என்ன தான் வாசு வேலை இருக்கு என்று கூறி விட்டு அதிகாலை சென்று இருந்தாலும் பத்து மணிக்கு மேல் அவன் மனது படபடவென அடித்துக்கொள்ள ஆரம்பித்தது… அவனுக்கு படபடப்பாக இருந்தது… உடனடியாக சைத்துவிற்கு தான் அழைத்தான்… ஆனால் அவள் தான் அதனை அணைத்து வைத்து இருந்தாளே.. சரி என்று அவளின் செயினில் பொருத்தி வைக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ்யை பார்த்த போது அது கல்லூரியை தான் காட்டியது.. எனவே இன்னொரு தடவை அடித்து பார்த்த போதும் அவள் எடுக்காததால் கல்லூரிக்கு சென்றான்…
அடுத்த கால் மணி நேரத்தில் கல்லூரிக்கு சென்றவன் அவள் அறைக்கு சென்றான்… கிட்டதட்ட ஓடினான்… அங்கு அவனை வேற்று அறை தான் வரவேற்றது… அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்தால் அது அமைதியாக அவனின் கண் முன் மிளிர்ந்து ஒளிர்ந்தது…. அவன் செயினை தேடி பார்த்தால் அதுவும் அலைபேசியின் பக்கத்தில் இருந்தது..
அப்போது கூட அவள் தன்னை விட்டு சென்றுவிட்டாள் என அவன் நம்பவில்லை… தன்னை பிராங்க் செய்வதாக தான் எண்ணினான்…. அதனால் அவளின் கார் கல்லூரியில் இருக்கும் பார்க்கிங்கில் உள்ளதா என்று பார்த்தான்… அங்கு அவள் கார் இருந்தது… எப்படி அவள் வெளியில் சென்றால் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை… யாருக்கும் தெரியப்படுத்தாமல் கல்லூரியை ஒரு முறை அலசி பார்த்தவன் வீட்டிற்கு சென்றுவிட்டாளோ என எண்ணி வேகமாக வீட்டிற்கு சென்றான்…
அவன் சென்ற நேரம் இளவரசி ஒருவரிடம் சத்தமிட்டு கொண்டு இருந்தார்…அது வேறு யாருமில்லை சைந்தவியும் வாசுவும் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கிருந்த மருத்துவர் ஒரு செவிலியரிடம் சைந்தவியால் கருவுற முடியாது என கூறினாரே அந்த செவிலியர் தான் அது…
வாசுவை பார்த்ததும் “வாசு கேளு இவங்க கிட்ட என்ன என்னமோ சொல்றாங்க…. உண்மையானு கேளு டா… முதல்ல பாப்பாவை வர சொல்லு… ஐயோ என் பொண்ணு இதை கேட்டு எவளோ கஷ்டப்பட்டு இருப்பாளோ தெரியலையே… நான் அவளை இப்போவே பார்க்கனும்” என்று கேட்க ஆரம்பித்தார்…
ஏற்கனவே சைந்தவியை காணாமல் தேடி கொண்டு இருந்தவன் “ம்மா அவங்க என்ன சொன்னாங்க தெளிவா சொல்லுங்க… ஏற்கனவே நான் டென்ஷன்ல இருக்கேன்… என்ன சொன்னாங்கனு தெளிவா சொல்லுங்க…” என்று கோவமாக கத்தினான்… இளவரசிக்கே அவனை காண பயமாக இருந்தது…..
