபிக்ஸ் பண்ண முயற்சிக்குறதை நிறுத்திடு அமுதினி… நான் ஒன்னும் ப்ரோக்கன் இல்ல…”

“நான் உங்களை ஃபிக்ஸ் பண்ண ட்ரை பண்ணல சார்… நான் ஜஸ்ட்—”

“போதும்,” என்றவன் மேலும்,

“நீ நமக்குள் இருக்கும் பவுண்டரிஸ்-ஐ க்ராஸ் பண்ற அமுதினி. நாம புரொபஷனல் பவுண்டரிஸ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நான் பலமுறை சொல்லியிருக்கேன்… ஆனா, சொல்றது கேட்காம, நீ தொடர்ந்து என் பர்சனல் லைஃப்பில் தலையிட்டு டார்ச்சர் பண்ற…” ஆரவ் கடுமையாகச் சொன்னான். 

அமுதினிக்கு கண்ணீர் வந்தது. “நான் அப்படி உங்களை டார்ச்சர் பண்ண நினைக்கல சார்… நான் கேர் பண்றேன்… அதுல எந்த தப்பும் இல்ல…”

“உன் கேர் எனக்கு வேண்டாம்,” ஆரவ் காட்டமாகச் சொல்லி, 

“நான் இதை கடைசி முறையா சொல்றேன் – தயவுசெய்து என்னை தனியா விடு… உன் வழியை பார்த்துட்டு பேசாம போயிடு… உன்ன பார்க்கும்போதெல்லாம் எனக்கு எரிச்சலும் கோபமும் தான் வருது…” என்று சத்தமாக திட்டிவிட்டு, அவன் திரும்பிக்கூட பார்க்காமல் வேகமாக நடந்து, வராண்டாவில் மறைந்துவிட்டான்.

அமுதினி அங்கேயே நிற்க, கண்களில் கண்ணீர் வழிந்தது. சிலர் அவளைப் பார்த்தார்கள். ஆனால், யாரும் அவளை நெருங்கி என்னவென்று கேட்கவில்லை.

சுருதி ஓடி வந்து, “அமுது! என்னாச்சு? நான் உன்ன பார்த்திட்டு இருந்தேன்… உன்கிட்ட பேசிட்டு ஆரவ் சார் கோபமா போனார்…”

“அவர்… அவர் என்னை மறுபடியும் காயப்படுத்தினார் சுருதி… நான் அவரிடம் என்னோட கருத்தை சொன்னேன்… அதுக்கு அவ்வளவு பேச்சு வாங்க வேண்டியதா போச்சு…” என்று சுருதியின் தோளில் சாய்ந்து அழுதாள் அமுதினி.

சுருதி அவளைத் தேற்றி, “அமுது, இதை விடு… அவர் உன்னை டிசர்வ் பண்ணல… நீ அவருக்காக எவ்வளவோ ட்ரை பண்ணிட்ட.. இப்போ நீ உன்னை பாத்துக்கணும்…”

அமுதினி தலையசைத்து ஒரு நல்ல முடிவெடுத்தாள். 

‘போதும்… நான் இனி எதுக்கும் ட்ரை பண்ண மாட்டேன்.‌. அவர் என்னை வேண்டாம்னு சொல்லி நிறைய காயப்படுத்தி இருக்கார்… நான் ரெஸ்பெக்ட் பண்றேன்…  நான் என் வாழ்க்கையை பார்க்கணும். இது… இது மொத்தமா முடிஞ்சு போய்டுச்சு…’

ஆனால், அவளது இதயம் அவனுடைய சின்ன சின்ன விலகலில் கூட உடைந்தது. ஏனென்றால், அவளுடைய மனதை அறிந்திருந்தாள். 

ஆனால், அவன் அவளை விரும்பவில்லை. அதில் வெறும் அக்கறையும் பச்சாதாபமும் மட்டும் இல்லை. அவள், அவனை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நேசிக்க தொடங்கினாள்.

அன்று இரவு, இருவரும் தனித்தனியாக இருந்து, மனதால் உடைந்து போயினர். 

