
வரம்-5
(பிளாஷ்பேக் கண்டினியூ)
“டேய்! இது என்ன பீரியட் டா ஏன் ஸ்டாப் இல்லாம இருக்கீங்க??” என்றார் சார்.
“சார் இது ஃப்ரீ பீரியட் சார்” என்றான் ஒருவன்.
“அப்ப டிபார்ட்மெண்ட்ல வந்து சொல்ல வேண்டியது தானே!!! டா” என்றார் கோபமாக.
“ஐயோ!! நா இந்த கிளாஸ் இல்லைன்னு தெரிஞ்சா எனக்கு பனிஷ்மென்ட் கண்டிப்பா கிடைக்கும்” என்றாள் பூர்ணா மெதுவாக பயத்துடன்.
“ஏய்! அவரு கண்ணாடி போடல, அவருக்கு கண்ணாடி போடலனா கண்ணு தெரியாது, அவரே ஏதோ குத்து மதிப்பா தான் பேசிட்டு இருக்காரு” என்றான் நிதர் சிரிப்புடன்.
“இல்ல சார் அதுக்கு தான் ரெப் வெளிய போய் இருக்கான் ” என்று பொய் சொன்னான் ஒருவன்.
“சரிடா சரிடா ஆமா என் ஐடி கார்ட காணோம், யாராச்சும் பாத்தீங்களாடா??” என்றார்.
“சோளமுத்தா போச்சா…”, என்று பின்னால் இருந்த மாணவர்கள் மெதுவாக கிண்டலடித்தனர்.
“சோளமுத்தா..” என்றாள் மெதுவாக.
“சார் இங்க தான் இருக்கு, லாஸ்ட் கிளாஸ் வந்தப்ப விட்டுட்டு போயிட்டீங்க” என்றான் ஒருவன்.
“ஏன்டா அத கொண்டு வந்து தர மாட்டீங்களா ??”.
“அத தர தான் சார் டிபார்ட்மெண்ட் வந்தேன், நீங்க அங்க இல்ல” என்றான் நிதர்.
“சரி குடுப்பா ஹச்.ஓ.டியே ஐடி கார்டு போடாம சுத்துறேன்னு அதுக்கு வேற ஏதாச்சும் பேசுவாங்க” என்று வாங்கி போட்டு கொண்டு, “எல்லாரும் லைப்ரரிக்கு போங்க” என சொல்லிட்டு சென்றார். மாணவர்கள் கலைந்து சென்றனர். நிதர் மற்றும் பூர்ணா அங்கே இருந்தனர்.
பூர்ணா நிதர்சனை முறைத்துக் கொண்டே எழுந்து, “நீயும் உன் அண்ணாவும் ஒரே மாதிரி இருப்பீங்க ம்ம்…” என்றாள் கோபமாக.
“அதான் கண்டுபிடிச்சுட்டியே அப்புறம் என்ன!!” என்றான் சிரிப்புடன்.
“உன்னய எதுக்குடா என்னைய அந்த ப்ளாக்ல இருந்து இந்த பிளாக்கு அலைய வச்ச” என்றாள் கோபமாக.
“சும்மா உனக்கு என் கிளாஸ் ரூம்ம சுத்திக்காட்டலாம்னு வர வச்சேன்” என்றான் கிண்டலாக.
“ஏய்! உன்னால நா சஸ்பெண்ட் ஆயிருப்பேன், அந்த ப்ளாக்ல இருந்து இந்த பிளாக் வந்ததுக்கு” என்றாள் உச்சகட்ட கோபத்துடன்.
நிதர்சன் சிரித்துக் கொண்டே எழுந்து அவள் பக்கத்தில் வந்து, “நா என்ன சொன்னாலும் நம்புவியா?? அந்த ப்ளாக்ல இருந்து இந்த பிளாக் வந்ததுக்கு யாராச்சும் சஸ்பெண்ட் பண்ணுவாங்களா, அப்படி வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க எதுக்கு எல்லா பிளாக்கையும் ஜாயின் பண்ணி வச்சிருக்காங்க” என்றான்.
பூர்ணா தன் மடத்தனத்தை நினைத்து தன் தலையில் அடித்துக் கொண்டாள்.” ஏய்! பூர்ணா இதுக்கு எதுக்கு தலையில அடிச்சுக்கிற தல வலிக்க போகுது ” என்றான் அக்கறையாக.
“எனக்கு உன் அக்கற எதுவும் தேவயில்ல , எதுக்கு என்னைய வர வச்ச உடனே கிளாஸ் ரூம்ம சுத்தி பார்க்கன்னு சொல்லாத, இது ஒன்னு மைசூர் பேலஸ் இல்ல சுத்தி பார்க்க” என்றாள் மீண்டும் கோவமாக.
“ஒன்னும் இல்லடா உன்னைய பார்த்ததும் இந்த நிதருக்கு பிடிச்சு போச்சு மீதி இருக்க வாழ்க்கைய உன்னோட பயணம் பண்ணலாம்னு தான் வர வச்சேன்” என்றான் சிரிப்புடன்.
“நீ என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல” என்று முழித்தாள்.
