Loading

அத்தியாயம் 18

 

அலுவலகத்தில் வேலை முடித்து கிளம்பும் சமயத்தில், இனியன் வைஷ்ணவிக்கு அழைத்து, “என்ன டி.. ரொம்ப பிஸியா.. முடிஞ்சதா இல்லையா” என்று கேட்டதற்கு, “இன்னும் முடியல டா.. ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து மால் வந்தோம். இன்னைக்கு ஃபுல்லா ஒரே ரௌண்ட்ஸ் தான்..” என்றாள் மகிழ்ச்சியுடன்.

 

“அடிப்பாவி.. காலைல கிளம்பிப் போன.  இன்னுமா ஊர் சுத்திட்டு இருக்கீங்க.  இன்னும் எங்க டி பாக்கி இருக்கு..” என்று இனியன் சலித்துக் கொண்டு கேட்க,

 

“கொஞ்சம் நேரம் இங்க இருந்துட்டு அப்புறம் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு கிளம்ப வேண்டியது தான்..” என்றாள் வைஷ்ணவி.

 

“ஓ.. சரி சரி.. நான் இப்போதான் ஆபீஸ்ல இருந்து கிளம்புறேன். நீ கிளம்புறதா இருந்தா, அப்படியே உன்ன வந்து அழைச்சிட்டு போகலாம்னு பார்த்தேன்..” என்றான் இனியன்.

 

“நான் கிளம்பும் போது சொல்றேன் டா..” என்றாள் வைஷ்ணவி. 

 

“ரொம்ப லேட் பண்ணாம சீக்கிரம் கிளம்பி வா. இல்லனா கிளம்புறதுக்கு கொஞ்சம் நேரம் முன்ன எனக்கு கால் பண்ணு.  நான் கூப்பிட வரேன்..” என்றான் இனியன்.

 

“ம்ம். சரி டா.. நான் உனக்கு கால் பண்றேன். ஹோட்டல் போய்ட்டு லொகேஷன் மட்டும் எங்கனு அனுப்பி வைக்கிறேன். நான் கால் பண்ண பிறகு நீ கிளம்பி வா..” என்றவள், அழைப்பை நிறுத்தி இருந்தாள்.

 

இனியன் வீட்டிற்குச் செல்ல ஆறு மணியை கடந்து இருந்தது.

 

வைஷ்ணவி, ஏற்கனவே தன் பெற்றோரிடம், இன்று தோழிகளுடன் வெளியில் செல்வது பற்றி ஏற்கனவே கூறி இருந்ததால் அவர்களும் இவன் மட்டும் வருவதை பார்த்து எதுவும் கேட்கவில்லை.

 

மங்களம் மட்டும் வைஷ்ணவியைப் பற்றிக் கேட்டார். அவரிடம் தகவலைக் கூறி விட்டு அவனது அறைக்குச் சென்றான்.

 

சொன்னது போலவே, ஏழு மணி வாக்கில், அவனுக்கு தாங்கள் இருக்கும் உணவகத்தின் இருப்பிடத்தை அவனுக்கு அனுப்பி வைத்து இருந்தாள். 

 

அவனும் பார்த்து விட்டு, “நல்ல காஸ்ட்லி ஆன ஹோட்டளுக்கு தான் போய் இருக்காளுக போலயே..” என்று தனக்குள் பேசியவன், தன் அண்ணனைக் காணச் சென்றான்.

 

பரிதியோ அப்பொழுது தான் அறையில் இருந்து வெளியில் வந்தான். 

 

“அண்ணா..” என்று அழைத்துக் கொண்டே வர, 

 

“வா டா..  இன்னைக்கு எப்படி போச்சு..” என்று அண்ணன்காரன் கேட்க,

 

“ம்ம். அது எல்லாம் எப்பவும் போல தான். சரி வா வெளிய கார்டன் போகலாம்..” என்று அண்ணனை அழைக்க,

 

இனியன் அழைத்ததும், “போகலாமே..” என்று கூறியவன், மெல்ல நடந்து சென்றான்.

 

வெகு நாள் கழித்து தோட்டத்தில் நடை பயிற்சி மேற்கொண்டான் பரிதி.

 

வீசிய தென்றல் காற்றின் குளுமை அவனுக்கு நிரஞ்சனாவைத் தான் நியாபகம் படுத்தியது.