அந்த செவிலியரே “தம்பி நீங்க அணிக்கு ஹாஸ்பிடல் வந்த அப்ப உங்க முன்னாடி மேடமுக்கு எந்த பிரச்னையும் இல்லைனு சொல்லிட்டு உங்களுக்கு போன் வரவும் நேநேக வேகிய போயிட்டீங்க… பாப்பாவும் வெளிய போக பார்த்தாங்க… ஆனா அவங்களுக்கு கேக்குற மாதிரியே டாக்டர் மேடம்னால குழந்தை பெத்துக்க முடியாதுnu சொல்லிட்டாங்க…. அதை மேடம் கேட்டுட்டாங்க… ஆனா இன்னிக்கு தான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சது… உங்க கிட்ட சொல்லிஏ ஆகனும்னு உடனே வந்துட்டேன் தம்பி… அந்த டாக்டர் உங்க கிட்ட சொன்னதே பொய் தம்பி… மேடமுக்கு எந்த பிரச்சனையும் இல்லை… இன்னிக்கு அவங்க ரூம்ல இருந்து ஒரு பைல் எடுத்துட்டு வர சொன்னாங்க.. அது எடுக்குற அப்ப தான் இந்த பைல் பாத்தேன்…” என்று கூறி அதை அவனிடம் கொடுத்தார்…
தொடர்ந்து “அதுல மேடம் பேரு பாத்துட்டு எனக்கு சந்தேகம் வந்துருச்சு… படிச்சு பாத்து எனக்கு பயங்கர அதிர்ச்சி… இதை அவங்க கிட்ட சொன்ன கண்டிப்பா மழுப்ப தான் பார்ப்பாங்க… அது தான் உண்மை தெரிஞ்சதும் இங்க வந்துட்டேன்… நிஜமாவே மேடமுக்கு குழந்தை பிறக்குறதுல எந்த பிரச்சனையும் இல்லை தம்பி… இதை சொல்ல தான் வந்தேன் தம்பி… இது தான் உண்மை.. நான் கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டார்…
இத்தனை வருடம் தன்னை ஏமாற்றி உள்ளார் என தெரிந்த வாசு அதிர்ச்சி அடைந்துவிட்டான்… இப்போது தெரிந்த விஷயம் கூட அவனுக்கு சிறிய அதிர்ச்சி தான்… ஆனால் அவனுக்கு அவனவள் தான் தற்போது முக்கியமாக இருந்தது… இளவரசியின் பேச்சை வைத்தே சைந்தவி இங்கு வரவில்லை என தெரிந்து அங்கேயே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்…
அவன் அமர்ந்த நிலையே இளவரசிக்கு பயமாக இருந்தது… பின் என்ன நினைத்தானோ வேகமாக அறைக்கு சென்றான்… முதலில் அவன் கண்ணில் பட்டது அவள் எழுதி வைத்த கடிதமும் அவளுக்கு கிடைத்த மருத்துவமனையின் போலி ரிப்போர்ட் தான்.. அதில் அவள் எழுதி வைத்ததை பார்த்து “அம்மு……….மு“ என்று மிக சத்தமாக கோவமாக கத்தினான்… அவனின் கத்தல் கீழே இருந்த இளவரசிக்கு கேட்க வேகமாக வாசுவின் அறைக்கு வந்தார்…
அதே நேரம் வரதராஜன் குடும்பமும் வீட்டிற்கு வர அவர்களும் வாசுவின் சத்தத்தை கேட்டு வேகமாக அவனின் அறைக்கு வந்தனர்… அனைவரும் மேலே செல்லும் போது கோவத்தில் கையை தரையில் குத்தி கொண்டு இருந்தான்….