“நீ எப்போதுமே யார் போறா… யார் வரா… இப்படி எதையும் கண்டுக்க மாட்ட, தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்ப, உன் கிட்ட பேசுனா பேசுவ, பேசாலாய அதுக்காக வருத்தப்பட மாட்ட, யார் வம்புக்கும் எப்போதுமே போக மாட்ட, உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ண பையன்கிட்ட விருப்பம் இல்லனு சாதரணமா சொல்லி அனுப்பிடுவ, அதையும் மீறி யாராச்சும் டார்ச்சர் பண்ணுனா அந்த பையன் வீட்டுக்கு உங்க அப்பாவோட போய் சமாதானம் பேசி அவன உன் வழிக்கு வராம பண்ணுவ, ரொம்ப கெத்தா இருப்ப, இதான் உன் கேரக்டர், என்ன கரெக்டா” என்று புருவம் உயர்த்தினான். பூர்ணா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“நீ வாயடைச்சு நிற்கிற பார்த்தாலே தெரியுது நா உண்மைதான் சொல்லி இருக்கேன்னு, உன் கிட்ட குறை இல்லன்னு சொல்ல மாட்டேன், குறை இருக்கு ரொம்ப பிடிவாதம், விட்டுக்கொடுக்க மாட்ட, தான் நினைச்சது தான் நடக்கணும்ன்னு… இப்படி எல்லாம் இருக்கு, என் பிரதர் ஒரு விஷயம் சொல்லுவான், சந்தேகமா பார்க்காத உண்மையான பிரதர்மா, நம்ம காதலிக்கிறவங்களோட நிறைய மட்டுமில்ல குறையையும் காதலிக்கனும்னு , அவங்க தப்பு பண்ணுனா அத திருத்தி அவங்கள சந்தோஷமா வச்சுக்கணும்ன்னு அதான் உண்மையான காதல்னு சொல்லுவான், உன் நிறைய மட்டும் இல்ல உன் குறையையும் நா காதலிக்கிறேன் , உனக்கு என்னைய தெரியாது அதுக்கு தான் வர வச்சேன், என் வீட்டுக்கு வந்து பேசனும்னு நினைச்சா பேசு, நம்ம லவ் பண்றத நீ சொன்னா என்ன நா சொன்னா என்ன” என்று கிண்டலாக முடித்து கண்ணடித்தான்.
“ஏய்!! என்னைய லவ் பண்றியா நீ??”, என்றாள் ஆச்சரியமாக.
“போச்சுடா பக்கம் பக்கமா வசனம் பேசுனா ஒரே வரில்ல லவ் பண்ணுறியான்னு கேட்குற, ஆமா டா செல்லம் நா உன்னைய கடந்த மூன்று மாதமா லவ் பண்றேன், நா உன்னைய காதலிக்கிறேன்” என்றான் சிரிப்புடன்.
“இதெல்லாம் ஒத்துவராது இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காத, நா போறேன் ” என்று சொல்ல போனாள்.
“ஒரு நிமிஷம் இப்பவே பதில் சொல்லனும்னு இல்ல, ஸ்போர்ட்ஸ் டேக்கு இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு, நா உன்னைய தொந்தரவு பண்ணமாட்டேன், என்னைய பத்தி காலேஜ்ல யார் கிட்ட வேணாலும் விசாரிச்சுக்கோ , நல்லா யோசி…. யோசிச்சு பதில் சொல்லு” என்றான். பூர்ணா தலையை ஆட்டிவிட்டு சென்றாள்.
பூர்ணாவின் மனம் நிதரை சுற்றியே வந்தது, அவன் சிரிப்பு, அவன் விளையாட்டுத்தனம் இப்படி பல விஷயம் அவள் மனதில் இடம் பிடித்தான். காலேஜில் அவனைப் பற்றி ஏதாவது பேசுவது தெரிந்தால் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள். யோசனையுடனே ஒரு மாதம் சென்றது. நிதர்சன் இவளை தொந்தரவு செய்யாமல் இருந்தான். அவள் மனதில் நிதர் இடம் பெற்றதை அவள் உணர்ந்தாள்.
ஸ்போர்ட்ஸ் டேக்கு அனைவரும் கிரவுண்டுக்கு வந்தனர். “யூனியன் டீம் நெருப்பு பந்தத்தை பாஸ் செய்து ஸ்டூடண்ட் யூனியன் சேர்மன் நிதர்சன் நெருப்பை பற்ற வைப்பார் ” என்று மைக்கில் அறிவித்தனர்.
நிதர் பெயர் கேட்டதும் பூர்ணா எட்டி பார்த்தாள். “நம்ம ஸ்டூடண்ட் யூனியன் சேர்மன் நிதர்சனா” என்றாள் பக்கத்தில் இருந்தவளிடம்.
“ஹலோ மேடம் அவரு எம்.பி.ஏ ஃபைனல் இயர் கொஞ்சம் மரியாத கொடுமா, நீ பேசுறத யாராச்சும் கேட்டா அவ்ளோ தான், அவருக்கு நம்ம காலேஜ்ல ஃபேன்ஸ் அதிகம், பொண்ணுங்க மட்டும் இல்ல ,பசங்களும் ” என்றாள் பக்கத்தில் இருந்தவள். பூர்ணாவிற்கு யோசனையாகவே இருந்தது. ஸ்போர்ட்ஸ் டே முடிந்ததும் இவள் ஸ்கூட்டியை எடுக்கப் போனாள்.
நிதர்சன் வந்து, “என்ன மேடம் கொஞ்ச நாளாவே சரியா தூங்கல போல” என்றான் சிரிப்புடன். பூர்ணா முழித்தாள்.