ஆரவ் அவனுடைய குடியிருப்பிலும் வானில் இருந்த நிலவை வெறித்துக் கொண்டிருக்க, அங்கே அமுதினியோ தனது அறையில் அமர்ந்து, தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்க, இருவரும் வலியில் துடித்து, வேதனை அடைந்தனர்.

ஆனால், அவர்கள் தனித்தனியாக இருந்தனர். ஆரவின் தேவையற்ற பயம் தான் அவர்களைப் பிரித்து வைத்திருந்தன. இது எவ்வளவு காலம் தொடரும்? அவர்கள் எப்போது உண்மையை எதிர்கொள்வார்கள்?

*******

மறுநாள் காலை, அமுதினி பேராசிரியர் சரண்யா மேடத்தின் அறைக்கு முன்னால் நின்றிருக்க, அவள் கையில் தட்டச்சு செய்யப்பட்ட கடிதம் இருந்தது. அவள் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு கதவைத் தட்டினாள்.

“கம் இன்…” உள்ளிருந்து சரண்யாவின் குரல்.

அமுதினி உள்ளே நுழைய, சரண்யா அவளைப் பார்த்து புன்னகைத்தார். ஆனால், அது உடனே மறைந்து போனது, காரணம், அமுதினியின் கண்கள் சிவந்து, முகம் வீங்கி இருந்தன.

“அமுதினி, உட்காரு… என்னாச்சு உனக்கு?” என்று பதறிப்போய் கேட்க,

அமுதினி அமர்ந்து கடிதத்தை மேசையில் வைத்தாள். 

“மேடம், நான்… ஆரவ் சாரின் ரிசர்ச் ப்ராஜெக்ட்ல இருந்து விலகிக்க விரும்பறேன்…”

சரண்யா அதிர்ச்சி அடைந்து, “என்ன? ஏன்?” என்கவும்,

“மேம், நான்… எனக்கு சில பர்சனல் ரீசன்ஸ் இருக்கு… இந்த ப்ராஜெக்ட் எனக்கு எமோஷனலி கஷ்டமா இருக்கு… அதான் என்னால இதுக்கு மேல கண்டினியூ பண்ண முடியாது…” என்று திட்டவட்டமாக சொன்னாள்.

சரண்யா அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தார். அது ஒரு முறையான தொழில்முறை கடிதமாக இருந்தது. அதில் எவ்வித தனிப்பட்ட விவரங்களும் இல்லாமல், தொழில் ரீதியாக மட்டுமே எழுதப்பட்டிருந்தது.

“அமுதினி, இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு… நீ ஏன் இதை பாதியிலேயே விட்டுடுற?”

அமுதினி கண்ணீர் விட்டு, “மேம், எனக்கு ஆரவ் சாருடன் சேர்ந்து வொர்க் பண்ண முடியாது… நாங்க, எங்களுக்குள்ள நிறைய மோதல்கள் இருக்கு… அது என் மென்டல் ஹெல்த்தை பாதிக்குது… சோ, மொதல்ல நான் என்னை சரியா பாத்துக்கணும் மேம்…”

சரண்யா அவளை அன்பாகப் பார்த்து, “அமுதினி, ஆரவ் உன்னை… ஏதாவது ஹர்ட் பண்ணியிருக்காரா?”

அமுதினி மறுப்பாக தலையசைத்து, “அப்படி வேணும்னே அவர் எதுவும் பண்ணல மேம்… ஆனா, அவர்… அவர் என்னை புரொபஷனல் பவுண்டரிஸ்-ஐ க்ராஸ் பண்றதா ப்ளேம் பண்றார்… நான் அவருக்கு ஹெல்ப் பண்ண முயற்சிச்சேன், பட், அவர் என்னை ரிஜெக்ட் பண்றார்… இது… இது எமோஷனலி ரொம்ப சோர்வா உணர்கிறேன் மேம்…”

சரண்யா பெருமூச்சு விட்டு, “அமுதினி, ஆரவ் ஒரு மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்… ஆனா, அவருக்குள்ள சில தனிப்பட்ட போராட்டங்கள் இருக்கு தான்… அது அவரோட புரொபஷனல் லைஃப்பை அஃபெக்ட் பண்ணுது… நான் அவரோட பேசி பார்க்கிறேன்—”

“வேண்டாம் மேம்,” அமுதினி உடனே மறுத்துவிட்டாள்.

