அத்தியாயம் – 35
அவள் திடீரென்று இணைத்த அந்த இதழ் தீண்டல் அவன் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த கோபத்தின் சாம்பலை கரைத்து விட்டது, அவன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை, ஆனால் அந்த இதழ் தீண்டல், அந்த ஆழமான உதட்களின் சேர்க்கை… அவனது உயிர் வரை சென்று தித்திக்க வைத்தது,…
அவள் இன்னும் ஆழமாக புதைந்து அவனது இதயத்துக்குள் புதைந்து கிடந்த ஆசையை தூண்டி இருக்க, அவன் சுவாசம் அவளது கன்னத்தினை உஷ்ணமாக சுரண்டியது…
சில நொடியின் பின் அவள் மெதுவாக விலக,… ஆனால் அவனால் விலக முடியவில்லை, தன் தடித்த இதழ்களால் அவள் மென்னிதழ்களை கவ்விக் கொண்டவனுக்கு இவளை விலகினால் சுவாசத்தையே இழக்கும் தவிப்பு நெஞ்சுக்குள் எரிந்தது….
அடுத்த கணமே அவளை திடீரென தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் மெத்தையின் மேல் கிடத்தினான், இதழ்கள் பிரியாமல் பிண்ணிபிணைந்தன,..
அவனது கரங்கள் அவளது மேனியில் அத்துமீற, அவளோ அவனது சிகையில் தன் கரங்களைப் புதைத்து, அவனை மேலும் போதையேற்றினாள்,…
இத்தனை நாட்களாக அவர்களுக்கிடையில் இருந்தது இதழ் தீண்டல் மட்டுமே,
உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள உதடுகள் மட்டும் வழியாகியிருந்தன, அந்த உதடுகளின் தீண்டலே அவர்களின் காதலை உயிரோடு வைத்திருந்தது.
ஆனால் இன்றோ அந்த எல்லைகளைத் தாண்டினார்கள்,
இதழ் தீண்டல்கள் மட்டுமே போதாமல் போன அந்த நொடியில்,
உள்ளுக்குள் புதைந்து கிடந்த ஆசை, பேரார்வம், பற்றுதலெல்லாம் அவர்களை உடலோடு ஒன்றிணைத்துவிட்டது.
அது வெறும் ஆசையின் சங்கமமல்ல… உணர்ச்சியோடு கூடிய இணைப்பு…
கூடல் முடிந்த பின் அவன் அவளை மார்பில் தாங்கியபடி,
அவள் சுவாசத்தை தனது மார்பில் உணர்ந்து, விட்டத்தை பார்த்தபடி படுத்திருக்க, அவளோ அவன் மார்பில் முகத்தை புதைத்தபடி, பலவித உணர்வுகளுடன் பாதுகாப்பையும் உணர்ந்தபடி படுத்திருந்தாள்…
அவர்களுக்குள் சொற்கள் தேவையில்லாமல் போயின, அந்த அமைதி… அந்த நெருக்கம்… அந்த பாசம்… அவர்களுக்குள் புதிய உறுதிமொழியை விதைத்தது….
வெகுநேரங்களுக்கு இருவரும் எதுவும் பேசவில்லை,.. தொண்டையை செருமிக் கொண்டு,.. “கோபம் போயிடுச்சா அரவிந்த்” என்று அவள் தான் முதலில் வாயை திறந்தாள்…
சில நொடி அமைதிக்குப் பின்,… “நோ” என்று அவள் பதில் தர, விருட்டென எழுந்து அவன் முகம் பார்த்தவள்,.. “நோ’வா,..” என்று புருவத்தை சுருக்கி வினவிட,.. “நோ தான், என்னை விட்டு போனதை அவ்வளவு சீக்கிரம் என்னால மன்னிக்க முடியாது மது, நான் வந்து பேசின பிறகு தானே வரவே செய்த, நீயா கூட வரலயே” என்றான்,..
“அதெல்லாம் முடிஞ்சு போச்சுல” அவள் பாவமாய் சொல்ல,.. “அதெல்லாம் முடியல” என்றான் அவன்..
“ப்ளீஸ் அரவிந்த்” அவள் கெஞ்ச… “பேசாம படு” என்றான் அவன்..
“இப்போ நான் என்ன பண்ணனும் உங்க கோபம் குறைய” அவள் வினவ,… அவளை ஆழ்ந்து பார்த்தவன்,… “என்ன சொன்னாலும் செய்வியா?” என்றான், இப்போது அவன் விழிகளில் குறும்பு இழையோடியது…
“கண்டிப்பா” அவன் குறும்பை கவனிக்காமல் அவள் வாக்கு தர, அவனோ,.. “யு ஹேவ் டு டு இட் ஃபார் மீ” என்று சொல்ல,.. அவளோ புரியாமல்,.. “எதை” என்று வினவ,.. அவளை இழுத்து அவள் காதினருகே ஏதோ சொல்ல, அவள் முகம் செம்பருத்தி பூவாய் சிவந்தது,…
“ச்சீ..” என்று வெட்கத்துடன் அவள் அவன் மார்பில் குத்த அவனோ,.. “அப்போ போடி” என்றான்,..