நிதர் சிரிப்புடனே, “என்ன முடிவு பண்ணி இருக்க அப்பாவோட வீட்டுக்கு வர்றியா???” என்றான் கிண்டலாக
“இல்ல…இல்ல” என்றாள் வேகமாக.
“அப்ப என்னைய லவ் பண்ண வரியா???”என்றான் கிண்டலாக.
“அது வந்து” என்றாள் தயங்கியபடி.
“நா கொஞ்சம் நல்லவன்தான்மா நீ நம்பலாம்” என்றான் சிரிப்புடன்
“சரி ஓகே” என்றாள்.
“எதுக்கு சரி?? நம்பரதுக்கா… இல்ல லவ் பண்றதுக்கா??” என்றான் சிரிப்புடன்.
ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து, “இரண்டுக்கும் தான்” என்று சிரிப்புடன் கிளம்பினாள். நிதர்சன் சிரிப்புடன் அவள் போவதை பார்த்துக் கொண்டு இருந்தான். இவர்கள் காதலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் எட்டு மாதம் சென்றது. ஒருநாள் நிதர் கிளாஸ் பொண்ணுங்க அவனிடம் பேசி கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.
பூர்ணா அதைப் பார்த்து முறைத்துக் கொண்டே வந்தாள். “உன் ஆளு வந்துட்டா டா எங்களுக்கு இங்க இனிமேல் வேலை இல்ல” என்று கிண்டல் செய்து கொண்டு கிளம்பினர்.
“என்னாச்சு உன் முகம் ஏன் இப்படி வாடிப்போய் இருக்கும்?? எதாச்சும் பிராப்ளமா டா” என்றான் அக்கறையாக.
“ம்ம்.. நீதான் ப்ராப்லம் அந்த பொண்ணுங்க கிட்ட உனக்கு என்ன பேச்சு” என்றாள் கோபமாக.
“ஓ… மேடம்க்கு பொஸிஸிவ் அவங்க எல்லாரும் என் கிளாஸ்மேட் டி, உனக்காக வெயிட் பண்றத பார்த்து கம்பெனி கொடுக்க வந்தாங்க” என்றான் பொறுமையாக.
“நிதர் எனக்கு நீ பொண்ணுங்க கிட்ட பேசுனா கோவமா வருது” என்றாள் கோபமாக.
“நா உன் நிதர் டி எத்தன பேர் கிட்ட வேணாலும் பேசலாம் ஆனா உனக்கு மட்டும் தான் என் காதல குடுத்து இருக்கேன், கூல் டா செல்லம் ” என்று அணைத்துக் கொண்டான். சில நேரம் நிதர் பூர்ணாவை வெறுப்பேற்ற வேண்டும்ன்னு விளையாட்டாக அவள் வரும்போது பெண்களிடம் பேசிக்கொண்டு இருப்பான். சண்டை பாதி சமாதானம் பாதியாக ஒரு மாதம் சென்றது.
இவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டு இருந்தனர் அது அவர்களுக்கான நேரம். அப்பொழுது நிதரிடம் , ” பாத்ரூம் கிளீன் சரி இல்ல “, என்று சில பெண்கள் ஆண்கள் என இவனிடம் வந்து பேசிக் கொண்டே இருந்தனர். கொஞ்ச நேரம் கூட பேச முடியாமல் போனதால் பூர்ணா கோபத்தின் உச்சத்திற்கே சென்றாள்.
பூர்ணா கோவமாக, “நிதர் எவ்ளோ! நேரம் வெயிட் பண்றது” என்றாள்.
“ஒரு நிமிஷம் இரு” என்று அவர்களை அனுப்பி விட்டு வந்தான்.
“நிதர் நீ பண்றது எதுவும் எனக்கு பிடிக்கல, எப்ப பாத்தாலும் பொண்ணுங்க கூடவே இருக்க, உன் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வரதுல மோஸ்ட்லி பொண்ணுங்க தான் ” என்றாள் கோபமாக.
“பூர்ணா என்னைய சந்தேகப்பட்டு பேசுறியா??” என்றான் கோபமாக.
“இல்ல கன்ஃபார்ம் பண்ணி தான் பேசுறேன், உன் கிளாஸ் பொண்ணுங்க நீ தனியா இருக்கிறப்ப மட்டும் வந்து பேசுறாங்க, நா வந்ததும் போயிட்டுறாங்க என்ன ஆக்ட் பண்றாங்களா” என்றாள் உச்சகட்ட கோபத்தில்.
“பூர்ணா வார்த்தைய விட்டுட்டா அள்ள முடியாது, அவங்க என் ஃப்ரெண்ட்ஸ் ” என்றான் கோபமாக.
“உனக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா, எப்ப பாத்தாலும் பொண்ணுங்க கூடவே அலையுற” என்று கோபத்தில் வார்த்தையை விட்டாள்.
“போதும்டி என் கேரக்டரையே தப்பா பேசாத, முதல்ல என் ஃபிரண்ட்ஸ் இப்ப நானா, எதுக்கெடுத்தாலும் சந்தேகம், நீ நம்ம காதலையும் நம்பல என்னையும் நம்பல, எப்ப உனக்கு நம்பிக்கை இல்லையோ இனிமே எதுக்கு சேர்ந்து இருக்கணும் ” என்று இவனும் கோபத்தில் வார்த்தையை விட்டான்.