இளவரசி வந்தவர் அவனின் இந்த கோவத்தில் விக்கித்து நின்று விட்டார்… கவின் வந்தவன் தான் அவனை கொஞ்சம் நிதானத்திற்கு கொண்டு வந்தான்… “வாசு என்ன ஆச்சு ஏன் இந்த கோவம் என்ன ஆச்சு…” என்று அவன் கையை பிடித்து கொண்டு கேட்டான்…
“அண்ணா என் அம்மு என்னை விட்டு போயிட்டா ண்ணா.. நான் வேண்டாம்னு போயிட்டா ண்ணா…” என்று அவனை அணைத்து கொண்டு கதறிவிட்டான்… அவன் அழுது அங்கு யாரும் கண்டது இல்லை…
அவன் கையில் வைத்து இருந்த கடிதத்தை வாங்கி படித்த கவினுக்கும் கண் எல்லாம் கலங்கிவிட்டது… அவன் அதை சத்தமாக படிக்க ஆரம்பித்தான்…
“மாமா உனக்கு இந்த லெட்டர் கையில கிடைக்குற அப்ப நான் உன்கூட கண்டிப்பா இருக்க மாட்டேன்… உன்னை விட்டு ரொம்ப தூரம் போய் இருப்பேன்… திரும்பி வராத தூரம் போய் இருப்பேன்… எனக்கு தெரிய கூடாதுனு நீ மறைக்க நினைச்ச விஷயம் எனக்கு தெரிஞ்சிடிச்சு… ஏன் மாமா மறைச்ச… என் மேல எதுக்கு மாமா உனக்கு இவளோ பாசம்… உனக்கு நான் கஷ்டத்தை தவிர்த்து என்ன தந்து இருக்கேன்… இத்தனை நாள் என் முகத்தால நீ நிறைய கஷ்டம் அனுபவிச்சு இருக்க…
ஆனா இப்போ குழந்தை இல்லைனு நீ கஷ்டப்பட வேண்டாம் மாமா… ஆமா நான் உன்னை விட்டு போறேன்… என்னால நீ இனிமே கஷ்டப்பட வேண்டாம்னு போறேன்… என்னால உனக்கு ஒரு குழந்தை கூட பெத்து தர முடியாது மாமா… அதுவே என்னை கொன்னுடும் மாமா… இப்போ நான் சொல்ல போறது உனக்கு மட்டும் இல்லை வேற யாருக்கும் பிடிக்காதுன்னு தெரியும்… ஆனா சொல்றேன் கேட்டுக்கோ மாமா…
நீ… நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ மாமா.. ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… இனிமே உன் வாழ்க்கைல நான் இல்ல… என்னை மறந்துரு மாமா… இளாம்மா , சக்ராப்பா, வரதாப்பா, கோகிம்மா, அக்கா, கவின் மாமா குட்டி பசங்க திலீப் அண்ணா எல்லாரையும் மிஸ் பண்ணுவேன் மாமா… என்னடா இவ திவ்யாவை சொல்லலனு நினைக்காத மாமா… அவ என்னை அவளோட அம்மாவா தான் பார்த்தா… ஆனா நான் அவளை இப்போ பாதியில விட்டுட்டு போறேன் மாமா… அவளை பாத்துக்கோங்க….
உன்னை மறந்தா தானு மாமா நினைக்குறதுக்கு… நீ எப்பவும் எனக்குள்ள இருப்ப மாமா… ஆனா ஞாபகம் வெச்சுக்கோ மாமா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ… இத எழுதுற அப்ப என் மனசே என்னை கொல்லுது மாமா… இது நான் சொல்றது அபத்தம் தான்.. ஆனா சொல்றேன் என்னை மறந்துரு மாமா… சைந்தவி னு உன் வாழ்க்கைல வரவே இல்லைனு நினச்சிக்கோ…. என்னை தேட வேண்டாம் மாமா… நான் உன் நினைப்போடு நிம்மதியா இருப்பேன்… நான் போறேன் மாமா…” என்று எழுதி முடித்து இருந்தாள்… அந்த கடிதத்தில் அவள் கண்ணீர் விழுந்து காய்ந்து இருந்தது…
பெண்கள் எல்லாம் வாய் விட்டு அழ ஆண்களோ கலங்கி நின்றுவிட்டனர்… பின் இளவரசி அந்த செவிலியர் கூறியதையும் கூற அந்த மருத்துவர் மீது கொலைவெறியே உண்டானது… அந்த மருத்துவரை விசாரித்த போது அவர் சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர்…
(அப்படியே படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா இந்த சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
+1