 

ஒரு நிமிடம் அதனை உள்ளார்ந்து ஆழ்ந்து ரசித்தவன், பின் இனியனிடம், “அம்மா என்ன பண்றாங்க??” என்றுக் கேட்க,

 

இனியனும், “மாமா கூடவும் அத்தை கூடவும் பேசிட்டு இருக்காங்க..” என்றான்.

 

அவனும் அண்ணன் கூடவே சேர்ந்து நடந்தவாறே பதில் கூறினான்.

 

“வைஷு போன் பண்ணாளா ..” என்று பரிதிக் கேட்க,

 

“இல்லை.. நான் அப்போ பண்ணது தான் இன்னும் பண்ணல..  கொஞ்சம் நேரம் முன்ன தான் ஹோட்டலுக்கு ரீச் ஆகி இருக்கா போல. லொகேஷன் அனுப்பி வச்சி இருக்கா.. அவ கால் பண்ணதும் கிளம்பனும்..” என்றான் அவன்.

 

“ம்ம்ம். ” என்ற பரிதி, சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டு சாப்பிடச் சென்றனர்.

 

நேரம் எட்டு மணியை நெருங்கியதால், மற்ற மூவரும் சாப்பிட வந்தனர்.

 

மல்லிகா மற்றவர்களுக்கு பரிமாறி விட்டு, தானும் சாப்பிட அமர்ந்தார்.

 

சிறிது சிறிதாக நேரம் கடந்ததே தவிர வைஷுவிடம் இருந்து அழைப்பு வந்த பாடில்லை.

 

இனியன் அவ்வப்போது அலைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

ஒரு வேளை அழைப்பு விடுவிக்காமல், குறுஞ்செய்தி எதுவும். அனுப்பி வைத்து உள்ளலாளா என்று கவனித்துக் கொண்டிருந்தான்.

 

அவனின் செய்கையை பரிதி சாப்பிட்டவாறே கவனித்துக் கொண்டே இருந்தான்.

 

அனைவரும் சாப்பிட்டு முடிய, பரிதியோ, “இனியா.. அவ லொகேஷன் அனுப்பி இருக்கால்ல.. போய் என்னன்னு பார்த்துட்டு வா.. அவ அங்க இருந்தா வெயிட் பண்ணி கூட்டிட்டு வா.. நீ இங்க இருந்து டென்ஷன் ஆகிட்டு இருக்காத..” என்று கூற,

 

“நானும் அதான் யோசிச்சிட்டு இருக்கேன்..” என்றான் இனியன்.

 

விநாயகமோ, ” இனியா.. வைஷுவை இன்னும் காணோமே.. என்னனு போய் பார்த்துட்டு வாப்பா..” என்று கூற,

 

“நான் அதுக்கு தான் மாமா கிளம்பிட்டேன். அழைச்சிட்டு வரேன்..” என்று அவரிடம் கூறி விட்டு, வேகமாக காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.

 

அங்கு இருந்த பரிதியோ, ” மாமா.. அதான் இனியன் போய் இருக்கான்ல.. அவன் கூட்டிட்டு வந்துருவான். என்ன ரொம்ப நாள் கழிச்சு எல்லாரையும் பாக்குறனால, ரொம்ப நேரம் அங்க இருக்கா போல.. வந்துருவா.. ” இன்று அவருக்கு தைரியம் சொல்லி விட்டு, ஷோபாவில் சென்று அமர்ந்தனர். 

 

தோழிகளுடன் அரட்டை அடித்து சாப்பிட்டு முடிய, இரவு ஒன்பது மணியைத் தொட்டு விட்டது.

 

சுவாரசியமாக பேசிக் கொண்டு இருந்ததில், இனியனுக்கு அழைப்பு விடுவிக்க மறந்து விட்டாள் வைஷ்ணவி.

 

தோழிகள் அனைவரும் விடைப் பெற்று அவர் அவர் வீட்டிற்கு கிளம்ப, அப்பொழுது தான் இனியனுக்கு கூற வில்லையே என்பது நினைவு வர, “அச்சச்சோ.. அவனுக்கு கால் பண்ண மறந்து போச்சு. திட்டுவானே..” என்று புலம்பிக் கொண்டே, அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதுவோ உயிரை விட்டு இருந்தது.