“நானும் அதான் சொல்றேன், நா பாட்டுக்கு என் வேலை உண்டு நா உண்டுன்னு இருந்தேன், என்னைய லவ் பண்றேன்னு சொல்லி இப்படி ஏமாத்திட்டல நீ எனக்கு வேணாம்” என்றாள் கோவமாக.
“நா ஏமாத்தல என்னையும் , என் காதலையும் சந்தேகப்பட்டது நீ தான், எப்ப உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் வந்ததோ அப்பவே நம்ம காதல் செத்து போச்சு, இதுதான் நா உன்னைய கடைசியா பாக்குறது, குட் பாய்” என்று கிளம்பிப் போனான்.
“சந்தேகத்த உருவாக்குனது நீதான், என் வாழ்க்கையில இனி உன்னைய நா பார்க்கவே கூடாது, இந்த நிமிஷமே உன்ன நா மறக்குறேன்” என்று கோவமாக சென்றாள்.
‘இவளுக்கு என் மேல உண்மையாவே லவ் இருந்தா ஒரு தடவையாச்சு ஐ லவ் யூ சொல்லி இருப்பா , நா கேட்டும் சொல்லல லவ் இருந்தா தானே சொல்றதுக்கு இவள போய் லவ் பண்ணுறேன் பாரு இனி இவ எனக்கு தேவயில்ல ‘, என்று கசப்பாக நினைத்துக் கொண்டு சென்றான்.
(பிளாஷ்பேக் ஓவர்)
நடந்த சம்பவத்தை பூர்ணா மற்றும் நிதர்சன் நினைத்துப் பார்த்தனர். ‘நான் தேவையில்லாம நிதர் கிட்ட சண்ட போட்டுட்டேன், நாங்க பிரிய நா தான் காரணம், அவன் எத்தன பேர் கிட்ட பழகினாலும் என்னைய மட்டும் தான் லவ் பண்ணுனான், தேவையில்லாம சந்தேகப்பட்டு நானே என் தலையில மண்ணள்ளிப் போட்டுகிட்டேன்”, என்று அழுதாள் பூர்ணா யோசனையுடனே இரு நாட்கள் சென்றது.
பூர்ணா அவள் யோசனையில் இருந்ததால் அபுவிற்கு ஒரு பிரச்சனையும் வராமல் சுமுகமாக நாட்கள் சென்றது.
ஷ்யாம் பிரின்சிபாலை பார்த்துவிட்டு அபுவின் கிளாஸை பார்த்தான் அபு கடைசி பெஞ்சில் இருந்தாள். கடைசி பெஞ்சு பக்கத்தில் இருந்த ஜன்னல் ஓரத்தில் நின்று பார்த்தான்.
கடைசி பெஞ்சில் கேர்ள்ஸ் ரோவில் பிரியா மற்றும் அபுவும் இவர்கள் பக்கத்தில் இருந்த பாய்ஸ் ரோவில் தீபன், கௌதம், ராஜேஷ் என வரிசையாக உட்கார்ந்து இருந்தனர்.
“காலையிலேயே இந்த பெரியவர் ஏன் டி தூங்க வைக்கிராரு?? ” என்றாள் அபு மெதுவாக.
“அதுவாடி அவரோட குழந்தைய தூங்க வைக்க சின்ன வயசுல முயற்சி பண்ணல, அதான் இப்ப நம்மல தூங்க வைக்க முயற்சி பண்றாரு” என்றாள் மெதுவாக சிரிப்புடன்.
“ஐயோ! பாவம் நம்மள தூங்க வைக்க தான் இவரு முயற்சி பண்றாரு, இவரு முயற்சிய ஏன் டிஸ்கரேஜ் பண்ணனும் என்கரேஜ் பண்ணி நாம தூங்கலாம்” என்றாள் அபு மெதுவாக சிரிப்புடன்.
“அபூர்வ வர்ஷினி அண்ட் பிரியா” என்றார் சார்.
“சார்…” என்று இருவரும் எழுந்தனர்.
“என்ன ரெண்டு பேரும் அவ்ளோ இன்ட்ரஸ்டிங்கா பேசிட்டு இருக்கீங்க, நா எவ்ளோ இம்பார்ட்டெண்ட் டாபிக் நடத்துறேன், அத கவனிக்காம பேசுறீங்க ரெண்டு பேரும்” என்றார் லேசான கோவத்துடன்.
“நீங்க நடத்துற எல்லாத்தையுமே இம்பார்ட்டெண்ட் தான் சொல்றீங்க, அப்ப இதுல எது சார் வி.வி . இம்பார்ட்டெண்ட்” என்றான் தீபன் கிண்டலாக மெதுவாக.
இதை கேட்டதும் ராஜேஷ் மற்றும் கௌதம் சிரித்தனர். அபு மற்றும் பிரியா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றனர்.
“அப்படி என்னம்மா பேசுவீங்க பாடம் எடுக்குறப்ப” என்றார் புலம்பலாக.
“சார் அது வந்து” என்றாள் பிரியா.
“இரு பிரியா நானே எல்லாத்தையும் சொல்றேன், சார் நமக்கு அப்பா மாதிரி ” என்றாள் அபு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
“ஏதோ பிளான் போட்டுட்டா” என்றான் கௌதம்.