“அரவிந்த்” அவள் சிணுங்க,… “வில் யூ டூ இட் ஆர் நாட்” என்றான் உறுதியாக,…
“எனக்கு வெட்கமா இருக்கு” அவள் வெட்கத்துடன் சொல்ல,.. “இது உனக்கே ஓவரா இல்லையா? ஜஸ்ட் என்னோட செஸ்ட்ல கிஸ் கேட்டேன், அதுக்கே வெட்கமா” என்று சொன்னவன்,.. “லிப்ல கொடுக்க கூட இவ்வளவு வெட்கப்படல, என்னோட ஃபிஸிகலா இருந்தபோதும்” அவன் வார்தைகளை முடிப்பதற்க்குள் அவன் வாயை தன் கரத்தினால் அடைத்தவள்,.. அவனது இதயத்தில் தன்னித்தழ்களை ஆழமாக ஒற்றி எடுக்க, அவன் உடல்களிலோ சிலிர்ப்பு,..
இதழ்கள் ஒன்றிணைந்த போது கொடுக்காத உணர்வை அவளது இந்த இதழ் தீண்டல் அலைபாய்ந்த வலிமையை உணர்த்தியது. சொல்லத் தெரியாத பல உணர்வுகள், அந்தச் சிறிய தருணத்திலேயே வெளிப்பட்டன, அவளது இதயத்தின் ஆழத்தில் இருந்து கிளம்பிய அன்பு, இப்போது அவனது உள்ளத்தையும் தொட்டு சென்றது…
அவளை மெதுவாக தன்னருகே இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன் தன் செயல்களினால் கிறங்க வைத்து, மொத்தமாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அவளும் விரும்பியே அவனுக்குள் ஆழமாக புதைந்து போனாள்,..
****************
நாட்கள் மெதுவாக நகர்ந்தது,
உடல்களும் இதயங்களும் ஒன்றிணைந்த பிறகு, அவர்களுக்குள் புதிதாகப் பிறந்த உறவு, ஒரு வேறுவிதமான ஆழத்தைத் தொட்டது….
நந்தினியால், தீரஜின் கண்களில் தெரிந்த அந்த மாற்றத்தைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை, அதை ஏற்கனவே கண்டிருந்தாலும் அது சாதாரண அன்பு தான் என்று நினைத்தாள், ஆனால் இப்போது அது காதல் என்பதை நன்கு உணர்ந்தாள், ஐ லவ் யூ எனும் எளிய சொற்களை அவன் சொல்லத் தயங்கினாலும், ஒவ்வொரு செயலிலும் அது வெளிப்பட ஆரம்பித்திருந்தது,..
அந்தக் கணத்தில் நந்தினி உள்ளுக்குள் அகமகிழ்ந்தாள்,..
‘என்னோட வாழ்வில் நான் தேடிய காதல் இதுதான், சொல்லாமல் வெளிப்படும் உணர்வு… கண்களில் எழுதிக்கிடக்கும் பாசம்…
அவர் வாயால் சொல்லவில்லையென்றாலும், ஒவ்வொரு நாளும் என்னை அன்பால் மூழ்கடிக்கிறார்’
அவளது நெஞ்சில் அவனின் காதலை எண்ணி ஒரு இனிய நிறைவான உணர்வு பரவியது….
அன்று அலுவலகத்தில் அதிக வேலை இருந்ததால் தாமதமாக தான் வந்தான் தீரஜ், அவனுக்காகவே காத்திருந்தவள், அவன் வந்த பிறகு அவனோடு தான் அமர்ந்து உணவுண்டாள், அந்த நேரம் இருவரும் பக்கத்தில் அமர்ந்து, சில நையாண்டிப் பேச்சுகளும், சில்மிஷங்களும், சில காதல் பார்வைகளும் பரிமாறிக் கொண்டு உணவை முடிக்க,..
அந்த நேரத்தில் திடீரென, “வெளியே போகலாமா, மது?” என்று கேட்டான் தீரஜ்,..
“இப்போவா? மணி என்னன்னு தெரியும்ல… பதினொன்னாச்சு” என்று அவள் சொல்ல, சுற்றி நோட்டமிட்டுவிட்டு, கரத்தை நீட்டி அவள் இடையை பற்றி தன்னருகே இழுத்துக்கொண்டவன்,.. “டைம் என்னவானா என்ன? போகணும்னு நான் முடிவு பண்ணிட்டேன்” என்றவன்,
பசக்கென்று அவளது கன்னத்தில் இதழ்களை பதிக்க, நாணத்தில் முகம் சிவந்தவள்,..
“போலாமே…” என்றாள்..
அதன் பிறகு அவனும் அவளை அழைத்து கொண்டு வெளியில் வர, வீட்டின் முன் ஒரு புல்லட் பைக் நின்றிருந்தது…
அதனை கண்டு ஆச்சரியப்பட்டவள்,.. “ஹேய், இது யாரோட பைக்?” என்று அவள் கேட்க,.. “என்னோடதுதான், கொஞ்ச நாளா ஷெட்ல கிடந்தது, இன்னைக்கு அதை தூசி தட்டி எடுத்துருகிருக்கேன்” என்றான் தீரஜ்…
“ஓடுமா இது?” அவள் சந்தேகக் குரலில் வினவ,.. “அதான் நாம இருக்கோம்ல… ஓட்டி பார்த்துடுவோம்” என்று கண்சிமிட்டி சிரிப்புடன் பதிலளித்தான் அவன்,..