“நான் அவரை தொந்தரவு பண்ண விரும்பல… இது என்னோட தனிப்பட்ட முடிவு… நான் இதிலிருந்து விலகிடுறேன்… அதுல ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன் மேம்…”

சரண்யா தயங்கி, “சரி அமுதினி… உன் மென்டல் ஹெல்த் ரொம்ப முக்கியம்… நான் உன் லெட்டரை அக்ஸ்செப்ட் பண்றேன்… ஆனா, நீ உன் தீஸிஸ்-ல் கண்டினியூ பண்ணுவியா? நான் உன் அட்வைஸ்சரா இருக்கேன்…”

“ஆமா மேம்… நான் என் தீஸிஸ்-ல் ஃபோகஸ் பண்றேன்… அதை நான் சரியா முடிச்சிடுவேன்…” என்று முடிவாக சொல்லி விட்டாள்.

சரண்யா தலையசைத்து, “சரி… நான் ஆரவ்-கிட்ட இன்பார்ம் பண்றேன்… உன் ஃபார்மல் லெட்டர் இரண்டு நாள்ல ப்ராசஸ் ஆயிடும்…”

அமுதினி எழுந்து, “நீங்க என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க் யூ மேம்…” என்று சொல்லிக்கொண்டு வெளியேறினாள். 

வராந்தாவில், அவள் சுவரில் சாய்ந்து, நிம்மதியும் சோகமும் கலந்த நிலையில் இருந்தாள்.

‘நான் அவரை என்ன செஞ்சிட்டேன்… நான் அவரை நினைப்பதையே விட்டுட்டேன்… இது தான் எனக்கு பெஸ்ட்… ஆனா, என் இதயத்துக்கு தான் என்னன்னு சொல்லி… எப்படி புரிய வைப்பது தெரியல?’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டாள் அமுதினி.

******

அதே நேரம், 

ஆரவ் தன் அறையில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தான். ஆனால், அவனால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. நேற்று இரவு அவன் சுத்தமாக கொஞ்சம் கூட தூங்கவில்லை. அமுதினியின் கண்ணீர், அவளது வேதனையான முகபாவனை – எல்லாம் அவனை வேட்டையாடியது.

‘நான் மீண்டும் அவளை ஹர்ட் பண்ணிட்டேன்… நான் ஏன் இப்படி பண்றேன்? அவள் என்ன தப்பு பண்ணினா? அவள் என்னை கேர் பண்ணினா. அதுல தப்பு என்ன?’ என்று அவன் மனம் அவளுக்காக வாதம் செய்தது.

அப்பொழுது, அவனது தொலைபேசியில், டாக்டர் சரண்யாவிடமிருந்து ஒரு செய்தி: “ஆரவ், நான் உன்னை உடனடியாகப் பார்க்க வேண்டும்…”

ஆரவ் எழுந்து சரண்யாவின் கேபினுக்குச் சென்றான். அவர் கொஞ்சம் சீரியஸாக இருந்தார்.

“உட்காருங்க ஆரவ்.”

ஆரவும் உட்கார்ந்து, “என்னாச்சு மேம்?”

சரண்யா அமுதினி கொடுத்த கடிதத்தை அவனிடம் கொடுத்து, “அமுதினி உங்க ரிசர்ச் ப்ராஜெக்ட்ல இருந்து விலகுறதா முடிவு எடுத்து இருக்கா ஆரவ்…” என்றார் கவலையாக!

ஆரவ் அதிர்ச்சியிலேயே கடிதத்தைப் படித்தான். அவன் கைகள் லேசாக நடுங்கின.

“ஏன்?” அவன் மெதுவாகக் கேட்டான்.

“அவ சொன்னா – நிறைய எமோஷனல் ரீசன்ஸ், எமோஷனல் ஸ்ட்ரெஸ்… அவ அவளோட மென்டல் ஹெல்த்தை கேர் பண்ணனுமாம்… அதான், அவ இந்த ப்ராஜெக்ட்-வ இருந்து ரிலீஸ் ஆகுறா…”

“ஓஓஓ….”