“ஆமா டா” என்றனர் மற்ற இருவரும்.
“ஆமாம்மா நா அப்பா மாதிரிதான் சொல்லுமா, எதாச்சும் பிரச்சனையா??” என்றார் பாசமாக.
“சார் நேத்து நைட்ல இருந்து நா எதுவுமே சாப்பிடல சார்” என்றாள் பாவமாக.
“ஏன்மா??” என்றார் கவலையாக.
“வீட்ல எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்க சமைக்க டைம் இல்ல, சீக்கிரமா போயிட்டாங்க, என்கிட்ட கடையில வாங்கி சாப்பிடக் கூட காசு கொடுக்க மறந்துட்டாங்க” என்றாள் பாவமாக.
“அச்சோ! என்னமா படிக்கிற பொண்ணு இப்படி எல்லாம் சாப்பிடாம இருக்கலாமா” என்று பதறினார்.
“சார் பிரியா காலையில சாப்பிடல காலேஜுக்கு லேட் ஆச்சுனு வந்துட்டா, மதியானம் கேண்டின்ல வாங்கி சாப்பிட அவங்க அம்மா காசு கொடுத்தாங்க, வர அவசரத்துல வெச்சுட்டு வந்துட்டா, அதான் ரெண்டு பேரும் பசிக்குது என்ன பண்றதுன்னு பேசுனோம்” என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.
“அட என்னம்மா என்கிட்ட காசு கேட்டிருக்கக் கூடாதா, வாங்க ரெண்டு பேரும் முதல்ல போய் சாப்பிடுங்க” என்று பணத்தை எடுத்தார்.
“ஏய்!! நாங்களும் வரோம் டி அபு ப்ளீஸ் ” என்றவர் மூன்று பேரும்.
“ஆ… சார் மயக்கமா வருது ” என்று மயங்கி விழப்போனாள். வேகமாக தீபன் மற்றும் கௌதம் அவளை பிடித்தனர்.
“சார் எனக்கும்” என்று பென்சில் உட்கார்ந்தாள் பிரியா. ராஜேஷ் வேகமாக பிரியாவை பிடித்தான்.
“முதல சாப்பிட வைங்கப்பா சாப்பிடலைன்னா அல்சர் வந்துரும், நீங்க உக்காருங்க பா பொண்ணுங்க போகட்டும்” என்றார்.
“பொண்ணுங்கள இவங்க மயங்கி விழுந்தா பிடிக்க முடியாது” என்றான் தீபன்.
“அதுவும் சரிதான் இதுல்ல முன்னூறுவ இருக்கு, போய் சாப்பிட வைங்க ரெண்டு பேரும் நல்லா ஆனதும் அழைச்சிட்டு வாங்க, நா டிபார்ட்மெண்ட்ல சொல்லிடுறேன்” என்றார். தீபன் சென்று பணத்தை வாங்கிக் கொண்டான்.
“சரி சார் “, என்று கைத்தாங்கலாக இருவரையும் கீழே அழைத்து வந்தனர்.
“ஏய்! நடிச்சது போதும் டி” என்றான் ராஜேஷ்.
ஐந்துபேரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தனர். “இங்கே பாருடி முன்னூறுவ காசு கொடுத்து இருக்காரு” என்றான் தீபன் சிரிப்புடன்.
“சூப்பர்டா வாங்க கேன்டீன் போலாம் ” என்றாள் அபு.
“என்ன அஞ்சு பேரும் சார ஏமாத்தி எஸ் ஆகி வரீங்களா??” என்று இவர்கள் முன்னால் வந்து கைகளை மார்போடு கட்டிக்கொண்டு புருவம் உயர்த்தி கேட்டான் ஷ்யாம். ஐந்து பேரும் முழித்தனர்.
“யூது நீ எங்க இங்க??” என்று சமாளிக்க பக்கத்தில் வந்தாள்.
“அபு நா கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல” என்று பொய்யாக முறைத்தான்.
“அண்ணா அதுவந்து கேன்டீன் போறோம்” என்றான் கௌதம் தயங்கியபடி.
ஷ்யாம் சிரிக்க ஆரம்பித்தான். “என்னடா இப்படி பம்புறீங்க” என்றான் சிரித்துக்கொண்டே.
“யூது நாங்க பயந்தே போயிட்டோம்” என்று பொய்யாக முறைத்தாள்.
“இத நா நம்பனுமா!!! எப்படி எப்படி நேத்து நைட்ல இருந்து சாப்பிடலயா நீ” என்றான் கிண்டலாக.
“நீ எல்லாத்தையும் பாத்துட்டியா” என்று முழித்தாள்.
“ஆமா பிராடு.. பிராடு.. என்ன வேலை எல்லாம் பண்ற, இதுல அவர்கிட்டயே காசு வாங்கிட்டு வந்திருக்கீங்க, பாவம்டா அவரு” என்று சிரித்தான்.
“வாங்கண்ணா சாப்பிடலாம் ” என்று அவனைப் பேச விடாமல் இழுத்து சென்றான் தீபன். மற்றவர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர். வட்டமான டேபிளில் ஷ்யாம், அபு,பிரி, ராஜேஷ், தீபன் மற்றும் கௌதம் என்று வட்டமாக ஆர்டர் செய்துவிட்டு வந்து உட்கார்ந்தனர்.