 

“ச்ச.. சார்ஜ் வேற இல்லை. இப்போ அவனுக்கு எப்படி கால் பண்ணி சொல்றது. நேரம் வேற ரொம்ப ஆகிருச்சு..” என்று நினைத்தபடி அங்கே இருந்த வேறு ஒரு நபரிடம் அவரது அலைபேசியை வாங்கி இனியனுக்குத் தொடர்பு கொண்டாள்.

 

அந்த பக்கம் இனியன் காரை ஓட்டிக் கொண்டே இவளது எண்ணிற்குத் தான் மாற்றி மாற்றி முயற்சி செய்து கொண்டிருப்பான் போலும்.

 

இங்கு இவளுக்கு பிஸி பிஸி என்று வர, அலைபேசியை கொடுத்த நபர், “சீக்கிரம் கொடு மா.. லேட் ஆகுது ” என்று கேட்க, 

 

இவளும், “சாரி..” என்று கூறி விட்டு அவரிடம் கொடுத்து விட்டாள்.

 

“இந்த நேரத்துல யார் கூட கடலை போடுறான்னு தெரியல. பிஸி பிஸினு வருது.” என்று நினைத்துக்கொண்டே ஆட்டோ எதுவும் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஆனால் அவன் இவளுக்குத் தான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றான் என்று அறியாமல் அவனை வசை பாடிக் கொண்டிருக்கின்றாள் பெண்ணவள்.

 

அப்பொழுது, கேப் ஒன்று வர, அதனை நிறுத்தி, கார் ஓட்டுநரிடம், “அண்ணா.. புக்கிங் எதுவும் இருக்கா..” என்றுக் கேட்க,

 

“இல்லமா.. இப்போதான் ட்ராப் பண்ணிட்டு கிளம்புறேன்..” என்றார் அவர்.

 

“அண்ணா.. என் போன் சுவிட்ச் ஆப் ஆகிருச்சு. என்னால புக் பண்ண முடியாது. நான் வீட்டுக்கு போகணும். என்னை ட்ராப் பண்ணிருறீங்களா..” என்றுக் கேட்க,

 

“புக்கிங் இல்லாம நான் அப்படி போக முடியாது. என் கார் எங்க போய்ட்டு இருக்குனு டிரேஸ் பண்ணிட்டே இருப்பாங்க.. தேவை இல்லாம எனக்கு பிரச்சனை வந்துரும். நீ வேற ஆட்டோ எதுவும் பார்த்துக்கோ மா..” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

 

இதனை எல்லாம் தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஷில்பா அனுப்பிய கும்பல், “டேய்.. நீ இப்போ ஆட்டோ எடுத்திட்டு போ..” என்று அனுப்பி வைத்தான் தலைவன் வேறு ஒருவனை.

 

அவனும் தலைவன் கூறியது போல ஆட்டோ எடுத்துக் கொண்டு அவளிடம் நிறுத்தி, “மேடம் ஆட்டோ வேணுமா..” என்று கேட்க,

 

அவளும், “ஆமா ண்ணா.. ” என்றவள் ஏறிக் கொண்டு, “நான் சொல்ற அட்ரஸ் க்கு போங்க..” என்று அவள் வீட்டின் முகவரியைக் கூறினாள்.

 

பின்னாலேயே, கும்பளின் தலைவனும் இன்னும் இரண்டு பேரும் காரில் ஆட்டோவை பின் தொடர்ந்தனர்..

 

“அண்ணா.. உங்க ஆட்டோல சார்ஜர் இருந்தா கொஞ்சம் போட்டு தாங்களேன்..” என்றதற்கு அவனும் அவளுடைய போனை வாங்கி சார்ஜ் போட்டான்.

 

ஒரு பத்து நிமிடம் சென்று இருக்கும்.. அதுவரை ஆட்டோவும் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருந்தது..

 

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலையை கடந்து அவர்கள் இடத்திருக்கு செல்ல வேண்டும் என்பதால், அவளுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்பாடாத வண்ணம் ஆட்டோவை ஓட்டினான்.

 

“அண்ணா.. போதும். சார்ஜ் ஏறுனது. கொடுங்க..” என்று கேட்க, அவனும் கொடுத்தான்.