“ஆரவ், உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன நடந்துச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்ற கேள்விக்கு ஆரவ் மௌனமானான். அவனால் பேச முடியவில்லை.

சரண்யா தொடர்ந்து, “ஆரவ், அமுதினி ஒரு புத்திசாலித்தனமான ஸ்டூடண்ட்… இந்த வாய்ப்பு அவளுக்கு மிகவும் வேல்யூபிள்… அவ உண்மையா ஏன் விலக நினைக்கிறா? நீங்க அவளை ஏதாவது ஹர்ட் பண்ணியிருக்கீங்களா?” என்று இவனிடமும் கேட்டுப் பார்த்தார்.

“நான்… நான் புரொபஷனல் பவுண்டரிஸ்-ஐ மெயின்டெய்ன் பண்ண சொன்னேன்… அது தப்பா மேடம்?”

“பவுண்டரிஸ் நல்லது தான் ஆரவ்… ஆனா, நீங்க அதை எப்படி கம்யூனிகேட் பண்ணீங்க? நீ அவகிட்ட கோபத்தை காட்டி இருக்கியா? அவளை திட்டி இருக்கியா?”

ஆரவ் தன் கைகளில் கட்டிக் கொண்டு, “மேம், நான்… நான் தப்பு பண்ணிட்டேன்… அவள் என்னை கேர் பண்ணினா… ஆனா, நான் அவளை காயப்படுத்தினேன்… நான் அவளிடம் கத்தினேன்… நான்… ஐ ஹர்ட் ஹேர்…”

சரண்யா மெதுவாக, “ஆரவ், நீ ஏன் இப்படி பண்றீங்க? நீ எல்லாரையும் தள்ளி வைக்கறீங்க… நீ எப்பவும் தனியாவே இருக்க விரும்புறீங்க… ஏன்?”

“ஏன்னா… ஏன்னா நான் எல்லாரையும் ஹர்ட் பண்றேன் மேம்… நான் ரொம்ப டாக்சிக்… நான் அவளை தனியா விட்டுட்டா தான், அவளுக்கு நல்லது…”

சரண்யா முன்னோக்கி சாய்ந்து, “ஆரவ், நீ டாக்சிக் இல்ல… நீ உனக்குள்ள ஹர்ட்டாகி இருக்கீங்க… நீ ட்ராமா-வில இருந்து ரிகவரி ஆகல… அதன் காரணமா உன்னையே அறியாம, மத்தவங்களை ஹர்ட் பண்ற, ஏன்னா நீயே பெயின்-ல இருக்க… புரிஞ்சுக்க… அதனால, நீ கட்டாயம் ஹெல்ப் தேடியே ஆகணும்…”

“எனக்கு யாரோட ஹெல்ப்பும் வேண்டாம் மேடம்…” ஆரவ்..

“ஆரவ், இப்போ பாரு என்ன ஆச்சுன்னு! ஒரு திறமையான மாணவி, உன்‌ப்ராஜெக்ட்-லிருந்து விலக நினைக்கிறா… ஏன்னா, உன்னோட பிஹேவியர்… இது உன் புரொபஷனலில் இருக்கும் மரியாதையை குறைச்சிடும்… மேலும், நீ உன்னையே அழிச்சிட்டு இருக்க…”

ஆரவ் எழுந்து, “இதுல நான் என்ன பண்ணிட முடியும் மேம்?”

“முதல்ல, அமுதினியிடம் போய் உண்மையா மன்னிப்பு கேளு… பிறகு, நம்ம கேம்பஸ் இல்லாத வேற ஏதாவது ப்ரைவேட் கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணு… அங்க நிறைய ஆலோசனை பண்ணுவாங்க… அது உனக்கு பவர்ஃபுல்லா இருக்கும்… பட், இதுல உனக்கு அவசியம் ஹெல்ப் தேவை ஆரவ்…” என்று அக்கறையுடன் சொன்னார்.

முதலில் தயங்கி, அமுதினியின் கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு, “நான்… நான் என்னன்னு யோசிக்குறேன் மேம்…” என்றுச் சொல்லி வெளியேறினான் ஆரவ் கிருஷ்ணா.

******

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்