“அபு உனக்கு ஒன்னும் இல்லையே, காசு இல்லைன்னா என்கிட்டே கேட்டு இருக்கலாமே” என்று இவர்கள் டேபிளின் பக்கத்தில் வந்து கேட்டான் வினோத்.
“இல்ல வினோத் அதான் சார் காசு குடுத்துட்டாரே” .
“இவனுங்க கிட்ட கேட்க வேண்டியதுதானே, ஏன் டா கூடவே இருக்கீங்க சாப்பாடு வாங்கித் தர மாட்டீங்களா???” என்றான் கோவமாக.
“இப்பதானே சொல்லியிருக்க அக்கவுண்ட் நம்பர வாட்சப்ல அனுப்புறேன், காசு போட்டு விடு” என்றான் கௌதம் கிண்டலாக.
கௌதமை முறைத்தான். “சரி அபு சாப்பிடாம சுத்தாத, அச்சோ சார் நீங்க இங்கதான் இருக்கீங்களா உங்கள நா கவனிக்கல”, என்றான் ஷ்யாமை பார்த்து.
“நீ யார தான் கவனிச்சா??”, என்று முனங்கினான் தீபன்.
ஷ்யாம் அதைக் கேட்டு லேசாக சிரித்துக் கொண்டே,” இட்ஸ் ஓகே நோ ப்ராப்ளம்” .
“சார் எப்படி இங்க?? உங்க கூட” என்றான் பொதுவாக.
“யூதன் என் ஃப்ரெண்ட் வினோத்” என்றாள் சிரிப்புடன்.
“அபு உனக்கு சார முன்னாடியே தெரியுமா” என்றான் ஆச்சரியமாக.
“ம்ம்.. தெரியும்டா எங்க எல்லாருக்கும் தெரியும், ஆமா நீ கிளாஸ்கு போகலையா?? பெல் அடிக்க போகுது” என்றான் ராஜேஷ்.
“ஆமால சரி நா கிளாஸ்கு போறேன், அபு நல்லா சாப்பிடு சரியா, மயங்கி விழுந்து தரைய விரிசல் விழ வைக்காத” என்று கிண்டலாக சொல்லிவிட்டு போனான்.
“நா மயங்கி விழுந்தது இவன் கண்ணுக்குத் தெரியல, பார்த்தீர்களா டா” என்றாள் பிரியா.
“அபு இவனுக்கு உன் மேல ஒரு கண்ணு டி, எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இரு ” என்றான் கௌதம் யோசனையுடன்.
“அப்படி எல்லாம் இருக்காது, விடுடா இவன் வந்து அப்படி ஏதாச்சும் சொல்லட்டும் அப்ப பாத்துக்கலாம்”.
“பாரு டா அபுக்குள்ள இவளோ தைரியமா” என்றான் ஷ்யாம் கிண்டலாக.
“அவளுக்கு தைரியம் எல்லாம் அதிகமா தான் இருக்கு அண்ணா” என்றாள் பிரியா.
“அபுக்கும் பிரியாவுக்கும் பாடிகாட் நீங்க மூணு பேரும் இருக்கீங்களே டா, யாரும் அபுவையும் பிரியாவையும் நெருங்க விடமாட்டிங்க” என்றான் ஷ்யாம் சிரிப்புடன்.
ராஜேஷ், தீபன், அபு மூவரும் சிரித்தனர். பிரியா மற்றும் கௌதம் உர்ரென்று இருந்தனர்.
“அண்ணா லவ்வர் பக்கத்துல வச்சிக்கிட்டே ஒருத்தன் பிரியா கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனான், அந்த விஷயம் உங்களுக்கு தெரியாது” என்றான் தீபன் சிரிப்புடன்.
“என்னடா எப்ப நடந்துச்சு??” என்றான் ஆச்சரியமாக.
“நானும் பிரியாவும் தனியால எப்போதும் பேச மாட்டோம் அண்ணா எப்போதுமே அஞ்சு பேரும் ஒன்னாதான் இருப்போம், எங்க கேங் பேரு ஃபைவ் ஸ்டார் தான், அபுவும் பிரியாவும் காலேஜ் பஸ்ஸில ஏத்தி விட்டுடுவோம், பஸ்ஸ மிஸ் பண்ணினா அபுவ அவ பஸ் ஸ்டாப்லயும் ப்ரியாவ வீட்லயும் விட்டுடுவோம், அன்னைக்கு ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருந்தோம் ஆனா அதையும் கெடுக்க ஒருத்தன் வந்தான்ணா பாருங்க” என்றான் கௌதம் கோவமாக.
“மீதிய நா சொல்றேன் அண்ணா, வந்தவன் என் பக்கத்தில் வந்து பிரியான்னு கூப்பிட்டான், எனக்கு யாருனே தெரியல, யாருன்னு கேட்டேன், நா எம்பிஏ ஃபர்ஸ்ட் இயர் இந்த காலேஜ்ல தான் படிக்கிறேன், இன்ஜினியரிங் இந்த காலேஜ்ல தான் படிச்சேன், என் பேரு அசோக், நா உங்க கிட்ட தனியா பேசணும் சொன்னான், இவன் என்னில் பாதி தான் அவன வச்சிக்கிட்டே பேசலாம்னு சொன்னேன், நா சொன்னதோட அர்த்தம் அவனுக்கு புரியல போல, அதுக்கு அவன் நா எம்பிஏ இந்த காலேஜ்ல ஜாயின்ட் பண்ணுனதே உங்கள பாக்க தான், நா ஒரு வருஷமா உங்கள லவ் பண்றேன், எப்போதுமே ஃப்ரெண்ட்ஸ் கூடவே இருப்பீங்க அதான் வந்து பேச தயங்கினேன், யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்கன்னு சொன்னான்”.