“ஐயோ… இந்த விஷப்பரிட்சைக்கே நான் வரல, ரொம்ப நாளா ஷெட்லயே இருந்ததுன்னு சொல்றீங்க… பிரேக் வயர் எதுவும் ஃபெயிலியரா இருக்கப்போகுது,” என்று பயப்பட,.. “என்னை நம்புனா வா” என்று சொன்னான் தீரஜ்..
அவனது குரலில் ஒரு வித்தியாசமான அழுத்தமும் நம்பிக்கையும் ஒலித்தது, அவளோ அவன் விழிகளை ஆழமாக சில நொடிகள் அமைதியாக பார்த்தவள்,. பின் ஒரு புன்னகையுடன்… “உங்களை நம்பி வேணும்னா வரேன்” என்று சொல்லிவிட்டு அவன் தோள்களை தன் கரத்தால் பற்றிக்கொண்டு ஏறி அமர்ந்தாள்….
அந்தச் சின்ன வார்த்தைகள் கூட தீரஜின் இதயத்தை நிரப்பி விட்டது, அந்நொடி அவனது உதடுகளில் மலர்ந்த புன்னகை நந்தினிக்காக மட்டுமே பிறந்த ஒன்று…
அவன் பைக்கை முதலில் மெதுவாக சீரான வேகத்தில் இயக்கி, பின் சில நிமிடங்களில்
சாலையின் அமைதியை கிழித்து,.. அதிவேகத்தில் பறக்க விட்டான்.
பைக்கின் வேகம் கூட, நந்தினியின் இதயத் துடிப்போடு போட்டிபோட்டது, பயம் இல்லாமல், நம்பிக்கையுடன் அவனின் இடுப்பை இறுக்கிப் பற்றிக்கொண்டவள்,
அந்த இரவு நேர காற்றில் அவனோடு ஒன்றுபட்டவளாய் லயித்தாள்…
அவன் தோள்களில் தன் முகத்தை சாய்த்துக் கொண்ட அந்தச் சிறிய தருணம் கூட, அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.
அவனோடு இப்படி பயணிக்க வேண்டும் என்ற கனவு கண்டிருந்த ஆசை இன்று நிஜமாகி விட்டதென்பதை எண்ணி சந்தோஷம் அவளது முகத்தில் அச்சு அசலாய் பதிந்து பிரகாசித்தது…
தீரஜும் அவளை ஒரு கணம் பின்னோக்கிப் பார்த்தவன்,
அந்த புன்னகை, அந்த சந்தோஷத்தைக் கண்டு,
அவன் பைக்கின் ஹேண்டிலை மட்டுமல்ல, வாழ்க்கையையே உறுதியாக பிடித்தவன் போல உணர்ந்தான்….
ஓரிரு நிமிடங்களில் பைக்கை ஓரிடத்தில் நிறுத்தியவன் உதடுகளில் ஒரு குறும்பு புன்னகையுடன்… “குல்ஃபி சாப்பிடலாமா?” என்று கேட்க,
நந்தினியின் விழிகள் ஆச்சரியத்தில் பெரிதாக விரிந்தன…
அடுத்த நொடி, அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு, அந்த இரவு நேரத்தில் மணி அடித்தபடி இன்னும் குல்பி விற்கும் வண்டி அருகில் சென்றான், இரண்டு குல்பி வாங்கி, ஒன்றை அவளிடம் நீட்டிட,
அவளோ.. “ஒன்னு தானா?” என்று சிணுங்கவும், அவன் மெதுவாக புன்னகைத்து… “அவர் வச்சிருக்கும் மொத்தத்தையும் உனக்காக வாங்கித் தர முடியும்., ஆனா வாங்கித் தர மாட்டேன், ஃபீவர் வந்தா உன்னோட சேர்த்து நானும்ல கஷ்டப்படனும்” என்று அவளது கரத்தோடு தன் கரத்தை பிணைத்தவனின் அந்தச் சிறிய சிரிப்பு கூட, நந்தினியின் இதயத்தில் பெரும் அலையை எழுப்பியது…
இரவு காற்று மெதுவாக அவர்கள் மேனியை தழுவி செல்ல, மீதமிருக்கும் உலகமே அமைதியில் தூங்கிவிட்டதுபோல, அவர்கள் மட்டுமே அந்தச் சாலையில் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர்…
அவள் கையில் இருந்த குல்பியை ருசித்தபடியே வந்தாலும், அவளது உள்ளத்தில் பேரானந்தம் பரவியது,
அவள் எதிர்பார்த்த ஆசைகளுள்
இதுவும் ஒன்றல்லவா! இந்த தருணம், அவளுக்குப் பெரும் கனவாய் நிறைவேறியது போல உணர்ந்தாள்….