 

இதற்கு இடையில் இனியன் வைஷ்ணவியை திட்டிக் கொண்டே கோவத்தில் அவள் அனுப்பி இருந்த உணவகத்தின் இடத்திற்கு வந்து, உள்ளேப் போய் தேடிப் பார்த்தான்.

 

அவளை எங்கும் காணவில்லை.

 

“என்ன காணோம். ஒரு வேளை கிளம்பிட்டாளா.. மடச்சி.. கால் பண்றேன்னு சொன்னவ கால் பண்ணல.. போனும் சுவிட்ச் ஆப் ஆகிரிச்சு.. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம அலட்சியமா இருக்கா.. இதுல பொறுப்பை பத்தி எனக்கு கிளாஸ் எடுக்கிறா…” என்று கடுப்பில் அவளை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான்.

 

“ஒரு வேளை அவ கிளம்பி இப்போ வீட்டுக்கு போய் இருந்தா.. போன் சுவிட்ச் ஆப் ஆன னால என்கிட்ட சொல்ல முடியாம கூட போய் இருக்கும். அவளுக்கு இன்னொரு முறை அடிச்சிப் பாப்போம்.” என்றவன் அவளுக்கு தொடர்பு கொண்டான் மீண்டும். 

 

இப்பொழுது ஆள் நடமாட்டம் சற்று  குறைவான பகுதிக்கு ஆட்டோ வந்ததும், பின்னால் சற்று தூரத்தில் வந்த கார் ஆட்டோவை ஒட்டி வந்தது. அதை வைஷ்ணவி கவனிக்கவில்லை. 

 

அதற்குள் அவள், அலைபேசியை உயிர்ப்பிக்க, அதற்கு அடித்த நொடி, இனியனின் அழைப்பு உள்ளே வந்தது.

 

“என்ன.. போன் ஆன் பண்ணதும் உடனே கால் பண்ணிட்டான்..” என்று யோசித்தவாறே, அவனது அழைப்பை ஏற்று “ஹலோ.. இனியா..” என்று சொல்லி முடிப்பதற்குள், ஆட்டோவை ஓரமாக நிறுத்த காரில் வந்த மூவரும் அதனுள் ஏறிக் கொண்டனர்.

 

அந்த பக்கம் இருந்து இனியன் என்ன பேசுகிறான் என்று கேட்பதற்குள், இங்கு நடப்பதை பார்த்த வைஷ்ணவி, காதில் இருந்து போனை எடுத்து விட்டு, “ஹே யாரு டா நீங்க எல்லாம்.. எதுக்கு இங்க வரீங்க.. அண்ணா.. என்ன இது. ” என்று சத்தம் போட,

 

அவனோ கூலாக வண்டியை அவர்களின் இடத்திற்கு ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

அந்த பக்கம் இருந்த இனியன், ” ஹே வைஷு எங்க டி இருக்க.. என்ன ஆச்சு.. யாரு அவங்க.. ” என்று அந்த பக்கம் கத்திக் கொண்டிருந்தான் அவன்.

 

“டேய்.. எந்த பக்கம் போற.. யாரு டா நீங்க.. என்னை விடுங்க டா..” என்று அழுகையில் கத்திக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

 

மறுபக்கம் அவனோ செய்வதறியாது திகைத்து நின்று இருந்தான் ஆணவன். 

 

இதற்கு மேல் தாமதித்தால், அவளுக்கு ஆபத்து நெர்ந்து விடும் என்று கருதி, அழைப்பை துண்டித்து விட்டு,  உடனடியாக அவளது அலைபேசியில் இணைத்துள்ள GPS மூலம் அவள் எங்கு இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, தன் மொபைலில் அதற்கான செயலியில் பார்த்தான்.

 

அவளுடைய அலைபேசியில் லைவ் லொகேஷன் முக்கிய பகுதியில் இருந்து புறநகர் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

 

உடனே அவன் காரைச் செலுத்தி வேகமாக அது காட்டும் பாதையை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

 

எப்பொழுது பரிதியின் உயிருக்கு ஆபத்து வந்ததோ அப்பொழுதே அவளது அலைபேசியில் பின்தொடரும் செயலியை அமைத்து வைத்து விட்டான்.

 

இதோ மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தான் அந்த இடத்தை நோக்கி…

 

நித்தமும் வருவாள்.. 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
19
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்