இடையிலேயே அபு,” அப்பதான் யூது நாங்க மூணு பேரும் லாப்ல இருந்து வந்தோம், வந்து பார்த்தா இவன் கோவமா இருந்தான், பிரியா அவன் கிட்ட பேசிட்டு இருந்தா, உடனே பிரியா இதுக்கு பதில என் பாதி சொல்லுவாரு, நா சொன்னதோட அர்த்தம் உங்களுக்கு புரியலையா, நாங்க லவ்வர்ஸ் நாங்க நாலு வருஷமா லவ் பண்றோம்னு சிரிச்சுட்டே சொன்னா ” என்றாள் சிரித்துக்கொண்டே.
இடையிலே ராஜேஷ், “அதுக்கு இவன் உன்னைய இந்த சைடு இனிமே பார்த்தேன் அது தான் உனக்கு கடைசி நாளு, ஒரு வருஷமா லவ் பண்றேன்னு சொன்னீயே அவளுக்கு லவ்வர் இருக்கா இல்லையானு விசாரிக்க மாட்டியா, என் டிபார்ட்மெண்ட்ல இருக்க எல்லாருக்கும் தெரியும் நாங்க லவ்வர்ஸ்னு ,டிபார்ட்மெண்ட் என்ன எங்க ரெண்டு வீட்டிலேயுமே தெரியும், பிரியா கிட்ட சாரி சொல்லிட்டு திரும்பி பார்க்காம போயிடுன்னு சொன்னான், அவன் சாரி சொல்லிட்டு விட்டா போதும்டா சாமின்னு ஓடி போய்ட்டான்” என்றான் சிரிப்புடன்.
ஷ்யாம் இருவரையும் பார்த்து சிரித்தான். “இது சின்ன விஷயம் டா இதுக்கெல்லாம் இவளோ கோவப்படாத” என்று கௌதமின் தோளில் கை போட்டான்.
“இவங்க ரெண்டு பேரையும் காவல் காக்கிறதே எங்க வேலையா போச்சு” என்றான் தீபன் பொய்யான சலிப்புடன்.
“ரொம்ப சலிச்சுக்காத” என்றனர் பெண்கள் இருவரும் .
“அண்ணா சொல்ல மறந்துட்டேன், ரொம்ப தேங்க்ஸ் நிச்சயதார்த்தத்துல அபுவ விட்டுக்கொடுக்காம சாப்பிட அழச்சுட்டு போனதுக்கு” என்றாள் பிரியா சிரிப்புடன்.
“அட என்ன பிரியா!! இவ என் ஃப்ரெண்ட் இவளுக்காக இது கூட பண்ண மாட்டேனா?? ஆனா நா கொஞ்சம் அன்னைக்கு டென்ஷனா இருந்தேன், பங்க்ஷன் மட்டும் இல்லாம இருந்தது அவங்க நாலு பேரையும் உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பேன்” என்று சாதாரணமாக ஆரம்பித்து கோபமாக முடித்தான்.
“யூது எதுக்கு இப்ப கோவப்படுற???” என்றாள் அபு.
“உன்னைய சொல்லணும் டி, பேசாம அமைதியா நிக்கிற வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சுருந்த ” என்றான் கோபமாக. அபு முழித்தாள். மற்றவர்கள் அவன் கோபத்தை ஆச்சரியமாக பார்த்தனர்.
அவளின் முகத்தை பார்த்து பெருமூச்சுவிட்டு , “ஏன்டி இப்படி இருக்க உன்கிட்ட கோவப்படவும் முடியல கோவப்படாம இருக்கவும் முடியல” என்றான் சலிப்புடன்.
“யூது அது வந்து விடு ப்ளீஸ் ” என்று கெஞ்சலாக அவன் கையை பிடித்து.
ஷ்யாம் போன் அடித்தது, “ஒரு நிமிஷம் நீங்க எல்லாரும், சாப்பாடு வந்தா சாப்பிடுங்க” என்று எழுந்து வெளியே சென்றான்.
“இப்படிப்பட்டவர் அந்த சகுனிக்கா!!! நோ.. சகுனிய பத்தி சொன்னா அவரே வேணாம்ன்னு போயிடுவாரு” என்றாள் பிரியா வேகமாக.
“நாம யார் வாழ்க்கையும் கெடுக்கக்கூடாது பிரி, இப்படி பேசாத” என்றாள் அபு கண்டிப்புடன்.
“ஆமா எப்ப பார்த்தாலும் இதையே பண்ணு, கண்டிப்பா நீ பேசாம இருக்கிற வரைக்கும் உன் தலைல மிளகா தான் அறைப்பாங்க” என்றாள் கோவமாக.
“பிரி ரிலாக்ஸ்டா” என்றான் கௌதம்.
“என்னால முடியல கௌதம், எப்படி இருக்கா பாரு, நானும் இவளும் சின்ன வயசுல இருந்தே ஒன்னாதான் இருப்போம் ஆனா இப்ப நாங்க ஃப்ரண்ட்ஸ் இல்லனு இவ வீட்ல சொல்லி வச்சிருக்கா, என்னால அன்னைக்கு நடந்த சம்பவத்த மறக்க முடியல, இவ அப்பா விருமாண்டிய நம்பி இவள விட எனக்கும் மனசு இல்ல, எவனாச்சும் கேடி பையன் வந்தா கூட கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் கொடுத்துருவாரு,
எனக்கு மட்டும் இவள அந்த வீட்டிலிருந்து அழைச்சிட்டு வர உரிமை மட்டும் இருந்தா உடனே அவள இழுத்துட்டு வந்திருப்பேன், ” என்றாள் அழுகையுடன்.
அபு அவளை அணைத்துக் கொண்டு அழுதாள்.” அண்ணா வராங்க ” என்றான் ராஜேஷ். இருவரும் பிரிந்து தன் கண்ணை துடைத்துக்கொண்டு சரியாக உட்கார்ந்தனர்.
“என்னடா ஆடர் பண்ணுனது வந்து வச்சிட்டு போயிட்டாங்க சாப்பிடாம இருக்கீங்க”.
அப்பொழுதுதான் ஐந்து பேரும் சாப்பாடு வந்ததையே கவனித்தனர். “நீங்க வருவீங்கன்னு வெயிட் பண்ணுறோம்ணா” என்று சமாளித்தான் தீபன்.
“நா தான் சாப்பிடுங்க, வரேன்னு சொல்லிட்டு தானேடா போனேன், அபு என்னைய பாரு ” என்றான். அபு முழித்துக் கொண்டே அவனை திரும்பி பார்த்தாள்.” என்ன இது” என்று கண்ணீரை துடைத்தான்.
“அது வந்து..” என்றாள் தயங்கியபடி.
“நீ எதுவும் சொல்ல வேணா சாப்பிடு, நானும் கேட்கல, எல்லாரும் சாப்பிடுங்க” என்று ஸ்பூனால் சாப்பிட ஆரம்பித்தான்.
அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். ஷ்யாம் மற்றவர்களை பார்த்து விட்டு, அபுவின் காதில், “அபு உனக்கு என்னைய ரொம்ப புடிக்கும்ல” என்றான் மெதுவாக. அபு உடனே அவனை திரும்பி ஆச்சரியமாக பார்த்தாள். “இங்க வா” என்று குனிந்து, “எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்” என்று கண்ணடித்தான். அபு முழித்தாள்.
“என்ன அண்ணா சொன்னீங்க இவ எதுக்கு இப்படி முழிக்கிறா” என்றான் தீபன்.
“அதுவா தீபன் என்கேஜ்மென்ட்ல கடைசியா சாப்பிட்டது இவ தான்னு சொன்னேன்”.
“நீங்க சீக்கிரமா சாப்பிட கூட்டிட்டு போய் இருப்பீங்களே அண்ணா லேட்டா போனீங்களா” என்றான் கௌதம்.
“சீக்கிரமா போயிட்டோம், இவ தான் எல்லா சாப்பாட்டையும் காலி பண்ணிட்டாளே அடுத்த பந்தி எப்படி போட முடியும் ” என்றான் கிண்டலாக. அபு முறைத்தாள். மற்றவர்கள் சிரித்தனர் .
“யூது..” என்றாள் கோபமாக.
“இப்படி குண்டு பூசணிக்கா மாதிரி சாப்பிட்டா நாங்க எல்லாரும் எப்படிமா சாப்பிடுறது, கேளுங்க டா கேளுங்க ” என்றான் ஷ்யாம் கிண்டலாக.
“ஆமாமா எங்களுக்கும் கொஞ்சம் வைமா” என்றான் ராஜேஷ் கிண்டலாக.
“பாவம் அவ, இருந்தா தானே!! வைப்பா அவளுக்கே அந்த சாப்பாடு பத்தாது, என்ன குண்டு பூசணிக்கா” என்றான் ஷ்யாம் கிண்டலாக.
“டேய்! உன்னய என்ன பண்றேன்னு பாரு டா ,நா ஒல்லியா இருக்கேன் ,என்னைய பார்த்து குண்டு பூசணிக்கான்னு சொல்றியா” என்று கோபமாக எழுந்தாள்.
“நா எஸ்கேப் ” என்று ஓடினான். அவனை துரத்திக் கொண்டே இவளும் ஓடினாள்.
அவள் நண்பர்கள் ,’அபு எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டனர்.
“யூது உன்னைய பிடிக்காம விடமாட்டேன் டா” என்று விரட்டினாள்.
“முடிஞ்சா பிடி குண்டு பூசணிக்கா” என்று வேகமாக ஓடினான்.
அபு கெமிஸ்ட்ரி லேபை தாண்டி ஓடும் போது ஓர் ஜோடி கைகள் அவளை உள்ளே இழுத்தது . ஷ்யாம் கார் பார்க்கிங் போய் நின்று திரும்பி பார்த்தான். பின்னால் அபு வராதது அப்பொழுதுதான் தெரிந்தது தேடி சென்றான்.
அபுவை உள்ளே இழுத்த அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார்??? ஷ்யாம் அபுவை கண்டுபிடிப்பானா??? பிரியா சொன்ன அன்னைக்கு நடந்த சம்பவம் என்ன??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..
💗வரமாய் வருவேனடி💗……
